மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.3.11

Astrological Lessons பாழாகிப் போவதும், சேதமில்லாமல் கிடைப்பதும்!

---------------------------------------------------------------
Astrological Lessons 
பாழாகிப் போவதும், சேதமில்லாமல் கிடைப்பதும்!

தசா புத்திப்பலன்களை ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்து வருகிறோம். நானும் தொடர்ந்து எழுதிவருகிறேன். நீங்களும் படித்துவருகிறீர்கள்.

முதலில் புத்தி நாதன் புதனின் திசையைக் கையில் எடுத்துக்கொண்டேன். புதன் திசையில் கேது புத்தி எப்படி இருக்கும் என்று பார்த்தோம். பதிலுக்கு கேது திசையில் புதன் புத்தி எப்படி இருக்கும் என்றும் பார்த்தோம்.

அதுபோல, புதன் திசையில் சுக்கிர புத்தியும், சுக்கிர திசையில் புதன் புத்தியும், புதன் திசையில் சூரிய புத்தியும், சூரிய திசையில் புதன் புத்தியும் எப்படி இருக்கும் என்றும் பார்த்தோம். அடுத்து புதன் திசையில் சந்திர புத்தியையும், பதிலுக்கு சந்திர திசையில் புதன் புத்தியையும் பார்த்தோம். பிறகு அதே புதன் திசையில் செவ்வாய் புத்தி எப்படி இருக்கும் என்றும், பதிலுக்கு செவ்வாய் திசையில் புதன் புத்தி எப்படி இருக்கும் என்றும் பார்த்தோம்

அந்த வரிசையில், இன்று புதன் திசையில் ராகு புத்தியையும், ராகு திசையில் புதன் புத்தியையும் பார்ப்போம்

இரண்டின் கால அளவு:
புதன் திசையில் ராகு புத்தி = 17 X 18 = 306 = 30 மாதங்கள், 18 நாட்கள்
ராகு திசையில் புதன் புத்தி = 18 X 17 = 306 = 30 மாதங்கள், 18 நாட்கள்

(சூத்திரப்படி பெருக்கி வந்த முதல் இரண்டு எண்களும் மாதங்களைக் குறிக்கும், கடையில் உள்ள எண்ணை மூன்றால் பெருக்க வருவது நாட்களாகும்)

புதன் திசையில் ராகு புத்தி நன்மையளிக்காது. நெற்றியடியாக ஒரு வார்த்தையில் பாடலி எழுதிய மகான் சொல்லிவிட்டார். என்ன சொல்லியிருக்கிறார்? பாழான மாதங்கள் என்று மொத்த தசாபுத்தியையும் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார். பாடலைப் பாருங்கள்.

பலனில்லா  புதன் திசையில்  ராகுபுத்தி
பாழான  மாதமது  முப்பதாகும்
நலமில்லா  நாளதுவும்  பதினெட்டாகும்
நன்றாக  அதன்  பலனை   நவிலக்  கேளு
பலமில்லா  பிணிகளுடன்  மயக்கம்  சேதம்
பிரட்டான  சத்துருவால்  பேதையர்கள்  யாவும்
நலமில்லா  வியாதியினால்  நற்பொருளுஞ் சேதம்
நன்றான  வீடு முதல்  பூமி நிதி  போமே
!!!

சரி ராகு திசையில் புதன் புத்தி எப்படி இருக்கும்? டிட் ஃபார் டாட்..என்று பதிலுக்குப் பதில் செய்யாமல், புதன் ராகு மகா திசையில் வரும் தன்னுடைய புத்தியில் நன்மையைத்தான் கொடுக்கும். இங்கேயும் பாடலின் மூலம் பலனைச் சொன்ன முனிவர் அசத்தலாக ஒரே வார்த்தையில் ‘ சேதமில்லாத’ மாதங்கள் என்று சொல்லி, நமது வயிற்றில் பாலை வார்க்கிறார். பாடலைப் பாருங்கள்

சேதமில்லா  ராகு திசை புதனார்  புத்தி
செப்பு  நாள்  மாதமது  முப்பதாகும்
பாதமில்லா  நாளதுதான்  பதினெட்டாகும்
பகுத்தறியும்  அதன் பலனை  பகரக்  கேளு
வாதமில்லா  வாணிபஞ்  செட்டாகும்  பாரு
வகையான  சகோதரமுடன்   வாழலாகும்
பேதமுடன்   பொருளுண்டாம்   பூமி லாபம்
பொங்குமால்  புத்திரனில்  புகழ்மிகப்பாரே!

பாடல்கள் எளிமையாக இருப்பதால் விளக்கம் எழுதவில்லை.

(தொடரும்)
++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்,
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

6 comments:

  1. தெளிவுற மொழிதல்" என்பதற்கு ஏதாவது எடுத்துக்காட்டு வேண்டும் என்றால் வகுப்பறை ஐயாவின் ஆக்க‌த்தைப் படியுங்கள் என்று சொல்லிவிடலாம் போல
    உள்ளது. இரண்டு பாடல்களும் மனப்பாடம் செய்து வைக்க வேண்டும்!பலனை ரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டன பாடல்கள்.

    வீட்டில் இணைய‌ இணைப்பு கிடைத்து விட்ட‌தால் இனி கூடிய‌வ‌ரை முத‌ல் மாண‌வ‌னாக‌ப் பின்னூட்ட‌ம் இட வாய்ப்புக் கிடைக்கும்.ந‌ன்றி.

    ReplyDelete
  2. அற்புதம்.

    ஆசிரியரின் நடையும் பக்குவமும் அற்புதம்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. எளிமையான பாடல். ஆனால் எவ்வளவு தூரம் நினைவில் இருக்கும் என்றுதான் தெரியவில்லை.

    ReplyDelete
  4. டிட் ஃபார் டாட்..என்று பதிலுக்குப் பதில் செய்யாமல், புதன் ராகு மகா திசையில் வரும் தன்னுடைய புத்தியில் நன்மையைத்தான் கொடுக்கும்.

    இரண்டு நாளாக மனம் நொந்திருக்கும் எமக்கு - இக்கருத்து அடியவனுக்கு சொல்லப்பட் அறிவுரையாக படுகிறது ,,,

    தீமை செய்பவர்களே தங்களது கொள்கையில் பிடிவாதமாக இருக்கும்போது - நன்மை செய்பவர்கள் ஏன் பிடிவாதமாக இருக்கக் கூடாது ?


    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நண்ணயம் செய்து விடல்,

    சுபராகிய புதன் - அசுபராகிய ராகு திசையிலும் நன்மையே செய்வார் என்பது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று ,,,

    நன்றி வாத்தியார் அவர்களே,

    ReplyDelete
  5. சுருக்கமாக, சுப பலன்களைக் கொடுக்க கூடிய புதன் தசையில் ராகு புத்தி தீமையும், தீமை செய்யக் கூடிய ராகு தசையில் புதன் புத்தி நன்மையும் செய்யும் எனலாம். இருப்பினும் இதே புதன் ஏதாவது ஒரு துர்ஸ்தான அதிபதியாக வந்தால் என்ன செய்வார் என்று சொல்ல வேண்டியதில்லை. இந்த வகையில் இவற்றையெல்லாம் பொது பலனாகத்தான் எம்மால் பார்க்க முடிகிறது.

    ReplyDelete
  6. இது ...
    வருகை பதிவு..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com