மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.1.09

அதிர்ஷ்டச் சக்கரம் (Wheel of Fortune)


என்னடா வாழ்க்கை இப்படியே உப்புச் சப்பில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது
என்று கவலைப் படுகிறீர்களா?

கவலையை விடுங்கள்.

ஒரு ஞானி சொன்னான், "If you want to come up in life - You must have
4 things - Education, Ambition, Talent and Luck: But without the 4th item
(That is luck) the other 3 things will not work properly"

அதைத்தான் நம்ம ஊர் பெரிசுகள் எதற்கும் ஒரு நேரம் வேண்டும் என்பார்கள்.
வாரியார் சுவாமிகள் சொல்வார் "உருவத்தால் உயர்ந்த மரங்களே ஆயினும்
பருவத்தால் அன்றிப் பழுக்காது (அதாவது பழம் கொடுக்காது)"

சரி நேரடியாக எழுத வந்த மேட்டருக்கு வருகிறேன்

எல்லா மனிதனின் வாழ்க்கையிலுமே 'திருப்பு முனை' (Turning Point) என்று
ஒன்று உண்டு. மக்களுக்கு மட்டுமல்ல, நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும்
கூட அது உண்டு

சரி அதை எப்படித் தெரிந்து கொள்வது?

பிறந்த வருடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கூட்டுங்கள். அதை நீங்கள்
பிறந்த வருட எண்ணோடு கூட்டுங்கள். கூட்டி வரும் எண்ணைக் கொண்ட
வருடம்தான் திருப்பு முனையைக் கொடுக்கும் வருடமாகும். மறுபடியும் அடுத்த
திருப்பு முனை எப்போது என்று தெரிய, கிடைத்த அந்த வருட எண்ணையே
மீண்டும் கூட்டி முதல் வரியில் சொல்லிய மாதிரியே செய்தீர்களானால் மீண்டும்
ஒரு புதிய வருடத்தின் எண் கிடைக்கும் அந்த வருடம்தான் அதற்கு அடுத்த
Turning Point. இப்படி கணக்கிட்டுக்கொண்டே போகலாம்

உதாரணம் வேண்டாமா? இரண்டு உதாரணங்களைத் தருகிறேன்.

நமது உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இசைஞானி இளையராஜா அவர்களின்
பிறந்த வருடத்தை எடுத்துக் கொள்வோம்

அவர் பிறந்தது 1943ம் வருடம்

1943 - கூட்டல் தொகை 17
17
----------
1960 - கூட்டல் தொகை 16
16
----------
1976 - கூட்டல் தொகை 23
23
----------
1999
---------
இளைய ராஜாவின் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய
வருடங்கள்:- 1960, 1976 & 1999
----------------------------------------------

1960 - 1975

17 வயது வரை கிராமத்தில் இருந்த ராஜா அவர்கள் ஊரை விட்டுப்
புறப்பட்டு, தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன்அவர்களுடன் சேர்ந்து
முதலில் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும், பிறகு பல இயக்கங்களின்
மேடைகளிலும் பாட ஆரம்பித்ததும், பல இசைக் கருவிகளைக் கற்றுக்
கொண்டு வாசிக்க ஆரம்பித்ததும் இதற்குப் பிறகுதான், திரு,.தன்ராஜ்
மாஸ்டரிடம் இசையை நன்கு கற்று பாண்டித்யம் பெற்றதும் இந்தக்
காலகட்டத்தில் தான்.பல இசை அமைப்பாளர்களிடம் பணிபுரிந்து திரை
இசையின் நுட்பங்களை முழுதாகத் தன் மனதில் உள் வாங்கிக் கொண்டதும்
இந்தப் பீரியடில்தான்

1976 - 1998

1976ம் ஆண்டு திரு.பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரித்த 'அன்னக்கிளி'
படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்புக் கிடைத்ததுதான் பெரிய திருப்புமுனை.
பட்டி தொட்டிகளிலெல்லாம் ' மச்சானைப் பாத்தீங்களா, மலை வாழைத்
தோப்புக்குள்ளே' பாட்டு ஒலித்து ஒரே மாதத்தில் இவர் பிரபலமாகியதோடு,
மொத்த தமிழ்த்திரை உலகத்தையும் தன்னைத் திரும்பிப் பார்க்கவைத்தார்
என்பது நமக்குத் தெரிந்ததுதானே!

அதற்குப் பிறகு திரையுலக ராஜாவாக, ஒருவருடமல்ல இரண்டு வருடங்களல்ல
சுமார் 23 ஆண்டுகள் கோலோச்சினார் என்று சொன்னால் அது மிகையல்ல

1999 முதம் இன்று வரை

AR.ரெஹ்மான், பரத்வாஜ், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என்று இளம்
ரத்தங்களெல்லாம் திரையிசையில் நுழைய, இவரும் தன் பங்கிற்குத் தன்
மகன்கள் - கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரையும்
திரைக்கப்பலில் ஏற்றி விட்டு விட்டுத்தான் சற்று ஒதுங்கி, ஆன்மீகம்,
தியானம், Symphony என்று களம் இறங்கி விட்டார்.
----------------------------------------------------
அவர் பிரபலமானவர் - அவரை உதாரணமாக வைத்து எழுதினால்
அனைவருக்கும் எளிதில் புரியும் என்பதால் அவரை வைத்து விளக்கியுள்ளேன்
வேறு நோக்கம் எதுவுமில்லை (பின்னூட்டம் போடும் கண்மணிகள் குறித்துக்
கொள்ள வேண்டுகிறேன் இதை)

பதிவு பெரிதாகிக் கொண்டே போகிறது. இந்த Theory (Wheel of Fortune)
க்கு ஆதாரம் என்ன என்பதைக் கீழே கொடுத்துள்ளேன். அது மேதையும்
உலகப் புகழ்பெற்ற ஜோதிட வித்தகருமான திரு.சீரோ அவர்கள் எழுதியது.
Scanned பக்கங்களைக் கீழே கொடுத்துள்ளேன். உங்கள் பிறந்த எண்ணிற்கு
நீங்கள் பார்த்து ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

செப்டம்பர் 5' 2006ஆம் ஆண்டில் நான் எழுதி என்னுடைய பல்சுவைப்
பதிவில் பதிவிட்டது. பலர் வகுப்பரைக்குப் புதியவர்கள். அவர்கள் அறிய
வேண்டும் என்பதற்காக இங்கே மீண்டும் பதிவிட்டுள்ளேன்.

அதன் சுட்டி இங்கே உள்ளது!
=========================================================
படத்தின் மீது கர்சரைவைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!
===========================================================
வகுப்பறையின் 250வது பதிவு இது!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
---------------------------------------------------------------------------------
ஜோதிடம், எண்கணிதம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் பதிவைப்
படித்துவிட்டு என்னைக் கேள்வி கேட்க வேண்டாம். உங்களுக்காகப்
பாடம் நடத்திவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்
உங்களுக்காகத்தான் பலசுவை என்கின்ற இன்னொரு பதிவில் எழுதுகிறேன்
அங்கே வாருங்கள். இதெல்லாம் இருக்காது!
.............................................................................................................................................
வாழ்க வளமுடன்!

14 comments:

SP Sanjay said...

அன்புள்ள ஐயா,

காலை வணக்கம்!

பாடம் புதுமை மற்றும் ஆச்சரியப்படும்படி உள்ளது.

தகவலை பகிர்ததமைக்கு நன்றி!

என்றும் அன்புடன்
Sanjai

hotcat said...

Super lesson!!! I remember you have mentioned it before. Thanks though....

-Shankar

வேலன். said...

முதலில் 250 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அய்யா.
20ஆம்நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு மாறுதல்கள் பத்து வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது.ஆனால் இந்தநூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு குறுகிய காலத்திலேயே மாறுதல்கள் வருகிறது கவனித்தீர்களா?
2000 கூட்டுத்தொகை 2
2
----
2004 கூட்டுத்தொகை 6
6
----
2010 கூட்டுத்தொகை 3
3
----
2013
----
உடனடி காபி,உடனடி தோசை போல்
இந்தநூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு உடனடி திருப்புமுனை கிடைக்கும் போல் இருக்கிறது.
எனது பாடக்கணக்கை போட்டுவிட்டேன்
அய்யா. பலன்கள் சரியாக பொருந்துகிறது.

வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Sridhar said...

அய்யா,

பாடமும் விளக்கமும் நன்கு புரிந்தது. எல்லோருக்கும் திருப்பு முனை அமையுமா?
நான் செய்த Sample test படி, அனைவருக்கும் அப்படி அமைவது இல்லை!

நன்றி,
ஸ்ரீதர் S

SP.VR. SUBBIAH said...

////Blogger SP Sanjay said...
அன்புள்ள ஐயா,
காலை வணக்கம்!
பாடம் புதுமை மற்றும் ஆச்சரியப்படும்படி உள்ளது.
தகவலை பகிர்ததமைக்கு நன்றி!
என்றும் அன்புடன்
Sanjai//////

பாட்ம் பிடித்திருந்தால் பதிவிட்ட எனக்கும் மகிழ்ச்சியே! நன்றி!

SP.VR. SUBBIAH said...

////Blogger hotcat said...
Super lesson!!! I remember you have mentioned it before. Thanks though....
-Shankar/////

நன்றி சங்கர்

SP.VR. SUBBIAH said...

///////Blogger வேலன். said...
முதலில் 250 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அய்யா.
20ஆம்நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு மாறுதல்கள் பத்து வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது.ஆனால் இந்தநூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு குறுகிய காலத்திலேயே மாறுதல்கள் வருகிறது கவனித்தீர்களா?
2000 கூட்டுத்தொகை 2
2
----
2004 கூட்டுத்தொகை 6
6
----
2010 கூட்டுத்தொகை 3
3
----
2013
----
உடனடி காபி,உடனடி தோசை போல்
இந்தநூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு உடனடி திருப்புமுனை கிடைக்கும் போல் இருக்கிறது.
எனது பாடக்கணக்கை போட்டுவிட்டேன்
அய்யா. பலன்கள் சரியாக பொருந்துகிறது.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்./////////

2000ல் பிறந்தவர்களுக்கு 12 வயதிற்குமேல்தான் பலன் என்னும்போது,
இந்த short period turning point கணக்கு சரியாக வராது!

SP.VR. SUBBIAH said...

////Blogger Sridhar said...
அய்யா,
பாடமும் விளக்கமும் நன்கு புரிந்தது. எல்லோருக்கும் திருப்பு முனை அமையுமா?
நான் செய்த Sample test படி, அனைவருக்கும் அப்படி அமைவது இல்லை!
நன்றி,
ஸ்ரீதர் S//////

அமையும்! அப்படித்தான் சீரோ சொல்கிறார்!

கூடுதுறை said...

வணக்கம் ஐயா...

அதிர்ஷ்டச்சக்கரம் பொருந்தி வருகிறது.

நன்றி.

SP.VR. SUBBIAH said...

////Blogger கூடுதுறை said...
வணக்கம் ஐயா...
அதிர்ஷ்டச்சக்கரம் பொருந்தி வருகிறது.
நன்றி.////

உங்களுக்குப் பொருந்திவந்தால் சரிதான் கூடுதுறையாரே!. அத்தனை பேருக்கும் அது பொருந்தும்!

திருநெல்வேலி கார்த்திக் said...

வாழ்த்துக்கள் ஆசிரியர் ஐயாவுக்கு.

SP.VR. SUBBIAH said...

////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
வாழ்த்துக்கள் ஆசிரியர் ஐயாவுக்கு.////

நன்றி கார்த்திக்!

மெட்ராஸ்காரன் said...

ஐயா,

எனக்கு ஒரு சந்தேகம். இந்த சக்கரத்தை 2006 ஆண்டு பிறந்தவருக்கு எப்படி உபயோகிப்பது? தயவு செய்து விளக்கவும். நன்றி

SP.VR. SUBBIAH said...

பிறந்ததில் இருந்து பன்னிரெண்டு வயது நிறையும் வரை உள்ள குழந்தைக்கு அதன் ஜாதகம் வேலை செய்யாது.
அதனால்தான் குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றன.

2006ல் பிறந்த குழந்தைக்கு 2006 = 8 = 2014 +7 = 2021
2021 ல்தான் சக்கரம் வேலை செய்யும். இதுதான் அடிப்படை விதி. இப்படியே கணக்கிட்டிக்கொள்ளுங்கள்