மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

6.2.11

விமர்சனங்கள் தேசத்தந்தையும் விட்டுவைக்கவில்லை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 இன்றைய வாரமலரை மூத்த வாசகர் ஒருவரின் கட்டுரை ஒன்றும், நமது தில்லி வாசகி ஒருவரின் ஆக்கம் ஒன்றும் அலங்கரிக்கிறது.

எச்சரிக்கை:
முதல் கட்டுரை, நமது தேசத்தந்தையின் மரணம் குறித்த செய்தியை உள்ளடக்கியது. தேசத்தந்தையும், நமக்கு அஹிம்சை முறையில் சுதந்திரம் பெற்றுத்தந்தவருமான மகாத்மா காந்தி அவர்களின் மரணம், விவரம் அறிந்த ஒவ்வொருவர் மனதிலும் வடுவாக உள்ளது. அவருக்கு அப்படி நேர்ந்திருக்கக்கூடாது. அவரைக் கொன்றவனை சரித்திரம் என்றும் மன்னிக்காது. அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. இருந்தாலும் அதற்கான காரணத்தை அவன் வாய்மொழி மூலமாகத் தெரிந்துகொள்வதில் தவறில்லை. அந்த நோக்கத்திலேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மேலும்  பதிவிடப்பட்டுள்ளது. அதை  மனதில் கொள்ளவும்!  ஏதோ உள் நோக்கத்துடன் பதிவிடப்பெற்றுள்ளதாக யாரும் எண்ணிப் பின்னூட்டம் இடவேண்டாம். உள்நோக்கம் எதுவுமில்லை அதையும் மனதில் கொள்க!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++===========
விமர்சனங்கள் தேசத்தந்தையும் விட்டுவைக்கவில்லை!

முன்பொரு சமயம் எனக்கும் திருமதி உமாஜிக்கும் இடையில் சம்வாதம் நடந்தது. கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் என்னைப் பின்வாங்க‌ வைத்தார்.

அப்போது அவர் கூறிய ஒரு குற்றச்சாட்டு என்னவெனில் அரசியல்,ஆன்மீகத்  தலைவர்களைப் பற்றி  அவர்களுடைய 'சம்சா'க்கள் எழுதிய புத்தகங்கள்  எல்லாம் அவர்களைக் கடவுள் 'ரேஞ்சு'க்கு உயர்த்தியதே அல்லாமல்  உண்மையான(அவர்களுடைய தவறான மறுபக்கத்தையும் காட்டும் வகையில்) வரலாறு இதுவரை சொல்லப்படவில்லை என்பதே ஆகும்.

நடை முறையில் நான் அறிந்தவரை பொது வாழ்க்கைக்கு வந்த எவருமே விமர்சனங்களுக்குத் தப்ப முடியாது. தப்பவும்   இல்லை. எல்லாத்தலைவர் களுக்கும் இது பொருந்தும்.

மஹாத்மா காந்திஜி அரசியல் ஆன்மீகம் இரண்டிலும் நின்றவர். அவர் வாழ்ந்த போதும், கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மறைந்த பின்னரும் இன்று வரை தங்க‌ளுக்குத் துரோகம் செய்துவிட்டதாக இந்துக்களும், முஸ்லிம்களும், தலித்துக்களும்,தமிழ் ஆர்வலர்களும்,பொதுவுடைமை வாதிகளும், தனிவுடைமை வாதிகளும், வன்முறை ஆதரவாளர்களும் பேசி வருகிறார்கள். எல்லோருக்கும் நல்லவராக இருக்க விரும்பிய மஹாத்மா பெற்றது என்னவோ "சமூகத்துரோகி" என்ற பட்டம் தான்..

இந்த ஆராயாமல் உருவாக்கிக் கொண்ட வெறுப்பின் உச்ச கட்டமாகத்தான் மஹாத்மாஜியின் படுகொலை நடந்தது. அதில் நேரடியாக ஈடுபட்டு 30 ஜனவரி 1948 மாலை மஹாத்மாஜியை மார்பினில் குண்டைப் பாய்ச்சிக் கொன்றார்
நாதுராம் வினாயக் கோட்சே!

தன்னுடைய அந்த வன்செயல் பற்றி அவர் எந்தக்கலக்கமும் குழப்பமும் கொள்ளவில்லை.மாறாகத் தன் செயலின் பின் விளைவுகளை நன்கு அறிந்து இருந்தார். தனக்குத் தூக்குக் கயிறுதான் என்பதைத் திட்டவட்டமாக அறிந்து இருந்த போதும், கொலைச் சம்பவத்துக்குப் பிறகு அவர் தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. கைது செய்ய‌வும், சிறையில் ஒழுக்கமாக நடந்தும் அரசுக்குத் தொந்திரவு கொடுக்காமல் இருந்தும், தன் தீர்ப்பு நாளை நெஞ்சுரத் துடன் எதிர் நோக்கி இருந்தார்.

கோட்சேவைக் காட்டிலும் யார் அதிகமாக மஹாத்மாஜியைப் பற்றி விமர்சனம் செய்ய முடியும்?

மஹாத்மாவைப் பற்றி இந்துக்களில் சிலர் வைத்திருந்த மன வருத்தத்தின் மொத்த‌ உருவாக்கமே நாதுரம் கோட்சே.நீதி மனறத்தில் தன் தரப்பு நியாயத்தை எழுத்துவடிவத்தில் எழுதி,  மன்றத்தில் வாசித்தும்காட்டினார்.

150 குற்றச் சாட்டுக்களை காந்திஜியின் மீது சுமத்தினார்.

அந்த வாக்குமூலம் 30 ஆண்டுகளுக்கு வெளியிடப்படாமல் இருந்தது. இப்போது வெளியிடப்பட்டுப் பலரும்  வாசித்து விட்டனர். அதில் இருந்து சில பகுதிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஆரிய சமாஜம் மீது தாக்குதல்:
‍‍‍‍‍‍‍‍‍‍‍============================
காந்திஜி தமக்கு முஸ்லிம்கள் மீது இருந்த அன்பை, ஆரிய சமாஜத்தை
1924ல் பயனின்றியும்,காரணமின்றியும் தாக்கியதின் மூலம் பகட்டாக வெளிப்படுத்தினார்....முகம்மதியர்கள் எவற்றையெல்லாம் விரும்பக்
கூடுமோ அவையெல்லாம் காந்திஜியின் இதயத்தின் விழைவாகும். காந்திஜியின் தாக்குதல் அவருக்கு முஸ்லிம்களிடம் செல்வாகைப் பெற்றுத்தரவில்லை. ஆனால் அது முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டி
விட்டு ஒரு சில மாதங்களிலேயே சுவாமி சிரத்தானந்தஜியைக் கொலை செய்ய வைத்தது.

இந்திக்கு எதிராக இந்துஸ்தானி:
=============================
இந்தியாவின் தேசீய மொழிப் பிரச்சனையை விட வேறெதுவும் வெளிப் படையாக காந்திஜியின் முஸ்லிம் ஆதரவுக் கொள்கையில் அவருடைய ஏறுமாறான மனப்போக்கைப் படம் பிடித்துக்காட்டாது.ஓர் அறிவியல் மொழிக்கான எல்லா சோதனைகளிலும் இந்திதான் முற்றிலும் முன்னுரிமை யுடன் இந்த நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய த‌குதி பெற்றது. இந்தியாவில் தம்முடைய தொடக்ககால வாழ்க்கையில் காந்திஜி இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். முஸ்லிம்கள் அதை விரும்பவில்லை என்பதைக் கண்டவுடன் அவர் கட்சி மாறிவிட்டார்.

இந்துஸ்தானி என்றழைக்கப்பட்ட ஒன்றினுக்கு வக்காலத்து வாங்குபவராக பரிமளிக்கத்துவங்கினார்.அது இந்திக்கும் உருதுக்கும் கலப்பினத்தில் உருவான கலப்புமொழி. அது பேசப்பட்டது. எழுதப்படவில்லை. "பாதுஷா ராம்! பேகம் சீதா!" என்றெல்லம் பேச ஆரம்பித்தனர். ஆனால் மகாத்மா ஜின்னாவை 'ச‌ர்ஜித் ஜின்னா' என்றோ, மெள‌லானா ஆசாத்தை 'பண்டிட் ஆசாத்' என்றோ பேசத் துணியவில்லை. அவருடைய பரிசோதனைகள் எல்லாம் இந்துக்களின் தலையிலேயே விடிந்தது.

வந்தேமாதரம் பாடக்கூடாது:
===========================
சில முஸ்லிம்கள் 'வந்தேமாதரம்' என்னும் புகழ்பெற்ற பாடலை விரும்பவில்லை.மஹாத்மா எங்கெல்லாம் அவ‌ரால் முடிந்ததோ அங்கெல்லாம் அதை இசைப்பதையோ, பாடுவதையோ உடனடியாகத் தடை செய்துவிட்டார்.

பசுவதைபற்றி காந்திஜி:
======================
பசுவைப் பாதுகாப்பதில் காந்திஜி மிகவும் தீவர விருப்பத்தை வெளிக்காட்டினார். ஆனால் அது பற்றி எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை.மாறாக ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் இவ்வாறு
கூறினார்: "இந்தியாவில் பசுவதையைத் தடை செய்யும் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது. தானாக முன்வந்து பசுவதையைக் கைவிட விரும்பதவர் களின் மீது என் விருப்பத்தை எப்படித் திணிக்க முடியும்? இந்தியா இந்துக்
களின் நாடாகிவிட்டது என்று இந்துக்கள் உரிமை கொண்டாடுவது முற்றிலும் தவறு."(எனவே இந்துமதத்திற்கு இசைவான சட்டங்களை இயற்றத் தன் ஆதரவு கிடையாது என்பதைக் கூறி விட்டார்)

மூவண்ணக்கொடியை அகற்றுதல்
==============================
1946ல் நவகாளியில் காந்திஜி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்து முஸ்லிம் மோதல்களைத் தவிர்ப்பது சுற்றுப்பயணத்தின் நோக்கம்.அவர் தங்கியிருந்த குடிசை மீது மூவண்ணக்கொடி பறந்தது. ஒரு முஸ்லிம் அங்கு வந்து கொடி பறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவுடன் கொடியை இறக்க உத்தரவிட்டார். ஒரு தனிப்பட்ட தீவர‌ முஸ்லிமை திருப்திப்படுத்த லட்சக்கணக்கான தேசபக்தர்கள் உயிரெனப் போற்றும் கொடியை அகற்றும் அளவுக்குப் போய்விட்டார்!

மேலே கூறியுள்ளவை ஒரு மாதிரியே! இன்னும் 150 குற்றச்சாட்டுக்கள் அடுக்கியுள்ளார் கோட்சே!.

இக்கட்டுரையின் நோக்கம் யாரும் விமர்சிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதைக் காட்டவே.நல்லவை கெட்டவை இரண்டுமே காணக்கிடைக்கின்ற‌ன.

"குணம் நாடி குற்றமும் நாடி அவற்றின்
மிகை நாடி மிக்க கொளல்"

என்பது வள்ளுவம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களையும் பார்க்க வேண்டுவது சரிதான். ஆனால் ஆன்மீகத்தில் ஒரு குருவிடம் பற்று வந்துவிட்டால் அவரை அறிவால் அணுகாமல் உணர்ச்சியால் அணுகுவதே சரியானதாகும். அப்போது அவருடைய பலவீன‌ங்களை நாம் உணர மாட்டோம்."மூட நம்பிக்கை" என்று பிறருக்குத் தோன்றி னாலும் ஆன்ம சாதகனுக்கு அது தேவையானதாகும்.

கட்டுரை எழுதப்பயன் பெற்ற நூல்: "கோட்ஸேயின் வாக்கு மூலம்"

தமிழில்: இரா. சுப்பராயலு எம் காம்.எம் பி ஏ.,

மருதம் பதிப்பகம்
38 கோமுட்டித்தெரு,

ஒரத்தநாடு - 614625.
விலை ரூ 40/=

------------------------------
ஆக்கம்:
கே.முத்துராமமிருஷ்ணன் (KMRK)
தஞ்சாவூர்


                                               Gandhiji & Godse taken from the nat
--------------------------------------------------------------------------------------------------------------


KMRK's photo taken  on the date of his retirement (2 years back)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.
சிரிக்கலாம் வாங்க!
-------------
டிஸ்கி: மின்னஞ்சலில் ஹிந்தியில் வந்ததை மொழிபெயர்த்துள்ளேன். சொந்தச் சரக்கல்ல.
1 . மிஸ்டர் எக்ஸிடம் ஒருவன்: காலி வயத்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவ?

ஆறு

ஒரு சப்பாத்தி சாப்பிட்டதுக்கு அப்புறம் வயிறு எப்படி காலியா இருக்கும்?

வீட்டுக்குப்போனதும் மிஸ்டர் எக்ஸ் தன் மனைவியிடம்: காலி வயத்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவ?

நாலுங்க

போடி லூசு!  ஆறுன்னு சொல்லிருந்தேன்னா ஒரு ஜோக் சொல்லிருப்பேன்.

-------

2 . மனைவி கணவனிடம்:  ஏங்க இப்படியே தினமும் நான் உங்களுக்கு சமைச்சுக்கொட்டினா எனக்கு என்ன

கிடைக்கும்?

கவலைப்படாதே, என்னோட LIC பணம் சீக்கிரம் கிடைச்சிடும்.

----------

3 . மிஸ்டர் எக்ஸ் ஒரு பெண்ணின் பெற்றோர் வீட்டுக்கு சம்பந்தம் பேசப்போனார்.

எங்க பெண் இப்ப படிச்சுட்டிருக்கா.

சரி நான் பின்ன ஒரு இரண்டு மணி நேரம் கழிச்சு வரேன்.
------


4. மிஸ்டர் எக்ஸிடம் நண்பர்:  இது என்ன குளிர்சாதனப்பெட்டியில் 'காதல்' பட DVD வெச்சிருக்கீங்க?

'ஜில்லுனு ஒரு காதல்' பார்க்கத்தான்.

---------------

5. சுவாமிஜி உலகம் ஏன் இப்படி சுத்துது?

மகனே, ஒரு quarter தண்ணி அடிச்சா மனுசனுக்கே சுத்துது.  மூணு quarter தண்ணி இருக்கற உலகம் ஏன்

சுத்தாது?

-------------

6 . ஷாஜஹான் தன்னோட காதலிக்காக தாஜ்மஹால் கட்டினாரு.  நீங்க?

ஹி ஹி உன் தங்கச்சியைத்தான்.

----------

7 . ஷாஜஹான் இறந்து போன தன் காதலிக்காக தாஜ்மஹால் கட்டினாரு.

நானும் இடமெல்லாம் வாங்கிட்டேன் டியர்.  எப்ப கட்டப்போறேங்கறது உன் கையில்தான் இருக்கு.

------------

8. ஆசிரியர்: ஐசக் நியூட்டன் ஒரு ஆப்பிள் மரத்துக்குக் கீழே உட்கார்ந்திருந்தபோது ஓர் ஆப்பிள் அவர்

தலைமேல் விழுந்தது.  அதை வைத்து அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.  ரொம்ப ஆச்சரியமான

விஷயம் இல்ல?

மாணவன்: ஆமா டீச்சர், அவர் எங்களை மாதிரி வகுப்பறைல உட்கார்ந்து இது மாதிரி கேட்டிருந்தா அவரால

எதையுமே கண்டுபிடிச்சிருக்க முடியாது.

----------

9. உலகம் உருண்டைன்னு எப்படி நிரூபிப்ப?

என்னால முடியாது டீச்சர்.  நான் முதல்ல உலகம் உருண்டைன்னு சொல்லவே இல்லியே.

-----------

10. டாக்டர் என்னோட கணவர் தூக்கத்தில பேசறாரு.

நீங்க பகல்ல அவரைப் பேசவிடுங்க.  தானா சரியாயிடும்.

---------

11. நீங்க டெய்லி ஹோட்டல்ல சாப்பிட்டதால்தான் உங்களுக்கு அல்சர் வந்திருக்கு.

சரி டாக்டர், இனிமே நான் வீட்டுக்கு பார்சல் எடுத்திட்டு போய் சாப்பிடறேன்.

-----------

12. மனைவி கணவனிடம்: நான் இறந்துட்டேன்னா நீங்க அழுவீங்களா?

இப்ப மட்டும் என்ன சிரிச்சிக்கிட்டா இருக்கேன்?

--------

13. ஒருவேளை நான் இந்த ஆபரேஷன்ல செத்துட்டேன்னா நீ அந்த டாக்டரையே கல்யாணம் பண்ணிக்கோ

ஏங்க?

அவரைப் பழிவாங்க இதவிட வேற நல்ல வழி கிடையாது.

----------

14. நீங்க மனதாரக் கடவுளைப் பிரார்த்தனை செஞ்சா அவர் நிச்சயமா உங்களோட வேண்டுதலை

நிறைவேற்றுவார்.

அதெல்லாம் சுத்த பொய் டீச்சர்.

ஏன் அப்படி சொல்ற?

அப்படின்னா நீங்க இந்நேரம் வேற பள்ளிக்கு மாற்றல் ஆகிப் போயிருக்கணும்.

-----------
ஆக்கம் (அதாவது மொழிமாற்றம்)
எஸ். உமா,
தில்லி

வாழ்க வளமுடன்!

42 comments:

Thanjavooraan said...

நண்பர் கே.எம்.ஆர். மகாத்மாவைக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேயின் வாக்குமூலத்தின் சில அம்சங்களைக் கொடுத்திருக்கிறார். பல காலம் தடை செய்யப்பட்டிருந்த அந்த வாக்குமூலம் திரு சுப்பராயலு மொழிபெயர்த்து ஒரத்தநாடு மருதம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கோட்சேயின் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றாலும் அதனை எதிர்ப்பதற்கு மகாத்மாவைக் கொலை செய்வது தீர்வாக முடியாது. மகாத்மாவின் கொள்கைகள் தவறு என்பதை மக்கள் மத்தியில் எடுத்து வைத்து மக்கள் மனதில் பதியும்படி தமது வாதங்களை வைத்திருக்க வேண்டும். அப்போதெல்லாம் இந்திய மக்கள் அறிவு பூர்வமாக சிந்திக்கக்கூடியவர்களாக இருக்கவில்லை. பெரும்பாலும் ஆட்டுமந்தைக் கூட்டமாக, பிறர் வழிகாட்டும் திசையில் போய்க்கொண்டிருந்தார்கள். சிந்திக்க அவர்களுக்கு திராணி இல்லை.நவகாளியில் தேசியக்கொடி ஏற்ற இருந்த எதிர்ப்பையொட்டி இவர் அதை ஏற்றவேண்டாம் என்றார் என்றொரு குறிப்பு வருகிறது. ஏன், இப்போது நமது பிரதமர் காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவதன் மூலம் பிரச்சினையைத் தூண்டுகிறீர்கள் என்று சொல்லவில்லையா? இதுவா தேசபக்தி, அதிலும் ஒரு பிரதமருக்கு. எல்லாம் நம் தலைவிதி. ஜனவரி முப்பதை நினைவு படுத்திய நல்ல கட்டுரை, வாழ்க கே.எம்.ஆர். அடுத்ததாக உமா அவர்களின் ஜோக் கதம்பத்தில் முதல் ஜோக் சிரிக்க வைத்தது. அதனால் மற்றவைகள் அப்படியல்ல என்பது பொருளல்ல. அவற்றில் முதலாவது சிறந்தது. வாழ்த்துக்கள். வாழ்க்கையை ரசிக்க முதலில் ஜோக்குகளை ரசிக்க வேண்டும். உமாவுக்கு நல்ல ரசிக மன்ம். வாழ்த்துக்கள்.

Rathnavel said...

Good.

G.Nandagopal said...

திரு . KMRK அவர்களின் கட்டுரை குறித்த எனது மனவோட்டத்தை திரு . தஞ்சாவூரான் அய்யா அவர்களின் பின்னூட்டம் அப்படியே பிரதிபலிக்கிறது. இதுபோன்ற இன்னும் வெளிவராத எத்தனையோ சரித்திர நிகழ்வுகள் நமது பாரதத்தை வஞ்சித்திருந்தாலும், நமது புராணங்களாலும் இதிகாசங்களாலும் மற்றும் உபநிஷத்துகளாலும் வழிநடத்தப்படும் நமது புண்ணிய பாரதம் என்றென்றைக்கும் ஏனைய நாடுகளுக்கு வழிகாட்டும் ஒரு கலங்கரைவிளக்காகவே திகழும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
'காய்க்கிற மரம்தான் கல்லடி படும்' என்ற மூதுரைக்கேற்ப அனைத்திலும் சிறந்த ஒரு தேசத்திற்கு அவ்வப்போது இம்மாதிரியான சோதனைகள் வருவதும் சகஜம். அதற்குக் காரணமானவர்கள் யாராகயிருந்தாலும் தர்மதேவன் அவர்களை சும்மா விட்டுவிடாமல் சரியான நேரத்தில் சரியானபடி தகுந்த ஆட்கள் மூலம் தண்டித்துவிடுகிறான். மகாத்மாவும் சரி இந்திரா காந்தியின் குடும்பமும் சரி அந்த தண்டனையிலிருந்து தப்பவே முடியாது என்பதைத்தான் வரலாறு நமக்கு தெளிவாக காட்டிக்கொண்டிருக்கிறதே.
ஒரு மனிதன் யாராக இருந்தாலும் அவனுடைய மரணத்தின் மூலமே அவன் எப்படிப்பட்டவன் என்பதை சரித்திரம் ஒவ்வொரு நிகழ்விலும் தெளிவாகக்கூறிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் , அவர் பிறந்துவிட்டதால் மட்டுமே பெருமையடைந்த ஒரு ஊரில் பிறந்து தம்முடைய வாழ்வையே நாட்டுக்காக அர்பணித்து, பள்ளிக்கூடத்திலே இரண்டாம் வகுப்பைக்கூட எட்டிப்பார்க்காத, கல்வியறிவினால் மட்டுமே ஒரு நாடும் மனிதனும் மேன்மையடையமுடியும் என்பதை உணர்ந்து அதற்காக அல்லும் பகலும் உழைத்த, அரசியலிலும் அதிகாரவர்கத்திலும் தனிகரற்ற திறமையும் செல்வாக்கும் பெற்றிருந்தும் சாகும்போது சட்டைப்பையிலே வெறும் சில பத்து ருபாய் நோட்டுகளும் இரண்டு ஜோடி உடைகளையும் மட்டுமே சொத்தாகக் கொண்டிருந்த அந்த அரசியல் பிரம்ம ரிஷியை வஞ்சித்து மகிழ்ந்த தமிழகத்தை தற்போதைய ஆட்சி மூலம் தர்மதேவன் தண்டித்துக்கொண்டிருப்பதையும் நாம் இன்றைக்கு பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பகவத்கீதையில் கர்ம யோகத்தைச் சொன்னான் கண்ணன். தமிழகத்திலே அதை தன் வாழ்க்கைமூலம் நடைமுறைப்படுத்திக் காட்டினார் கர்மவீரர்.
ஊழலில் மூழ்கித்திளைக்கும் நமது பாரதத்தின் இன்றைய நிலையை நினைத்துப் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட வகுப்பில் பிறந்திருக்காத ஒரே காரணத்தால் மகாத்மாவாக அங்கீகரிக்கப்படாமல் போன அந்த மாமனிதனை, கலியுக பீஷ்மரை நினைத்து என் கண்கள் பனிக்கிறது.

G.Nandagopal said...

உமா அவர்களின் ஜோக்குகள் அருமை. அதிலும் குறிப்பாக அந்த 12 ஆவது ஜோக்கை இதற்குமுன் வந்திருந்த ஏதோ உரையாடலில் உணர்ந்ததாக ஞாபகம்.

hamaragana said...

அன்புடன் வணக்கம் .
காந்தி பற்றி கருத்துக்கள் உண்மைதானே !! இதில் நடந்த உண்மைதான் கோட்சே எழுதி உள்ளார் இப்போதாவது வெளிவந்து
மக்கள் உண்மை உணர்கிரார்களே அது வரை சந்தோஷம். எடுத்து உபகரித்த உங்களுக்கு பாராட்டுகள் !!!!

hamaragana said...

அன்புடன் வணக்கம் திருமதி உமா.
சிரிப்பு துணுக்குகள் அருமை தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாராட்டுகள்..

iyer said...

காந்தியை அஹிம்சாவாதி என சொல்வது சரியல்ல..

காந்தி ஒரு அஹிம்சாவாதி அல்ல என்பது அவருடைய வாழ்க்கை செயல் முறையே காட்டிக் கொடுக்கும்..

தேசபக்திக்கு வேறு இலக்கணம் கொடுத்த அவரை வேறு பக்கம் பார்க்க ஓஷோவின் கருத்துக்களை படித்துவிட்டு பதிவிட்டு இருந்தால் . .

வகுப்பறை மாணவர்களுக்கு புதிய சிந்தனை கிடைத்திருக்கும்..

இன்னமும் எத்தனை நாட்கள்..
கசாப்பு கடையை நோக்கி செல்லும் ஆடுகளாக வாழ வைக்கப்போகிறார்களோ...

செங்கோவி said...

சகோதரி தில்லி உமாவைவிட கோட்சே நன்றாக ஜோக் அடிக்கிறார். மதவெறி ஏற்றப்பட்ட கோட்சேவுக்கு, காந்தி என்ன செய்தாலும் முஸ்லிம் சார்பாகவே தெரிந்தது..இருப்பினும் மேலும் காந்தியைப் பற்றி அறிய விரும்புவோருக்கு ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’யை ப்ரிந்துரைக்கிறேன்..விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல காந்தி..ஆனால் அவரைப் பற்றி சொல்லப்படும் விமர்சனம் பொருட்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் அல்லவா..நன்றி.
அன்புடன்
செங்கோவி

vprasanakumar said...

jokes are good

arthanari said...

மாறுபட்ட கருத்து இல்லாத இடமேயீல்லை.எல்லாருக்கும் நல்லவராக முடியாது.

kmr.krishnan said...

என் ஆக்கத்திற்கு பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி.டெல்லி திரும‌தி
உமாஜியின் நகைச்சுவை துணுக்குகள் நலம்.ஷாஜஹான் நகச்சுவை இரண்டும் புன்முறுவல் பூக்க வைத்தது.

நந்தகோபால் சாரின் பின்னூட்டத்திற்கு விளக்கம்/ வியாக்யானம் அளிப்பது மிகப் பெரிய பணியாக முடியும்.

எல்லா சமூகத்தில் இருந்தும் மஹான்க‌ள் தோன்றியுளார்கள்.
மஹான் நிலையை அடைந்தவுடன் அவர்களுடைய சமூகச் சார்பு நிலை தானாக பாம்புச் சட்டை போல கழன்று கொண்டு விடுகிறது."பொது ஆள்" ஆகிவிடுவார்கள்.

சுதந்திரத்திற்குப்பின்னர் மேல்சபை உறுப்பினர் பதவியில் சுவாமி ச‌ஹஜாநந்தர் என்ற மஹான் இருந்தார். தன்னைத் தன் குருவிடம் அறிமுகம் செய்து கொண்டபோது,
"நான் பிரம்மம்!நந்தனார் குலம்!"
என்று சொன்னவர். தன் குலப்பிள்ளைகளுக்கு உண்டு=உறைவிடப்பள்ளி துவங்கி சிதம்பரம் நகர வீதிகளில் அந்தப் பிள்ளைகளுடன் தேவாரம் பாடித் தினமும் உலா வந்தவர்.
நாத்திகவாதத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவ்ர்.மஹாகவி இந்த மஹானைப்பற்றி சுதேசமித்திரனில் பாராட்டிக் கட்டுரை எழுதியுள்ளார்.

மஹான் பட்டம் எந்த குலத்தைச் சார்ந்தவர்களும் பெறலாம். வேறு எந்த சமூகத்தைச் சார்ந்தவர்களும் கொடுத்து அது வருவதில்லை.இறை அருளால்தானாக அது வாய்க்கிறது.

Alasiam G said...

ஒரு தந்தை அவருக்கு இரண்டு மகன்கள் இருவரும் நல்லவர்கள் அதில் பெரியவன் கொஞ்சம் நிதானமான போக்கு கொண்ட புத்திசாலி; இளையவன் கொஞ்சம் விடாபிடித்தனமும், துடுக்கும் கொண்டவன்.. எங்கே தனக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமாகக் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்...
இரு சகோதரார்களும் எப்போதும் மாற்றுக் கருத்துகளுடனே வம்பு, வழக்கு செய்வது வழக்கம்.... அது தந்தையாருக்கு பெரும் சங்கடத்தையே ஏற்படுத்தியது... அதோடு வீட்டின் பிரச்சனை அதைவிட பெரிதாக இருக்கிறது... இவர்களின் சண்டைக்கு பஞ்சாயத்து செய்வதற்கு எல்லாம் நேரம் இல்லை.. வீட்டின் பிரச்சனை உடனடியாகத் தீர்த்தாக வேண்டும்... ஆக ஒரு தந்தை என்ன செய்வார்.. சரி இப்போது ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை என்று கொஞ்ச நிதானப் போக்கு கொண்ட புத்திசாலியான (தந்தையின் எண்ணத்தை அறிந்துக் கொள்ளக் கூடிய) பக்குவப் பட்ட மூத்தவனிடம் இறங்கிப் போ! என்று கூறுவது தான் இயல்பு... அதில் நியாயம் இருக்காமல் இருக்கலாம் ஆனால், அப்படி போகா விட்டால் வரும் பேராபத்து இருவரையும் அந்தக் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை தந்தை அறிவார் அந்த மகனும் அறிவான் எனவும் நம்புவார்....

பிரசவக் காலங்களில் சில சிரமமான நேரத்தில் மருத்துவர் கேட்பார்.... யாரோட உயிர் காப்பாற்ற பட வேண்டும் தாயா? இல்லை பிள்ளையா?.... யார் வேண்டும் என்றால்.... தாயென்று சொல்வது தான் அவ்விடத்தில் புத்திசாலித்தனம்... நாம் வேத, இதிகாசங்களின் வழி அனைத்தையும் சொல்லிவிட்டு... அதன் சாரத்தை நாமே எப்படி மீறுவது..... சடங்கு சம்பிரதாயங்களை மீறுவது தவறாகலாம்.... அதற்காக அதைக் காப்பாற்ற எங்கும் நிறைந்த; எல்லாமான அந்த பிரமத்தின் சாயலான எந்த ஜீவனையும் பலி கொள்ளக் கூடாது..... அப்படி பலி கொண்டு இந்த சடங்கு சம்பிரதாயங்களை காக்கவேண்டிய அவசியம் இல்லை.... மாறாக இந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் இந்த மானுடத்தை உய்விக்கவே ஒழிய....மானுடத்தை அழித்து அதன் அழிவில் இவைகள் உயிந்து எதைச் சாதிக்கப் போகின்றன.... (தொடர்ச்சி அடுத்து உள்ளது)

Alasiam G said...

அவர் மகாத்மா!
தனிப்பட்ட யாருக்கும் சொந்தக்காரர் அல்ல... வாழும்போதே ஜீவன்முக்தி பெற்றவர்களோடு இருந்த இடத்திலிருந்தே ஆத்மாவின் மூலமாக பேசியவர்.... நமது மதமோ உலக மதங்களுக்கெல்லாம் மூலம்; இந்து மதம் (வேதாந்தங்கள் வழியே) அதனில் தொடங்கி அதனுள் முடியும் அத்தனை பிற மதமும் குஞ்சு மிதித்து தாயொன்றும் சாவதில்லை, அப்படியே இதுவும். ஆயிரம் காரணம் கூறப்படலாம்... அவைகள் அவனுக்குத் தெரியாமல் நடந்திருக்காது..... கால் புணர்ச்சியோடு பார்த்தால் எதுவும் விளங்காது..... மகாத்மா அன்பினால் உலகை வென்றவர்... ஆயிரம் வருடம் ஆனாலும் அவர் உலக ஞாபகத்தில் உறைந்து இருப்பார்....

எதற்கும் ஒரு முடிவு வேண்டும் அல்லவா... நல்லவேளை இன்னும் உயிரோடு இருந்து; இப்போது நாடு அனுபவிக்கும் அவலங்களைஎல்லாம் பார்த்து இதற்காகவா.. விடுதலைக்கு பாடுபட்டோம் என்று அவர் நொந்து மாண்டு போகாமல் முன்னரே வந்தவேளை முடிந்தது என்று கோட்சேயை கருவியாகக் கொண்டு அந்த இறைவன் அழைத்திருப்பான் என்றே கொள்வோம்... அவனின்றி அணுவும் அசையாது.... காரணம் அறிய இந்த சிற்றறிவுக்கு அனுபவம் போதாது என்றே கொள்வோம்...

ஏதாவது அதிர்ப்தி குறை கூறல் இருந்தால் தான் அந்த மகாத்மாவின் இழப்பை (அது எப்போது நடந்திருந்தாலும்) மக்கள் தாங்கிக்கொள்வார்கள்....
சாதாரண மனிதனின் வாழ்க்கையில் கூட எவ்வளவு அன்னியோன்யமாக வாழ்ந்த தம்பதியர் கூட கடைசிகாலங்களில் கருத்து வேறுபாடு கொள்வது இயற்க்கை அது இறைவனின் செயல். அப்போது தான்; ஒருவரின் பிரிவை ஒருவர் தாங்கிக்கொள்ள முடியும்.... இல்லை என்றால் கடைசி நேரத்திலும்; உயிர் பிரியும் தருவாயிலும் மூச்சு திணற பாலை ஊற்றித்தான் கொல்லவேண்டும்...
ஆக, மகாத்மா மகாத்மா தான்... அவர் இந்த மனித குலத்திற்கு சொந்தம் ஒரு தனிப்பட்ட யாரும் தனக்கு மட்டும் என்று உரிமை கொள்ளமுடியாது.... அதனால் தான் அவர் மறைந்து இத்தனை வருடங்கள் கழிந்தும்... ஒபாமாவின் வரலாற்றிலும் பின்னப்பட்டுள்ளார்....

கட்டுரையை தொகுத்து எனது கருத்தையும் பதிக்க வாய்ப்பு தந்த... கிருஷ்ணன் சாருக்கும், நமது வாத்தியாருக்கும் நன்றி..

Alasiam G said...

உமா சிரிப்பு அத்தனையும் அருமை... உண்மையில் சிரிக்க வைத்தன....
"ஜில்லுன்னு ஒரு காதல்" உங்கள் சரக்கா?

Alasiam G said...

//////சிறந்த அரசியல் தலைவர்கள் மகாத்மா காந்தி , அக்பர்: டைம் பத்திரிகை பாராட்டு: டைம் பத்திரிகை பாராட்டு
நியூயார்க்: உலகம் முழுவதும் உள்ள சிறந்த 25 அரசியல் தலைவர்களில் இந்தியாவின் மகாத்மாகாந்தி, மொகாலாய மன்னர் அக்பர் ஆகியோரை சிறந்த அரசியல் தலைவர்கள் என பாராட்டி அமெரிக்காவின் டைம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற பத்திரிகையான ‌டைம், உலக அளவில் சிறந்த 25அரசியல் தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது.இதில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி, 16-ம் நூற்றாண்டில் மிகச்சிறந்த ‌மொகலாய மன்னர் ஜலாலூதீன் முகமது அக்பர் ஆகிய இருவரும் அந்த பத்திரிகையால் பாராட்டப்பட்டுள்ளனர். ‌தென்ஆப்ரிக்காவில் வக்கீல் தொழில் செய்து வந்த மகாத்மா காந்தியடிகள் இந்தியாவில் இந்தியர்கள் அடிமைப்பட்டுகிடப்பதை பார்த்து கொதித்தெழுந்தார். 1930 -ம் ஆண்டு உப்புசத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களால் இந்தியாவிற்கு 1947-ம் ஆண்டு சுதந்திரத்தினை பெற்றுதந்தார். இவரது போராட்டம் அமெரிக்க மக்கள் உரிமைக்காக போராடிய மார்டின் லூதர் கிங் , இன‌வெறி்க்கொள்கையை கடுமையாக எதிர்த்த நெல்சன்மண்டேலா ஆகியோரை நினைவூட்கிறது. இதனால் உலகம்போற்றும் அரசில் தலைவராக உள்ளார். அதே போன்று 16-ம் நூற்றாண்டில் வடஇந்தியா முழுவதையும் ஆட்சி செய்த அக்பர் ,சிறந்த கவிஞர், தத்துமேதை, கலை, இலக்கியத்தில் இவர்கொண்டுள்ள ஆர்வம் ஆகியவற்றால் புகழப்படுகிறார். இவரது ஆட்சிகாலம் ஐரோப்பியாவில் ஏற்பட்ட மறுமலரர்ச்சி‌‌‌யை போன்று அமைந்தது என்றும் அந்த பத்திரிகையில் புகழப்பட்டுள்ளது. மேலும் திபெத்திய புத்தமதத்தலைவர் தலாய்லாமா, அடால்ப்ஹிட்லர், மு‌சோலினி, மாவோதுங்,அலெக்ஸாண்டர், முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ரொனால்டு ரீகன், ஆப்ரஹாம் லிங்கன் உள்ளி்ட்டோரும் டைம் பத்திரிகையி்ன் பாராட்டு பட்டிலில் உள்ளனர். ///// நன்றி தினமலர்.


யுகங்கள் ஆயிரமானாலும் மா மனிதர்கள் பாராட்டப் படுகின்றனர்....

Alasiam G said...

யுகங்கள் ஆயிரமானாலும் மா மனிதர்கள் பாராட்டப் படுவர்....

Uma said...

உமாவுக்கு நல்ல ரசிக மன்ம். வாழ்த்துக்கள்//

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கோபாலன் சார்.

Uma said...

அதிலும் குறிப்பாக அந்த 12 ஆவது ஜோக்கை //

ஓ அப்படியா?

Uma said...

சிரிப்பு துணுக்குகள் அருமை தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாராட்டுகள்..//

நன்றி கணபதி சார்

Uma said...

கோட்சேவின் குற்றசாட்டுக்களை அறியத் தந்ததற்கு நன்றி கிருஷ்ணன் சார்.

எல்லோருக்கும் நல்லவராக இருக்க விரும்பிய// நான் இதுவரையில் அவரைப் பற்றி படித்த அளவில் அவர் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மனதில் கொண்டு விளைவுகளைப்பற்றிக் கவலைப்படாமல் முடிவெடுத்து நிறைய இடங்களில் சறுக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். மற்றபடி இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே. விவாதத்திற்காக நான் இங்கே இதை எழுதவில்லை. விவாதிக்கும் அளவுக்கு நிறைய அவரைப்பற்றி படிக்கவும் இல்லை.

கோட்ஸேயின் வாக்கு மூலம்"// உங்களின் இந்த ஆக்கம் இந்த புத்தகத்தை வாங்கிப்படிக்க வேண்டுமென்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது. நன்றி. இன்னும் அவரைப்பற்றி எழுதப்பட்ட வெளிவராத புத்தகங்கள் இருக்கின்றன என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியாது.

எதுவானாலும் கோட்சே அவரைச் சுட்டது தவறு என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

கோபாலன் சார் சொன்னதை "கோட்சேயின் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றாலும் அதனை எதிர்ப்பதற்கு மகாத்மாவைக் கொலை செய்வது தீர்வாக முடியாது. மகாத்மாவின் கொள்கைகள் தவறு என்பதை மக்கள் மத்தியில் எடுத்து வைத்து மக்கள் மனதில் பதியும்படி தமது வாதங்களை வைத்திருக்க வேண்டும். "

நானும் வழிமொழிகிறேன்.

kannan said...

vanakkam iyaa

kannan said...

ஐயா!


உள்ளத்தால் அழுதாழும்
உதடுகளால் சிரிக்கிறேன்...
உறவுக​ள் கூட......
என்னால் கலங்க
கூடாது என்ற கொள்கையுடன் வாழ்தவருக்கு கிடைக்கும் வெகுமதி!

kannan said...

வணக்கம் ஐயா!

40 பில்லியன் US டாலர்

( 1 76 ௦௦௦ ௦௦ ௦௦ ௦௦௦ )

சொத்துள்ள

( இங்கு சொத்து என்பது பொருள் , புண்ணியம், சுகம் என அனைத்து சௌபாக்கியம் அடங்கும் )

தாய் தகப்பனுக்கு பிள்ளையாக பிறந்து அனைத்து சுகத்தையும் அனுபவிப்பது போல அதே
40 பில்லியன் US டாலருக்கு கடன் உள்ள தாய் தகப்பனுக்கு பிள்ளையாக பிறந்து கஷ்டத்தை அனுபவிப்பது தானே முறை, தர்மம், நியாயமும் கூட .

பிதாமகன் பீஷ்மர் தனது தந்தைக்காக தனது உணர்ச்சி , சுகம் என அனைத்தையும் இழக்க வில்லையா ?

கருணை வள்ளல் கர்ணன் தனது உயிரை வரத்தின் பெயரில் கேட்ட குந்தி தேவிக்கு கொடுக்க வில்லையா ?

தனது தாயை குறையாக பேசியதற்காக போர் புரிய மாட்டேன் என்று விஷ்ணு தனுசு என்ற வில்லை முறித்து விட்டு போகவில்லையா ?

மனதார நல்லது நடக்க வேண்டும் என்று போகும் பொழுது விதி வசத்தால் தவறாக நடப்பின் அதற்க்கு யார் வாத்தியார் ஐயா காரணம் ?

hamaragana said...

அன்புடன் வணக்கம்
இன்னொரு விஷயம் நீங்கள் நம்புகறீர்களோ ?இல்லையோ ??காந்தி என பெயர் இருந்தால் கூடிய வரை இது போன்ற
மரணம்தான் ஏற்படும்...காந்தி,, சஞ்சய்காந்தி {விமான விபத்து },,இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி, இது நிமரலோஜி படி gandi DI என்ற உச்சரிப்பு வரகூடாது என்று சொல்கிறார்கள்..இந்த காந்தி என்ற பெயர் உச்சரிக்க உச்சரிக்க அவர்களுக்கு இதனின் அவபலன் கிடைக்கிறது என்ற கருத்து
பெரியோர்கள் என்ன சொல்கிறார்கள்.வாத்தியார் என்ன சொல்கிறார்கள்..

kmr.krishnan said...

ஐயா அவர்கள் கொடுத்துள்ள கோட்சேவின் படம் அட்டன் பரோவின் "காந்தி" படத்தில் வருகின்ற நடிகரின் படம் என்று தோன்றுகிறது.அசல் கோட்சேவின் படம் இந்த இணைப்பில் காணலாம்.‌
http://en.wikipedia.org/wiki/Nathuram_Godse

minorwall said...

2000 பேர் கொண்ட வகுப்பறையில் இதைப்பதிவிடுவதற்காக வாத்தியார் 'எச்சரிக்கை' என்று மிகப்பலமான பீடிகையுடன் துவங்க வேண்டியிருக்கிறது..
காந்தியின் ஆதரவாளர்கள் யாரும் வகுப்பறைக்குள் கல்லெறிந்து விடக்கூடாது..அஹிம்சை வழியிலேயே வாதங்களை எடுத்துவைக்கவேண்டும் என்ற நோக்கம் தெரிகிறது..
2000 பேருக்கே இப்படி என்றால் இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு?எத்தனை மதம், மொழி, இனம்..முழுக்க முழுக்க வேறுபாடுகள் நிறைந்த ஒரு அமைப்பை சேர்த்து தேசமாக்கியவர்கள்
அதற்காக ஏதோ ஒரு சாராரை பாதிக்கும் படியாக சில சமயங்களில் சில காரியங்களில் செயல்பட்டிருக்கும் வாய்ப்பு என்பது தவிர்க்கமுடியாததே..
எல்லா தரப்பினருக்கும் நல்லவராக எவராலுமே முடியாது..

minorwall said...

எனக்கு 10வது ஜோக் ரொம்பப் புடிச்சுருந்துச்சு..

தகடூரான் said...

uma medam,
unga pathivu nalla nagaichuvai.

Anbudan,
Vaasagan.

மதுரை சரவணன் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி.i like all jokes..

kmr.krishnan said...

கோட்சே மற்றும் மஹாத்மா காந்திஜியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரின் அசல் புகைப்படங்களைக் காண இந்தத் தொடர்பைப் பார்க்கவும்


http://en.wikipedia.org/wiki/Nathuram_Godse

kmr.krishnan said...

///"ஒரு குறிப்பிட்ட வகுப்பில் பிறந்திருக்காத ஒரே காரணத்தால் மகாத்மாவாக அங்கீகரிக்கப்படாமல் போன ....."///

எந்த வகுப்பில் பிறக்க வேண்டும்?;யார் அங்கீக‌ரிக்க வேண்டும்?

அந்த மாமனிதரின் அரசியல் வழிகாட்டி(குரு என்று சொல்லலாமா?)
எந்த வகுப்பைச் சேர்ந்தவர்?

அன்று பள்ளிகளில் கவனம் அதிகம் செலுத்தியது அரசியல் நிர்பந்தம்.

இன்று வரை ஆசிரியர் எண்ணிக்கை உயர்ந்தது;அரசுப்பள்ளிகளுக்கு மரியாதை இல்லாமல் போனது;குடித்துவிட்டுப் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள்;வராமலேயே
சம்பளம் வாங்கும் ஆசிரியைகள்; இவர்களை நிர்வகிக்க முடியாமல் போனநிர்வாகம்..............
இதெற்கெல்லாம்...யாரைப் பொறுப்பாக்குவது?

kmr.krishnan said...

///"விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல காந்தி..ஆனால் அவரைப் பற்றி சொல்லப்படும் விமர்சனம் பொருட்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் அல்லவா..நன்றி.அன்புடன் செங்கோவி"///

மிக்க நன்றி செங்கோவி!என் ஆசிரியர் சொல்லுவார்:"தன் குற்றம் அறிந்தவர் காந்திஜி!அதனாலேயே அவர் மஹாத்மா!"

சாதாரணர்களால் தன் குற்றத்தைக் காண இயலாது. காந்திஜியைத் தவிர வேறு யார் அவரை முழுமையாக விமர்சித்து விட முடியும்? சுய விமர்சனம் காந்திஜியின் மிக முக்கியமான பண்பல்லவா?

சுயமாகச் சிந்திக்கும் தங்க‌ளைப் போன்ற‌வர்களின் பின்னூட்டத்தை பெரிதும் மதிக்கிறேன்.வரவேற்கிறேன். அடிக்கடி வாருங்கள்.

Uma said...

ரொம்பப் புடிச்சுருந்துச்சு//

ம்ம்

Uma said...

ஜோக்குகளை ரசித்து கமெண்ட்ஸ் போட்ட பிரசன்னகுமார், கிருஷ்ணன் சார், ஆலாசியம் (சொந்த சரக்கெல்லாம் இல்லை, நீங்க வேற, அவ்ளோ மூளை மட்டும் எனக்கு இருந்திருந்தா?), வாசகன், மதுரை சரவணன் அனைவருக்கும் நன்றிகள் பல.

Uma said...

வந்திருந்த அனைவருக்கும் சுமார் ரூ.840:00 மதிப்புள்ள புத்தகப் பார்சலை நினைவுப் பரிசாகக் கொடுத்தார்கள்.//

அசத்தல் சார்.

kmr.krishnan said...

///"மகாத்மா மகாத்மா தான்... அவர் இந்த மனித குலத்திற்கு சொந்தம் ஒரு தனிப்பட்ட யாரும் தனக்கு மட்டும் என்று உரிமை கொள்ளமுடியாது.... அதனால் தான் அவர் மறைந்து இத்தனை வருடங்கள் கழிந்தும்... ஒபாமாவின் வரலாற்றிலும் பின்னப்பட்டுள்ளார்....

கட்டுரையை தொகுத்து எனது கருத்தையும் பதிக்க வாய்ப்பு தந்த... கிருஷ்ணன் சாருக்கும், நமது வாத்தியாருக்கும் நன்றி.."///

நன்றி ஹாலாஸ்யம்ஜி.அஹிம்ஸையும், சத்தியமும் எல்லோராலும் கடைப்பிடிக்க முடியவில்லை என்ற காரண்த்திற்காக அவற்றின் எதிர் கருத்தையும் நாம் ஆதரிக்கக் கூடாது அல்லவா? மஹாத்மாக்கள் நல்வழியைச் சொல்வார்கள்.
ஏற்று அதன் வழி நடப்பது நம் போன்ற‌வர் செய்ய வேண்டும்.அவ‌ர் சொல்வது நடைமுறை சாத்தியமில்லாதது என்றாலும், அவர் மாற்றிச் சொல்லவில்லையே என்று அவரை நாம் நொந்து கொள்ளலாமா?

kmr.krishnan said...

///" விவாதிக்கும் அளவுக்கு நிறைய அவரைப்பற்றி படிக்கவும் இல்லை."///

பின்னூட்டத்திற்கு நன்றி உமாஜி! 108 வால்யூம் உள்ளது காந்திஜியின் ஆக்கங்கள்.அவருடைய ஆர்வங்கள் பன்முகம் கொண்டவை.சுதந்திரப் போராட்ட அரசியல் என்பது மிகச் சிறிய பகுதிதான். அவர் முஸ்லிம்களிடம் காட்டிய பரிவு,
இந்துக்களை வருத்தப்படச் செய்தது

kmr.krishnan said...

பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்ஜி

kmr.krishnan said...

///'காந்தி என பெயர் இருந்தால் கூடிய வரை இது போன்ற
மரணம்தான் ஏற்படும்...காந்தி,, சஞ்சய்காந்தி {விமான விபத்து },,இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி, இது நிமரலோஜி படி gandi DI என்ற உச்சரிப்பு வரகூடாது என்று சொல்கிறார்கள்..இந்த காந்தி என்ற பெயர் உச்சரிக்க உச்சரிக்க அவர்களுக்கு இதனின் அவபலன் கிடைக்கிறது என்ற கருத்து'///

பின்னூட்த்திற்கு நன்றி கண‌ப‌தி சார்!காந்தி என்பது குஜராத்தில் ஒரு வகுப்பாருடைய சாதிப் பெயர்தான். வைஸ்யர்கள்(செட்டியார்கள்)!

வடநாட்டில் சாதி/குடும்ப/தொழில் பெயர்கள் இன்றளவும் வழக்கத்தில் உள்ளன.
பலரும் பெயருக்குப் பின்னர் 'சர்நேமா'க 'காந்தி'யைப்போட்டுக் கொள்கின்றனர்.
எல்லோரும் விபத்தில்தான் இறந்துள்ளனரா? தெரியவில்லை.

kmr.krishnan said...

///"2000 பேருக்கே இப்படி என்றால் இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு?எத்தனை மதம், மொழி, இனம்..முழுக்க முழுக்க வேறுபாடுகள் நிறைந்த ஒரு அமைப்பை சேர்த்து தேசமாக்கியவர்கள்
அதற்காக ஏதோ ஒரு சாராரை பாதிக்கும் படியாக சில சமயங்களில் சில காரியங்களில் செயல்பட்டிருக்கும் வாய்ப்பு என்பது தவிர்க்கமுடியாததே..
எல்லா தரப்பினருக்கும் நல்லவராக எவராலுமே முடியாது.."///

நன்றி மைனர்வாள்.சரியான பார்வை. எவ்வளவு பொறுப்புணர்வோடு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்.ஹாலாஸ்யம்ஜி அளித்துள்ள உதாரணங்களும், உங்க‌ளுடைய அணுகு முறையும் பாராட்டத்தக்கன.

ஆங்கிலேயனின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க எல்லோரையும் ஒற்றுமைப்படுத்த காந்திஜி முயற்சிக்கிறார். அதில் தனிப்பட்ட மனிதர்களின்,
சமூகங்களின் விருப்புக்கள் சில பாதிப்படைந்தன.சொந்த விருப்பங்கள் நிறைவேறாதவர்களுக்கு/சமூகங்களுக்கு காந்திஜி பிடிக்காமல் போனார்.

kmr.krishnan said...

///"தேசபக்திக்கு வேறு இலக்கணம் கொடுத்த அவரை வேறு பக்கம் பார்க்க ஓஷோவின் கருத்துக்களை படித்துவிட்டு பதிவிட்டு இருந்தால் .. "///

தாங்கள் செய்யலாம்தானே ஐயர்வாள்!?

என் கட்டுரையின் நோக்கமே காந்திஜியும் விமர்சனத்திற்கு உட்பட்ட‌வர்தான்
என்பதுதான்.ஓஷோ காந்திஜியைப் பற்றிக் கூறியதைக் கூறுவதும், ஓஷோவைப்பற்றி பிறர் கூறுவதை செவிமடுக்கவும்,ஒரு வாய்ப்பாக ஒரு ஆக்கத்தைத் தாருங்களேன்

G.Nandagopal said...

ஆலாசியம் சார் அவர்கள் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார்கள்.. மிகத் தெளிவாகவும் நுணுக்கமாகவும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்களுடன் நன்றிகள் பல.