"சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா?"
என்றார் கவியரசர் கண்ணதாசன்.
அல்லிக்கு ஏது சஞ்சலம்? கவியரசர் கூறியது அல்லி போன்ற முகம்
கொண்ட இளம் நங்கையரின் மனசஞ்சலத்தைக் கூறினார்.
அல்லி, மல்லி, அல்லது கள்ளி என்று பெண்கள் மட்டுமல்ல, ஜீன்ஸ்
பாகி, டபுள் பேரல் பேண்ட் அணிந்த இளைஞர்களுக்கும் மன சஞ்சலம்
வரக்கூடாது. அந்த சஞ்சலங்களுக்குக் காரணமாக இருக்கும்
சந்திரனைப் பற்றி இன்று பார்ப்போம்
====================================================
சந்திரன் பெண் கிரகம். பெண்களைச் சிறப்படையச் செய்யும் கிரகம்.
"அது எப்படி சார்? இருபாலருக்கும் பொதுவானதல்லவா கிரகங்கள்.
ஏன் ஜல்லி அடிக்கிறீர்கள்?"
ஜல்லி இல்லை அப்பனே. சந்திரன் பொதுவான கிரகம்தான். சட்டம்
பொதுவானதுதான் ஆனால் பல சட்டங்கள் பெண்களுக்கு சாதகமாக
இல்லையா?
அதுபோல சந்திரன் அதிகமான அளவில் பெண்களுக்கே சாதகமாக
இருப்பான். அவன் தாய்க்கு உள்ள கிரகம் சாமி!
ஒரு குழந்தைக்கு நல்ல தாயையைக் கொடுப்பது அவன்தான்.
பிறக்கும் குழந்தைக்கு வேறு என்ன வேண்டும்?
கோடியில் ஒருத்தி தனக்குப் பிறந்த குழநதையை குப்பைத் தொட்டியில்
போட்டு விட்டுப் போவாள். அவளையெல்லாம் கணக்கில் எடுத்துக்
கொள்ள வேண்டாம்.
ஒரு ஞானி சொன்னான்:
"கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. அதானால்தான் தாயைப் படைத்தான்."
ஆகவே தாய் கடவுளுக்குச் சமம்.
இப்போது சொல்லுங்கள் சந்திரன் யாருக்கு அனுசரணையாக இருப்பான்?
சந்திரன் லக்கினத்தில் இருந்தாலும் அல்லது ஏழில் இருந்து லக்கினத்தைப் பார்த்தாலும், அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் ஜாதகி அழகாக இருப்பாள்.
பல நடிகைகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும்.
Beauty என்பது பெண்களுக்கு மட்டுமே! :-)))))
ஆண்களுக்கு Handsome - அதற்கு அதிபதி சூரியன்
---------------------------------------------------------------------------------------------------------
விட்டால் நான் எழுதிக் கொண்டே இருப்பேன். நேற்று ஒரு பின்னூட்டக்காரர்
வந்து உங்கள் பதிவுகள் நீளமாக இருக்கின்றன என்றார். இன்றும் அவர் வரலாம்.
அதனால் கதைப்பதை நிறுத்தி விட்டுப் பாடத்திற்கு வருகிறேன்.
...............................................................................................................................
உடலுக்குள் பல உறுப்புக்கள் உண்டு. அவைகள் ஒழுங்காக இயங்கினால்
தான் மனிதன் உயிர் வாழ முடியும். அதுபோல மனத்திற்குள் பல
தாக்கங்கள் உண்டு. சில தாக்கங்கள் மனதை அதிரச் செய்யும். சில
தாக்கங்கள் மனதைக் குளிரச் செய்யும். அந்தத் தாக்கங்கள் அதிகமானால்
மனிதனுக்குப் பைத்தியம் பிடித்து விடும்.
நாசுக்காகச் சொன்னால் Mental ஆகி விடுவான்.
அவைகள் என்னென்ன தாக்கங்கள் என்பதைப் பட்டியல் இட்டிருக்கிறேன்
அவற்றில் நல்ல தாக்கங்களும் உண்டு. தீய்மை பயக்கும் தாக்கங்களும்
உண்டு. பாருங்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்
1. சுகங்கள், துக்கங்கள்
2. கோபங்கள், தாபங்கள்
3. உடன்பாடுகள்
4. முரண்பாடுகள்
5. ஒட்டுதல்கள்
6. விரிசல்கள்
7. பிடிவாதங்கள்
8. விட்டுக்கொடுத்தல்கள்
9. சுயநலங்கள்
10. தியாகங்கள்
11. எதிர்பார்ப்புக்கள்
12. ஏமாற்றங்கள்
13. நம்பிக்கைகள்
14. துரோகங்கள்
15. காதல்
16. காமம்
17. மன நெகிழ்ச்சிகள்
18. மன எரிச்சல்கள்
19. புளங்காகிதங்கள்
20. பூசல்கள்
சந்திரன் மனதிற்குக் காரகன். ஜாதகத்தில் அவன் வலிமையாக இருந்தால்
மேற்கூறியவற்றில் குளிர வைக்கும் அதிர்வுகளையே ஜாதகன் அதிகமாகச்
சந்திப்பான்.
இல்லையென்றால் இல்லை! மனப் போராட்டம்தான்!
=====================================================
சந்திரனின் ஆதிபத்யங்கள்
சொந்த வீடு: கடகம் (1)
நட்பு வீடுகள்: சிம்மம், கன்னி, மிதுனம்.(3)
சமவீடுகள்: துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம் (6)
உச்சவீடு: ரிஷபம் (1)
நீசவீடு: விருச்சிகம் (1)
பகைவீடு: எதுவுமில்லை! (அப்பாடா பிழைத்தோம்)
அதில் ஒரு உண்மையிருக்கிறது. சந்திரன் மனகாரகன். அவனுக்குப் பகை
உணர்வு இருந்தால், அவன் எப்படி மனகாரகனாக இருக்க முடியும்?
ஆகவே அவனிடமும் பகை இல்லை. அவன் சென்று அமரும் இடங்களிலும்
அவனுக்குப் பகை இல்லை. அவன்தான் அனுசரித்துப் போகிறான்.
அனுசரித்துப் போனால் பகை ஏது?
சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சந்திரனுக்கு 100% வலிமை
இருக்கும்.
சந்திரனுடன் குரு சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம்
சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் சசிமங்கள யோகம்
அவற்றிற்கான பலன்களை யோகங்களைப் பற்றிய பாடம் நடத்தும்போது
அலசுவோம்
சம வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 75% பலன் உண்டு! (என்ன
இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)
நட்பு வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 90% பலன் உண்டு.
சந்திரனுக்குப் பகை வீடுகளே கிடையாது.
நீசமடைந்த சந்திரனுக்கு பலன் எதுவும் இல்லை
உச்சமடைந்த சந்திரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!
சந்திரன் மாத்ரு காரகன் எனப்படுவான். தாய்க்கு அதிபதி.
வியாதிகளில் - சித்த சுவாதீனம் அல்லது ஷயரோகம் ஏற்பட்டால்
அதற்குக் ஜாதகத்தில் உள்ள நலிவடைந்த சந்திரனே காரணமாவான்.
இந்த அளவுகளையெல்லாம் நான் எலக்ட்ரானிக் ஸ்கேல் வைத்து எடை
போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். மனதில் கொள்க!
======================================================
நவரத்தினங்களில் சந்திரனுக்கு உரியது முத்து.
தானியங்களில் சந்திரனுக்கு உரியது அரிசி (நெல்)
எண் கணிதத்தில் சந்திரனுக்கு உரியது எண் 2 ஆகும்!
சந்திரனுக்கான உலோகம் வெள்ளி (Silver)ஆகும்!
அதிதேவதை: பார்வதி (பராசக்தி)
-----------------------------------------------------------------------------------------------------
Moon is the presiding deity of the element water,
and rules over the tides of the sea.
The sphere of the Moon is the reservoir of rainwater
and thus Moon is the ruler of plants and the
vegetable kingdom.
Moon represents the mother or female principle,
the energy that creates and preserves.
Moon rules peace of mind, comfort, general well-being,
and also the fortune of a person.
Some will be tender-hearted, wise, and learned.
--------------------------------------------------------------------------------------
Water Content of the Human Body:
The average person is about 70% water by weight!
சந்திரன் நீருக்கு அதிபதி. மழை, ஆறு, கடல், அனைக்கட்டுகள்
போன்ற அனைத்து நீர் நிலைகளுக்கும் அவன்தான் அதிபதி.
பெளர்ணமி தினத்தன்று சந்திரனிலிருந்து வரும் ரேகைகளின்
(Magnetic rays from the moon) அழுத்தம் அதிகமாக இருப்பதால்தான்
கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும்
ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருக்கும்.
மனநோயாளிகள் அன்று உத்வேகமாக இருப்பார்கள். சாதாரண
மனிதர்கள் அதை உணர்வதில்லை.
பெளர்ணமி நாளான்று மனிதனுக்கு ரத்த ஓட்டம் அதிகமாக
இருக்கும். அதனால் அன்று அறுவை சிகிச்சைகளைத் தவிருங்கள் என்று
மருத்துவர் ஒருவரே சொல்லியிருந்தார். அதன் விவரத்தை முன் பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.
The Moon gives illumination, sense of purpose, intuitive nature,
sensuality, taste, youth, love of poetry, fine arts and music,
love of jewelry, attractive appearance, wealth and good fortune.
It makes us moody, emotional, and sensitive.
வளர்பிறைச் சந்திரனின் காலத்தில் பிறந்தவர்களுக்குச் சந்திரன்
நன்மையளிக்கும் கிரகம். தேய்பிறைச் சந்திரனின் காலத்தில்
பிறந்தவர்களுக்கு சந்திரனால் பெரிய அளவு நன்மைகள்
கிடைக்காது. இது பொது விதி
அதென்ன வளர்பிறைச் சந்திரன்? தேய்பிறைச் சந்திரன்?
ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 180 பாகைக்குள்
இருக்கும் சந்திரன் வளர்பிறைச் சந்திரன். அந்த தூரத்தைக் கடந்து
181 பாகை முதல் 360 பாகைவரை உள்ள இடத்தில் இருக்கும்
சந்திரன் தேய்பிறைச் சந்திரன்
அதாவது அமாவாசைத் திதியில் இருந்து பெளர்ணமி திதி வரை
உள்ள 15 தினங்கள் வளரும் நாட்கள். பெளர்ணமி முதல்
அமாவாசை வரை உள்ள பதினைந்து தினங்கள் தேயும் (பிறை)
நாட்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சரியான இடத்தில் இல்லாவிட்டாலும்
அல்லது தீய சேர்க்கை அல்லது பார்வைகளால் கெட்டிருந்தாலும்,
அந்த ஜாதகனுக்கு வெற்றிகள் அரிதாகிவிடும். வசதியான வாழ்க்கை
கிடைக்காமல் போய்விடும். சிலர் சிறு வயதிலேயே வறுமைக்கு
ஆளாகி நொடித்துப் போவிடுவார்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிகளை வைத்துப் பலன்கள்:
1.
மேஷத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் செவ்வாயின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். இந்த இடத்தில்
சந்திரன் அமைந்த ஜாதகன் செயல் வீரனாக இருப்பான். எடுத்த காரியத்தை
முடிக்காமல் விட மாட்டான். உடல், மனம் இரண்டிலும் பலம் பொருந்திய
வனாக இருப்பான். உணர்ச்சி வயப்பட்டவனாக இருப்பான். எளிதில்
தூண்டுதலுக்கு இறையாகிவிடுபவனாக இருப்பான். (Easily ignited;
flammable.). சிறந்த கருத்துக்களை அள்ளிக் கொடுப்பவனாக இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------------
2.
ரிஷபத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் சுக்கிரனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். ஒரு ஜாதகத்தில்
சந்திரன் அமர்வதற்கு உகந்த இடம் இதுதான். This is the most favoured
position in the chart for the moon). எல்லா உணர்வுகளையும் கொண்டவனாக
ஜாதகன் இருப்பான். அதை அவ்வப்போது வெளிப்படுத்தும் திறமையும்
ஜாதகனிடம் இருக்கும். ரசனை உணர்வு மிக்கவனாக ஜாதகன் இருப்பான்.
அழகு, இயற்கை, கலைகள் என்று எல்லாவற்றையும் ரசித்துப் போற்றுபவனாக
இருப்பான். பிடிப்பான கொள்கை, கண்ணோட்டம் உடையவனாக ஜாதகன்
இருப்பான். நினைத்தை சாதிக்கும் ஆற்றல் உடையவனாகவும் இருப்பான்.
சில சமயங்களில் இந்த அதீதப் பிடிப்பினால் கோபமான சூழ்நிலைக்குத்
தள்ளப்படும் ஆளாகவும் இருப்பான்.

3.
மிதுனத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் புதனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். புத்திசாலிகளுக்கு உரிய
இடம். அதிக ஆர்வமும், அனைத்தையும் நேசிக்கும் தன்மை உடையவனாக
ஜாதகன் இருப்பான். பெண்ணிலிருந்து பேனா வரை ஒன்றைக்கூட விடாமல்
ரசிப்பான். எதையும் கற்றுக் கொள்ளக்கூடியவன். சிறந்த சிந்தனையாளன்.
எதையும் சிறப்பாகச் சொல்லும் திறமையாளன். ஒரே நேரத்தில் பல வேலை
களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவன்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் விதம் விதமாகத் தேடுபவன்.
தேடும் வெரைட்டி கிடைக்காதபோது சோர்ந்து விடுபவன்
========================================================
4.
கடகத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் சந்திரனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். அதாவது சந்திரனின்
சொந்த வீடு. இந்த இடத்தில் இருக்கும் சந்திரன் ஜாதகனுக்கு, நல்ல,
வலுவான, சக்தியுள்ள மனதைக் கொடுக்கும். A moon sitting in its own
sign is good and strong and shows a powerful mind.
சிலர் உணர்ச்சிவசப் படுபவர்களாக இருப்பார்கள். தங்கள் உணர்ச்சிகளை
வெளிப்படுத்தி ரஃப் & ட்ஃப்பாக நடந்து கொள்ளவும் செய்வார்கள்.சிலர்
மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களைப் போற்றி வளர்ப்பதில்
மிகுந்த மகிழ்ச்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
பொதுவாக இந்த அமைப்புள்ள ஜாதகன் வாழ்க்கை ஓட்டத்தில் பல ஏற்றத்
தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.
சிம்மராசியில் சந்திரன் இருந்தால்:
இது சூரியனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், இயற்கையாகவே
தலைமை ஏற்கும் உணர்வு மேலோங்கி இருக்கும்.ஜாதகனுக்குத்
தன்னுடைய குறிக்கோள்களை அடையக்கூடிய புத்தியும், மன
உறுதியும் இருக்கும். தனித்தன்மையோடு தன் முடிவுகளை எடுக்கக்
கூடியவன். மற்றவர்களுடைய யோசனைகளும் கருத்துக்களும்
அவனிடம் எடுபடாது. எளிதில் உணர்ச்சி வசப்படுபவனாக
இருப்பான். சட்டென்று யாராவது கோபத்தைத் தூண்டும்படி நடந்தால்
கோபத்துக்கு ஆளாகி விடுவான். சீக்கிரமே சமாதானமாகியும்
விடுவான். மனதில் எதையும் வஞ்சகமாக வைத்துக் கொள்ள மாட்டான்.

6.
கன்னிராசியில் சந்திரன் இருந்தால்:
இது புதனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், ஜாதகன் தகவல் தொழில்
நுட்பம், தொலைபேசி, மற்றும் பத்திரிக்கைத் துறைகளோடு சம்பந்தப் பட்டால்
சிறப்பாகப் பணியாற்றுவான். மற்றவர்கள் வசதியாக வாழ ஜாதகன் உதவும்
மனப்பான்மை கொண்டவனாக இருப்பான். பல வழிகளில் பலருக்கும்
உதவியாக இருப்பான். அதீத பாசமும், நேசமும் கொண்டவனாக இருப்பான்.
புத்திசாலியாக இருப்பான். துறு துறுவென்ற மனதைக் கொண்டவனாக இருப்பான்
வியாபாரத்தில் ஈடுபட்டால், அதில் கெட்டிக்காரத்தனமாகச் செயல் படுவான்.
அழகையும், கலைகளையும் நேசிப்பவனாக, அவற்றில் ஈடுபாடு கொண்டவனாக
ஜாதகன் இருப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.
துலா ராசியில் சந்திரன் இருந்தால்:
இது சுக்கிரனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், சக்திவாய்ந்த சுக்கிரன்
அழகையும், அழகு சார்ந்த கலைகளையும் ஜாதகனை ஆராதிக்க வைத்து
விடும். பெண்ணையும், பெண்மையையும் மிகவும் ரசிப்பவனாக இருப்பான். அதன்
காரணமாக சிலர் உடல் உபாதைகளுக்கும் ஆளாகக் கூடும். வாழ்க்கையில்
பல வெற்றிகளைக் காண்பான். தொழிலில் நேர்மையானவனாக இருப்பான்.
வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பான். விவேகம் உடையவனாக
இருப்பான். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், அல்லது எதைப்பேச
வேண்டும் என்கின்ற ஞானம் உடையவனாக இருப்பான்.
சிலர் உலகியல் வாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சம
அளவில் ஈடுபாடு உடையவர்களாக விளங்குவார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8. **************விருச்சிக ராசியில் சந்திரன் இருந்தால்: இது செவ்வாயின் வீடு.
இங்கே சந்திரன் இருப்பது நல்லதல்ல! இருப்பதிலேயே இந்த இடம்தான்
சந்திரனுக்கு சற்றும் பொருத்தமில்லாத இடம். வலிமை எதுவும் இல்லாத இடம்.
இது சந்திரனின் நீச வீடு. அதை மனதில் கொள்க! ஜாதகனுக்கு எப்போதும்
அமைதியற்ற மனநிலை இருக்கும். மன வருத்தத்துடன் இருப்பான். ஒன்று
போனால் அடுத்த மன வருத்தம் தந்தி அடித்து வரச் சொன்னது போல உடனே
வந்து நிற்கும். சிலர் காயப்பட்ட உணர்வுகளால் அல்லாடுவார்கள்.
காயப்பட்ட உணர்வுகள் விட்டுப் போகவும் போகாது. அதுதான் இந்த அமைப்பின்
துயரம். மற்றவர்கள் உங்கள் உனர்வுகளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
இறை வழிபாடு ஒன்றுதான் இந்த அமைப்புள்ளவர்களுக்குத் துணை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9
தனுசு ராசியில் சந்திரன் இருந்தால்:
இது குரு பகவானின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், ஜாதகன் அனேக நல்ல
குணங்களையும், செயல்பாடுகளையும் உள்ளவனாக இருப்பான். அனைவருடனும்
ஒத்துப் போகக்கூடியவனாக இருப்பான், நேர்மையானவனாக இருப்பான். நல்
ஒழுக்கமும், நடத்தையும் உடையவனாக இருப்பான். நேர்வழியில் மட்டுமே
அடுத்தவர்களுடன் பணம் முதலாக எல்லாப் பங்கீடுகளும் இருக்கும். ஜாதகனுடைய
லட்சியங்கள் நிறைவேறும்.புத்திசாலித்தனம் எல்லாவிதத்திலும் மேலோங்கி இருக்கும்.
குடும்பத்தில் அனைவருடனும் ஈடுபாடு உடையவனாக இருப்பான்.
தத்துவங்களிலும், ஆன்மிகத்திலும் ஆர்வமும் தேர்ச்சியும் உடையவனாக இருப்பான்
---------------------------------------------------------------------------------------------------------------------
10
மகரத்தில் சந்திரன் இருந்தால்:
இது சனியினுடைய வீடு. இங்கே சந்திரன் அமர்ந்திருந்தால், செய்யும் தொழிலை
அல்லது வேலையை ஆர்வமுடன் செய்வான். அதுவே அவனை வெற்றியின் பக்கம்
இழுத்துச் செல்லும். நல்ல குணவான். அதே நேரத்தில் சில விஷயங்களில் அடிக்கடி
மனமாற்றம் உடையவனாக இருப்பான். நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான்.
இந்த அமைப்புள்ளவர்கள் அன்பிற்கு இலக்கணமாக இருப்பார்கள். பிரச்சினைகளை
பொறுமையுடன் எதிகொள்பவனாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மேலோங்கியவனாக
இருப்பான். நுண்கலைத் திறமைகள் கொண்டவனாக இருப்பான். பலராலும் பாராட்டப்
படுபவனாக இருப்பான்
----------------------------------------------------------------------------------------------------------------------
11
கும்பத்தில் சந்திரன் இருந்தால்:
இது சனியினுடைய வீடு. இங்கே சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன் அதி புத்தி
சாலியாக இருப்பான். வாழ்க்கைத்ததுவம், இறைவழிபாடு ஆகியவற்றில் நாட்டம்
உடையவனாக இருப்பான். தியானம், மற்றும் யோகா போன்ற கலைகளில் நாட்டம்
இருக்கும். எதையும் சீர் தூக்கிப் பார்க்கும் தன்மை இருக்கும். சிலர் கலைஞர்களாக
பரிணமளிப்பார்கள். நன்றாக வேலைகளைச் செய்யக்கூடியவனாக இருப்பான்.
சிலரை வாழ்க்கையிம் ஏற்ற, இறக்கங்கள் அவ்வப்போது புரட்டிப் போடும். அதைத்
தாங்கி மீண்டும் மேலுக்கு வரும் மனநிலை கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.
===============================================================
12.
மீனத்தில் சந்திரன் இருந்தால்:
இது குரு பகவானுடைய வீடு. இங்கே சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன்
பல லட்சியங்களையும், கொள்கைகளையும் உடையவனாக இருப்பான். நடத்தை
தவறாதவனாக இருப்பான். உணர்ச்சிவயப்படுபவனாக இருப்பான். அல்லது
உணர்ச்சி வசப்படுவர்களிக் கண்டு பாதிப்பிற்கு உள்ளாகிறவனாக இருப்பான்.
பெருந்தன்மையானவன். ஜெண்டில்மேன் என்று மற்றவர்களால் மதிக்கப்படுபவானாக
இருப்பான். புத்திசாலியாக இருப்பான். ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும். உலக
வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கும் பாக்கியசாலியாக இருப்பான். நம்பிக்கைக்கு
உரிய நட்புக்கள் அவனைத் தேடிவந்து சேரும்

Mathematics gave birth to the Law of Probability.
When this Law based on astronomical facts & figures is applied,
it becomes the Wisdom of the Heavens, Astrology.
Rightly it has been defined as a Lamp in darkness.
Despite the allegations leveled against it, Astrology continues
its role as one of the noblest professions & one of the greatest
sciences which human intellect has built up.
The role of Moon in Horoscope
As the Queen of the Solar Logos, Moon is an important luminary
capable of conferring great mental power. The position of Moon
is very important from the perspective of prosperity. A strong Moon,
powerful in digit strength,can give immense courage to the native
and courage is essential for prosperity. Prosperity depends on the
position of Moon & Jupiter, the indicator of wealth.
The Moon is considered as a natural benefic in Vedic Astrology.
=======================================================
Effects of Moon in the 12 Houses
1
Moon in the Ascendant
If weak Moon ( weak in digit strength ) tenants the First House,
the native will be devoid of mental strength and longevity.
If Full Moon is posited in the Ascendant, the native will have
good longevity and will be a scholar.
If the Ascendant is Taurus or Cancer,the native will be wealthy & famous.
..........................................................................................................
2
Moon in the Second House
Will have wealth & all sorts of enjoyments.Will have the gift of the
gab or the divine gift of articulate speech. Will be handsome and
will have the ability to understand other's perspectives.
Will be educated with scientfic knowledge.

3
Moon in the Third House
Will have wealth, education, virility & pride. Will have good strength.
Will have gains via brothers. Will be miserly.
.........................................................................................................
4
Moon in the Fourth House
Will have wealth and conveyances. Will be liberal and altruistic.
Will be fond of the other sex. Will not be too attached to anything.
Will be a donator.

5
Moon in the Fifth House
Will be highly intelligent and kind. Will be interested in politics.
Will be affable and diplomatic.

6
Moon in the Sixth House
Will be cruel and intelligent. Will have disorders of the digestive tract.
Will face many a defeat. Will be intelligent and clever.
Will be slightly lazy. This position is slightly detrimental to prosperity.
...........................................................................................................
7
Moon in the Seventh House
Will posses wealth & fortune. Will have a high standard of comeliness.
Will have accumulated property. Will be kind.
Will enjoy the pleasures of the mundane.
.............................................................................................................
8
Moon in the Eighth House
Will be quarrelsome and devoid of benevolent attitude. Will be afflicted
by many a disease. Will be handsome. Will have less longevity.
Will have marks caused by wounds on his/ her body.
..............................................................................................................
9
Moon in the Ninth House
Will be highly religious,liberal & will have devotion to elders and
preceptors. Will possess devotion of a high order.
.................................................................................................................
10
Moon in the Tenth House
Will be well off. Will have gains from education.Will be liberal and
altruistic. Will be famous and will get fame from many altruistic
deeds.
................................................................................................................
11
Moon in the Eleventh House
Will have wealth and a lot of subordinates. Will have education of a
high order. Will be versatile. Intelligence of a high degree will grace
the native. Will be altruistic and liberal.
....................................................................................................................
12
Moon in the Twelfth House
Will be lazy and devoid of wealth. Will be an outcast. Will have
to face a lot of defeats. Will live in foreign lands. Mother's health may
be affected.
=========================================================
சந்திரனின் சுய அஷ்டகவர்க்கப் பலன்கள்!
சுயவர்க்கத்தில் சந்திரன் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்:
எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை
வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில்
கொள்க!
1.பரல்: விஷ ஜந்துக்களிடமிருந்தும், ஆயுதங்களில் இருந்தும் பாதகங்கள்
ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
2.பரல்கள்: ஜாதகனின் தாய்க்குப் பாதகங்கள் ஏற்படும்! ஜாதகனுக்கு
நோய்களால் அவதிப்படுவான்
3.பரல்கள்: மேற்கூறிய பலன்கள் குறைந்த அளவில் இந்த அமைப்பிற்கு
இருக்கும்
.
4.பரல்கள்: ஜாதகனின் குடும்பம் மேன்மையுறும்.
5.பரல்கள்: மன அமைதியும், நல்ல நடத்தையும் ஜாதகனிடம் குடி கொள்ளும்.
6.பரல்கள்: நல்ல மன திடமும், உயர்ந்தகோட்பாடுகளும் உடையவனாக
ஜாதகன் இருப்பான்.
7.பரல்கள்: ஜாதகன் எல்லாக் கலைகளிலும் ஆர்வமுடையவனாகவும்,
விற்பன்னனாகவும் இருப்பான்
8.பரல்கள்: மகிழ்ச்சியான அதிர்ஷ்டகரமான வாழ்க்கை ஜாதகனுக்கு அமையும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சந்திரனின் கோச்சாரப் பலன்கள்:
குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாம் சந்திரன், ஜாதகனின், ராசியில் தான்
இருக்கும் ராசியை வைத்து கோச்சாரத்தில் இருக்கும் இடங்களுக்கான
பலன்கள்:
சந்திரன் ஒரு ரவுண்டு அடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் 27
(இது இளைஞர்கள் அடிக்கும் ரவுண்டு அல்ல!)
அதனால் ஒரு ராசியில் இருப்பது 2.25 நாட்கள் மட்டுமே
1ல், 3ல், 6ல், 7ல், 10ல், 11ல் இருக்கும்போது மட்டுமே நன்மை
அதாவது 27 நாட்களில் பாதி நாட்கள் மட்டுமே நன்மை.
2ல், 4ல் 5ல், 8ல், 9ல், 12ல் இருக்கும்போது நன்மைகள் இருக்காது.
சந்திரனின் கோச்சாரப் பலன்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள
வேண்டாம். குரு அல்லது சனியைப் போல் அல்லாமல் அவர் ஒரு
ராசியில் தங்கிச் செல்லும் காலம் மிக, மிகக் குறைவானது!
அவர் ராசிக்கு எட்டாம் இடத்திலும், 12ஆம் இடத்திலும்
சஞ்சாரம் செய்யும் நாட்களில் காரிய சித்தி இருக்காது. எடுத்த
காரியங்கள் முடியாது. ஆகவே அன்றைய தினங்களில் Routine
work களை செய்தால் போதும்
சந்திரனின் கோச்சாரத்தை வைத்துத்தான், நாளிதழ்களில் தினப்பலன்
களை எழுதுவார்கள்.

சந்திரதசை மொத்தம் 10 ஆண்டுகள் காலம் நடைபெறும்.
அந்த காலகட்டத்தில் சந்திரனின் சுய புத்திக் காலமும், குரு புத்திக்
காலமும் மட்டுமே நல்ல பலன்களைத் தரும். மற்ற புத்திகளின்
காலத்தில் நன்மைகள் இருக்காது.
In short, Moon is significator of Mind
-----------------------------------------------------------------------------
பாடத்தின் நீளம், மற்றும் உங்கள் பொறுமை கருதி இன்று இத்துடன்
நிறைவு செய்கிறேன்.
பாடத்தில் உங்களுக்காக உள்ள செய்திகளை மட்டும் படித்து விட்டுப்
பையை தூக்கிக் கொண்டு நடையைக் கட்டி விடாதீர்கள். எல்லாவற்றையும்
படியுங்கள். அதோடு உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்
நன்றி, வணக்கத்துடன்
அன்புள்ள
வகுப்பறை வாத்தியார்!
வாழ்க வளமுடன்!

ஐயா,
ReplyDeleteசந்திரனை பற்றிய பாடம் அருமை. எனக்கு மிதுனத்தில் சந்திரன். தங்கள் சொல்லியுள்ள பலன்கள் எனக்கு 100% பொருந்துகிறது.
பெளர்ணமி நாளான்று மனிதனுக்கு ரத்த ஓட்டம் அதிகமாக
இருக்கும். அதனால் அன்று அறுவை சிகிச்சைகளைத் தவிருங்கள் என்று
மருத்துவர் ஒருவரே சொல்லியிருந்தார். அதன் விவரத்தை முன் பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.//
அந்த முன்பதிவு:-16.02.2007 தலைப்பு
ஜோதிடம் பற்றி வந்த தீர்ப்பு. வகுப்பறை மாணவர்கள் அந்த பதிவுவை சென்று பார்த்துக்கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
Dear Sir,
ReplyDeleteThanks for the lesson. Will Guru Chandra yogam in the eigth house be functional in the Chandra Dasa,Guru Bhuthi?

//3.
ReplyDeleteமிதுனத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் புதனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். புத்திசாலிகளுக்கு உரிய
இடம். அதிக ஆர்வமும், அனைத்தையும் நேசிக்கும் தன்மை உடையவனாக
ஜாதகன் இருப்பான். பெண்ணிலிருந்து பேனா வரை ஒன்றைக்கூட விடாமல்
ரசிப்பான். எதையும் கற்றுக் கொள்ளக்கூடியவன். சிறந்த சிந்தனையாளன்.
எதையும் சிறப்பாகச் சொல்லும் திறமையாளன். ஒரே நேரத்தில் பல வேலை
களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவன்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் விதம் விதமாகத் தேடுபவன்.
தேடும் வெரைட்டி கிடைக்காதபோது சோர்ந்து விடுபவன்//
இது எனக்கு பிடிச்சு இருக்கு !
அன்புள்ள ஆசிரியற்கு,
ReplyDeleteவணக்கம். சந்திரன் பற்றிய செய்திகள் அருமை. நான் கடக ராசி. தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
பதிவின் நீளம், என்னைப் பொறுத்தளவில், ஒரு பொருட்டல்ல. தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது நிறைய எழுதுங்கள். கற்றுக் கொள்ள ஆவலொடு உள்ளோம்.
வணக்கத்துடன்,
செந்தில் முருகன்.வே
Dear Sir,
ReplyDeleteThanks for your lesson. Super description as usual.
I am kadaka raasi, but in 12 house. Ellam avan seiyal!!!
One question: Why moon dasa will not benefit....I thought it is purely a benefic planet! Then why only moon bhukthi, and Jupiter bhukthi will be good rather than others?
Can one dasha irrespective of placements in planets in natal charts can do either good or bad?
Please explain.
-Shankar
Thanks for the good lesson about Moon.You have explained about Guru chandra yogam....
ReplyDeleteWhat is Gaja Kesari yogam? Can you explain it in relation to Moon?
//////வேலன். said...
ReplyDeleteஐயா,
சந்திரனை பற்றிய பாடம் அருமை. எனக்கு மிதுனத்தில் சந்திரன். தங்கள் சொல்லியுள்ள பலன்கள் எனக்கு 100% பொருந்துகிறது.
பெளர்ணமி நாளான்று மனிதனுக்கு ரத்த ஓட்டம் அதிகமாக
இருக்கும். அதனால் அன்று அறுவை சிகிச்சைகளைத் தவிருங்கள் என்று
மருத்துவர் ஒருவரே சொல்லியிருந்தார். அதன் விவரத்தை முன் பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.//
அந்த முன்பதிவு:-16.02.2007 தலைப்பு
ஜோதிடம் பற்றி வந்த தீர்ப்பு. வகுப்பறை மாணவர்கள் அந்த பதிவுவை சென்று பார்த்துக்கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.//////
நன்றாக இருக்கிறது என்று சொன்னால் எழுதித் தட்டச்சிட்டுப் பதிவில் ஏற்றிய எனக்கும் மகிழ்ச்சிதான்!
//////krish said...
ReplyDeleteDear Sir,
Thanks for the lesson. Will Guru Chandra yogam in the eight house be functional in the Chandra Dasa,Guru Bhuthi?//////
பாதி சாப்பாடு கிடைக்கும். கிடைத்தவரை சரி என்று சாப்பிட்டு வையுங்கள்
//////கோவி.கண்ணன் said...
ReplyDelete//3.
மிதுனத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் புதனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். புத்திசாலிகளுக்கு உரிய
இடம். அதிக ஆர்வமும், அனைத்தையும் நேசிக்கும் தன்மை உடையவனாக
ஜாதகன் இருப்பான். பெண்ணிலிருந்து பேனா வரை ஒன்றைக்கூட விடாமல்
ரசிப்பான். எதையும் கற்றுக் கொள்ளக்கூடியவன். சிறந்த சிந்தனையாளன்.
எதையும் சிறப்பாகச் சொல்லும் திறமையாளன். ஒரே நேரத்தில் பல வேலை
களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவன்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் விதம் விதமாகத் தேடுபவன்.
தேடும் வெரைட்டி கிடைக்காதபோது சோர்ந்து விடுபவன்//
இது எனக்கு பிடிச்சு இருக்கு!//////
உங்களுக்கு சந்திரன் மிதுனத்தில் இருக்கிறாரா? அதனால் பிடித்திருக்கிறதா?
இல்லை இதுபோல இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் பிடித்திருக்கிறதா?
/////senthil said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியற்கு,
வணக்கம். சந்திரன் பற்றிய செய்திகள் அருமை. நான் கடக ராசி. தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
பதிவின் நீளம், என்னைப் பொறுத்தளவில், ஒரு பொருட்டல்ல. தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது நிறைய எழுதுங்கள். கற்றுக் கொள்ள ஆவலொடு உள்ளோம்.
வணக்கத்துடன்,
செந்தில் முருகன்.வே///////
நன்றி செந்தில்!
//////hotcat said...
ReplyDeleteDear Sir,
Thanks for your lesson. Super description as usual.
I am kadaka raasi, but in 12 house. Ellam avan seiyal!!!
One question: Why moon dasa will not benefit....I thought it is purely a benefic planet! Then why only moon bhukthi, and Jupiter bhukthi will be good rather than others?
the reason for the other bukthi in moon dasa being not good may be due to the the evil nature of the bhukthi lords
/////// Can one dasha irrespective of placements in planets in natal charts can do either good or bad?//////
no.placement also is important
/////Ragu Sivanmalai said...
ReplyDeleteThanks for the good lesson about Moon.You have explained about Guru chandra yogam....
What is Gaja Kesari yogam? Can you explain it in relation to Moon?//////
யோகங்களைப் பற்றிய பாடம் தனியாக நடத்தப் பெறும். பொறுத்திருங்கள்!
Sir,
ReplyDeleteIs there any pariharam for moon in vrichikam.
பாடம் அருமை, நன்றீ
ReplyDeleteProject Shiksha Team said...
ReplyDeleteSir,
Is there any pariharam for moon in vrichikam//////
நீங்கள் பெண்ணாக இருந்தால் ஒவ்வொரு பெளர்ணமியன்றும் விரதம் அனுஷ்டியுங்கள்.
ஆணாக இருந்தால் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று சிவாலயத்தில் வழிபாடு செய்யுங்கள்
/////Blogger N.K.S.Anandhan. said...
ReplyDeleteபாடம் அருமை, நன்றி!
நல்லது ஆனந்தன்!
Good article....:-)
ReplyDeleteSir.. what is the classification between the krishnapaksha chandra and Suklapaksha chandra sitting in all 12 houses?
"சந்திரதசை மொத்தம் 10 ஆண்டுகள் காலம் நடைபெறும்.
ReplyDeleteஅந்த காலகட்டத்தில் சந்திரனின் சுய புத்திக் காலமும், குரு புத்திக்
காலமும் மட்டுமே நல்ல பலன்களைத் தரும். மற்ற புத்திகளின்
காலத்தில் நன்மைகள் இருக்காது."
ஐயா
நான் தனுசு ராசி கும்ப லக்னம்
குருவும் சந்திரனும் பரிவர்த்தனை.
பரிவர்த்தையான கிரகங்களின் திசை சிறப்பான பலன்களை தரும் என்று சொன்னீர்களே ஐயா?
வணக்கம் சார்,
ReplyDeleteநல்ல பதிவு. பதிவின் நீளம் கூடுதலானால் ஒன்றும் problem இல்லை.
நேரம் இல்லாதவர்கள் சமயம் கிடைக்கும் போது படிக்கலாம்.
Lessons dont come only from facts. Whatever u post is sharing a small part of your experience and that too serves as valuable lesson to readers like myself.Your work , long or short , is well appreciated !
இப்பொழுது எனது doubt ஒன்றிகு விளக்கம் தர வேண்டுகிறேன்.
பௌர்ணமி சந்திரன் தேய்பிறை ஆதலால் அவ்வளவாக நன்மை அளிக்காது என்று சொன்னீர்கள். ஆனால் பூர்ண சந்திரன் லக்னத்தை பார்க்க லக்னத்தில் உள்ள தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன என்று ஓராசரித்திரத்தில் படித்திருக்கிறேன்.
இது குறித்து உங்கள் கருத்து என்ன ?
ஹலோசார்,
ReplyDeleteபாடம் எப்பொழுதும் போல் அருமை.
நன்றாக புரியவும் இருந்தது.
எனக்கு என் ராசியில் (மகரத்தில்) சந்திரன்.4ம் வீடு. சொன்னதெல்லாம் சரியாக பொருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் //பலராலும் பாராட்டப்படுபவனாக இருப்பான்..//
இதில் தான் அடி வாங்குகிறது.ஏனோ தெரியல நான் நல்லவளாவே இருந்தாலும் எனக்கு கெட்ட பெயர் தான், அதுவும் நீ நல்லவள்தான் னு சொல்லிட்டே திட்டறாங்க. ம்ம்ம் என்ன பண்றது, விதி.
/////Vinodh said...
ReplyDeleteGood article....:-)
Sir.. what is the classification between the krishnapaksha chandra and Suklapaksha chandra sitting in all 12 houses?/////
எனது சிற்றறிவிற்குத் தெரிந்தவரை, சந்திராசியின் வலுவைத் தீர்மானிப்பதற்கு மட்டுமே அது பயன்படும்!
saravanan said...
ReplyDelete"சந்திரதசை மொத்தம் 10 ஆண்டுகள் காலம் நடைபெறும்.
அந்த காலகட்டத்தில் சந்திரனின் சுய புத்திக் காலமும், குரு புத்திக்
காலமும் மட்டுமே நல்ல பலன்களைத் தரும். மற்ற புத்திகளின்
காலத்தில் நன்மைகள் இருக்காது."
ஐயா
நான் தனுசு ராசி கும்ப லக்னம்
குருவும் சந்திரனும் பரிவர்த்தனை.
பரிவர்த்தையான கிரகங்களின் திசை சிறப்பான பலன்களை தரும் என்று சொன்னீர்களே ஐயா?/////
முதலில் உள்ளது பொது விதி. பரிவர்த்தனைக்கான விதிகள் தனியானவை.
அடுத்தவன் பணத்தில் படம் எடுப்பதற்குப் பொதிவிதிகள். சொந்தப் பணத்தில் படம் எடுப்பதற்குத்
தனி விதிகள். அப்படிக் கணக்கு. சம்ஜே க்யா மை டியர் தோஸ்த்?
/////DevikaArul said...
ReplyDeleteவணக்கம் சார்,
நல்ல பதிவு. பதிவின் நீளம் கூடுதலானால் ஒன்றும் problem இல்லை.
நேரம் இல்லாதவர்கள் சமயம் கிடைக்கும் போது படிக்கலாம்.
Lessons dont come only from facts. Whatever u post is sharing a small part of your experience and that too serves as valuable lesson to readers like myself. Your work , long or short , is well appreciated !/////
உங்கள் பாராட்டு டானிக்கைப்போல! நன்றி சகோதரி
இப்பொழுது எனது doubt ஒன்றிகு விளக்கம் தர வேண்டுகிறேன்.
பௌர்ணமி சந்திரன் தேய்பிறை ஆதலால் அவ்வளவாக நன்மை அளிக்காது என்று சொன்னீர்கள். ஆனால் பூர்ண சந்திரன் லக்னத்தை பார்க்க லக்னத்தில் உள்ள தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன என்று ஓராசரித்திரத்தில் படித்திருக்கிறேன்.//////
பெளர்ணமி சந்திரன் தேய்பிறை அல்ல! அதற்கு அடுத்த நாள் முதல்தான் தேய்பிறை துவங்கும்!
//////Sumathi. said...
ReplyDeleteஹலோசார்,
பாடம் எப்பொழுதும் போல் அருமை.
நன்றாக புரியவும் இருந்தது.
எனக்கு என் ராசியில் (மகரத்தில்) சந்திரன்.4ம் வீடு. சொன்னதெல்லாம் சரியாக பொருத்தமாகத் தான் இருக்கிறது.///////
அதை மட்டும் பாருங்கள் சகோதரி! மற்றதைப் பற்றிக் கவலை எதற்கு? கடாசி விடுங்கள்!
Sir Suppose if the moon is in its own Nakshathra (i.e.,Rohini, Hastha, Thiruvonam), will the moon have good power even if it exist in 3,6,8,12 houses?
ReplyDeleteSecond question, if the moon is in 3,6,8,12 then the yogas such as SASI Mangal Yoga, Gaja Kesari yogas, Guru Chandra Yoga....etc did this yogas works or not?
//உங்களுக்கு சந்திரன் மிதுனத்தில் இருக்கிறாரா? அதனால் பிடித்திருக்கிறதா?
ReplyDeleteஇல்லை இதுபோல இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் பிடித்திருக்கிறதா?//
:) தேடி கட்டம் கட்டி பதில் சொல்லி இருந்தால் என்ன பொருளோ ?
எனது அப்பாவும் ஜோதிடத்தில் வல்லவராக இருந்தார்.
//////Vinodh said...
ReplyDeleteSir Suppose if the moon is in its own Nakshathra (i.e.,Rohini, Hastha, Thiruvonam), will the moon have good power even if it exist in 3,6,8,12 houses?//////
பாலைவனம் என்றால் பாலவனமே. பணக்காரன் அல்லது அதிகாரவர்க்கம் என்பதற்காக பாலைவனம் மாறிவிடாது.
அதுபோலத்தான், 6, 8 & 12ஆம் இடங்கள். அவைகள் தீய இடங்கள் என்றால் தீய இடங்கள்தான். அங்கே கிரகம் சொந்த அல்லது கடன் வாங்கிய நட்சத்திரத்தில் உள்ளது என்றாலும் எதுவும் செல்லுபடியாகாது.They are inimical places
//////Second question, if the moon is in 3,6,8,12 then the yogas such as SASI Mangal Yoga, Gaja Kesari yogas, Guru Chandra Yoga....etc did this yogas works or not?/////
அடுத்த Topic யோகங்காளைப் பற்றியது. அப்போது விவரமாகப் பார்ப்போம். பொறுத்திருங்கள் நண்பரே!
///////Blogger கோவி.கண்ணன் said...
ReplyDelete//உங்களுக்கு சந்திரன் மிதுனத்தில் இருக்கிறாரா? அதனால் பிடித்திருக்கிறதா?
இல்லை இதுபோல இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் பிடித்திருக்கிறதா?//
:) தேடி கட்டம் கட்டி பதில் சொல்லி இருந்தால் என்ன பொருளோ ?/////
எனக்கு என்ன சொல்கிறீர்கள் என்று அர்த்தமாக வில்லை!
///////எனது அப்பாவும் ஜோதிடத்தில் வல்லவராக இருந்தார்.//////
அவரிடம் ஜோதிடம் கற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டீர்கள். அதுதான் சோகமானது!
நன்றாக இருக்கிறது என்று சொன்னால் எழுதித் தட்டச்சிட்டுப் பதிவில் ஏற்றிய எனக்கும் மகிழ்ச்சிதான்!
ReplyDeleteஐயா,
நன்றாக இருப்பதால்தான் முதல்ஆளாக
வகு்ப்பறைக்குள் நுழைந்தேன்.முன்பதிவை மாணக்கள் தேடப்போகிறார்கள் என்றுதான் முன்பதிவு தேதியை குறிப்பிட்டேன்.உங்களுக்கு சந்திரன் நல்ல இடத்தில் உள்ளார் என நினைக்கின்றேன். அதனால்தான் மற்றவர்களுக்கு உதவும் நல்ல மனதை உங்களுக்கு ஆண்டவன் படைத்துள்ளான்.வாழ்க உங்கள் தொண்டு. உங்கள் மனதிலும் நல்ல ஓர் இடம் தேடி.....வேலன்.
எனது லக்கினம் மேஷம், லக்கினாதிபதி விருச்சகத்தில் இருக்கிறார். சந்திரன் 5ம் வீடான சிம்மத்தில் இருக்கிறார். குருவின் 7-ஆம் பார்வை இருந்தால் குரு சந்திர யோகமா?
ReplyDeleteவேலன். said...
ReplyDeleteநன்றாக இருக்கிறது என்று சொன்னால் எழுதித் தட்டச்சிட்டுப் பதிவில் ஏற்றிய எனக்கும் மகிழ்ச்சிதான்!
ஐயா,
நன்றாக இருப்பதால்தான் முதல்ஆளாக
வகு்ப்பறைக்குள் நுழைந்தேன்.முன்பதிவை மாணக்கள் தேடப்போகிறார்கள் என்றுதான் முன்பதிவு தேதியை குறிப்பிட்டேன்.உங்களுக்கு சந்திரன் நல்ல இடத்தில் உள்ளார் என நினைக்கின்றேன். அதனால்தான் மற்றவர்களுக்கு உதவும் நல்ல மனதை உங்களுக்கு ஆண்டவன் படைத்துள்ளான்.வாழ்க உங்கள் தொண்டு. உங்கள் மனதிலும் நல்ல ஓர் இடம் தேடி.....வேலன்.//////
அதெல்லாம் ஒன்றும் இல்லை சுவாமி. எழுதுவதற்கு உண்மையான காரணம் ஆர்வம்தான்!
VIKNESHWARAN said...
ReplyDeleteஎனது லக்கினம் மேஷம், லக்கினாதிபதி விருச்சகத்தில் இருக்கிறார். சந்திரன் 5ம் வீடான சிம்மத்தில் இருக்கிறார். குருவின் 7-ஆம் பார்வை இருந்தால் குரு சந்திர யோகமா?/////
குரு சந்திரனைப் பார்த்தால் அது கஜகேசரி யோகம்!
குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால் அது குருச்சந்திர யோகம்
நன்றி ஐயா
ReplyDeleteஅச்சா சமஜ்கியா
அய்யா,
ReplyDeleteசந்திரன் பற்றிய பாடம், சந்திரன் போலவே அழகாக இருந்தது.
இது பொதுவான சந்தேகம்.
சூரியனில் இருந்து பத்து பாகையில் உள்ள கிரகம் அஸ்தமனம் ஆகும் அல்லவா? அதுபோல், சில சமயங்களில், பத்து பாகைக்குள் அடுத்த ராசியில் அல்லது முந்தய ராசியில் அமர்ந்த கிரகம் அஸ்தமனம் ஆகுமா?
உதாரணமாக, சூரியன் 85 டிகிரி (மிதுன ராசி) - புதன் 93 டிகிரி (கடக ராசி). இங்கே டிகிரி கணக்கா அல்லது ராசிக்குள் உள்ள பத்து டிகிரி கணக்கா? புதன் அஸ்தந்கம் ஆனது என்று எடுத்து கொள்ளலாமா?
என் கேள்வி உங்களுக்கு புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.
நன்றி,
ஸ்ரீதர் S
வாத்தியாரையா,
ReplyDeleteஇன்றைய சந்திரனைப் பற்றிய பாடம் நன்றாக இருந்தது. //சந்திரனின் சுய புத்திக் காலமும், குரு புத்திக்
காலமும் மட்டுமே நல்ல பலன்களைத் தரும்// அப்போது சந்திர திசை பொதுவாக நன்றாக இருக்காதா?
மன சஞ்சலம் எல்லோருக்கும் தானே வருகிறது.
ReplyDelete**************விருச்சிக ராசியில் சந்திரன் இருந்தால்: இது செவ்வாயின் வீடு.
இங்கே சந்திரன் இருப்பது நல்லதல்ல! இருப்பதிலேயே இந்த இடம்தான்
சந்திரனுக்கு சற்றும் பொருத்தமில்லாத இடம். வலிமை எதுவும் இல்லாத இடம்.
இது சந்திரனின் நீச வீடு. அதை மனதில் கொள்க! ஜாதகனுக்கு எப்போதும்
அமைதியற்ற மனநிலை இருக்கும். மன வருத்தத்துடன் இருப்பான். ஒன்று
போனால் அடுத்த மன வருத்தம் தந்தி அடித்து வரச் சொன்னது போல உடனே
வந்து நிற்கும். சிலர் காயப்பட்ட உணர்வுகளால் அல்லாடுவார்கள்.
காயப்பட்ட உணர்வுகள் விட்டுப் போகவும் போகாது. அதுதான் இந்த அமைப்பின்
துயரம். }}
இந்த அமைப்பு உள்ள மற்ற ராசிக்காரரை பார்த்திருக்கிறேன். அது ஏன்? எப்படிப் பட்ட அமைப்பு அவர்களது ஜாதகத்தில் இருக்கும்.
Sridhar said...
ReplyDeleteஅய்யா,
சந்திரன் பற்றிய பாடம், சந்திரன் போலவே அழகாக இருந்தது.
இது பொதுவான சந்தேகம்.
சூரியனில் இருந்து பத்து பாகையில் உள்ள கிரகம் அஸ்தமனம் ஆகும் அல்லவா? அதுபோல், சில சமயங்களில், பத்து பாகைக்குள் அடுத்த ராசியில் அல்லது முந்தய ராசியில் அமர்ந்த கிரகம் அஸ்தமனம் ஆகுமா?
உதாரணமாக, சூரியன் 85 டிகிரி (மிதுன ராசி) - புதன் 93 டிகிரி (கடக ராசி). இங்கே டிகிரி கணக்கா அல்லது ராசிக்குள் உள்ள பத்து டிகிரி கணக்கா? புதன் அஸ்தந்கம் ஆனது என்று எடுத்து கொள்ளலாமா?
என் கேள்வி உங்களுக்கு புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.
நன்றி,
ஸ்ரீதர் S///////
ராசிகளைவைத்துத்தான் பலன். கொக்கிபோட்டு அடுத்த ராசியையும் சேர்த்துப் பலன் சொல்வதில்லை!
எல்லைப் பிரச்சினை ஒவ்வொரு ராசிக்கும் அதனதன் 30 பாகைக்குள் முடிந்து விடும்!
/////அமர பாரதி said...
ReplyDeleteவாத்தியாரையா,
இன்றைய சந்திரனைப் பற்றிய பாடம் நன்றாக இருந்தது. //சந்திரனின் சுய புத்திக் காலமும், குரு புத்திக்
காலமும் மட்டுமே நல்ல பலன்களைத் தரும்// அப்போது சந்திர திசை பொதுவாக நன்றாக இருக்காதா?//////
சந்திர திசையில் வரும் புத்திகளுக்காக திசைகளில் புத்திநாதன் வலுவாக இருந்தால். சந்திரனும் அவருடன் சேர்ந்து கூடமாடப் பணியாற்றுவார். அப்படி வருகிற புத்திநாதன் வலுவாக இல்லையென்றால் அல்லது தீயவன் என்றால் இவர் விழுந்து படுத்துக் கொண்டு விடுவார். அவனே ஜாதகனை உதைக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில்!:-)))))
///////Anuj123 said...
ReplyDeleteமன சஞ்சலம் எல்லோருக்கும் தானே வருகிறது.
**************விருச்சிக ராசியில் சந்திரன் இருந்தால்: இது செவ்வாயின் வீடு.
இங்கே சந்திரன் இருப்பது நல்லதல்ல! இருப்பதிலேயே இந்த இடம்தான்
சந்திரனுக்கு சற்றும் பொருத்தமில்லாத இடம். வலிமை எதுவும் இல்லாத இடம்.
இது சந்திரனின் நீச வீடு. அதை மனதில் கொள்க! ஜாதகனுக்கு எப்போதும்
அமைதியற்ற மனநிலை இருக்கும். மன வருத்தத்துடன் இருப்பான். ஒன்று
போனால் அடுத்த மன வருத்தம் தந்தி அடித்து வரச் சொன்னது போல உடனே
வந்து நிற்கும். சிலர் காயப்பட்ட உணர்வுகளால் அல்லாடுவார்கள்.
காயப்பட்ட உணர்வுகள் விட்டுப் போகவும் போகாது. அதுதான் இந்த அமைப்பின்
துயரம். }}
இந்த அமைப்பு உள்ள மற்ற ராசிக்காரரை பார்த்திருக்கிறேன். அது ஏன்? எப்படிப் பட்ட அமைப்பு அவர்களது ஜாதகத்தில் இருக்கும்.//////
ஜாதகத்தில் சந்திரனுடன், ராகு சேர்ந்திருந்தாலும் அதே பலன்!
பாடம் அருமை. தாயைப் பற்றி ஞானியின் கருத்து ("கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. அதானால்தான் தாயைப் படைத்தான்.") முற்றிலும் உண்மை.
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
//////Rajagopal said...
ReplyDeleteபாடம் அருமை. தாயைப் பற்றி ஞானியின் கருத்து ("கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. அதானால்தான் தாயைப் படைத்தான்.") முற்றிலும் உண்மை.
அன்புடன்
இராசகோபால்///////
நன்றி கோபால்!
Dear Sir,
ReplyDeleteI am silent reader of your blog. Thank you so much for your lessons. I know the cancer sign persons are very affectionate toward their moms compare to other signs. My husband is kadaga rasi (Punarpoosam) person and in his 8th house he has mars sun and Venus combination. His lagna is Libra and current dasa is ketu. Like you said in one of the article, ketu) will give all the trouble with in this 7 year period. He still has 3 more years of ketu dasa. I want to know how these combinations will give effect on Sukra dasa.
Planets position in his chart:
1 to 5 – No planets,
6th house- Rahu and Saturn,
7th – None,
8th house – Sun, Mars and Venus,
9th house – Mercury & Mandhi,
10th house – Moon,
11th house – Jupiter,
12th house – Ketu.
This comment has been removed by the author.
ReplyDelete//////jasi said...
ReplyDeleteDear Sir,
I am silent reader of your blog. Thank you so much for your lessons. I know the cancer sign persons are very affectionate toward their moms compare to other signs. My husband is kadaga rasi (Punarpoosam) person and in his 8th house he has mars sun and Venus combination. His lagna is Libra and current dasa is ketu. Like you said in one of the article, ketu) will give all the trouble with in this 7 year period. He still has 3 more years of ketu dasa. I want to know how these combinations will give effect on Sukra dasa.
Planets position in his chart:
1 to 5 – No planets,
6th house- Rahu and Saturn,
7th – None,
8th house – Sun, Mars and Venus,
9th house – Mercury & Mandhi,
10th house – Moon,
11th house – Jupiter,
12th house – Ketu.///////
விவரம் போதாது சகோதரி. அஸ்டகவர்க்க/ சுய வர்க்கப் பரல்கள் வேண்டும்.
லக்கின அதிபதி சுக்கிரன் 8ல் இருப்பதால் சுக்கிரதிசை mixed result.
சுக்கிரனின் சுயவர்க்கப் பரல்கள் தெரிந்தால் மட்டுமே சரியாகச் சொல்ல முடியும்!
வணக்கம் ஆசானே! வேலை பளுவின் காரணமாக நீண்ட நாட்களுக்கு பின் இன்று தான் நிதானமாக வகுப்பை கவனித்தேன்... தவற விட்ட பாடங்களை print out எடுத்து விட்டேன் அவற்றை படித்து விட்டு பிறகு சந்தேகங்களை பின்னூட்டம் இடுகிறேன். இன்று படித்ததில் ஒரு சந்தேகம்.....
ReplyDelete***சந்திரன், ராசிக்கு எட்டாம் இடத்திலும், 12ஆம் இடத்திலும்
சஞ்சாரம் செய்யும் நாட்களில் காரிய சித்தி இருக்காது. எடுத்த
காரியங்கள் முடியாது.***
ஏன் 8,12 ல் மட்டும்.. 6 ம் வீடும் மறைவு ஸ்தானம் தானே.? அப்படியெனில் 6 ல் சஞ்சரிக்கும் பொழுதும் மேற்சொன்ன பலன்கள் தானே நடக்க வேண்டும்?
அணுயோகி said...
ReplyDeleteவணக்கம் ஆசானே! வேலை பளுவின் காரணமாக நீண்ட நாட்களுக்கு பின் இன்று தான் நிதானமாக வகுப்பை கவனித்தேன்... தவற விட்ட பாடங்களை print out எடுத்து விட்டேன் அவற்றை படித்து விட்டு பிறகு சந்தேகங்களை பின்னூட்டம் இடுகிறேன். இன்று படித்ததில் ஒரு சந்தேகம்...
***சந்திரன், ராசிக்கு எட்டாம் இடத்திலும், 12ஆம் இடத்திலும்
சஞ்சாரம் செய்யும் நாட்களில் காரிய சித்தி இருக்காது. எடுத்த
காரியங்கள் முடியாது.***
ஏன் 8,12 ல் மட்டும்.. 6 ம் வீடும் மறைவு ஸ்தானம் தானே.? அப்படியெனில் 6 ல் சஞ்சரிக்கும் பொழுதும் மேற்சொன்ன பலன்கள் தானே நடக்க வேண்டும்?//////
""2ல், 4ல் 5ல், 8ல், 9ல், 12ல் இருக்கும்போது நன்மைகள் இருக்காது" என்று கிரகங்களைக் கனித்த மகான்கள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள் சாமி. நானாக என் இஷ்டத்திற்கு அல்லது அனுமானத்திற்கு எதுவும் சொல்ல முடியாது. வினோதவேல் போன்ற ஜோதிட அறிவு கொண்டவர்களும் வந்து பதிவைப் படிக்கிறார்கள், அது என் நினைவில் எப்போதும் உள்ளது.
Dear Sir,
ReplyDeleteI remember you mentioning something about if moon alone in a particular house without any planets in the respective 2 houses...can you explain me? I had this in my mind but was waiting for this lesson.
If moon stands alone, is that a dosha? or if moon does not hemmed with planets (say if moon is alone in 7th house...without any planets in 6th and 8th...is that a dosha?
Thanks in advance.
Shankar
ஜயா என்னை மன்னிக்கவும், எனக்கு இந்த பதில் தெரிந்ததால், பதிவில் இட்டுவிட்டேன்.
ReplyDeleteகே:If moon stands alone, is that a dosha? or if moon does not hemmed with planets (say if moon is alone in 7th house...without any planets in 6th and 8th...is that a dosha?
ப:அதாவது சந்திரன் இருக்கும் கட்டத்தின் இருபக்கக் கட்டங்களிலும் கிரகம் எதுவும் இல்லாமல் இருந்து, சந்திரனும் தன்னுடைய கட்டத்தில் தனியாக இருந்தால் அது அவயோகம். அதற்குப் பெயர் தரித்திர யோகம்.
வயதான காலத்தில் ஜாதகனை அது தனிமைப் படுத்திவிடும்! ஆதரவு அற்ற நிலையில் நிறுத்திவிடும்!
உடனே உங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்த்து சந்திரன் அப்படி இருந்தால் பயந்து விடாதீர்கள்.
அதற்கு விதிவிலக்கு உண்டு! சந்திரன் குருவின் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேல் பரல்கள் பெற்றிருந்தாலோ அந்த நிலைமை ஜாதகனுக்கு ஏற்படாது அல்லது வராது!
இது ஆறாம் வீட்டு பாடத்தில் வந்துள்ளது சங்கர்
Thanks Mr.Vasanthan. I truely appreciate your effort.
ReplyDelete-Shankar
hotcat said...
ReplyDeleteDear Sir,
I remember you mentioning something about if moon alone in a particular house without any planets in the respective 2 houses...can you explain me? I had this in my mind but was waiting for this lesson.
If moon stands alone, is that a dosha? or if moon does not hemmed with planets (say if moon is alone in 7th house...without any planets in 6th and 8th...is that a dosha?
Thanks in advance.
Shankar//////
Yes It is a dosha! It will make the native alone in the last phase of his life. But if that place is aspected by benefic planets, the native will be free from that dosha!
/////Vasanthan said...
ReplyDeleteஜயா என்னை மன்னிக்கவும், எனக்கு இந்த பதில் தெரிந்ததால், பதிவில் இட்டுவிட்டேன்.
கே:If moon stands alone, is that a dosha? or if moon does not hemmed with planets (say if moon is alone in 7th house...without any planets in 6th and 8th...is that a dosha?
ப:அதாவது சந்திரன் இருக்கும் கட்டத்தின் இருபக்கக் கட்டங்களிலும் கிரகம் எதுவும் இல்லாமல் இருந்து, சந்திரனும் தன்னுடைய கட்டத்தில் தனியாக இருந்தால் அது அவயோகம். அதற்குப் பெயர் தரித்திர யோகம்.
வயதான காலத்தில் ஜாதகனை அது தனிமைப் படுத்திவிடும்! ஆதரவு அற்ற நிலையில் நிறுத்திவிடும்!
உடனே உங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்த்து சந்திரன் அப்படி இருந்தால் பயந்து விடாதீர்கள்.
அதற்கு விதிவிலக்கு உண்டு! சந்திரன் குருவின் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேல் பரல்கள் பெற்றிருந்தாலோ அந்த நிலைமை ஜாதகனுக்கு ஏற்படாது அல்லது வராது!
இது ஆறாம் வீட்டு பாடத்தில் வந்துள்ளது சங்கர்//////
excellent my dear Vasanthan! Keep it up!
////hotcat said...
ReplyDeleteThanks Mr.Vasanthan. I truely appreciate your effort.
-Shankar/////
Vasanthan has that in his memory where as you have forgotten Mr.Shankar:-))))))))
//துலா ராசியில் சந்திரன் இருந்தால்:
ReplyDeleteஇது சுக்கிரனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், சக்திவாய்ந்த சுக்கிரன்
அழகையும், அழகு சார்ந்த கலைகளையும் ஜாதகனை ஆராதிக்க வைத்து
விடும். பெண்ணையும், பெண்மையையும் மிகவும் ரசிப்பவனாக இருப்பான். அதன்
காரணமாக சிலர் உடல் உபாதைகளுக்கும் ஆளாகக் கூடும். வாழ்க்கையில்
பல வெற்றிகளைக் காண்பான். உடையவனாக
இருப்பான்.//
அய்யா, நான் துலா ராசி ஸ்வாதி நட்சத்திரம். நீங்கள் எழுதியிருப்பது எனக்கு முற்றிலும் பொருந்துகிறது :-) எனக்கு ராசியில் சந்திரனுடன் சனி பகவானும், சுக்கிர பகவானும் இருக்கிறார்கள். சுக்கிரன் - சித்திரை நட்சத்திரம். சனி - ஸ்வாதி நட்சத்திரம். லக்னம் - மிதுனம். நீங்கள் கூறிய விளக்கத்தின்படி, நான் பெண்கள் விஷயத்தில் (எந்த மாதிரியான விசயங்களில்) ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் ? இந்த கிரகங்கள் இருக்கும் இடத்தை (5 ஆம் வீடு) எந்த கிரகமும் பார்க்கவில்லை.
/////selva said...
ReplyDelete//துலா ராசியில் சந்திரன் இருந்தால்:
இது சுக்கிரனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், சக்திவாய்ந்த சுக்கிரன்
அழகையும், அழகு சார்ந்த கலைகளையும் ஜாதகனை ஆராதிக்க வைத்து
விடும். பெண்ணையும், பெண்மையையும் மிகவும் ரசிப்பவனாக இருப்பான். அதன்
காரணமாக சிலர் உடல் உபாதைகளுக்கும் ஆளாகக் கூடும். வாழ்க்கையில்
பல வெற்றிகளைக் காண்பான். உடையவனாக
இருப்பான்.//
அய்யா, நான் துலா ராசி ஸ்வாதி நட்சத்திரம். நீங்கள் எழுதியிருப்பது எனக்கு முற்றிலும் பொருந்துகிறது :-) எனக்கு ராசியில் சந்திரனுடன் சனி பகவானும், சுக்கிர பகவானும் இருக்கிறார்கள். சுக்கிரன் - சித்திரை நட்சத்திரம். சனி - ஸ்வாதி நட்சத்திரம். லக்னம் - மிதுனம். நீங்கள் கூறிய விளக்கத்தின்படி, நான் பெண்கள் விஷயத்தில் (எந்த மாதிரியான விசயங்களில்) ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் ? இந்த கிரகங்கள் இருக்கும் இடத்தை (5 ஆம் வீடு) எந்த கிரகமும் பார்க்கவில்லை./////
இதற்கு வகுப்பா எடுக்க முடியும்?
திருமணம் ஆகியிருந்தால் மனைவியைத் தவிர பிற பெண்களை ஏறெடுத்துப் பார்க்காதீர்கள்.
இன்னும் திருமணம் ஆகவில்லை என்றால் பழகும் அததனை பெண்களிடமும் கல்மிஷம் இல்லாத உள்ளத்தோடு பழகுங்கள்.
அதாவது தூய ஊள்ளத்துடன் பழகுங்கள்!
//இதற்கு வகுப்பா எடுக்க முடியும்?
ReplyDeleteதிருமணம் ஆகியிருந்தால் மனைவியைத் தவிர பிற பெண்களை ஏறெடுத்துப் பார்க்காதீர்கள்.
இன்னும் திருமணம் ஆகவில்லை என்றால் பழகும் அததனை பெண்களிடமும் கல்மிஷம் இல்லாத உள்ளத்தோடு பழகுங்கள்.
அதாவது தூய ஊள்ளத்துடன் பழகுங்கள்!//
அய்யா ! விளக்கம் கேட்டது ஜாதக பலன்களில் உள்ள தெளிவின்மையால்தான். பெண்களால் துனபம் என்பது ஒரு பொதுப்படையான கருத்து. ஆனால், குறிப்பாக இதுதான் வரும் என்று அறிவதற்காக கிரகங்களையும், லக்னத்தியும் தந்தேன். அதாவது நீங்கள் எழுதியதை என் ஜாதகப்படி இணைத்து சரிதானா என்று நானே உறுதிபடுத்திக்கொள்வதற்கு.
விளக்கத்திற்கு நன்றி அய்யா
////selva said...
ReplyDelete//இதற்கு வகுப்பா எடுக்க முடியும்?
திருமணம் ஆகியிருந்தால் மனைவியைத் தவிர பிற பெண்களை ஏறெடுத்துப் பார்க்காதீர்கள்.
இன்னும் திருமணம் ஆகவில்லை என்றால் பழகும் அததனை பெண்களிடமும் கல்மிஷம் இல்லாத உள்ளத்தோடு பழகுங்கள்.
அதாவது தூய ஊள்ளத்துடன் பழகுங்கள்!//
அய்யா ! விளக்கம் கேட்டது ஜாதக பலன்களில் உள்ள தெளிவின்மையால்தான். பெண்களால் துனபம் என்பது ஒரு பொதுப்படையான கருத்து. ஆனால், குறிப்பாக இதுதான் வரும் என்று அறிவதற்காக கிரகங்களையும், லக்னத்தியும் தந்தேன். அதாவது நீங்கள் எழுதியதை என் ஜாதகப்படி இணைத்து சரிதானா என்று நானே உறுதிபடுத்திக்கொள்வதற்கு.//////
நான் இங்கே பின்னூட்டத்தில் சொல்வது அனைவருக்கும் பொதுவானது. உங்களுக்குப் பதில் சொல்வதுபோல உங்கள் பின்னூட்டத்திற்குப் பதிலாக எழுதுவதால், அது உங்களுக்கு மட்டும் சொன்னதுபோல தோற்றம் அளிக்கும். அதை அப்படி எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பரே!
தங்கள் பதிவுகளை யாரோ இங்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
ReplyDeletehttp://vasanth-astrology.blogspot.com/
/////ரிஷி said...
ReplyDeleteதங்கள் பதிவுகளை யாரோ இங்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
http://vasanth-astrology.blogspot.com////////
ஆமாம் நண்பரே. சுத்தமான திருட்டு அது. அதைப் பற்றிய விவரங்களுடன் இடுகை ஒன்றை இன்று வலையேற்றியுள்ளேன்.நீங்களும் பாருங்கள். உங்கள் தகவலிற்கு மிகுந்த நன்றி உரித்தாகுக!
Nyc lesson in my rasi chart mars with moon in Aries .. Its theipirai moon
ReplyDelete