மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

26.3.11

இளையராஜாவிற்கு எந்தவரியைப் பாட மனம் ஒப்பவில்லை?

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 இளையராஜாவிற்கு எந்தவரியைப் பாட மனம் ஒப்பவில்லை?

இன்றைய இளைஞர் மலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
திரிவேணி சங்கமம்.

மனிதர்குல மாணிக்கம்... ஜவஹர்லால் நேரு அவர்களைக் காலன் அழைத்துப் போன வேளை!

நமது கவிபாடும் சோலை, கவியரசு அவர்களின் இதயத்தில் அந்தச் செய்தி இடியாய்  இறங்கியதால்; அவரின் இதயத்தில் கசிந்தோடும் செங்குருதியை நிரப்பிக் கொண்டு;  கவிஞரின் இரு விரல்களுக்கு இடையே குடிபுகுந்த அந்தப் பேனா... துக்கத்தைக் கக்கியது....

அதுவும், செங்கனலாய் வெடித்துச் சிதறி பீறிட்டு பொங்கி எழுந்து; தமிழ் பாரெங்கும் வழிந்தோடியது....

இதோ! அந்த துக்கம் தோய்ந்து விழுந்த வரிகள்!... கோபம் கொண்டு எழுந்து செங்கனலாய், வெடித்துச் சிதறுவதை பாருங்கள்.

சீரிய நெற்றி எங்கே?
சிவந்தநல் இதழ்கள்  எங்கே?
கூறிய விழிகள் எங்கே?
குறுநகை போனது எங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்தநன் நடைதான் எங்கே?
நிலமெல்லாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்தது இங்கே!...

அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலை தீயில் இட்டார்!
அன்னையை தீயில் இட்டார்!!
பிள்ளையை தீயில் இட்டார்!!!
(அம்மம்மா என்ன சொல்வேன்....)

தீயவை நினையா நெஞ்சை
தீயிலே கருக விட்டார்!
தீயசொல் சொல்லா வாயை
தீயிலே கருக விட்டார்!!
(அம்மம்மா என்ன சொல்வேன்....)

சாவே உனக்கொரு நாள்
சாவு வந்து சேராதோ!
சஞ்சலமே நீயும் ஒரு
சஞ்சலத்தைக் காணாயோ?
தீயே உனக்கொரு நாள்
தீ மூட்டிப் பாராமோ?
யாரிடத்து பொய் உரைப்போம்?
யார்மொழியில் அமைதி கொள்வோம்?...

***********************************************************************************************
கவியரசு கண்ணதாசன் அவர்கள் இந்தப் பாடலை வடித்தபோது நடந்த நிகழ்வைப் பற்றி அறிய நேர்ந்தது! நீங்களும் அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கிடைத்த உடன் அனைத்துப் பத்திரிக்கைகளிலும்இரங்கல் கட்டுரையை வெளியிட்டு இருந்தார்கள். அன்று மாலை கடற்கரையிலே இரங்கல் கூட்டமும் நடக்க ஏற்பாடு நடந்து கொண்டும் இருந்தது.

அப்போது பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள், பால தண்டாயுதமும், தா.பாண்டியன் அவர்களும் கவிஞரைக் கண்டு கவிதைப் புனைய சொல்ல வேண்டும் என்ற நோக்கோடு சென்று பார்த்து இருக்கிறார்கள்.

அங்கு கவிஞர், தந்தையை இழந்த மகனைப் போல தேம்பி, கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்திருக்கிறார், அப்போது அங்கு சென்ற இவர்கள் இருவருக்கும் அவரைத் தேற்றுவதே பெரும் பாடாகி விட்டதாம்.

பாலன், "கவிஞர், இதே சோகத்தோடு மாலைக் கூட்டத்தில் பாட ஒரு பாடலை எழுதுங்கள்" என்றாராம். கவிஞரின் உதவியாளர் ஒரு ஐந்தாறு மாத்தரைகளையும், தண்ணீரையும் கவிஞருக்குக் கொடுத்தாராம். காய்ச்சல் நெருப்பாய் கொதித்ததாம் கவிஞருக்கு.

நாற்காலியில் சாய்ந்துக் கொண்டு கண்ணீர் விட்டபடியே ராகம் போட்டுப் பாடிக் கொண்டு எழுதச் செய்வதை தா. பா. பார்த்துக் கொண்டு இருந்ததாக , நினைவு கூறுகிறார்.

+++++++++++++++++++++++++++++++++++
                  
"கவிஞர்கள் என்றாலே உணர்ச்சிக் கடலில் மூழ்கக் கூடியவர்கள். அவர்கள் நவரச உணர்வுகளின் எல்லைவரை அதாவது, நுனிவரை செல்பவர்கள். அவர்கள் மெல்லிய இதயம் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் பலவீனமானவர்கள் அல்ல. அவர்கள் எளிதில் காயப் படக் கூடியவர்கள், ஆனால், முழுச் சுரணையும் உள்ளவர்கள். அதோடு, அவர்கள் சுதந்திரமானவர்கள். புறக்கண்ணை மறந்து அகக் கண்ணாலே அதிகம் பார்ப்பவர்கள். ஏனென்றால், அதற்கு உண்மை மட்டுமே தெரியும்!

அவர்களின் படைப்புகளில் உள்ள நயமும், அழகும்,  உயிரோட்டமும் அதனாலே அவர்களுக்கு வசப் படுகிறது.  அது அந்தப் படைப்பை வாசிப்போரையும் எளிதில் ஆட்கொள்ளும்  அளவிற்கு சென்று விடுகிறது.”
அவர்கள் வாழும் சமுதாயத்தை ஆற்றுப் படுத்த அவதரித்த அவதாரர்கள். அவர்களின் அந்த முயற்சிக்கு தடையாய் வரும் எதையும் எரியும் கனலாய் சுட்டெரிப்பது மட்டும் அல்ல... அதற்கு உதவியவர்கள் பிரியும் போது, அவர்களின் பிரிவுக்கும் கண்ணீர் வடிப்பவர்கள் ஆவர்.

ஆக, அப்போது  கண்ணதாசன்; அந்த காலக் கணித மேதை கதறி அழுததும், கண்ணீர் விட்டதும் அதன் பொருட்டே என்று சொல்லவும் வேண்டுமோ? அப்படி எழுதப் பட்ட அந்தப் பாடல், அன்று மாலை கூட்டத்தில் திரு. சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரக் குரலில் உணர்ச்சிப் பொங்கப் பாடினாராம். அந்தப் பாடல் தான் மறுதினம் பத்திரிக்கைகளிலே வந்ததாம்.

சரி கட்டுரையின் நோக்கிற்கு வருவோம்!....

அப்படி அந்த துக்கத்தை சுமந்து கொண்டு வந்தத் தந்தியை! தீக்கதிரை!! ஜனசக்தியாய் விளங்கிய அந்த சிகப்பு மலரின் இறப்புச் செய்தியால் விளைந்த அந்த பா(பூ)மாலையில்  தேனது வடியாமல் துக்கம் தாளாமல் கண்ணீர் வடிந்தது!!

அன்று அந்த செய்தித்தாள் சற்று கனத்தே இருந்தது. குடகுமலை குளிராலா? அல்லது இதயம் கனக்கும் செய்தியை தாங்கி வந்ததாலா? அல்லது அதுவே அழுது, அழுது தன்னை தானே நனைத்ததாலா? அல்லது இரங்கல் பாமாலையில் வடிந்தக் கண்ணீராலா? யாரறிவார்?.

அப்படி கவியரசரின் துக்கத்தை சுமந்துச் சென்ற அந்த சோகப் பாடல் ஒரு பதினேழு வயது சிறுவனின் கரம் சேர்ந்தது. அவன் கண்களில் தெறித்த, கவியரசரின் செங்குருதித் தமிழ் வரி; அச்சிறுவனின் கண்களின் வழியே நுழைந்து, இதயம் புகுந்தது. ஆம், இதயம் புகுந்தது.

அது புனல் திரியும் கருவண்டுகள்;  துளையிட்ட, நாணல் தோகையின் ஓட்டையின் வழியே, காற்றுப் புகுந்து நாதத்தை எழுப்புவது போல்… இந்த சோகப் பாடல் அவனுள் புகுந்து ஒரு சோக ராகத்தை சுரம் பிரித்தது.

சுக ராகம் சோகம் தானே!!...

(Sweetest Songs are those that tell us of saddest Thoughts - Shelly.)

ஆம், அப்படி அந்தச் சிறுவனின் கண்களின் வழியே புகுந்து, சிந்தையில் கருவுற்று நின்ற;  கவியரசரின் அந்தக் கோபக் குரலின் வெப்பத்தால். அது கூறிய மாபெரும் தியாகியின் மறைவுச் செய்தியால்; கண்ணீரும் பெருகியது.
ஆம், அச்சிறுவனின்  கண்களில் கண்ணீர் பெருகியது என்றால் அது ஒன்றும் பெரிய வியப்பாகாது.  வேறென்ன வியப்பு?....

“ஒரு தேசக் காவலனின் மறைவுச்செய்தி. இன்னொரு, தேச  நேசனின் உள்ளக் குமுறல்களில் கவிதையாய் பிறந்து; அது கடைசியாக அன்று, அந்த பண்ணபுரத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதனை; இசைஞானியாய் உருவாக காரணமான முதல் பாடல் என்றால்; இசைஞானியை உருவாக்க கருவானது என்றால்; அது தான் பின்னாளில்... இன்றும் வியப்பாய் நிற்கிறது.” ஆம், அந்தப் பாடல் தான் இசைஞானி இளைய ராஜா அவர்கள் இசை அமைத்த முதல் பாடலாம்!!!.

அதை அவரே கூறுவதைக் கேட்க, http://www.youtube.com/watch?v=8gbZ_AezSUw இந்த சுட்டியை முடுக்குங்கள். முத்துதிரும். ஆம் உங்கள் கண்களில் கண்ணீர் முத்துதிரும்.
**********************************************************************************************
மேலே எழுதப் பட்டப் பாடல் இளையராஜா பாடுவதை கணினியில் கேட்கும் போது நான் எழுதியது..... அதிலே கவிஞர் எழுதிய ஒரு வரியை அவர் நீக்கி அல்ல தவிர்த்து இருக்கிறார்."தெய்வமே உன்னையும் நாம் தேம்பி அழவையோமோ! என்ற வரி தாம் அது.

பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டப் போது... அன்று இந்த வரியை  பல மேடைகளிலே இளையராஜா அவர்கள் பாடி இருந்தாலும்; இன்று அவர் ஒரு முழு ஆன்மீக வாதி என்பதால்; அம்மா என்று தரையில் எழுதப்பட்ட எழுத்தைக் கூட தனது காலில் மிதிக்க எப்படி மனம் ஒப்பாதோ! அப்படி அவருக்கு அந்த வரியைப் பாட அவர் மனம் ஒப்பவில்லை போலும்.

கவிஞரும் கொண்ட வேசத்திற்கு தகுந்தாற் போல் (ஏன் வேஷம் என்கிறேன் என்றால் அன்றைய சூழலில் புனைப் பெயரிலே பக்திப் பாடல்களையும் எழுதி இருக்கிறார் என்று கேள்வியுறுகிறேன்) அந்த வரிகளை கைகொள்கிறார்.
அந்தக் கருத்தை மறுப்பது என்றாலும், அவர் இறைவனிடம் தான் கொண்ட உரிமையில் கூட அப்படி எழுதி இருக்கலாம் என்றும் சொல்லத் துணியலாம்.

“கவிஞர்களின் எண்ணமும், கருத்தும் அவர்கள் வாழும் காலத்தோடு மாறுபடும், இல்லை மேம்படும்.”

அன்று இந்தியாவின் முதல் பிரதமரின் மறைவிற்கு ஒரு பெரும் கவிஞரால் எழுதப்பட்ட இரங்கல் பாட்டிற்கு தான், தனது முதல் இசை அமைத்தேன் என்று அந்த பதினேழு வயது சிறுவன் கூறினால் அது அப்போது நமக்கெல்லாம் சாதாரணம்.

ஆனால், இன்று ஒரு இசை ஞானி என்று பெரும்பாலான மக்களால்  அன்போடு அழைக்கும் தகுதி படைத்த ஒரு கலைஞன், அது தான் தனது முதல் இசை அமைத்தப் பாடல் என்பது தான் மேதைகளின் சங்கமத்தை / முக்கூடலைப் பற்றி சிந்திக்கச் செய்கிறது. கங்கையாய், யமுனையாய், சரஸ்வதியாய்.... மூவரும் இங்கே சங்கமித்தது தான் ஆச்சரியப் படச்செய்கிறது!

நாட்டிலோ !, வீட்டிலோ !!, காட்டிலோ !!!.....  தாமரைகள், அவைகள் எந்தச் சேற்றில் முளைத்தால் என்ன?

அவைகள்; நிறத்தால், அளவால் வேறுபட்டால் என்ன?. ஆனால், அவைகள்; அழகாலும், மணத்தாலும் ஒன்றல்லவோ!

எங்கோ பிறந்து; எப்படியெல்லாமோ வளர்ந்து; முப்பெரும் மேதைகளின் சங்கமம் எப்படி நடந்தேறியது!  இதுவே, என்னை பெரிய வியப்பாய் ஆழ்த்தியது.

அவனின்றி அணுவும் அசையாது; யாரை எதற்காகப் படைத்தானோ! அவர்கள் தாமாகவே தங்களது கடமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் / இருந்திருக்கிறார்கள்.

அது இந்த பரந்து விரிந்த ஆகாயமும், எரியும் சூரியனும், கொட்டும் அருவியும், வீசும் காற்றும், சுற்றும் பூமியும் மட்டுமல்ல. அதை, விரும்பினாலும் விரும்பா விட்டாலும்; இந்த மானுடமும் அப்படித்தான். அவர்கள் தாமாகவே தங்களது கடமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் / இருந்திருக்கிறார்கள்.

எல்லாவற்றிலும் எல்லாமமுமாக நீக்கமற நிறைத்திருக்கும் அவனே எல்லா அதிசயங்களையும் நடத்துகிறான். இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் யாவும் அவனின் செயலே என்ற சிந்தனையை மேல் நிறுத்துவோம்.

நன்றி வணக்கம்.
ஆலாசியம் கோவிந்தசாமி,
சிங்கப்பூர்

+++++++++++++++++++++++++++++++++++++===
2

மனக்கண்ணில் மகிழ்ச்சி தெரிய வேண்டாமா?

'ஒரு சீட்டும் சரியா வரலியே?  பேசாம பாதில கழண்டுக்கலாமா?  இல்ல கொஞ்ச நேரம் பார்க்கலாமா?  கடைசியா மிஞ்சி இருக்கிறது இந்த அம்பது ரூபாதான்.  அதுவும் மனைவி அரிசி வாங்குவதற்காகக் கொடுத்தது.  இதையும் இழந்து அரிசியும் வாங்காம வீட்டுக்குப் போனா நிலைமை கேவலமாயிடும்'.

'என்ன யோசிக்கிற பட்டுன்னு சீட்டைப் போடு ' பாலுவின் குரல் துரிதப்படுத்தியது.

சீட்டைப்போட்டதுதான் தாமதம், எடுத்து டிக்கி அடித்தான் ராசு.

போச்சு எல்லா பணமும் காலி.  வெறுத்துப்போய் எழுந்தான் சுந்தர்.

தண்ணியடிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள் அவன் கூட்டாளிகள்.  சுந்தர் வீட்டைப் பார்க்க நடந்தான்.

வேலை இருந்தவரை கையில் பணப்புழக்கம் இருந்தது.  இப்போது கொஞ்ச நாளாகவே சரியாக வேலையும் கிடைப்பதில்லை.

மனைவியிடம் என்ன காரணம் சொல்லலாமென்று ஒரே யோசனையாக இருந்தது. சுந்தரும் இதிலிருந்து விடுபடத்தான் நினைக்கிறான்.  ஆனால் அவன் தேமேன்னு போனால் கூட நண்பர்கள் இழுத்துப்பிடித்து உட்கார வைத்துவிடுகிறார்கள்.

வீட்டுக்குப்போனவனுக்கு நினைத்தபடியே வரவேற்பு இருந்தது.  கூடவே ஆத்தாவும் அது பங்குக்கு திட்டியது.  இது வழக்கமாக நடப்பதுதான்.  அவளையும் சொல்லி என்ன பயன்?  நாலு வீடுகள்ல வேலை பார்த்து சம்பாதிக்கறதை இப்படி தொலைச்சுட்டு வந்தா?

கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்தான்.  பெண் ஒரு பக்கம் உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்தது.  கிழிஞ்ச சீருடையை போட்டுக்கிட்டு வருதுன்னு பள்ளிக்கூடத்தில நாலு நாளா திட்டுறாங்களாம். 

'ஏங்க உங்க நண்பர் வந்துருக்காரு.  உங்ககிட்ட பேசணுமாம்', சிந்தனை கலைத்து எழுந்தான்.

வாசலில் வேலு.

'அண்ணே, நம்ம சந்தானம் அண்ணன் கடைல வேலைக்கு ஆள் வேணுமாம்.  உங்களைப்பத்தி சொன்னேன்.  உடனே அழைச்சுகிட்டு வரச் சொன்னாரு'.

உடனே சுறுசுறுப்பானான்.  'இரு சைக்கிளை எடுத்துகிட்டு வரேன்'.

'வேணாண்ணே நம்ம சைக்கிள்லையே போயிடலாம், வாங்க'
--------------------------------------------------------------------------------------
ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை.  காலையில் ஏழு மணிக்குக் கடைக்குப் போனால் திரும்ப வர இரவு எட்டு ஒன்பது மணி ஆகிவிடுகிறது.  இன்று சம்பள நாள்.

காலையில் கிளம்பும்போதே பரபரப்புடன் இருந்தான்.  வேலையில் இருப்பே கொள்ளவில்லை.  மெதுவாக முதலாளியிடம் ஆரம்பித்தான்.  'அண்ணே, இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புவீங்களா?'

'சரி'

பையில் சம்பளம்.  உற்சாகத்துடன் சைக்கிளை மிதித்தான்.  'நேரா அப்படியே பெண்ணோட பள்ளிக்குப் போயி அதுக்கு அப்படியே சீருடையும் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயிட்டா என்ன?  அப்படியே ஆத்தாவுக்கும் ரெண்டு நல்ல புடவையா வாங்கிடலாம்'  என்று காலையில் மனதில் உதித்த திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்குடன் விரைந்தான்.

மரத்தடியில் அவனுடைய சீட்டாட்ட நண்பர்கள் பட்டாளம் குழுமியிருந்தது.

'ஏ மாப்ளே, என்னடா உன்னை பிடிக்கவே முடியல.  வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் எங்களையெல்லாம் மறந்துட்ட போல.  ஒரு கை குறையுது.  வா வா'.

'இல்லண்ணே, பெண்ணுக்கு உடம்பு சரியில்லன்னு பள்ளிக்கூடத்திலேர்ந்து சொல்லி விட்டாங்க.  அதான் போய்கிட்டிருக்கேன்' கூசாமல் பொய் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

ஆத்தாவும், பெண்ணும் ஏன் மனைவியும் கூட மகிழ்ச்சியாகச் சிரிப்பது மனக்கண்ணில் தெரிந்தது.

ஆக்கம்: திருமதி. S. உமா, தில்லி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

45 comments:

Thanjavooraan said...

நேருஜி அவர்கள் காலமான போது எனக்கு 30 வயது. கரூரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நேருவின் உடல் தீக்கிரையான போது கரூரில் ஒரு இரங்கல் பேரணி கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் தலைமையில் நடந்து திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. அப்போது திருமதி கே.பி.எஸ்.ஆற்றிய உரை அங்கிருந்த அனைவர் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. அந்த வார "ஆனந்த விகடன்" இதழோடு பண்டித நேருவின் அழகிய படமொன்று கொடுக்கப்பட்டது. அதனை பலரும் ஃப்ரேம் போட்டு வைத்துக் கொண்டனர். நீல நிற பின்னணியில், ரோஜா போன்ற மலர்ந்த முகத்தோடு கோட்டில் அணிந்த சிவப்பு ரோஜாவுடன் அந்த படம் மகிழ்ச்சி அளித்தது. அதோடு கவிஞர் கண்ணதாசன் கவிதை வரிகளைக் கேட்டு உள்ளம் உருகியவர்கள் பலர் உண்டு. அந்தக் கவிதை வரிகளை அச்சிட்டு வழங்கினர். அதனை அந்தப் புகைப்படத்துடன் பல ஆண்டுகள் வைத்திருந்தேன். நேரு இந்த நாட்டில் வாழ்ந்த தலைவர்களில் ஒரு இமயமாகத் திகழ்ந்தவர். அவரை எதிர் கட்சியினரும் போற்றவே செய்தனர். அதனை நினைவுபடுத்திய சிங்கப்பூர் ஆலாசியம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ஆசிரியர் அவர்களே உங்கள் பணி சிறக்கட்டும்.

Anonymous said...

கண்ணா இரண்டாவது லட்டு திங்க ஆசையா ?

ஆகா இன்றைய இளைஞர் மலரில் இரண்டு இனிப்புகள் ,,,

இரண்டுமே நல்ல சுவை..

நன்றி வாத்தியார் ஐயா ...

Anonymous said...

"கவிஞர்கள் என்றாலே உணர்ச்சிக் கடலில் மூழ்கக் கூடியவர்கள். அவர்கள் நவரச உணர்வுகளின் எல்லைவரை அதாவது, நுனிவரை செல்பவர்கள். அவர்கள் மெல்லிய இதயம் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் பலவீனமானவர்கள் அல்ல. அவர்கள் எளிதில் காயப் படக் கூடியவர்கள், ஆனால், முழுச் சுரணையும் உள்ளவர்கள். அதோடு, அவர்கள் சுதந்திரமானவர்கள். புறக்கண்ணை மறந்து அகக் கண்ணாலே அதிகம் பார்ப்பவர்கள். ஏனென்றால், அதற்கு உண்மை மட்டுமே தெரியும்!

சத்தியமான வார்த்தைகள் ஆலாசியம் ஜி... அற்புதமான படைப்பு ..

சாவே உனக்கொரு நாள்
சாவு வந்து சேராதோ!

எத்தனை பேருக்காக இப்படி நினைக்கத் தோனும் ?

வாழ்த்துக்கள் தோழரே..

Anonymous said...

பக்கத்து வீடுகளில் நடக்கும் கதை..

நிச்சயம் இது கற்பனை அல்ல உமா அவர்கள் தமது வாழ்வில் அக்கம்பக்கத்தில் சந்தித்த உண்மை என்றே தோன்றுகிறது,


//இல்லண்ணே, பெண்ணுக்கு உடம்பு சரியில்லன்னு பள்ளிக்கூடத்திலேர்ந்து சொல்லி விட்டாங்க. அதான் போய்கிட்டிருக்கேன்' கூசாமல் பொய் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.//

பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.

தங்களது படைப்பால்,
எங்கள் மனக்கண்ணிலும் மகிழ்ச்சியே..

Uma said...

என் கதையை வெளியிட்டதற்கு நன்றி sir!

Uma said...

ஆலாசியம், உங்கள் எழுத்து நடை மெருகு ஏறிக்கொண்டே போகிறது. வரவர கண்ணதாசனோட தாசன் ஆயிட்டீங்க போல!

அது இந்த பரந்து விரிந்த ஆகாயமும், எரியும் சூரியனும், கொட்டும் அருவியும், வீசும் காற்றும், சுற்றும் பூமியும் மட்டுமல்ல. அதை, விரும்பினாலும் விரும்பா விட்டாலும்; இந்த மானுடமும் அப்படித்தான். அவர்கள் தாமாகவே தங்களது கடமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் / இருந்திருக்கிறார்கள். //

ஆமாம், அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

Uma said...

தங்களின் பாராட்டுக்கு நன்றி ஜானகிராமன்.

Amudhavan said...

ஆலாசியம் கோவிந்தசாமியின் உணர்ச்சிக்கொந்தளிப்பான எழுத்துக்களைப் படித்தேன். கவியரசரின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்றான சாவே உனக்கொருநாள் சாவுவந்து சேராதோ என்ற கவிதைக்கு முதன்முதலாக இசையமைத்தவர் இளையராஜா என்ற தகவல் எனக்கே புதிதாக இருக்கிறது. கவியரசரின் மீது இளையராஜா கொண்டிருக்கும் பக்தி பற்றி எனக்குத் தெரியும். ஆலாசியத்திற்கும் இந்தத் தளத்தில் அதனை பதிப்பித்த உங்களுக்கும் பாராட்டுக்கள்.

Alasiam G said...

எனது கட்டுரையை எல்லோரும் படிக்க வாய்ப்புத் தந்தற்கு நன்றிகள் ஆசிரியரே!

Alasiam G said...

///// நேரு இந்த நாட்டில் வாழ்ந்த தலைவர்களில் ஒரு இமயமாகத் திகழ்ந்தவர். அவரை எதிர் கட்சியினரும் போற்றவே செய்தனர்////
கோபாலன் சார் தங்களின் பல அற்புத தகவல்களுக்கு நன்றிகள்.
உண்மை தான் சார் எனது தந்தையார் நேருஜியின் எதிர்க்கட்சியினரைப் பற்றிய பார்வையை சிறுவயதிலே என்னிடம் கூறிய ஞாபகம் இருக்கிறது...... கொள்கையில் வேறுபட்டாலும் நாட்டுக்கு சிறந்த சேவைசெய்ய கூடியவர்கள், நல்ல பல உறுப்பினர்கள் எதிவரிசையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தனது கட்சியில் மிகவும் சாதாரணமான வேட்பாளர்களை நிறுத்தி, எதிர்க்கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வாராம்... அதனால் தான் அவர் மறைந்த போது தேசமே அழுதிருக்கிறது.

Alasiam G said...

////சத்தியமான வார்த்தைகள் ஆலாசியம் ஜி...////
என்னுடைய அபிப்ராயம் போன்று நீங்களும் அபிப்ராயப் படுவது மகிழ்ச்சி.
தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் நண்பரே!

Alasiam G said...

////ஆலாசியம், உங்கள் எழுத்து நடை மெருகு ஏறிக்கொண்டே போகிறது. வரவர கண்ணதாசனோட தாசன் ஆயிட்டீங்க போல!/////
தங்களின் ஆக்கம் வழக்கம் போல் அருமை உமா....
இப்போது தான் கண்ணதாசனைப் பற்றி படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.... அதோடு அவரை ஒரு சினிமா பாடகராகவே நம்மில் பலரும் அறிகிறோம்.. ஆனால் அவரின் வேறு பல பரிணாமங்களையும் தேடித் படிக்கவேண்டும் என்ற ஆவல் வருகிறது.... அவ்வளவு தான். பாராட்டிற்கு நன்றிகள் உமா.

iyer said...

ஊர் எதுவானாலும் இன்று
கார் காலம் நம் கண்களில் மட்டும்


படித்து அறிய செய்த செய்திகள்..
மடித்து வைத்த சோகத்தை விரித்து


வியப்பிலாழ்ந்தது ஆக்கியோன்மட்டுமா
விம்மி அழும் நாங்களும் தானே..


நீர் நிறைந்த கண்களுடன்..
சுமை நிறைந்த மனதுடன்...

iyer said...

பேய் கதையை எதிர்பார்த்தேன்..
ஓய் என்ன கதைவிடுகிறீர் என்கிறீரா..


நகைச்சுவையை தந்தாலும்
நல்ல கதையை தந்தாலும்..


ஒரு பேய்க் கதை தரும் relax
வேறு எதில் கிடைக்கும் என்கிறீர்கள்


வாழ்த்துக்களும் வணக்கங்களும்
வழக்கம் போல் உங்களுக்கும்..

Alasiam G said...

///// ஆலாசியத்திற்கும் இந்தத் தளத்தில் அதனை பதிப்பித்த உங்களுக்கும் பாராட்டுக்கள். /////
தங்களின் உள்ளம் கனிந்தப் பாராட்டிற்கு நன்றிகள் அமுதவன் சார்...

Alasiam G said...

////வியப்பிலாழ்ந்தது ஆக்கியோன்மட்டுமா
விம்மி அழும் நாங்களும் தானே.////

பின்னூட்டக் கவியே - உமது
பின்னூட்டம் தரும் தன்னூடத்தாலும்
கண்ணுதல் மலையோன் கருணையாலும்
இன்னும் பல நல்ல தொகுப்பில்
கண்ணுதல் உருவோம்.
நன்றிகள் அய்யரே!

minorwall said...

/////
நாட்டிலோ !, வீட்டிலோ !!, காட்டிலோ !!!..... தாமரைகள், அவைகள் எந்தச் சேற்றில் முளைத்தால் என்ன?

அவைகள்; நிறத்தால், அளவால் வேறுபட்டால் என்ன?. ஆனால், அவைகள்; அழகாலும், மணத்தாலும் ஒன்றல்லவோ!

எங்கோ பிறந்து; எப்படியெல்லாமோ வளர்ந்து; முப்பெரும் மேதைகளின் சங்கமம் எப்படி நடந்தேறியது! இதுவே, என்னை பெரிய வியப்பாய் ஆழ்த்தியது./////////

இப்படியொரு விஷயத்தைப் பற்றி எழுத தோன்றிய காரணம் புதுமை..
உங்களின் எழுத்தின் புதிய பரிமாணம் காண
இந்தக் காரணம் காரணமாய் அமைந்ததென்னவோ முற்றிலும் புதுமைதான்..
செந்தாமரை என்றாலே சேற்றில் விளைவது என்றாகிவிட்ட போது காட்டிலோ வீட்டிலோ செந்தாமரை வளர்வது இயலாதென்றே நினைக்கிறேன்..
காடோ வீடோ நாட்டுக்குள்தான் அடக்கம் என்ற ரீதியில் பார்த்தாலும் தாமரையைப் பறித்து அணிந்து நாட்டாண்மை செய்வதென்னவோ நாட்டுக்காரர்கள்தான் என்ற பொருளும் பொதிந்து கிடக்கக்கண்டேன் இந்த நாட்டரசரைப் பற்றிய உங்களின் எழுத்தில்..

minorwall said...

சீட்டாட்டத்துக்கு காரணமாய் அமைந்த வேலையில்லாத்தனத்தை" idle mind is the devil 's workshop "என்று கூறுவார்கள்..பல சமயங்களில் எனக்கும் சீட்டாடிய அனுபவம் உண்டு..
அப்போது மாமா என நான் செல்லமாக அழைக்கும் ஒரு நண்பர் இப்போது உலகில் இல்லை..எதார்த்தமான பழக்கமாக அமைந்த இந்த நட்பு சில சிக்கலான பிரச்சினைகளின் போது கூட இருந்து தோள் கொடுத்த தோழர்களை உருவாக்கிக் கொடுத்தது.."a friend in need is a friend indeed "

நெஞ்சில் பசுமை நினைவுகளை தவழவிட்ட எழுத்தாளருக்கு நன்றி..

மற்றபடி வெட்டி ஆபிசரை திடீர் பொறுப்பாளியாக்கி வேலை போட்டுக் கொடுத்து சம்பளமும் சரியாய்க் கொடுத்து...ஆஹா..உங்கள் கருணையே கருணைதான் போங்க..

ஆமா..நீங்க இந்த எலக்ஷன்லே சீட் ஏதும் கேட்டுருக்கீங்களா?

ஏன்னா எல்லாத்தையுமே இலவசமாக் கொடுக்க போட்டி போடுற ஆளுங்ககிட்டேருந்து வித்தியாசமா வேலை, சம்பளம்ன்னு யோசிக்குறவுங்களுக்கு ஓட்டுப் போடலாமேன்னுதான் கேட்டேன்..

Alasiam G said...

//// புதுமைதான்..
செந்தாமரை என்றாலே சேற்றில் விளைவது என்றாகிவிட்ட போது காட்டிலோ வீட்டிலோ செந்தாமரை வளர்வது இயலாதென்றே நினைக்கிறேன்..
காடோ வீடோ நாட்டுக்குள்தான் அடக்கம்/////
வாருங்கள் மைனர்வாள்....
நீங்க கூறும் காரணத்தை நானும் யோசித்தேன்... அப்போது என் மனதில் தோன்றிய பதில் இருவிதமானது.... ஒன்று தவறாக சித்தரிப்பதாக ஆகிவிடக் கூடுமோ? என்று யோசித்தபோது... இன்னொரு பதிலும் வந்தது.... அந்த மூவரும் பிறந்து வளர்ந்த சூழலைப் பற்றியது (வேறு பேதம்; அர்த்தம்மற்றப் பேதம் காரணமாகாது அப்படி குறுக்கிடுமானால் இவ்வளவு தூரம் தமிழை விரும்பி படித்து புரிந்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும் அல்லவா) .... மூன்றாமவர், நமது ராசா... கரிசல் காடுகளில் சுத்தி திரிந்து இயற்கையோடு ஐக்கியமானவர்... (காட்டிலே பூத்த தாமரை) அவரின் சுய சரிதையில் அதைக் காண முடிகிறது.... ஆடுகளை மேய்த்து திரிந்ததாக ஒன்பதுக்கு மேல் படிக்கவே முடியாமல் போனதாக கூறுகிறார்.... ஆனால் அவர் அண்ணனின் ஆர்மோனியப் பெட்டியை தொட்டதற்கும் அதில் பெற்ற இன்பமும் அவர் வரையறை செய்யும் போது அஹா!!! எனத் தோன்றும்... மெத்தப் படிக்காதவர்.... மெத்தையில் துயிலாதவர்.... மென்மையான வாழ்க்கையை வாழ்வின் முதல் பாதியில் கனவில் கூட கண்டிடாதவர்.... கம்யூனிச கொள்கைகளை பாடல் களாக கிராமம் தோறும் பாடி எதோ கிடைத்ததை கொண்டு வாழ்ந்தவர். 1969 -ல் எங்கள் ஊருக்கு வந்ததாக என் தந்தையார் கூறுவார்.

இரண்டாமவர் நமது கவியரசர்.... பிறக்கும் போது அத்தனையும் பெற்று ஒரு ஊர் போன்று இருக்கும் பெரிய வீடுகளிலே வளர்ந்து வந்தவர்.... அவரின் பாடம் அத்தனையும் அவரை சுற்றியே இருந்தது.... (வீட்டினுள் பூத்த தாமரை). இன்னமும் சில பெரிய வீடுகளில் சிறிய தாமரை குளங்கள் உண்டு என்று அறிகிறேன்... கோட்டையூரிலே (காரைக்குடி அருகே உள்ள ஊர்) ஆயிரம் சன்னல் கொண்ட வீடு ஒன்று உண்டு.
ராஜ சர் அண்ணாமலை அவர்களின் வீடு கானாடுகாத்தானில் உள்ளது அந்த வீட்டில் சிறிய தாமரைகுளம் இருப்பதாக கேள்வியுற்றேன். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப் படம் அங்கு எடுக்கப் பட்டது...

மூன்றாமவர் நமது நேரு மாமா அவரைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம் லண்டனில் அவர் பயிலும் போது அந்தக் கல்வி நிறுவனத்தின் நான்கு நுழைவாயிலும் ஒரே நேரத்தில் அவருக்காக சிற்றூந்து வந்து நிற்குமாம். இந்தியாவில் இருந்த போதுகூட லண்டனில் சலவை செய்து துணிகளை கொண்டுவரப் பெற்றார்கள் என்றும் கேள்வியுருகிறேன்.. ஆக அவ்வளவு உயர்ந்த குபேர வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதால் அவரை நாட்டில் பூத்த தாமரை என்றேன்... ஆக அவர்கள் பிறந்து வாழ்ந்த சூழல் வேறு... அந்த சேற்றின் தன்மை வேறு... ஆனால் மூன்றுத் தாமரையும் ஒன்றே என்பதாக எனக்குத் தோன்றியது அது தான் அந்த பதில்......

உங்களின் காரணம் பற்றியக் கேள்வி அருமை... எல்லோருக்கும் பொதுவான இவர்கள் மூவருக்கும் யாரும் தனிப் பட்ட உரிமை கொண்டாட முடியாது.... அப்படி செய்தால்? அவர்களின் விசாலமற்ற எண்ணமே! வேறாகாது... அதோடு உரிமை என்றால் அதை நாமாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.... வேறு யாரும் தருவார்கள் என்றால் கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சும்.... அதுவும், 35 -க்கும் 6 -க்கும் உள்ள வித்தியாசமாகவே போகும். எவ்வளவு காத்திருந்தாலும் 18 - ல் வந்து படுத்துக் கொள்ளும்.

எனக்கு விளக்கம் தர நல்ல வாய்ப்பும் கிடைக்கப் பெற்றேன்... தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் நண்பரே!.. அடிக்கடி வகுப்பறைக்கு வாருங்கள்.. நன்றி மைனர்வாள்.

minorwall said...

"அறிந்தது, அறியாதது, தெரிந்தது,தெரியாதது,புரிந்தது, புரியாதது அனைத்தும் யாமறிவோம்"
அப்பிடிங்குற ரீதியிலே செமயா பதில் சொல்லிருக்கீங்கோ.. நல்லது..சும்மா..ஒரு இதுக்காக சொன்னேன்..
////அதோடு உரிமை என்றால் அதை நாமாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.... வேறு யாரும் தருவார்கள் என்றால் கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சும்.... அதுவும், 35 -க்கும் 6 -க்கும் உள்ள வித்தியாசமாகவே போகும். எவ்வளவு காத்திருந்தாலும் 18 - ல் வந்து படுத்துக் கொள்ளும்.////

நீங்க யாரோ கறுப்புத் துண்டு போட்ட ஆளு பத்தி பேசுறீங்கன்னு நினைக்குறேன்..

இந்த வருஷம் எலெக்ஷன்
பேச்சுவார்த்தை பேரமெல்லாம் நான் அவ்வளோ சீரியஸா கவனிக்கலை..
என் கதைய பார்க்கவே நேரம் சரியா இருக்கு..

சில நேரம் பேரம் பேசும்போது கடைசி வரைக்கும் இழுப்பது லாபமா, ரொம்ப விவரமாத் தோணும்..
அதுனாலே மத்தவுங்கல்லாம் சேர்ந்து ஒரு முடிவுக்கு வர்றப்ப கூட வாரக்கடைசி வரைக்கும் பார்க்கலாம்ன்னு சொல்லி இழுத்தடிச்சு தனி ஆவர்த்தனம் பண்ணி பார்க்கக்கூடத் தோணும்...
அது என்னவோ கடைசிலே சொந்தத்துலே சூனியம் வெச்சுக்குறாப் போலே ஆயிடுச்சு போங்க..

Alasiam G said...

நன்றி நண்பரே!

பதில் எழுதுனப் பிறகும் கூட ஒரு உறுத்தல் இருந்தது.... உங்களின் கேள்வியை நான் சரியாகப் புரிந்து தான் எழுதியுள்ளேனா? என்று. அவ்வளவு திறமையா உங்களின் கேள்வி இருந்தது. அது வாழைப் பழத்தில் அல்ல வெண்ணையில் நுழைத்த ஊசிப் போல. நன்றி மைனர்வாள்.

எவ்வளவு அடிச்சு வெளுத்தாலும் வெள்ளையாகாது / அழுக்குப் போகாது, காரணம் அது வெள்ளைத் துணியல்ல... கரும் பாரைகல்லு....
வேறு வழியில்லாமல் அதை வெளுத்ததுக்கு வானத்திற்கே வெள்ளையடித்து இருக்கலாம்....
எல்லோரும் இங்கே வாங்க இங்கே வாங்க நல்ல எதிர்காலம் இருக்கு (??????) என்கிறார்கள்? அவர்களின் எண்ணத்தைச் / என்னத்தச் சொல்ல... !!!
ஏதாவது இந்த சமூகத்துக்கு செய்யணும்னு நினைக்கிரவுங்க.... எல்லா இடத்திலும் சிதறிக் கிடக்கிறாங்க...

யாரை நம்புவது.. யாருக்காக பேசுவது...
"நீங்கள் அத்தனைபேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்" என்றால், என்ன பதில் வரும்!
"யாரைத்தான் நம்புவது பேதையின் நெஞ்சம்.. அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்"

///இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து
வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும்.//// இப்படி தான் நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்!!!

குடிமகன் வாக்களிக்க பணம் வாங்கிய போதே எல்லா ஜனநாயக உரிமையையும் இழந்துவிட்டான்.... அவனுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்று ஐந்தோ, பத்தோ கொடுத்து காரியத்தை சாதிக்கும் போது அவனும் அந்தச் சாக்கடையில் குதித்துவிட்டான்.... இன்று பேசப்படும் ஊழல்கள் யாவும்... ஒரு லஞ்சஊழல் என்னும் ஆலமரத்தின் மரக்கிளையில் பழுத்த ஒரு பழமே... அந்த லஞ்ச ஊழல் ஆலமரமே வெட்டி சாய்க்கப் படவேண்டும் அது ஆணிவேரோடு பிடிங்கி எறியப் படவேண்டும்.

அது எப்படி நடக்கும்! புதிய திருடன் கையில் இருக்கும் அதிகாரத்தைப் பிடுங்கி பழைய திருடன் கையில் கொடுப்பதாலா?. வேறென்ன சொல்லமுடியும். பொதுவுடை தத்துவம் மெல்ல மல்ல செத்துக் கொண்டிருக்கிறது... அப்படி அதை இன்றைய சூழலுக்கு சீர் திருத்த வேண்டியவர்கள் யாவரும் ஆகாது போகாதுகளை தூக்கி உட்காரவைத்து வைத்து மாத்தி மாத்தி பல்லக்கு தூக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.... பாவம், அவர்கள் எல்லோருக்கும் வயதாகிவிட்டது. மேலும், இப்போது பெரும்பாலும் போக்கத்தவர்களின் புகழிடமாக ஜனநாயகக் கோட்டைகள் மாறிக்கொண்டிருக்கின்றது...

இளைஞர்களும், மாணவர்களும், தேசிய அபிமானிகளும் சேர்ந்து புதியதோர் பாரதம் படைக்க ஏதாவது செய்யவேண்டும்.
அடிமைப்பட்ட மக்களுக்கு அறிவு தர முயலுவோமா? முடியாது கிறுக்கன்கள் என்ற பெயர் தான் மிஞ்சும்... வேறென்ன செய்ய முடியும்... பாராளுமன்றத்தையும் சட்டமன்றத்தையும் நிரப்பும் மாக்களை விரட்டி விட்டு அறிவார்ந்த மக்களை அமர்த்தவேண்டும்.... எப்படி?????.

தேர்தல் ஆணையம் தனது சட்ட திட்டங்களை திருத்த வேண்டும்.... அரசில் பணிபுரிய ஒரு கடை நிலைப் பணியாளனுக்கே.. கல்வித் தகுதி வேண்டும் எனும் போது... நாட்டை ஆளப் போகும் மக்களுக்கு அது தேவையா? இல்லையா? சரி படித்தவன் எல்லாம் நல்லவனா? இல்லை. படிக்காத நல்லவர்களும் இருக்கிறார்கள் / இருந்தார்களே... அவர்களுக்கு அந்தத் தகுதி இல்லையா?....

சரி என்ன செய்யலாம்.... தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கு பலவேறு தகுதி அடிப்படையில் (கல்வி, போது அறிவு, தூரநோக்கு பார்வை, பழைய புதிய திட்டங்களைப் பற்றிய அறிவு, வரலாறு, உலக நடப்பு இவைகளைப் பற்றிய தேர்வுகளும்.... இன்னும் மனம் மற்றும் உளவியல் சம்பத்தப் பட்ட கேள்விகளுடன் கூடிய நேர்முகத் தேர்வுகளும் நடத்தி.. தேர்தல் ஆணையம் தகுதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்... அந்தச் சான்றிதழ் பெற்றவர்கள் தான் தேர்தலில் போட்டி இடவேண்டும் என்ற ஒரு நிலை வர வேண்டும்.. அதற்கு இளைஞர்களும், தேச அபிமானிகளும், ஓன்று சேர்ந்து போராடி புது புரட்சி செய்ய தெருவில் இறங்க வேண்டும்.. நடக்குமா? நடக்கும்... அதனை நோக்கித் தான் இப்போது இந்த அவல அரசியல் நடை போடுகிறது....

ஆக, மூலத்தை சரி செய்யாமல்; இவன் இல்லை என்றால் அவன் என்று போவது நிச்சயம் ஒரு தீர்வாகாது.

தேர்தல் ஆணையமும் புதிதாக வியாதி பரவாமல் தடுப்பதை விட்டு விட்டு... வியாதி வந்தவர்களையே கண்காணிக்கிறது.... நாலரை வருடம் நிரந்தர தூக்கம், பிறகு கடைசியில் ஆறு மாதம் மட்டும் தான் அவர்கள் வேலையை செய்கிறார்கள்.. இடையிலே தூக்கம் கலையாது... தூக்கத்தில் எழுந்து கழிவறைப் போவது போல் இடைத் தேர்தலுக்கு விழிக்கிறது... அரசியல் வாதிகள் அப்படித்தான்..... உண்மையான தேசிய வாதிகள்; சக்தியும் புத்தியும் உள்ளவர்கள்... ஏதாவது செய்ய வேண்டும்... வெகு சீக்கிரம் நடக்கும்... எதிர் பார்ப்போம்.

Uma said...

திரு. ஐயர்! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

Uma said...

எழுத்தாளருக்கு நன்றி.. //

இதுல உள்குத்து ஏதாவது இருக்கா?

மற்றபடி வெட்டி ஆபிசரை திடீர் பொறுப்பாளியாக்கி வேலை போட்டுக் கொடுத்து சம்பளமும் சரியாய்க் கொடுத்து...ஆஹா..உங்கள் கருணையே கருணைதான் போங்க..//

ரொம்ப அபத்தமா யோசிச்சுட்டேனோ?

நீங்க இந்த எலக்ஷன்லே சீட் ஏதும் கேட்டுருக்கீங்களா?// கட்சி நிதி தர நீங்க தயாரா சொல்லுங்க நான் சீட்டு கேட்டுடறேன்.

ஏன்னா எல்லாத்தையுமே இலவசமாக் கொடுக்க போட்டி போடுற // இவங்க எல்லாரும் சேர்ந்து தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கிட்டுதான் விடுவாங்க.

Uma said...

பல சமயங்களில் எனக்கும் சீட்டாடிய அனுபவம்//

சீட்டாடுவது தவறு என்ற கண்ணோட்டத்தில் இதை எழுதவில்லை. எந்த விஷயமுமே தவறு என்று நான் நினைப்பதில்லை. எல்லாமே நாம் எந்த அளவு வரை போகிறோம் என்பதைப்பொறுத்தது. எதுவுமே பொழுதுபோக்கு என்ற எல்லைக்குள் இருக்கும்வரையில் பிரச்சனையில்லை. நாங்களும் விடுமுறையில் விளையாடியிருக்கிறோம். என் சித்தப்பா ஒருவர் சீட்டாட்டத்தில் எக்ஸ்பெர்ட். அவரை ஜெயித்துக்கான்பிக்கிறேன் என்று சவால் விட்டு ஒரு முறை இரவு இரண்டு மணிவரை விளையாடியும், ம்ஹூம், ஜெயிக்க முடியவில்லை. அவரும் தினம் சீட்டு விளையாடுவார். ஆனால் சீட்டாட்டத்தில் ஒரு வரைமுறைக்குள் இருந்தவரால் குடிப்பழக்கத்தில் இருக்கமுடியவில்லை. இன்று அவரே இல்லை. என் சித்தி பட்ட கஷ்டங்களை நேரில் பார்த்திருக்கிறேன்.

Uma said...

இந்த நட்பு சில சிக்கலான பிரச்சினைகளின் போது கூட இருந்து தோள் கொடுத்த தோழர்களை உருவாக்கிக் கொடுத்தது.//

எல்லாருக்கும் அது மாதிரி அமைவதில்லை, அதில்தான் சிக்கல்.

என் தாத்தா (அப்பா வழி) நிஜமாவே ஒரு மைனர் வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் அப்பாகிட்ட ஏகப்பட்ட சொத்து இருந்தது. அதைத்தவிர பாட்டியிடமும் ஏகப்பட்ட நகைகள். தங்கத்திலேயே ஒட்டியாணம் போட்டிருந்தார்களாம் (பாட்டி ரொம்ப குண்டா இருப்பா). எல்லாத்தையும் சீட்டாட்டத்திலையும் / கிண்டி race லையும் தொலைத்தார். இத வெச்சுதான் கதை எழுத ஆரம்பிச்சேன். ஆனா எழுதும்போது flow சரியா வரல. சரின்னு அப்படியே மாத்திட்டேன். இன்னும் சிறிது இடைவேளைக்குப் பிறகு இதை கருவா வெச்சு ஒரு கதை வரும், be careful !

Uma said...

காடோ வீடோ நாட்டுக்குள்தான் அடக்கம் என்ற ரீதியில் பார்த்தாலும் தாமரையைப் பறித்து அணிந்து நாட்டாண்மை செய்வதென்னவோ நாட்டுக்காரர்கள்தான் என்ற பொருளும் பொதிந்து கிடக்கக்கண்டேன் இந்த நாட்டரசரைப் பற்றிய உங்களின் எழுத்தில்..//

அதுவும், 35 -க்கும் 6 -க்கும் உள்ள வித்தியாசமாகவே போகும். எவ்வளவு காத்திருந்தாலும் 18 - ல் வந்து படுத்துக் கொள்ளும்.//

அதுனாலே மத்தவுங்கல்லாம் சேர்ந்து ஒரு முடிவுக்கு வர்றப்ப கூட வாரக்கடைசி வரைக்கும் பார்க்கலாம்ன்னு சொல்லி இழுத்தடிச்சு தனி ஆவர்த்தனம் பண்ணி பார்க்கக்கூடத் தோணும்...//

எவ்வளவு அடிச்சு வெளுத்தாலும் வெள்ளையாகாது / அழுக்குப் போகாது, காரணம் அது வெள்ளைத் துணியல்ல... கரும் பாரைகல்லு....//

ஆஹா! இரண்டு இலக்கியவாதிகள் கூட்டு சேர்ந்து என்னென்னவோ பேசிக்கிறாங்க. நமக்கு ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குதே. (உமா பேசாம எஸ்கேப் ஆயிடு!)

Alasiam G said...

////இன்னும் சிறிது இடைவேளைக்குப் பிறகு இதை கருவா வெச்சு ஒரு கதை வரும், be careful !/////

ஹா! ஹா!.... எக்ஸ் க்யுஸ் மி.... இது தானா வந்திருச்சு...

உண்மைதான்... பெரும்பாலும் எங்கேயோ ஒரு தீ பொறி இருக்கும் அந்த தாக்கம் தான் எழுத்தில் பிரதி பலிக்கும்...
சிறுமை கண்டு பொறுக்காத கலைஞர்கள் தங்களது ஆதங்கத்தை இப்படி வடிகாலாய் வடிப்பது....
சரி, அடுத்த கதையை ஆவலுடன் நானும் எதிர் பார்கிறேன் உமா...

Alasiam G said...

இதையும் சொல்ல விட்டுட்டேன்...
நம்ம வாத்தியார் கூட சென்ற சிறுகதையில் "உண்மைக்கு ஒரே வடிவம்" இதில்

////“பால் குடித்த கதையா? அது என்ன கதை?”

“அவர் கைப்பிள்ளையாக இருந்த காலத்தில் எங்கள் தாயாருக்கு பால் ஊறல் இல்லாததால் - எங்கள் வீட்டுத் தோட்டத்தில் குடியிருந்த பெண்மணி அவருக்கு ஆறுமாதம் தாய்ப்பால் கொடுத்தாளாம்!”////

இப்படி எழுதியிருக்கிறார்.... இதிலும் இது போன்ற ஒரு உண்மையான தீப் பொறி உள்ளது என்றே அன்று எனக்கு அன்றுத் தோன்றியது இது கற்பனைக்கு அப்பாற் பட்டது...... வாத்தியார் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது.. கேள்விப்பட்டது.... ஆம், இல்லை என்று பதில் சொல்லவார் என நம்புகிறேன்.

Alasiam G said...

////ஆஹா! இரண்டு இலக்கியவாதிகள் கூட்டு சேர்ந்து என்னென்னவோ பேசிக்கிறாங்க. நமக்கு ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குதே. (உமா பேசாம எஸ்கேப் ஆயிடு!)////

ம்ஹூம் உமா... நீங்க இப்படிச் சொல்லிட்டு தப்பிட முடியாது....இன்றைக்கு பலரும் ஒதுங்கிக்கிற மாதிரி நீங்களும் ஒதுங்கக் கூடாது. உங்க பங்குக்கும் சரியானதை சொல்லிடுங்க.

minorwall said...

///Uma said... கட்சி நிதி தர நீங்க தயாரா சொல்லுங்க நான் சீட்டு கேட்டுடறேன்.////
நாங்களே சுனாமிலே அடிபட்டு யாராவுது நிதி கொடுப்பாங்களான்னு பார்த்துட்டுருக்கொமாம்.இதுல இவுங்களுக்கு கட்சி நிதியாம்லே..
அப்பிடியே ஏதும் செட் ஆனாலும் நீங்க ரொம்ப லேட்..
மாற்று வேட்பாளரா ஏற்கனவே அப்ளை பண்ணியிருந்தா ஏதும் சான்ஸ் இருந்துருக்கும்..
இப்போ கூட தேசிய கட்சியின் மாநிலத் தலைவரு அந்த ரூட்லே காரியத்த கச்சிதமா முடிச்சுட்டாரே..
இருந்தாலும் வருங்காலத்த நினைச்சு சொல்றேன்..
இப்பிடி பிராக்டிகலா கணக்கு பண்ணித்தான் அண்ணன் ஆலாசியம் சொன்ன எல்லா
பொ(போ)லிட்டீசியன்களும் இங்கயா, அங்கயான்னு தெறிச்சு ஓடுறது..
நீங்க டைரெக்டா பாயின்ட் பண்ணி நிதி டாபிக்லே தின்க் பண்ணுரதாலே
நம்மூரு பாலிடிக்சுக்கு பேசிக் குவாலிபிகேஷன்ஸ் க்ரைடீரியா லே த்ரூ ஆயிட்டீங்க போங்க..

minorwall said...

////\\\எழுத்தாளருக்கு நன்றி.. //

இதுல உள்குத்து ஏதாவது இருக்கா?\\

நாங்க உள்குத்து எல்லாம் ட்ரை பண்றதில்லே..

வெளிகுத்துதான்..

minorwall said...

///ஆஹா! இரண்டு இலக்கியவாதிகள் கூட்டு சேர்ந்து என்னென்னவோ பேசிக்கிறாங்க. நமக்கு ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குதே. (உமா பேசாம எஸ்கேப் ஆயிடு!)///

ஆமாமா. எஸ்கேப்...
ஜூ -------ட்......
மண்டையிலே இருக்குறது களிமண்ணா இருந்தா புரியாதுதான்..(சந்தடி சாக்குலே "இலக்கியவாதி" ன்னதை அப்புடியே கண்டுக்காமே கிரெடிட் லே வச்சுக்கோ மைனர்..)

Uma said...

அடுத்த கதையை ஆவலுடன் நானும் எதிர் பார்கிறேன் உமா...//
கூடிய சீக்கிரம் எழுதறேன்.

Uma said...

இன்றைக்கு பலரும் ஒதுங்கிக்கிற மாதிரி நீங்களும் ஒதுங்கக் கூடாது. //

இவங்க இவ்வளவு கேவலமா நடந்துக்கறதைப்பார்த்தா ஏதாவது சொல்ற மாதிரியா இருக்கு?

Uma said...

நம்மூரு பாலிடிக்சுக்கு பேசிக் குவாலிபிகேஷன்ஸ் க்ரைடீரியா லே த்ரூ ஆயிட்டீங்க போங்க..//

ஹி ஹி, இதெல்லாம் நமக்கு ஜுஜுபி. பதவி கிடைச்சதுக்கு அப்புறம் பாருங்க.

Uma said...

மண்டையிலே இருக்குறது களிமண்ணா இருந்தா புரியாதுதான்..(//

உங்களுக்கு என்ன மூளை 78 கிலோன்னு நினைப்பாக்கும்?

Uma said...

மண்டையிலே இருக்குறது களிமண்ணா//

நீங்க என்னை சொல்றீங்க. உங்களைப்பத்தி தமிழ்ல ஒரு பிரபல பழமொழியே இருக்கு.

"இலக்கியவாதி" ன்னதை அப்புடியே கண்டுக்காமே கிரெடிட் லே//

ம்ம், கூடிய சீக்கிரமே நேரு திடல்ல உங்களுக்கு ஒரு பாராட்டு விழாவுக்கு பிரதமர்கிட்ட சொல்லி ஏற்பாடு செஞ்சுடறேன். பொன்னாடை, பொற்கிழி எல்லாம் கிடைக்கும். ரெடியா இருங்க.

minorwall said...

////////Uma said... நீங்க என்னை சொல்றீங்க. உங்களைப்பத்தி தமிழ்ல ஒரு பிரபல பழமொழியே இருக்கு/////

நீங்க சுத்தி வளைச்சு என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது..
ரொம்ப சிரமப்பட்டு என் புனைப்பெயரை பிரபலமாக்க முயற்சிக்கவேண்டாம்..

minorwall said...

////Uma said... ம்ம், கூடிய சீக்கிரமே நேரு திடல்ல உங்களுக்கு ஒரு பாராட்டு விழாவுக்கு பிரதமர்கிட்ட சொல்லி ஏற்பாடு செஞ்சுடறேன். பொன்னாடை, பொற்கிழி எல்லாம் கிடைக்கும். ரெடியா இருங்க.////

நன்றி..நன்றி..நன்றி..
உடன்பிறப்புகளோட ரெடி ஆயிடுறோம்..

Uma said...

என் புனைப்பெயரை // அந்த பழமொழி இல்ல, இது வேற. கண்டுபிடிங்க பாக்கலாம்

Uma said...

உடன்பிறப்புகளோட ரெடி ஆயிடுறோம்..//

!!!!!!! விட்டா ஒரு ஊரையே கூட்டிட்டு வந்துடுவீங்க போல!

minorwall said...

///////Uma said...
என் புனைப்பெயரை // அந்த பழமொழி இல்ல, இது வேற. கண்டுபிடிங்க பாக்கலாம்////

அதான் 78 கிலோ மூளை எனக்கு இல்லேன்னு நீங்களே சொல்லிட்டீங்களே..
அதுனாலே ஹெட்வெயிட்
அதிகமா உள்ள நீங்களே பதிலையும் சொல்லிடுங்க..

Uma said...

அதுனாலே ஹெட்வெயிட் அதிகமா உள்ள நீங்களே பதிலையும் சொல்லிடுங்க..//

அவ்ளோ சீக்கிரமா எல்லாம் சொல்லமாட்டோம். சார் கிட்ட வேணா கேட்டுப்பாருங்களேன். (இது க்ளூ)

mohan said...

கூறிய விழிகள்:

கூரிய விழிகள்: எது சரி.

கூறிய:=சொன்ன
கூரிய= கூர்மையான.

sivasankaravadivelu said...

நேரு இறக்கும் பொது எனக்கு வயது 11
.அன்று நடந்தது
இன்றும் ஞாபகத்தில் உள்ளது .செய்தி கேட்டு என் அப்பா சொன்னார்கள்
நேரு சர்க்கார் என்று சொல்வது எப்படி நன்றாக உள்ளது.லால்பகதூர்
சாஸ்த்ரி சர்க்கார் என்று சொன்னால் சரியாக வரவில்லை என்று
சொன்னார்கள் .அதுபோல் அந்த சர்க்காரும் நிலைக்கவில்லை .