மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.12.08

அம்மாக்களும், அய்யாக்களும் அழுகிப்போன ஜோதிடமும்!


அரசியல் ஒரு சந்தனக்காடு. அதில் வாசம் செய்பவர்களுக்கு அது ரம்மியம்
நிறைந்தது! எட்டி நின்று பார்ப்பவர்களுக்கு அது பிடிபடாது.

சிலர் அரசியலைச் சாக்கடை என்று வர்ணிப்பார்கள். அவர்கள் எல்லாம்
மனநிலை சரியில்லாதவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது அந்தக்
காட்டில் தங்களுக்கு இடம் கிடைக்காத வெறுப்பில் சொல்கிறார்கள் என்று
கொள்ளலாம். அல்லது தங்களின் அறியாமையால் அப்படிச் சொல்கின்றார்கள்
என்று எடுத்துக் கொள்ளலாம்..

அரசியலும், சினிமாவும் தமிழனின் இரண்டு கண்களாகும். மற்ற புண்ணாக்கெல்லாம்
அப்புறம்தான்.

சரி சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர்க்கு இறை நம்பிக்கை இல்லை.
ஜோதிடத்திலும் நம்பிக்கை இல்லை. அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

மாற்றாக அவர்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம் இருக்கிறது. அவர்கள்
அனைவரையும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்க வேண்டும்.

இந்த மனப்பாங்கு கொண்ட அவர்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்

சின்ன வயதில் நானும் அப்படி இருந்தவன்தான்!

இந்த ஆன்மிகம், இறைநம்பிக்கை, ஜோதிடம் எல்லாம் வந்து என்னை எப்படி
அமுக்கிப் பிடித்தது என்று தெரியவில்லை.

சிலசமயங்களில் அவைகளில் இருந்து மீள முடியாமல் அவதிப்படுகிறேன்.

அது என் போதாத நேரம் என்று நினைக்கிறேன்!

எப்படி மீள்வது என்று வழி தெரிந்தவர்களைச் சொல்லப் பணிக்கின்றேன்.

இந்தவார ஆ.வி யில் ஒரு கட்டுரையைப் படித்தேன். நாம்தான் இப்படி
ஜோதிடத்தில் சிக்கித் தவிக்கிறோம் என்றால், அழுகிப்போன அந்த ஜோதிடத்தைக்
கட்டிக்கொண்டு பலசந்தனக் காட்டு ராஜாக்களும் ராணிகளும் தவிக்கிறார்கள்.

அதைப் பற்றிய முழு விவரங்களை ஆ.வி. வார இதழ்க்காரர்கள் (A4 சைஸில்
4 பக்க அளவில்) விவரமாக எழுதியுள்ளார்கள் ஆ.வி ஏனோ தானோ பத்திரிக்கை
அல்ல! தமிழ் மக்கள் மதிக்கும் பத்திரிக்கை.
ஆகவே அனைவரையும் ஆ.வி யை வாங்கி அதைப் படிக்க வேண்டுகிறேன்

4 பக்கங்களையும் ஸ்கேன் செய்து போடுவது பெரிய விஷயமல்ல. ஆ.வி. விற்க
வேண்டாமா? வாங்கிப் படியுங்கள். Book Standல் பிரதி கிடைக்காதவர்கள்
நண்பர்களிடம் கேட்டு வாங்கிப் படியுங்கள்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் வசிப்பவர்ளுக்காக அந்தப் பக்கங்களின்
சுட்டியைக் கொடுத்துள்ளேன்.

சுட்டி இங்கே!

மெனு: >>> அரசியல் >>> க்ளிக் >>> 5ஆவதாக உள்ளது > பச்சையம்மாவும்
மஞ்சளய்யாவும் > கட்டுரை!

எச்சரிக்கை: படித்துவிட்டுப் பாராட்டுவதானாலும் சரி அல்லது ஒப்புதல் இன்றித் திட்டு
வதானலும் சரி இங்கே வந்து அதைச் செய்யாதீர்கள். அதற்கும் அவர்கள்
தளத்திலேயே அவர்களுடைய மின்னஞ்சல் முகவரி உள்ளது.
அதைப் பயன் படுத்திக் கொள்ளூங்கள்!
எனக்கு அதெற்கெல்லாம் நேரமில்லை!

நன்றி வணக்கத்துடன்
அன்புடன்
வாத்தி (யார்)


வாழ்க வளமுடன்!

13 comments:

SP.VR. SUBBIAH said...

புதிய வருகைப் பதிவேடு!

வகுப்பறையில் ஒவ்வொரு பாடத்திற்கும் சுமார் 1,500 பேர்கள் வந்து செல்வதாக வகுப்பறைப் பணியாளர் (Staistics Counter) சொல்கிறார். அததனை பேர்களையும் அடையாளம் கண்டு வருகைப் பதிவு செய்ய நேரமில்லை. ஆகவே Regular Visitors of my blog பகுதிதான் இனி வருகைப் பதிவேடு. விருப்பமுள்ளவர்களை, தங்கள் Blogger கணக்கில் உள்ள சுட்டியைப் பயன் படுத்தி அதில் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன்.

N.K.S.Anandhan. said...

அய்யா பாடம் எங்கே?

வேலன். said...

ஐயா,

வகுப்பறையில் ஒவ்வொரு பாடத்திற்கும் சுமார் 1,500 பேர்கள் வந்து செல்வதாக வகுப்பறைப் பணியாளர் (Staistics Counter) சொல்கிறார். அததனை பேர்களையும் அடையாளம் கண்டு வருகைப் பதிவு செய்ய நேரமில்லை. ஆகவே Regular Visitors of my blog பகுதிதான் இனி வருகைப் பதிவேடு. விருப்பமுள்ளவர்களை, தங்கள் Blogger கணக்கில் உள்ள சுட்டியைப் பயன் படுத்தி அதில் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன்.//

வகுப்பறைக்கு நான் ஆஜர்.நான் முன்னரே பதிவு செய்து விட்டேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Thambi said...

Ayya,

I am Periathambi from USA. I am typical Kongunadu (Texcity) guy, born and brought up. I am a regular visitor of your blog. I never had any blogs so I just come, read and learn your Valuable experienced astrology. I respect your work and enthusiasm. I could not meet in my last visit due to very short period (week) but next time I will meet you in person to greet your work.

Please count me on your student roll

Thanks

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாத்தியாரின் இந்த வருகைப் பதிவேட்டில் விடுமுறை என்பதே இருக்கக் கூடாது என்று என் அப்பன் கோவணாண்டியை வேண்டிக் கொள்கிறேன்..

வாத்தியாரே ஒளிவுமறைவில்லாமல் சொல்ல வேண்டுமெனில் நான் தவறவிட்ட பாடங்கள் 4 அல்லது 5 இருக்கும் என்று நினைக்கிறேன்..

கோபிக்க வேண்டாம்.. உங்களுடைய வகுப்பறையின் வகுப்புகள் முடிந்தவுடன் இவை அனைத்தையும் புத்தகமாக ஆக்கிவிட்டுத்தான் மறுவேலை. என்ன வகையான உதவி வேண்டுமானாலும் என்னால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறேன் வாத்தியாரே..

SP.VR. SUBBIAH said...

/////Blogger N.K.S.Anandhan. said...
அய்யா பாடம் எங்கே?/////

இதோ பதிந்து விட்டேன்

SP.VR. SUBBIAH said...

///////Blogger வேலன். said...
ஐயா,
வகுப்பறையில் ஒவ்வொரு பாடத்திற்கும் சுமார் 1,500 பேர்கள் வந்து செல்வதாக வகுப்பறைப் பணியாளர் (Staistics Counter) சொல்கிறார். அததனை பேர்களையும் அடையாளம் கண்டு வருகைப் பதிவு செய்ய நேரமில்லை. ஆகவே Regular Visitors of my blog பகுதிதான் இனி வருகைப் பதிவேடு. விருப்பமுள்ளவர்களை, தங்கள் Blogger கணக்கில் உள்ள சுட்டியைப் பயன் படுத்தி அதில் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன்.//
வகுப்பறைக்கு நான் ஆஜர்.நான் முன்னரே பதிவு செய்து விட்டேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்./////

உங்கள் பின்னூட்டத்தை வைத்துத்தான் வருகைப்பதிவேடு புதிதாக மாற்றப்பட்டது!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Thambi said...
Ayya,
I am Periathambi from USA. I am typical Kongunadu (Texcity) guy, born and brought up. I am a regular visitor of your blog. I never had any blogs so I just come, read and learn your Valuable experienced astrology. I respect your work and enthusiasm. I could not meet in my last visit due to very short period (week) but next time I will meet you in person to greet your work.
Please count me on your student roll
Thanks/////

உங்கள் Blogger கணக்கில் உள்ள சுட்டியைப் பயன் படுத்தி நீங்கள்தான் உங்கள் பெயரை வருகைப் பதிவேட்டில் ஏற்றிக் கொள்ள வேண்டும் நண்பரே!. எப்படி உள்ளிடிவது என்று தெரியாவிட்டால் கேளுங்கள். சக மாணவர்கள் உதவுவார்கள்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said..
வாத்தியாரின் இந்த வருகைப் பதிவேட்டில் விடுமுறை என்பதே இருக்கக் கூடாது என்று என் அப்பன் கோவணாண்டியை வேண்டிக் கொள்கிறேன்..
வாத்தியாரே ஒளிவுமறைவில்லாமல் சொல்ல வேண்டுமெனில் நான் தவறவிட்ட பாடங்கள் 4 அல்லது 5 இருக்கும் என்று நினைக்கிறேன்..
கோபிக்க வேண்டாம்.. உங்களுடைய வகுப்பறையின் வகுப்புகள் முடிந்தவுடன் இவை அனைத்தையும் புத்தகமாக ஆக்கிவிட்டுத்தான் மறுவேலை. என்ன வகையான உதவி வேண்டுமானாலும் என்னால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறேன் வாத்தியாரே..//////

பாடம் தொடரும். ஆனால் எழுதியவரை முதல் இரண்டு தொகுதிகளை மே மாதம் புத்தகமாகக் கொண்டுவரலாம் என்று உள்ளேன். அப்போது உங்கள் உதவி தேவை. மாணவர் / வாசகர் என்ற முறையில் நீங்கள் புத்தகத்திற்கு அணிந்துரை (Forward Note) எழுதித் தரவேண்டும். அதையும் சேர்த்துத்தான் புத்தகம் வெளிவரும். வெளியீட்டு விழாவிற்கு உங்களுக்கு சிறப்பு அழைப்பு உண்டு!

வேலன். said...

உங்கள் பின்னூட்டத்தை வைத்துத்தான் வருகைப்பதிவேடு புதிதாக மாற்றப்பட்டது!//
மாணவனின் ஆசையை நிறைவேற்றியதற்கு நன்றி அய்யா.
தங்கள் புத்தகம் விற்பனையில் முதலிடம் வகிக்க எங்களின் மனமார வாழ்த்துக்கள்.புத்தகம் வெளிவர எங்களால் ஆன உதவினை செய்கின்றோம்.உங்களுக்கு உதவ காத்திருக்கும்
அன்பு உள்ளத்துடன்,
வேலன்.

SP.VR. SUBBIAH said...

//////Blogger வேலன். said...
உங்கள் பின்னூட்டத்தை வைத்துத்தான் வருகைப்பதிவேடு புதிதாக மாற்றப்பட்டது!//
மாணவனின் ஆசையை நிறைவேற்றியதற்கு நன்றி அய்யா.
தங்கள் புத்தகம் விற்பனையில் முதலிடம் வகிக்க எங்களின் மனமார வாழ்த்துக்கள்.புத்தகம் வெளிவர எங்களால் ஆன உதவினை செய்கின்றோம்.உங்களுக்கு உதவ காத்திருக்கும்
அன்பு உள்ளத்துடன்,
வேலன்.////

நன்றி வேலன்!

Ragu Sivanmalai said...

I bought a.v....Article is good...Unga punniyathil oru soap ilavasamaga kidathathu a.v yudan..

SP.VR. SUBBIAH said...

//////Blogger Ragu Sivanmalai said...
I bought a.v....Article is good...Unga punniyathil oru soap ilavasamaga kidathathu a.v yudan../////

நன்றி சிவன்மலையாரே!