மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

13.12.08

புகழ் பெற்ற பாடல்கள்

புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும்
பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள்தான்!

"கண்கள் இரண்டு இருந்தபோதும் காட்சி ஒன்றுதான்
வழிபடவும், வரம் தரவும் தெய்வம் ஒன்றுதான்"
என்றார் கவியரசர் கண்ணதாசன்.

இறைவன் ஒருவன்தான்: நாம் அவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம்.

உணவு ஒன்றுதான் - நாம் பலவிதங்களில் பல சுவைகளில் சமைத்து
உண்கிறோமே அதைப்போல!

சில பாடல்கள், பாடலின் கருத்து - அமைப்பு, பாடுபவர்,
பாவம், உடன் சேர்ந்து ஒலிக்கும் இசைக்கருவிகள், என்று எல்லாம்
சேர்ந்து சிறப்பாக அமைந்தால்தான் நம் மனதை ஈர்க்கும். ஆனால்
பக்திப்பாடல்களுக்கு அந்த வரைமுறை கிடையாது!

பக்தி ஒன்றுதான் அதற்கு அளவுகோல்! படிக்கும்போதே அது நம்
மனதிற்குள் வந்து அமர்ந்துவிடும்! இப்போது பாடலைப் பாருங்கள்:

காலைத் தொழுதாலும் கந்தாஉன் கையிலிருக்கும்
வேலைத் தொழுதாலும் வேல்கழுவிக் - கால்வழியும்
பாலைத் தொழுதாலும் பாய்ந்துவரும் உன்மயிலின்
வாலைத் தொழுதாலும் வாழ்வு!

பேராசிரியர், முனைவர் திரு.அர.சிங்காரவடிவேலன் அவர்கள் எழுதி
1973ம் ஆண்டு வெளியிடப்பெற்ற 'செந்தூர் முருகன் அந்தாதி' என்ற
101 வெண்பாக்களைக் கொண்ட நுலில் உள்ள மிகவும் சிறப்பான
பாடல்களில் ஒரு பாடல்

அந்த அந்தாதி நூலின் துவக்கப் பாடல்

நாளும் ஒருவெண்பா நான்பாடச் செந்தூரில்
வாழும் முருகா வரமருள்வாய் - சூழும்
திருச்சீர் அலைபோலச் சிந்துதமிழ்ப் பூவால்
அருச்சனைகள் செய்திடவே ஆர்த்து.

சீர், சந்தம், எதுகை மோனை, கருத்து என்று எல்லாமே எவ்வளவு
அசத்தலாக இருக்கிறது பார்த்தீர்களா?
========================================
வாழ்க வளமுடன்!

10 comments:

hotcat said...

super.
yes, the words makes devotional... I feel so happy when I read "vinayakar kavasam" and 'thiruvasagam"

வேலன். said...

காலைத் தொழுதாலும் கந்தாஉன் கையிலிருக்கும்
வேலைத் தொழுதாலும் வேல்கழுவிக் - கால்வழியும்
பாலைத் தொழுதாலும் பாய்ந்துவரும் உன்மயிலின்
வாலைத் தொழுதாலும் வாழ்வு!
இறைவனை தொழுவோம்.எல்லையில்லா இன்பம் பொறுவோம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

SP.VR. SUBBIAH said...

////hotcat said...
super.
yes, the words makes devotional... I feel so happy when I read "vinayakar kavasam" and 'thiruvasagam"/////

Not only the words but also the meaning takes a song to the heart of the reader

SP.VR. SUBBIAH said...

/////வேலன். said...
காலைத் தொழுதாலும் கந்தாஉன் கையிலிருக்கும்
வேலைத் தொழுதாலும் வேல்கழுவிக் - கால்வழியும்
பாலைத் தொழுதாலும் பாய்ந்துவரும் உன்மயிலின்
வாலைத் தொழுதாலும் வாழ்வு!
இறைவனை தொழுவோம்.எல்லையில்லா இன்பம் பொறுவோம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.//////

நன்றி வேலன்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

முருகா..

நாளும் உனை வணங்குகிறேன் என் ஆசான் தயவாலே..

profitsharez said...

shall i know the name of this font sir

ஆர்.கார்த்திகேயன் said...

வணக்கம் அய்யா !

சனிக்கிழமை நான் வகுப்புக்கு வரமுடியவில்லை எனவே இன்று வந்தேன் என் அய்யன் முருகனை பற்றி பாடல் வரிகளால் விவரித்தமைக்கு நன்றிகள் கோடி கண்குளிர முருகனையே தரிசித்த திருப்தி !

SP.VR. SUBBIAH said...

////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
முருகா..
நாளும் உனை வணங்குகிறேன் என் ஆசான் தயவாலே../////

வேலனை வணங்குவதற்கு விசா எதற்கு?
ஆறுமுகனை வணங்குவதற்கு ஆசானின் தயவெதற்கு?

SP.VR. SUBBIAH said...

/////profitsharez said...
shall i know the name of this font sir/////

I am using ekalappai software for tamil typing!
It is a free software and it is available in thamizha.com web site

SP.VR. SUBBIAH said...

//////ஆர்.கார்த்திகேயன் said...
வணக்கம் அய்யா !
சனிக்கிழமை நான் வகுப்புக்கு வரமுடியவில்லை எனவே இன்று வந்தேன் என் அய்யன் முருகனை பற்றி பாடல் வரிகளால் விவரித்தமைக்கு நன்றிகள் கோடி கண்குளிர முருகனையே தரிசித்த திருப்தி !/////

நீங்கள் சொன்னதில் முருகனைத் தரிசித்த மகிழ்ச்சி எனக்கு!