மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

25.4.11

தர்மம் எப்படியடா தலையைக் காக்கும்?

----------------------------------------------------------------------------------
 தர்மம்  எப்படியடா  தலையைக்  காக்கும்?

"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்யைடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம் திருந்த மருந்து சொல்லடா"


சுமார் 29 வயதுவரையே வாழ்ந்த தன்மானத் தமிழர் கவிஞர் பட்டுக்கொடை கல்யாணசுந்தரம் அவர்கள் தன்னுடைய 25 வயதில் ‘மகாதேவி’ என்னும் திரைப்படத்திற்காக எழுதிய நல்லதொரு கருத்துள்ள பாடலின் துவக்க வரிகள் இவை.

தமிழ்நாடு முழுவதும் தரிசு நிலங்களில் சீமைக் கருவேல மரம் காடாக வளர்ந்திருப்பதைப்போல, இந்தத் திருட்டும், புரட்டும், கொள்ளையும், ஊழல்களும் அதீதமாகப் பெருகியுள்ளன. அசுர வளர்ச்சியோடு உள்ளன.

சுமார் எண்பது விழுக்காடு மக்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.
ஒன்று இவற்றைச் செய்வதில் முனைப்பாக உள்ளார்கள் அல்லது செய்பவர்களுக்கு துணைபோவதில் விழிப்பாக உள்ளார்கள்.
கையூட்டு வங்குவது  குற்றமென் றால், கொடுப்பதும் குற்றம்தான்.
தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள நல்லவர்கள் கூட
லஞ்சம் கொடுப்பதைக்  குற்றமாக நினைப்ப தில்லை. வாழ்க்கை
வசதிகளைப் பெருக்கிக் கொள்ள ஊழல் செய்ய அஞ்சுவதில்லை.
அதுதான் மிகப்பெரிய அவலம்.

மக்களின் சுயநல மனப்பான்மைதான் முக்கிய காரணம். யார் எக்கேடு கெட்டால் என்ன? நாம் நன்றாக இருந்தால் போதும் என்னும் போக்குத்தான் காரணம்.

“பற்றித்தொடரும் பாவமும் புண்ணியமும்” என்று பட்டினத்தார்
பாடி வைத்துவிட்டுப்போனதை எல்லாம் சொன்னால் பெரும்பாலோர்
கேட்கும் மன நிலையில் இல்லை.

இன்றையப் பொருளாதாரச் சூழ்நிலையில், வாழ்க்கைச் சிக்கல்களில், பழகிவிட்ட பழக்க வழக்கங்களில் அதெல்லாம் சாத்தியமில்லை.

சுற்றிலும் நடக்கும் அக்கிரமங்களை, திகைப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் அல்லது பார்க்காமல் ஒதுங்கியிருக்கும் சூழல்தான் நல்லவர்களிடையே இருக்கிறது. பகவான் இன்னொருமுறை அவதரித்து இவற்றை எல்லாம் சீராக்குவார் அல்லது இன்னொரு காந்தி வந்து நமக்கு சுதந்திரம் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களிடையே இருக்கிறது.

யாரையும், யாரும் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை.

யாரையும் யாரும் திருத்த முடியாது.

யாரையும் திருத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை.

நம்மை நாமே திருத்திக் கொள்ள முடியாது.

இதெல்லாம் சற்று காலம் நீடிக்கத்தான் செய்யும்.

நாளொன்றுக்கு 75 லட்சம் மக்கள் குடிக்கிறார்கள். ஆண்டிற்கு சுமார் 17 ஆயிரம்கோடி ரூபாய் பணம் மதுவிற்பனையில் புரள்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

குடிப்பதற்காக மாதம் முவாயிரம் ரூபாய்க்கு மேல் சர்வ சாதாரணமாக செலவு செய்பவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று, “இந்தக் கோவில் புராதணமான கோவில் இங்கே நித்திய வழிபட்டிற்குக்கூட வழியில்லாமல் இருக்கிறது. நீங்கள் உங்கள் சார்பில் மாதம் ஒரு டின் நல்லெண்ணெய் வாங்கிக் கொடுங்கள். கோவிலில் விளக்காவது எரியட்டும்” என்று சொன்னால் ஏளமானமாகப் பார்த்துவிட்டு அல்லது காதில் வாங்கிக் கொள்ளாமல் போகிறவர்கள் அதிகம் உள்ளார்கள்.

கல்வியைத் தர வேண்டிய அரசாங்கம் சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

கல்வியும், மருத்துவமும் தர்மத் தொழில்களாகும். ஆனால் இன்று அவற்றில் தர்மம் இல்லை. அவைகள்தான் காசு கொழிக்கும் தொழில்களாகும்.

“தர்மம் தலை காக்கும்” என்று நீதி நெறிகளைச் சொன்னால், அவர்கள் பதிலுக்கு “தர்மம் எப்படியடா தலையைக் காக்கும்? தனக்கு மிஞ்சித்தான் தானம்” என்று வாழ்க்கை நெறிகளைச் சொல்கிறார்கள்.

எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன்?

யோசித்துச் சொல்லுங்கள்

என்னுடைய பதில் நாளை வரும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

8 comments:

kannan said...

ஐயா வணக்கம்.

நியமாக வாழ்ந்தால் அவனுக்கு பெயர் பொழைக்க தெரியாதவன் என்று அல்லவா உலகம் கூறுகின்றது ஐயா.
இந்த உலகில் மனித பிறவியாக பிறந்து விட்டு என்ன செய்வது என்றே தெரியாமல் தான் நாட்களை தள்ள வேண்டியது இருக்கு ஐயா .

--

kmr.krishnan said...

"கல்வியைத் தர வேண்டிய அரசாங்கம் இன்று சாராயம் விற்கிறது; சாராயத்தில் சம்பாத்திததை வைத்து கல்லூரிகளை நடத்துகிறார்கள் முதலாளிகள்."

இதைத்தான் ஐயா கலிகாலம் என்கிறார்கள்."நாய் விற்ற காசு குலைக்காது"
என்று அதர்மத்திற்குத் துணை போய்க் கொண்டே பேச ஆரம்ப்த்தாகிவிட்டது.
இது ஒரு சுழற்சி. ஒரு சுற்று எல்லா அலங்கோலங்களும் நடந்துதான் முடியும் போல உள்ளது. ஈசி சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதா?கூடாது என்கிறார் அன்னா ஹசாரே!

Alasiam G said...

////யாரையும், யாரும் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை.

யாரையும் யாரும் திருத்த முடியாது.

யாரையும் திருத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை.

நம்மை நாமே திருத்திக் கொள்ள முடியாது.

இதெல்லாம் சற்று காலம் நீடிக்கத்தான் செய்யும்.////

உண்மை தான் சார்.. மெஞ்ஞானம் மட்டும் செழித்திருந்தக் காலத்தில்
விஞ்ஞானம் வளரவில்லை....
விஞ்ஞானம் வளர்ந்தக் காலத்தில்
அஞ்ஞானம் என்னும் மேகம் இடையே மெஞ்ஞானத்தை மறைத்திருக்கிறது...

இந்த பொய்யும் புரட்டும் இல்லாது செய்ய...
மெஞ்ஞானம் மட்டும் அல்ல, விஞ்ஞானமும் முழுமையாகப் பயன் படுத்தப் படவேண்டும்...
அதற்கு சிறு உதாரணம் தற்போது நடந்த தேர்தல்....
மெஞ்ஞானம் மறைக்கப் பட்ட நிலையில் விஞ்ஞானமே உதவிற்று...

அத்தனையும் கணினி மயமாக்க வேண்டும்...
கை ரேகையை அடையாள சின்னமாக்கி அதிலே ஒவ்வொரு தனி மனிதனின்
பிறப்பு, நடப்பு, இறப்பு, படிப்பு, சொத்துக் குவிப்பு, வங்கி இருப்பு, கடன், வேலை மாத வருமானம்,
என்று அத்தனையும்... அத்தனை விவரங்களையும் கோப்புகளாக்கி;
அரசாங்க கணினிப் பதிவேட்டில் ஏற்றப்பட்டு...
ஒளிவு மறைவு அற்ற ஒரு ஒழுங்கு நடை முறைப் படுத்தப் படவேண்டும்.....

அப்படி செய்யும் போது பொய்யிற்கும் புரட்டுக்கும் விலங்குகள் போடப்படும்.....

இதுவும் அல்லாமல் அதுவும் அல்லாமல், வெந்தும் வேகாமல் அத்தனையும்
அரை வேக்காடாய் இருப்பதே இந்த அவலத்திற்கு காரணம்.... விஞஞானத்தை முழுமைப் படுத்த வேண்டும்....

கலியுகத்தில்.... அதர்மம் பெருகுகிறது அதனை அடக்க விஞ்ஞானமும் வளர்கிறது....
அதை முழுமையாக பயன் படுத்தாது தான் பெருங் குறை!!!!!

அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு எரியும் என்பார்கள்...!!!!
உச்சத்திற்கு போகட்டும்....!!!

Thanjavooraan said...

மனித மனத்தின் எல்லையற்ற பெருவெளியில் உண்டாகும் வளமான எண்ணங்களே ஆசை. இந்த ஆசைகள் நிறைவேறினால் மனம் திருப்தியுறுகிறது. ஆசை நிராசையாக ஆகும்போது வாழ்க்கையில் வெறுப்பே விளைகிறது. "ஆசையே துன்பங்களுக்குக் காரணம்" என்று கெளதம புத்தர் சொல்லியருளியதாக படிக்கிறோம். ஆனால் அதை மனதில் வாங்கிக் கொள்ளவில்லையே. ஆசையினால் தூண்டப்பட்டுதான் மனிதனின் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.தாயுமானவ சுவாமிகள் மனதை இலவம் பஞ்சாகவும் ஆசையைப் பெருங் காற்றாகவும் ஒப்பிடுகிறார். மனம் ஆசையால் அலைக் கழிக்கப்படுவதால் ஏற்படும் துன்பத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.

"மோசம் வரும்; இதனாலே கற்றதும்
கேட்டதும் தூர்ந்து முக்திக்கு ஆன
நேசமும் நல்வாசமும் போய்ப், புலனாய் இல்
கொடுமை பற்றி நிற்பர், அந்தோ
தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே!"

மனம் தன்வசமின்றி ஆசையின் பின் சென்று அலைக்கழிக்கப்பட்டால் மோசம் வந்து சேரும், நாம் கற்றதும், கேட்டதும் வீணாகிவிடும். முக்தி பெறுவதற்கான வழிகளும், புண்ணியங்களும் நம்மை விட்டுப் போய்விடும்.
"ஆசைக்கு ஓர் அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி ஆளினும்
கடல் மீதிலே ஆணை செலவே நினைவர்;
அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து
ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்; நெடுநாள் இருந்த பேரும்
நிலையாகவே இன்னும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர்."

உலகம் முழுவதையும் கட்டி ஆண்டாலும் திருப்தி ஏற்படுவதில்லை. அந்த கடலையும் ஆள வேண்டுமென்கிற ஆசை வரும். குபேரன் போல செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் தாமிரத்தைத் தங்கமாக்கும் ரசவாத வித்தை தெரிந்தால் நன்றாக இருக்குமே என்பராம். நூறு வயது வாழ்ந்த பின்னும் சாவா வரம் பெற காயகற்பம் தேடி அலைவராம். .

திருமூலர் சொல்லுகிறார்

"ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே!"

இதைவிட ஆசையினால் விளைகின்ற துன்பத்தை வேறு யாரும் விவரித்திட முடியுமா சொல்லுங்கள். ஆசை அதிகரிக்க அதிகரிக்கத் துன்பங்கள்தான் பெருகுமாம். ஆசையை விட விட ஆனந்தம் பெருகுமாம்.

துன்பங்களுக்குக் காரணம் என்னவென்று இப்போது புரிகிறதா? பேராசைக்காரர்கள் நம்மை வழி நடத்துவார்களானால், நம் நிலைமை என்ன? பேய்க்கு வாழ்க்கைப்பட்ட கதைதான். மக்களை போதை வசப்படுத்தி, அடிமைகளாக நடத்தி வந்தான் அன்னிய தேசத்தான். சுதந்திரம் அடைந்த பின் மதுவும் போதையும் ஒழிக்க முற்பட்டனர் காந்திய வாதிகள். அவர்களை முடக்கிப் போட்ட சுய நலக்கும்பல் இன்று கள், சாராயம், கள்ளச்சாராயம் என்று எங்கும் ஓடவிட்டு மனிதனின் மனத்தைக் கெடுத்துத் தாம் வாழ வழிவகுத்து விட்டனர். சாராய விற்பனையில் வரும் பணம், மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுகிறதா என்றால் இல்லை. அது தங்களது தொடர்ந்த அதிகார பலத்தை நிலை நிறுத்திக்கொள்ள சாதகமாகப் பயன்படுகிறது. மக்கள் விழித்துக் கொண்டால் நல்ல காலம். இல்லையேல் உடலில் ஒரு உறுப்பு அழுகிவிட்டால் அறுத்து எறிவதைப் போல இந்திய வரைபடத்திலிருந்து தமிழகம் அறுத்தெறியப்பட வாய்ப்பு உண்டு.

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.http://www.filmics.com/tamilshare

iyer said...

Attendance Marked..!!

ananth said...

நேரம் குறைவு. அதனால் உள்ளேன் ஐயா மட்டும் போட்டுக் கொள்கிறேன்

minorwall said...

அண்ணா ஹசாரே பெயரில் பேரறிஞர் அண்ணா இருக்கிறார்; ஆகவே அவர் எங்கள் கட்சியின் உறுப்பினர்
என்று அண்ணாவைத் தன் பெயரில் கொண்ட கட்சிகள் உரிமைகொண்டாடாமல் இருந்தால் சரி..
ஊழல் இல்லா நாடுகள் இல்லை..
அளவுகள் எண்ணிக்கையில் குறைவு அவ்வளவுதான்..
ஒட்டுமொத்தமாக சரிப்படுத்த வாய்ப்பு உள்ளதா?இல்லை..இல்லை..இல்லவே இல்லை..
இருக்கும் அரசியல் கட்சிகள் முற்றுமுற்றிலுமாக புறந்தள்ளப்படவேண்டும்..முடியுமா?முடியாது..
நல்லவாய்ப்புகள் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ விதியே என்று வாழும் ஒரு சமுதாயம்..நேர்மை நியாயம் உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாயம்..
இங்குமங்குமாய் கட்சிகட்டிகொண்டு சுயலாபத்துக்காக அலையும் கட்சிகள்..
அதனில் எதாவதொருபக்கம் ஒட்டிக்கொண்டு காலத்தை ஓட்டும் மக்கள்..
சாபக்கேடு..திருந்தாது..உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன்..
இந்த எலெக்ஷன் முடிந்து முடிவுகள் வரும்போது தேர்ந்து வந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக் காட்சிகள் மாறும் வாய்ப்பு அதிகம்..
தேர்தலுக்கு முன் மக்களை சந்திக்க கூட்டணி அமைத்த போது இவர்களின் கொள்கை என்ன?தேர்தல் முடிந்தபின் இவர்கள் ஆட்சி அமைக்க என்று மக்களை இப்படி ஏமாற்றுகிற வேலைக்கு வேட்டு வைக்கும் சட்டத்தை, தேர்தலுக்கு முன் மக்களை சந்தித்த கூட்டணியில் அடுத்த தேர்தல் வரையிலும் மாற்றம் இருக்கக்கூடாது என்று யாராவது முறைமைப்படுத்த முடியுமா?சட்டத்தைக் கொண்டு வர வேண்டியவர்களே இவர்கள்தானே?அப்புறம் எப்படி?...
தேர்தல் காலத்தில் கெடுபிடிகள் செய்த தேர்தல் கமிஷன் செயல்பாடுகள் காமெடியாகப் போகப் போகிறது என்று அப்போது தெரியும்..இங்கேதான் பிள்ளையார்சுழி போடுகிறார்கள்..மக்களை ஏமாற்ற..