நாடி ஜோதிடம்பற்றி எனக்கு படிப்பறிவு மட்டுமே. பட்டறிவு கிடையாது
அதைப் பற்றி எழுதும்படி சில வாசகர்கள் கேட்டிருந்தார்கள்.
எதற்கு சிரமம்?
வலையில் தேடியபோது ஒரு நல்ல கட்டுரை கிடைத்தது.
ஏனோ தானோ ஆள் எழுதியதல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காரர்கள்
நடத்தும் பத்திரிக்கையில் வந்தது.
அப்படியே கட் & பேஸ்ட்டாக இங்கே அதைப் பதிவிட்டிருக்காலாம்.
விருப்பமில்லை. காப்பி ரைட் பிரச்சினை வரும்!
ஆகவே செய்யவில்லை. சுட்டி கொடுத்திருக்கிறேன்.
விருப்பமானவர்கள் சென்று பாருங்கள்
சுட்டி!
ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத மகான்கள் அங்கே போகவேண்டாம்.
போய்ப் படித்துவிட்டு வந்து என்னைப் பிறாண்ட வேண்டாம்.
அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காரைக்குடியில் ஒரு நாடி ஜோதிடர் முன்பு இருந்தார். என் சித்தப்பாவிற்குத்
தெரிந்தவர். அவர் பெயர் சாரி (Chari) காரைக்குடியில் உள்ள பெரிசுகளைக்
கேட்டால் கதைகளைச் சொல்வார்கள்.
வருகிறவனின் கட்டை விரல் ரேகையை மட்டும் பதிவு செய்து கொண்டு
ஆளை அனுப்பிவிடுவாராம். அரை மணி நேரம் கழித்து வரச்சொல்வாராம்
வேறு ஒரு தகவலும் கேட்க மாட்டாராம்.
அரை மணி நேரம் கழித்துப்போனால். ஜாதகனின் பிறந்த நாள், பிறந்த நேரம்
ஆகியவற்றுடன் அச்சு அசலாக ஜாதகம் தயாராக இருக்குமாம்.
ஏட்டைப் படித்து பலன்களையும் சொல்வாராம்.
இப்போது அவர் இல்லை. சிவனடி சேர்ந்துவிட்டார்.
அது அவருக்கு எப்படி சாத்தியப்பட்டது எனக்கு இன்றும் புதிராக இருக்கிறது.
அதுபோல என் உறவினர் ஒருவர் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம்
பார்த்தபோது, அவர்கள் அவருடைய பெயர், அவருடைய பெற்றோரின் பெயர்கள்
மற்றும் உடன் பிறந்த சகோதரிகளின் பெயர்கள் அனைத்தையும் எடுத்த ஏட்டின்
மூலம் சொல்லி அசர வைத்திருக்கிறார்கள்
இந்தியாவின் தலை சிறந்த ஜோதிடரான திரு.பி.வி.ராமன் அவர்கள் நாடி
ஜோதிடத்தைப் பற்றி ஒருமுறை குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவர்கள்
நடந்த நிகழ்ச்சிகளை அசத்தலாக சொல்லி விடுகிறார்கள். எதிர்காலத்தைச்
சொல்வதில் சற்றுத் திணறுகிறார்கள் என்று எழுதியிருந்தார்.
எது எப்படியோ, எனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை! கிட்டினால்
அவர்களைக் கிண்டிக் கிழங்கெடுத்து விடுவேன்:-))))))))
அதாவது அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு வருவேன்!
lebel: Nadi Jothidam
வாழ்க வளமுடன்!
அதைப் பற்றி எழுதும்படி சில வாசகர்கள் கேட்டிருந்தார்கள்.
எதற்கு சிரமம்?
வலையில் தேடியபோது ஒரு நல்ல கட்டுரை கிடைத்தது.
ஏனோ தானோ ஆள் எழுதியதல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காரர்கள்
நடத்தும் பத்திரிக்கையில் வந்தது.
அப்படியே கட் & பேஸ்ட்டாக இங்கே அதைப் பதிவிட்டிருக்காலாம்.
விருப்பமில்லை. காப்பி ரைட் பிரச்சினை வரும்!
ஆகவே செய்யவில்லை. சுட்டி கொடுத்திருக்கிறேன்.
விருப்பமானவர்கள் சென்று பாருங்கள்
சுட்டி!
ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத மகான்கள் அங்கே போகவேண்டாம்.
போய்ப் படித்துவிட்டு வந்து என்னைப் பிறாண்ட வேண்டாம்.
அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காரைக்குடியில் ஒரு நாடி ஜோதிடர் முன்பு இருந்தார். என் சித்தப்பாவிற்குத்
தெரிந்தவர். அவர் பெயர் சாரி (Chari) காரைக்குடியில் உள்ள பெரிசுகளைக்
கேட்டால் கதைகளைச் சொல்வார்கள்.
வருகிறவனின் கட்டை விரல் ரேகையை மட்டும் பதிவு செய்து கொண்டு
ஆளை அனுப்பிவிடுவாராம். அரை மணி நேரம் கழித்து வரச்சொல்வாராம்
வேறு ஒரு தகவலும் கேட்க மாட்டாராம்.
அரை மணி நேரம் கழித்துப்போனால். ஜாதகனின் பிறந்த நாள், பிறந்த நேரம்
ஆகியவற்றுடன் அச்சு அசலாக ஜாதகம் தயாராக இருக்குமாம்.
ஏட்டைப் படித்து பலன்களையும் சொல்வாராம்.
இப்போது அவர் இல்லை. சிவனடி சேர்ந்துவிட்டார்.
அது அவருக்கு எப்படி சாத்தியப்பட்டது எனக்கு இன்றும் புதிராக இருக்கிறது.
அதுபோல என் உறவினர் ஒருவர் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம்
பார்த்தபோது, அவர்கள் அவருடைய பெயர், அவருடைய பெற்றோரின் பெயர்கள்
மற்றும் உடன் பிறந்த சகோதரிகளின் பெயர்கள் அனைத்தையும் எடுத்த ஏட்டின்
மூலம் சொல்லி அசர வைத்திருக்கிறார்கள்
இந்தியாவின் தலை சிறந்த ஜோதிடரான திரு.பி.வி.ராமன் அவர்கள் நாடி
ஜோதிடத்தைப் பற்றி ஒருமுறை குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவர்கள்
நடந்த நிகழ்ச்சிகளை அசத்தலாக சொல்லி விடுகிறார்கள். எதிர்காலத்தைச்
சொல்வதில் சற்றுத் திணறுகிறார்கள் என்று எழுதியிருந்தார்.
எது எப்படியோ, எனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை! கிட்டினால்
அவர்களைக் கிண்டிக் கிழங்கெடுத்து விடுவேன்:-))))))))
அதாவது அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு வருவேன்!
lebel: Nadi Jothidam
வாழ்க வளமுடன்!
தனக்கு தெரிந்ததை மற்றவர்க்கு சொல்லிகொடு. கலை-கல்வி அழியாது. தனக்கு தெரிந்த ஜோதிடக்கலையை ஆசிரியர் மற்றவர்களுக்கு சொல்லி தருவதால் வகுப்பறை மாணவர்கள் ஜோதிடத்தில் நிறைய கற்றுக்கொள்கிறார்கள் - அதில் அனுபவமும் பெற்று வருகிறார்கள்.
ReplyDeleteநாடி ஜோதிடத்தில் காரைக்குடி
சாரி-சாரி நாடி ஜோதிடம் பற்றி சொல்லாமல் சென்றுவிட்டார்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
நாடி சோதிடம் பற்றிய பதிவுக்கும்,அந்த சுட்டிக்கும்
ReplyDeleteநன்றி.
நாடி சோதிடம் பற்றி சன் தொலைக் காட்சியில்
"சிதம்பர ரகசியம்" தொடர் அருமையாய் சொன்னது.
சுப்பையா அய்யா அவர்களே, வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் சென்று பார்த்தேன், அட நம்பிக்கைக்காக இல்லை, பதிவு எழுதுவதற்காகத்தான் பார்த்தேன், அது செம காமெடி... அந்த அனுபவத்தில் ஒரு தொடர் கதை எழுதலாம்னு நினைத்து முதல் அத்தியாயம் கூட எழுதினேன்...
ReplyDeleteநாடி சோதிடம், உங்கள் வாயிலிருந்து பிடுங்கி உங்களிடமே சொல்லும் சோதிடம்...
http://kuzhali.blogspot.com/2005/07/1_23.html
I have also seen this in Chennai. I dont know exactly how to say this....most of things mentioned was not accurate but somewhat vague...I will say 50/50 chance!!!!
ReplyDelete-shankar
ஐயா..உங்கள் பணி சிறக்கட்டும். வகுப்பறைக்கு வெளியில் இருந்து பாடங்களை கவனித்து வரும் மாணாக்கன் நான்.
ReplyDeleteஜோதிடப் பாடங்களை கற்க எண்ணுவோர் பயன்பெறட்டுமே என்ற எண்ணத்தில் நான் எழுதிய அரட்டையில் வலைப்பூ முகவரி கொடுத்திருக்கிறேன்.
http://www.nilacharal.com/ocms/log/12290811.asp
ஹலோ சார்,
ReplyDelete//தங்கள் வருகைப்பதிவேடில் உள்ள மாணவர்கள் நிறையபேர் வகுப்புக்கே வருவதில்லை என நினைக்கின்றேன்.//
ஹலோ மிஸ்டர்.வேலன், நீங்க என்ன சொல்லிட்டீங்க, பின்னூட்டம் போட்டாதான் அட்டண்டென்ஸ் வருமா?நாங்கல்லாம் எப்பவுமே full attendenceதான்.
சார் நான் கூட ஒரு 10 வருடங்க்ளுக்கு முன்னாடி இங்க பெங்களூருல ஒரு நாடி ஜோதிடம் பார்த்தேன்.அதுவும் அப்படியே எதிர்காலம் பற்றி அச்சு அசலா சொல்றதாக சொன்னதால் போனேன்.
என் கனவருடைய விரல் எடுத்து பார்த்தேன், ஆனால் ஏனோ அதுல எனக்கு துளிகூட நம்பிக்கை வரலை.காரணம் அதுல நம்மிடமிருந்தே தான் அவர்கள் எல்லா பெயர்களையும் தெரிந்து கொள்வதாக நினைக்கிறேன்.மேலும் என்னுடைய கனவருக்கு சொன்ன எந்த ஒரு விஷயமும் இதுவரை நடந்ததாக என்னுடைய நினைவிற்கு இல்லை.அதற்கு நேர்மாறாகத் தான் நடந்திருக்கிறது. மேலும் எனக்கு எப்போதுமே அதிலேல்லேம் நம்பிக்கையே இல்லை.எங்கயோ ஒரு சிலர் தான் நீங்கள் சொன்னது போல துல்லியமக சொல்கிறார்களே ஒழிய எல்லாரும் பனம் பண்ணும் ஒரு வழியாகத் தான் செய்கிறார்கள்.
I have experience with Naadi Jothidam....It seems that they have a pattern of thumb impressions...Using the pattern, they are somehow finding the date of birth using the Tamil years system...Then they are just casting the horoscope and writing the Gochar palankal...Thats all..But they were able to tell the past clearly..not about the future...
ReplyDelete//////Blogger வேலன். said...
ReplyDeleteதனக்கு தெரிந்ததை மற்றவர்க்கு சொல்லிகொடு. கலை-கல்வி அழியாது. தனக்கு தெரிந்த ஜோதிடக்கலையை ஆசிரியர் மற்றவர்களுக்கு சொல்லி தருவதால் வகுப்பறை மாணவர்கள் ஜோதிடத்தில் நிறைய கற்றுக்கொள்கிறார்கள் - அதில் அனுபவமும் பெற்று வருகிறார்கள்.
நாடி ஜோதிடத்தில் காரைக்குடி
சாரி-சாரி நாடி ஜோதிடம் பற்றி சொல்லாமல் சென்றுவிட்டார்.
வாழ்க வளமுடன்,
வேலன்./////
ஆரம்ப காலங்களில் ஒருவரிடம் இருந்த ஏடுகளை, அவர்கள் குடும்ப வாரிசுகள் பிரதி எடுத்து வைத்துக்கொண்டர்கள். அதுதான் முறை. பின்னாளில் நூறு ஆண்டு காலத்திற்குள், அவ்வாறு பிரதி எடுக்காமல், தங்களுக்குள் ஒவ்வொரு காண்டத்தையும் பங்கு வைத்துக் கொண்டார்கள். அதுதான் பிரச்சினை. யாரிடமும் முழுக் காண்டமும் இல்லை.
அதனால்தான் அந்தக் கலை இப்போது அழிவை நோக்கி நகர்கின்றது! இது என் நண்பர் ஒருவர் சொன்னது. யோசித்துப் பார்த்தால் அது உண்மையாக இருக்கலாம் என்று தெரிகிறது!
Blogger ரமணா said...
ReplyDeleteநாடி சோதிடம் பற்றிய பதிவுக்கும்,அந்த சுட்டிக்கும்
நன்றி.
நாடி சோதிடம் பற்றி சன் தொலைக் காட்சியில்
"சிதம்பர ரகசியம்" தொடர் அருமையாய் சொன்னது./////
நான் அதைப் பார்க்க வில்லை! அது பற்றி ஏதேனும் விவரம் நினைவில் இருந்தால் எழுதுங்கள்!
Blogger குழலி / Kuzhali said...
ReplyDeleteசுப்பையா அய்யா அவர்களே, வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் சென்று பார்த்தேன், அட நம்பிக்கைக்காக இல்லை, பதிவு எழுதுவதற்காகத்தான் பார்த்தேன், அது செம காமெடி... அந்த அனுபவத்தில் ஒரு தொடர் கதை எழுதலாம்னு நினைத்து முதல் அத்தியாயம் கூட எழுதினேன்...
நாடி சோதிடம், உங்கள் வாயிலிருந்து பிடுங்கி உங்களிடமே சொல்லும் சோதிடம்...//////
உண்மைதான் குழலி! அது இப்போது நடைபெறும் அவலம்!
ஆரம்ப காலங்களில் ஒருவரிடம் இருந்த ஏடுகளை, அவர்கள் குடும்ப வாரிசுகள் பிரதி எடுத்து வைத்துக்கொண்டர்கள். அதுதான் முறை. பின்னாளில் நூறு ஆண்டு காலத்திற்குள், அவ்வாறு பிரதி எடுக்காமல், தங்களுக்குள் ஒவ்வொரு காண்டத்தையும் பங்கு வைத்துக் கொண்டர்கள். அதுதான் பிரச்சினை. யாரிடமும் முழுக் காண்டமும் இல்லை.
அதனால்தான் அந்தக் கலை இப்போது அழிவை நோக்கி நகர்கின்றது! இது என் நண்பர் ஒருவர் சொன்னது. யோசித்துப் பார்த்தால் அது உண்மையாக இருக்கலாம் என்று தெரிகிறது!
அந்தக் காலத்தில், அதாவது என் பாட்டனார் காலத்தில் எதுவும் கேட்காமல், கைக் கட்டைவிரலை வைத்து, பிறந்த தேதி ஜாத்கத்தை எழுதிக் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது
எனவே அங்கே செல்கிறவர்கள். இதைச் சொல்லி அதன்படி எழுதித்தா என்று கேட்கவேண்டும். இல்லை என்றால் விடு ஜூட்!!!!!!!!!
////Blogger hotcat said...
ReplyDeleteI have also seen this in Chennai. I dont know exactly how to say this....most of things mentioned was not accurate but somewhat vague...I will say 50/50 chance!!!!
-shankar/////
உங்கள் கருத்திற்கு நன்றி சங்கர்!
//////Blogger ரிஷி said...
ReplyDeleteஐயா..உங்கள் பணி சிறக்கட்டும். வகுப்பறைக்கு வெளியில் இருந்து பாடங்களை கவனித்து வரும் மாணாக்கன் நான்.
ஜோதிடப் பாடங்களை கற்க எண்ணுவோர் பயன்பெறட்டுமே என்ற எண்ணத்தில் நான் எழுதிய அரட்டையில் வலைப்பூ முகவரி கொடுத்திருக்கிறேன்.
http://www.nilacharal.com/ocms/log/12290811.asp//////
நன்றி நண்பரே!
Blogger Sumathi. said...
ReplyDeleteஹலோ சார்,
//தங்கள் வருகைப்பதிவேடில் உள்ள மாணவர்கள் நிறையபேர் வகுப்புக்கே வருவதில்லை என நினைக்கின்றேன்.//
ஹலோ மிஸ்டர்.வேலன், நீங்க என்ன சொல்லிட்டீங்க, பின்னூட்டம் போட்டாதான் அட்டண்டென்ஸ் வருமா?நாங்கல்லாம் எப்பவுமே full attendenceதான்.
சார் நான் கூட ஒரு 10 வருடங்க்ளுக்கு முன்னாடி இங்க பெங்களூருல ஒரு நாடி ஜோதிடம் பார்த்தேன்.அதுவும் அப்படியே எதிர்காலம் பற்றி அச்சு அசலா சொல்றதாக சொன்னதால் போனேன்.
என் கனவருடைய விரல் எடுத்து பார்த்தேன், ஆனால் ஏனோ அதுல எனக்கு துளிகூட நம்பிக்கை வரலை.காரணம் அதுல நம்மிடமிருந்தே தான் அவர்கள் எல்லா பெயர்களையும் தெரிந்து கொள்வதாக நினைக்கிறேன்.மேலும் என்னுடைய கனவருக்கு சொன்ன எந்த ஒரு விஷயமும் இதுவரை நடந்ததாக என்னுடைய நினைவிற்கு இல்லை.அதற்கு நேர்மாறாகத் தான் நடந்திருக்கிறது. மேலும் எனக்கு எப்போதுமே அதிலேல்லேம் நம்பிக்கையே இல்லை.எங்கயோ ஒரு சிலர் தான் நீங்கள் சொன்னது போல துல்லியமக சொல்கிறார்களே ஒழிய எல்லாரும் பணம் பண்ணும் ஒரு வழியாகத் தான் செய்கிறார்கள்.//////
ஆமாம் சகோதரி! இந்தப் பனத்தாசையால்தான் இருக்கிற ஏடுகளை வழி வழியாகப் பங்கு வைத்துக்கொண்டார்கள். இப்போது பூனைகள் அப்பத்தைக் குரங்கை வைத்துப் பங்கு வைத்துக் கொண்ட கதைபோல அந்தக் கலை ஆகிவிட்டது!
////Blogger Ragu Sivanmalai said...
ReplyDeleteI have experience with Naadi Jothidam....It seems that they have a pattern of thumb impressions...Using the pattern, they are somehow finding the date of birth using the Tamil years system...Then they are just casting the horoscope and writing the Gochar palankal...Thats all..But they were able to tell the past clearly..not about the future.../////
The great astrologer Bangalore Venkatraman had also said this!
"ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத மகான்கள் அங்கே போகவேண்டாம்.
ReplyDeleteபோய்ப் படித்துவிட்டு வந்து என்னைப் பிறாண்ட வேண்டாம்.
அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!"
:-))))))))))))
it is 2 Much SP.VR. Lollu SUBBIAH
Puduvai Siva.
//SP.VR. SUBBIAH said...
ReplyDeleteBlogger ரமணா said...
நாடி சோதிடம் பற்றிய பதிவுக்கும்,அந்த சுட்டிக்கும்
நன்றி.
நாடி சோதிடம் பற்றி சன் தொலைக் காட்சியில்
"சிதம்பர ரகசியம்" தொடர் அருமையாய் சொன்னது./////
நான் அதைப் பார்க்க வில்லை! அது பற்றி ஏதேனும் விவரம் நினைவில் இருந்தால் எழுதுங்கள்!//
ஆசிரியர் ஐயா ,
தங்களின் மின்னஞ்சலுக்கு ஒரு லிங்க் அனுப்பியுள்ளேன்.பார்க்கவும்.( கதை பற்றிய விவாதம் மற்றும் விமர்சனம்)
ரமணா.
நாடி சோதிடத்தில் மட்டுமே 100% சரியான பலன்களை அறியலாம்.
ReplyDeleteநீங்கள் சரியான இடத்திற்கு,சரியான நேரத்திற்கு சென்றால் உங்களுக்குக் கிடைக்கும்.
உங்கள் ஜாதகத்தில் குருவும் ஒன்பவதாவது இடமும் நன்றாக இருந்தால்,நீங்கள் மனித கணமாக இருந்தால்,உங்களைப் பற்றிய உண்மைகளை நாடி சோதிடம் மூலம் அறியலாம்.இன்னுமொன்று சனியும் நன்றாக,அல்லது குருவின் பார்வையில் இருக்கவேண்டும்.
நாடி ஜோதிடம் கலை அல்ல,நிஜம்!
நாடியில் அகஸ்தியர் நாடி,காகபுஜண்டர் நாடி நன்றாக இருக்கும்.
எந்த சோதிட முறைகளிலும், சொல்பவரின் நற்பண்புகள் சரியில்லையென்றால் ஒன்றுமே சரியாக அமையாது.ஆனாலும் நாடியில், சொல்பவருக்கு சிறிது குறைவென்றாலும் பலன் மிகத்துல்லியமாக இருக்கும்.
(சோதிடத்திற்கும் கடவுளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை)
இப்படிக்கு,
ராவணன்.
நானும் ஒரு காலத்தில் நாடி ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தேன். ஆனால் எனக்கு நேர்ந்த அனுபவம் மிகவும் ஆச்சரியமானதாக இருந்தது. இந்த பதிவை பாருங்கள்
ReplyDeletehttp://madrasthamizhan.blogspot.com/2008/01/blog-post_8441.html
எதற்கும் அந்த வேளை வரவேண்டும். எல்லா துறைகளிலும் போலிகள் இருப்பது போல நாடி ஜோதிடத்திலும் போலி ஜோதிடர்கள் இருக்கிறார்கள். அதற்காக நாடி ஜோதிடமே போலி என்று கூறிவிட முடியாது.
அந்த cassette இன்று கூட என்னிடம் உள்ளது. அதை அவ்வப்போது போட்டு பார்த்தால் என்னை பொருத்தவரை 100% சரியாகவே உள்ளது என்றே கூறலாம்.
ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன். நாடி ஜோதிடம் பார்க்க செல்பவர்கள் அந்த ஜோதிடர் உண்மையானவரா அல்லது போலியா என்று சோதிப்பதற்காக செல்லாதீர்கள். அதை தெரிந்து என்ன சாதித்து விடப்போகிறீர்கள்? அங்கு செல்வதால் உங்களுக்கு ஏதாவது மன அமைதி கிடைக்கிறதா என்றே பார்க்க வேண்டும்.
வாத்தியாரையா,
ReplyDeleteநாடி ஜோதிடம் என்பது என்னைப் பொறுத்த வரையில் ஏமாற்று வேலை. தேர்ந்த மனிதர்களைக் கொண்டு நம்மிடமிருந்தே தகவல்களைப் பெற்றுக்கொண்டு அதை பாட்டாக படித்து ஏமாற்றுகிறார்கள். மேலும் ஏடுகளில் எழுதப்பட்டவைகளைப் படிக்க அதில் அனுபவம் மிக்க அறிஞர்களால் மட்டுமே முடியும். வைத்தீஸ்வரன் கோவிலில் ஏடு படிப்பவர்கள் இந்த தகுதி பெற்றவர்களாக இருக்க முடியாது.
பெரும் பணம் புரளும் ஒரு வியாபாரம் அது.
Dear Sir,
ReplyDeleteI had a bad experience with nadi jothidam. I have seen my Nadi with 3 different Nadi Jothidars on two days. Each one told me differently and none was true. But, My father visited them few years back, and they have told many interesting predictions, which became true. I suspect, these people might have sold all the pamphlets for hefty price to a foreign research centre, possibly, Japanese or Gernman.
/////Blogger புதுவை சிவா :-) said...
ReplyDelete"ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத மகான்கள் அங்கே போகவேண்டாம்.
போய்ப் படித்துவிட்டு வந்து என்னைப் பிறாண்ட வேண்டாம்.
அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!"///////
:-))))))))))))
it is 2 Much SP.VR. Lollu SUBBIAH
Puduvai Siva.///////
2 மச் அல்லது 3 மச் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். உண்மையைச் சொன்னேன் சாமி!
Blogger ரமணா said...
ReplyDelete//SP.VR. SUBBIAH said...
Blogger ரமணா said...
நாடி சோதிடம் பற்றிய பதிவுக்கும்,அந்த சுட்டிக்கும்
நன்றி.
நாடி சோதிடம் பற்றி சன் தொலைக் காட்சியில்
"சிதம்பர ரகசியம்" தொடர் அருமையாய் சொன்னது./////
நான் அதைப் பார்க்க வில்லை! அது பற்றி ஏதேனும் விவரம் நினைவில் இருந்தால் எழுதுங்கள்!//
ஆசிரியர் ஐயா ,
தங்களின் மின்னஞ்சலுக்கு ஒரு லிங்க் அனுப்பியுள்ளேன்.பார்க்கவும்.( கதை பற்றிய விவாதம் மற்றும் விமர்சனம்)
ரமணா.///////
தகவலுக்கு நன்றி நண்பரே! பார்க்கிறேன்
Blogger ராவணன் said...
ReplyDeleteநாடி சோதிடத்தில் மட்டுமே 100% சரியான பலன்களை அறியலாம்.
நீங்கள் சரியான இடத்திற்கு,சரியான நேரத்திற்கு சென்றால் உங்களுக்குக் கிடைக்கும்.
உங்கள் ஜாதகத்தில் குருவும் ஒன்பவதாவது இடமும் நன்றாக இருந்தால்,நீங்கள் மனித கணமாக இருந்தால்,உங்களைப் பற்றிய உண்மைகளை நாடி சோதிடம் மூலம் அறியலாம்.இன்னுமொன்று சனியும் நன்றாக,அல்லது குருவின் பார்வையில் இருக்கவேண்டும்.
நாடி ஜோதிடம் கலை அல்ல,நிஜம்!
நாடியில் அகஸ்தியர் நாடி,காகபுஜண்டர் நாடி நன்றாக இருக்கும்.
எந்த சோதிட முறைகளிலும், சொல்பவரின் நற்பண்புகள் சரியில்லையென்றால் ஒன்றுமே சரியாக அமையாது.ஆனாலும் நாடியில், சொல்பவருக்கு சிறிது குறைவென்றாலும் பலன் மிகத்துல்லியமாக இருக்கும்
(சோதிடத்திற்கும் கடவுளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை)
இப்படிக்கு,
ராவணன்.///////
நன்றி நண்பரே!
///சோதிடத்திற்கும் கடவுளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை////
அது நிதர்சனமான உண்மை. முன்வினைப் பயன்களே இந்த ஜென்மத்து வாழ்க்கையின் சந்தோஷங்கள் அல்லது அவலங்கள்.
கடவுளைக் கும்பிடுவதால், அவை நீங்காது. நாம்தான் அனுபவிக்க வேண்டும்.
கடவுளை வணங்கினால் என்ன பலன்?
He will give us standing power to face it!
Blogger Expatguru said...
ReplyDeleteநானும் ஒரு காலத்தில் நாடி ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தேன். ஆனால் எனக்கு நேர்ந்த அனுபவம் மிகவும் ஆச்சரியமானதாக இருந்தது. இந்த பதிவை பாருங்கள்
http://madrasthamizhan.blogspot.com/2008/01/blog-post_8441.html
எதற்கும் அந்த வேளை வரவேண்டும். எல்லா துறைகளிலும் போலிகள் இருப்பது போல நாடி ஜோதிடத்திலும் போலி ஜோதிடர்கள் இருக்கிறார்கள். அதற்காக நாடி ஜோதிடமே போலி என்று கூறிவிட முடியாது.
அந்த cassette இன்று கூட என்னிடம் உள்ளது. அதை அவ்வப்போது போட்டு பார்த்தால் என்னை பொருத்தவரை 100% சரியாகவே உள்ளது என்றே கூறலாம்.
ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன். நாடி ஜோதிடம் பார்க்க செல்பவர்கள் அந்த ஜோதிடர் உண்மையானவரா அல்லது போலியா என்று சோதிப்பதற்காக செல்லாதீர்கள். அதை தெரிந்து என்ன சாதித்து விடப்போகிறீர்கள்? அங்கு செல்வதால் உங்களுக்கு ஏதாவது மன அமைதி கிடைக்கிறதா என்றே பார்க்க வேண்டும்.//////
அரிய தகவலுக்கு உங்களுக்கும் , நண்பர் ராவணன் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!
////Blogger அமர பாரதி said...
ReplyDeleteவாத்தியாரையா,
நாடி ஜோதிடம் என்பது என்னைப் பொறுத்த வரையில் ஏமாற்று வேலை. தேர்ந்த மனிதர்களைக் கொண்டு நம்மிடமிருந்தே தகவல்களைப் பெற்றுக்கொண்டு அதை பாட்டாக படித்து ஏமாற்றுகிறார்கள். மேலும் ஏடுகளில் எழுதப்பட்டவைகளைப் படிக்க அதில் அனுபவம் மிக்க அறிஞர்களால் மட்டுமே முடியும். வைத்தீஸ்வரன் கோவிலில் ஏடு படிப்பவர்கள் இந்த தகுதி பெற்றவர்களாக இருக்க முடியாது.
பெரும் பணம் புரளும் ஒரு வியாபாரம் அது.//////
இல்லை! சில வல்லவர்களும் இருக்கிறார்கள். இதற்கு முன் உள்ள பின்னூட்டங்களைப் படியுங்கள். திருவாளர் ராவணன் அவர்களும், Expatguru அவர்களும் வேறு விதமாகச் சொல்லியிருக்கிறார்கள்!
/////Blogger படகோட்டி said...
ReplyDeleteDear Sir,
I had a bad experience with nadi jothidam. I have seen my Nadi with 3 different Nadi Jothidars on two days. Each one told me differently and none was true. But, My father visited them few years back, and they have told many interesting predictions, which became true. I suspect, these people might have sold all the pamphlets for hefty price to a foreign research centre, possibly, Japanese or Gernman.//////
அந்த ஓலைகள் வித்தியாசமான தமிழில் எழுதப்பெற்றிருக்கும். அதை வங்கிக்கொண்டுபோய் அவர்கள் என்ன செய்ய முடியும்?
அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஒரு காலத்தில் வம்சா வழியினர் பிரதிகள் எடுத்துப் பங்கு வைத்துக்கொண்டார்கள். அப்படி எடுத்துவைத்திருப்பவர்கள் கூறுவது சரியாக இருக்கும். சில குடும்பங்களில் பிரதி எடுக்காமல் ஓலைகளைக் காண்டம் வாரியாகப் பங்கு வைத்துக் கொண்டார்கள் அவர்களிடம் முழு விவரம் இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் கூறும் பலன்கள் தவறாகி விடலாம்.
//அவர்கள்
ReplyDeleteநடந்த நிகழ்ச்சிகளை அசத்தலாக சொல்லி விடுகிறார்கள். எதிர்காலத்தைச்
சொல்வதில் சற்றுத் திணறுகிறார்கள்//
இதை நான் அனுபவித்து உணர்ந்தேன். பிப்ரவரி 2006-ல் வைத்தீஸ்வரன் கோயிலில் நாடி ஜோதிடம் பார்த்தேன். கடந்த காலம் பற்றிய தகவல்கள் அனைத்தும் உண்மையாகவே இருந்தன. எதிர்காலம் பற்றிக் கூறியவற்றில் மட்டும் கொஞ்சம் குழப்பம் நீடிக்கிறது.
என் வாயில் இருந்து பிடுங்கி ஜோதிடம் சொன்னதாகத் தோன்றவில்லை. முக்கியமாக, என் பெயரையும், பெற்றோர் பெயர்களையும், தந்தையின் பணி பற்றியும் கூட மிகச்சரியாகவே கூறியது எப்படி என்று ஆச்சரியப்படுகிறேன்.
நிலாக்காலம்!
ReplyDeleteநல்லாத்தானே இருந்தீங்க. இடையில் எப்படியாச்சு? அது எப்படி வந்தது என்று ஏதாவது சொன்னாரா?
// தந்தையின் பணி பற்றியும் கூட மிகச்சரியாகவே கூறியது எப்படி என்று ஆச்சரியப்படுகிறேன்.//
ReplyDeleteஇப்படியாக இருக்கலாம். உங்கள் பெயர் சரவணன் என்று வைத்துக்கொள்வோம். ஏடு படிப்பவர் ஒரு கட்டை எடுத்து வருகிறார்.
ஏ.ப: ..... .... ... (புரியாத வகையில் ஏதோ சொல்லி விட்டு) .... .... ஆறேழுத்தில் அமைந்த பெயர் கொண்ட (மறுபடியும் புரியாத) .... உங்கள் பெயர் ஆறெழுதில் இருக்கிறதா?
நீ: இல்லை.
ஏ.ப: இந்த சுவடி உங்களுடையது இல்லை. அடுத்ததை படிக்கிறேன். .... ..... .... பத்தில் பாதி எழுத்து கொண்ட..... உங்கள் பெயர் ஐந்தெழுத்தா?
நீ: ஆமாம் சார்.
ஏ.ப: உங்கள் ஏடு போல இருக்கிறது. இருந்தாலும் உறுதிப்படுத்திக்கொள்வோம். ...... ..... .... ண...ன...ண...ண...ன உங்கள் பெயரில் ரகரம் இருக்கிறதா?
நீ: ஆமாம் சார்
ஏ.ப:..... ... ..... ...... கொம்பில்லா சிவனின் முதல் எழுத்து உங்கள் பெயரின் முதல் எழுத்தா? அதாவது "ச" உங்கள் பெயர் முதல் எழுத்தா?
நீ: ஆமாம் சார். (என்னமா இருக்குது சுவடிகள்!!!)
[பெயர் ஐந்து எழுத்து, "ர" இருக்கிறது. முதல் எழுத்து "ச". இதில் தேறுவது சரவணன் மற்றும் சற்குணம் (மேலும் இருக்கலாம் ஆனால் உதாரணத்துக்கு இரண்டை மட்டும் கொடுத்துள்ளேன்.)
ஏ.ப: .... ... .... .... ண ண ண..... உங்கள் பெயர் சிவ மைந்தனின் பெயரா?
நீ: என்னது?
ஏ.ப: அதாவது செந்தில், முருகன் அல்லது சரவணண் ஆ?
நீ: ஆமாம் சார் (கலக்கலா இருக்கே)
ஏ.ப: (ஐந்து எழுத்து பெயர், முதல் எழுத்து "ச" அதனால் சரவணன்)
(அன்று செவ்வாய்க் கிழமை தை 10ம் நாள் அன்று நீங்கள் மனைவியுடன் சென்றிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.)
"சரவணன் என்ற சிவனின் மகனான
மங்கல வாரத்தில் அறுவடை மாதத்தில்
ஈரைந்து நாளில் தம்பதி சமேதராக
வந்துள்ள உங்களுக்கு பெரியோன் பாதம் வணங்கி
விதியை உரைக்கிறேன் பணிந்து நின்று கேட்பாயாக."
இப்படித்தான் இருக்கும் அய்யா. ஏடு படிப்பவர்கள் புத்தி சாலிகள் என்பது உண்மை. மேலும் உங்கள் வாயை பிடுங்கி சொல்லும் போது கடந்த காலத்தை மட்டும் தானே சொல்ல முடியும்?
நீங்களும் "அப்படியே நம்பளப்பத்தி இருக்குது." என்று நினைத்துக்கொண்டு எல்லா காண்டத்தையும் பார்த்து விட்டு ஒரு 500 - 1000 ரூபாய்களை கொடுத்துவிட்டு வந்து விடுவீர்கள்.
//தந்தையின் பணி பற்றியும் கூட மிகச்சரியாகவே கூறியது எப்படி என்று ஆச்சரியப்படுகிறேன்//
ReplyDeleteஎல்லா வகையான பணிகளையும் கணக்கன், நிர்வாகி, இராணுவ உத்யோகம் என்ற வகைகளில் அடக்கி விடலாம். இதை ஏடு கேட்க சென்றிருக்கும் சூழ்நிலையில் உங்களிடமிருந்து பெறுவது பெரிய விஷயமில்லை.
//கணக்கன், நிர்வாகி, இராணுவ உத்யோகம் // கணக்கன், நிர்வாகி, இராணுவ உத்யோகம் மற்றும் ஏவல் வேலை என்று படிக்கவும்.
ReplyDelete//இந்த சுவடி உங்களுடையது இல்லை. அடுத்ததை படிக்கிறேன்// உங்களுடைய தகவல்களைக் கண்டு பிடிக்கும் வரை இந்த வேறு ஏடு எடுப்பது தொடரும். கொஞ்ச நேரத்துகுப் பிறகும் கண்டு பிடிக்க முடியவில்லையென்றால் "எங்களிடம் உங்களுடைய சுவடி இல்லை" என்று சொல்லி அனுப்பி விடுவார்கள்.
ReplyDeleteநான் இங்கு பதிந்தது என்னுடைய கருத்துக்கள் மட்டுமே. உண்மையாகவே நல்ல நாடி ஜோதிடர்களும் நாடி ஏடுகளும் இருக்கலாம். எனக்குத் தெரியாது.
ReplyDeleteஹலோ மிஸ்டர்.வேலன், நீங்க என்ன சொல்லிட்டீங்க, பின்னூட்டம் போட்டாதான் அட்டண்டென்ஸ் வருமா?நாங்கல்லாம் எப்பவுமே full attendenceதான்.//
ReplyDeleteஅம்மணி தங்கள் சொன்னதில் பிழை இருந்தால் பரவாயில்லை-ஆனால் எழுத்தில் பிழைஉள்ளது.
முன்னாடி-முன்னால்
கனவரு- கணவரு
விரல் எடுத்து -விரல் ரேகை எடுத்து
அதுல-அதில்
எனக்கு எப்போதுமே அதிலேல்லேம்-
எனக்கு எப்போழுதுமே அதில் எல்லாம்
எங்கயோ-எங்கேயோ
துல்லியமக - துல்லியமாக
பனம் - பணம்
அம்மணி சரிங்களா?
எங்களை எல்லாம் ஆசிரியர் இன்னும்
வகுப்பறை மாணவர்களாக சேர்க்கவில்லை என்கிற ஆதங்கம்தான்.
வேறு ஏதும் இல்லை.
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஆசிரியர் அய்யா,
ReplyDeleteதாங்களும் பணம் என்பதற்கு பனம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
தகவலுக்கு நன்றி.
ReplyDelete//வேலன். said...
ReplyDeleteஹலோ மிஸ்டர்.வேலன், நீங்க என்ன சொல்லிட்டீங்க, பின்னூட்டம் போட்டாதான் அட்டண்டென்ஸ் வருமா?நாங்கல்லாம் எப்பவுமே full attendenceதான்.//
அம்மணி தங்கள் சொன்னதில் பிழை இருந்தால் பரவாயில்லை-ஆனால் எழுத்தில் பிழைஉள்ளது.
முன்னாடி-முன்னால்
கனவரு- கணவரு
விரல் எடுத்து -விரல் ரேகை எடுத்து
அதுல-அதில்
எனக்கு எப்போதுமே அதிலேல்லேம்-
எனக்கு எப்போழுதுமே அதில் எல்லாம்
எங்கயோ-எங்கேயோ
துல்லியமக - துல்லியமாக
பனம் - பணம்
அம்மணி சரிங்களா?
எங்களை எல்லாம் ஆசிரியர் இன்னும்
வகுப்பறை மாணவர்களாக சேர்க்கவில்லை என்கிற ஆதங்கம்தான்.
வேறு ஏதும் இல்லை.
வாழ்க வளமுடன்,
வேலன்.//
வேலன் அவர்களே
இ கலப்பையில் ஆங்கிலத்தில் தமிழை தட்டச்சு செய்யும் போது இந்த "shift key" குழப்பத்தால் இந்த தவறுகள் நடந்து விடுகிறது.
மேலும் இந்தக் கால இளைஞர்களில் பெரும் பகுதியினர் ஆங்கில மொழி வழியில் கல்வி பயின்றதாலும் தமிழ் கொஞ்சம் ..........
இதைக் குறைக்க ஒரு எளிய வழி
1. வேகமாய் தட்டச்சு செய்யாமல்.மெதுவாய் திரையையும்(vdu),விசைப் பலகையும்(key board)பார்த்து தட்டச்சு செய்தல் நலம்.
2.தட்டச்சு செய்ததும் "preview"
பார்த்து பின்னர் "publish"
செய்தால் நலம்.
3.தினமணி போன்ற நாளிதழ்களை தொடர்ந்து வாசித்தல், கூடுதல் நன்மை அளிக்கும்.
கட்டை விரல் ரேகையை வைத்து பிறந்த நேரம் 15 நிமிடம் துல்லியமாக ஒரு நிபுணர்கள் கணிக்க முடியும் ஆக, நாடி ஜோதிடத்தின் அடிப்படை ஜாதகம்தான் என்று எனது நண்பர் ஒருவர் ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டவர் சொல்லுவார்
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
///Blogger RAJA said...
ReplyDeleteகட்டை விரல் ரேகையை வைத்து பிறந்த நேரம் 15 நிமிடம் துல்லியமாக ஒரு நிபுணர்கள் கணிக்க முடியும் ஆக, நாடி ஜோதிடத்தின் அடிப்படை ஜாதகம்தான் என்று எனது நண்பர் ஒருவர் ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டவர் சொல்லுவார்
அன்புடன்
இராசகோபால்///
இரட்டைப் பிறவிகளுக்குக்கூட கட்டைவிரல் ரேகைகள் வெவ்வேறாக இருக்கும்
படைப்பின் அதிசயம் அதுதான்!
உலகின் ஜனத்தொகை 600 கோடி என்று வைத்துக்கொள்ளுங்கள். கட்டை விரல் ரேகைகள் மட்டும் (அதுவும் அந்த சின்ன இடத்தில்) வெவ்வேறாக இருக்கும்
It shows the greatness and manifestation of The Almighty!
I feel sorry for those who all had bad experience with Nadi Jothidam. Your bad experience means you have gone to wrong Nadi Astrologers. Believe it or not! Nadi jothidam is TRUE. 100% TRUE. But you have to find the genuine Nadi Astrologers. If your correct Leaves are obtained you can find the following details: Native's name,parents' names and spouse's name,native's and proffessions of father,brothers&sisters, name in previous birth, next birth, the major sins committed in the previous birth, chances of attaining 'Moksha' in this birth,the diseases the native is likely to suffer from and medicines, Chances of travelling abroad,longivity,marital life, material comforts, education of children and many more...! I am practically experiencing the predictions of My Nadi reader. I am working in abroad for the past 3years and I owned a house as predicted in my Nadi leaves.
ReplyDelete/////Blogger Sabesan said...
ReplyDeleteI feel sorry for those who all had bad experience with Nadi Jothidam. Your bad experience means you have gone to wrong Nadi Astrologers. Believe it or not! Nadi jothidam is TRUE. 100% TRUE. But you have to find the genuine Nadi Astrologers. If your correct Leaves are obtained you can find the following details: Native's name,parents' names and spouse's name,native's and proffessions of father,brothers&sisters, name in previous birth, next birth, the major sins committed in the previous birth, chances of attaining 'Moksha' in this birth,the diseases the native is likely to suffer from and medicines, Chances of travelling abroad,longivity,marital life, material comforts, education of children and many more...! I am practically experiencing the predictions of My Nadi reader. I am working in abroad for the past 3years and I owned a house as predicted in my Nadi leaves.////
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே!
உங்கள் பகிர்விற்கு நன்றி உரித்தாகுக!
Once I never believe Astrology. Accidentally I saw the NADI JOTHIDAM, and now I' believing Astrology also. One should go to the authentic astrologier.
ReplyDelete/////Blogger Dr.R.Kannan,Ph.D. Botanist/Pharmacognosist said...
ReplyDeleteOnce I never believe Astrology. Accidentally I saw the NADI JOTHIDAM, and now I' believing Astrology also. One should go to the authentic astrologier.//////
அரைகுறை ஜோதிட அறிவினால் ஜோதிடர்கள் பொய்யாக இருக்கலாம். ஆனால் ஜோதிடம் பொய்யில்லை நண்பரே!
இது என் அனுபவம்.உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
I am new student and read this article only now. I find nadi jothidam to be true as far as they are able to derive our jathakam. The technique how they derive jathakam is very important particularly when i dont know my exact time of birth. But the kundali they have drawn, was same in atleast two places. But I could not resemble it using any computer software (both paid and free softwares). I have seen for myself nadijothidam at Salem (all kandams), tambaram and also at
ReplyDeleteVaitheeswaran koil (poosai muthu). Broadly they found to be true, including my wife's name, revealed much before my marriage. There was error or one planet position, may be is it due to wrong ayanamsa. After over 15 years, 2 months back i could lay my hand on the books cassettes given in all 3 places, and the predictions are broadly true. In 1993, they told that my sister will (she did not accompany us but only thumb impression) deliver child after few years and she delivered child in 2001. I will surely try to go fr Nadi jothimdam again when I visit india next. With best regards, BALA
/////Balasubramanian Pulicat said...
ReplyDeleteI am new student and read this article only now. I find nadi jothidam to be true as far as they are able to derive our jathakam. The technique how they derive jathakam is very important particularly when i dont know my exact time of birth. But the kundali they have drawn, was same in atleast two places. But I could not resemble it using any computer software (both paid and free softwares). I have seen for myself nadijothidam at Salem (all kandams), tambaram and also at
Vaitheeswaran koil (poosai muthu). Broadly they found to be true, including my wife's name, revealed much before my marriage. There was error or one planet position, may be is it due to wrong ayanamsa. After over 15 years, 2 months back i could lay my hand on the books cassettes given in all 3 places, and the predictions are broadly true. In 1993, they told that my sister will (she did not accompany us but only thumb impression) deliver child after few years and she delivered child in 2001. I will surely try to go fr Nadi jothimdam again when I visit india next. With best regards, BALA/////
விரிவான தகவல்களுக்கு நன்றி நண்பரே!
³Â¡ ÅÉì¸õ ¯í¸ÖìÌ ¿¡Ê ¦ƒ¡¾¢¼õ º¡¢Â¡¸ ¦º¡øÀÅ÷¸ø ¦¾¡£ó¾¡ø ±ý Ӹš¢ìÌ «Å÷¸Ö¨¼Â Ӹš¢ «ÛÀ×õ ¿ýÈ¢ my mail.jasvaravi14@gmail.com
ReplyDelete/////raviraja said...
ReplyDeleteஐயா வணக்கம் உங்களுக்கு நாடி ஜொதிடம் சா¢யாக சொல்பவர்கள் தெரிந்தால் என் முகவா¢க்கு அவர்களுடைய முகவா¢ அனுப்பவும் நன்றி my mail.jasvaravi14@gmail.com /////
எனக்குத் தெரியாது சுவாமி!