மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

29.1.09

அதிர வைத்த இளம் சந்நியாசி - பகுதி 2


அதிர வைத்த இளம் சந்நியாசி - பகுதி 2

முதல் பகுதிக்கான சுட்டி இங்கே உள்ளது. அதைப் படித்திராதவர்களை, அதைப்
படித்துவிட்டு இதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளகிறேன்!
--------------------------------------------------------------------------------------
அரண்மனை வாசலில் தன் தேவியர்கள் மற்றும் புத்திர சிகாமணிகளுடன்,
சுவாமிகளின் வரவை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருந்தான்
அல்லவா மன்னன்?

அவனை அதிக நேரம் காக்க வைக்காமல், இளம் துறவியை ஏற்றிக்கொண்டு
வந்த பல்லக்கும் வந்து சேர்ந்தது.

இளம் துறவி பல்லக்கில் இருந்து இறங்கியவுடன், பட்டத்து யானையின் மூலம்,
பெரிய மலர்மாலை ஒன்று அவருக்கு அணிவிக்கப்பெற்றது.

அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத காரியம் ஒன்றை மன்னன் செய்தான்.

ஆமாம், திடீரென்று துறவியின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து
வணங்கினான்.

மன்னனே காலில் விழுந்து வணங்குவதைப் பார்த்த அங்கிருந்த தேவியர்கள்
முதலிட்ட அரச குடும்பத்தினர் அனைவரும் விழுந்து வணங்கினார்கள்.

முதன் மந்திரி முதல் யானைப்பாகன் வரை அங்கிருந்த மற்றவர்களும்
விழுந்து வணங்கினார்கள்.

முதலில் அதிர்ந்து போய்விட்ட துறவி, சற்று சுதாகரித்துக் கொண்டு, "நமச்சிவாய"
என்று சொல்லி அனைவரையும் வாழ்த்தினார்

மன்னன் எழுந்து வழிகாட்ட, துறவியார் அரண்மனைக்குள் நுழைந்தார். உடன் அரச
குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டர்கள். முதல் மந்திரியும், அரண்மனைத் தலைமைக்
காவலரும் உள்ளே சென்றார்கள். வேறு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை!

பிரதான அரங்கத்தில் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பெற்று, ஒரே ஒரு சிம்மாசானம்
மட்டும் போடப்பட்டிருந்தது.

துறவியாரை, அதில் அமரும்படி கேட்டுக்கொண்டான் மன்னன்.

அவர் அமர்ந்தவுடன், அவர் அருகில், அவருடைய காலடி அருகே, தரையில்,
அதாவது ரத்தினக்கம்பளத்தின் மீது மன்னன் அமர்ந்து கொண்டான்.

மற்ற அனைவரும் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டார்கள்.அந்தக் காட்சியைக்
கண்ணுற்ற நமது துறவியாருக்குச் சற்று அச்சமாக இருந்தது. ஆனாலும் அதை
வெளிக்காட்டாமல் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.

பின்னே இருக்காதா? அரசனுக்கு 50 வயது. துறவிக்கோ இருபத்தியோரு வயதுதான்
அதோடு பதவியில் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம். எல்லாம் விதியின்
விளையாட்டுப்போலும் என்று துறவி மனதில் நினத்துக் கொண்டார்.

உண்மை தெரிந்தால் தலை போகுமா? அல்லது கால் போகுமா? என்று தெரியாத
சூழ்நிலை. நடப்பது நடக்கட்டும் என்று தனது நாடகத்தைத் தொடர்ந்தார்.

மன்னன்தான் முதலில் பேசினான்.

"சுவாமி உங்களுக்குப் பாதபூஜை செய்ய விரும்புகிறோம். உத்தரவு கொடுங்கள்."
என்றான்.

சுவாமிகள் கண்களினாலேயே சம்மதத்தைத் தெரிவித்தார்.

மன்னன் கையை உயர்த்த, தூரத்தில் நின்று கொண்டிருந்த இரு தாதிப்பெண்கள்
பெரிய வெள்ளித் தாம்பாளம், வெள்ளிக்குடத்தில் தண்ணீர், இன்னொரு தாம்பாளத்தில்,
பூஜைப் பொருட்கள் என்று அனைத்தையும் கொண்டு வந்து வைத்தார்கள்.

தேவியர் இருவரும் அருகில் வர, அவர்கள் துணையுடன், மன்னன் துறவிக்குப்
பாத பூஜையைச் செய்து முடித்தான். அதோடு விழுந்தும் வணங்கினான்.

துறவியைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. இத்தனை சின்ன
வயதில் முகத்தில் இப்படி ஒரு அருளா?

எல்லாவற்றையும் கொடுத்த இறைவன் இந்த நிர்மலமான முகத்தை மட்டும் நமக்கு
ஏன் தரவில்லை? அப்படி நினைத்த மாத்திரத்திலேயே மன்னன் கண்களில் நீர்
கோர்த்துக் கொண்டு கன்னத்தில் வழிய ஆரம்பித்தது. அதைக் கவனித்த தேவியர்கள்
இருவருமே உணர்ச்சி வசப்பட்டார்கள்.

சூழ்நிலையின் இருக்கத்தைக் குறைக்க விரும்பிய துறவியார், அருகில் தாம்பாளத்தில்
இருந்த மலர்மாலை ஒன்றை எடுத்து, மன்னனுக்கு அணிவித்து, ஆசீர்வதித்தார்.

மீண்டும் தரையில் துறவியின் எதிரே அமர்ந்து கொண்ட மன்னன், தன் அரச, மற்றும்
குடும்ப வரலாறுகளை பொறுமையாகச் சொன்னான். அதைவிடப் பொறுமையாகத்
துறவியும் காது கொடுத்துக் கேட்டார்.

இறுதியில் மன்னன் தன் பிரச்சினைகளைச் சொல்லி, அதற்குத் தங்களுடைய மேலான
யோசனைகளைச் சொல்லுங்கள் என்று துறவியைக் கேட்டுக் கொண்டான்.

துறவி நறுக்குத் தெரித்தார்ப்போல பேசினார்.

"உங்கள் துன்பங்களைக் கூட்டிக் கழித்தால் இரண்டு சொல்லில் அடக்கிவிடலாம்.
ஒன்று கோபம், இன்னொன்று படபடப்பு, இல்லையா?" என்று கேட்டார்.

"ஆகா, அவையிரண்டும்தான் தலையாய பிரச்சினைகள்" என்று மன்னன் பதில்
சொன்னான்.

துறவி அவற்றிற்குப் பதில் சொன்னார்.

முதலில் அவனுடைய மனைவிகள் இருவரையும் தனித்தனி மாளிகைகளில் தங்கும்படி
செய்ய வேண்டும் என்றார். அதோடு ஒவ்வொரு தேவியின் குழந்தைகளும்,
அவர்களுடனே தங்கும்படியாகச் செய்ய வேண்டும் என்றார். மன்னன் மாதத்தில் முதல்
பதினைந்து நாட்கள் மூத்தவள் வீட்டிலும், அடுத்த பதினைந்து நாட்கள் இளையவள்
வீட்டிலும் தங்கி வருவது நல்லது என்றார். மன்னனும் அது நல்ல தீர்வு என்று சொல்லி
மகிழ்ந்தான். பிரச்சினைகள் பாதியாகக் குறைந்து விடுமல்லவா?

இன்பம், துன்பம் ஆகிய இரண்டையுமே அவைகள் வந்து சேரும் கணத்தில் ஏற்றுக்
கொள்ளாமல், ஒரு நாழிகை கழித்தே (அதாவது 24 நிமிடங்கள் கழித்தே) மனதிற்குள்
கொண்டு செல்ல வேண்டும் என்றார். அதாவது சட்டென்று react செய்யக்கூடாது
எனும் பொருள்படத் துறவியார் சொன்னார்.

இன்பம் வந்தால் உடனே துள்ளிக் குதிக்காதே! துன்பம் வந்தால் உடனே கோபப்பட்டு
மற்றவர்களைப்ப் பிறாண்டதே! என்பதை மன்னனுக்குப் புரியும் வண்ணம் இரண்டு
குட்டிக் கதைகள் மூலமாகப் பாடம் நடத்தினார். மன்னன் மகிழ்ந்து விட்டான்.

அப்படிச் செய்தால் கோபம் வராது என்பதை மன்னன் உணர்ந்தான்.

அடுத்து படபடப்பு வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் துறவி சொன்னார்.

மன்னனாக இருப்பதால், பல சோதனைகளைத் தாங்கும்போது படப்படப்பு ஏற்படுவது
இயற்கை என்றும், அந்தமாதிரி நேரங்களில், ஆறு குவளைகள் தண்ணீரை அடுத்துத்துக்
குடித்துவிட்டு, சற்று நேரம் மஞ்சத்தில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றார்.

ஆறு குவளைகள் நீரைக்குடித்தால் என்ன ஆகும்?
வயிறு முட்டிப்போகும்.
அதோடு மஞ்சத்தில் ஓய்வெடுத்தால் என்ன ஆகும்?
தூக்கம் வரும்.
தூக்கம் வந்தால் என்ன ஆகும்?
படபடப்புப் போய்விடாதா?
அது பாட்டி வைத்தியம்.
அதை அறிந்திராத மன்னன் ஆகா அற்புதமான தீர்வு என்று தனக்குள் சொல்லி
மகிழ்ந்தான்.
--------------------------------------------------------------------------------------------
துறவிக்குச் சிற்றுண்டியாகச் சர்க்கரைபொங்கலும், வெண்பொங்கலும் வழங்கப்
பெற்றது. அதுவும் தங்கத் தட்டுக்களில் வழங்கப்பெற்றது.

துறவியும் கிடைத்ததை மண்டிவைக்காமல் ஒவ்வொன்றிலும் சிறிதளவு மட்டும்
சுவைத்து உண்டார்.

மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. துறவியும், "மன்னா நான் புறப்படுகிறேன்.
இறையருள் இருந்தால் மீண்டும் சந்திப்போம்" என்று சொல்லி எழுந்துவிட்டார்.

மன்னனும் கெஞ்சி ஒருவாரம் இங்கே தங்கிச் செல்லும்படி வேண்டிக் கொண்டான்

ஒருவாரம் தங்கினால் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதை உணர்ந்த துறவி,
சற்று நிதானித்துப் பதில் சொன்னார்.

தான் எங்கேயும் தங்குவதில்லை என்றும், ஊருணிக்கரைகளில் உள்ள மண்டபங்களில்
மட்டுமே தங்கி ஓய்வெடுப்பது வழக்கம் என்றும் சொன்னார். ஒரு ஊரில் ஒரு
நாளைக்கு மேல் தங்குவதில்லை என்றும் சொன்னார். தன்னுடைய சீடர்கள் இருவர்
காத்துக் கொண்டிடுப்பார்கள் என்றும் சொன்னார்

அரை மனதுடன் அதற்குச் சம்மதித்த மன்னன், சமிக்கை செய்ய, தேவியரில்
மூத்தவள் எழுந்து விரைந்து சென்று ஒரு தங்கத் தாம்பாளத்தைத் தூக்க முடியாமல்
தூக்கிக் கொண்டு வந்தாள். அது நிறையப் பொற்காசுகளும், வைர ஆபரணங்களும்
இருந்தன. இன்றைய மதிப்பில் அவைகள் பத்துக் கோடிகளுக்குத் தேறும்.

அதைக் கையில் வாங்கிய மன்னன், துறவியிடம் நீட்டி, "இந்த எளியவனின்
காணிக்கையாக இதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.

துறவி புன்னகைத்து மறுத்துவிட்டார்.

"நான் முற்றும் துறந்த துறவி. எனக்கெதற்கு இதெல்லாம்? ஏழை மக்களுக்குக்
கொடுங்கள். எனக்கு ஒன்றே ஒன்றுதான் வேண்டும் அது மனித நேயம் மட்டுமே!"

மன்னன் விடவில்லை,"என் அரண்மனைக்கு வந்து விட்டு நீங்கள் வெறும் கையுடன்
போகக்கூடாது. வேறு என்ன வேண்டும் கேளுங்கள். ஆசிரமம் அமைப்பதற்கு நூறு
வேலி இடம் தரட்டுமா?" என்றான்.

"ஆசிரமம் என்னை ஒரு இடத்தில் முடக்கிவிடும். அதுவும் வேண்டாம். ஏதாவது
அவசியம் தர வேண்டும் என்று நினைத்தால், அந்த மாம்பழத்தில் இரண்டைக்
கொடுங்கள். அதுபோதும்!"

அதிர்ந்துவிட்ட மன்னன். இரண்டு பழங்களை எடுத்துக்கொடுத்தான். துறவி
முகமலர்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டார்.

இதுவரை இங்கு வந்தவர்களில் இவரைவிட எளிமையானவர் எவரும் இல்லை என்பதை
உணர்ந்த மன்னன், அந்த எளிமையை வணங்கும் முகமாக அவரை மீண்டும் ஒருமுறை
விழுந்து வணங்கிவிட்டுச் சொன்னான்.

"சுவாமி, இப்போதுதான் எனக்கு ஞானம் வந்ததுள்ளது. ஆசையும்,
உடைமைகளும்தான்
அத்தனை துன்பங்களுக்கும் காரணம்."

புன்னகைத்த இளம் துறவி புறப்பட்டுவிட்டார். பல்லக்குத் தூக்கிகள் அவரை ஏற்றிக்
கொண்டு போய், புறப்பட்ட இடத்தில் இறக்கிவிட்டுத் திரும்பி வந்து விட்டார்கள்

மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்ற மன்னன், முதன் மந்திரியைப் பாராட்டி, அவரிடம்
ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பணமுடிப்பு ஒன்றைப் பரிசாக வழங்கினான்.
--------------------------------------------------------------------------------------
அன்று மாலை சூரிய அஸ்தமனமாகி மூன்று நாழிகைகள் கழித்து, சற்று இருட்டிய
நேரத்தில், முதன் மந்திரி, முத்தழகன் வீட்டிற்கு வந்தார்.

ஐந்து மணித்துளிகள் அவன் தந்தையுடன் பேசிவிட்டு, மகிழ்ச்சியுடன் முத்தழகன்
இருந்த அறைக்குள் வந்தார்.

மரியாதை நிமித்தமாக எழுந்த முத்தழகனைக் கட்டித் தழுவி, பாராட்டினார்.

"அற்புதமாக நடித்தாய். என்னுடைய எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்தாய். இந்தா
இதை வைத்துக்கொள்" என்று சொல்லி மன்னர் கொடுத்த ஆயிரம் பொற்காசுகள்
அடங்கிய பணமுடிப்பை அவனிடம் கொடுத்தார்.

அதில் என்ன இருக்கும் என்றுணர்ந்த முத்தழகன் சொன்னான்.

"எனக்கு ஒன்றும் வேண்டாம்"

மந்திரிக்கு ஆச்சரியமாகி விட்டது. "மன்னர் கொடுத்தை நீ வேண்டாம் என்று
சொன்னதற்கு என்ன காரணம் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒரு
வேளை அவ்வளவு பணம் இருந்தால் ஆபத்து என்று நினைத்து நீ வேண்டாம்
என்று சொல்லியிருக்கலாம். இதை ஏன் வேண்டாம் என்கிறாய்? இதை நான்
அல்லவா உவந்து கொடுக்கிறேன்" என்று கேட்டார்.

அவன் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான்.

மந்திரிக்குக் கோபம் வந்துவிட்டது."அட, புரியாதவனே, எதற்கு இதை வேண்டாம்
என்கிறாய்? அதைச் சொல்!"

"இன்று ஒரு நாளில் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். ஒரு உண்மையான
துறவிக்கு உள்ள மதிப்பைத் தெரிந்து கொண்டேன். எத்தனைபேர்கள் காலில்
விழுகிறார்கள்? எத்தனை உள்ளங்களில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது? எத்தனை
கண்களில்
நீர் சுரக்கிறது? எத்தனை உள்ளங்களில் அமைதி குடிகொள்கிறது?
எல்லாவற்றையும்
தெரிந்துகொண்டேன். அதில் ஒரு மகத்துவம் இருக்கிறது.
அது என்ன என்பதை
முழுதாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இன்று முதல்
நான் துறவியாகி விட்டேன்.
இந்தப் பாழாய்ப்போன பணத்தைக் காட்டி என் மனதைக்
கெடுக்க முயற்சிக்காதீர்கள்
(Don't try to pollute my mind by giving this money!)

"............................."

"மன்னனுக்குச் சொல்லியதைத்தான் உங்களுக்கும் சொல்கிறேன். இதை ஏழை
மக்களுக்குக் கொடுத்து அவர்களுடைய பசியை நிரந்தரமாகப் போக்குங்கள்.
நீங்கள் இங்கே நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் பயனில்லாது போகும். ஆகவே
நீங்கள் செல்லலாம்" என்று சொன்னவன் தரையில் அமர்ந்து தியானம் செய்ய
ஆரம்பித்துவிட்டான்.

மந்திரிக்கு சம்மட்டியால் அடித்தைப் போன்று ஆகிவிட்டது. திகைத்துப்போய்
விட்டார். மேற்கொண்டு ஒன்றும் சொல்லமுடியவில்லை. செய்யவும் இயலவில்லை.

அங்கிருந்து கிளம்பித் தலைநகருக்குத் திரும்பினார்.

ஒரு உண்மையான துறவியை உருவாக்கிய மகிழ்ச்சி மட்டும் அவருடைய
உள் மனதில் நீண்ட நாட்கள் குடிகொண்டது!
-------------------------------------------------------------------------------------
ஒருவருக்கு ஞானம் பிறக்கிறது என்றால், அதன் பின்னணியில் கேது இருப்பார்.
அவர்தான் ஞானகாரகன். ஞானம் ஒருவனுக்கு எந்த வயதில் வேண்டுமென்றாலும்
வரலாம். அல்லது வராமலும் போகலாம்.

ஞானத்தைப் பெற்று ஒருவன் ஞானியாகி விட்டால், இந்த வாழ்வியல் துன்பங்கள்
அவனை ஒன்றும் செய்யாது. அவன் எந்த பாதிப்பிற்கும் உள்ளாக மாட்டான்.
அதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும்.

ஒரே நாளில் அந்த இளைஞனுக்கு ஞானம் கிடைத்தது பாருங்கள், அதுவும்
கொடுப்பினைக் கணக்கில்தான் வரும்!!!!!!

நமக்கு எப்போது ஞானம் வரும் என்கிறீர்களா? வாருங்கள், கேதுவைப் பற்றிய
பாடத்தைப் படிப்போம். ஒழுங்காகப் படித்தால் உங்களுக்கே அது தெரியவரும்!
பாடம் அடுத்தவாரம் முதல் துவங்குகிறது!
------------------------------------------------------------------------------------
நன்றி,
வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்


வாழ்க வளமுடன்!

58 comments:

Dr.Vinothkumar said...

Kathai arumai ayya.

kethuvukkum Paambukkum enna ayya thodarbhu?

paadathukku munneye kelvi ketkiraan enru ninaikkaadheergal.oru aarvam than!

படித்துறை.கணேஷ் said...

ஞானத்தின் வாசலில் நிற்கிறோம் என்று தெரிகிறது....கதவு திறக்க ஒரு வாரமாகுமா?..கனிவான ஆசிரியரின் கரும்பு உள்ளம் வாழ்த்தினால் முன்வினையும், பின்வினையும் முற்றொழிந்து போகாதோ......வணக்கங்கள்....

SP Sanjay said...

இதை உண்மைக் கதை போல் பாவித்தேன்.

மெய் சிலிர்த்து விட்டேன் !!

கேதுவின் பாடதிற்காக எல்லோரும் காத்திருக்கிறோம்.

என்றும் அன்புடன்.

திவா said...

கதையின் போக்கு முன்னேயே தெரிந்துவிட்டாலும் சொன்னவிதம் நல்லா இருந்தது.

SP.VR. SUBBIAH said...

Blogger Dr.Vinothkumar said...
Kathai arumai ayya.
kethuvukkum Paambukkum enna ayya thodarbhu?
paadathukku munneye kelvi ketkiraan enru ninaikkaadheergal.oru aarvam than!

உருவ வழிப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்தவர்கள் நாம். இறைவன் ஒருவனே! There is only God.
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொல்வார். "இறைவன் ஒருவனே. மதங்கள் எல்லாம் ஆறுகள். இறைவன் எனும் கடலில் அவைகள் கலக்கின்றன!"

நம்மிடம்தான் எத்தனை தெய்வங்கள். எத்தனை வடிவங்கள். சுதந்திரம் இருக்கிறது. யார் வேண்டுமென்றாலும் அவனுக்குப் பிடித்த எந்த வடிவில் வேண்டுமென்றாலும் இறைவனை வணங்கிக்கொள்ளலாம். ஆனால் வணங்க வேண்டும். அதுதான் செய்தி

அது போல ராகு & கேதுவிற்குக் கொடுக்கப்பட்ட வடிவம்தான் பாம்புகள். அவைகள் மிகவும் தீய கிரகங்கள் என்பதைக் காட்டுவதற்காக அந்த வடிவம் கொடுக்கப்பெற்றிருக்கலாம் டாக்டர்.

வேறு சரியான காரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை டாக்டர்!

ஆனால் அறுதப் பழசான் புராணங்களைப் படித்தால், அவர்கள் வேறு ஒன்றைச் சொல்கிறார்கள். நம்பமுடியாமல் இருக்கும்
படிப்பவன் குழம்பிப் போய்விடுவான். விஞ்ஞானப்படி ஒப்புக்கொள்ள முடியாததாக இருக்கும்.

நீங்கள் குழம்ப மாட்டீர்கள் என்றால்,ஒருமுறை படித்துப் பாருங்கள். அதற்கான சுட்டியைக் கீழே கொடுத்திருக்கிறேன்
http://users.hartwick.edu/hartleyc/rahu.htm

sridhar said...

எண்ணங்கள் மனித வாழ்கையை தீர்மானிக்கின்றன என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம். சரிதானே அய்யா.

SP.VR. SUBBIAH said...

////Blogger படித்துறை.கணேஷ் said...
ஞானத்தின் வாசலில் நிற்கிறோம் என்று தெரிகிறது....கதவு திறக்க ஒரு வாரமாகுமா?..கனிவான ஆசிரியரின் கரும்பு உள்ளம் வாழ்த்தினால் முன்வினையும், பின்வினையும் முற்றொழிந்து போகாதோ......வணக்கங்கள்...//////.

ஆசியருக்கு அவ்வளவு சக்திகள் எல்லாம் இல்லை. இருந்தால் அவர் ஏன் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருக்கப்போகிறார்?
உங்களைப்போல ஒரு தொலைக் காட்சி அலுவலகத்தில் சேர்ந்து தன் பணியைப் பெரிய அளவில் செய்ய மட்டாரா?:-))))

SP.VR. SUBBIAH said...

////Blogger SP Sanjay said...
இதை உண்மைக் கதை போல் பாவித்தேன்.
மெய் சிலிர்த்து விட்டேன் !!
கேதுவின் பாடதிற்காக எல்லோரும் காத்திருக்கிறோம்.
என்றும் அன்புடன்.///

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சஞ்சய்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger திவா said...
கதையின் போக்கு முன்னேயே தெரிந்துவிட்டாலும் சொன்னவிதம் நல்லா இருந்தது.////

அந்த நம்பிக்கையில்தான் கதையைச் சொன்னேன். நன்றி திவா!

SP.VR. SUBBIAH said...

///////Blogger sridhar said...
எண்ணங்கள் மனித வாழ்கையை தீர்மானிக்கின்றன என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம். சரிதானே அய்யா?///////

எண்ணங்கள் மட்டுமே மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றனவா? பிறகு முன்வினைப் பயன், பின் வினைப்பயன், பூர்வ புண்ணியம் ஜோதிடம் எல்லாம் எதற்கு நண்பரே? Attitude and approach will give you standing power in life which is predestined!

வேலன். said...

கதை அருமை. கேதுவினால் பெற்ற
ஞானம் எனக்கு சுனாமி வந்தபோது
வந்து விட்டது. பெரிய பணக்காரர் ஒருவர் நிறைய பணம் இருந்தும் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் நாங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸ்கட்டுக்கள் வழக்கியசமயம் கையேந்தி அவர் அந்த பிஸ்கட்டுக்களை வாங்கியபோது எனக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.எவ்வளவு சொத்து இருந்தும் அவருக்கு அதனால் என்ன பயன் இருந்தது.// பிறக்கும்போது கொண்டுவந்ததில்லை-இறக்கும்போதும் கொண்டுசெல்லபோவதில்லை-இடையில் சேர்க்கும்செல்வம் இறைவன்கொடுத்தது என்று ஏன் மனிதனுக்கு புரிவதில்லை//அதன்பிறகாவது மக்கள் திருந்துவார்கள் என பார்த்தால் ஆசை யாரை விட்டது.
வாழ்க வளமுடன்,
வேலன்.

SHANTHI said...

வணக்கம் அய்யா,
நான் US இல் இருக்கிறேன் ......பொதுவாக சூரியன் உதிக்கும் நேரம் வைத்துதான் நல்ல நேரம் கால்கிலடே பனுவாங்க ....US ல எப்படி நல்ல நேரம் பார்ப்பது ......இந்தியாவில் இருக்கும் நல்ல நேரம் சரியாக வருமா ......இல்லை USA இல் சூரியன் உதிக்கும் நேரம் வைத்துதான் நல்ல நேரம் கால்கிலடே செய்யனுமா .......
february 1 தேதி USA ல சூரியன் உதிக்கும் நேரம் 7.17 a.m முடிந்தால் நல்ல நேரம் சொல்லுகள் அய்யா .....ப்ளீஸ் ..

ஸ்வாமி ஓம்கார் said...

சிறிய கதையை சிறப்பான திரைக்கதையாக்கினீர்கள்..

நவீன நாகரீக இளைஞர்கள் இதை விபரீதமாக சிந்திப்பதும் உண்டு.

கதையை ஆராயாமல் நீங்கள் கதை சொன்ன காரணத்தை ஆராய்தால் பின்வருமாறு சொல்ல தோன்றுகிறது...

கேது பரம சாது ... :))

krish said...

Good story with deep meaning. Thanks.

SHANTHI said...

அய்யா ..... அதிரவைத்த இளம் சந்நியாசி கதை சூப்பர் ........அடுத்த வாரத்திற்காக வாசலில் நான் காத்து கொண்டு இருக்கிறன் ...

Raj said...

Dear Sir,

"Attakasamana Kadhai"."Asathalana Elutthu Nadai". Really your written style is too good and simple sir.

Astrology Mass ikku oru "O" Podungappa.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

SP.VR. SUBBIAH said...

///////Blogger வேலன். said...
கதை அருமை. கேதுவினால் பெற்ற
ஞானம் எனக்கு சுனாமி வந்தபோது
வந்து விட்டது. பெரிய பணக்காரர் ஒருவர் நிறைய பணம் இருந்தும் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் நாங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸ்கட்டுக்கள் வழக்கியசமயம் கையேந்தி அவர் அந்த பிஸ்கட்டுக்களை வாங்கியபோது எனக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.எவ்வளவு சொத்து இருந்தும் அவருக்கு அதனால் என்ன பயன் இருந்தது.// பிறக்கும்போது கொண்டுவந்ததில்லை-இறக்கும்போதும் கொண்டுசெல்லபோவதில்லை-இடையில் சேர்க்கும்செல்வம் இறைவன்கொடுத்தது என்று ஏன் மனிதனுக்கு புரிவதில்லை//அதன்பிறகாவது மக்கள் திருந்துவார்கள் என பார்த்தால் ஆசை யாரை விட்டது.
வாழ்க வளமுடன்,
வேலன்.///////

காலதேவன் ஒரு நாள் உணர வைப்பான். யாரும் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது!

SP.VR. SUBBIAH said...

//////Blogger SHANTHI said...
வணக்கம் அய்யா,
நான் US இல் இருக்கிறேன் ......பொதுவாக சூரியன் உதிக்கும் நேரம் வைத்துதான் நல்ல நேரம் கணக்கிடுவார்கள்...US ல எப்படி நல்ல நேரம் பார்ப்பது?..இந்தியாவில் இருக்கும் நல்ல நேரம் சரியாக வருமா ......இல்லை USA இல் சூரியன் உதிக்கும் நேரம் வைத்துதான் நல்ல நேரம் கணக்கிட வேண்டுமா?.
february 1 தேதி USA ல சூரியன் உதிக்கும் நேரம் 7.17 a.m முடிந்தால் நல்ல நேரம் சொல்லுகள் அய்யா .....ப்ளீஸ் ../////

IST யை வைத்து இங்கே கணக்கிடுவோம்

February 1ம் தேதி.
morning 7:30 to 8:30 IST
afternoon 3:30 to 4:30 IST
இங்கே நல்ல நேரம்.

அதே வழியில் US standard time அல்லது நீங்கள் வசிக்கும் மாநிலத்தின் standard timeஐ வைத்து கணக்கிட்டுக்கொள்ளுங்கள் சகோதரி!

Okay யா?

SP.VR. SUBBIAH said...

//////Blogger ஸ்வாமி ஓம்கார் said...
சிறிய கதையை சிறப்பான திரைக்கதையாக்கினீர்கள்..
நவீன நாகரீக இளைஞர்கள் இதை விபரீதமாக சிந்திப்பதும் உண்டு.
கதையை ஆராயாமல் நீங்கள் கதை சொன்ன காரணத்தை ஆராய்தால் பின்வருமாறு சொல்ல தோன்றுகிறது...
கேது பரம சாது ... :))//////

நீங்கள் பரம சாதுவானர் சுவாமிஜி. அதனால் உங்களுக்கு அனைவருமே - அனைத்துக் கோள்களுமே பரம சாதுவாகக் காட்சியளிப்பதில் வியப்பில்லை! என் அனுபவம் வேறு. என் நெருங்கிய நண்பர் ஒருவரைத் தன் திசைத் துவக்கத்திலேயே போட்டுத் தள்ளியவர் கேது! அவருடைய உடல் கூடக் கிடைக்கவில்லை. விபத்து நடந்தது அவருடைய ஹரித்துவார் பயணத்தில்! தேசிய வங்கி ஒன்றில் மிகப்பெரிய பதவியில் இருந்தவர் அவர்.

Dr.Vinothkumar said...

thanks for the explanation and the link.It was really helpful to understand something about Rahu and Ketu . As you told there is still no concrete answer for why these planets are regarded as snake forms

SP.VR. SUBBIAH said...

/////Blogger krish said...
Good story with deep meaning. Thanks.//////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

///////Blogger SHANTHI said...
அய்யா ..... அதிரவைத்த இளம் சந்நியாசி கதை சூப்பர் ........அடுத்த வாரத்திற்காக வாசலில் நான் காத்து கொண்டு இருக்கிறன் ...//////

அடடா, காத்து நிற்காதீர்கள்! நான் 31.1.2009 முதல் 3.2.2009 வரை வெளியூர் செல்ல இருக்கிறேன். வந்த பிறகுதான்
அடுத்த பதிவு. எழுதித் தட்டச்சவேண்டுமே?

SP.VR. SUBBIAH said...

//////Blogger Raj said...
Dear Sir,
"Attakasamana Kadhai"."Asathalana Elutthu Nadai". Really your written style is too good and simple sir.
Astrology Mass ikku oru "O" Podungappa.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////

ஓ போடுங்கள் என்பது எனக்கு முட்டை (ஜீரோ) போடுங்கள் என்று சொல்வதைப்போன்று இருக்கிறது:-))))))

SP.VR. SUBBIAH said...

///Blogger Dr.Vinothkumar said...
thanks for the explanation and the link.It was really helpful to understand something about Rahu and Ketu . As you told there is still no concrete answer for why these planets are regarded as snake forms////

Yes doctor! It is true!

மிஸ்டர் அரட்டை said...

You can try screenplay writing for Drama/cinema.. May be your Jaadhagam is like that :-)

N.K.S.Anandhan. said...

Interesting story, கதையும் சொல்லிய விதமும் அருமை. அடுத்த பதிவை இழுத்தடிக்காமல் விரைவில் பதிவிட அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

krish said...

There are logical explanations for all the puranic concepts. Swami Omkar has given one excellent explanation for Indran. I hope he can enlighten us about the figure representation of snake for Raghu and Ketu.

SP.VR. SUBBIAH said...

/////Blogger மிஸ்டர் அரட்டை said...
You can try screenplay writing for Drama/cinema.. May be your Jaadhagam is like that :-)////

கமர்ஷியலாக எழுத வேண்டும். எனக்கு யதார்த்தமாக எழுதித்தான் பழக்கம்!
இருப்பது போதும்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger N.K.S.Anandhan. said...
Interesting story, கதையும் சொல்லிய விதமும் அருமை. அடுத்த பதிவை இழுத்தடிக்காமல் விரைவில் பதிவிட அன்புடன் வேண்டுகிறேன். நன்றி./////

என்னைவிடச் சுறுசுறுப்பான பேர்வழி உலகத்திலேயே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இழுத்தடிக்காமல் எனும் வார்த்தையைச் சொல்லி என் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டீர்களே! நியாயமா?

SP.VR. SUBBIAH said...

/////Blogger krish said...
There are logical explanations for all the puranic concepts. Swami Omkar has given one excellent explanation for Indran. I hope he can enlighten us about the figure representation of snake for Raghu and Ketu.////

ஆகா சுவாமிஜிக்குத் தெரிந்திருக்கும். அவர் சொல்லட்டும் நானும் கேட்டுக்கொள்கிறேன். அதுவரை இந்தச் சுட்டியில் உள்ளதைப் படித்துக்கொண்டிருங்கள். http://users.hartwick.edu/hartleyc/rahu.htm

Raj said...

Dear Sir

Sir "O" Stands forLife(I mean Life Circle)
"O" Stands for Absolutly (After Beyond the limit -- End ...)
"O"(Zero) Stands for - to reduce the ambiguity.Before using numbers - The first placeholder is "0" or "O".

So, "you are the First Placeholder" and
"You are the Best Placeholder".

you are reduce kethu lesson ambiguity(Before Starting the Lesson). I mean simplify the terms(Kethu).


Thank you

Loving Student
Arulkumar Rajaraman

dubai saravanan said...

அருமை

கேதுவின் பாடதிற்காக எல்லோரும் காத்திருக்கிறோம்

அணுயோகி said...

அருமையான கதை!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Raj said...
Dear Sir
Sir "O" Stands forLife(I mean Life Circle)
"O" Stands for Absolutly (After Beyond the limit -- End ...)
"O"(Zero) Stands for - to reduce the ambiguity.Before using numbers - The first placeholder is "0" or "O".
So, "you are the First Placeholder" and
"You are the Best Placeholder".
you are reduce kethu lesson ambiguity(Before Starting the Lesson). I mean simplify the terms(Kethu).
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

அபரிதமான அன்பால் அப்படிச் சொல்கிறீர்கள். I am neither happy nor unhappy with this explanation!:-))))

SP.VR. SUBBIAH said...

/////Blogger dubai saravanan said...
அருமை
கேதுவின் பாடதிற்காக எல்லோரும் காத்திருக்கிறோம்////

வழக்கம்போல தொடர்ந்து வரும்!

Sumathi. said...

ஹலோ சார்

ஆஹா கதை ரொம்ப அருமையா இருக்கு.அப்போ பாடமும் அருமையா இருக்கும் னு எதிர்பார்க்கிறேன்.waiting for next post.

SP.VR. SUBBIAH said...

////Blogger அணுயோகி said...
அருமையான கதை!////

பாராட்டிற்கு நன்றி யோகியாரே!

SP.VR. SUBBIAH said...

////Blogger Sumathi. said...
ஹலோ சார்
ஆஹா கதை ரொம்ப அருமையா இருக்கு.அப்போ பாடமும் அருமையா இருக்கும் னு எதிர்பார்க்கிறேன்.waiting for next post.////

என்ன சகோதரி, நான்கைந்து வகுப்புக்களில் உங்களைக்காணோம். கட்' டடித்து விட்டீர்களே! பரவயில்லை. தாய்க்குலம்.
ஏதாவது காரணம் இருக்கும். நீங்கள் வந்தால்தான் வகுப்பு களை கட்டுகிறது. இந்த 'ஆகா' எனும் வார்த்தையையெல்லாம் வெளிப்படுத்தி மகிழ/ மகிழ்விக்க உங்களை விட்டால் யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள்!

N.K.S.Anandhan. said...

//என்னைவிடச் சுறுசுறுப்பான பேர்வழி உலகத்திலேயே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இழுத்தடிக்காமல் எனும் வார்த்தையைச் சொல்லி என் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டீர்களே! நியாயமா?//

வாத்தியாரின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அதிகப் படியான ஆவலில் அப்படி கூறிவிட்டேன்.

SP.VR. SUBBIAH said...

////Blogger N.K.S.Anandhan. said...
//என்னைவிடச் சுறுசுறுப்பான பேர்வழி உலகத்திலேயே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இழுத்தடிக்காமல் எனும் வார்த்தையைச் சொல்லி என் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டீர்களே! நியாயமா?//
வாத்தியாரின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அதிகப் படியான ஆவலில் அப்படி கூறிவிட்டேன்./////

அடடா, மன்னிப்பெல்லாம் எதற்கு? நாமெல்லாம் ஒன்றுக்குள் ஒன்று! வாத்தியார், மாணவர்களின் உறவு அப்படி. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத புனிதமான உறவு!

Sridhar said...

அய்யா,

கதையும் அதை present செய்த விதமும் சூப்பர்!

ஆவலுடன் கேதுவை அலசுவதக்காக காத்து இருக்கிறேன்.

நன்றி,

ஸ்ரீதர் S

KaveriGanesh said...

இன்றைய மதிப்பில் 10 கோடி இருக்கும்.

வாத்தியாரே ,பக்கத்துல இருந்து money convert பண்ணுன மாதிரியே சொல்றீங்க‌.


அன்புடன்

காவேரி க‌ணேஷ்

பாஸ்கர் said...

முன்னோட்ட கதை அருமை !
ஞானகாரகனாம் கேது வைப்பற்றிய பாடத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம் !

SP.VR. SUBBIAH said...

/////Blogger Sridhar said...
அய்யா,
கதையும் அதை present செய்த விதமும் சூப்பர்!
ஆவலுடன் கேதுவை அலசுவதற்காக காத்து இருக்கிறேன்.
நன்றி,
ஸ்ரீதர் S/////

பாராட்டிற்கு நன்றி ஸ்ரீதர்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger KaveriGanesh said...
இன்றைய மதிப்பில் 10 கோடி இருக்கும்.
வாத்தியாரே ,பக்கத்துல இருந்து money convert பண்ணுன மாதிரியே சொல்றீங்க‌.
அன்புடன்
காவேரி க‌ணேஷ்/////

பக்கத்தில் இருந்து பார்த்தது போல கதையை எழுதியிருக்கிறேன். அதனால் மதிப்பிட்டதும் தவறில்லை!

SP.VR. SUBBIAH said...

////Blogger பாஸ்கர் said...
முன்னோட்ட கதை அருமை !
ஞானகாரகனாம் கேது வைப்பற்றிய பாடத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம் !////////

நன்றி பாஸ்கர்!

கெக்கே பிக்குணி said...

படிச்சிட்டிருக்கேன். ஞானம் வரும் வரை வெயிட்டீஸ் கதையும் நல்லா இருந்தது.

பாடத்துக்கு நன்றி.

கெக்கே பிக்குணி said...

//SHANTHI said... வணக்கம் அய்யா,
நான் US இல் இருக்கிறேன்// ஷாந்தி, நானும் USஇல் இருக்கிறேன்; வாத்தியாரின் ராகு பற்றிய பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:
நீங்கள் இருக்கும் ஊரைப் பொறுத்து, ராகு காலம் கணிக்க க்ளிக்கவும்
அதைத் தவிர ஹோரை கணிக்க

SP.VR. SUBBIAH said...

/////Blogger கெக்கே பிக்குணி said...
படிச்சிட்டிருக்கேன். ஞானம் வரும் வரை வெயிட்டீஸ் கதையும் நல்லா இருந்தது.
பாடத்துக்கு நன்றி.////

பாராட்டிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger கெக்கே பிக்குணி said...
//SHANTHI said... வணக்கம் அய்யா,
நான் US இல் இருக்கிறேன்// ஷாந்தி, நானும் USஇல் இருக்கிறேன்; வாத்தியாரின் ராகு பற்றிய பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:
நீங்கள் இருக்கும் ஊரைப் பொறுத்து, ராகு காலம் கணிக்க க்ளிக்கவும்
அதைத் தவிர ஹோரை கணிக்க//////

ஆகா, இப்படியல்லவா இருக்க வேண்டும். என் மாணவக் கண்மணிகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது!

TK said...

Excellent way of conveying the message. Thank you Master Mr.SVS.

We are all desperately waiting for the topic 'KETU'.

Dubai-aktrajan

Astro said...

Anbulla Aiiya,

Vannakkam.

For "Prathanai" mind has to be stable state, but most of the time it is wavering and could not concentrate.

Does it mean, Moon is afflicted? Is any any remedy?

Your Valuable advise. Nanri

Regards
AstroFriend

இராசகோபால் said...

கலக்கி விட்டீர்கள். சாபத்திற்கு அஞ்சி, வகுப்பறை தோழர்கின் ஆர்வத்தை முன்னிட்டும் சஸ்பென்சை உடைக்கவில்லை. கதையப் பற்றி ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். கிடைத்ததா?

அன்புடன்
இராசகோபால்

SP.VR. SUBBIAH said...

////Blogger TK said...
Excellent way of conveying the message. Thank you Master Mr.SVS.
We are all desperately waiting for the topic 'KETU'.
Dubai-aktrajan/////

தொடர்ந்து பாடங்கள் இதே நடையில் விளக்கமாக வரும் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Astro said...
Anbulla Aiiya,
Vannakkam.
For "Prathanai" mind has to be stable state, but most of the time it is wavering and could not concentrate.
Does it mean, Moon is afflicted? Is any any remedy?
Your Valuable advise. Nanri
Regards
AstroFriend/////

பிரார்த்தனை செய்தால் மனம் கட்டுப்படும். அதற்கு ஒரு வழி இருக்கிறது. நேரம் இருக்கும்போது ஒரு பதிவாக அதை எழுதுகிறேன்

SP.VR. SUBBIAH said...

/////Blogger இராசகோபால் said..
கலக்கி விட்டீர்கள். சாபத்திற்கு அஞ்சி, வகுப்பறை தோழர்கின் ஆர்வத்தை முன்னிட்டும் சஸ்பென்சை உடைக்கவில்லை. கதையப் பற்றி ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். கிடைத்ததா?
அன்புடன்
இராசகோபால்//////

ஆகா கிடைத்தது! கதையின் ஓட்டம் வேறு மாதிரி இருந்திருக்குமே!

Astro said...

Anbulla Aiiya,

Astrological methods/calculation have been defined before 3000 Years by Saints like Parashara, Jaimini and followed
by astronomers/mathematician like VarahiMihirar, Venkatesar, Padhothbalar.

Recently Scientists have accepted Rig Vedha is 3000+ Years old even if we beleive is still older.

Most of the planets revolving time is calculated almost precisely during that time itself( like Jupitor, Saturn , etc ... )

But telescope and other scientific discoveries came later point in time in AD.

1) How it was ( calculations/ methodologies) achieved before 3000 years?
2) VarahiMihirar predicted astrology using 7 Planets only and did not consider Rahu & Ketu. Any reason to leave these nodes?

Your thoughts please.

Regards - AstroFriend

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்