மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

14.4.11

அசத்தலான ‘முத்தக் காட்சி’ !!!!!!

----------------------------------------------------------------------------
 அசத்தலான ‘முத்தக் காட்சி’ !!!!!!

எத்தனையோ முத்தக் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள்.
ப்ரீ கிஸ், ப்ரெஞ்ச் கிஸ், கார்டன் கிஸ், கத்திரிக்காய் கிஸ்
காசு வாங்கியதற்காக படத்தில் நிகோட்டின் நாற்றமுள்ள நாயகனை
வலுக்கட்டாயமாக நாயகி முகர்ந்து பார்த்து் அடிக்கும் கிஸ்
என்று பலவகை முத்தக் காட்சிகள்!

கிழே உள்ள படத்தில் மங்கை ஒருத்தி
கண்களை மூடிக்கொண்டு அடிக்கும் கிஸ்ஸிற்கு
எதுவுமே ஈடாகாது!

பார்த்து விட்டு நீங்களே சொல்லுங்கள்

Scroll Down
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V முத்தக் காட்சி எப்படி இருக்கிறது சாமி?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

22 comments:

iyer said...

அர்த்த ராத்திரியில் தொடங்கும்
ஆங்கில புத்தாண்டில் மகிழ்ந்ததில்லை


நித்திரையை கலைக்கும்
சித்திரைதான் எங்களுக்கு புத்தாண்டு


இலாப கணக்கினை நாங்கள்
இன்று தான் துவங்குவோம்


பதினான்கு நாள் பாக்கி வேலையை
பதறாமல் இன்று முடித்துவிடுவோம்..


ஆட்சி மாற்றங்கள் அங்கே வந்தாலும்
ஆளப்போவது யாராக இருந்தாலும்


"கர" வருடம் நமக்கு
கனிசமானலாபங்களை பெற்றுத்தரட்டும்


தொடங்கி இருக்கிற முயற்சிகளும்
தொடங்க இருக்கிற முயற்சிகளும்


வெற்றிகளையே பெற்றுத் தரட்டும்
வெள்ளியின் விடியலில் வெளிச்சம்
பிறக்கட்டும்


விழுந்து விழுந்து எழும் கடலலை போல
விழுந்தாலும் எழுகின்ற ஆர்வத்துடன்.


சும்மா இருந்தா ஆம்லெட்டாவோமென
சுட்டிஅலகால்ஓட்டைகுத்தி வெளிவரும்


கோழிக் குஞ்சு போல..
கோணல் புத்தியை நேர் செய்து


அறுசுவை உணவில் இன்று முதல்
அன்பு சுவையினையும் ஏழாய் கூட்டி


எட்டாத வெற்றிகளை இனி
எளிதாய் பெற்றிடுவோம்..


நிறைந்த செல்வம்; நிலைத்த புகழ்
நிலையான ஆரோக்கியம்;நீடித்தஆயுள்


நிலைமாறாத தெய்வ பக்தி; நிறைவான வாழ்வென

நித்தமும் பெற்றிட
சித்தத் தெளிவுடன்


வகுப்பறை தோழர்களையும்
வாஞ்சை கொண்ட வாத்தியாரையும்


வாழ்த்துகிறோம்இறைவன்திருவருளால்
வளமோடு நலம் பெறவே..

படித்துறை பாண்டி said...

Copyright protected ??
நீங்க இந்த படத்தை எங்கேயிருந்து சுட்டீர்கள் நண்பரே

iyer said...

முத்தம் வெற்றிக்கா..
சத்தம் போட்டுத்தான் சொல்லுங்களேன்


நித்தம் நித்தம் ஏதோ பிரச்சனைகள்
சுத்தம் செய்த பின்னரும் மனதில்


அசுத்தம் என்றால்
வசந்தம் எப்போது வாழ்வில் எனினும்


முத்தம் என்றதும் மீனாட்சியம்மை
முத்தப்பருவ பாடல்கள்தான்நினைவில்

Alasiam G said...

முத்தக் காட்சி அருமை...
என் அம்மாவை விட எனது குழந்தையைத் தான் நினைவிற்கு கொண்டு வருகிறது...
அதிலும் குழந்தையின் வாயோரம் வடியும் தேனை நாம் உறிஞ்சும் போது... ஏறும் பாருங்க ஒரு கிக்கு அதற்கு நிகர் வேறேது...

வாத்தியாருக்கும், எனது சக மூத்த இளைய மாணாக்கர்களுக்கும் எனது இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள். நன்றி...

krishnar said...

வாத்தியாருக்கும்,வகுப்பறை சக மாணவர்கட்கும் மனம் நிறைந்த புது வருட வாழ்த்துக்கள்.

kannan said...

Dear Sir!

Good Morning.

Raja=Theking said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Raja=Theking said...

நானும் ரொம்ப ஆர்வமா வந்தேன்

balajikannan said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

kmr.krishnan said...

கர வருடத்தைக் கரம் கூப்பி வரவேற்போம்‍= ‍‍=தேர்தல்
சுரம் நீங்கி வரட்டும் நல்ல மாற்றம்.

முத்தம் இடும் தாயும், முத்தத்தை ரசிக்கும் முத்தான சிசுவும்
சித்தம் மகிழ்ந்திட வர வேண்டும் மாற்றம்!

Uma said...

அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்த்திய மற்றும் வாழ்த்தப்போகுமனைவருக்கும் எனது நன்றிகள்.

hamaragana said...

அன்புடன் வணக்கம்,
அன்பு வாத்தியார், சக மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்..

'''
"""நித்திரையை கலைக்கும்
சித்திரைதான் எங்களுக்கு புத்தாண்டு "கர" வருடம் நமக்கு
கனிசமான லாபங்களை பெற்றுத் தரட்டும்
"""

hamaragana said...

அன்புடன் வணக்கம் .இந்த முத்தகாட்சி அழகுதான் !! இதை விட வாய்ல்அமுத தேனொழுகும் அந்தகுழந்தை தான கொடுக்கும் ஒரு முத்தாதிற்கு .இந்தஉலகத்தை தந்தாலும் ஈடாகுமா ?

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
வகுப்பறையின் ஆசிரியருக்கும் சக மாணவர் தோழர்களுக்கும் எனது இதயம்
கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
அன்புடன், அரசு.

Alasiam G said...

/////"கர" வருடம் நமக்கு
கனிசமானலாபங்களை பெற்றுத்தரட்டும்
தொடங்கி இருக்கிற முயற்சிகளும்
தொடங்க இருக்கிற முயற்சிகளும்
வெற்றிகளையே பெற்றுத் தரட்டும்
வெள்ளியின் விடியலில் வெளிச்சம்
பிறக்கட்டும்
விழுந்து விழுந்து எழும் கடலலை போல
விழுந்தாலும் எழுகின்ற ஆர்வத்துடன்.////

////முத்தம் இடும் தாயும், முத்தத்தை ரசிக்கும் முத்தான சிசுவும்
சித்தம் மகிழ்ந்திட வர வேண்டும் மாற்றம்!////////நித்திரையை கலைக்கும்
சித்திரைதான் எங்களுக்கு புத்தாண்டு "கர" வருடம் நமக்கு
கனிசமான லாபங்களை பெற்றுத் தரட்டும்////ஒரே கவி மழையாக இருக்கிறதே இன்று... சற்று பொறுங்கள்

வெளியில் இருக்கும் பலகையைப் பார்த்து வருகிறேன்...

அட.. !சரியான வகுப்பறை தான்.!!

சரி வெண்பலகையைப் பார்ப்போம்..

அட, அதிலும் ஒரு முத்தக் காட்சி மாத்திரம் தானே

இருக்கிறது... என்ன ஆயிற்று இன்றைக்கு

சித்திராதேவி தமிழன்னையையும் தன்னோடு
அழைத்து வந்து விட்டால் போலும்...

Alasiam G said...

////வாய்ல்அமுத தேனொழுகும் அந்தகுழந்தை தான கொடுக்கும் ஒரு முத்தாதிற்கு .இந்தஉலகத்தை தந்தாலும் ஈடாகுமா ?////

என்ன இது புதிர்...

சரி பதில் சொல்ல முயற்சிப்போம்
தென்பாண்டிச் சீமையிலே

தேரோடும் வீதியிலே
தேனொழுகும் வாயோடு வந்த - உன்

கன்னத்தை யார் கடித்தாரோ?... அது
உன் கணபதி தாத்தாவோ?... இல்லை பாட்டியம்மாவோ?..

////இந்தஉலகத்தை தந்தாலும் ஈடாகுமா ////

ஆகாது தான்; ஆனால் அதுக்கு மேலாக / மாறாக

ஆயுளைக் கூட்டுமே அது வேண்டாமா! - சரி

வாழும் போதே சொர்கத்தையேக் காட்டுமே!!!!

ஓ.... அது போதுமா!!!!! ஹா ஹா ஹா......

vprasanakumar said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Thanjavooraan said...

உலகச் சுழற்சியில் பருவங்கள் மாறிக் கொண்டேதான் இருக்கும். அதனதன் காலங்களில் வெயில் சுட்டெரிக்கும், மழை கொட்டித் தீர்க்கும், பனி குளிரெடுக்கும், இலைகள் உதிரும், புத்தம் புது இதழ்கள் துளிர்த்துப் பூக்கள் மலரும். இவை இறைவனின் கட்டளை. இந்த இறைவன் கட்டளையை ஓர் அரசாணையால், இனி கதிரவன் மேற்கில் உதிக்கவும், வைகாசியில் அடைமழை பெய்யவும், ஐப்பசியில் பனிச் சாரல் பெய்யவும் உத்தரவிட முடியுமா? நாட்டுக்கு ஒரு "துக்ளக்" போதும்.(பத்திரிகை 'துக்ளக்' அல்ல). இந்த தமிழ்ப் புத்தாண்டு தமிழனுக்கு நல்ல காலமாக அமைய எல்லாம் வல்ல இறைவனைத் துதிக்கிறேன்.

Jawa said...

அய்யா,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
‍-சவகர் கோவிந்தராசு

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அன்புள்ள,

வகுப்பறைக்கும்
வாத்தியாருக்கும

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சென்ற காலத்தின் பழுதுகள் நீங்கி, அனைவரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ அம்மையப்பரை சிந்தித்து வாழ்த்துகிறோம்...

minorwall said...

நன்றி..தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

hamaragana said...

அன்புடன் வணக்கம்திரு அலசியம்.நன்றி..
,""""""'கன்னத்தை யார் கடித்தாரோ?... அது
உன் கணபதி தாத்தாவோ?... இல்லை
பாட்டியம்மாவோ?..////இந்தஉலகத்தை தந்தாலும் ஈடாகுமா ////ஆகாது தான்; ஆனால் அதுக்கு மேலாக / மாறாக
ஆயுளைக் கூட்டுமே அது வேண்டாமா! - சரி
வாழும் போதே சொர்கத்தையேக் காட்டுமே!!!!ஓ.... அது போதுமா!!!!! ஹா ஹா ஹா.../////.. வாழும்போதே சொர்கத்தை காட்டுவது என்பது லேசா???? உங்களது நகைசுவை கலந்த கருத்து மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தொடருங்கள்...