மிகப் பெரிய, நவீன வசதிகள் நிரம்பிய மருத்துவமனை ஒன்றில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கு.
இளைஞன் ஒருவனுக்கு இதயக் கோளாறு. அறுவை சிகிச்சை அவனுக்கு நடைபெற இருந்தது.
எல்லாம் தயாராக இருந்தது. தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் வருவதற்காக
அனைவரும் காத்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் அவரும் வந்து விட்டார்.
மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவரும் வந்துவிட்டார்.
தலைமை, இறை நம்பிக்கை உள்ளவர். மனதிற்குள் இறைவனை வணங்கி
விட்டு, படுத்திருப்பவனை தைரியப் படுத்தும் முகமாகச் சொன்னார்.
"எல்லாம் நல்லபடியாக முடியும். தைரியமாக இரு." என்றார்.
அவன் அதைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அதோடு தான்
மிகவும் கெட்டிக்காரன், துணிச்சல் மிக்கவன் என்பதை அவருக்கு உணர்த்து
வதற்காகப் பேச்சுக் கொடுத்தான்.
எதிர்ப்புறம் சுவற்றில் ஒரு புது ரோஜா மாலை தொங்கிக் கொண்டிருந்தது.
அது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தவுடன், அங்கே உள்ள
சர்வேஸ்வரனின் படத்திற்குப் போடப்படும். வழக்கமாக நடைபெறுவதுதான்
அது!
படுத்திருக்கும் ஆசாமி அந்த மாலையைக் காட்டிக் கேட்டான்.
"டாக்டர், அங்கே ஒரு மாலை தொங்கிக்கொண்டிருக்கிறதே - யாருக்காக
அது?"
மருத்துவர் புன்னகையுடன் சொன்னார், "எனக்குத்தான் அது. ஆஃபரேசன்
வெற்றிகரமாக முடிந்தவுடன் அதை எனக்குப் போட்டு அனுப்பிவைப்பார்கள்."
அவன் விடவில்லை, அடுத்துக்கேட்டான், "ஒரு வேளை அப்படி முடியாவிட்டால்......"
மருத்துவர் பட்டென்று சொன்னார், "கவலைப் படாதே, உனக்குப் போட்டு
அனுப்பிவைப்போம்!"
==========================================================
கடைசியில் அவருடைய வாக்குப் பலித்துவிட்டது.
அந்த மாலை அவனுக்கே போடப்பட்டது.
--------------------------------------------------------------------------------------------------------
எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன!
எப்போதும் நல்லதையே பாருங்கள். நல்லதையே கேளுங்கள்.நல்லதையே
பேசுங்கள். நல்லதையே செய்யுங்கள்
எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் எதிர்மறையான புத்திசாலித்தனம்(?)
நமக்கெதற்கு?
Think postive!
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
10.12.08
எதிர்மறையான புத்திசாலித்தனம்!
Subscribe to:
Post Comments (Atom)
Nice Story.
ReplyDeleteGd Morning.
Lets Be Optimistic and Be Positive.
நல்லதை நினை...நல்லதே நடக்கும்...உண்மைதான்..ஆனால் சமயத்தில் நல்லதை நினைக்க மனம் தடுமாறுகிறதே..(புகைப்படத்தில் உள்ள கடை மருத்துவமனை எதிரில் உள்ளதா?)
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.
எப்போதும் நல்லதையே பாருங்கள். நல்லதையே கேளுங்கள்.நல்லதையே
ReplyDeleteபேசுங்கள். நல்லதையே செய்யுங்கள்
Super Sir..
////sanjai said...
ReplyDeleteNice Story.
Gd Morning.
Lets Be Optimistic and Be Positive./////
Thanks Mr.Sanjai for your comment!
/////வேலன். said...
ReplyDeleteநல்லதை நினை...நல்லதே நடக்கும்...உண்மைதான்..ஆனால் சமயத்தில் நல்லதை நினைக்க மனம் தடுமாறுகிறதே..(புகைப்படத்தில் உள்ள கடை மருத்துவமனை எதிரில் உள்ளதா?)
வாழ்க வளமுடன்,
வேலன்.//////
மருத்துவமனை எதிரில் இத்தனை பூக்கடைகள் இருந்தால் என்ன ஆகும்?
யார் அதற்கு (மருத்துவமனைக்கு) வருவார்கள்?:-))))))
//////ஸ்ரீதர்கண்ணன் said...
ReplyDeleteஎப்போதும் நல்லதையே பாருங்கள். நல்லதையே கேளுங்கள்.நல்லதையே
பேசுங்கள். நல்லதையே செய்யுங்கள்
Super Sir..//////
நன்றி நண்பரே!
god story with humorus
ReplyDeletegood morinig sir
h
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஅருமையான கருத்து.
மனிதனின் சிந்தனை நன்றாக இருந்தால் அவனுக்கு நல்லது நகைக்கும் என்று. அதுவே அவன் தீய சிந்தனையில் ஈடு பட்டால் அந்த சிந்தனையே அவனை தீய சக்தியால் ஈர்க்கபடுவான். இதை நான் எங்கோ ஒரு சாமியார் சொல்ல கேட்டேன். அனுபவத்தில் பல முறை நான் இதை கண்டும் இருக்கிறேன்.
வட மொழியில் "வினாச காலே விபரீத புத்தி" என்று சொல்வார்கள்! அதாவது, கெடும் நேரத்தில், கெட்ட புத்தியே (சிந்தனையே) வரும்.
நன்றி,
ஸ்ரீதர் S
Think postive!//
ReplyDeleteரொம்பச் சரியா சொன்னீங்க சார்.
மிக அருமையான கதை.
/////karthikeyan said...
ReplyDeletegood story with humour
good morinig sir/////
Thanks for your comments Karthikeyan
/////Sridhar said...
ReplyDeleteஅய்யா,
அருமையான கருத்து.
மனிதனின் சிந்தனை நன்றாக இருந்தால் அவனுக்கு நல்லது நகைக்கும் என்று. அதுவே அவன் தீய சிந்தனையில் ஈடு பட்டால் அந்த சிந்தனையே அவனை தீய சக்தியால் ஈர்க்கபடுவான். இதை நான் எங்கோ ஒரு சாமியார் சொல்ல கேட்டேன். அனுபவத்தில் பல முறை நான் இதை கண்டும் இருக்கிறேன்.
வட மொழியில் "வினாச காலே விபரீத புத்தி" என்று சொல்வார்கள்! அதாவது, கெடும் நேரத்தில், கெட்ட புத்தியே (சிந்தனையே) வரும்.
நன்றி,
ஸ்ரீதர் S//////
உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
////புதுகைத் தென்றல் said...
ReplyDeleteThink postive!//
ரொம்பச் சரியா சொன்னீங்க சார்.
மிக அருமையான கதை./////
உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
Super story!!! I think now a days brilliance is considered tricky.
ReplyDeleteBe Positive and spread the positive attitude.
-Shankar
மதிப்பிற்குரிய ஐயா,
ReplyDeleteராகு கேது இருக்குமிட பலன்கள் மற்றும் 4-ஆம் வீடு, 8-ஆம் வீடு பலன்கள் எந்த பாடத்தில் உள்ளது. தயவு செய்து சொல்லுங்கள்.
மதிப்பிற்குரிய ஐயா,
ReplyDeleteராகு கேது இருக்குமிட பலன்கள் மற்றும் -ஆம் வீடு, --ஆம் வீடு பலன்கள் எந்த பாடத்தில் உள்ளது.
கூடுதுறை அவர்களின் இணையத்தில் எனக்கு கிடைக்கவில்லை
/////hotcat said...
ReplyDeleteSuper story!!! I think now a days brilliance is considered tricky.
Be Positive and spread the positive attitude.
-Shankar/////
Thanks for your comment Mr Shankar
/////Chuttiarun said...
ReplyDeleteவணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.//////
உங்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கப்பட்டது. இணைப்பு கொடுத்துவிட்டேன். சைடுபாரைப் பார்க்கவும்!
////Sunitha said...
ReplyDeleteமதிப்பிற்குரிய ஐயா,
ராகு கேது இருக்குமிட பலன்கள் மற்றும் 4-ஆம் வீடு, 8-ஆம் வீடு பலன்கள் எந்த பாடத்தில் உள்ளது. தயவு செய்து சொல்லுங்கள்./////
நீங்கள் குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கான பாடங்கள் இனிமேல்தான் வரும். பொறுத்திருங்கள் சகோதரி!
எதுக்குய்யா பீதியக் கிளப்புறீங்க?
ReplyDelete//புகைப்படத்தில் உள்ள கடை மருத்துவமனை எதிரில் உள்ளதா?)
ReplyDelete//
அட! இது ஆர்.எஸ் புரம் பூ மார்க்கெட்!
அரசு மருத்துவமனை வேறு பக்கம் இருக்கிறது!
This comment has been removed by a blog administrator.
ReplyDelete////ஆட்காட்டி said...
ReplyDeleteஎதுக்குய்யா பீதியக் கிளப்புறீங்க?//////
படித்த யாருக்கும் வராத பீதி உங்களுக்கு மட்டும் வந்திருக்கிறது!
என்ன காரணம்?
/////நாமக்கல் சிபி said...
ReplyDelete//புகைப்படத்தில் உள்ள கடை மருத்துவமனை எதிரில் உள்ளதா?)
// அட! இது ஆர்.எஸ் புரம் பூ மார்க்கெட்!
அரசு மருத்துவமனை வேறு பக்கம் இருக்கிறது!//////
இது அந்த மார்க்கெட் இல்லை, சாமி!
இணையத்தில் எடுத்த படம்!
Just one positive note to share with the readers..
ReplyDelete"Many are the plans in a man’s heart, but it is the Lord’s purpose that prevails!"
kathai nalla illaaai .
ReplyDelete