மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.4.11

ஸ்டெல்லா சுசீலாவான கதை!

----------------------------------------------------------------------------------
 ஸ்டெல்லா சுசீலாவான கதை!

வாரமலர்
---------------------------------------------------------------------------------
"என்னடா விக்னேஷ்!? இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடரே!? நமக்கு இதெல்லாம் சரியா வருமா? சொன்னாக் கேளுடா! வேண்டாண்டா!"
அம்மா கண்ணீர் மல்கக் கை கூப்பிக் கொண்டு கேட்கிறார்.

அப்பா ஒன்றும் பேசாமல் மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டு "உர்" என்று முகத்தைப் வைத்துக் கொண்டு அமர்ந்துக் கொண்டிருக்கிறார்.

விக்னேஷ் சொன்ன விஷயம் அந்தக் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. அப்படி என்னதான் சொன்னான் விக்னேஷ்?

நவீன காலததில் புதிதாக அவ‌ன் ஒன்றும் சொல்லி விடவில்லை. நவ நாகரீக இளைஞர்கள் சொல்லாத எதையும் அவன் சொல்லி விடவில்லை.

"என் கூடப் பணி புரியும் பெண்ணை நான் விரும்புகிறேன்.கட்டினால் அவளைத்தான் கட்டுவேன்..."

வீட்டில் மெளனம் கவிந்து கொண்டது.யாரும் யாரோடும் பேசாமல் ஒரு வாரம் கடந்தது.

"விக்னேஷ்! வீட்டில் சொல்லி விட்டீர்களா?" அலுவலகத்தில் ஸ்டெல்லா கேட்டாள்.

"சொல்லிவிட்டேன்,ஸ்டெல்லா!அம்மாதான் கண்ணீரோடு வேண்டாம் என்று ஒருமுறை சொல்லியுள்ளார்கள்.அப்பா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு பேசா மடந்தைபோல உள்ளார்.ஒரு வாரமாக ஒருவரோடு ஒருவர் பேசவில்லை.தம்பியும், தங்கையும் என்ன செய்வது என்று தெரியாமல் மெளனம் சாதிக்கிறார்கள்"

"எங்க‌ள் வீட்டிலும் இதே கதைதான், விக்னேஷ்! அப்பா அம்மா அக்கா மூவருமே எதிர்ப்பு"

"வீட்டில் சம்மதிப்பார்கள் என்று தோன்ற‌வில்லை,ஸ்டெல்லா!"

"ஆமாம், விக்னேஷ்!வீட்டாரின் சம்மதத்துடன் நம் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை!"
 
"இன்னும் ஒரு வாரம் பார்ப்போம்!அவர்கள் சம்மதிக்காவிட்டால் பதிவுத் திருமணம் செய்து கொள்வோம்!என்ன சொல்கிறாய்,ஸ்டெல்லா?"

"இன்னும் கொஞ்சம் பொறுமை காப்போம், விக்னேஷ்! நம் சீனியர் வாசுதேவன் சாரிடம் ஆலோசனை கேட்கலாமா?"

"சரி!கேட்ப்போம்!"

மதிய இடை வேளையில் வாசுதேவன் சாரின் முன்னால் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு வந்து அமர்ந்த இருவரையும்,

"வாங்க!வாங்க!எப்படிப் போகுது உங்க‌ள் காதல்?" என்று உற்சாகமாக வரவேற்றார், சார்.

"அது விஷயமாகத்தான் சார், உங்களிடம் ஆலோசனை கலக்க வேண்டும்"

"கன்சல்டேஷன் ஃபீஸ் உண்டா?"என்று சிரித்துக் கொண்டே கேட்டார் வாசு சார்.

இருவர் இல்லங்களிலும் எதிர்ப்பு கடுமையாக இருப்பதை எடுத்துச் சொன்னார்கள்.

"நான் வேண்டுமானால் பேசிப் பார்க்கட்டுமா?" என்று முன் வந்தார் வாசு.

"ஓகே சார்!டபுள் ஓகே!" மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்கள் காதல் ஜோடி!

முதலில் விக்னேஷ்தான் அம்மாவையும் தம்பியையும் அலுவலகத்திற்கு அழைத்து வந்தான்.

அம்மா படபடப்பாகப் பேச ஆரம்பித்தார்."விக்னேஷ்தான் வீட்டுக்கு மூத்த பிள்ளை. கீழே ஒரு தம்பி, ஒரு தங்கை இருக்கிறார்கள்.இவன் இப்படி மதம் விட்டு மதம் மாறிக் கல்யாணம் செஞ்சுண்டால் அவர்கள் ரெண்டு பேரோட எதிர்காலம் பாதிக்காதா? நாங்கள் சுத்தமான ஸ்மார்த்தாள்.தாத்தாவெல்லாம் சாஸ்திரிகளா இருந்தவா.எங்க‌ளுக்குக் கொள்ளி போடக் கூட யோக்கியதை இல்லாமல் போகும்படி இப்படி ஒரு காரியத்தை இவன் செய்யலாமா?நீங்களே சொல்லுங்கோ...! இவனோட அப்பா வழியில் எல்லோரும் காரித் துப்பி விடுவார்கள். என் வீட்டாரிடமும் எனக்குத் தான் தலை குனிவு!..."

"சாவதானம் மாமி! சாவதானம்! நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். எனக்கு ஒரு பையன் இருந்து அவன் இப்படி பண்ணினாலும் எனக்கும் படபடப்பாகத்தான் இருக்கும். ஆனாலும் இவா ரெண்டு பேரும் நாம சம்ம‌திக்கலைன்னா ஓடிப் போய் பதிவுக் கல்யாணம் செய்யவும் முடிவு செஞ்சுட்டா. அதனால என்ன‌ செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கோ..."

வாசு சார் பக்குவமாகத் துவங்கினார்.

"உங்க‌ள் கவலையெல்லாம் ஊர் என்ன பேசும், உறவினர்கள் என்ன சொல்வார்கள் என்பதுதானே?அதுவும் இல்லாமல் கீழே இருக்கும் பையன், பெண்ணுக்குக் கல்யாணம் ஆக வேண்டுமே! நியாயமான கவலைதான் மாமி! இதுக்கெல்லாம் நான் ஒரு முடிவு தெரிவித்தால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள், இல்லையா...மாமி?" என்று கேட்டார் வாசு சார்.

"அதுவும் இல்லாமல் அவர்கள் வீட்டில் சைவமோ, அசைவமோ யாருக்குத் தெரியும்? சாப்பாடு விஷயத்தில் ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகுமா?"

விக்னேஷின் தாயார் இன்னொரு சந்தேகத்தைச் சொன்னார்.

"அந்தக் கவலை உங்க‌ளுக்கு வேண்டாம் மாமி.ஸ்டெல்லா சுத்த சைவம். அவர்கள் ஆதியில் சைவப் பிள்ளைமார் வகுப்பு. கிறிஸ்துவர்களாக மாறினாலும், சைவ உணவுப் பழக்கத்தை விடவில்லை. அந்த வகையில் ஒரு தொந்திரவும் வராது" என்றார் வாசு சார்.

"சரி,மாமி!ஸ்டெல்லா குடும்பத்திலும் பேசிவிட்டு நல்ல முடிவாகச் சொல்கிறேன்.எல்லாம் நல்லபடியாக‌ எல்லோருக்கும் திருப்தியாக முடியும் கவலைப்படாதீர்கள்" என்று கைகூப்பி வழி அனுப்பி வைத்தார்.

மறு நாளே தன் தாயையும் அக்காவையும் ஸ்டெல்லா அழைத்து வந்து விட்டாள்,வாசு சாரை சந்திக்க.

"நாங்கள் 2 தலைமுறையா கிறித்துவர்கள். கல்யாணத்திற்கு நாங்கள் மறுப்புத் தெரிவிக்க வில்லை.மாப்பிள்ளை கிறித்துவராக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். விக்னேஷ் கிறித்துவராக மாறித் திருமணம் செய்துகொள்ளட்டும்.." என்றார் ஸ்டெல்லாவின் அம்மா.

"அம்மா, கொஞ்சம் நிதானம்.ஸ்டெல்லாவுக்குக் கீழே யாரும் இல்லை. அவளுக்கு மூத்த அக்கா திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்கள். ஆனால் விக்னேஷ் வீட்டில் அவனுக்குக் கீழே 2 பேர் உள்ளார்கள். நடைமுறைக்கு மாறாக ஏதாவது செய்தால் அவர்கள் வாழ்க்கையும் பாதிக்கும். ஸ்டெல்லாவை கேட்போம்.விக்னேஷ் கிறித்துவராக மாற வேண்டுமா, இந்துவாகவே தொடரலாமா, ஸ்டெல்லா இந்துப்பெண் வாழ்க்கையை மேற்கொள்வாளா என்று அவ்ளையே கேட்ப்போம். என்ன சம்மதமா?"

வாசு சாரின் கேள்விக்கு அரை மனதோடு ஸ்டெல்லாவின் தாயார் சம்மதித்தார்

"எனக்கு விக்னேஷ் கிடைத்தால் போதும் சார்!அவர் இந்துவாகவே இருக்கலாம். நான் இந்துப் பழக்க வழக்கத்துக்கு மாறிக் கொள்வேன் சார்.விக்னேஷுக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா சார் ?!" என்றாள் ஸ்டெல்லா.

தன் பெண்ணே சொன்ன பிறகு," நல்ல பையன்,எந்தவிதக் கெட்ட பழக்கமும் இல்லை என்பதால் சம்மதிக்கிறேன் சார்!" சுருதி இறங்கிப் போய் சொன்னார் ஸ்டெல்லாவின் அம்மா!

பாதிக் கிணறு தாண்டியாயிற்று.

அன்று மாலையே தங்கள் குடும்ப சாஸ்திரிகளைச் சந்தித்தார் வாசு சார். பொறுமையுடன் காது கொடுத்துக்கேட்டார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.

"சாஸ்திரத்தில் பலது சொல்லி இருந்தாலும், ஒவ்வொரு சந்தர்பத்திலும் தர்மம் எந்தப் ப‌க்கம் என்று பார்த்து அதன் படி நடந்து கொள்ள வேண்டும். சாஸ்திரங்களையும் விடக்கூடாது. பிரச்சனைக்குத் தீர்வையும் நாம்தான் கண்டு பிடிக்கணும். இந்த விஷயத்தில் அந்தப் பெண்ணை யாராவது ஒரு இந்து தத்து எடுத்துக் கொண்டால், தத்து எடுத்துக் கொண்டவருடைய குலம் கோத்திரம் பெண்ணுக்கு வந்துவிடும்.அப்புறம் சாஸ்திரமுறைப் படி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, அக்னி வளர்த்து முறையாக இந்துக் கல்யாண மாகவே செய்து ண்டுவிடலாம்.ஆனால் யார் தத்து எடுக்க முன் வருவார்கள்?" என்று விளக்கினார் சாஸ்திரிகள்.

இந்தச் சிந்தனையோடவே வீடு திரும்பினார் வாசு சார்!

இரவு சரியாகச் சாப்பிடாமல், சரியாகப் பேசாமல் படுத்து சிந்தனையில் ஆழ்ந்து இருந்தவரை , அவருடைய மனைவி சுந்தரி ஆஸ்வாசப்படுத்தினார். மனைவியிடம் எல்லாவற்றியும் சொன்னார்.

"ப்பூ! என்ன நீங்கள்! நல்ல காரியத்திற்கு இவ்வளவு யோசனை? நாம் ஸ்டெல்லாவை தத்து எடுத்துக் கொள்வோம். ஜாம் ஜாம்னு கல்யாணம் செய்வோம்" என்றார் சுந்தரி வாசுதேவன்.

என்ன ஓர் எதிர் பாராத திருப்பம்!

திருமண ஏற்பாடுகள் மளமள என்று நடந்தேறின‌.

"என் ஸ்வீகார புத்திரி சுசீலாவை விக்னேஸ்வரனுக்கு கன்னிகாதானம் செய்துகொடுப்பதாய்...."என்று வாசுதேவன் பெயரில் பெண் வீட்டார் வகையில் பிராமண முறைப்படி பத்திரிகை அடிக்கப்பட்டது.

திருமணத்து அன்று காலை குழந்தையில் இருந்து செய்ய வேண்டிய நாம கரணம், ஜாதகரணம் அன்ன பிராஸ‌னம்,எல்லா சாஸ்திர முறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு ஸ்டெல்லா சுசீலாவாக மாறி வாசுதேவனுக்குப் பெண் ஆக உருமாற்றம் பெற்று , விக்னேஷின் கரம் பற்றினாள்.இப்போது ஒரு அன்பு மகனுடன் இருவரும் ஆனந்த வாழ்க்கை வாழ்கிறார்கள்.வாசு தேவன் சாருக்கும் அவ்ர் மனைவியாருக்கும் நன்றி கூறிக்கொண்டு.
காதல் வாழ்க! காதலை வாழ வைத்த வாசுதேவன் சார் வாழ்க!

பிகு: இது ஓர் உண்மைக்கதை. பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நன்றி, வணக்கத்துடன்
கே.முத்துராம கிருஷ்ணன்,
லால்குடி




நம்புங்கள். இதுவும் நம்ம KMRKதான்!


வாழ்க வளமுடன்!

37 comments:

  1. வாழ்த்துக்கள்.
    காலம் மாறுகிறது. நாமும் மாற வேண்டும். இல்லையேல் குழந்தைகளை இழந்து விடுவோம்.
    நன்றி.

    ReplyDelete
  2. ஆதலினால் காதல் செய்வோம்!

    ReplyDelete
  3. //சாஸ்திரத்தில் பலது சொல்லி இருந்தாலும், ஒவ்வொரு சந்தர்பத்திலும் தர்மம் எந்தப் ப‌க்கம் என்று பார்த்து அதன் படி நடந்து கொள்ள வேண்டும்.// -- அருமையான கருத்து ஐயா..

    ReplyDelete
  4. காதல் ஜாதி, மத, இனங்களை கடந்து
    வெற்றி பெறுகிறது...

    இது உண்மைக் கதை என்று குறிப்பிட்டிருப்பதால்,

    சுசீலாவும் + விக்னேசும் எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துவோம்..

    கிருஷ்ணன் சார் .. அந்த வாசு சார்
    நீங்க தானே ?

    ReplyDelete
  5. நன்றி ஐயா! 15 ஆகஸ்டு 2010ல் இருந்து தங்கள் வலைப்பூவில் ஆதரவளித்து வருகிறீர்கள்.இந்தப் பதிவுடன் என்னுடைய ஆக்கங்கள் 26 வெளியிட்டூள்ளீர்கள்.
    வேறு எந்தப் பதிவராவது பிறருடைய ஆக்கங்களை இந்த அளவு வெளியிட்டுள்ளார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

    சகாக்களே!என் 26 பதிவுகளில் 'சட்'என்று நினைவுக்கு வரும் ஏதாவது ஒன்று இரண்டை இங்கே சொல்லுங்கள்.நன்றி!

    ReplyDelete
  6. உண்மையான நிகழ்ச்சிதான். இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தமைக்காக அந்த அலுவலக நண்பருக்குக் கிடைத்த அர்ச்சனை சொல்லி மாளாது. நரிகளின் ஊளை காதை கிழித்தது. தலை தீபாவளிக்கு புது தம்பதியினருக்குப் பெண்ணின் சுவீகாரத் தகப்பனார் புதுத் துணிமணிகள் வாங்கி தன் வீட்டுக்கு அழைத்து கொண்டாடினதை ஆசிரியர் மறந்துவிட்டார் போலும். அந்தத் தம்பதியினர் இன்று எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை.

    ReplyDelete
  7. ///"Rathnavel said...
    வாழ்த்துக்கள்.காலம் மாறுகிறது. நாமும் மாற வேண்டும். இல்லையேல் குழந்தைகளை இழந்து விடுவோம்.நன்றி."///

    ஆம்!ரத்னவேல். இவ்வுலகில் மாறாதது மாற்றம் ஒன்றுமட்டுமே.புரிதலும், விட்டுக்கொடுத்தலும் மிக அவசியம்.

    ReplyDelete
  8. ஆம்!ரம்மி சார்! கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வுடன்.நிதானத்துடன். பின் விளைவுகளையெல்லாம் கொஞ்சம் சிந்தித்து.வேகம் போலவே விவேகத்துடன்.
    காதல் செய்யலாம்.

    ReplyDelete
  9. அல்லிக்கு அருகதை இருந்தும்
    மல்லிக்கு மனம் இருந்தும்


    காதல் என்றவுடன்
    கண் முன்னே களிப்புடனே


    முள்சுமந்த ரோஜாவே
    முன் நிற்கிறதே..


    Getting success is "VICTORY"
    overcoming hurdles is "HISTORY" என


    இப்படி ஒரு சொல்லடை
    இங்கிலீஷில் உள்ளது தானே..



    "வாழ்வெனும் மையல் விட்டு
    வறுமையாம் சிறுமை தப்பித்

    தாழ்வெனும் தன்மையோடும்
    சைவமாம் சமயம் சாரும்

    ஊழ்பெறல் அரிது" என


    சித்தியார் சொல்வதை அறியாத
    சின்னஞசிறுசுகளை என்னவென்பது?


    கவிஞைனை காதலித்த குயிலி
    கனவிலே தான் குரங்குடன் கொண்ட


    காதலையும் பின்னர் மாடுடன்
    கனிந்த உறவையும் சொல்லி


    மன்னரை சொன்ன அந்த
    "மன்னன்" சொன்ன உபதேசம்


    வேதாந்த மரத்தில் ஒரு
    வேரைக் கண்டேன் என்பது தானே..


    "பேறு இழவு இன்பமோடு
    பிணி மூப்பு சாக்காடு என்னும்


    ஆறும்முன் கருவுட்பட்டது
    அவ்விதி அனுபவத்தால் ஏறிடும்" என


    சித்தாந்த சாத்திரத்தின் தலையாய
    சித்தியார் வாக்கை அறியாதவர்கள்...


    குற்றம் செய்த பெண் மீது
    குறிவைத்தே கல் எறிந்தவர்களை


    உங்களில் குற்றம் செய்யாதவர் இங்கே
    உண்மையிலே இருந்தால் எறியுங்கள்


    கல்லையென எளிமையாய் சொன்ன
    கனவான் இயேசுபிரானும்...


    'சிவன் வந்து
    சிலுவையில் மாண்டான்'என சொன்ன


    வரிகளும்மூக்கில் கரியார் உடைத்துஎன
    வள்ளுவம் சொன்னதையும் ...


    கருத்தில் கொண்டு..
    கருத்தேதும் சொல்லாமலிருப்பது


    நாகரீகமாக இருக்காது என்பதால்
    நயமுடனே சொல்கிறோம்..


    சுந்தரி வாசுதேவனுக்கும் இல்லை
    சுசீலா விக்னேஷூக்கும் இல்லைசபாஷ்


    சுவீகாரமாக யாரை எடுக்க என
    சுத்தமான 'அந்த' வேதம் சொன்னதை


    சுத்தமாக மறந்து நின்ற கிருண்ண
    சாஸ்திரகளுக்கு்ம் இல்லை சபாஷ்


    ரோட்டின் மேல் நடப்பவருக்கு
    தெரியும் பள்ளம் மேடு அது

    தெரியாது; மேலே பறப்பவருக்கு
    ஒரே ஒரு கோடு என அறியாத


    விக்னேஷ் அம்மாவுக்கும் இல்லை
    வேலைநேரத்தை வேறு விதமாக்கிய


    அவருக்கும் இல்லை அந்த சபாஷ்
    அந்த உண்மையை கதையாக்கி தந்த


    வெள்ளிப் பதிவை தாண்டி 26யை
    அள்ளி தந்த தோழருக்கே "சபாஷ்"


    கதையாக இருந்தால் கதைக்கு சிறப்பு
    கதாபாத்திர எண்ணத்திற்கோ கறுப்பு


    வாழ்த்துக்களும் வணக்கங்களும்
    வாரி தருகிறோம் வழக்கம் போல்

    ReplyDelete
  10. செங்கோவி said...
    //சாஸ்திரத்தில் பலது சொல்லி இருந்தாலும், ஒவ்வொரு சந்தர்பத்திலும் தர்மம் எந்தப் ப‌க்கம் என்று பார்த்து அதன் படி நடந்து கொள்ள வேண்டும்.// -- அருமையான கருத்து ஐயா..

    பாஞ்சாலி சபத‌த்தில் அயோக்கியக் கூட்டத்தின் சார்பாக சாஸ்திரம் எடுத்துக் கூறபடுகிறது.அப்போது"பேய் அரசாண்டல் பிணம் தின்னும் சாத்திரங்கள்"என்பாள் பாஞ்சாலி.சாஸ்திரங்களை கவனத்துடன் கையாள வேண்டும்.

    ReplyDelete
  11. ///"கிருஷ்ணன் சார் .. அந்த வாசு சார் நீங்க தானே ?"///

    இல்லை இடைப்பாடியாரே!. ஆனால் என் ஆக்கங்களைப் படிப்பவர்தான் அவர்!அவருடைய அனுமதி பெற்றே இது எழுதப்பட்டது.எழுதியதை அவரிடம் காண்பித்தப் பின்னரே வாத்தியாருக்கு அனுப்ப‌ப்பட்டது.

    ReplyDelete
  12. ///"SIVAKANTH-TITAN said...vasu virku hatssofஃப்..."///

    ஆம், வாசு உங்கள் பாராட்டுக்களைப் படிப்பார்.ஏனெனில் அவர் தினமும் வகுப்பறைக்கு வருபவரே!

    ReplyDelete
  13. Rombavum arumaiyaai erukkiradhu.
    yenakku therindha oru mudaliar penn erukkiradhu. andha penn engalai polave oru sathya sai devotee. Naangal iyer. Andha penn suddha saivam. yellaa reportum andha pennai patri romba pramaadhamaagave solgirargal.
    Veettil yen manaivikkum andha pennai pidithu erukkiradhu,
    Erundhalum other caste yenbadhaal satru yojanai.

    Endha samayathil ungal kadhai kadavule vandhu vazhi sonnal pola ulladhu.
    Mikka nandri. veru ondrum solla thondravillai. SR

    ReplyDelete
  14. இந்த கருத்து வேறுபாடு ஜாதியிலேயே இறுக்கும் பட்சத்தில் மதத்தையே
    ஏற்றுகொண்டது நல்ல ஒரு உதாரன கொள்கை . இபோழுது காதல் திருமணம் அனைவரது வீட்டிற்கு வராவிட்டாலும் சொந்தங்களில் ஒன்றாவது இருகின்றதை மறுக்க முடியாத உண்மை ஆகும் .வரவேற்க தக்க கருத்து சமுதாய மாற்றம் இது ஒரு உவமை .

    ReplyDelete
  15. ///"சுவீகாரமாக யாரை எடுக்க என சுத்தமான 'அந்த' வேதம் சொன்னதை
    சுத்தமாக மறந்து நின்ற கிருண்ண சாஸ்திரகளுக்கு்ம்...."///
    எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்
    வேதம் சொன்னதைச் சொல்லுங்கள்=உங்க‌ளுக்குத் தெரிந்தால்!
    iyerji!

    ReplyDelete
  16. ///"வேலை நேரத்தை வேறு விதமாக்கிய அவருக்கும் இல்லை"///

    இது வாசு சார் வேலை நேரத்தை வீணாக்கிக் கலயாணப் பேச்சுப் பேசினார் என்று ஐயர் குற்றச் சாட்டாகக் கூறுகிறார் என்று புரிந்து கொள்கிறேன்.

    வாசு சார் அலுவலக நேரத்திற்கு 1 மணி நேரம் முன்னதாகவே வந்து தன் பணியைத் துவங்கி விடும் பழக்கத்தைத் தன் வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

    விக்னேஷ்‍=ஸ்டெல்லா மதிய இடைவேளயில் ஆலோசனை கலந்தார்கள் என்று ஒரு முறை கூறியுள்ளேன். மீண்டும் 2 சந்திப்புக்களும் அவ்வண்ணமே மதிய இடைவேளையில் நடந்தன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.கூறியது கூறல் என்ற பிழையைத் தவிர்க்கவே மீண்டும் மீண்டும் மதிய இடைவேளையில் என்ற வாசகத்தை எழுதவில்லை.ஐயர் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் மனம் விசாலப் படலாமே என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  17. ///"கதையாக இருந்தால் கதைக்கு சிறப்பு கதாபாத்திர எண்ணத்திற்கோ கறுப்பு"///

    கதையல்ல! நிஜம்! பெயர்தான் மாற்றப்பட்டுள்ளது.எல்லோரும் ரத்தமும் சதையுமாகமாக வாழ்ந்து வருபவர்கள். விக்னேஷின் உறவினர்களின் விமர்சனத்தை தவிர்க்கப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    என் உறவினருடைய பெண் இரண்டு பெண் குழந்தகளை தத்து எடுத்துள்ளார்கள்.
    இரண்டுமே தத்து எடுக்க உதவும் அரசுப் பதிவு பெற்ற மையங்களில் இருந்து எடுக்கப்பட்டவையே.அந்தக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி, சாஸ்திர சம்பிரதாயப்படி தத்து எடுத்த்க்கொள்ளும் நிகழ்ச்சியைச் செய்ய வேத பண்டிதர்களை அழைத்தபோது, சாஸ்திரத்தைக் காட்டி வர மறுத்து விட்டார்கள்.

    சத்யகாமன் கதையை அய்யர் அறிவாரோ?அறிந்தால் அதை இங்கே சொல்லலாமே!

    ReplyDelete
  18. சாயிராம்கோடி!வாழ்த்துக்கள்!நல்ல பெண் என்றால் திருமணம் செய்யுங்கள்.
    சாயி துணை இருப்பார். வேண்டுமென்றே சாதியை ஒழிக்கிறேன்/புரட்சி செய்கிறேன் என்று கிளம்ப வேண்டாம். ஆனால் இது போல் இயல்பாக சந்தர்ப்பம் வந்தால் சாதி குறுக்கே வர வேண்டாம்.

    ReplyDelete
  19. /// jagadesh said...
    இந்த கருத்து வேறுபாடு ஜாதியிலேயே இருக்கும் பட்சத்தில் மதத்தையே
    ஏற்றுகொண்டது நல்ல ஒரு உதாரணக் கொள்கை .///

    புரட்சி செய்யவேண்டும் என்றெல்லாம் செய்யவில்லை. இயல்பாக அமைந்த
    ஒன்றை சிறிது தன் முனைப்போடு செயல்பட்டு வாசு சார் சுமுகமாக பிரச்சனையைத் தீர்த்து வைத்து நற்செயல் செய்தார் அவ்வளவுதான்

    ReplyDelete
  20. very good love story

    very practical

    thank you sir

    ReplyDelete
  21. //ஐயர் குற்றச் சாட்டாகக் கூறுகிறார் என்று புரிந்து கொள்கிறேன்//

    அப்படி புரிந்து கொண்டால்
    அதற்கு என்ன செய்ய..

    ///ஐயர் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் மனம் விசாலப் படலாமே ///

    கருத்துக்கள் மோதுவதில்லை
    கருத்துக்கள் பரிமாறும் போது


    தவறிவிழுவதாய் தெரிகிறது அதனால்
    தவறு நிகழ்கிறது என புரிகிறது


    வெள்ளைத் தாளில் உள்ள
    வெற்று கறுப்பு புள்ளியை பார்க்கும்


    கண்களுக்கு பல சமயங்களில்
    கண்நிறைந்தவெண்மை தெரிவதில்லை


    காரணத்தை அலசினால் மிஞ்சுவது
    ரணமே என்பதினால்


    அடுத்தவர் கடிகாரத்தை சரிசெய்யாமல்
    அவரவர் நேரப்படியே நடக்கட்டும் என


    அன்போடு வணங்குகிறோம்
    அளவற்ற வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  22. ///"vprasanakumar said...
    very good love story very practical
    thank you sir///

    Thank you Prasannakumar!May God bless you

    ReplyDelete
  23. ///"Thanjavooraan said...
    உண்மையான நிகழ்ச்சிதான். இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தமைக்காக அந்த அலுவலக நண்பருக்குக் கிடைத்த அர்ச்சனை சொல்லி மாளாது. நரிகளின் ஊளை காதை கிழித்தது. தலை தீபாவளிக்கு புது தம்பதியினருக்குப் பெண்ணின் சுவீகாரத் தகப்பனார் புதுத் துணிமணிகள் வாங்கி தன் வீட்டுக்கு அழைத்து கொண்டாடினதை ஆசிரியர் மறந்துவிட்டார் போலும். அந்தத் தம்பதியினர் இன்று எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை."///

    ஆம் கோபால்ஜி!நீங்கள் சொல்லியுள்ளது அனைத்தும் உண்மை."நரிகளின் ஊளை" என்பதே மிகச் சரி!புரிந்து கொள்கிறேன்!

    எப்போதுமே ஓர் ஆக்கத்தை எழுதும் போது மிகவும் 'வள வள' என்று நீட்டூகிறோமோ என்ற தயக்க உணர்வு வந்துவிடும் எனக்கு. அதனால் சொன்னதை விட சொல்லாமல் விட்டது அதிகம் இருக்கும்.
    அரைப் பக்கக்கதை, ஒரு பாராவில் கதை, ஒரு வரிக்கதை என்று இலக்கியம் சுருங்கிய சூழலில், நீண்ட ஆக்கங்கள் சென்று அடையுமா என்ற தயக்கத்தால் கல்யாணத்தோடு முடித்துக்கொண்டேன்.பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  24. //நாம கரணம், ஜாதகரணம் அன்ன பிராஸ‌னம்//

    முதலில் சொல்லப் பட்டது பெயர் சூட்டுவது என்று தெரிகிறது. அடுத்தது ஜாதகம் எழுதுவதா. மூன்றாவதாக இருப்பது என்னவென்று சற்று விளக்குங்கள்.

    கலப்புத் திருமணம் என்பது ஆதரிக்கப் பட வேண்டிய ஒன்றுதான். வாசு சார் போன்றவர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடிகிறது.

    ReplyDelete
  25. சாத்தியமுள்ள இடத்திலே வாசு சார் சுவீகாரம் வரை சென்று நல்ல விஷயம் செய்துவிட்டார்..
    வீண் கர்வமும் அகங்காரமும் கொண்ட முரட்டுப் பிடிவாத சாதியினருக்கு காதல்திருமணம் முடிந்த தம்பதியரைப் பிரிப்பது கூடத் தவறாகத் தோன்றுவதில்லை..
    அதுவும் காவலருக்கும் தெரிந்தே வன்முறை வெறியாட்டங்களுடன்..
    இத்தகைய இடங்கள் புரிந்துதான் சமுதாயத்தில் இருக்கும் பல வாசு சார்கள்
    ஆமை தன் ஓட்டுக்குள் தலையை இழுத்துக்கொள்வதுபோலே காணாமல் போய் விடுகிறார்கள்..
    மணத்தம்பதியினருக்கு ஏழாமிட சம்பந்தம் சிக்கல் இல்லாததால்
    வேலை சுபமாக முடிந்ததோ என்றே நினைக்கிறேன்..

    ReplyDelete
  26. வாத்தியார் ஐயா வணக்கம் .

    மனம் ஒருமித்த இரு உள்ளம்கள் ஒரு உள்ளமானதால் தான் சகல தடைகளையும் தவிடு பொடியாக்கி சாதிக்க முடிந்தது இல்லையா
    ஸ்ரீ முத்து ராம கிருஷ்ணன் சார் .

    கல்யாணமே வேண்டாம் என சந்யாசியாக போக இருப்பவன் கூட தங்களுடைய இந்த ஆக்கத்தை படித்தால் போதும் குறைந்த பட்சம் ஒரு அவளைக்கு வாழ்க்கை தர முன்னுக்கு வரக்கூடிய அளவீர்க்கு வீரியம் உள்ளது.

    தலை வணங்குகின்றேன் ஐயா.

    ReplyDelete
  27. "///முதலில் சொல்லப் பட்டது பெயர் சூட்டுவது என்று தெரிகிறது. அடுத்தது ஜாதகம் எழுதுவதா. மூன்றாவதாக இருப்பது என்னவென்று சற்று விளக்குங்கள்///

    கர்பாதானம்(கரு உருவாதல்) துவங்கி இறக்கும் வரை 40 சம்ஸ்காரங்கள் செய்யப்படவேண்டும்.
    ஒரு குழந்தை பிறந்து 90 நாழிகை ஆனவுடன் நெய், தேன் கலந்து தங்க‌த்தில் தொட்டு அதற்குண்டான மந்திரத்துடன் நாக்கில் தடவுவது ஜாத கரணம்.
    அதன் பின் புண்யாகவசனம்(இல்லத்தையும் தாய் சேயையும் சுத்தகரிப்பது) பெயர் சூட்டுவது(நாமகரணம், சோறு ஊட்டுவது(அன்னபிராசனம்), மொட்டைபோடுதல்,
    கர்ண பூஷணம்(காதணி விழா), இப்படிப் பல நிகழ்வுகள்,முறைப்
    படுத்தப்ப‌ட்டுள்ளன. இதில் திருமணம், அறுபது வயது, 70வது வயது,80 வயது 100 வயது ஆகியவையும் வரும்.

    நான் சொல்லியதில் ஜாத கரணம் முதலில் வந்திருக்க வேண்டும்.கேள்விக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  28. ///minorwall said...
    சாத்தியமுள்ள இடத்திலே வாசு சார் சுவீகாரம் வரை சென்று நல்ல விஷயம் செய்துவிட்டார்..///

    அந்த இரு குடும்பங்களும் சுலபமாக ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆனால் அலுவலகத்தில் இருந்த குறுகிய அரசியல், தொழிற்சங்க பேதம் ஆகியவை திடீரென விழித்துக்கொண்டன. "தன் பிள்ளைக்கு இப்படி செய்து வைப்பாரா?
    புதிய வகை/ புரட்சிகரப் புரோஹிதரா?சுவீகாரம் செய்த பெண்ணுக்குத் தன் சொத்தில் பங்கு கொடுப்பாரா?.." இன்னும் பல கேள்விகளுடன் ஒரு கூட்டம்
    அலுவலகத்தைக் கிறங்க அடித்தது. கோபாலன் சார் சொல்லியுள்ளது போல அவர்களுடைய குரல்கள் நரிகளின் ஊளைகளைப் போலவே ஒலித்தன‌.

    ReplyDelete
  29. ///"மனம் ஒருமித்த இரு உள்ளம்கள் ஒரு உள்ளமானதால் தான் சகல தடைகளையும் தவிடு பொடியாக்கி சாதிக்க முடிந்தது இல்லையா
    ஸ்ரீ முத்து ராம கிருஷ்ணன் சார்" ///.

    ஆமாம் கண்ணன்ஜி! ஸ்டெல்லா மதத்தையும் விடத் தன் காதலை மேலானதாக நினைத்ததாலும்,விக்னேஷ் தன் இளைவர்களுடைய எதிர்காலத்தையும் பலிகொள்ளும் அளவு காதலுக்காக உறுதிபட நின்றதுமே, இந்த சிக்கலான நிகழ்வில் ஆதாரமான தர‌வுகள். நன்றி!

    ReplyDelete
  30. மிக உயர்ந்த மனிதர் வாசு சார்....
    சொல், செயல் அத்தனையும் அதை பிரதிபலிக்கிறது...
    இப்படி உதவ நினைத்த அவருக்கு அந்த இரு இளம் காதலர்களின் மீது எவ்வளவு நம்பிக்கையும், இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் அது மிகவும் சிறப்பாகவே இருக்கும்... என்ற உறுதியான எண்ணமும் இருந்திருக்க வேண்டும்...

    இந்த நம்பிக்கை உறுதி சாதாராண மாக வந்து விடாது.... இயல்பாகவே அவர்களின் (மனித வாழ்விற்கு அவசியமான) நடை, உடை, பாவனையிலும்... வரம்பிற்கு உட்பட்ட அவர்களின் கண்ணியமான உறவுகளையும் உற்று நோக்கித் தான் வந்திருக்க வேண்டும்.... ஆக மிகவும் அற்புதமாக இருவரின் வீட்டில் உள்ளவர்களை ஓரளவு திருப்தி படுத்தி மிகவும் நேர்த்தியாக அனைத்தையும் நடத்திய வாசு சாரையும் அதற்கு நிச்சயமாக பெரிதும் உதவியாக இருந்த அவரின் துணைவியாரையும் எண்ணி வியக்கிறேன்...

    "செயற்கரிய செய்வார் பெரியர்"....

    இங்கு இன்னொன்றும் கூறவேண்டும் எனக்காக நீ! உனக்காக நான்!! என்று பூர்வ ஜன்மத் தொடர்பை அடையாளம் கண்டு வாழும் தம்பதியர் அன்பு மாறாது வாழ்ந்து வாசு சார் மற்றும் அவரின் துணைவியாரின் இந்த உதவிக்கு என்றும் பெருமை சேர்க்க வேண்டும்.... சேர்ப்பார்கள் அது வாசு சாரின் நம்பிக்கையும் கூட...

    அருமையான நினைவு.. அதுவும் இன்றைய சமூகச் சூழலில் இது போன்ற உதாரணங்கள்; இல்லை, வழிகாட்டிகள் மிகவும் அவசியமே.... நன்றிகள் கிருஷ்ணன் சார்....

    அன்புடன்
    ஆலாசியம் ஜீ

    ReplyDelete
  31. ///minorwall said...
    சாத்தியமுள்ள இடத்திலே வாசு சார் சுவீகாரம் வரை சென்று நல்ல விஷயம் செய்துவிட்டார்..///

    ஆம்! சாத்தியப்பட்டதால் தான் செய்தார். அது எப்படி சாத்தியப்பட்டது என்றால்,இன்னார்க்கு இன்னாரென்று
    எழுதி வைத்த தேவனின் துணையால் நடந்தது. அவன் போட்ட கணக்குக்கு வாசு சார் ஒரு கருவி மட்டுமே.

    அவருக்கும் எதிர்ப்பு, சந்தேகம் எல்லாம் குறுக்கிட்டன. ஆனால் அதையெல்லாம் கடக்கும் மனோதைரியமும், செயலூக்கமும் உடையவர் அவர்.இப்போது பழுத்த பழமாக இருந்தாலும்,தன்னால் இயனற சேவைகளைச் செய்து கொண்டேதான் இருக்கிறார்.

    ReplyDelete
  32. ////"கருத்துக்கள் மோதுவதில்லைகருத்துக்கள் பரிமாறும் போது தவறிவிழுவதாய் தெரிகிறது அதனால்தவறு நிகழ்கிறது என புரிகிறது
    வெள்ளைத் தாளில் உள்ள வெற்று கறுப்பு புள்ளியை பார்க்கும் கண்களுக்கு
    பல சமயங்களில் கண்நிறைந்த
    வெண்மை தெரிவதில்லை காரணத்தை அலசினால் மிஞ்சுவது ரணமே என்பதினால்" ////

    என்னமோ போங்க‌ள் ஐயர்வாள். ஒன்றும் புரியவில்லை. கொஞ்ச‌ம் வெளிப்படையாக வாருங்கள். உங்க‌ள் கவிதையை யெல்லாம் புரிந்து கொள்ளக் கூடிய அளவு எனக்கு அறிவில்லை.

    ReplyDelete
  33. ///மிக உயர்ந்த மனிதர் வாசு சார்...சொல், செயல் அத்தனையும் அதை பிரதிபலிக்கிறது...///

    ஆமாம்! ஹாலாஸ்யம்ஜி!அவரோடு எனக்கு 39 வருடப் பழக்கம். சிறுமைகண்டு பொஙகக் கூடியவர்.செயலூக்கம் மிக்கவர்.நல்ல படிப்பாளி. ஓயாத உழைப்பாளி.
    அறிவு ஜீவியான அவர், உடல் உழைப்பும் செய்யக்கூடிய உழைப்பாளி.அவருடைய தோட்டமே அவருடைய உழைப்பைச் சொல்லும்.

    ஒரு காலத்தில் மஹாமுன்கோபி என்று பெயர் வாங்கியவர்.துர்வாசர் என்றே பெயர் வாங்கியவ‌ர். இப்பொதெல்லாம் கோபமே இல்லாத பழுத்த பழமாக வாழ்கிறார்.நன்றி!

    ReplyDelete
  34. ஆக்கம் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  35. Sir,

    I am new to the blog. Very interesting.

    Question. If Sukra is in Kanni with Mercury, Sukra is neesam. So if Guru dasa happening now with Sukara Bhukti. Are you saying even if sukra is neesam, sukra bhukti is good.

    Thanks,
    Shanthi from Canada

    ReplyDelete
  36. Thank you sir.

    I am new to the blog.

    Sukra is Kanni with Mercury. Sukra is neesam. This means even if Sukra is neesam, when Guru dasa, sukra bhukti is good for marriage?

    Thanks,
    Appreciate your comments.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com