மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

9.2.11

அதற்கும் மனம் வேண்டுமே!!!

திரு. தமிழ்வாணன் அவர்கள்

திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்

திரு. ரவி தமிழ்வாணன் அவர்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதற்கும் மனம் வேண்டுமே!!!

7.2.2011 அன்று செட்டிநாட்டின் சிறப்பான ஊர்களில் ஒன்றான தேவகோட்டை யில்  (அதாங்க எங்க ஊருங்க!)  ஒரு முக்கியமான இல்லத் திருமண விழா! ஆமாம் பிரபல எழுத்தாளர் தெய்வத்திரு.தமிழ்வாணன் அவர்களின் இல்லத்திருவிழா!

தமிழ்வாணன் அவர்களின் இரு புதல்வர்களில் இளவலான ரவி தமிழ்வாணன் அவர்களின் குமாரன் செல்வன் ராமநாதனுக்கும் செல்வி சிந்தாமணிக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அடியேனுக்குக் கிடைத்தது.

தமிழ்வாணன் அவர்களின் இயற்பெயர் ராமநாதன். என் தந்தையாரின் பால்ய நண்பர் அவர். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவர் எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். இரண்டு தினங்கள் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அப்போது கிடைத்தது. நான் சந்தித்த முதல் எழுத்தாளரும், பத்திரிக்கையாளரும் அவர்தான்.

செட்டிநாட்டில் இருந்து நான்கு இளைஞர்கள், ஒரே காலகட்டத்தில் சென்னைக்குச் சென்று எழுத்துத் துறையில் பிரபலமானார்கள். அதாவது 1948ஆம் ஆண்டு என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

அப்படிப்படிப் பிரபலமானவர்கள்

1. திருவாளர் தமிழ்வாணன், ஆசிரியர், கல்கண்டு வார இதழ், நிறுவனர், மணிமேகலைப் பிரசுரம்
2. திருவாளர் S.A.P.அண்ணாமலை முன்னாள் ஆசிரியர் & நிறுவனர், குமுதம் வார இதழ்
3. கவியரசர். கண்ணதாசன் அவர்கள்.
4. திருவாளர் சின்ன அண்ணாமலை அவர்கள், சிறந்த மேடைப் பேச்சாளர், கல்கி, மற்றும் ராஜாஜி அவர்களின் அன்பிற்குப் பாத்திரமானவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நெருங்கிய நண்பர், புத்தகப் பண்ணை என்னும் ஆரம்பகாலப் பதிப்பகத்தின் நிறுவனர். இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் (இவரும் தேவகோட்டையைச் சேர்ந்தவர்தான். என் தந்தையாரின் பால்ய சிநேகிதர். இவரையும் நான் சந்தித்திருக்கிறேன்)
+++++++++++++++++++++++++++++++++++++++++
சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன். தமிழ்வாணன் அவர்களின் இல்லத்திருமணவிழா சிறப்பாக நடைபெற்றது.

குமுதத்தின் சிறப்பு ஆசிரியரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஜவஹர் பழநியப்பன் அவர்களும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.சொக்கலிங்கம்  அவர்களும், செட்டிநாட்டு அரசர் டாக்டர் ராஜாசர். 
M.A.M ராமசாமி அவர்களும், மத்திய உள்துறை அமைச்சர். திரு.ப.சிதம்பரம் அவர்களும் திருமணத்தில் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்கள். இன்னும் ஏராளமான பிரபலங்களும் வந்திருந்தார்கள். கட்டுரையின் நீளம் கருதி அவர்களைப் பட்டியல் இடவில்லை.

லேனா தமிழ்வாணன் அவர்களும், ரவி தமிழ்வாணன் அவர்களும் எனக்கு நன்கு பரீட்சயமானவர்கள். அடியேனும் கலந்துகொண்டேன்
--------------------------------------------------------------------------
வந்திருந்த அனைவருக்கும் சுமார் ரூ.840:00 மதிப்புள்ள புத்தகப் பார்சலை நினைவுப் பரிசாகக் கொடுத்தார்கள். கலந்து கொண்டவர்கள் ஆயிரம் பேர்களுக்கு மேலே இருக்கும். ஒருவரையும் விட்டுவிடாமல் தேடிப் பிடித்து இன்முகத்துடன் நினைவுப் பரிசைக் கொடுத்தார்கள்.

அதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்!

திருமணங்களில் கவர்களை எதிர்பார்க்கும் கலாச்சாரம் மலிந்துவிட்ட இன்றைய தேசத்தில், வந்திருக்கும் விருந்தினர்களுக்கு ரூ 100:00 க்குமேல் மதிப்புள்ள விருந்தையும் பறிமாறி, கையில் ரூ.840:00 மதிப்புள்ள புத்தகங்களையும் கொடுத்தனுப்புவது என்பது எத்தனை உயர்வான விஷயம்.

அதற்கு மனம் வேண்டுமே!
வாழ்க அவர்களுடைய உயர்ந்த உள்ளம்! வாழ்க அந்தப் பண்பு! வளர்க அவர்களுடைய இந்தப் புத்தகப் பரிசுக் கலாச்சாரம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
விழாவில் நினைவுப்பரிசாகக் கொடுக்கபெற்ற புத்தகங்களின் விவரம்:

1. லேனா தமிழ்வாணனின் 1000 ஒரு பக்கக் கட்டுரைகள்’ புத்தகம் 1,440 பக்கங்கள் விலை ரூ.700:00
2. படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை’ ஆக்கம் கவிஞர் நீலம் மதுமயன் - 108 பக்கங்கள், விலை ரூ.45:00
3. ஸ்ரீஷிர்டி சாயிபாபா வரலாறும், மகிமைகளும் - ஆக்கம்: பிரகிருதி சி.நா. கிருஷ்ணமூர்த்தி - 184 பக்கங்கள் விலை ரூ.95:00

வாழ்க வளமுடன்!

46 comments:

dorairaj said...

certainly
they have done a good job
from 1965 i am reading tamilvanan
kalkandu
in those 1970s tamilvanan is great hero for the youngsters
their sons lena and ravi

following their fathers path
congratulations vathiyare for your effort

Oviyam said...

Dear Sir,

Present.

Great People do great things!!!!

-- Oviyam

kmr.krishnan said...

அதான் தங்க‌ளுடைய இருப்பை 2,3 நாளைக்கு உணர முடியவில்லை. "வாத்தியாரைக் காணவில்லையே" என்று புலம்பிக்கொண்டு இருந்தேன்."ஏன் சும்மா புலம்பிக்கொண்டு....?வேண்டுமானால் கோவைக்கு ஒரு தடவை போய் பார்த்து விட்டு வருங்களேன்" என்று கூட மனைவி சொல்லி விட்டார்கள்.

புத்தகங்களைப் பரிசாக அளித்தது/அளிப்பது நல்ல கலாச்சாரம். செட்டிநாட்டில் தான் அது நன்றாக வேர் ஊன்றியுள்ளது.

ஒரு மஹாநாட்டில் இரண்டு அண்ணாமலைகள் ஓடியாடி வேலை செய்துள்ளனர்.இருவரையும் வேறுபடுத்திக் கூப்பிட, வயதில் சிறியவரான அண்ணாமலைக்கு"சின்ன அண்ணாமலை"என்று பெயர் சூட்டினாரம் ராஜாஜி!அதுவே நிலைத்துவிட்டது.நல்ல நகைச்சுவைப் பேச்சாளர்.பேசிக் கேட்டுள்ளேன்.

எல்லாம் சரி!செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகளின் கைப்பக்குவம் என்னென்ன
செய்து அளித்தது என்று ஒரு தனிப்பதிவு போட உத்தேசமோ?செட்டிநாட்டுக்கு திருமணத்திற்குப் போய் திரும்பிய பின்னர் 'மெனு'வைச் சொன்னால் தானே கட்டுரை நிறைவடையும்?

SP.VR. SUBBAIYA said...

/////dorairaj said...
certainly they have done a good job
from 1965 i am reading tamilvanan kalkandu
in those 1970s tamilvanan is great hero for the youngsters their sons lena and ravi
following their fathers path
congratulations vathiyare for your effort////

நல்லது நடந்தால் பாராட்ட வேண்டுமல்லவா? அதைத்தான் செய்திருக்கிறேன். நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///Oviyam said...
Dear Sir,
Present.
Great People do great things!!!!
-- Oviyam////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////kmr.krishnan said...
அதான் தங்க‌ளுடைய இருப்பை 2,3 நாளைக்கு உணர முடியவில்லை. "வாத்தியாரைக் காணவில்லையே" என்று புலம்பிக்கொண்டு இருந்தேன்."ஏன் சும்மா புலம்பிக்கொண்டு....?வேண்டுமானால் கோவைக்கு ஒரு தடவை போய் பார்த்து விட்டு வருங்களேன்" என்று கூட மனைவி சொல்லி விட்டார்கள்.
புத்தகங்களைப் பரிசாக அளித்தது/அளிப்பது நல்ல கலாச்சாரம். செட்டிநாட்டில் தான் அது நன்றாக வேர் ஊன்றியுள்ளது.
ஒரு மஹாநாட்டில் இரண்டு அண்ணாமலைகள் ஓடியாடி வேலை செய்துள்ளனர்.இருவரையும் வேறுபடுத்திக் கூப்பிட, வயதில் சிறியவரான அண்ணாமலைக்கு"சின்ன அண்ணாமலை"என்று பெயர் சூட்டினாரம் ராஜாஜி!அதுவே நிலைத்துவிட்டது.நல்ல நகைச்சுவைப் பேச்சாளர்.பேசிக் கேட்டுள்ளேன்.
எல்லாம் சரி!செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகளின் கைப்பக்குவம் என்னென்ன
செய்து அளித்தது என்று ஒரு தனிப்பதிவு போட உத்தேசமோ?செட்டிநாட்டுக்கு திருமணத்திற்குப் போய் திரும்பிய பின்னர் 'மெனு'வைச் சொன்னால் தானே கட்டுரை நிறைவடையும்?/////

நீங்கள் சொன்ன பெயர்க்காரணம் சரிதான்!
பதிவில் அறிவிப்பு செய்துவிட்டுத்தான் சாமி பயணமானேன். நீங்கள் கவனிக்கவில்லை.
மதிய விருந்து வேறு ஒரு இடத்தில். இவர்கள் வீட்டிற்கு மாலைதான் சென்றேன்
மாலை விருந்து. பலகாரம். பாதாம் ஹல்வா, பால் பணியாரம், வெள்ளைப் பணியாரம், மெதுவடை, வெஜிடபிள் ஸ்பிரிங் ரோல், இட்லி, கொத்து பரோட்டா, மசால் தோசை, தேங்காய் சட்னி, தக்காளிச் சட்னி, பூண்டு காரக் குழம்பு, சாம்பார், தயிர் சாதம், கும்பகோணம் ஊருகாய், சூடான மசலாபால், பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம், மலைவாழைப்பழம், ஆளுக்கொரு டெர்ரி நாப்கின் (இது கைதுடைப்பதற்கு)

kmr.krishnan said...

சிறுவர் பத்திரிகையாகத் துவங்கிய கல்கண்டு,இளைஞர் பத்திரிகையாக‌ வளர்ச்சி கண்டது.பள்ளி,கல்லூரி நாட்களில் ஆர்வத்துடன் படித்ததுண்டு.

"Master of all subjects"

என்று போட்டுக் கொள்வார் தமிழ்வாணன்.கேள்விபதில் இலக்கியத்தைப் புகழ் அடைய வைத்தவர் அவர்.அவருக்குப் பிறகு குமுதத்தில்"அரசு பதில்" புகழ்
பெற்றது.ஒருமுறை ஓர் ஆயுர்வேத மருந்தைப் பற்றி எழுதிவிட்டு தமிழ்வாணன் சொன்னார்:"இந்த மருந்தை உட்கொண்டால் 100% சுகம் கிடைக்கும். பயன்படுத்திப் பார்த்துப் பலன் கிடைக்காவிடில் எனக்கு எழுதுங்கள்.வேறு மருந்து
சொல்கிறேன்"

"எப்படி?" தலைப்பில் பல நூல்கள் எழுதியுள்ளார்."100வயது நலமுடன் வாழ்வது எப்ப்டி?" என்று நமக்குச் சொன்னவர் 60 வயதினைத் தாண்டவில்லை!

kmr.krishnan said...

///"பாதாம் ஹல்வா, பால் பணியாரம், வெள்ளைப் பணியாரம், மெதுவடை, வெஜிடபிள் ஸ்பிரிங் ரோல், இட்லி, கொத்து பரோட்டா, மசால் தோசை, தேங்காய் சட்னி, தக்காளிச் சட்னி, பூண்டு காரக் குழம்பு, சாம்பார், தயிர் சாதம், கும்பகோணம் ஊருகாய், சூடான மசலாபால், பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம், மலைவாழைப்பழம்,"/////

மெனுவைப் படித்ததே வயிறு நிரம்பிவிட்டது.
"ஆமாம்! கொத்து பரோட்டா என்றால் என் வி யா?" என்று மாமி கேட்கிறார்கள்.தெரிந்தால்தானே சொல்வதற்கு? உங்க‌ளுடன் ஒரு தடவை ஒட்டிக் கொண்டு செட்டிநாட்டுக் கல்யாணத்திற்கு வரவேண்டும் என்று இருந்தேன்.கொத்து பரோட்டா தடை விதிக்கும் போல உள்ளதே

arthanari said...

விருந்து வ்யிற்றுக்கும், அறீவிற்கும் தருவது சாலச்சிறந்தது.

hamaragana said...

அன்புடன் வணக்கம்
திருமண நிகழ்வுகழில் இது போன்று புஸ்தகம் வெளி இடுவது மிக பெரிய புண்ணியம்.. மணமக்கள் பலஆண்டு வாழ வாழ்த்துகிறோம் !!!அதுபோல் அந்நேரத்தில் வெளிடப்பட்ட நூல்களும் பல்லாண்டு வாழும்,அதை படிக்கும் நேரமெல்லாம் மணமக்களை வாழ்த்துவார்கள்.. எதோ நாங்களும் எங்களால் இயன்ற ஒரு சிறிய நூல் எனது மகன் திருமணத்தில் இலவசமாக வெளி இட்டோம்..""" சைவ நெறி உடன் வாழ்வது""" ...the copy of the book is in your mail i.d. thank you sir.

Thanjavooraan said...

தங்கள் திருமண விஜயம் பற்றிய செய்தி சுவையாக இருந்தது, தாங்கள் சாப்பிட்ட விருந்தைப் போல. செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி சொல்லவா வேண்டும். கணக்கில் கறாரும், கையில் தாராளமும் காட்டும் பண்பாட்டுக் காவலர்கள். போகட்டும். சின்ன அண்ணாமலை பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவரை நன்றாக அறிவேன். சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் அன்பிற்குரியர் அவர். அவரது நூல் வெளியீட்டு நிறுவனத்தின் பெயர் தமிழ்ப் பண்ணை என்று நினைக்கிறேன். அவர் சங்கப்பலகை என்றொரு பத்திரிகையும் தமிழரசுக் கழகத்துக்காக நடத்தினார். பேச்சில் நல்ல நகைச்சுவை. மேடையில் நின்று பேசினால் அவரது தோற்றம் கம்பீரமாக இருக்கும். அவரது நகைச்சுவைப் பேச்சில் கட்டுண்டு கிடந்தவர்களில் நானும் ஒருவன். பல பழமொழிகளை அப்போது அவர் உதிர்ப்பார். இன்னும் நினைவில் உள்ளவை சில. (1) கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் போனானாம் (2) கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை இது போன்ற பல துணுக்குகள் அவரிடம் கிடைக்கும். இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடக்கூடிய நிகழ்ச்சி. 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டு திருவாடனை சப் ஜெயிலில் இருந்த போது, சிறையை உடைத்து மக்கட்கூட்டம் இவரை விடுதலை செய்தது. இவருடைய "சொன்னால் நம்பமாட்டீர்கள்" எனும் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். இவர் நடத்திய மல்யுத்த போட்டி பற்றியும், சரோஜா தேவியை சினிமாவில் அறிமுகப் படுத்தியது பற்றியும், சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் தோன்றிய காரணம் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். அவரை நினைவு படுத்திய உங்களுக்கு நன்றி.

Uma said...

செட்டிநாட்டுக்கு திருமணத்திற்குப் போய் திரும்பிய பின்னர் 'மெனு'வைச் சொன்னால் தானே கட்டுரை நிறைவடையும்?//

கிருஷ்ணன் சார் கேட்பாருன்னு நினைச்சேன். சார் ஒரு தடவை அவரையும் உங்களோட அழைச்சுக்கிட்டுப் போங்களேன். அப்படியே முடிஞ்சா என்னையும்தான். ஹி ஹி.

asdfgf said...

:)

பெரியவர்கள் மத்தியில் இது போல பேசதான் கத்துக்க முயற்சி பண்ணுறேன், வருவதற்கு இல்லை.

வாழ்த்த வயதில்லை என்றாலும் ராமநாதன் தம்பதியர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

தஞ்சாவூர் அய்யா, அடங்கப்பா!! யாருங்க அது சின்ன அண்ணாமலை அவர்கள் ஒரே புகழாரம் தான் போங்க. அட நாராயணா!, இது என்ன பழமொழி எல்லாம் பயங்கர டெரரா இருக்கு.

KMRK சார், எது சொன்னாலும் தவறாகவே முடிகின்றது. நிலைமை சீர்கெட்டுவிட்டது. நாங்களெல்லாம் காமண்டினா வாத்தியார் சாமி பதிலுரை அளிப்பதை நிறுத்திவிடுவார்கள். உங்களுக்கு கதை தெரியுமா.

SP.VR. SUBBAIYA said...

//////kmr.krishnan said...
சிறுவர் பத்திரிகையாகத் துவங்கிய கல்கண்டு,இளைஞர் பத்திரிகையாக‌ வளர்ச்சி கண்டது.பள்ளி,கல்லூரி நாட்களில் ஆர்வத்துடன் படித்ததுண்டு.
"Master of all subjects"
என்று போட்டுக் கொள்வார் தமிழ்வாணன்.கேள்விபதில் இலக்கியத்தைப் புகழ் அடைய வைத்தவர் அவர்.அவருக்குப் பிறகு குமுதத்தில்"அரசு பதில்" புகழ்
பெற்றது.ஒருமுறை ஓர் ஆயுர்வேத மருந்தைப் பற்றி எழுதிவிட்டு தமிழ்வாணன் சொன்னார்:"இந்த மருந்தை உட்கொண்டால் 100% சுகம் கிடைக்கும். பயன்படுத்திப் பார்த்துப் பலன் கிடைக்காவிடில் எனக்கு எழுதுங்கள்.வேறு மருந்து
சொல்கிறேன்"
"எப்படி?" தலைப்பில் பல நூல்கள் எழுதியுள்ளார்."100வயது நலமுடன் வாழ்வது எப்ப்டி?" என்று நமக்குச் சொன்னவர் 60 வயதினைத் தாண்டவில்லை!/////

அதற்குப் பெயர்தான் விதி. விதிக்கப்பெற்றது. அவர் கவியரசரைப்போலவே 54 வயதில் மரணமடைந்ததில் எனக்கு மிகுந்த வருத்தம். இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ எழுதியிருப்பார். ஆனால் கடைசிவரை உற்சாகமாக இருந்தார். சாதாரணமாக அனைவருக்கும் அது சாத்தியப்படுவதில்லை.

SP.VR. SUBBAIYA said...

////kmr.krishnan said...
///"பாதாம் ஹல்வா, பால் பணியாரம், வெள்ளைப் பணியாரம், மெதுவடை, வெஜிடபிள் ஸ்பிரிங் ரோல், இட்லி, கொத்து பரோட்டா, மசால் தோசை, தேங்காய் சட்னி, தக்காளிச் சட்னி, பூண்டு காரக் குழம்பு, சாம்பார், தயிர் சாதம், கும்பகோணம் ஊருகாய், சூடான மசலாபால், பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம், மலைவாழைப்பழம்,"/////
மெனுவைப் படித்ததே வயிறு நிரம்பிவிட்டது.
"ஆமாம்! கொத்து பரோட்டா என்றால் என் வி யா?" என்று மாமி கேட்கிறார்கள்.தெரிந்தால்தானே சொல்வதற்கு? உங்க‌ளுடன் ஒரு தடவை ஒட்டிக் கொண்டு செட்டிநாட்டுக் கல்யாணத்திற்கு வரவேண்டும் என்று இருந்தேன்.கொத்து பரோட்டா தடை விதிக்கும் போல உள்ளதே////

ச்சே..சே...நான் சுத்த சைவம். பரோட்டோவை துண்டு துண்டுகளாகக் கொத்தி, மசாலா சேர்த்துக்கொடுப்பார்கள். இளைஞர்களுக்குப் பிடிக்கும். அது சைவ அயிட்டம்தான்!

SP.VR. SUBBAIYA said...

//////arthanari said...
விருந்து வயிற்றுக்கும், அறிவிற்கும் தருவது சாலச்சிறந்தது./////

உண்மைதான். நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////hamaragana said...
அன்புடன் வணக்கம்
திருமண நிகழ்வுகழில் இது போன்று புஸ்தகம் வெளி இடுவது மிக பெரிய புண்ணியம்.. மணமக்கள் பலஆண்டு வாழ வாழ்த்துகிறோம் !!!அதுபோல் அந்நேரத்தில் வெளிடப்பட்ட நூல்களும் பல்லாண்டு வாழும்,அதை படிக்கும் நேரமெல்லாம் மணமக்களை வாழ்த்துவார்கள்.. எதோ நாங்களும் எங்களால் இயன்ற ஒரு சிறிய நூல் எனது மகன் திருமணத்தில் இலவசமாக வெளி இட்டோம்..""" சைவ நெறி உடன் வாழ்வது""" ...the copy of the book is in your mail i.d. thank you sir.//////

நல்லது. நன்றி சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Thanjavooraan said...
தங்கள் திருமண விஜயம் பற்றிய செய்தி சுவையாக இருந்தது, தாங்கள் சாப்பிட்ட விருந்தைப் போல. செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி சொல்லவா வேண்டும். கணக்கில் கறாரும், கையில் தாராளமும் காட்டும் பண்பாட்டுக் காவலர்கள். போகட்டும். சின்ன அண்ணாமலை பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவரை நன்றாக அறிவேன். சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் அன்பிற்குரியர் அவர். அவரது நூல் வெளியீட்டு நிறுவனத்தின் பெயர் தமிழ்ப் பண்ணை என்று நினைக்கிறேன். அவர் சங்கப்பலகை என்றொரு பத்திரிகையும் தமிழரசுக் கழகத்துக்காக நடத்தினார். பேச்சில் நல்ல நகைச்சுவை. மேடையில் நின்று பேசினால் அவரது தோற்றம் கம்பீரமாக இருக்கும். அவரது நகைச்சுவைப் பேச்சில் கட்டுண்டு கிடந்தவர்களில் நானும் ஒருவன். பல பழமொழிகளை அப்போது அவர் உதிர்ப்பார். இன்னும் நினைவில் உள்ளவை சில. (1) கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் போனானாம் (2) கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை இது போன்ற பல துணுக்குகள் அவரிடம் கிடைக்கும். இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடக்கூடிய நிகழ்ச்சி. 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டு திருவாடனை சப் ஜெயிலில் இருந்த போது, சிறையை உடைத்து மக்கட்கூட்டம் இவரை விடுதலை செய்தது. இவருடைய "சொன்னால் நம்பமாட்டீர்கள்" எனும் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். இவர் நடத்திய மல்யுத்த போட்டி பற்றியும், சரோஜா தேவியை சினிமாவில் அறிமுகப் படுத்தியது பற்றியும், சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் தோன்றிய காரணம் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். அவரை நினைவு படுத்திய உங்களுக்கு நன்றி.////

ஆமாம் சார். அவர் பன்கலை வித்தகர். அவருடைய ’சொன்னால் நம்பமாட்டீர்கள்’ புத்தகம் என்னிடம் உள்ளது. அவரைப் பற்றி முன்பு ஒருமுறை (3 ஆண்டுகளுக்கு முன்பு) ஒரு நெடிய கட்டுரை ஒன்றை எழுதிப் பதிவிட்டேன்.
அதன் சுட்டியைத் தேடி உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////Uma said...
செட்டிநாட்டுக்கு திருமணத்திற்குப் போய் திரும்பிய பின்னர் 'மெனு'வைச் சொன்னால் தானே கட்டுரை நிறைவடையும்?//
கிருஷ்ணன் சார் கேட்பாருன்னு நினைச்சேன். சார் ஒரு தடவை அவரையும் உங்களோட அழைச்சுக்கிட்டுப் போங்களேன். அப்படியே முடிஞ்சா என்னையும்தான். ஹி ஹி./////

ஆகா, செய்தால் போயிற்று!

SP.VR. SUBBAIYA said...

//////asdfgf said... :)
பெரியவர்கள் மத்தியில் இது போல பேசதான் கத்துக்க முயற்சி பண்ணுறேன், வருவதற்கு இல்லை.
வாழ்த்த வயதில்லை என்றாலும் ராமநாதன் தம்பதியர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகின்றேன்.
தஞ்சாவூர் அய்யா, அடங்கப்பா!! யாருங்க அது சின்ன அண்ணாமலை அவர்கள் ஒரே புகழாரம் தான் போங்க. அட நாராயணா!, இது என்ன பழமொழி எல்லாம் பயங்கர டெரரா இருக்கு.
KMRK சார், எது சொன்னாலும் தவறாகவே முடிகின்றது. நிலைமை சீர்கெட்டுவிட்டது. நாங்களெல்லாம் காமண்டினா வாத்தியார் சாமி பதிலுரை அளிப்பதை நிறுத்திவிடுவார்கள். உங்களுக்கு கதை தெரியுமா.///////

அவர் வயதிற்கு அவர் சொல்வதெல்லாம் சரிதான். உங்கள் வயதிற்கு அதை நீங்கள் சரியான கோணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். உண்மைக்கு எப்போதும் ஒரே வடிவம்தான். அது என்றுமே தவறாக முடியாது.

kannan said...

வாத்தியார் ஐயா வணக்கம்,

திருமண தம்பதியருக்கு எம்முடைய மனம் மார்ந்த நல் வாழ்த்துகள் .

kannan said...

ஐயா !

வகுப்பறைக்கு வருகை தரும் பெரியவர்கள்,
வாத்தியார்,
துணை வாத்தியார்,
பாசமலர் சகோதரி,
மண்ணின் வேந்தன்!
மைத்துனர் மைனர் வாழ்
முதல் சகல இரு பால் மாணவ மாணவியருக்கு கண்ணனின் அன்பான வேண்டுகோள்.

பள்ளிகூட விடுமுறை நாட்களில் நடைபெறும் கண்ணனின் கல்யாணதீர்க்கு அனைவரும் வந்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும்.


ஆனால்'

கண்ணனுக்கு ஏற்ற " லக்ஷ்மி", யார் என்று தான் முடிவு எடுக்க முடியாமல் பெரியவர்கள் உள்ளார்கள்.

asdfgf said...

நான் உங்களின் வகுப்பறை மாணவன் சார், நிச்சயம் நீங்க சொல்லும் படி கேட்பேன். நன்றி.
:)

hamaragana said...

அன்புடன் வணக்கம் Thiru KMRK...
சைவ கொத்து பரோட்டா ..பெரிய தோசை கல்லில் பெரிய வெங்காயம் சிறுது ஒரு தக்காளி நறுக்கியது பச்சை மிளகாய் சிறுது கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி அதில் பரோட்டாவை போட்டு கொத்து கரண்டியால் கொத்த வேண்டும் அத்துடன் சிறுது பரோட்டாவுக்கு தொட்டுகொள்ள கொடுக்கும் குருமா உற்றி சின்ன சின்ன துண்டாக கொத்தி [கொத்தும் பொது மாஸ்டர் ஒரு ராக லயத்துடன் ] வாழை இலையல் கட்டி வீடு வந்து பிரிச்சி சாப்பிட்டால் அட!! அட !! எனது மகன் திருமண முந்திய நாளில் இரவு நெருங்கிய உறவுகளுக்கு சாமி வச்சு கும்பிட அழைப்பு அப்போது போட்டது அனைவரும் ஹேய் என்னபா !!பிரமாதம் என்று பாராட்டினார்கள் [[எங்கள் வகையில் இது போன்ற இரவு டின்னர் கிடையாது.]]சிவாஜி கணேசன் ஒரு படத்தில் இதென்ன உண்டு களிக்கவா !!அல்லது கண்டு களிக்கவா .!. அது போல செட்டிநாட்டு கல்யாணம் இருக்கும் 1980 இல் ஒரு நண்பன் திருமணத்தில்சப்பிடிருகிறேன்... ஆனாலும் செட்டிநாட்டு சமையலுக்கு இணை வாராது !!...

kmr.krishnan said...

///"KMRK சார், எது சொன்னாலும் தவறாகவே முடிகின்றது. நிலைமை சீர்கெட்டுவிட்டது. நாங்களெல்லாம் காமண்டினா வாத்தியார் சாமி பதிலுரை அளிப்பதை நிறுத்திவிடுவார்கள். உங்களுக்கு கதை தெரியுமா."///

அதென்ன புதுக்கதை?‍சொன்னாத்தானே தெரியும்.!?

முதல் முதலாக பின்னூட்டம் எழுதியுள்ளீர்கள் என்று தோன்றுகிறது.முதல் வருகைக்கு வாழ்த்துச்சொல்லவேண்டும் என்று பார்த்தால் அடி மடியில் கையைப் போடுகிறீர்களே!
" என்ன குற்றம் கண்டீர்? சொற் குற்றமா? பொருட் குற்றமா? எவ்வள‌வு குற்றம் உள்ளதோ அவ்வளவு குறைத்துக் கொண்டு ச‌ன்மானததை அனுப்பி வைக்கவும்."

kmr.krishnan said...

///"எதோ நாங்களும் எங்களால் இயன்ற ஒரு சிறிய நூல் எனது மகன் திருமணத்தில் இலவசமாக வெளி இட்டோம்..""" சைவ நெறி உடன் வாழ்வது""" ...the copy of the book is in your mail i.d. thank you sir.//////
கணபதி நடராஜன் சார்! என் பக்கமும் கொஞ்சம் காற்றைத் திருப்புங்கள். புத்தகத்தை அடியேனுக்கும் அனுப்பவும்.

kmrk1949@gmail.com

kmr.krishnan said...

///"கண்ணனுக்கு ஏற்ற " லக்ஷ்மி", யார் என்று தான் முடிவு எடுக்க முடியாமல் பெரியவர்கள் உள்ளார்கள்"///

கண்ணனுக்கேற்ற லக்ஷ்மி/ராதை சீக்கிரம் வருவார்.எங்கள் வாழ்த்து உண்டு.

kmr.krishnan said...

///"சின்ன சின்ன துண்டாக கொத்தி [கொத்தும் போது மாஸ்டர் ஒரு ராக லயத்துடன் ] வாழை இலையல் கட்டி வீடு வந்து பிரிச்சி சாப்பிட்டால் அட!!
அட !!"///

நல்லா அனுபவித்துச் சொல்லியுள்ளீர்கள் கணபதி நடராஜன் சார்!இரவு நேரப் பேருந்தில் பயணம் செய்யும்போது அங்கெங்கே "டகு.. டகு.. டகு.. டக்கு.. டக்கு.. டக்கு.. டகு.. டகு.. டகு.."என்று கொத்திக்கொண்டு இருப்பார்கள். அது
ஏதோ அசைவம் என்று எண்ணிக் கொண்டு இருந்தேன்.இப்போதான், நீங்களும், வாத்தியாரும் சொல்லித்தான் தெரிகிறது அது சைவம் தான் என்று

Enn Pakkam said...

//வேண்டுமானால் கோவைக்கு ஒரு தடவை போய் பார்த்து விட்டு வருங்களேன்" என்று கூட மனைவி சொல்லி விட்டார்கள்.//
Neengal ellam ippo enge irukkenga KMRK Sir.

Thangalin thodarbu enn/ mugavari tharavum.

Enn Pakkam said...

//கோவைக்கு ஒரு தடவை போய் பார்த்து விட்டு வருங்களேன்" என்று கூட மனைவி சொல்லி விட்டார்கள்.//

KMR Sir, neenga ellorum engu irukkindreergal. Tharpoluthu Chennaiyil thaan irukkindreergala.

Enn Pakkam said...

//கண்ணனுக்கு ஏற்ற " லக்ஷ்மி", யார் என்று தான் முடிவு எடுக்க முடியாமல் பெரியவர்கள் உள்ளார்கள்.// kannan unga Lakshmi, "Kanna unai Tedugindren vaa" ena paadikonde ungalai saran adaivaal. :) Paarpo me.. eppadi varugindraargalendru.
Don't worry! Be HappY.

SP.VR. SUBBAIYA said...

/////kannan said...
வாத்தியார் ஐயா வணக்கம்,
திருமண தம்பதியருக்கு எம்முடைய மனம் மார்ந்த நல் வாழ்த்துகள் //////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////kannan said... ஐயா !
வகுப்பறைக்கு வருகை தரும் பெரியவர்கள்,
வாத்தியார்,
துணை வாத்தியார்,
பாசமலர் சகோதரி,
மண்ணின் வேந்தன்!
மைத்துனர் மைனர் வாழ்
முதல் சகல இரு பால் மாணவ மாணவியருக்கு கண்ணனின் அன்பான வேண்டுகோள்.
பள்ளிகூட விடுமுறை நாட்களில் நடைபெறும் கண்ணனின் கல்யாணத்திற்கு அனைவரும் வந்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும்.
ஆனால்'
கண்ணனுக்கு ஏற்ற " லக்ஷ்மி", யார் என்று தான் முடிவு எடுக்க முடியாமல் பெரியவர்கள் உள்ளார்கள்.////////

கண்ணனுக்கு ஏற்றவர் ராதைதானே? நீங்களே முடிவு செய்யுங்கள்.

SP.VR. SUBBAIYA said...

//////asdfgf said...
நான் உங்களின் வகுப்பறை மாணவன் சார், நிச்சயம் நீங்க சொல்லும் படி கேட்பேன். நன்றி. :)//////

கேட்டால் சரிதான்!

SP.VR. SUBBAIYA said...

/////hamaragana said...
அன்புடன் வணக்கம் Thiru KMRK...
சைவ கொத்து பரோட்டா ..பெரிய தோசை கல்லில் பெரிய வெங்காயம் சிறுது ஒரு தக்காளி நறுக்கியது பச்சை மிளகாய் சிறுது கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி அதில் பரோட்டாவை போட்டு கொத்து கரண்டியால் கொத்த வேண்டும் அத்துடன் சிறுது பரோட்டாவுக்கு தொட்டுகொள்ள கொடுக்கும் குருமா உற்றி சின்ன சின்ன துண்டாக கொத்தி [கொத்தும் பொது மாஸ்டர் ஒரு ராக லயத்துடன் ] வாழை இலையல் கட்டி வீடு வந்து பிரிச்சி சாப்பிட்டால் அட!! அட !! எனது மகன் திருமண முந்திய நாளில் இரவு நெருங்கிய உறவுகளுக்கு சாமி வச்சு கும்பிட அழைப்பு அப்போது போட்டது அனைவரும் ஹேய் என்னப்பா !!பிரமாதம் என்று பாராட்டினார்கள் [[எங்கள் வகையில் இது போன்ற இரவு டின்னர் கிடையாது.]]சிவாஜி கணேசன் ஒரு படத்தில் இதென்ன உண்டு களிக்கவா !!அல்லது கண்டு களிக்கவா .!. அது போல செட்டிநாட்டு கல்யாணம் இருக்கும் 1980 இல் ஒரு நண்பன் திருமணத்தில் சாப்பிடிருகிறேன்... ஆனாலும் செட்டிநாட்டு சமையலுக்கு இணை வாராது !!.../////

உங்களின் விளக்கத்திற்கு நன்றி! ஒரிஜினலாக கொத்து பரோட்டா செட்டி நாட்டு உணவல்ல. இடைச் சொருகல் அது!

SP.VR. SUBBAIYA said...

////kmr.krishnan said...
///"KMRK சார், எது சொன்னாலும் தவறாகவே முடிகின்றது. நிலைமை சீர்கெட்டுவிட்டது. நாங்களெல்லாம் காமண்டினா வாத்தியார் சாமி பதிலுரை அளிப்பதை நிறுத்திவிடுவார்கள். உங்களுக்கு கதை தெரியுமா."///
அதென்ன புதுக்கதை?‍சொன்னாத்தானே தெரியும்.!?
முதல் முதலாக பின்னூட்டம் எழுதியுள்ளீர்கள் என்று தோன்றுகிறது.முதல் வருகைக்கு வாழ்த்துச்சொல்லவேண்டும் என்று பார்த்தால் அடி மடியில் கையைப் போடுகிறீர்களே!
" என்ன குற்றம் கண்டீர்? சொற் குற்றமா? பொருட் குற்றமா? எவ்வள‌வு குற்றம் உள்ளதோ அவ்வளவு குறைத்துக் கொண்டு ச‌ன்மானததை அனுப்பி வைக்கவும்."////

அவர் ஏதோ தெரியாமல் எழுதியிருக்கிறார். நீங்கள் சீரியசாகி விடாதீர்கள் ஸ்வாமி!

SP.VR. SUBBAIYA said...

////kmr.krishnan said...
///"எதோ நாங்களும் எங்களால் இயன்ற ஒரு சிறிய நூல் எனது மகன் திருமணத்தில் இலவசமாக வெளி இட்டோம்..""" சைவ நெறி உடன் வாழ்வது""" ...the copy of the book is in your mail i.d. thank you sir.//////
கணபதி நடராஜன் சார்! என் பக்கமும் கொஞ்சம் காற்றைத் திருப்புங்கள். புத்தகத்தை அடியேனுக்கும் அனுப்பவும்.
kmrk1949@gmail.com///////

அவர் எனக்கு அனுப்பியதில் தவறு உள்ளது. புத்தகத்தின் அட்டைப்படம் மட்டும் jpg format ல் வந்துள்ளது. புத்தகத்தின் உட்பக்கங்கள் வரவில்லை!

SP.VR. SUBBAIYA said...

////kmr.krishnan said...
///"கண்ணனுக்கு ஏற்ற " லக்ஷ்மி", யார் என்று தான் முடிவு எடுக்க முடியாமல் பெரியவர்கள் உள்ளார்கள்"///
கண்ணனுக்கேற்ற லக்ஷ்மி/ராதை சீக்கிரம் வருவார்.எங்கள் வாழ்த்து உண்டு.///////

ராதை வேறு லட்சுமி வேறா? இருவருமே கண்ணனின் அன்பிற்குப் பாத்திரமானவர்களே!

SP.VR. SUBBAIYA said...

////kmr.krishnan said...
///"சின்ன சின்ன துண்டாக கொத்தி [கொத்தும் போது மாஸ்டர் ஒரு ராக லயத்துடன் ] வாழை இலையல் கட்டி வீடு வந்து பிரிச்சி சாப்பிட்டால் அட!!
அட !!"///
நல்லா அனுபவித்துச் சொல்லியுள்ளீர்கள் கணபதி நடராஜன் சார்!இரவு நேரப் பேருந்தில் பயணம் செய்யும்போது அங்கெங்கே "டகு.. டகு.. டகு.. டக்கு.. டக்கு.. டக்கு.. டகு.. டகு.. டகு.."என்று கொத்திக்கொண்டு இருப்பார்கள். அது
ஏதோ அசைவம் என்று எண்ணிக் கொண்டு இருந்தேன்.இப்போதான், நீங்களும், வாத்தியாரும் சொல்லித்தான் தெரிகிறது அது சைவம் தான் என்று//////

இல்லை. அதில் முட்டையைக் கலந்து அசைவம் ஆக்கி உண்பவர்களும் உண்டு!

காவேரி கணேஷ் said...

ரொம்ப சந்தோசம்.

வாழ்த்துக்கள் தமிழ்வாணன் குடும்பத்தினர்க்கு.

SP.VR. SUBBAIYA said...

////Enn Pakkam said...
//வேண்டுமானால் கோவைக்கு ஒரு தடவை போய் பார்த்து விட்டு வருங்களேன்" என்று கூட மனைவி சொல்லி விட்டார்கள்.//
Neengal ellam ippo enge irukkenga KMRK Sir.
Thangalin thodarbu enn/ mugavari tharavum./////

நீங்கள் யார்? எங்கே இருக்கிறீர்கள்? உங்களின் உண்மைப் பெயர் என்ன?உங்கள் தொழில் என்ன? உங்களின் வயதென்ன? எத்தனை மாதங்களாக வகுப்பறைக்கு வந்து போகின்றீர்கள்? வகுப்பறையின் உறுப்பினரா நீங்கள்?
உங்களுடைய முகவரி என்ன? அதையெல்லாம் முதலில் சொல்லுங்கள். பிறகு அவருடைய முகவரி உங்களுக்குக் கிடைக்கும்!

B2B-visuiyer said...

அருமை..
தகவல்கள்..
பரிசுகள் பற்றிய செய்தி
விருந்து பட்டியல்..
அத்துடன்..
கொத்து பரோட்டா பற்றிய சமையல் குறிப்புகள்..

அது சரி..
இப்போ முட்டையை சைவத்திலே சேர்த்து விட்டார்களே..

KMRKயும் வாத்தியாரும் எப்படி..?
என்னை சேர்த்துவிடாதீர்கள்..
நான் சைவமும் இல்லே.. அசைவமும் இல்லே..

Naveen said...

Kalaivanikku Kalvi Illai - enna kodumai Ayya.... anaal Kaapal karpagambal - yaaro oruvar roobathil vandhu vaazhvu koduthal........

சூரிபாபா said...

Last time Manimekalai Press in Chennai T.Nagar , used to have huge collections, of late last year think are going worst, i was surprised in last visit - Last year month of Jun, They have very less collections most books i seek was not available Including Panchakkam. People reading pattern going down, these Age old Press are facing deep crisis.

hamaragana said...

அன்புடன் வணக்கம்"""அவர் எனக்கு அனுப்பியதில் தவறு உள்ளது. புத்தகத்தின் அட்டைப்படம் மட்டும் jpg format ல் வந்துள்ளது. புத்தக
நான் புஸ்தகத்தின் அட்டை மட்டும்தான் அனுபினேன் பக்கங்கள் மொத்தம் 27. அதனையும் ஸ்கான் செய்து அனுப்ப இயலாது பதிலாக புஸ்தகதைஈ தபாலில் அனுப்பி விடலாம் விலாசம் இருந்தால் அனுப்பி வைக்கிறேன். நன்றித்தின் உட்பக்கங்கள் வரவில்லை""

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஐயா! வணக்கம்! லேனா ஐயா, ரவி ஐயா ஆகியோரை அந்தமான் வந்திருந்த போது சந்தித்திருக்கிறேன். ரவி ஐயா அவர்களிடம் கம்பராமாயணம் மொத்தத் தொகுப்பும், மற்ற புத்தகங்களும் வாங்கினேன். லேனா ஐயா அவர்களை வானொலிக்கென நேர்முகம் கண்டோம். நானும் செட்டிநாட்டுப்பகுதியை(கண்டனூர்) சேர்ந்தவளாதலால் ஒரு ஈர்ப்புடன் உரையாடினேன்.