மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

14.2.11

Astrology உனக்கு நான், எனக்கு நீ!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology உனக்கு நான், எனக்கு நீ!

மனிதனுக்குப் பலன்களை அள்ளித் தருவது தசா புத்திகள்தான். அதுபோல தீமை செய்யும் கிரகங்களின் தசா புத்திகள், கீழே தள்ளி விடுவதோடு மிதித்துவிட்டும் போகும்.

ஜாதகத்தில் எவ்வளவு நன்மையான கிரகங்கள், கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும், அதனதன் பலன்கள் அவற்றின் தசா புத்திகளில்தான் கிடைக்கும். பொறுத்திருக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.

ஜாதகத்தில் லாபாதிபதி (11ஆம் இடத்தின் அதிபதி) வலிமையாக இருந்தாலும், அவர் தன்னுடைய தசா புத்திகளில்தான் பலனைத் தருவார்.

இரண்டு கிரகங்கள் சேர்ந்து ஒரு தசா/புத்தியை நகர்த்தும்போது, இரண்டும் நட்புக் கிரகங்களாகவோ அல்லது இரண்டுமே சுபக்கிரகங்களாக இருந்தால், அவற்றின் தசா/புத்திகள் அதிக நன்மை உடையதாக இருக்கும்.

உதாரணத்திற்கு, புதனும் சுக்கிரனும் நட்புக் கிரகங்கள். ஆகவே புதன் திசையில் சுக்கிர புத்தி நடக்கும் காலம் நன்மைகள் உடையதாக இருக்கும். அதுபோல சுக்கிர திசையில் புதன் புத்தியும் நன்மை உடையதாக இருக்கும்.

நன்மைகள் எந்த அளவு என்ற கேள்வி எழும். ஜாதகத்தில் அவைகள் இரண்டும் 1/12 நிலையில் அல்லது 6/8 நிலையில் இல்லாமல் இருக்க வேண்டும். மீறி இருந்தால், கிடைக்கும் நன்மைகள் முழுமையாக இருக்காது.

சிந்தினது சிதறியதுபோக பாதிதான் கிடைக்கும். அதையும் மனதில் கொள்க!

அந்த இரண்டு கிரகங்களின் தசா புத்திக்கான பாடலை இன்று பதிவிட்டிருக்கிறேன். எளிமையான தமிழில் இருப்பதால் விளக்கம் எழுதவில்லை. அப்படியே கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக!

“பாரப்பாபுதன் திசையில் சுக்கிரபுத்தி
பாங்குள்ள மாதமது முப்பத்தினாலு
சேரப்பா அதன்பலனை செப்பக்கேளு
தேவதையால் தர்க்கமது தீதாம்பாரு
ஆரப்பா மனைவியுடன் புத்திரனும்
அனுதினமும் வாழ்ந்திருப்பான் அலங்காரமுடன்
காரப்பா கனகமது சம்பத்துண்டாம்
கனமான ராசாவால் கடாட்சமுண்டாங் கேளே!”

“ஆமென்ற சுக்கிரதிசை புதனார் புத்தி
அன்புடைய மாதமது முப்பத்தினாலு
நாமென்றதின் பலனை நவிலக்கேளு
நாடுநகர் உன்வசமே ஆகும்பாரு
தான்ர்ன்ற தன்னரசு ஆண்டுநீயும்
தரணியில் நீயுமொரு தவசியாவாய்
போமென்ற பொன்முதலும் பூமியாண்டு
பொங்கமுடன் தானிருந்து அரசு ஆள்வாய்!”

(தொடரும்)
+++++++++++++++++++++++++++++++++++
முக்கியமான தகவல்: மின்னஞ்சலில் வந்தது. அப்படியே கொடுத்துள்ளேன்:

Indian Railway in collaboration with Google is now providing a 10 digit mobile number. Just SMS your PNR number on this mobile number and instantaneously you will get your ticket's current status along with all other journey related details.

The number is 9773300000. No need to prefix 0 or +91. (Save this number in your cell)
Note: While sending PNR, No need to give any symbols. Just send the 10 digit PNR Number blankly. Best of all, you don't pay a premium charge for any of this, just the price of a standard SMS.
Information given by our classroom student.Mr.V.Prasanna Kumar. Thanks to him!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று காதலர் தினம்! வகுப்பறைக்கு வரும் காதலர்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். 

 வாத்தியார் காதலுக்கு எதிரியல்ல! வாத்தியார் காலத்தில் எல்லாம் காதலுக்கு வழியில்லாமல் போய்விட்டது. அதில் வருத்தமும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை.

இன்று காதலுக்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன. யாராவது சிக்கினால் காதலிப்போம் என்று காதலிக்காதீர்கள். தகுதியானவரைத் தேர்ந்தெடுத்துக் காதலியுங்கள். பெற்றோரிடம் அனுமதி பெற்றுத் திருமணம்  செய்து கொள்ளுங்கள். உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் அனுமதி முக்கியம். அனுமதி கிடைக்கவில்லை என்றால் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி அனுமதியைப் பெறுங்கள்.

காதலில் ஈடுபட்டு, உயிருக்கு உயிராக காதலிக்கும்போது, ஜாதகத்தைப் பார்த்து, காதல் நிறைவேறுமா? இவரையே திருமணம் செய்துகொள்ளலாமா? என்று மட்டும் கேட்டு எழுதாதீர்கள்.

காதல் என்ன ரயில் பயணமா? வேண்டாம் என்றால், பாதியில், நிற்கும் ஸ்டேசனில் இறங்கிக்கொள்வதற்கு? காதல் புனிதமானது. ஒரு நாள்,
ஒரு வாரம் அல்லது ஒருவருடம் வாழ்ந்தாலும் போதும். காதலித்த
வரையே மணந்து கொள்ளுங்கள். நடப்பது நடக்கட்டும், ஆண்டவன் விட்டவழி என்று  தேர்ந்தெடுத்த வழியில் துணிந்து  செல்லுங்கள்

பாதை வகுத்தபின்னே பயந்தென்ன லாபம்
பயணம் நடத்திவிடு முடிந்திடும் பாபம்!

----கவியரசர் கண்ணதாசன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

19 comments:

Alasiam G said...

வாத்தியாருக்கும்... வகுப்பறை சக மாணாக்கர்களுக்கும் எனது அன்பர்தின வாழ்த்துக்கள்.

profit500 said...

Leave it once it’ll will be left forever,
Get it once it’ll be yours forever,
It’s nothing but LOVE,
LOVE only once and you’ll be loved forever.

happy valentine day

profit500 said...

The 1998 Coimbatore bombings occurred on Saturday, February 14 1998, in the city of Coimbatore, Tamil Nadu, India. 46 persons - 35 men, 10 women and one child - were killed and over 200 injured in 13 bomb attacks in 11 places

தீவிரவாதம் ஒழியட்டும் ! ஆத்மாக்கள் சாந்தி அடையட்டும்

V Dhakshanamoorthy said...

கேந்திர திரிகோணங்களில் இருக்கும் கிரகங்கள் மற்றும் லாபாதிபதி
ஆகியவைகள் வலிமை யுடன் இருந்தாலும் அவரவர் தசா புத்தி யில் தான் பலன் கிடைக்கும்.
அவர்கள் சுப கிரகமாகவோ நட்பு கிரகங்களாகவோ இருப்பின் நன்மைகள்
கூடுதலாகக் கிடைக்கும்.
//////////மிகவும் முக்கியமான, அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய
தகவலகளை அளித்துள்ளமைக்கு நன்றி!!

dorairaj said...

வணக்கம் வாத்தியாரே,
PNR தகவலுக்கு நன்றி
சுக்கிரன் திசை புதன் புத்தி பாடல் எளிமை
இப்பொழுது எல்லாம் உங்கள் பதிவுகள் சுருக்கமாக உள்ளTHU

vanmathy said...

Hi master and students,

I request a admission in your class room Please. Hpppy Valentine day.

Thank You.

Thanjavooraan said...

காதல் என்பதன் உண்மையான பொருளை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்வது நல்லது. காதல் ஆண், பெண் இருபாலருக்கிடையே மட்டுமல்ல, அனைத்து வகையினரிடமும் தோன்றும் உள்ளத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. ஒரு சின்னஞ்சிறு குழந்தையிடம் நமக்கு ஏற்படுவதன் பெயர் பாசம், பெரியோரிடம் மரியாதை, சமவயதுடையோரிடம் அன்பு, ஆண் பெண் வசப்படும் போது அது காதல். அந்த உணர்வு புனிதமானது. அந்தரங்கமானது. அதைப் பொதுவிடத்தில் அணைத்துக்கொள்வது, முத்தமிடுவது, ஒருவர் மடியில் ஒருவர் படுத்திருப்பது, பிறர் காண்கிறார்களே என்ற கூச்சமில்லாமல் இருப்பது இவைகளுக்கு "காதலர் தினம்" என்ற பெயரில் ஊக்கமளிப்பது இவையெல்லாம் தவறானவை. இளம் தலைமுறையினரை தடம் மாறச் செய்பவை. "வாலன்டைன்" எனும் சாமியாரின் பெயரால் செய்யப்படும் இந்த அநாகரிகம், இந்திய நாகரிகத்துக்குப் புறம்பானது. காதலுக்கும், காமத்துக்கும் வேறுபடுத்திப் பார்க்கும் பக்குவம் வந்தவர்களுக்குப் பிரச்சினை கிடையாது. ஆங்கிலத்தில் Infatuation எனும் சொல்லுக்குப் பொருள் புரிந்தால் காதலையும், கவர்ச்சியையும் வேறுபடுத்திப் பார்க்க முடியும். இது ஏதோ ஒரு கிழவனின் புலம்பல் என்று நினைத்தால் இதனை மறந்து விடலாம். அல்லது வாழ்வின் உண்மை, அனுபவத்தின் வெளிப்பாடு என்று உணர்ந்தால் ஏற்றுக் கொள்ளலாம். காதலர் தினம் என்பது ஒரு ஏற்கமுடியாத ஏமாற்று வேலை. முடிவை உங்களிடம் விட்டுவிடுகிறேன். நன்றி.

SP.VR. SUBBAIYA said...

Alasiam G said...
வாத்தியாருக்கும்... வகுப்பறை சக மாணாக்கர்களுக்கும் எனது அன்பர்தின வாழ்த்துக்கள்.//////

அன்பர் தின வாழ்த்துக்களைச் சொன்ன உங்கள் அன்பு உள்ளத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

////profit500 said...
Leave it once it’ll will be left forever,
Get it once it’ll be yours forever,
It’s nothing but LOVE,
LOVE only once and you’ll be loved forever.
happy valentine day////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///profit500 said...
The 1998 Coimbatore bombings occurred on Saturday, February 14 1998, in the city of Coimbatore, Tamil Nadu, India. 46 persons - 35 men, 10 women and one child - were killed and over 200 injured in 13 bomb attacks in 11 places
தீவிரவாதம் ஒழியட்டும் ! ஆத்மாக்கள் சாந்தி அடையட்டும்////

அந்த வடு கோவையில் உள்ள அனைத்து உள்ளங்களிலும் இன்றும் இருக்கிறது. என்றும் இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

V Dhakshanamoorthy said...
கேந்திர திரிகோணங்களில் இருக்கும் கிரகங்கள் மற்றும் லாபாதிபதி
ஆகியவைகள் வலிமையுடன் இருந்தாலும் அவரவர் தசாபுத்தியில்தான் பலன் கிடைக்கும்.
அவர்கள் சுப கிரகமாகவோ நட்பு கிரகங்களாகவோ இருப்பின் நன்மைகள்
கூடுதலாகக் கிடைக்கும்.
//////////மிகவும் முக்கியமான, அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய
தகவலகளை அளித்துள்ளமைக்கு நன்றி!!/////

நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

//////dorairaj said...
வணக்கம் வாத்தியாரே,
PNR தகவலுக்கு நன்றி
சுக்கிரன் திசை புதன் புத்தி பாடல் எளிமை
இப்பொழுது எல்லாம் உங்கள் பதிவுகள் சுருக்கமாக உள்ளது!/////

சுவையாக உள்ளதா? செய்திகளுடன் உள்ளதா? அதுதான் முக்கியம்!

SP.VR. SUBBAIYA said...

/////vanmathy said...
Hi master and students,
I request a admission in your class room Please. Hpppy Valentine day.
Thank You.//////

இது இனிய வகுப்பு. இணைய வகுப்பு. கதவு, காவல், நுழைவுச்சீட்டு இல்லாத வகுப்பறை. யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம்.

SP.VR. SUBBAIYA said...

/////Thanjavooraan said...
காதல் என்பதன் உண்மையான பொருளை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்வது நல்லது. காதல் ஆண், பெண் இருபாலருக்கிடையே மட்டுமல்ல, அனைத்து வகையினரிடமும் தோன்றும் உள்ளத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. ஒரு சின்னஞ்சிறு குழந்தையிடம் நமக்கு ஏற்படுவதன் பெயர் பாசம், பெரியோரிடம் மரியாதை, சமவயதுடையோரிடம் அன்பு, ஆண் பெண் வசப்படும் போது அது காதல். அந்த உணர்வு புனிதமானது. அந்தரங்கமானது. அதைப் பொதுவிடத்தில் அணைத்துக்கொள்வது, முத்தமிடுவது, ஒருவர் மடியில் ஒருவர் படுத்திருப்பது, பிறர் காண்கிறார்களே என்ற கூச்சமில்லாமல் இருப்பது இவைகளுக்கு "காதலர் தினம்" என்ற பெயரில் ஊக்கமளிப்பது இவையெல்லாம் தவறானவை. இளம் தலைமுறையினரை தடம் மாறச் செய்பவை. "வாலன்டைன்" எனும் சாமியாரின் பெயரால் செய்யப்படும் இந்த அநாகரிகம், இந்திய நாகரிகத்துக்குப் புறம்பானது. காதலுக்கும், காமத்துக்கும் வேறுபடுத்திப் பார்க்கும் பக்குவம் வந்தவர்களுக்குப் பிரச்சினை கிடையாது. ஆங்கிலத்தில் Infatuation எனும் சொல்லுக்குப் பொருள் புரிந்தால் காதலையும், கவர்ச்சியையும் வேறுபடுத்திப் பார்க்க முடியும். இது ஏதோ ஒரு கிழவனின் புலம்பல் என்று நினைத்தால் இதனை மறந்து விடலாம். அல்லது வாழ்வின் உண்மை, அனுபவத்தின் வெளிப்பாடு என்று உணர்ந்தால் ஏற்றுக் கொள்ளலாம். காதலர் தினம் என்பது ஒரு ஏற்கமுடியாத ஏமாற்று வேலை. முடிவை உங்களிடம் விட்டுவிடுகிறேன். நன்றி.//////

நீங்கள் உங்கள் அனுபவத்தைச் சொல்கிறீர்கள். அது புலம்பல் அல்ல!
கேட்டுக்கொள்பவர்கள் கேட்டுக்கொள்ளட்டும். கேட்க விரும்பாதவர்கள், கேட்காமலேயே போகட்டும்!
உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

இராஜராஜேஸ்வரி said...

பாதை வகுத்தபின்னே பயந்தென்ன லாபம்
பயணம் நடத்திவிடு முடிந்திடும் பாபம்!
----கவியரசர் கண்ணதாசன்
அனுபவ மொழிகளல்லவா?
அருமை!!

Ravichandran said...

Ur post is good about combination(planet or lover) effects...

SP.VR. SUBBAIYA said...

/////இராஜராஜேஸ்வரி said...
பாதை வகுத்தபின்னே பயந்தென்ன லாபம்
பயணம் நடத்திவிடு முடிந்திடும் பாபம்!
----கவியரசர் கண்ணதாசன்
அனுபவ மொழிகளல்லவா?
அருமை!!/////

உங்களின் பாராட்டு கவியரசரையே சேரும். நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Ravichandran said...
Ur post is good about combination(planet or lover) effects...//////

இருந்தால் சரிதான். நன்றி நண்பரே!

kmr.krishnan said...

இந்த வருடம் 14 பிப்ரவரி அன்று என் தாயாரின் நினைவு தினம் வந்துவிட்டது.
அதற்காகக் கோவை வந்து விட்டேன். என் மனைவியார் வீடு காலி செய்யும் வேலையால் தஞ்சையிலேயெ தங்கிவிட்டார்கள்.நான் இல்லாத சமயம் வீட்டுக்கு
ஒரு தொலைபேசி அழைப்பு.பெண்குரலில் பேசி இருக்கிறது.யார் என்று சொல்லிக்கொள்ளாமல் "சார் இல்லையா?அடடா!அவருக்குக் காதலர் தின வாழ்த்துச் சொல்லத்தான் கூப்பிட்டேன்" என்று சொல்லிவிட்டு வைத்து
விட்டார்கள்.நான் தஞ்சை திரும்பிய பின்னர் வீட்டில் நடந்ததைச் சொல்லவும் வேண்டுமா