மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

2.2.11

Astrology அமிர்தயோகம் என்றால் என்ன?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology  அமிர்தயோகம் என்றால் என்ன?

அமிர்தம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். புராண காலங்களில், சாகாமையைத் தரக்கூடிய தேவர் உணவை அமிர்தம் என்பார்கள். Food of the celestral beings (Devas).

நமக்கு அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. என்னைப்போன்ற, தஞ்சாவூர்ப் பெரிசுகளைப் போன்றவர்களுக்கு, புளிக்காத நல்ல மோர்தான் அமிர்தம். வெய்யில் காலங்களில், வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன் ஒரு செம்பு அளவு கொடுத்தாலும் குடித்துவிட்டு, அமிர்தமாக இருக்கிறது என்போம். எங்கள் எல்கை அவ்வளவுதான்.

உங்களைப் போன்ற இளசுகளுக்குச் சொன்னால், ஜில்லென்ற Haywards 5000 Beer அல்லது Kingfisher Beerஐச் சொல்லலாம். அடித்துவிட்டு, ‘மச்சி, அமிர்தமா இருக்குடா’ என்பீர்கள்.

அமிர்தம் என்றால் இனிமை என்றும் பொருள்படும். deliciousness, sweetness

யோகம் என்றால் அதிர்ஷ்டம் good luck என்று பொருள்படும்.

இரண்டு சொற்களையும் சேர்த்து அமிர்தயோகம் என்றால் என்னவென்று சொல்லவும் வேண்டுமா? இனிமையான நாள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

நாட்காட்டிகளில் பாருங்கள். இன்று அமிர்தயோகம் என்று போட்டிருப்பார்கள்.

எப்படிப் போடுகிறார்கள்? அதற்கு அடிப்படை என்ன?

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் யோகமும் ஒன்று.

சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது அமிர்தயோக நாளாகிவிடும்.

எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?

கீழே கொடுத்துள்ளேன்.

ஞாயிற்றுக்கிழமை: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம், மூலம்
திங்கட்கிழமை: சுவாதி, புனர்பூசம்,ரோகிணி, மிருகசீரிடம்
செவ்வாய்க் கிழமை: உத்திரம், மூலம்
புதன் கிழமை: உத்திராடம், பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம்
வியாழக்கிழமை: சுவாதி, மூலம்
வெள்ளிக்கிழமை: அஸ்விணி, பூசம், ஹஸ்தம், மூலம்
சனிக்கிழமை: மகம், சதயம், கார்த்திகை, சுவாதி


மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று அமிர்தயோகம்.

அமிர்தயோகத்தன்று சுப காரியங்களைச் செய்யலாம். நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்யலாம்.

சுருக்கமாகச் சொன்னால், நேற்றையப் பாடத்தில் எது எதைச் செய்யக்கூடாது என்று சொன்னேனோ, அதையெல்லாம் இந்த நாட்களில் செய்யலாம்.

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

22 comments:

kmr.krishnan said...

Present sir! Thank you for your nice lesson, Sir.It is like AMIRTHA!

kannan said...

வணக்கம் ஆசானே!

நன்றாக "நச்சுனு!" நாலு வரி எழுத கூட நேரம் இல்லாமல் இழக்க கூடாததை எல்லாம் இழந்து எத்தனையோ தேடி ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ஐயா மன்னிக்கவும்

kannan said...

வணக்கம் ஆசானே!மறுபடியும் வருவேன் என்று எங்கையோ வாசீத்த வரிகள் தற்பொழுதைய பாடத்தை பார்த்தால் ஞாபகதீர்க்கு வருகின்றது ஐயா
--

CJeevanantham said...

Dear Sir,
Thank you very much for the lessons.

Suresh said...

அன்புள்ள ஆசிரியருக்கு

சுவாதி நட்சத்திரம் திங்கள் மற்றும் சனி கிழமை வந்துள்ளது. சித்திரைக்கு அமிர்த யோகம் கிடையாதா?

அன்புடன்
சுரேஷ் சுப்ரமணியன்

iyer said...

பெரிசுகளுக்கான அமிர்தம் எது
இளசுகளுக்கான அமிர்தம் எது
என்று சொன்ன வாத்தியார்

என்னைப்போன்ற சிறுசுகளுக்கு எது

என சொல்லுவீர்கள் என எதிர்பார்த்தேன்
காரணம் நீங்கள் சொல்லும் அந்த இரண்டையுமே நான் சாப்பிடுவதில்லை..
தயிர் மோர் பால் நெய் சாப்பிட்டு பத்தாண்டுகளுக்கு மேல் ஆயிற்று..

புதியன் said...

முக்கனியில் இன்றைய பாடம் பலா, அதுவும் தேனில் ஊறிய பலா.

இன்றைய பதிவு அருமை ஆசானே.

அய்யா, தஞ்சைலே இருந்து இப்படி இளசுகள பற்றி தவறா சொல்லலாமா? Heywards, Kingfishernu விஜய் மல்லையாவை எல்லாம் ஞாபகம் படுத்தறீங்க.

KMR அய்யா, தங்களின் பஞ்சாங்கம் மற்றும் சர்வ முஹுர்த்த நாள் பற்றிய விளக்கங்கள் என்போன்றோருக்கு புதிய, பயனுள்ள தகவல். மிக்க நன்றி.

தகாதவைகளை முதலில் சொல்லிவிட்டு, தக்கவைகளை பிறகு சொல்லும் தாங்கள் நடை என்றும் எனக்கு பிடித்தவை. சிருவயதிலேருந்தே கசப்பை சாப்பிட்டு பழகிய உடலில், நோய்நொடிகள் எளிதில் அண்டுவதில்லை. முதலில் கசந்து பிறகு இனிக்கின்றது.

உண்மைத்தமிழன் said...

இன்றைய பாடம் அளவோடு, அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது..! நன்றி வாத்தியாரே..!

bhuvanar said...

அய்யா

பாடம் அருமை, அடுத்த பாடம் என்ன என்று ஆவலை துண்டுகிறது.....

நன்றி

பாண்டியன்

bhuvanar said...

நாலு வரி எழுத கூட நேரம் இல்லாமல் இழக்க கூடாததை எல்லாம் இழந்து எதனையோ தேடி ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ஐயா மன்னிக்கவும்///

நண்பர் கண்ணன் அவர்களே, நீங்கள் சொல்வது எனக்கும் 100 சதவிதம்
பொருந்தும்...

நன்றி

பாண்டியன்

bhuvanar said...

மைனர் அவர்களுக்கும் பொறந்தும்..
(நம்ம deal-ah யாருக்கும் சொல்லாதீங்க)
நன்றி

பாண்டியன்

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
மரண யோகம் மற்றும் அமிர்த யோகம் நாள் மற்றும் நட்சத்திரம் தெரிந்து
கொண்டாயிற்று. இவற்றைத்தவிர சித்த யோகம் மற்றும் பிரபலா யோகத்திற்கு
உரிய நாள் மற்றும் நட்சத்திரங்களும் அறிந்து கொள்ள ஆவல், இது தவிர‌
வேறு யோகங்கள் இருக்குமானால் தயவு செய்து தெரிவிக்க வேண்டுகிறேன்,
அன்புடன், அரசு.

hamaragana said...

அன்புடன் வணக்கம்
புதன் கிழமை இன்று உதிராயண First அமாவாசை. பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். !!காசியல் பிதுர் தர்ப்பணம் ,கயாவில் பிதுர் பிண்டம் .21..தலைமுறை முன்னோர்களுக்கு செய்ய வேண்டும் என்று ..இரண்டு இடத்திலும் கூறுகிறார்கள் 21.. தலைமுறை பெயர் தெர்யுமா என்று கேட்கிறார்கல் தெரிந்த வரை சொல்லுங்கள் !!! or ஞாத அங்காதா பிதுரு((தெரிந்த தெரியா பிதுருக்கள் )) என்று கூறி எள்ளும் நீரும் இரைகிரார்கள்.!!
சிலரின் ஜாதகத்தில் இவர் பூர்வ ஜென்மத்தில் இதே குடும்பத்தில் பிறந்தவர் தற்போதும் தனது கர்மா கழிக்க மீண்டும் இதே குடும்பத்தில் பிறந்திருக்கிறார் என்கிறார்கள் !!இந்த நபர் தனக்கு தானே பிதுர் தர்ப்பணம் செய்கிரறாரா.?? தயவு செய்து வாத்தியார் அய்யா விளக்குங்களேன்.. எனது சந்தேகம் தவறு எனில் பொருத்து கொள்க !!

Uma said...

அவர்களுக்கும் பொறந்தும்// பாண்டியன், என்ன இது? ஒரு பின்னூட்டத்தில பொருந்தும்னு சரியா எழுதிருக்கீங்க. இன்னொரு பின்னூட்டம் தூங்கிகிட்டே எழுதினீங்களா?

நம்ம deal-ah யாருக்கும் சொல்லாதீங்க) // ????????

bhuvanar said...

Uma said...
அவர்களுக்கும் பொறந்தும்// பாண்டியன், என்ன இது? ஒரு பின்னூட்டத்தில பொருந்தும்னு சரியா எழுதிருக்கீங்க. இன்னொரு பின்னூட்டம் தூங்கிகிட்டே எழுதினீங்களா?
///////////////

கிளாஸ்க்கு வரவா இல்ல வேணாமா - முடிவா சொல்லுங்க ?....

bhuvanar said...

நம்ம deal-ah யாருக்கும் சொல்லாதீங்க) // ????????/////

எங்க கிட்ட போட்டு வாங்க முடியுமா ?
நாங்க யாரு ?
(என்ன மாம்ஸ் கரெக்ட் தான ?)

bhuvanar said...

இன்னொரு பின்னூட்டம் தூங்கிகிட்டே எழுதினீங்களா? ///////////

நான் மறுபடியும் சொல்லுரேன், தப்பு என்னோடது எல்லா... கம்ப்யூட்டர் தப்பா டைப் பண்ணுது...

minorwall said...

நீங்கதான் சொல்லிட்டீங்களே பாண்டியன்..மாப்ஸ்..
என் சார்பா நீங்க சொன்னதுதான்..எழுதத்தான் முடியலே..டைம் இல்லே..
அதுனாலே சிம்பிளா சொல்லணும்னா 'வாத்தியாருக்கு ஜே'

Uma said...

கிளாஸ்க்கு வரவா இல்ல வேணாமா - முடிவா சொல்லுங்க ?....//

அப்படியே நான் சொல்லி நீங்க கேட்டுடுவீங்க?

Uma said...

எங்க கிட்ட போட்டு வாங்க முடியுமா ?
நாங்க யாரு ?//

நீங்க யாரு?

Uma said...

கம்ப்யூட்டர் தப்பா டைப் பண்ணுது//

கம்ப்யூட்டர் வேணா மாத்திப் பாருங்களேன்.

சூரிபாபா said...

பாடம் அருமை