மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

6.4.11

Astrology எப்போது புத்தி தெளிவுறும்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology எப்போது புத்தி தெளிவுறும்?

14.2.2011 அன்று தசா புத்திப் பலன்களை விரிவாக உதாரண பாடல்களுடன் எழுதத் துவங்கினேன். முதலில்  புதன் திசையில் சுக்கிர புத்தியை விளக்கியவன் தொடர்ந்து, புதன் திசைக்கு அடுத்து வரும் கேது
திசையில் சனி  புத்திவரை எழுதினேன். இன்று கேதுதிசையின்
கடைசி புத்தியான புதன் புத்திக்கு விளக்கம் அளித்துள்ளேன்.

இத்துடன் கேது திசை நிறைவுறுகிறது. அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சுக்கிரதிசையைக் கையில்  எடுக்க உள்ளேன்.

இன்று கேதுதிசையில் புதன்புத்திக்கும், அதேபோல புதன்திசையில் கேதுபுத்திக்கும் உரிய பலன்களுக்கான  பாடல்களைக் கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக!

வழக்கம்போல புதன் நன்மையைச் செய்கிறது. பதிலுக்கு புதன்திசையில் வரும் கேதுபுத்தி நன்மையைச் செய்யாமல்  தீமையையே செய்கிறது. அதை மனதில் கொள்ளவும்.

தீயவன் எங்கிருந்தாலும் தீமையையே செய்வான். அவன் எதைச்
செய்தாலும் தீமையே விளையும். ஆனால் கேது  ஞானகாரகன்
என்பதால், அவனுடைய தீமைகளால், நமது புத்தி தெளிவுறும்.
நல்லது கெட்டது உறைக்கும். நமது எதிரிகளையும், நமக்குத் துரோகம் செய்பவர்களையும் அடையாளம் காணமுடியும். மொத்தத்தில்
கேது திசை  முடிவில் நமக்கு ஞானம் உண்டாகும்.

பாரப்பா கேதுதிசை புதனார் புத்தி
   பாங்குள்ள மாதமது பதினொன்றாகும்
சேரப்பா நாளதுவும் இருபத்தேழு
   சேதமில்லா அதன்பலனை செப்பக்கேளு
வீரப்பா கொண்டு நின்ற மயக்கம்போய்நீ
   மேதினியில் நீயுமொரு மனுஷனாவாய்
சீரப்பா லட்சுமியும் சேர்ந்துகொள்வாள்
   தீங்கில்லா மனக்கவலை யில்லைகாணே!

வாழலாம் புதன் திசையில் கேதுபுத்தி
   வகையில்லா மாதமது பதினொன்றாகும்
குள்ளலாம் நாளதுவும் இருபத்தியேழு
   கொடுமையுள்ள அதன் பலனைக் கூறக்கேளு
மாளலாம் பகைவரும் உற்றார் நாசம்
   மணமில்லா வியாதியது மடித்துக் கொல்லும்
தேடலாம் திரவியங்கள் சேதமாகும்
   தினந்தோறும் சத்துருவும் நீதான் பாரே!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

6 comments:

kannan said...

உள்ளேன் ஐயா!.
வணக்கம்.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//தீயவன் எங்கிருந்தாலும் தீமையையே செய்வான்.//

சத்தியமான வார்த்தைகள் ஐயா...

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்

அடியன் அனுபவித்திருக்கிறேன் ஐயா...
தீயவர்களை எவ்வளவுதான் நாம் மன்னித்தாலும், அவர்கள் அவர்களது குணாதிசயத்திலிருந்து மாறுவதே இல்லை...

சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் தீமையே செய்கிறார்கள்,,,

ஆனால் கேது ஞானகாரகன் .. நன்றாக புரிகிறது ஐயா... நன்றி

CJeevanantham said...

Present sir.

Alasiam G said...

கேது அவ்வளவு கொடியவனா?
கண்டிப்பான ஆசிரியர்,
கடிந்து கொள்ளும் தந்தை;
கசக்கும் மருந்து;
கஷ்டத்தில் கண்டும்
காணாது செல்லும் உறவு;
வயதும், வாலிபமும்
வகையுடன் இருந்தும்
வறுமை வறுத்து
எடுக்கும் வாழ்க்கை; இன்னும்
எத்தனை,எத்தனையோ..
இவைகள் யாவும் ஞானம் தரும்.
இத்தனையும் தந்து
வாழ்வின் ஆழத்தை
அருகில் கொண்டு
காண்பிக்கும் குருவல்லவா கேது!

பொதுவாக கடுமையாக தெரிபவர்கள் யாவரும்
சத்தியவான்களாக இருப்பார்கள் இல்லை
சத்தியவான்கள் கடுமையாக இருப்பார்கள்
குருவான கேதுவும் அப்படியே, அவர்களின் கண்டிப்பு
தற்காலிக சந்தோசத்தை கெடுத்து
நிரந்தர சந்தோசத்திற்கான பாதையை
காட்டும் என்பதே அனுபவ உண்மை...

எந்த சிரமமுமே அறியாத வாழ்வில் தான்
என்ன சுவை இருக்கப் போகிறது?...

கேது வராதவரை
கேடென்பது அறியாது
கேடென்பது வராதவரை
கேள்வியும் எழாது
கேள்வி எழாதவரை
வாழ்வின் உண்மை நிலை தெரியாது.

"நெஞ்சமுண்டு நேர்மையுண்ட ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!...."

"நிமிர்ந்து நில்
துணிந்து செல்
தோல்வி
கிடையாது தம்பி....."

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதும் - இச்
ஜகத்தினில் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்..
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ...."

கேது தீயவனா! இல்லவே இல்லை...
தீயது, தீயவர், தீமை அனைத்தையும் உணர
தீட்சை தருபவன்...

ஞானம் தரும் கேதுவை நாளும் போற்றுவோம்
ஞானம் இல்லா வாழ்வதனை வீணென்று சாற்றுவோம்.
கேதுவை முன்னிறுத்தி நல் வாழ்விற்கு
வீதி சமைப்போம்.

பாடம் அருமை நன்றிகள் ஆசிரியரே!

kmr.krishnan said...

புத தசா கேது புக்தி, கேது தசா புத புக்தி இரண்டையுமே நல்லபடியாகக் கடந்து வந்தாயிற்று.நன்றி அய்யா!

iyer said...

இது வரூகை பதிவு ATTENDANCE Marked