++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology இன்பம் எங்கே கிடைக்கும்?
முதலில் இன்பம் என்றால் என்ன என்று பார்ப்போம்:
ஐம்புலன்களுக்கும், மனதிற்கும் இனிமை அளிக்கும் உணர்வுதான் இன்பம் எனப்படும். மகிழ்ச்சி என்று வைத்துக்கொள்ளுங்கள். joy, pleasure
பூத்துக்குலுங்கும் மலர்கள் கண்ணுக்கு இன்பம்
குழந்தைகளின் மழலைப் பேச்சு பெற்றோர்க்கு இன்பம்.
32-24-32 அளவில் அழகாக இருக்கும் ஒரு சிட்டுவைத் தொடரும் வாய்ப்பு ஒரு இளைஞனுக்கு இன்பம்.
நிற்கும் தொகுதியில், அதிக அளவு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது வேட்பாளருக்கு இன்பம்.
ஒரு குவாட்டர், ஒரு சிக்கன் பிரியாணி பொட்டலம் ப்ளஸ் கையில் ஐநூறு ரூபாய் பணம் கிடைத்தால் கட்சித் தொண்டனுக்கு இன்பம்.
சாப்பிடும் மருந்துகளை நிறுத்தி விடுங்கள். இப்போது நீங்கள் நலமாக உள்ளீர்கள் என்ற மருத்துவர் சொன்னால், அதைக் கேட்கும் பெரியவருக்கு இன்பம்.
உடலுறவில் கிடைப்பது சிற்றின்பம்.
இறையுணர்வில் கிடைப்பது பேரின்பம்
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
ஆனால் உண்மையான இன்பம் எது? அதில் ஒருமித்த கருத்து இருப்பதற்கு வாய்ப்பில்லை!
ஒரு கவிஞன் எது இன்பமானது, எது இன்பமில்லாதது என்பதைப் பொட்டில் அடித்த மாதிரி நான்கே வரிகளில் எழுதினான். பாடலைக் கொடுத்துள்ளேன். பாருங்கள்
“கனிரசமாம் மதுவருந்தி களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
இணை இல்லா மனையாளின் வாய் மொழியே இன்பம்
அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்”
அதோடு விடவில்லை, அதற்கு மேலும் ஒரு போடு போட்டுத்தான் கவிஞன் பாடலை நிறைவு செய்தான். அந்த வரிகளையும் கொடுத்துள்ளேன். பாருங்கள்
“மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாய் அமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்
உன் மார்மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்”
(அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான பாடல் இது. பாடலின் துவக்க வரியையும் (முதல் வரியையும்) பாடலை எழுதியவரின் பெயரையும், பாடலைப் பாடியவரின் பெயரையும் தெரிந்தவர்கள் கூறலாம்.)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.
இன்பத்தைத் தேடாத அல்லது நாடாத அல்லது விரும்பாத மனிதனே இருக்க முடியாது. ஆனால் அந்த இன்பம் முறையாக எல்லா வழிகளிலும், எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும், எல்லோருக்கும் கிடைக்குமா? என்றால், நோ சான்ஸ்.
ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் ஓரளவு கிடைக்கும்.
நன்றாக இருப்பது என்றால் என்ன? தளபதி படத்தில் வரும் அரவிந்தசாமிபோல இருப்பதா? காதல்கோட்டை படத்தில் வரும் அஜீத்குமாரைப் போல சுக்கிரன் இருப்பதா? அல்ல. அது பற்றிப் பலமுறை சொல்லியிருக்கிறேன்.
ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றோ அல்லது உச்சம் பெற்றோ அல்லது கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானங்களில் இருப்பதோ அல்லது அஷ்டகவர்க்கத்தில் 6 அல்லது அதற்கு மேலான பரல்களுடன் இருப்பதோ மட்டுமே நன்றாக உள்ளதைக் குறிக்கும் அதை மனதில் கொள்க.
சரி எப்போது கிடைக்கும்?
சுக்கிரனின் திசை அல்லது புத்தி நடக்கும் காலங்களில் வாழ்க்கை இன்பமயமானதாக இருக்கும்.
இன்பங்கள் எல்லாம் அறுபது வயதில் அல்லது அதற்கு மேலான வயதில் கிடைத்துப் பிரயோஜனம் இல்லை. உரிய காலத்தில் கிடைக்க வேண்டும். இருபதில் இருந்து நாற்பது வயதிற்குள் கிடைக்க வேண்டும். அனுஷ்கா சர்மாவைப் போல பெண் இருந்தாலும் உரிய காலத்தில் திருமணம் செய்தால் அல்லவா அவள் இன்பமாக இருக்க முடியும். ஐம்பது வயதில் திருமணம் செய்வதால் யாருக்கு என்ன பயன்?
ஆகவே கவலைப் படாதீர்கள். உங்களுக்கு சுக்கிர திசை இந்த வயதிற்குள் வராவிட்டாலும், வேறு கிரகங்களின் திசைகளில் உள்ள தனது புத்திகளில் (Sub-periods) சுக்கிரன் தனது பணியைச் செவ்வனே செய்துவிடுவார். ஆகவே அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்புக்கள் உண்டு. கிடைக்கும் ஏரியாக்களும், அளவுகளும் மட்டும் மாறுபடும். சிலருக்கு சொத்து சுகங்க்ளால் கிடைக்கும். சிலருக்கு மனைவி மக்களால் கிடைக்கும். சிலருக்கு வேறு வழிகளில் கிடைக்கும். எல்லாம் வாங்கி வந்த வரம்!
இன்று சுக்கிர திசையில், சுக்கிர புத்தியை அதாவது சுக்கிரனின் சுய புத்தியைப் பார்ப்போம்.
அதன் கால அளவு= 20 x 20 = 40 மாதங்கள்
அதற்கான பாடல்: (பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் எழுதவில்லை)
காணவே சுக்கிரதிசை வருஷம் நாலைந்து
கனமான சுக்கிரனில் சுக்கிரன்புத்தி
பூணவே மாதமது நாற்பதாகும்
பூலோக மன்னரைப்போல் பூவிலரசாள்வான்
பேணவே சவுக்கியங்களுண்டாகும் பாரு
பெரிதான லெட்சுமியும் பொற்கொடிபோல் வருவாள்
தோணவே சோபணமும் சுபயோகமுண்டாம்
தோகையர்கள் வந்தவுடன் தொகுதியுடன் வாழ்வான்
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

இன்பமெங்கே இன்பமெங்கே இன்று துவங்கும் பாடல். கவிஞர் அ மருதகாசி எழுதியது. சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியது. பாடல் இடம் பெற்ற திரை மனமுள்ள மறுதாரம். சரிதானே ஐயா.
ReplyDeleteபாடல் இடம் பெற்ற திரைப்படம் மனமுள்ள மறுதாராம்
ReplyDeleteசுக்கிர திசை வயசான காலத்துல வருது சுக்கிரனும் பலம் தான்
இன்பம் என்றதும்
ReplyDeleteஇன்பம் எங்கே
என்று தேடு என்ற பாடலோ
இன்பமே
உந்தன் பேர் வள்ளலோ
என்ற பாடலோ
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா உண்டாகும் இன்பம்
என்ற பாடலோ வரும்
என
எதிர்பார்த்தோம்,
இன்பத்தை பற்றி
இன்னமும் சொல்லலாம் என
இன்பத்தை சொல்லும் சில குறளை
இன்றைய சிந்தனைக்கு தந்து
சுக்கிரனை சந்திக்க
சுத்தமாக வாய்ப்பில்லை
அடியேனுக்கு அருகிலேயே இல்லை
அவர் 12ல் பத்திரமாக இருக்கிறார் என
வழக்கமான செய்தியுடன்..
வருகை பதிவினை தருகிறோம்
....
அறத்தான் வருவதே "இன்பம்"
மக்கள்மெய் தீண்டல் உடற்கு"இன்பம்"
மற்றுஅவர் சொல்கேட்டல் "இன்பம்" செவிக்கு.
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் "இன்பம்" தரும்.
ஒறுத்தார்க்கு ஒருநாளை "இன்பம்"
(இது அய்யருக்கு பிடித்த இன்பம் பற்றிய குறள்)
ஈத்துவக்கும் "இன்பம்"
இருள்நீங்கி "இன்பம்" பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.
"இன்பம்" இடையறா தீண்டும் அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்.
"இன்பம்" விழையான் வினை விழை வான் தன்கேளிர் துன்பம் துடைத்து ஊண்றும் தூண்.
"இன்பம்" விழையான் இடும்பை இயல்பு என்பான் துன்பம் உறுதல் இலன்
இன்பத்துள் "இன்பம்" விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.
இன்னாமை "இன்பம்" எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையும் சிறப்பு.
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி "இன்பம்" பயக்கும் வினை.
இன்பத்துள் "இன்பம்" பயக்கும் இகல் என்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.
செறுவார்க்குச் சேணிகவா "இன்பம்"
இழிவறிந்து உண்பான்கண் "இன்பம்"
"இன்பம்" ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின்.
"இன்பம்" கடல்மற்றுக் காமம்
ஊடுதல் காமத்திற்கு "இன்பம்"
அப்பப்பா...
"எத்தனை கோடி 'இன்பம்'வைத்தாய்"
என்ற அந்த வரிகளை மறந்திடலாமா?
வாத்தியார் ஐயா வணக்கம்.
ReplyDeleteவகுப்புக்கு வந்த நாள் முதலாக ஐயா கூறுவதை முடிந்த அளவீர்க்கு மனதில் ஏற்றி கொண்டுதான் வருகின்றேன். பார்க்கலாம் இனிமேல் வரும் காலங்கள் வசந்த காலமாக வருகின்றதா என்று ?
திரைப்படம்: மனமுள்ள மறுதாரம்
ReplyDeleteபாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை
மனமுள்ள மறுதாரம்
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை
இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் - அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்
இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் - உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்
இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
ஐயா!
ReplyDeleteநீண்ட நெடும் காலமாக மிகவும் ஆவலுடன் எதீர்பார்த்த பாடப்பகுதியான
சுக்கிரனின் வீட்டை பற்றி இன்று தொடங்கியமைக்கு ஒரு கோடான கோடி புண்ணியம் தங்களுக்கு.
மிக்க நன்றி !.
Iya,
ReplyDeleteIthe sukiran for kumba lakkinam, he is yogathipathi and sthira lakkina padagathipathi too.
If he stands at position 3rd with Guru.
Is he powerful or power less?
Will sukira gives good things?
எனது 39 வயதில் இருந்து 59 வயது வரை சுக்கிர தசையை அனுபவித்தேன் ஐயா.சுக்கிரன் 3ல் கன்னியில் நீசம் ஆகி கேதுவுடன் நின்றதால், மேலும் அவர்
ReplyDeleteபாதகாதிபதி என்பதாலும் விசேஷமாக ஒன்றும் நடக்கவில்லை. அம்சத்தில் அவர் உச்சம் என்பதால், பெரிய அளவில் பணத்தட்டுப்பாடு இல்லாமல், கடன் சுமை இல்லாமல் வாழ்க்கை ஓடியது.
கட்டுரை மிக நன்று!!. ஏதோ சுக்கிர தசையை நம்பித்தான் கேதுவை கடந்து கொண்டிருக்கிறேன்!. ( மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிர தசை பயன் தராது என குண்டு போடுகிறார்கள்!!.. உண்மைதானா ஆசானே? )
ReplyDelete-ஜாவா
/////ananth said...
ReplyDeleteஇன்பமெங்கே இன்பமெங்கே இன்று துவங்கும் பாடல். கவிஞர் அ மருதகாசி எழுதியது. சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியது. பாடல் இடம் பெற்ற திரை மனமுள்ள மறுதாரம். சரிதானே ஐயா.//////
கரெக்ட்! சரிதான் ஆனந்த்!
////மணி said...
ReplyDeleteபாடல் இடம் பெற்ற திரைப்படம் மனமுள்ள மறுதாராம்
சுக்கிர திசை வயசான காலத்துல வருது சுக்கிரனும் பலம் தான்/////
நல்லது. நன்றி நண்பரே!
///iyer said...
ReplyDeleteவருகை பதிவினை தருகிறோம்
அறத்தான் வருவதே "இன்பம்"
அப்பப்பா...
"எத்தனை கோடி 'இன்பம்'வைத்தாய்"
என்ற அந்த வரிகளை மறந்திடலாமா?/////
உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன். ஒரு வேண்டுகோள். மேற்கோள்களாக நீங்கள் எழுதும் கவிதை வரிகளை விடுத்து, மற்றபடி உங்கள் கருத்தை உரை நடையாகவே எழுதுங்கள் விசுவநாதன்! என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப் பிடிபடமாட்டேன் என்கிறது. என் தமிழ் அறிவு அவ்வளவுதான்!
kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கம்.
வகுப்புக்கு வந்த நாள் முதலாக ஐயா கூறுவதை முடிந்த அளவிற்கு மனதில் ஏற்றி கொண்டுதான் வருகின்றேன். பார்க்கலாம் இனிமேல் வரும் காலங்கள் வசந்த காலமாக வருகின்றதா என்று ?//////
இருக்கும். நம்பிக்கையோடு இருங்கள்!
/////சிவ.சி.மா. ஜானகிராமன் said...
ReplyDeleteதிரைப்படம்: மனமுள்ள மறுதாரம்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்/////
நன்றி இடைப்பாடியாரே! நானும் இணையத்தில் இருந்துதான் வரிகளைப் பிடித்தேன்.
/////kannan said... ஐயா!
ReplyDeleteநீண்ட நெடும் காலமாக மிகவும் ஆவலுடன் எதீர்பார்த்த பாடப்பகுதியான சுக்கிரனின் வீட்டை பற்றி இன்று தொடங்கியமைக்கு ஒரு கோடான கோடி புண்ணியம் தங்களுக்கு.
மிக்க நன்றி !.//////
வீடா? சுக்கிரனின் தசா புத்தி என்று சொல்லுங்கள்!
karthikeyan.p said...
ReplyDeleteIya,
Ithe sukiran for kumba lakkinam, he is yogathipathi and sthira lakkina padagathipathi too.
If he stands at position 3rd with Guru.
Is he powerful or power less?
Will sukira gives good things?
இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்!
////kmr.krishnan said...
ReplyDeleteஎனது 39 வயதில் இருந்து 59 வயது வரை சுக்கிர தசையை அனுபவித்தேன் ஐயா.சுக்கிரன் 3ல் கன்னியில் நீசம் ஆகி கேதுவுடன் நின்றதால், மேலும் அவர்
பாதகாதிபதி என்பதாலும் விசேஷமாக ஒன்றும் நடக்கவில்லை. அம்சத்தில் அவர் உச்சம் என்பதால், பெரிய அளவில் பணத்தட்டுப்பாடு இல்லாமல், கடன் சுமை இல்லாமல் வாழ்க்கை ஓடியது./////
தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Jawa said...
ReplyDeleteகட்டுரை மிக நன்று!!. ஏதோ சுக்கிர தசையை நம்பித்தான் கேதுவை கடந்து கொண்டிருக்கிறேன்!. ( மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிர தசை பயன் தராது என குண்டு போடுகிறார்கள்!!.. உண்மைதானா ஆசானே? )
-ஜாவா/////
குண்டுகளை எல்லாம் மறந்துவிட்டு நம்பிக்கையோடு இருங்கள். சுக்கிரன் சுபக்கிரகம், உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்
அறிவிப்பு: வாத்தியார் வெளியூர்ப் பயணம். திடீர்ப் பயணம். உறவினர் ஒருவர் கர்மகாரகன் சனீஷ்வரனிடம் இருந்து போர்டிங் பாஸ் கிடைத்து இறுதிப் பயணம் சென்று விட்டார். உலகத் தொல்லைகளில் இருந்து நிரந்தரமாக விடுபட்டுச் சென்றவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு 21.4.2011 வியாழக்கிழமையன்று நடைபெறும். அனைவரும் பொறுத்துக்கொள்க!
ReplyDelete//உறவினர் ஒருவர் கர்மகாரகன் சனீஷ்வரனிடம் இருந்து போர்டிங் பாஸ் கிடைத்து இறுதிப் பயணம் சென்று விட்டார்.//
ReplyDeleteவாத்தியார் வாத்தியார் தான் ...
ஒரு மரணத்தை இவ்வளவு நாசூக்காக சொல்லமுடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள் .. அற்புதம் ஐயா !
//வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அனைவரும் பொறுத்துக்கொள்க!//
ஐயா தங்களது அன்பிற்கும், கடின உழைப்பிற்கும், வழிகாட்டலுக்கும் என்றென்றும் வகுப்பறை மாணவர்களாகிய நாங்கள் காத்திருப்போம்.
நன்றி ஐயா...
//ஒரு வேண்டுகோள். மேற்கோள்களாக நீங்கள் எழுதும் கவிதை வரிகளை விடுத்து, மற்றபடி உங்கள் கருத்தை உரை நடையாகவே எழுதுங்கள்//
ReplyDeleteவேண்டுகோள் விசு அய்யருக்கா
வேண்டாமே;அன்பு கட்டளை போதுமே
உள்ளத்து விதைகளே கவிதையாக உள்ளபடியே வேண்டாமெனில்
இனி நடையை மாற்றுகிறோம்
இனிய "உரை"யாகவே "நடை"போடும்
சரிதானே..
சரியே தான்..
மாடி மனை கோடி பணம் வீண் ஜம்பம் இதை தான் இன்றய உலகம் விரும்புகிறது.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteHow about your book releasing process? Have you released all books.
i need to get it... please advise further.
Regards,
"One of your student"
Vaithiswarankoil Thiyagarajan
91 9443985892
அன்புடன் வணக்கம்
ReplyDeleteசுக்கிர திசை வயசான காலத்துல வருது சுக்கிரனும் நீசம் பத்தில்.ரெண்டே .ரெண்டு.. பரல் [கன்னியில் உச்ச புதன், சூரியனுடன் ]""இருந்தாலும் கேது இருக்காரே ??மனுசனை அடிச்சி, துவைச்சி, பிழிஞ்சு, காயபோட்டு ஐயர்ன் பண்ணி ? ?அப்புறம் எங்கே சுக்கிர திசைல அனுபவிக்க ??இளம் வயசு சுக்கிரன் ரெம்ப சரி !!! அதுக்கு ப்ரார்த கன்மம !!!!வேணும் !!நன்றி வாத்தியார் சார்///விசு சார்!நானும் சொல்ல வேண்டும் என எண்ணினேன் சார் சொல்லி விட்டார்கள்.. நடையா!இது நடையா ஒரு கவிதை அன்றோ """நடக்குது """எனும்படி இனி கொடுங்கள் நாங்களும்[ நானும்] புரிந்து கொள்கிறோம்
அன்பிற்கினிய ஆசிரியர் "திடீர்ப்பயணம்" என்று எழுதியிருந்ததைப்படித்ததும் அடிக்கடி ஊருக்குச் சென்று வரக்காரணம் என்னவோ ஏதோ என்று நினைத்தேன்..
ReplyDeleteஅவருக்கு சுக்கிர தசை ஏதும் ஓடி அந்த வகையிலே ஏதும் ஊரிலே வலுவான தொடர்புகள் ஏற்பட்டுவிட்டதோ என்றெல்லாம் ஏதேதோ நினைத்துவிட்டேன்..
ஆசிரியர் அடுத்து தொடர்ந்து எழுதியுள்ளதைப்படிக்காமல் இப்படி நினைத்தது கொஞ்சம் தப்புதான்..சுக்கிரன் பற்றிய பாடம் கொடுத்த தாக்கம்தான் இது..