மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.4.11

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே!

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே!

பக்தி மலர்
-----------------------------
""என் கதி என்ன ஆகும் சுவாமிஜி?"

மிகுந்த தாபத்துடன் கேட்டேன்.

இந்தச் சந்தேகம் எனக்குத் தோன்றியது ஏன்?

அந்த சத்சங்கத்தில் அப்போதுதான் சுவாமிஜி தன் உரையில்,  "பகவான் நாமத்தை ஜபித்து, எப்போதும் நம் இஷ்ட தெய்வத்தை மனதில் இருத்தினாலே, கடைசி நேரத்தில் நமக்கு இறைவன் சிந்தனை வரும்.என்ன சிந்தனையுடன் நம் ஆவி பிரிகிறதோ அது போலவே நம் அடுத்தப்பிறவி வரும்" என்று கூறியிருந்தார்.

"எனவே பூஜை, பாராயணம், காலட்சேபம் கேட்பது என்று நாள் முழுதும் இறைவனோடு கலந்து இருக்கும்  சூழலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான் பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபடலாம்" என்று
கூறியிருந்தார்.

கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மிகவும் கவலை ஆகிவிட்டது.
ஏனென்றால்  அந்தக் கால கட்டத்தில் நான் எந்த வகையிலும் இறைச் சிந்தனை செய்ய முடியவில்லை.காரணம்  நான் செய்து வந்த சேவைப் பணியே என் முழு நேரத்தை எடுத்துக் கொண்டு இருந்தது.

அப்படி என்ன சேவை?

ஒரு மாலை நேர மருந்தகம் நடத்தி வந்தோம்.ஒரு ரூபாய் உண்டியலில் பெற்றுக் கொண்டு 3 நாட்களுக்கான  மருந்து கொடுத்து வந்தோம்.
5,6 கிராம மக்கள் சுமார் 35 பேர் மாலை நேரத்தில் மருந்துக்காக வந்து
கூடுவர். எல்லோருக்கும் பதிவு செய்து குடும்ப அட்டை கொடுத்து
இருந்தோம். அந்த எண் படிக்கு நாங்களும் இங்கே  சிகிச்சை விவர
அட்டை வைத்திருப்போம். எத்தனை முறை முன்னர் வந்துள்ளனர்,
என்ன நோய் வந்துள்ளது என்றமருத்துவம் பெற்ற வரலாறு அதில்
இருக்கும். எனவே குடும்ப அட்டையை வாங்கிப் பார்த்து அதில்
கண்டுள்ள  எண்ணுக்கு உண்டான சிகிச்சை அட்டை எடுத்துக்
கொடுப்பதும், மருத்துவர் பார்த்து எழுதி கொடுக்கும்  மருந்தினை
வினியோகம் செய்வதும் என்று பல வேலைகள் மாலை நேரம்
முழுவதையும் எடுத்துக் கொண்டுவிடும். காலையிலும் பிற
நேரத்திலும் மருத்துவர்களை சந்திதும், மருத்துவப் பிரதிநிதிகளைச்
சந்தித்தும் மருந்து சேகரம் செய்ய  வேண்டும்.அவற்றைப் பரிசீலித்து நோய்க்குத் தகுந்தபடி தரம் பிரிக்க வேண்டும்.சிலர் காலாவதியான‌  மருந்துகளை ந‌ம் தலையில் கட்டி விடுவார்கள்.அவற்றை அடையாளங்
கண்டு விலக்குவதுடன்,கவனமாகஅழிக்க வேண்டும்.  சிறிது
நனகொடைக்காக சில நல்ல உள்ளங்களைச் சந்திக்க வேண்டும்.

இப்படிப் பல வேலைகள். எனவே பூஜை, மந்திரம் ஜபிப்பது எல்லாம் செய்ய நினைத்தாலும், நேரம் கிடையாது.

மந்திரம் சொல்லுவதற்கு பதில் ஆம்பிசில்லின், அமாக்சில்லின்,மெடாசின், காஃப் சிரப் என்ற சொற்களே மூளை முழுதும் நிற்கும்.எங்கேயிருந்து மந்திரம் சொல்லுவது?

காலையில் குளித்து முடித்து திருநீரு குங்குமம் தரித்து ஓரிரு விநாடிகள் இஷ்ட தெய்வத்திற்க்கு ஒரு  கும்பிடும்,ஒரு சாஷ்டாங்க‌ நமஸ்காரமும்.இரவு படுக்கச் செல்லும் போது ஒருமுறை நமஸ்காரம் அவ்வளவுதான் முடிந்தது.

சுவாமிஜியோ, "கடவுள் சிந்தனையோடு கண்ணை மூடவில்லை என்றால் மறு பிறவியும்,என்ன நினைத்து  இறக்கிறோமோ அதுவாகவம் பிறந்து விடுவோம்" என்கிறாரே!  மருந்து மாத்திரை மருந்தகம் என்று நினைத்துக்  கொண்டு இறந்து விடுவேனோ? மறு பிறவியில் ஒரு டாக்டராகவோ, கம்பெள‌ண்டராகவோ, நர்சாகவோ  பிறப்பேனோ? அல்லது ஆம்பிசிலின் அமாக்சி சில்லினாகப் பிறந்து என்னை எல்லோரும் விழுங்கி  விடுவார்களோ? அப்போ எனக்கு நல்ல கதி இல்லையோ!?

இந்த சிந்தனையால் உந்தப்பட்டுத்தான் கேட்டேன்,

"அப்போ என் கதி என்ன ஆகும் சுவாமிஜி?"

சுவாமிஜியின் ஆன்மீகச் சொற்பொழிவுக்குப் பின்னர் கேள்வி ப‌தில், சந்தேகம் தெளிதல் நேரத்தில்தான் இப்படிக் கேட்டேன்.

சுவாமிஜி தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.தீர்க்கமாக என்னை உற்றுப்பார்த்தார்.

"நரசேவா நாரயண சேவா! என்பதை நீங்கள்  றிதிருக்கவில்லையோ?
அதாவது 'மக்கள் சேவையே மகேசன்  சேவை' என்பதை அறிய மாட்டீர்களோ? நான் என் சொற்பொழிவில் கூறியது தன்னலமற்ற 
பணி செய்து  வருபவர்க்குப் பொருந்தாது.இப்படி நற்பணியில்
ஈடுபட்டு, நற்சிந்தனையோடு வலம் வருபவர்களுடைய பாதையே
வேறு. அவர்களுக்கு ராஜ பாட்டை காத்திருக்கிறது. இறைவனே அவர்களுக்குள் ஏற்கனவே புகுந்து அவர்கள் மூலம் தன் பணியை 
ஆற்றி வருகிறான் என்னும் போது அவர்கள் தனியாக எந்த வழி
பாடும் செய்ய வேண்டியதில்லை. இப்படி ஏதும் பணி செய்ய
முடியாதவர்கள் பூஜை புனஸ்காரத்தின் மூலம் இறைவனை அணுக
வேண்டும். ஆனால் நற்பணி ஆற்றூவோரினுள்ளத்தில் இறைவன்
வந்து 'ஜம்' என்று சம்மணம் போட்டு அமர்ந்து விடுகிறான்.'என் உளமே
புகுந்த அதனால்'என்று திருஞானசம்பந்த‌ர் சுவாமிகள் சொல்வாரே..!

அதுபோல நீங்களும் இறைவன் உள்ளத்தில் இருந்து ஆட்டுவிக்கிறான்
என்று எண்ணிச் செயல் பட்டால் அவன் எப்போதும்  துணையிருக்
கிறான். எப்போது 'நான் செய்கிறேன்' என்ற எண்ணம் தலை
தூக்குகிறதோ அப்போது அவன் வெளியேறி விடுகிறான்.மீண்டும்
அவனை உள்ளே கொண்டுவரத்தான் பூஜை, பாராயணம போன்ற
பயிற்சிகள். 63  நாயன்மார்களும் தங்கள் பணிகளையே சிவத்
தொண்டாகச் செய்தார்கள். அதுபோலச்செய்து வாருங்கள். முக்தி
கிடைக்குமா என்ற கவலை எல்லாம் பட வேண்டாம். எங்கே
ராமனோ அங்கே காமன் இல்லை. எங்கே காமன் உள்ளானோ
அங்கே ராமன் இல்லை" என்றார். "மற்றவர்களுக்குப் பூக்கள்
தேவைப்படும் பூசனை புரிய. உங்க‌ளுடைய பூக்கள் மருந்துகளே.
அவர்களுக்கு வழிபடப் பேசாத விக்ரஹங்கள் தேவை. உங்களுடைய  விக்ரஹங்கள், நடமாடும், பேசும் மனிதர்களே."

கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. உங்க‌ளுக்கு ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள்.

நன்றி, வணக்கத்துடன், 
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி




++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

26 comments:

  1. எளிமையான சொற்களைக் கொண்டு
    மிக இனிமையாக
    மக்கள் தொண்டே மஹேசன் தொண்டு என
    என விளக்கிப்போகும் உங்கள் பதிவு அருமை
    உங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமை கொள்கிறேன்
    தொடர வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //எப்போது 'நான் செய்கிறேன்' என்ற எண்ணம் தலை
    தூக்குகிறதோ அப்போது அவன் வெளியேறி விடுகிறான்.//

    உண்மைதான் சார்,

    யான் எனது என்ற செருக்கு அற்ற இடமே திருவடியாம் ...

    ReplyDelete
  3. நன்றி ஐயா!தலைப்புக் கொடுப்பதில் நீங்கள்தான் மன்னர். அதனால்தான் பெரும்பாலும் நான் தலைப்புக் கொடுக்காமல் என் ஆக்கங்களை அனுப்புகிறேன். நீங்கள் நல்ல தலைப்பாகக் கொடுப்பீர்கள் என்று நான் அறிவேன்.தலைப்பை நன்றாகப் போடு, வாசகர்கள் தானாக வருவார்கள் என்று நீங்கள் சொன்ன‌து சரிதான்.

    ReplyDelete
  4. அன்புடன் வணக்கம்
    ஒரு வாணிபம் செய்பவர் மகா கருமி.. அவரை சந்தித்த முனிவரிடம் சாமி எனக்கு சுவர்க்கம் கிடைக்குமா ?? என்று கேட்டார் ஒ !!நமசிவயாததுடன் இருந்தால் ??அவரது மகன் பெயர் நமச்சிவாயம் ??இறக்கும் காலம் தனது மகனை நமச்சிவாயம் வா என்று அழைத்தபடியே சென்றார் ..சொர்க்கம்தானே???அது போல நீங்கள் அட்டை உள்ள பெயர்--எப்படியும் ஒரு இறைவன் பெயர் இருக்கும்..- அதன் பின்னரே அமாக்ஸ்யிலின்/// மற்றவை..---.. --- நிச்சயம் உண்டு சொர்க்கம் !! உங்களுக்கு என்று ஒரு சீட் அங்கே பதிவு செயப்பட்டு[ஜெயம்தான் ] உள்ளது !!![என்னிடம் சொன்னார்கள்!!!]

    ReplyDelete
  5. "கர்ம யோகி கர்மமே கண்ணாயினார்"
    இதயத் தாமரையில் இருக்கும் ஒரே ஒரு இருக்கையில்
    நான் எழுந்து போனால், அவன் வந்தமர்வான்...
    நான் வந்தால் அவன் எழுந்து சென்றிடுவான்...
    உலகில் உள்ள அனைத்து உயிர்களும்
    தனக்கென வாழாதது.......
    மனிதனும் அப்படித்தானே இருக்கணும்....

    பெரியவர் கூட சொல்லுவார் குடும்பத்திற்காக
    பாடுபடுபவனும் (தர்ம நெறியில் நின்று) எளிதாக மோட்ஷம்
    புகுவான் என்பார்கள்...

    வேத உபநிடதமும் இதைத்தானேக் கூறுகின்றன...
    கோவிலையே (மசூதி.. கிறிஸ்துவ ஆலயம்) கட்டிக்
    கொண்டுத் திரிபவனை விட ஆத்ம உபகாரம் செய்பவனுக்கே
    ஆண்டவன் சிவப்புக் கம்பளம் விரிப்பான் என்பதே உண்மை...

    மாறாக கோவிலிலே குடி கொண்டு சதா பூஜா புனஷ்காரம்,
    ஜெபம், தொழுகை என்று இருப்பவனை கண்டு ஆண்டவன் சிரிப்பான்..
    ஏன் இங்கு வந்து குடி கொண்டு விட்டாய்?
    உலகம் இயங்கத்தானே உன்னை படைத்தேன் என்பான்!
    உலகம் இயங்க வேண்டும் என்றால் கர்மம் நடந்தாக வேண்டும்....

    கடைசி நேரத்தில் எதை நினைத்தான் என்பதை விட வாழ்ந்தக் காலங்களில்
    என்ன செய்தான் என்பது தானே முக்கியம்....

    இயங்கும் அனைத்தும் அவனது ஆணையால் எனும் போது...
    கடைசி நேரத்தில் வரும் சிந்தனையும் அவனின் ஆணையே!!!
    அவனின்றி அணுவும் அசையாது அல்லவா!

    இது போன்ற கேள்வி எழுவது (சூழலைப் பொறுத்து) இயல்பே....

    கேள்வியும் பதிலும் அருமை!!!

    ReplyDelete
  6. சரியாதான் சொல்லியிருக்கார் 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டுனு'.

    ReplyDelete
  7. நீங்க பண்ணினது ரெம்பக் கஷ்டமான வேலை..so great ..
    கொஞ்சம் கூட சுயநலமில்லாம இப்பிடி வேலை பார்க்க நினைச்சால் எப்படி?
    அன்னன்னிக்கு வருமானம் கட் ஆகுமே?
    இன்னிக்கு இருக்குற சுயம் சார்ந்த வேலைப் பளுவிலே இதெல்லாம் சாத்தியம்தானா?
    நீங்கல்லாம் இதுபோலே ஷார்ட் ரூட் போட்டு வெச்சு ப்ரோசீட் பண்ணிப் போறதுனாலே
    "என் வழி தனி வழி"ன்னு போயிட்டுருக்குற எங்களுக்கெல்லாம்
    எங்கே செல்லும் இந்தப் பாதை?ன்னு ஒரு சந்தேகமே வந்துடுது..
    எதுக்கும் சொர்க்கத்துக்கு கரெக்ட் அட்ரஸ் எழுதுங்கோ..
    google maps லே செக் பண்ணிப் பாக்குறேன்..எங்க வழியும் அந்தப் பக்கமா கொண்டு போகுமான்னு?

    ReplyDelete
  8. திரு.ரமணி அவர்களே!உங்கள் அனபான பாராட்டுக்களுக்கு என் வந்தனங்கள்.
    இறையருளால் என் நினைவுக் கதை தொடரும் என்றே நம்புகிறேன்.

    ReplyDelete
  9. ஆம்!இடைப்பாடியாரே!தங்கள் கூற்று உண்மை!

    ReplyDelete
  10. புரிந்ததை சொன்னால் அது
    புரியாது.. அய்யரின் கருத்து சற்று


    முரண்பாடுடையது எடுத்துச்சொன்னால்
    உடன்படாதது அதனால் - இது


    ஆக்கியோரின் அனுபவமே என படித்து
    அப்படியே கருத்தேதும் சொல்லாமல்


    அறிவில்லாத பதில்
    அமைந்து விடக் கூடாது என்பதற்காக


    "பதில் இல்லை" என்பதையே
    பதிலாக தருகிறேன்


    வழக்கம் போல்
    வணக்கமும் வாழ்த்துக்களுன்..

    ReplyDelete
  11. ஆம்! நமது சங்கீதம் அவர்களே! ஆனால் சுவர்க வாசம் என்பது ந‌ம் நல் வினை தீர்ந்ததும் மீண்டும் பிறவியில் தள்ளிவிடும். அதனையும் கடந்ததே முக்தி.

    ReplyDelete
  12. ///"கடைசி நேரத்தில் எதை நினைத்தான் என்பதை விட வாழ்ந்தக் காலங்களில்
    என்ன செய்தான் என்பது தானே முக்கியம்...."////

    ஆம்!ஹாலாஸ்ய‌ம்ஜீ! "ஊருக்கு உழைத்திடல் யோகம்" என்பார் மஹாகவி!

    ReplyDelete
  13. ////"Uma said...
    சரியாதான் சொல்லியிருக்கார் 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டுனு'....///

    "ஜீவ சேவையே சிவ சேவை!".... அப்படி என்றும் சொல்லுவார்கள்.

    "படமாடும் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
    நடமாடும் கோயில் நம்பற்கு இங்கு ஆகா
    நடமாடும் கோயில் நம்பற்கு ஒன்று ஈயில்
    படமாடும் கோயில் பகவற்கு அதாமே!"‍‍‍‍==========திருமூலர்!

    படமாடும் கோயில் பகவன்=கோயிலில் உள்ள இறைவனின் உருவம்
    நடமாடும் கோயில் நம்பர் =இறைவனை மனதில் தாங்கி நடமாடிக் கொண்டு
    இருக்கும்(சிவன்) அடியார்

    ReplyDelete
  14. //எதுக்கும் சொர்க்கத்துக்கு கரெக்ட் அட்ரஸ் எழுதுங்கோ..
    google maps லே செக் பண்ணிப் பாக்குறேன்..///

    சொர்கம் என்பது ஒரு அடிமட்டக்(basic) கொள்கை. அதை அடைவது நமது இறுதி நோக்கமல்ல. நம் புண்ணியம் முடிந்தவுடன், பாவத்தை அநுபவிக்க நரகம் செல்ல வேண்டும் அப்புறம் பிறவி உண்டு.

    நாம் அறம் பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டப்பட்டு இருக்கிறோம்.
    புண்ணியம் என்பது தங்க‌த்தால் ஆன கைதி செயின்.பாவம் என்பது இரும்பால் ஆன கைதிச் சங்கிலி.இரண்டுமே வேண்டாம். இறைவனின் திருவடியே வேண்டும்.அதுவே முக்தி!நன்றி மைனர்வாள்!

    ReplyDelete
  15. ////////////kmr.krishnan said...

    ஆம்! நமது சங்கீதம் அவர்களே! ஆனால் சுவர்க வாசம் என்பது ந‌ம் நல் வினை தீர்ந்ததும் மீண்டும் பிறவியில் தள்ளிவிடும். அதனையும் கடந்ததே முக்தி.////

    எனக்கு சொல்லியிருக்கும் பதிலோடு இதனையும் அட்டச்மென்ட்டாக சேர்த்து படிச்சுக்குறேன்..விசு அய்யரின் கேள்வி பொதிந்த பதிலில்லை என்ற பதிலிலே எனக்கும் உடன்பாடு உண்டென்ற போதிலும்
    இந்த பதிவிலே கதாசிரியரின் அனுபவம் என்பது சேவைக்கான உயர்நோக்கத்துக்கு சக தோழர்களை ஈர்க்கும் முயற்சி என்ற நல்லெண்ண அடிப்படையில் அமைந்திருப்பதால் அதுகுறித்து கவனம் மட்டுமே செலுத்துவோம்..

    ReplyDelete
  16. ///"ஆக்கியோரின் அனுபவமே என படித்து அப்படியே கருத்தேதும் சொல்லாமல்
    அறிவில்லாத பதில்அமைந்து விடக் கூடாது என்பதற்காக
    "பதில் இல்லை" என்பதையே பதிலாக தருகிறேன்"////

    நீங்கள் கருத்துச்சொல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன்.என் ஆக்கத்தில் கடைசி வரியைப் பாருங்கள்."உங்க‌ளுக்குப் புரிந்தால் சொல்லுங்கள்" என்றே சொல்லியுள்ளேன். உங்க‌ளுடையது எப்போதும் மாறுபட்ட கருத்து என்றே கூறி வந்துள்ளீர்கள்.மாறுபடவேண்டும் என்பதற்காக மட்டும் மாறுபடாமல், கொள்கைப் பிடிப்புடன் நீங்கள் உங்கள் உறுதியான கருத்தைக் கூறினால், அது சரியென்று தோன்றிவிட்டால்,அதை ஏற்க த்தயங்காத மனது எனக்கு உண்டு.

    எமது பதில் அறிவில்லாத பதிலாக இருக்கும் என்று முன்கூட்டியே எப்படி முடிவு செய்கிறீர்கள்?வழக்கம் போல் குழப்ப ஆரம்பித்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  17. '''சொர்கம் என்பது ஒரு அடிமட்டக்(basic) கொள்கை. அதை அடைவது நமது இறுதி நோக்கமல்ல. நம் புண்ணியம் முடிந்தவுடன், பாவத்தை அநுபவிக்க நரகம் செல்ல வேண்டும் அப்புறம் பிறவி உண்டு.
    நாம் அறம் பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டப்பட்டு இருக்கிறோம்.
    புண்ணியம் என்பது தங்க‌த்தால் ஆன கைதி செயின்.பாவம் என்பது இரும்பால் ஆன கைதிச் சங்கிலி.இரண்டுமே வேண்டாம். இறைவனின் திருவடியே வேண்டும்.அதுவே முக்தி!நன்றி மைனர்வாள்!
    அன்புடன் வணக்கம் !!
    ****மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரையார் கழல் என் கைதான் தலை வைத்து கண்ணீர் ததும்பி *****.......****...கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினதடி யாரோடு அல்லால் நரம்புகினும் ******
    ஸ்ரீ மாணிக்கவாசக ஸ்வாமிகள். திருவாக்கு.

    ReplyDelete
  18. ///கடைசி வரியைப் பாருங்கள்."உங்க‌ளுக்குப் புரிந்தால் சொல்லுங்கள்" என்றே சொல்லியுள்ளேன்.///


    பின்ஊட்டத்தின் முதலிலேயே பதில்
    "புரிந்ததை சொன்னால் புரியாது" என


    ///உங்க‌ளுடையது எப்போதும் மாறுபட்ட கருத்து என்றே கூறி வந்துள்ளீர்கள்.மாறுபடவேண்டும் என்பதற்காக மட்டும் மாறுபடாமல்,///

    மாறுபடவேண்டுமென்பதல்ல நோக்கம்
    மாறுபட்டு இருப்பதே அதன் தாக்கம்


    மறுத்துச் சொல்வதில் என்ன தயக்கம்
    மறுபடியும் சொன்னால் தொடங்கும் புதிய இயக்கம்



    ///அது சரியென்று தோன்றிவிட்டால்,அதை ஏற்கத்தயங்காத மனது எனக்கு உண்டு.///


    அவரவர் கருத்தில் பொருள் உண்டு
    அதை மற்றவர் ஏற்க அவசியமில்லை


    மாறுவதும்மாற்றுவதும் நம்வசமில்லை
    வேறெதுவும் கூறாமலே சொன்னது


    உங்கள் கருத்து உங்களுக்குச் சரி
    எங்கள் கருத்து எங்களுக்கு சரி என


    அமைதி கொள்கிறோம்
    ஆரவாரம் துளியும் இன்றியே..


    ///எமது பதில் அறிவில்லாத பதிலாக இருக்கும் என்று முன்கூட்டியே எப்படி முடிவு செய்கிறீர்கள்?///

    முடிவுகள் நாம் செய்வதில்லை
    முடித்து வைத்துள்ளதால் சொன்னது


    அறிவில்லாதது என்பதற்கு பொருள்
    அறிவு இல்லாதது என்பதல்ல..


    அறிவதற்கு இல்லாதது குறித்ததை
    அறிந்தது என கூட கொள்ளலாம்


    ///வழக்கம் போல் குழப்ப ஆரம்பித்துவிட்டீர்கள்.///


    குழப்பவில்லை..கலங்கிய
    குளத்தில் கால் வைக்காமலிருந்தால்


    குளம் தெளிவடைகிறது - மனக்
    குளமும் எண்ணங்களால் தெளிவுறும்

    ReplyDelete
  19. "கலங்கிய குளத்தில் கால் வைக்காமலிருந்தால்...."
    நல்ல வேளை கலங்கிய குட்டை என்று சொல்லாமல், குளம் என்று சொன்னீர்களே! அதுவரைக்கும் கொடுத்த சமூக‌ அந்தஸ்திற்கு நன்றி!

    நீங்கள் உங்கள் கருத்துக்களை முறையாக முன் வைப்பதே சாலச்சிறந்தது. கருத்து மோதல்கள் இல்லாமல், கருத்துப் பறிமாற்றமாகவே செய்துகொள்ளலாம்.
    சைவ சித்தாந்தம், ஒஷோ, திருக்குறள் போன்றவற்றில் தங்கள் ஆர்வத்தை
    தஙளுடைய பின்னூட்டங்களில் கண்டிருக்கிறோம். அவற்றை இங்கு சொல்லலாமே. யாருக்கும் புரியாத புதுக்கவிதை எழுத்துநடையைத் துறந்து
    வெளியில் வாருங்கள்,ஐயர் சார்!

    ReplyDelete
  20. "உங்கள் கருத்து உங்களுக்குச் சரி எங்கள் கருத்து எங்களுக்கு சரி என..."

    திருக்குர்ரான் தாக்கமோ? ஆனால் அது கூறப்பட்ட இடம் பொருள் ஏவல் பார்த்துள்ளீர்களா? ஒரு விட்டுக் கொடுத்து உடன் பாடுகாணும் மனநிலையில் இருந்த குறைஷிகளை மறுதளித்துக் கூறப்பட்ட வாசக்ம் அது. முற்றிலும் எதிமறைப் பொருள் கொண்டது.'என் கொள்கை இன்னதென்று சொல்லவும் மாட்டேன்;உன் கொள்கையை மட்டும் பூடகமாக மறுப்பேன்'என்ற உங்கள் நிலையை வருத்ததுடன் நிராகரிக்கிறேன்.இதுபோன்ற கண்கட்டு வேலையில் இருந்து விடுபட்டு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.

    ReplyDelete
  21. ///////kmr.krishnan said...
    நல்ல வேளை கலங்கிய குட்டை என்று சொல்லாமல், குளம் என்று சொன்னீர்களே!////
    குளம்,குட்டை ன்னு ஒரே சத்தமா இருக்கே..வந்தா மீன் புடிக்கலாமா?
    கடல்லே மீன் புடிக்க அரசாங்கம் தடை போட்டுருக்குற நேரத்துலே
    கரெக்டா இப்பிடி ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி..

    ReplyDelete
  22. ///"குளம்,குட்டை ன்னு ஒரே சத்தமா இருக்கே..வந்தா மீன் புடிக்கலாமா?"///

    அதைத்தானே நெடுங்காலமாகப் பலரும் செய்து வருகிறார்கள்.அப்படி மீன் பிடிக்க வந்துவிட்டு நாட்டையே பிடித்து விட்டார்கள் அந்நியர்கள்.

    குழம்பிய குட்டையில் மீன் மட்டுமல்ல, பல வேண்டாத கிருமிகளும் இருக்கலாம். எதற்கும் ஜாக்கிரதையாக மீன் பிடியுங்கள் மைனர்வாள்!

    ஜப்பானிலா? இந்தியாவிலா? இப்போது எங்கே இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  23. நல்லது.நன்றி..
    சூப்பர்பக்ஸ் பத்தி சொல்லியிருக்கீங்க..
    தண்ணீரில் கலந்துவிட்ட ரேடியேஷன் பத்திதான் நான் கவலைப்படணும்..
    தண்ணீரில் கலந்துவிட்ட கிருமி பத்தி கவலைப்பட வேண்டியவுங்க டெல்லிக்காரங்கதான்..
    க்ளோரின் டேபிலட் எல்லாம் சேர்த்துக்கிட்டாச்சா?
    இன்னும் இந்தியாலேதான் இருக்கேன்....

    ReplyDelete
  24. தண்ணீரில் கலந்துவிட்ட கிருமி பத்தி கவலைப்பட வேண்டியவுங்க டெல்லிக்காரங்கதான்// இது என்ன எழுதிருக்கீங்க, ஒண்ணும் புரியல. இந்த மாதிரி செய்தி எதுவும் நான் படிக்கலையே.

    இன்னும் இந்தியாலேதான் இருக்கேன்// அப்படீங்களா சார், நான் நீங்க சொல்லாம கொள்ளாம ஜப்பானுக்கு ஓடிட்டீங்கன்னு நினைச்சேன்.

    ReplyDelete
  25. டெல்லிக்காரங்க தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்தா
    தமிழ்நாட்டுக்காரங்க நாட்டை வுட்டுட்டு ஓடுறதைத் தவிர வேறு வழி இல்லையே..
    தமிழ்நாட்டுக்காரங்களை அந்த அளவுலேதான் வெச்சுருக்காங்க டெல்லிக்காரங்க...

    ReplyDelete
  26. அது!!!!! அந்த பயம் இருக்கணும்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com