மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.1.09

ஏமாற்று வேலை!


ஏமாற்று வேலை!

நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும்தான் அதிகமான தோஷங்களை ஏற்படுத்துவார்கள்.

ஒரு ஜாதகனுக்குக் களத்திர தோஷம் அல்லது புத்திர தோஷம் இருக்கிறதா என்று
தெரிந்து கொள்ள, ஜாதகத்தில் அவர்கள் குடியிருக்கும் இடத்தைப் பார்த்தால் போதும்.

5ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷம்.
7ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் களத்திர தோஷம்.
8ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் ஆயுளுக்குத் தோஷம்.
9ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தந்தைக்குத் தோஷம்.
4ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தாய்க்குத் தோஷம்.

ராகு அல்லது கேது அமர்ந்திருக்கும் வீட்டிற்கு அதிபதியான கிரகம் வலிமையாக
இருந்தால் தோஷம் அடிபட்டுவிடும். வலிமையாக இல்லாவிட்டால் தோஷம் உண்டு.

அதென்ன சார் தோஷம்? சற்று எளிமைப் படுத்திச் சொல்லுங்கள்!

சொன்னால் போயிற்று!

களத்திரம் = திருமணம்
புத்திரம் = குழந்தைப்பேறு

திருமணம் தாமதமாவது அதாவது தள்ளிக்கொண்டே போகிறதென்றால், உரிய
காலத்தில் திருமணம் நடைபெறவில்லை என்றால் அதன் பின்னணியில் அவர்கள்
இருவரில் ஒருவர் இருப்பார்.

ஒரு பெண் மலர்ந்து வாசத்தை அள்ளித்தரும் காலம் எத்தனை ஆண்டுகள்?

36 ஆண்டுகள்

மலர்வதற்கு முன் அவள் குழந்தையாக இருக்கும் காலம் 13 அல்லது 14 ஆண்டுகள்

ஆக மொத்தம் 50 ஆண்டுகள்

அதோடு அவளுடைய பருவம் காலாவதியாகிவிடும். (expire ஆகிவிடும்)

பருவம் காலாவதியான பெண்ணை recondition செய்து பழைய நிலைக்கு - பார்ப்பவரை
மயங்க வைக்கும் நிலைக்குக் கொண்டுவர எந்தக் கொம்பனாலும் முடியாது.

போனது போனதுதான்.

விஷயம் அதுவல்ல!

ஒரு பெண்ணிற்கு அவள் மலந்து வாசம் வீசுகின்ற காலத்தில், உரிய நேரத்தில்
திருமணம் செய்து வைப்பதுதானே நல்லது

"அழகென்னும் விருந்தொன்று பரிமாறினேன்
பரிமாறும் நேரத்தில் சற்றுப் பசியாறினேன்"

என்று தன்னை மலராகவும், வந்த கணவனை வண்டாகவும் நினைத்து அவளால்
பாட முடியும். கணவனுக்குப் பரிமாறினவள் தன் பசியையும் போக்கிக் கொண்டதைச்
சொல்லும் அழகைப் பாருங்கள்.

திருமணம் தள்ளிக் கொண்டே போனால் அது தாமதக் கணக்கில் வரும்!

ஆகவே ஒரு பெண்ணிற்கு 18 வயதிலிருந்து 26 வயதிற்குள் (14 + 12) திருமணம்
நடைபெற வேண்டும். (அந்த 36ல் 2/3 பங்கை அவள் பசியாறுவதற்குக் கொடுங்கள்
சாமிகளா)


அதே போல திருமணமாகி மூன்று வருடங்களுக்குள் தம்பதியர்க்குக் குழந்தை
பிறந்து விட வேண்டும். இல்லையென்றால் அதுவும் தாமதக் கணக்கில் வரும்!

அந்தத் தாமதம் தோஷம் எனப்படும்.

அதீத தோஷமென்றால் என்ன ஆகும்?

அந்த வீட்டுக்குரியவன் நீசமாகி அல்லது களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாகி,
இந்த அமைப்பும் உடன் இருந்து கூட்டாகச் சொதப்புவது அதீத தோஷம் எனப்படும்

திருமணமே நடக்காது. திருமணம் நடந்தால் அல்லவா குழந்தையைப் பற்றிய பேச்சு!

தோஷத்திற்கு என்ன பரிகாரம்?

பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்.

ராகு, கேதுவிற்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடுவது சாலச் சிறந்தது!

காசைவைத்துப் பரிகாரம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை!

இன்று அவ்வளவுதான்!

பாடத்தின் தலைப்பு: விடுபட்டவை.
---------------------------------------------------------------------------------------
வாத்தியார் சொந்த வேலையாக நான்கு நாட்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள
இருப்பதால் வகுப்பறைக்குத் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை!
---------------------------------------------------------------------------------------
மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்!

வாழ்க வளமுடன்!

45 comments:

 1. //வாத்தியார் சொந்த வேலையாக நான்கு நாட்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள
  இருப்பதால் வகுப்பறைக்குத் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை!//

  ஹைய்யா ஜாலியோ ஜாலி....

  ReplyDelete
 2. Dear Sir

  Nice Lesson Sir.

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 3. Wish you Happy journey and Success in your endeavor.

  ReplyDelete
 4. dear sir,

  ennakku 7 il rahu irrukku and lagnathil kethu irukku , so for me marriage will be late.

  so,I have kalthira and kalasharpa thosham.

  Kindly recommend me whether 2 marry or not.

  Regards,

  Yoganandam

  ReplyDelete
 5. ஹலோ சார்,

  ஹைய்யா, ஜாலி ஜாலி.... க்ளாசுக்கு 4 நாள் லீவு. ஒரே ஜாலி தான்.

  ReplyDelete
 6. வலிமை என்றால் உச்சம், ஆட்சி, கேந்திரம், திரிகோணம் என்று பொருள் கொள்ளலாமா?

  ReplyDelete
 7. ////Blogger Covai Ravee said...
  //வாத்தியார் சொந்த வேலையாக நான்கு நாட்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள
  இருப்பதால் வகுப்பறைக்குத் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை!//
  ஹைய்யா ஜாலியோ ஜாலி....////

  இதுக்குத்தான் உங்களைக் கடைசிப் பெஞ்சில் உட்கார வேண்டாம் என்றேன்.

  ReplyDelete
 8. //////Blogger Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Nice Lesson Sir.
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman////////

  நன்றி ராஜாராமன்

  ReplyDelete
 9. /////Blogger Geekay said...
  Present Sir!!
  GK,BLR/////

  நன்றி ஜீக்கே!

  ReplyDelete
 10. ///Blogger krish said...
  Wish you Happy journey and Success in your endeavor.////

  நன்றி க்ரீஷ்!

  ReplyDelete
 11. Blogger YOGANANDAM M said...
  dear sir,
  ennakku 7 il rahu irrukku and lagnathil kethu irukku , so for me marriage will be late.
  so,I have kalthira and kalasharpa thosham.

  முதல் வரி சரி. இரண்டாவது வரி தவறு. ஏழாம் வீட்டின் மற்ற அமைப்புக்களை, அதிபதி, பார்வை, களத்திரகாரகன் சுக்கிரன்

  போன்றவறை வைத்து எல்லாமே மாறும். ஒன்றை வைத்து எப்படி முடிவிற்கு வருவீர்கள்?

  /////Kindly recommend me whether 2 marry or not.
  Regards,
  Yoganandam/////

  ஒரு பெண்ணின் அருமை தெரிய வேண்டாமா? கண்டிப்பாகத் திருமணம் செய்து கொள்ளூங்கள். உங்கள் பெயரிலேயே

  யோகம் இருக்கிறது. அவளும் யோகத்தைக் கொண்டு வருவாள்

  ReplyDelete
 12. Blogger sumathi said...
  ஹலோ சார்,
  ஹைய்யா, ஜாலி ஜாலி.... க்ளாசுக்கு 4 நாள் லீவு. ஒரே ஜாலி தான்./////

  இதுக்குத்தான் கடைசிப் பெஞ்சில் உட்கார வேண்டாம் என்பேன்.

  ReplyDelete
 13. Blogger Ragu Sivanmalai said...
  வலிமை என்றால் உச்சம், ஆட்சி, கேந்திரம், திரிகோணம் என்று பொருள் கொள்ளலாமா?/////

  ப்ளஸ் அஷ்டகவர்க்கம்!

  ReplyDelete
 14. அய்யா
  உங்கள் ஜோதிட பாடங்களை படித்து வருகிறேன்.நான் சமீபகாலமாக தினமும்
  வருகிறேன்.கேது கிரகம் பற்றி உங்கள் பாடங்கள்ளூக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சொன்ன "குட்டி சுக்கிறன் கூடி கெடுக்கும்"
  என்று நீங்கள் கூறியது மிக செறியாக இருந்தது.எனக்கு மூன்று வயதில் இருந்து
  சுக்கிறதிசை,புதன் நன்றாக இருப்பதால் கல்வி நன்றாக வரும் என்று சில ஜோதிடர்கள்
  கூறினார்கள்.ஆனால் நான் கல்வியில் மந்தம் தான்.அது ஏன் என்று குழம்பினேன்
  உங்கள் ஜோதிட படங்களை படித்த பின்புதான் அது சுக்கிற திசையால் தான் என்று
  எனக்கு புரிந்தது. உங்கள் பாடங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி அய்யா.

  ReplyDelete
 15. yennayum unkka vakkuppula sethikirinkala?

  ReplyDelete
 16. வலைப் பள்ளிக்கும் விடுமுறையா? சரி பழைய பாடங்களை ஒரு முறை புரட்டிப் பார்த்துக் கொள்கிறோம்....வணக்கங்கள்....

  ReplyDelete
 17. Blogger sundar said..
  அய்யா
  உங்கள் ஜோதிட பாடங்களை படித்து வருகிறேன்.நான் சமீபகாலமாக தினமும்
  வருகிறேன்.கேது கிரகம் பற்றி உங்கள் பாடங்கள்ளூக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சொன்ன "குட்டி சுக்கிறன் கூடி கெடுக்கும்" என்று நீங்கள் கூறியது மிகச் சரியா இருந்தது.எனக்கு மூன்று வயதில் இருந்து
  சுக்கிரதிசை,புதன் நன்றாக இருப்பதால் கல்வி நன்றாக வரும் என்று சில ஜோதிடர்கள்
  கூறினார்கள்.ஆனால் நான் கல்வியில் மந்தம் தான்.அது ஏன் என்று குழம்பினேன்
  உங்கள் ஜோதிட படங்களை படித்த பின்புதான் அது சுக்கிர திசையால் தான் என்று
  எனக்கு புரிந்தது. உங்கள் பாடங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி அய்யா.//////

  தகவல் பகிர்விர்க்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 18. /////Blogger achukichan said...
  yennayum unkka vakkuppula sethikirinkala?/////

  நீங்கள் முன்பே சேர்ந்து படித்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்? உங்கள் பெயர், அச்சுக்கிச்சான், ஸ்டாக் ப்ரோக்கர், ஈரோடு என்ற பெயரில் பதிவாகியுள்ளது. சைடுபாரில் பாருங்கள்!

  ReplyDelete
 19. //////Blogger படித்துறை.கணேஷ் said...
  வலைப் பள்ளிக்கும் விடுமுறையா? சரி பழைய பாடங்களை ஒரு முறை புரட்டிப் பார்த்துக் கொள்கிறோம்....வணக்கங்கள்....///////

  இது தெரிந்திருந்தால் ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டிருப்பேனே!:-)))))))

  ReplyDelete
 20. கேதுவின் ஆரம்ப பாடம் எளிமையாக இருந்தது.

  ஓ ... நான்கு நாட்கள் விடுப்பா? :-(

  அப்படியானால் பழைய பாடங்களை படிப்பதற்கு (ரிவைஸ்) ஏதுவாக இருக்கும். :-)

  ஐயா ஒரு கேள்வி!

  கும்ப லக்கிணத்தில் குரு - (பார்வை 5 ,7,9)

  நான்காம் வீட்டில் கேது (ரிஷபம்- நீசம்), அந்த ராசிக்குரிய சுக்ரன் (துலாம் - ஆட்சி , பரல் - 5) ஆனால் அஸ்தமனம் (அதாவது 10 பாகைக்குள் சூரியன், அதுவும் நீசம், பரல் - 4).

  இப்படி இருக்கையில் எப்படி எடுத்துக்கொள்வது?

  என்றும் அன்புடன்.

  ReplyDelete
 21. அன்புள்ள ஐயா,
  ராசி,நவாம்சம் இரண்டிலும் குரு மகரத்தில் நீசம். இது வர்கோர்த்தம‌மா?
  நீசம் ஆனாலும் வர்கோர்த்தம‌ம் நல்ல பலன் கொடுக்குமா அல்லது உச்சம்,நட்பிட்கு மட்டுமா?

  ReplyDelete
 22. வாத்தியாரையா, எளிய பாடம் அருமையாக புரிந்தது.

  ReplyDelete
 23. விடுபட்ட விபரங்களை தெரிந்துகொண்டோம் . நன்றி !

  ReplyDelete
 24. ஐயா,
  நேற்று காலை வகுப்பறை வந்தேன். (புதிய பாடங்கள்-பதிவு இல்லாததால்)ஆசிரியர் ஊருக்கு செல்வதாக கூறினாரே - சரி இன்றைக்கு வகுப்பறை விடுமுறை என்று நான் ஊர் சுற்ற கிளம்பிவிட்டேன்.நான் வகுப்பறை வந்து சென்றபின ஆசிரியர் வந்து பதிவிட்டு சென்றுஉள்ளார்.நேற்றைக்கு(30.01.09)எனக்கு ஆப்சென்ட் போட்டுவிடாதீர்கள்.
  தோஷங்கள் பற்றி போட்டுள்ளீர்கள்.
  கலைஞர்- கடக லக்னம்-8-ல்கேது,
  ரஜினி - சிம்ம் லக்னம்-8-ல் ராகு,
  கம்ல் - சிம்ம லக்னம் - 5-ல் ராகு,
  ஜெயலலிதா - மிதுன லக்-5-ல் கேது.//
  பிரபல மானவர்களுக்கே இந்த தோசம் இருக்கு.நமக்கும் இருந்தால் என்ன - பரிகாரம் செய்து கொள்ளலாம்.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 25. According to ur lesson,assuming lagna lord is weak then Only places Rahu and ketu do not give doshas are 6th and 12th house.Otherwise either one planet is placed in Dosha creating spots

  If Rahu or ketu is Vargottama,how it is to be intrepretated?

  Ketu represents traditional things.How it denies marriage if in 7th?

  Some astrologers in Kerala Use Mandi and Gulika.Are they related to Rahu and ketu?

  Thanks for the lesson.I was expecting something like this before we get immersed in Ketu.

  ReplyDelete
 26. Happy Journey. Lot of students waiting for Master. New students still looking at blank board like me! come with good chalk-piece.

  Dubai-aktrjan

  ReplyDelete
 27. "Ketu represents traditional things.How it denies marriage if in 7th?"

  sorry for the typo sir.Plese read the above as

  "Ketu represents traditional things.How it delays marriage if in 7th?"

  thanks

  sincere student

  Dr.vinoth

  ReplyDelete
 28. Dear Sir

  Sir. We are waiting for your lesson Sir....

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 29. அய்யா,

  ஏமாற்று வேலை, பட்டுகோட்டையார் பாடியது போல "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்"... "எமாறுவராய் பார்த்து ஏமாறாமல் இருந்து விட்டால்" தான் ஏமாற்று வேலை வளராது

  நன்றி,

  ஸ்ரீதர்

  ReplyDelete
 30. ////Blogger SP Sanjay said...
  கேதுவின் ஆரம்ப பாடம் எளிமையாக இருந்தது.
  ஓ ... நான்கு நாட்கள் விடுப்பா? :-(
  அப்படியானால் பழைய பாடங்களை படிப்பதற்கு (ரிவைஸ்) ஏதுவாக இருக்கும். :-)
  ஐயா ஒரு கேள்வி!
  கும்ப லக்கிணத்தில் குரு - (பார்வை 5 ,7,9)
  நான்காம் வீட்டில் கேது (ரிஷபம்- நீசம்), அந்த ராசிக்குரிய சுக்ரன் (துலாம் - ஆட்சி , பரல் - 5) ஆனால் அஸ்தமனம் (அதாவது 10 பாகைக்குள் சூரியன், அதுவும் நீசம், பரல் - 4).
  இப்படி இருக்கையில் எப்படி எடுத்துக்கொள்வது?
  என்றும் அன்புடன்./////

  எந்த வீட்டிற்கான கேள்வி? என்ன கேள்வி? எப்படி எடுத்துக் கொள்வது என்பது மொத்த ஜாதகத்தையும் குறிக்கும்!
  Be specific in the question!

  ReplyDelete
 31. /////Blogger vino, canada said...
  அன்புள்ள ஐயா,
  ராசி,நவாம்சம் இரண்டிலும் குரு மகரத்தில் நீசம். இது வர்கோர்த்தம‌மா?
  நீசம் ஆனாலும் வர்கோர்த்தம‌ம் நல்ல பலன் கொடுக்குமா அல்லது உச்சம்,நட்பிட்கு மட்டுமா?/////

  ஆமாம். இரண்டிலும் நீசமாகிவிட்டதால் பலன் இல்லை. ஆனால் சம்பந்தப் பட்டுள்ள கிரகம் குரு என்பதால் தீமை இருக்காது.

  ReplyDelete
 32. /////Blogger அமர பாரதி said...
  வாத்தியாரையா, எளிய பாடம் அருமையாக புரிந்தது./////

  நன்றி பாரதி!

  ReplyDelete
 33. ////Blogger பாஸ்கர் said...
  விடுபட்ட விபரங்களை தெரிந்துகொண்டோம் . நன்றி !/////

  நன்றி பாஸ்கர்!

  ReplyDelete
 34. /////Blogger வேலன். said...
  ஐயா,
  நேற்று காலை வகுப்பறை வந்தேன். (புதிய பாடங்கள்-பதிவு இல்லாததால்)ஆசிரியர் ஊருக்கு செல்வதாக கூறினாரே - சரி இன்றைக்கு வகுப்பறை விடுமுறை என்று நான் ஊர் சுற்ற கிளம்பிவிட்டேன்.நான் வகுப்பறை வந்து சென்றபின ஆசிரியர் வந்து பதிவிட்டு சென்றுஉள்ளார்.நேற்றைக்கு(30.01.09)எனக்கு ஆப்சென்ட் போட்டுவிடாதீர்கள்.
  தோஷங்கள் பற்றி போட்டுள்ளீர்கள்.
  கலைஞர்- கடக லக்னம்-8-ல்கேது,
  ரஜினி - சிம்ம் லக்னம்-8-ல் ராகு,
  கம்ல் - சிம்ம லக்னம் - 5-ல் ராகு,
  ஜெயலலிதா - மிதுன லக்-5-ல் கேது.//
  பிரபல மானவர்களுக்கே இந்த தோசம் இருக்கு.நமக்கும் இருந்தால் என்ன - பரிகாரம் செய்து கொள்ளலாம்.
  வாழ்க வளமுடன்,
  வேலன்.///////

  ஆகா, உங்களைப் போலவே அனைவரும் இருந்துவிட்டால் எவ்வளவு நல்லது!

  ReplyDelete
 35. //////Blogger Dr.Vinothkumar said...
  According to ur lesson,assuming lagna lord is weak then Only places Rahu and ketu do not give doshas are 6th and 12th house.Otherwise either one planet is placed in Dosha creating spots
  If Rahu or ketu is Vargottama,how it is to be intrepretated?////

  They will become stonger and the eveil effects will be more to the native!
  -----------------------------------------------------------------------------------------------
  Ketu represents traditional things.How it denies marriage if in 7th?

  Sanyasam also ia a traditional thing for Hindus:-))))))))
  -----------------------------------------------------------------------------------------------
  ////Some astrologers in Kerala Use Mandi and Gulika.
  Are they related to Rahu and ketu?//////

  Yes, related, only in doing harmful things! Not in any other way!
  ----------------------------------------------------------------------------------------------
  Thanks for the lesson.I was expecting something like this before we get immersed in Ketu.//////

  நன்றி டாக்டர்!

  ReplyDelete
 36. /////Blogger TK said...
  Happy Journey. Lot of students waiting for Master. New students still looking at blank board like me! come with good chalk-piece.
  Dubai-aktrjan/////

  புது மாணவர்கள் பழைய பாடங்களைப் படிக்கலாமே!
  சாக்பீஸிற்கு ஒன்றும் பஞ்சமில்லை!

  ReplyDelete
 37. /////Blogger Dr.Vinothkumar said...
  "Ketu represents traditional things.How it denies marriage if in 7th?"
  sorry for the typo sir.Plese read the above as
  "Ketu represents traditional things.How it delays marriage if in 7th?"
  thanks
  sincere student
  Dr.vinoth/////

  கேதுவால் பல தடைகள் ஏற்படும். தாமதங்கள் ஏற்படும். அதெல்லாம் அவருடைய
  இயற்கையான செயல்கள். அவை எதுவுமின்றி இருந்தால் அவரும் சுபக்கிரகமாகி விடுவாரே!
  பாகற்காய் கசப்பாகத்தான் இருக்கும், மிளகாய் காரமாகத்தான் இருக்கும். அது இயற்கையானது
  அதுபோலத்தான் கேதுவின் குணங்கள் அல்லது தன்மைகள்

  ReplyDelete
 38. ////Blogger Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Sir. We are waiting for your lesson Sir....
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman/////

  நன்றி ராஜாராமன்

  ReplyDelete
 39. /////Blogger Sridhar said...
  அய்யா,
  ஏமாற்று வேலை, பட்டுகோட்டையார் பாடியது போல "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்"... "எமாறுவராய் பார்த்து ஏமாறாமல் இருந்து விட்டால்" தான் ஏமாற்று வேலை வளராது
  நன்றி,
  ஸ்ரீதர்//////

  ஆமாம், நீங்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றுதான் இந்தப் பாடத்தை நடித்தினேன்

  ReplyDelete
 40. ////Blogger SP Sanjay said...
  கேதுவின் ஆரம்ப பாடம் எளிமையாக இருந்தது.
  ஓ ... நான்கு நாட்கள் விடுப்பா? :-(
  அப்படியானால் பழைய பாடங்களை படிப்பதற்கு (ரிவைஸ்) ஏதுவாக இருக்கும். :-)
  ஐயா ஒரு கேள்வி!
  கும்ப லக்கிணத்தில் குரு - (பார்வை 5 ,7,9)
  நான்காம் வீட்டில் கேது (ரிஷபம்- நீசம்), அந்த ராசிக்குரிய சுக்ரன் (துலாம் - ஆட்சி , பரல் - 5) ஆனால் அஸ்தமனம் (அதாவது 10 பாகைக்குள் சூரியன், அதுவும் நீசம், பரல் - 4).
  இப்படி இருக்கையில் எப்படி எடுத்துக்கொள்வது?
  என்றும் அன்புடன்./////

  எந்த வீட்டிற்கான கேள்வி? என்ன கேள்வி? எப்படி எடுத்துக் கொள்வது என்பது மொத்த ஜாதகத்தையும் குறிக்கும்!
  Be specific in the question!//

  இது 4ம் வீட்டை பற்றிய கேள்வி.

  இன்றைய படத்தில் விடை கண்டேன். நன்றி :)

  ReplyDelete
 41. Thanks for the explanations for my doubts sir.

  Dr.vinoth

  ReplyDelete
 42. அண்ணா!!

  அருமை அருமை.....ஆனால் ரிஷப லக்ஹ்னதிர்க்கு 7 -இல் செவ்வாயும் கேதுவும .....இந்த இடத்தில செவ்வாய் ஆட்சி வீடு மற்றும் கேது உச்ச வீடு....இதற்க்கு எப்படி பலன்எடுத்துகொள்வது???

  ReplyDelete
 43. ///Nattu said...
  அண்ணா!!
  அருமை அருமை.....ஆனால் ரிஷப லக்கினதிற்கு 7 -இல் செவ்வாயும் கேதுவும் .....இந்த இடத்தில செவ்வாய் ஆட்சி வீடு மற்றும் கேது உச்ச வீடு....இதற்கு எப்படி பலன் எடுத்துகொள்வது???//////

  எப்படிப்பட்ட பலனி விரும்புகிறீர்கள்? ஆட்சி, உச்சம் பெற்று இருப்பதால் தோஷம் இல்லை என்று சொல்லச் சொல்கிறீர்களா? சொல்ல முடியாது. தோஷம் உண்டு! பயப்படாதீர்கள். திருமணம் தாமதமாகும். உங்கள் ஜாதகத்திற்குப் பொறுத்தமான பெண்ணைத் தெடுப்பிடிப்பதில் கொஞ்சம் சிரமம் ஏற்படும். அவ்வளவுதான்!

  ReplyDelete
 44. ஐயா நான் உங்களின் மாணவன் என்பதில் பெருமைகொள்கிறேன்.நீங்கள் அடிக்கடி சந்நியாசயோகம் பற்றிக் கூறுகிறீர்கள். எனக்கு லக்கினம் சிம்மம்,5-ல் கேது,5-ம் வீட்டதிபதி சுயவர்க்கத்தில் 5 பரலுடன் துலாத்தில், உச்சம்பெற்ற லக்கினாதிபதியின் நேரடிப் பார்வையில்.இது சந்நியாசயோகமா?சாம்ராஜ்யயோகமா?.இல்லை இதைத் தீர்மானிக்க வேறு சில விதிகள் உள்ளனவா?தயவாய் விளக்கவும்.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com