மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

16.1.09

வாழ்க்கை எப்போது மோசமாகும்?


நம்மை நாம் இழக்கும்போது வாழ்க்கை மோசமாகிவிடும். சூழ்நிலைகளுக்கு
நாம் உணர்ச்சிவசப்படும்போது வாழ்க்கை துன்பமாகிவிடும்

சூழ்நிலைகளில் நம்மைக் கொதிக்க வைத்து (வார்த்தையைக் கவனிக்கவும்)
நம்மைத் துன்பங்களுக்கு ஆளாக்குபவர் ராகு.

பெரும்பாலான துன்பங்கள் உணர்வு சம்பந்தப்பட்டவையே!

மனிதனுக்கு உள்ள உணர்ச்சிகளையும், மன நிலைப்பாட்டையும் தூண்டி விட்டு
ஒருவனை அதீதமான செயலுக்கு உட்படுத்துவது ராகுவின் தலையாய பணி.
சமயங்களில் மூர்க்கத்தனமான செயல்களுக்கும் ராகுவே காரணம். செய்தவனே
திகைத்துப்போவான். ஒரு வேகத்தில் செய்தேன் என்பான். அந்த வேகம்
எப்படி வந்தது என்று கேட்டால் சொல்லத் தெரியாது.

அவனுக்கு எப்படித் தெரியும் தன் ஜாதகப் பலன் அப்படியென்று?

சட்டென்று கோபம் பலருக்கும் வரக்கூடியதுதான். இருந்தாலும், அந்தக் கோபத்தின்
உச்ச கட்டத்தில் பட்டென்று பக்கத்தில் இருக்கும், இரும்பு மடக்கு நாற்காலியை
எடுத்துத் தனக்குக் கோபத்தை உண்டாக்கியவனின் மண்டையில் அடிக்கும் செயலை
என்ன என்பது?

முதல் நிலை - அதாவது கோபம் உண்டாகும் மனநிலை மனகாரகன் சந்திரனால்
உண்டாவது. ஆனால் அந்த கோபம் தூண்டப்பட்டு அது வன்முறையாக
மாறுவதற்கு ராகுவே காரணம்.

அதோடு மட்டுமல்ல, இன்னும் ஒரு வித்தியாசத்தைச் சொல்கிறேன் பாருங்கள்.

நமக்குப் பல விதமான மன உணர்வுகள் இருப்பது இயற்கையே. ஆனால் அது
தூண்டப்படுவது இயற்கையல்ல! விரும்பத்தக்கதல்ல! அது தூண்டப்படும்போது,
மனிதனுக்கு மன அழுத்தங்கள் ஏற்பட்டுத் துன்பத்தை உண்டாக்கும்
(It is called as mental stress created by emotional imbalance)

ஒரு சம்பவம்: ஆசையாக வளர்த்த இளம் பெண் ஒருத்தி தனக்குப் பிடித்தவனுடன்
ஓடி விடுகிறாள். தன்னைப் பெற்றவர்களிடம் சொல்லாமல் காதலனுடன் ஓடிவிடுகிறாள்.

யாரும் அதை ஜஸ்ட் லைக் தட் என்று எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சில வீடுகளில்,
மனம் புழுங்கி வெட்கப்பட்டுக் கூனிக் குறுகி, அதை வெளியே சொல்லாமல் விட்டு
விடுவார்கள். போனவள் போகட்டும். எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று
விட்டு விடுவார்கள்,

வேறு சிலர் அதைச் சும்மா விடமாட்டார்கள் காவல் நிலையம்வரை சென்று புகார்
கொடுத்து, அவளைத் தேடிப் பிடிக்க ஏற்பாடு செய்வர்கள்.

இன்னும் சிலர், சினிமாவில் வருவதைப் போல குவாலிஸ் கார், ஆட்கள், சவுக்குக்
கட்டைகள் சகிதமாகச் சென்று, ஓடிச் சென்றவர்களைத் தேடிப்பிடித்து, காதலனின்
மண்டையில் இரண்டு போடு போட்டு, படுக்க வைத்துவிட்டு, பெண்ணை மீட்டுக்
கொண்டு வந்து விடுவார்கள்.

அதன் முடிவு - அதாவது அந்தப் பெண்ணின் முடிவு எப்படி வேண்டுமென்றாலும்
இருக்கட்டும், மண்டையில் அடித்து விட்டு வந்த கோபத்தைப் பாருங்கள்.
அந்தச் செயலைச் செய்ய வைத்தவன் ராகுவாகத்தான் இருப்பான்.
--------------------------------------------------------------------------------------------------------
ராகுவைப் பற்றிய பாடத்தின் நான்காம் பகுதி இது!

சில குறிப்பிட்ட ராசிகளில் ராகு இருப்பதற்கான பலன்கள்:
1
மேஷத்தில் ராகு
ஜாதகன் தன்னுடைய செயல்களை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யக்கூடியவன்.
சாதக பாதகங்களை, விளைவுகளை சிந்தித்துச் செய்வான்.மற்றவர்களிடம் பண்பாக நடந்து
கொள்வான். ஜாதகன் செயல்களில் ஆர்வமுள்ளவனாக இருப்பான்.

2.
ரிஷபத்தில் ராகு
ஜாதகன் மனதின் தன்மையை உணர்ந்தவன். கட்டுப்படுத்தாமல் விட்டால் அது எங்கே
கொண்டுபோய் நிறுத்தும் என்பதை அறிந்தவன். வாழ்க்கையின் முடிவையும், இடையில்
வரும் ஏற்றத்தாழ்வுகளையும் நன்கு உணர்ந்தவன்.மனதை ஜாதகன் இழுப்பானே தவிர
மனம் ஜாதகனைத் தன் வழியில் இழுத்துக் கொண்டு போக முடியாது.
emotions could not pull him!

3.
மிதுனத்தில் ராகு
ஜாதகன் கொள்கைகள், குறிக்கோள்கள், நம்பிக்கைகளை உடையவன்.உணர்வுகள்
சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள மாட்டான்.அதாவது கண்ணை மூடிக்கொண்டு
எதையும் செய்ய மாட்டான். பல சோதனை, யோசனைகளுக்குப் பிறகே ஒரு செயலைச்
செய்வான். ராகு அமரும் வீடு புத்திநாதனுடைய வீடு என்பதை மனதில் கொள்க.
பாடம் எளிதில் புரியும்

4.கடகத்தில் ராகு
ராகுவிற்கு ஒரு சிரமமான் இடம் இது. மனகாரகன் சந்திரனின் வீடு இது. மனகாரகன்
சந்திரன் வலுவாக இருந்தால். ஜாதகன் மனக்கட்டுப்பாடுகள் மிகுந்தவன். உணர்வுகள்
தூண்டப்பட்டாலும், அதைக் கட்டுப்படுத்திக்கொள்ளக்கூடிய தன்மை இருக்கும்

அந்தக் குறிப்பிட்ட ராசிகள் இந்த நான்கு மட்டுமே!
====================================================================
ராகுவிற்கும் கேதுவிற்கும் சொந்த வீடு கிடையாது. இருக்கும் வீட்டில் இருவரும்
நாட்டாமை செய்வார்கள். அதாவது இருக்கும் வீட்டில் அதிகாரம் செய்வார்கள்.
எல்லாத் திறவுகோள்களையும் கையில் எடுத்து வைத்துக்கொள்வார்கள். அந்த
வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பார்கள்.
கையையும் காலையும் மடக்கிவைத்துக் கொண்டு சும்மா இருப்பார்கள். ஆனாலும்
அவர்களுடைய சொந்தக் குணம் போகுமா? அதெப்படிப்போகும்?

தத்தமது தசாபுத்திகளில் சேட்டைகளைச் செய்வார்கள். லூட்டி அடிப்பார்கள்.
தங்கியிருக்கும் வீட்டிற்கு நேர் எதிரான பலன்களைத் தந்து ஜாதகனை அவஸ்தைக்கு
உள்ளாக்குவார்கள்.

ராகு சனியைப் போன்று பலன்களைத் தரக்கூடியவர். கேது செவ்வாயைப் போன்று
பலன்களைத் தரக்கூடியவர்.

அவர்களுக்கு சொந்த நாளும் கிடையாது.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி அகிய ஏழு கிரகங்களுக்கும்
ஞாயிறு முதல் சனிக்கிழமைவரை ஏழு நாட்கள் தனித்தனியாக சொந்த நாட்கள் உண்டு!

ராகுவிற்கும் கேதுவிற்கும் சொந்த நாட்கள் கிடையாது.

ஆனால் சொந்த நேரம் உண்டு. தினமும் ஒன்றரை மணி நேரம் ராகுவிற்கும், ஒன்றரை
மணி நேரம் கேகுவிற்கும் உரியதாகும், உதாரணத்திற்கு, திங்கட்கிழமை காலை 7:30
மணி முதல் 9:00 வரை உள்ள நேரம் ராகுவிற்கு உரிய காலம் ஆகும். அந்த
நேரத்தில் செய்யும் முக்கியமான செயல்கள் நல்ல பலனைத் தராது. ஆகவே அதைத்
தவிர்த்துவிடுவார்கள்.

அதுபோல தினமும் ராகுவிற்கு உரிய நேரம் ராகு காலம் என்றும் கேதுவிற்கு உரிய
நேரம் எமகண்டம் என்றும் அறியப்படும். அதன் விவரத்தைக் கீழே அட்டவணையாகக்
கொடுத்துள்ளேன்========================================================
எல்லாக் கிரகங்களுக்கும் பகலில்தான் பலம் அதிகம். அல்லது பகலில்தான் அதிக பலனைக்
கொடுக்கும் என்று மனிதன் நம்பினான். அதனால்தான் எல்லா சுபக்காரியங்களையும்
பகலில் செய்தான்.

சுபமுகூர்த்த நாட்களில்கூட ராகு/கேது நேரத்தில், திருமணச் சடங்குகளைச் செய்ய மாட்டார்கள்
அந்த நேரத்திற்கு முன்பாக, அல்லது பின்பாகவே செய்வார்கள்.

செய்தால் என்ன ஆகும்? செய்து பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லது முன்னோர்கள்
சொல்லியதை நம்புங்கள். அது உங்கள் விருப்பம்!
---------------------------------------------------------------------------------------------------------------
ராகு உணர்வுகளைத் தூண்டக்கூடியவன். எனவே ராகுவுடன் அமரும் கிரகங்களூம்
சேர்ந்து ஜாதகனின் மன முதிர்வு இன்மையையே வெளிப்படுத்தும்
Planets conjoined Rahu will likely be expressed with immaturity,
as is the nature of Rahu.

கேதுவுடன் சேர்ந்திருக்கும் கிரகம் மன முதிர்ச்சியை வெளிப்படுத்தும்
Planets conjoined Ketu will likely have maturity and refinement to their
expression

ராகு பொதுவாக தன்னுடன் சேர்ந்திருக்கும் கிரகத்தின் தன்மையை அதிகப் படுத்துவான்
அதோடு அந்தக் கிரகங்களுக்கு உரிய பலன்கள் மறைமுகமாகவோ அல்லது
வெளிப்படையாகவோ நம்மை வந்து அடைவதற்கு ராகு தூண்டுகோலாக
விளங்குவான்.
---------------------------------------------------------------------------------------------
சனி
ராகுவுடன் சனி சேர்ந்து ஒன்றாக இருந்தால் என்ன ஆகும்?

சில விஷயங்களில் துரதிர்ஷ்டம்தான். பொதுவாக நல்லதல்ல!
வீட்டில் ஒரு பையன் துஷ்டனாக இருந்தாலே கஷ்டம். இரண்டு பையன்கள்
சேர்ந்து துஷ்டத்தனத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது?
கஷ்டமோ கஷ்டம்.

ஜாதகன் சோதனைமேல் சோதனை என்று பாடும் ஆசாமியாக இருப்பான்

என்ன சோதனை என்று பார்ப்போம் வாருங்கள்!
----------------------------------------------------------------------------------------
1ல்
சனியும் ராகுவும் 1ல்
ராகுவுடன் சனி சேர்ந்து ஒன்றாக லக்கினத்தில் இருந்தால் என்ன ஆகும்?

இப்படி அமைப்பில் பிறந்த குழந்தை பத்து வயதிற்குள் உயிரைவிடும்
அபாயம் உண்டு. லக்கினாதிபதி வலுவாக இருந்தால் தப்பிப்பிழைக்கும்.
தப்பினாலும், வலிப்பு, இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்கள்
உண்டாகலாம்.
---------------------------------------------------------------------------------------
2ல்
சனியும் ராகுவும் 2ல்
தீராத பணக்கஷ்டம்
பணத்தைத் தவிர வேறு சிந்தனையில்லாத வாழ்க்கை.
நாக்கை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் எதையாவது பேசித் தொலைத்து
பெயரைக் கெடுத்துக் கொள்ளும் தன்மை
குடும்பத்தில் கலகம். முதலில் பெற்றோர்களுடன். பிறகு வந்தவளுடன்.
அதாங்க மனைவியுடன்!
-----------------------------------------------------------------------------------------
3ல்
சனியும் ராகுவும் 3ல்
அதிரடியான ஆள். வாய்ப்புக் கிடைத்தால் சவுக்குக் கட்டை, அறிவாள்
என்று கையில் தூக்கும் ஆசாமி.
உடன்பிறப்புக்களுடன் வம்பு, வழக்கு, கோர்ட், என்று பாதி வாழ்க்கை,
விவகாரங்களில் தீர்ந்துவிடும்

நீதிமன்றங்களில் இப்போது நல்ல canteenகள் இருப்பது ஜாதகனுக்கு
ஆறுதலான விஷயம்!:-)))))))
--------------------------------------------------------------------------------------------
4ல்
சனியும் ராகுவும் 4ல்
ஜாதகன் வீட்டை விட்டு வெளியேறிவிடுவான் அல்லது வெளியேற்றப்படுவான்
நாடோடியாகத் திரிய வேண்டியதிருக்கும்.
ஜாதகன் அவனுடைய தந்தையைத்தான் முதல் எதிரியாக நினைப்பான்.
--------------------------------------------------------------------------------------------
5ல்
சனியும் ராகுவும் 5ல்
ஜாதகனுக்கு அவனுடைய குழந்தைகளால் சல்லிக்காசுகூட பயன் இருக்காது
இவனால் அவன் குழந்தைகளுக்கும் பயன் இருக்காது.
என்னவொரு கொடுமைடா சாமி!
ஜாதகனுக்கு நிலையான மனம், செயல்கள் இருக்காது.
------------------------------------------------------------------------------------------
6ல்
சனியும் ராகுவும் 6ல்
ஜாதகன் அடிக்கடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவான்
பசியால் அல்ல! வலியால்! அவன் தலைமுடியைவிடக் கடன்கள் அதிகமாக
இருக்கும்!
------------------------------------------------------------------------------------------
7ல்
சனியும் ராகுவும் 7ல்
ஜாதகனுக்கு அரைக் கிழவனான பிறகு திருமணம் நடக்கும். அதாவது
நாற்பது வயதிற்கு மேல் திருமணம் நடக்கும். சிலருக்கு கடைசிவரை
திருமணம் நடக்காது!

பெண்களுக்கு?
முதிர் கன்னியான பிறகு நடைபெறும்!

பெண், ஜென்மம், பாவம் சாமி, எந்த வயதானால் என்ன? எப்படியோ திருமணம்
நடைபெற்றால் சரிதான்.

அவள் கழுத்தில் விழும் முதல் மாலை அவள் இறந்த பிறகு போடப்பட்டதாக
இருக்கக் கூடாது:-(((((

பெண் எனப்பட்டவள், ஒரு கண நேரமாவது, ஒரு ஆடவனின் அணைப்பில்
சுகப்பட்டுவிட்டுத்தான் இறக்க வேண்டும். இல்லையென்றால் அவள் ஜென்மம்
கடைத் தேறாது.
-------------------------------------------------------------------------------------------
8ல்
சனியும் ராகுவும் 8ல்
பல கண்டங்கள், பல அபாயங்கள், பல விபத்துக்கள் என்று காத்துக்
கொண்டிருக்கும். ஜாதகர் தினமும் இறைவழிபாடு செய்வது ஒன்றுதான்
அதற்குப் பரிகாரம். இறைவன் கருணைமிக்கவர். அவனைக் காப்பாற்றுவார்.
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போகும்!
-------------------------------------------------------------------------------------------
9ல்
சனியும் ராகுவும் 9ல்
ஜாதகன் தர்மகாரியங்களில் ஈடுபடுவதாகக் காட்டி நிறைய வசூல் செய்வான்.
பலரையும் ஏமாற்றி வசூல் செய்யும் பணத்தில் சொகுசாக வாழ்வான்.
கடைசியில் தர்ம அடி வாங்க நேரிடும்

தர்மப் பணம் & தர்ம அடி, நல்ல காம்பினேஷன் இல்லையா?:-))))))
-------------------------------------------------------------------------------------------
10ல்
சனியும் ராகுவும் 10ல்
++++++++ஜாதகன் ஆராய்ச்சியாளனாக உயர்ந்து, பல வழிகளிலும்
சிறப்படைவான். சிலர் வண்டி, வாகனங்களை வைத்து ஜீவிக்கும் தொழிலில்
ஈடுபடுவார்கள்.

சிலருக்கு வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக இருக்கும். ஒரு வருடம்
காரில் பறப்பான். அடுத்த வருடமே கஷ்டத்தில் காரை விற்றுவிட்டு சைக்கிளில்
பயணிப்பான். அதற்கு அடுத்த வருடம் மோட்டார் சைக்கிளில் செல்வான்
மீண்டும் சைக்கிளுக்குத் திரும்புவான். அப்படியே அவனுடைய வாழ்க்கை
சைக்கிள் (Life Cycle) இருக்கும்
---------------------------------------------------------------------------------------------------
11ல்
+++++++++சனியும் ராகுவும் 11ல்
ஜாதகனுக்குத் தலைமை அந்தஸ்து கிடைக்கும், நிறுவனங்கள் என்றால்
Team Leader to Chief Executive வரை ஏதாவது ஒன்றில் தலைமைப் பொறுப்பில்
இருப்பான். அல்லது அந்த நிலைக்கு உயர்வான்.

கிராமமாக இருந்தால் நாட்டமையாகவும், நகரமாக இருந்தால் நகராட்சித்
தலைவராகவும், அரசியலாக இருந்தால் அறியப்பட்ட கட்சித்தலைவராகவும்
ஜாதகன் இருப்பான்.

உயர்வான நிலையில் இருப்பான், அல்லது அந்த நிலையை எட்டிப் பிடிப்பான்.

திரைத்துறை என்றால் ஏதாவது ஒரு அமைப்பில் தலவராக இருப்பான்.
அங்கேதான் நடிகர் சங்கத்தில் துவங்கி, தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள்
சங்கம் என்று ஏகப்பட்ட அமைப்புக்கள் இருக்கின்றனவே!
--------------------------------------------------------------------------------------------------------
12ல்
சனியும் ராகுவும் 12ல்

பெண்ணாக இருந்தால், தன்னை விட மிகவும் வயதில் மூத்தவரைத் திருமணம்
செய்துகொள்ள நேரிடும்

ஆடவனாக இருந்தால் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை மணந்து கொள்வான்
அல்லது தன்னைவிட வயதில் மூத்த பெண்ணுடன் தகாத உறவு வைத்திருப்பான்
அதைச் சந்தோஷமாகவும் வைத்திருப்பான். ரகசியமாகவும் வைத்திருப்பான்
--------------------------------------------------------------------------------------------------------
ராகுவுடன் செவ்வாய்

Rahu association with Mars leaves the native feeling stress,
since he uses the personal will and strength.
This native will be engaged in power struggles of all sorts.
Arguments, impulsiveness and a hostile nature will be likely.

ராகுவுடன் செவ்வாய் சேர்ந்து இருக்கும்போது அதற்கு உண்டான பலன்கள்

ராகுவும் செவ்வாய் சேர்ந்திருப்பது பொதுவாக நல்லதல்ல.

>>>>>>>>>>>>>>இருவரும் சேர்ந்து ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும்,
ஜாதகன் ஒருநாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிடும். அது சின்ன அறுவை
சிகிச்சையா அல்லது பெரிய அறுவை சிகிச்சையா என்பது ஜாதகத்தில் உள்ள
மற்ற கிரகங்களின் அமைப்பைப் பொறுத்துத் தெரியவரும்.
------------------------------------------------------------------------------------------------
1.
ராகுவும் செவ்வாயும் 1ல்

இந்த அமைப்பு ஜாதகரின் லக்கினத்தில் இருந்தால், ஜாதகன் தன் தாய்க்குப்
பல அவஸ்தைகளைக் கொடுக்கப் பிறந்தவராவார்.
------------------------------------------------------------------------------------------------
2.
ராகுவும் செவ்வாயும் 2ல்

இந்த சேர்க்கை இரண்டாம் வீட்டில் இருந்தால், ஜாதகனின் பேச்சு பலரையும்
புண்படுத்தும் விதமாக இருக்கும். வாயைத் திறந்தால் பொய்யாக இருக்கும்.
அதோடு கையில் காசு தங்காது. ஊதாரி.
-------------------------------------------------------------------------------------------------
3.
ராகுவும் செவ்வாயும் 3ல்

இந்த சேர்க்கை மூன்றாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் வெற்றியாளன்.
அடித்துபிடித்துத் தான் செய்யும் செயல்களில் வெற்றியைப் பெற்று விடுவான்.
உடன்பிறப்புக்களுடன், அதாவது சகோதரர்கள், சகோதரிகளுடன் நல்லுறவு
இருக்காது. வம்பு, வழக்குகளாகவே இருக்கும். ஏண்டா தனியாளாகப்
பிறக்கவில்லை என்று ஏங்க வேண்டிய அளவிற்குத் தொல்லைகள் இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------
4.
ராகுவும் செவ்வாயும் 4ல்
இந்த சேர்க்கை நான்காம் வீட்டில் இருந்தால், சுகக் கேடு. ஜாதகன்
ஒழுக்கமில்லாமல் பலபெண்களுடன் நெருக்கமாக இருப்பான். எந்த
விதத்தில் நெருக்கம் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்

இதே அமைப்பில் ஜாதகம் உள்ள பெண்ணும் கேள்விக்குறியவளாகவே
இருப்பாள். அப்படி அமைப்புள்ள பெண்ணின் ஜாதகத்தைப் பார்க்க
நேர்ந்தால், உடனே அவள் நடத்தையைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டாம்!

பெண்களுக்கென்று ஜாதகத்தில் சில சிறப்பு அமைப்புக்கள் உள்ளன.
அதாவது பெண்ணின் உடலில் எத்தனை வளைவுகள், நெளிவுகள்,
சுழிவுகள் உள்ளனவோ அப்படி அவளுடைய ஜாதகத்திலும் பல
வளைவுகள், நெளிவுகள் உள்ளன. அதனால் சில ஜாதகிகள் அதற்கு விதி
விலக்காகவும் இருப்பார்கள். சிலர் நடத்தைகெட்டவர்களாகவும் இருப்பார்கள்.
இரண்டிற்குமே வாய்ப்பு உண்டு.

இந்த அமைப்பு ஜாதகனின் தாய்க்கு நல்லதல்ல!
---------------------------------------------------------------------------------------------
5
ராகுவும் செவ்வாயும் 5ல்
இந்த சேர்க்கை ஐந்தாம் வீட்டில் இருந்தால் ஜாதகனின் புத்தி மழுங்கிவிடும்
Smartness இருக்காது. எப்போதும் ஆசாமி Dull ஆக இருப்பான்.
சிறுவயதிலேயே மனம் கெட்டுவிடும். கெட்டுவிடும் என்றால் என்ன பல
தீய செயல்களுக்கு உட்படுத்தப்பட்டு அல்லது பல தீய செயல்களைச்
செய்து கெட்டுப்போயிருப்பான்.

சிலருக்கு மனநோய் உண்டாகும். ஆறாம் வீட்டுக்காரன் இறங்கி வந்து
இந்த இருவருடன் சேர்ந்தால் ஜாதகனுக்கு நிச்சயம் மனநோய் உண்டாகும்
கீழ்ப்பாக்கத்தில் சேர்க்கும் அளவிற்கு விவரமான மனநோய் உண்டாகும்
------------------------------------------------------------------------------------------------
6
ராகுவும் செவ்வாயும் 6ல்
இந்த சேர்க்கை ஆறாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் Fraud வேலைகளைச்
செய்வான் அல்லது அதுபோன்ற வேலைகளுக்கு உட்படுத்தப் படுவான்

அவன் அடிப்படையில் நல்லவனாக இருந்தால்கூட, இந்த அமைப்பு
சுழ்நிலைகளை ஏற்படுத்தி, அவனை மோசடியான வேலைகளில் ஈடுபடச்
செய்யும்

அப்படி மோசடி வேலைகளில் ஈடுபடுபவர்களில் சிலர், மாட்டிக்கொண்டாலும்
தப்பித்து விடுவார்கள். வேறு சிலருக்குத் தண்டனை கிடைக்கும்.
------------------------------------------------------------------------------------------------
7.
ராகுவும் செவ்வாயும் 7ல்
இந்த சேர்க்கை ஏழாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் அல்லது ஜாதகிக்குக்
கலப்புத் திருமணம் ஏற்படும்.

ஜாதி, மதம் என்று எல்லாவற்றையும் கடாசி விட்டு அல்லது தூர எறிந்து
விட்டு, உருகி உருகிக் காதலித்துத் திருமணம் செய்துகொள்வார்கள்

காதல் என்று இல்லாவிட்டலும், குடும்பச் சூழ்நிலையால் சிலருக்கு அப்படிப்
பட்ட வாய்ப்பு உண்டாகும்
---------------------------------------------------------------------------------------------------
8.
ராகுவும் செவ்வாயும் 8ல்
இது ஆயுள்காரகனின் வீடு. இந்த இருவரின் சேர்க்கை இந்த இடத்தில்
விரும்பத்தக்கதல்ல!

சிலருக்கு தீ விபத்து ஏற்படலாம்.
சிலருக்கு வாகனங்கள், ஆயுதங்கள் அல்லது இயந்திரங்களால் விபத்து
ஏற்படலாம்.
சிலருக்கு பூச்சிக்கடி அல்லது விஷத்தால் ஆபத்து நேரிடலாம்
பூச்சி என்பது இங்கே பாம்பைக் குறிக்கின்றது சாமி. விஷம் என்பது
Poison என்று பொருள் கொள்ளுங்கள்

சில பெண்களுக்குக் கணவனே விஷமாக இருப்பான் அல்லது விஷமம்
பிடித்தவனாக இருப்பான்.. அது இந்தக் கணக்கில் வராது:-))))
-----------------------------------------------------------------------------------------------------
9.
ராகுவும் செவ்வாயும் 9ல்
ஜாதகன் தர்ம, நியாயங்கள், நியதிகள் இல்லாதவன். அவைகள் கிலோ என்ன
விலை, எங்கே கிடைக்கும்? என்று கேட்பான்.

தீய, அறமற்ற வழிகளில் பொருள் சேர்ப்பான். பலர் இன்று அந்த வழியில்
தான் பொருள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் இறைவன் இல்லை என்று சொல்லி, இறைவனுக்கு எதிராகவும், இறை
நம்பிக்கையாளர்களுக்கு எதிராகவும் கொடி பிடிப்பார்கள். ஆனால் போர்டிங்
பாஸ் வாங்குகிற காலம் வந்தவுடன், ரகசியமாக இறைவனை வணங்குவார்கள்
------------------------------------------------------------------------------------------------
10.
ராகுவும் செவ்வாயும் 10ல்

ஜாதகன் எப்படியேனும் பொருள் ஈட்ட முனைவான். பணத்திற்கும், வசதிகளுக்கும்
அந்தஸ்திற்கும் அலைவான். நியாமற்ற வழியாயினும் பரவாயில்லை என்று
காரியங்கள் செய்பவனாக இருப்பான். வேலையில் இருந்தால், தன்னுடைய
மேல் அதிகாரிக்கு அல்லது முதலாளிக்கு அல்லது C.E.O விற்கு கால் அமுக்கிவிடக்
கூடத் தயங்க மாட்டான். மகிழ்ந்து அதைச் செய்வான்

சிலர், மனைவிக்கு கை, கால்களை அமுக்கி விடுபவர்களாக இருப்பார்கள்
(Body Massage) அது இந்தக் கணக்கில் வராது!:-))))
-------------------------------------------------------------------------------------------------
11.
ராகுவும் செவ்வாயும் 11ல்
Best place for this combination. The native will live like a King.
Will have wealth and all the comforts in life. Victory in all undertakings
-----------------------------------------------------------------------------------------------
12.
ராகுவும் செவ்வாயும் 12ல்
Worst place for this combination. The native will lose all the wealth
and reputation.
அவைகள் என்னனென்னவாக இருக்கும் என்று உங்கள் கற்பனை,மற்றும்
அனுமானம் அல்லது முடிவிற்கு விட்டுவிடுகிறேன்
================================================
எனக்கு நன்றாகப் பேசத் தெரியும். நன்றாக எழுத்ததெரியும்.ஆனால்
அதை சரியான இடத்தில் நிறுத்தத் தெரியாது. பிரேக் இல்லாத வண்டி
(Brake less vehicle)

பதிவர் சந்திப்புக்களில் சந்தித்த பல பதிவர்கள் அதைத்தான் சொல்கிறார்கள்
அதோடு அதைப் பதிவாகவும் பலர் எழுதிவிட்டார்கள்.

அதை நீங்களும் - அதாவது வகுப்பறை மாணவர்களும் சொல்லிவிடக்கூடாது
ஆகவே இன்று இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ராகுவைப் பற்றிய மற்ற செய்திகள் அடுத்தடுத்த பாடங்களில் தொடரும்

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

74 comments:

வேலன். said...

ஐயா,

பாடங்கள் அருமை. எனக்கு நான்கில் சந்திரனுடன் ராகு. சரியாக பலன்கள்
போட்டுள்ளீர்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

sridhar said...

Sir,
Very long lesson with accurate informations. today first comment has been mine by god grace.

Namakkal Shibi said...

அருமையான விளக்கங்கள்!

நன்றி!

Namakkal Shibi said...

//today first comment has been mine by god grace//

ஹிஹி! வேலன் முந்திகிட்டாரே!

வேலன். said...

ஐயா,
ராகு காலம் ரமகண்டம் சுலபமாக பார்க்க இந்த பாடல் உதவும்.ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்து அந்தந்த நாளை குறிக்கும்.
முதலில் ராகு கால பாடல்:-
திருவிழா சமயத்தில் வெளியில் புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா?
திருவிழா:-திங்கள் :-07.30 -09.00
சமயத்தி்ல்:-சனி :-09.00 -10.30
வெளியில்:-வெள்ளி -10.30 - 12.00
புறப்பட்டு:- புதன் :-12.00 - 01.30
விளையாட:- வியா :- 01.30 - 03.00
செல்வது:- செவ்வா :- 03.00 - 04.30
ஞாயமா :- ஞர்யிறு :- 04.30 - 06.00

அதுபோல் எமகண்ட பாடல்:-
விடுதலை புலிகள் சென்ற திசையில்
ஞான சம்பந்தன வெளியேறலாமா?
விடுதலை:-வியாழன்:- 06.00-07.30.
புலிகள் :- புதன் :- 07.30-09.00
சென்ற :- செவ்வாய்:- 09.00-10.30
திசையில்:-திங்கள் :- 10.30 - 12.00
ஞான :- ஞாயிறு :- 12.00- 01.30
சம்பந்தன்: சனி :- 01.30 -03.00
வெளியேற:-வெள்ளி:- 03.00 -04.30.
மேற்கண்ட பாடல்களை நினைவுபடுத்தினால் ராகுகாலம் - எமகண்டம் பார்க்க காலண்டர் தேட வேண்டிய அவசியம் இல்லை.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Arulkumar Rajaraman said...

Dear Sir,

All the lessons(Rahu, Saturn and Mars and combination) are good and more Elaborate.

Really this is not a comments. This is your credit(Score) sir.

Thank u

Loving Student
Arulkumar Rajaraman

Namakkal Shibi said...

வேலன்,

அருமையான சூத்திரம்!

மனப்பாடம் செய்து கொள்ள எளிமையாக இருக்கிறது!

நன்றி!

Namakkal Shibi said...

//This is your credit(Score) sir//

பின்னே! வாத்தியார்னா சும்மாவா!

VIKNESHWARAN said...

//2.
ரிஷபத்தில் ராகு
ஜாதகன் மனதின் தன்மையை உணர்ந்தவன். கட்டுப்படுத்தாமல் விட்டால் அது எங்கே
கொண்டுபோய் நிறுத்தும் என்பதை அறிந்தவன். வாழ்க்கையின் முடிவையும், இடையில்
வரும் ஏற்றத்தாழ்வுகளையும் நன்கு உணர்ந்தவன்.மனதை ஜாதகன் இழுப்பானே தவிர
மனம் ஜாதகனைத் தன் வழியில் இழுத்துக் கொண்டு போக முடியாது.
emotions could not pull him!//

ரிஷபத்தில் ராகு நீசம் அல்லவா? அதனால் தீமை இல்லையா... எனக்கு ரிஷபம் இரண்டாம் வீடு... அந்த வீட்டின் தன்மைகள் பாதிப்படையாதா?

N.K.S.Anandhan. said...

ஐயா பாடம் அருமை. ஐயா சிம்மம் முதல் மீனம் வரை ராகு இருப்பதன் பலன்களையும் கூற வேண்டுகிறேன், நன்றி.

BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...

பாடங்கள் அருமை ஐயா!!!!!!!!

krish said...

Sir,
Excellent.

T.V.Radhakrishnan said...

ராகுகாலம் பார்க்க ஆங்கிலத்தில்

Mother saw father with their two sons என்பர்

Mother மண்டே 7.30 - 9.00 திங்கள்


saw சா 9.-10.30 சனி

father ஃபாதர் 10-30-12.00 வெள்ளி

with வித் 12-1.30 புதன்

their தெர் 1.30-3.00 வியாழன்

two டு 3.00-4.30 செவ்வாய்

sons சன்ஸ் 4.30-6.00 ஞாயிறு

hotcat said...

Excellent sir...will come back

-Shankar

Sridhar said...

அய்யா,
அருமையான விளக்கங்கள்.

Combination of planets பற்றிய பாடங்கள், தனியாக ஒரு பகுதியாக விளக்குவீர்கள் என நம்புகிறேன்.

நன்றி,

ஸ்ரீதர் ச

Dr.Vinothkumar said...

thanks sir for the descriptive post.

It is an excellent write up

SP.VR. SUBBIAH said...

////Blogger வேலன். said...
ஐயா,
பாடங்கள் அருமை. எனக்கு நான்கில் சந்திரனுடன் ராகு. சரியாக பலன்கள்
போட்டுள்ளீர்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.////

சரியாக இருந்தால் எழுதிய எனக்கும் மகிழ்ச்சிதான்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger sridhar said...
Sir,
Very long lesson with accurate informations. today first comment has been mine by god grace.//////

இதற்கெல்லாம் கடவுளின் கருணையை வீண் அடிக்கலாமா?:-)))))))))

SP.VR. SUBBIAH said...

//////Blogger Namakkal Shibi said...
அருமையான விளக்கங்கள்!
நன்றி!//////

நன்றி நாமக்கல்லாரே!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Namakkal Shibi said...
//today first comment has been mine by god grace//
ஹிஹி! வேலன் முந்திகிட்டாரே!//////

வேலனை யாரும் முந்தமுடியாது. மயிலில் பறப்பவர் அவர்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger வேலன். said...
ஐயா,
ராகு காலம் ரமகண்டம் சுலபமாக பார்க்க இந்த பாடல் உதவும்.ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்து அந்தந்த நாளை குறிக்கும்.

மேற்கண்ட பாடல்களை நினைவுபடுத்தினால் ராகுகாலம் - எமகண்டம் பார்க்க காலண்டர் தேட வேண்டிய அவசியம் இல்லை.
வாழ்க வளமுடன்,
வேலன்.///////

கேள்விப் பட்டிருக்கிறேன். நினைவில் இல்லை! தகவலுக்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir,
All the lessons(Rahu, Saturn and Mars and combination) are good and more Elaborate.
Really this is not a comments. This is your credit(Score) sir.
Thank u
Loving Student
Arulkumar Rajaraman//////

வித்தியாசமான விமர்சனம். நன்றி ராஜாராமன்.

SP.VR. SUBBIAH said...

/////Blogger Namakkal Shibi said...
வேலன்,
அருமையான சூத்திரம்!
மனப்பாடம் செய்து கொள்ள எளிமையாக இருக்கிறது!
நன்றி!//////

எளிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்!
நன்றி வேலன்!

SP.VR. SUBBIAH said...

///////Blogger Namakkal Shibi said...
//This is your credit(Score) sir//
பின்னே! வாத்தியார்னா சும்மாவா!//////

அடடா, எப்போது மாலை போடுகிறீர்கள், எப்போது சீட்டுக்கு அடியில் குண்டூசி வைக்கிறீர்கள் என்பதே தெரியவில்லை!
அதுதான் உங்களின் சிறப்பு!

SP.VR. SUBBIAH said...

//////Blogger VIKNESHWARAN said...
//2.
ரிஷபத்தில் ராகு
ஜாதகன் மனதின் தன்மையை உணர்ந்தவன். கட்டுப்படுத்தாமல் விட்டால் அது எங்கே
கொண்டுபோய் நிறுத்தும் என்பதை அறிந்தவன். வாழ்க்கையின் முடிவையும், இடையில்
வரும் ஏற்றத்தாழ்வுகளையும் நன்கு உணர்ந்தவன்.மனதை ஜாதகன் இழுப்பானே தவிர
மனம் ஜாதகனைத் தன் வழியில் இழுத்துக் கொண்டு போக முடியாது.
emotions could not pull him!//
ரிஷபத்தில் ராகு நீசம் அல்லவா? அதனால் தீமை இல்லையா... எனக்கு ரிஷபம் இரண்டாம் வீடு... அந்த வீட்டின் தன்மைகள் பாதிப்படையாதா?//////

நீசம் அடைந்தாலும், இயற்கைக்குணம் போகுமா? அது சிறப்பு வீடு. சுக்கிரனின் வீடு. நீசமடைந்ததால் தான் அவரால் இழுத்துக் கொண்டுபோக முடியாது என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது!

SP.VR. SUBBIAH said...

//////Blogger N.K.S.Anandhan. said...
ஐயா பாடம் அருமை. ஐயா சிம்மம் முதல் மீனம் வரை ராகு இருப்பதன்
பலன்களையும் கூற வேண்டுகிறேன், நன்றி./////

எழுதுகிறேன் ஆனந்தன்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
பாடங்கள் அருமை ஐயா!!!!!!!!//////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Blogger krish said...
Sir,
Excellent.///////

நன்றி கிரீஷ்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger T.V.Radhakrishnan said...
ராகுகாலம் பார்க்க ஆங்கிலத்தில்
Mother saw father with their two sons என்பர்
Mother மண்டே 7.30 - 9.00 திங்கள்
saw சா 9.-10.30 சனி
father ஃபாதர் 10-30-12.00 வெள்ளி
with வித் 12-1.30 புதன்
their தெர் 1.30-3.00 வியாழன்
two டு 3.00-4.30 செவ்வாய்
sons சன்ஸ் 4.30-6.00 ஞாயிறு/////

தகவலுக்கு நன்றி டி.வி.ஆர் சார்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger hotcat said...
Excellent sir...will come back
-Shankar/////

நன்றி சங்கர்!

SP.VR. SUBBIAH said...

///////Blogger Sridhar said...
அய்யா,
அருமையான விளக்கங்கள்.
Combination of planets பற்றிய பாடங்கள், தனியாக ஒரு பகுதியாக விளக்குவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி,
ஸ்ரீதர் ச//////

அது பெரிய பாடம் பல பகுதிகளாக வரும். உங்களை விடப் போவதில்லை!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Dr.Vinothkumar said...
thanks sir for the descriptive post.
It is an excellent write up//////

நன்றி டாக்டர். உங்கள் பின்னூட்டம் எனக்கு டானிக் போல! அடிக்கடி டானிக்கைக் கொடுங்கள். உற்சாகமாக எழுத அது உதவும்!

Geekay said...

பாடம் & விளக்கங்கள் அருமை ஐயா!

ஒரு சந்தேகம் அய்யா .
லக்னத்தில் (சிம்மம்) சனி ராகு மற்றும் குரு இருந்தால் எப்படி பலன் பார்ப்பது .

GK, BLR

MarmaYogi said...

Sir
it is really an informatitive one. May god bless you and give you good health, long life and lot of tim to continue your services

N.K.S.Anandhan. said...

ஐயா மிதுனத்தில் ராகு இருப்பதற்கு நீங்கள் கூறிய விளக்கமே கன்னியில் ராகு இருந்தால் அதே போல் பலனா?(ஏனெனில் இரண்டும் புதனின் வீடாயிற்றே) அதே போல் மேஷம்=விருச்சிகம், ரிஷபம்=துலாம் பலன்கள் (ராகு இருப்பதற்கு) பொருந்துமா? ஐயா தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

Namakkal Shibi said...

சீட்டுக்கடியில் குண்டூசியா?

வைக்கணும்னு முடிவு பண்ணிட்டா இவ்ளோ சின்னதாவா நினைப்பேன்!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் னு வள்ளுவரே சொல்லி இருக்காரே!

பாரதிய நவீன இளவரசன் said...

மிக எளிமையான முறையில் விளக்கியுள்ளீர்கள்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

VIKNESHWARAN said...

வருகைப் பதிவேட்டில் எனது பெயரை காணலை... :(((

SP.VR. SUBBIAH said...

/////Blogger Geekay said...
பாடம் & விளக்கங்கள் அருமை ஐயா!
ஒரு சந்தேகம் அய்யா .
லக்னத்தில் (சிம்மம்) சனி ராகு மற்றும் குரு இருந்தால் எப்படி பலன் பார்ப்பது .
GK, BLR/////

இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் ராசியில் இருப்பது நல்லதல்ல. அது கிரகயுத்தம், அஸ்தமணம் ஆகிய கணக்கில் வரும். அது பெரிய பாடம். பின்னால் ஒரு தலைப்பில் அவைகள் வரும். சற்றுப் பொறுமையாக இருக்க வேண்டுகிறேன்.

SP.VR. SUBBIAH said...

/////Blogger MarmaYogi said...
Sir
it is really an informatitive one. May god bless you and give you good health, long life and lot of tim to continue your services/////

ஆகா, நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள். நன்றி யோகியாரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger N.K.S.Anandhan. said...
ஐயா மிதுனத்தில் ராகு இருப்பதற்கு நீங்கள் கூறிய விளக்கமே கன்னியில் ராகு இருந்தால் அதே போல் பலனா?(ஏனெனில் இரண்டும் புதனின் வீடாயிற்றே) அதே போல் மேஷம்=விருச்சிகம், ரிஷபம்=துலாம் பலன்கள் (ராகு இருப்பதற்கு) பொருந்துமா? ஐயா தவறாக இருந்தால் மன்னிக்கவும்./////

அப்படித்தான்! ஆனாலும் சூரியன், குரு, சனி ஆகியவைகள் மூன்றும் பாக்கி நிற்கும் அடுத்த பதிவில் நானே எழுதுகிறேன்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Namakkal Shibi said...
சீட்டுக்கடியில் குண்டூசியா?
வைக்கணும்னு முடிவு பண்ணிட்டா இவ்ளோ சின்னதாவா நினைப்பேன்!
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு வள்ளுவரே சொல்லி இருக்காரே!///////

வள்ளுவர் சொன்னதில் அதையாவது கடைப்பிடியுங்கள்:-)))))

SP.VR. SUBBIAH said...

//////Blogger பாரதிய நவீன இளவரசன் said...
மிக எளிமையான முறையில் விளக்கியுள்ளீர்கள்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Blogger VIKNESHWARAN said...
வருகைப் பதிவேட்டில் எனது பெயரை காணலை... :(((/////

Regular Visitors of my Blog' என்று சைடு பாரில் 110 பெயர்கள் இருக்கிறது பாருங்கள் அதுதான் வருகைப் பதிவேடு. அதில் உங்கள் பெயரை நான் நுழைக்க முடியாது. நீங்கள்தான் உங்கள் ப்ளாக்கர் கணக்கில் உள்ள godjet மூலம் வகுப்பறையின் சுட்டியை URL:// classroom2007.blogspot.com உள்ளிட்டுப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் அப்படித்தான் செய்துள்ளார்கள். நீங்களும் செய்து கொள்ளுங்கள்! அதுதான் வருகைப் பதிவேடு. நீங்கள் சுட்டியை அங்கே உள்ளிட்ட மறுநிமிடம் இங்கே உங்கள் பெயர் கண்ணில் படும்!

மிஸ்டர் அரட்டை said...

Unrelated to the subject..

In one TV program today, the astrologer was telling "Rahu Mahadasa is a learning period not a earning period".

Then which maha dasa will be the earning period?

Thanks
Damodar

maadhu said...

dear sir,
detailed description.... superb

Sridhar said...

அய்யா,

எனக்கு ஒரு சந்தேகம்.

**** எல்லாக் கிரகங்களுக்கும் பகலில்தான் பலம் அதிகம். அல்லது பகலில்தான் அதிக பலனைக் கொடுக்கும் என்று மனிதன் நம்பினான். அதனால்தான் எல்லா சுபக்காரியங்களையும் பகலில் செய்தான்
*****
சில தெலுங்கு பேசும் நண்பர்கள், தாங்கள் வீட்டு கல்யாண வைபவத்தை, இரவு நேரத்தில் வைத்து தாலி கட்டும் சடங்கை செய்கிறார்களே?

நன்றி,

ஸ்ரீதர் S

maadhu said...

"8ல்
சனியும் ராகுவும் 8ல்
பல கண்டங்கள், பல அபாயங்கள், பல விபத்துக்கள் என்று காத்துக்
கொண்டிருக்கும். ஜாதகர் தினமும் இறைவழிபாடு செய்வது ஒன்றுதான்
அதற்குப் பரிகாரம். இறைவன் கருணைமிக்கவர். அவனைக் காப்பாற்றுவார்.
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போகும்!"

i have not only raghu and sani in my 8th place also sukiran and chandran (simha lakkinam). also now sukra dasa raghu bukthi.

as you said i am suffering. but not worried about me. but worrying the problems of my dependants.

SP.VR. SUBBIAH said...

//////Blogger மிஸ்டர் அரட்டை said...
Unrelated to the subject..
In one TV program today, the astrologer was telling "Rahu Mahadasa is a learning period not a earning period".
Then which maha dasa will be the earning period?
Thanks
Damodar////

பொதுப்பலன்: குரு மகாதிசையையும், சுக்கிரதிசையையும் earning period எனலாம்
தனிப்பட்ட ஜாதகப் பலன்: 11ஆம் அதிபதியின் மகா தசாபுத்தி செல்வத்தைக் கொடுக்கும்

SP.VR. SUBBIAH said...

////Blogger maadhu said...
dear sir,
detailed description.... superb////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Sridhar said...
அய்யா,
எனக்கு ஒரு சந்தேகம்.
**** எல்லாக் கிரகங்களுக்கும் பகலில்தான் பலம் அதிகம். அல்லது பகலில்தான் அதிக பலனைக் கொடுக்கும் என்று மனிதன் நம்பினான். அதனால்தான் எல்லா சுபக்காரியங்களையும் பகலில் செய்தான்
***** சில தெலுங்கு பேசும் நண்பர்கள், தாங்கள் வீட்டு கல்யாண வைபவத்தை, இரவு நேரத்தில் வைத்து தாலி கட்டும் சடங்கை செய்கிறார்களே?
நன்றி,
ஸ்ரீதர் S////

எனக்கும் நிறைய தெலுங்கு நண்பர்களின் தொடர்பு உண்டு (வியாபாரம் மூலம்) இரவு 12:00, 1:00 மணிகெல்லாம் முகூத்தம் வைப்பார்கள். அதேபோல சனிக்கிழமைகளில் திருமணத்தை நடத்துவார்கள். அதெல்லாம் எனக்கு வினோதமாக இருக்கும்
காரணம் கேட்டால், நாங்கள் திருப்பதி பாலாஜியின் பக்தர்கள். அவருக்கு சனிக்கிழமை உகந்த நாள் என்பார்கள்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger maadhu said...
"8ல்
சனியும் ராகுவும் 8ல்
பல கண்டங்கள், பல அபாயங்கள், பல விபத்துக்கள் என்று காத்துக்
கொண்டிருக்கும். ஜாதகர் தினமும் இறைவழிபாடு செய்வது ஒன்றுதான்
அதற்குப் பரிகாரம். இறைவன் கருணைமிக்கவர். அவனைக் காப்பாற்றுவார்.
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போகும்!"
i have not only raghu and sani in my 8th place also sukiran and chandran (simha lakkinam). also now sukra dasa raghu bukthi. as you said i am suffering. but not worried about me. but worrying the problems of my dependants./////

ஜோதிடத்தைவிட இறைவன் சக்தி வாய்ந்தவன். இறைவனை வணங்குங்கள். அவர் பார்த்துக்கொள்வார்!

கெக்கே பிக்குணி said...

பாடங்களைப் படித்து கொண்டிருக்கிறேன். மிகுந்த விவரங்களுடன் சிரத்தையாக எழுதுவதற்கு மிக்க நன்றி!

ராகு காலம் ஊருக்கு ஊர் - அதாவது சூரியோதயம்/அஸ்தமனம் நேரம் குறித்தது. மேல் விவரங்களுக்கு க்ளிக்கவும்.
நீங்கள் இருக்கும் ஊரைப் பொறுத்து, ராகு காலம் கணிக்க க்ளிக்கவும்

SP.VR. SUBBIAH said...

////Blogger கெக்கே பிக்குணி said...
பாடங்களைப் படித்து கொண்டிருக்கிறேன். மிகுந்த விவரங்களுடன் சிரத்தையாக எழுதுவதற்கு மிக்க நன்றி!
ராகு காலம் ஊருக்கு ஊர் - அதாவது சூரியோதயம்/அஸ்தமனம் நேரம் குறித்தது. மேல் விவரங்களுக்கு க்ளிக்கவும்.
நீங்கள் இருக்கும் ஊரைப் பொறுத்து, ராகு காலம் கணிக்க க்ளிக்கவும்//////

வாருங்கள் சகோதரி! உங்கள் பாராட்டிற்கும், தகவலுக்கும் நன்றி!

இராசகோபால் said...

பாடம் அருமை.

அன்புடன்
இராசகோபால்

senthil said...

அருமையான செய்திகள்.

நன்றிகள் பல.

தவறாது வ‌குப்பறைக்கு வந்து செல்கிறறேன். ஆனால், காலமின்மையால் பின்னூட்டம் எழத இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.

விடுமுறையில் அடுத்த வாரம் கோவை வருகிறேன். தாங்கள் வாய்ப்பளித்தால் சந்திக்க விரும்புகிறேன்.

அனும‌தியை ஆவ‌லுட‌ன் எதிர் நோக்கும்,

அன்புட‌ன்,

செந்தில் முருக‌ன்.வே

SP.VR. SUBBIAH said...

///Blogger இராசகோபால் said...
பாடம் அருமை.
அன்புடன்
இராசகோபால்//////

நன்றி கோபால்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger senthil said...
அருமையான செய்திகள்.
நன்றிகள் பல.
தவறாது வ‌குப்பறைக்கு வந்து செல்கிறறேன். ஆனால், காலமின்மையால் பின்னூட்டம் எழத இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.
விடுமுறையில் அடுத்த வாரம் கோவை வருகிறேன். தாங்கள் வாய்ப்பளித்தால் சந்திக்க விரும்புகிறேன்.
அனும‌தியை ஆவ‌லுட‌ன் எதிர் நோக்கும்,
அன்புட‌ன்,
செந்தில் முருக‌ன்.வே//////

எனக்கு மாணவக் கண்மணிகள் அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளது. பாடங்கள் முடியட்டும். ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்கிறேன். அனைவரும், அப்போது ஒன்றாகச் சந்திப்போம்!

படித்துறை.கணேஷ் said...

ராகு பகவானின் ராஜாங்கத்தை ரசிக்கும் வகையில் பாடம் எடுக்கும் வாத்தியாருக்கு வந்தனங்கள்

Sabarinathan Arthanari said...

ஐயா,

தங்களது அருமையான விளக்கங்களுக்கு நன்றிகள்.

நான் ஒரு சிறு முயற்சியாக இந்தியாவின் தற்போதைய நிலை பற்றி இடுகைகள் இட்டுள்ளேன்.

இந்தியாவின் ஜாதகமும், வரலாறும்: சோதிட ஆதாரங்கள்

இந்தியாவின் ஜாதகமும், நிகழ்கால சூழ்நிலைகளும்: சோதிட ஆதாரங்கள்-2

தங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறேன்.

நன்றி,
சபரிநாதன்.

DevikaArul said...

ஐயா,சில காலமாக too much work pressure .. அதனால் வகுப்புப் பாடங்களை வகுப்பு நேரம் கழிந்தே படிக்க முடிந்தது.. ஆனால் ராகுவை பற்றிய விவரங்கள் மிக அருமை !

லேட் ஆக வந்தாலும் , பாடத்தை ஒரு போதும் மிஸ் செய்வதில்லை.

இத்தனை வேலைகளின் இடையிலும் இடைவிடாது வகுப்புகளை நடத்துகிறீர்கள் ! உங்கள் பணி மிகவும் பாராட்டிற்குறியது !
தங்கள் நேரத்தை இது போல் எமக்காக செலவிடுவதற்கு மிக்க நன்றி !!

SP.VR. SUBBIAH said...

/////Blogger படித்துறை.கணேஷ் said...
ராகு பகவானின் ராஜாங்கத்தை ரசிக்கும் வகையில் பாடம் எடுக்கும் வாத்தியாருக்கு வந்தனங்கள்/////

வாய்க்கு ருசிக்கும்படியாக சமைக்க வேண்டும்
வாசிப்பிற்கு ரசிக்கும்படியாக எழுத வேண்டும்!:-)))))

நன்றி கணேஷ்!

SP.VR. SUBBIAH said...

Blogger Sabarinathan Arthanari said...
ஐயா,
தங்களது அருமையான விளக்கங்களுக்கு நன்றிகள்.
நான் ஒரு சிறு முயற்சியாக இந்தியாவின் தற்போதைய நிலை பற்றி இடுகைகள் இட்டுள்ளேன்.
இந்தியாவின் ஜாதகமும், வரலாறும்: சோதிட ஆதாரங்கள்
இந்தியாவின் ஜாதகமும், நிகழ்கால சூழ்நிலைகளும்: சோதிட ஆதாரங்கள்-2
தங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறேன்.
நன்றி,
சபரிநாதன்./////

பார்த்தேன்.பின்னூட்டமும் இட்டுள்ளேன் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Blogger DevikaArul said...
ஐயா,சில காலமாக too much work pressure .. அதனால் வகுப்புப் பாடங்களை வகுப்பு நேரம் கழிந்தே படிக்க முடிந்தது.. ஆனால் ராகுவை பற்றிய விவரங்கள் மிக அருமை !
லேட் ஆக வந்தாலும் , பாடத்தை ஒரு போதும் மிஸ் செய்வதில்லை.
இத்தனை வேலைகளின் இடையிலும் இடைவிடாது வகுப்புகளை நடத்துகிறீர்கள் ! உங்கள் பணி மிகவும் பாராட்டிற்குறியது! தங்கள் நேரத்தை இது போல் எமக்காக செலவிடுவதற்கு மிக்க நன்றி !!/////

தங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

dubai saravanan said...

"ராகு தன்னுடன் சேர்த்திருக்கும் கிரகத்தின் தன்மையை அதிதப்பத்துவான் அதோடு அந்த கிரகங்களுக்கு உரிய பலன்கள் மறைமுகமாகவோ அல்லது வெளிபடையகவோ நம்மை வந்து அடைவதற்கு ராகு தூண்டுகோலாக விளங்குவான்"

ஐயா பாடங்கள் அருமை
சிறிய சந்தேகம்

சனி லக்னதிபதியாக இருந்தால் நன்மையே செய்வார்
அப்போது சனியுடன் ராகு சேரும் பொழுது நன்மையான பலன்களே கிடைக்குமா?
ராகு அவருக்கு பகை வீடான சிம்மத்தில் இருந்தால் தீமைகள் குறையுமா ?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாத்தியாரே..

எனக்கு பத்தில் ராகு தனித்து நின்று ஆட்டிப் படைக்கிறான்..

என்னதான் செய்யணும்கிறான்.. கேட்டுச் சொல்லுங்களேன்..

SP.VR. SUBBIAH said...

/////Blogger dubai saravanan said...
"ராகு தன்னுடன் சேர்த்திருக்கும் கிரகத்தின் தன்மையை அதிகப்பத்துவான் அதோடு அந்த கிரகங்களுக்கு உரிய பலன்கள் மறைமுகமாகவோ அல்லது வெளிபடையகவோ நம்மை வந்து அடைவதற்கு ராகு தூண்டுகோலாக விளங்குவான்"
ஐயா பாடங்கள் அருமை
சிறிய சந்தேகம்
சனி லக்னதிபதியாக இருந்தால் நன்மையே செய்வார்
அப்போது சனியுடன் ராகு சேரும் பொழுது நன்மையான பலன்களே கிடைக்குமா?
ராகு அவருக்கு பகை வீடான சிம்மத்தில் இருந்தால் தீமைகள் குறையுமா ?//////

ராகு எங்கே இருந்தாலும் அடக்கமாக இருந்து அவனுடைய தசா அல்லது புக்திக் காலத்தில் (In major dasa or in his sub period) தீய பலன்களைக் கொடுப்பான். நம்முடைய பல செயல்கள் தாமதமாகும் அல்லது கெட்டுப் போகும்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாத்தியாரே..
எனக்கு பத்தில் ராகு தனித்து நின்று ஆட்டிப் படைக்கிறான்..
என்னதான் செய்யணும்கிறான்.. கேட்டுச் சொல்லுங்களேன்..///////

பத்தில் இருக்கும் ராகுவைப் பந்தாடும் காலம் சீக்கிரம் வரும்! பழநி அப்பனை வேண்டிக்கொள்ளுங்கள்!
உண்மைத் தமிழரே!

DevikaArul said...

ஐயா , ராகுவை பற்றியும் , மற்ற சில doubட் களுடனும் தங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பியுள்ளேன்.. தாங்கள் கணிவு கூர்ந்து சமயம் கிட்டும் போது விளக்கம் தர வேண்டுகிறேன்.

தியாகராஜன் said...

ராகு கால பாடல்:-
இதுவும் இருக்கிறது.

"தினமும் சரியாக வெளியே போனால் வியாதி செத்ததடா ஞாராயணா"

ஒவ்வொரு நாளையும் 1.5 மணியால் பெருக்கி அத்துடன் 6 மணியை கூட்டினால் அது அந்நாளின் ராகு காலத்தின் ஆரம்ப நேரம் ஆகும்.அதனின்று 1.5 மணிநேரம் வரையிலிருக்கும்.

1.தினமும் =(1x1.5)+6 to
2.சரியாக =(2x1.5)+6 to
3.வெளியே =(3x1.5)+6 to
4.போனால் =(4x1.5)+6 to
5.வியாதி =(5x1.5)+6 to
6.செத்ததடா =(6x1.5)+6 to
7.ஞாராயணா =(7x1.5)+6 to

ஆர்.கார்த்திகேயன் said...

திருவிழா முடிந்து தாமதமாக வந்துள்ளேன் மண்ணிக்கவும் மிக‌ மிக‌ சுவ‌ர‌ஸ்ய‌மான‌ பாட‌ம் அதை அமைத்த‌ வித‌ம் அருமை

SP.VR. SUBBIAH said...

/////Blogger DevikaArul said...
ஐயா , ராகுவை பற்றியும் , மற்ற சில doubt களுடனும் தங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பியுள்ளேன்.. தாங்கள் கணிவு கூர்ந்து சமயம் கிட்டும் போது விளக்கம் தர வேண்டுகிறேன்.////

பதில் அனுப்பிவிட்டேன் சகோதரி!

SP.VR. SUBBIAH said...

//////Blogger தியாகராஜன் said...
ராகு கால பாடல்:-
இதுவும் இருக்கிறது.
"தினமும் சரியாக வெளியே போனால் வியாதி செத்ததடா ஞாராயணா"
ஒவ்வொரு நாளையும் 1.5 மணியால் பெருக்கி அத்துடன் 6 மணியை கூட்டினால் அது அந்நாளின் ராகு காலத்தின் ஆரம்ப நேரம் ஆகும்.அதனின்று 1.5 மணிநேரம் வரையிலிருக்கும்.
1.தினமும் =(1x1.5)+6 to
2.சரியாக =(2x1.5)+6 to
3.வெளியே =(3x1.5)+6 to
4.போனால் =(4x1.5)+6 to
5.வியாதி =(5x1.5)+6 to
6.செத்ததடா =(6x1.5)+6 to
7.ஞாராயணா =(7x1.5)+6 to/////

தகவலுக்கு நன்றி தியாகராஜன்

SP.VR. SUBBIAH said...

/////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
திருவிழா முடிந்து தாமதமாக வந்துள்ளேன் மன்னிக்கவும் மிக‌ மிக‌ சுவார‌ஸ்ய‌மான‌ பாட‌ம் அதை அமைத்த‌ வித‌ம் அருமை//////

எல்லாம் உங்களுக்காகத்தான் கார்த்திகேயன்!