மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

27.6.09

கீழே நீ தோண்டு; மேலே நான் தோண்டுகிறேன்!

கீழே நீ தோண்டு; மேலே நான் தோண்டுகிறேன்!

மனிதன் ஆசைகள் மிக்கவன். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை
என்று ஏதாவது ஒரு ஆசையில் முழுகிக் கிடக்கின்றான். அவ்வாறில்லாத
மனிதனைப் பார்ப்பது அபூர்வம்.

ஆசைப்படாதே; ஆசைதான் உன்னுடைய துன்பத்திற்கு எல்லாம் காரணம்
என்கிறது மெய்ஞானம்,

ஆசைப்படுவதை நிறுத்தாதே!; ஆசைப்படுவதை நிறுத்தினால் நீ முடங்கிப்
போய்விடுவாய். உன் வளர்ச்சி நின்று போய்விடும் (your prosperiy ends there!)
என்கிறது விஞ்ஞானம்.

எது உண்மை? எதைக் கடைப்பிடிப்பது என்பது தெரியாமல் பாமர மனிதன் அல்லாடுகிறான்!

விஞ்ஞானம் எல்லாவற்றையும் தோண்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சக
மனிதனையும் தோண்டிப்பார்க்கச் சொல்கிறது. மெய்ஞானத்தை எல்லாம்
குப்பையில் போட்டு விட்டு என்னுடன் வா என்கிறது.

மந்திரமாவது, மண்ணாங்கட்டியாவது என்கிறது?

அச்சேறிய குப்பைகள் எல்லாம் உண்மையானவை போன்று தோற்றமளிக்கும்,
நம்பாதே என்கிறது!

திருஞானசம்பந்தரும், அருணகிரியாரும் உணர்ந்து எழுதியவற்றை எல்லாம்
குப்பை என்கிறது

வராஹிமிஹிரரும், பராசுரரும் எழுதி வைத்த ஜோதிடக்கலைக்கு நிருபணம்
கேட்கிறது.

இறைவனை அடையாளம் காட்டு என்கிறது?

அணுகுண்டைத் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை பல நாடுகளுக்குக் கொடுத்திருக்கிறது.

ஆர்.டி.எக்ஸ் வெண்டிகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இளைஞர்களுக்குக்
கற்றுக் கொடுத்திருக்கிறது

லட்சக்கணக்கான பாட்டில்கள் மது தயாரிக்கும் தொழில் நுட்பத்தைச் சில தொழில் அதிபர்களுக்குக் சொல்லிக்கொடுத்திருக்கிறது

இன்றையத் தேதியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் சரக்கடித்துவிட்டு சந்தோஷத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் மாயை (illusion) என்பதை மனிதன் எப்போது உணர்வான்?

உணர்வான் என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை!

சிலர் உணரலாம். சிலர் உணராமல் போகலாம்.

அதனால் யாருக்கு நஷ்டம்?

யாருக்கும் நஷ்டமில்லை!

மனிதன் கடவுளின் துகழ்களைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

ஆனால் காலதேவனோ மனிதனின் சாம்பலை வேண்டிய மட்டும் பார்த்து விட்டான். இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

மனிதன் கீழே தோண்டிக்கொண்டிருக்கிறான். காலதேவன் மேலே தோண்டிக் கொண்டிருக்கிறான்.

காலதேவன் சமீபத்தில் போட்டபோடுதான். உலகப் பொருளாதாரச் சீரழிவு.
(Global economical & financial crisis.) அது சரியாக இன்னும் சில ஆண்டுகள்
ஆகும்.

அடுத்ததாக காலதேவன் எதைத் தோண்டப்போகிறான் என்பதைப்
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

வாழ்க வளமுடன்!

32 comments:

Krushna Cumaar said...

"அனைத்துக்கும் ஆசைப்படு" என்பதில்தான் எனக்கும் உடன்பாடு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஆசை பேராசையாக மாறும்போதுதான் பிரச்சனை வருகிறது. நன்றி

bala said...

Dear sir,(YAARAVATHU SOLLUNGAL)

ill ask my single question here itself..............

mesha lagnam...chevvai(exalted) in 10th place........sani(pagai) in 8th place(it is chevvai home).....

they are parivarthanai........10 and 8 are good parivarthana or bad........this is my QUESTION???

Thats all...

Emmanuel Arul Gobinath said...

அய்யாவுக்கு இன்று என்ன ஆச்சு இரண்டு பதிவுகளை போட்டு இருக்கிறார்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆஹா..

நியாயமான பேச்சுதான் வாத்தியாரே..!

மனிதன் எல்லாம் தன்னால் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்..

அதனால்தான் அவனால் படைக்குப்படுபவை எல்லாம் பிறிதொரு நாள் வேறொரு மனிதனால் மீறப்படுகிறது.. உடைக்கப்படுகிறது..

காலத்தை உணர்ந்து கொள்ள மனித ஜாதியால் முடியாது போலிருக்கிறது..!

bala said...

YAARAVATHU SOLLUNGAL
YAARAVATHU SOLLUNGAL

YAARAVATHU SOLLUNGAL

YAARAVATHU SOLLUNGAL

YAARAVATHU SOLLUNGAL

YAARAVATHU SOLLUNGAL

kmr.krishnan said...

Nan solkiren bala! en intha alaral?
Parivarthanai of Mars and Saturn is good only.The subject is fit to be an IAS officer.He will prove to be a great administrator. 8th place sani will improve the longevity. Also 8th place is panaparam. If the 10th lord fills a panaparam and being a pagaivan hidden in 8th,money from profession will be abundant.

kmr.krishnan.
http://parppu.blogspot.com

வேலன். said...

என்ன ஆச்சு ஆசிரியருக்கு:.

ஒரெ நாளில் இரண்டு பதிவுகள்.அந்த இரண்டுபதிவுகளிலும் தத்துவங்கள்?

சூப்பர்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

bala said...

KMR.....Krishnan( please answer for this only SIR)

Miga Nanri...

Thank u sir...........

my doubt cleared but saturn is seeing mars(3rd aspect)......

in chevvai desai i was failed..8th std 2times i studied....

(MY QUESTION is due to saturn aspect i failed uh???)

Arulkumar Rajaraman said...

Dear Sir

Asaiyum thunbamum undan pirava Sagothargal...Eppoludhum Irai Unarvu than meiyanadhu.. Matrathellam poiyanadhu..

Asai Veru --- Latchiyum veru (Kolgai Veru)... Adhai purindhu Kondal Valkayil eppoludhum inbam...

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...

As usual "Pinneeteenga"!!!

அமர பாரதி said...

வாத்தியாரையா, என்ன ஆச்சு? ஒரே தத்துவமா இருக்கே?

ananth said...

ஆசை படக் கூடாது என்று நினைப்பதும் ஒரு ஆசைதான். ஆசை இருக்கலாம். அது பேராசையாக மாறக் கூடாது. இது என் கருத்து. நன்றாக வாழ வேண்டும், பிறர் மதிக்க வாழ வேண்டும், இப்படி வரிசையாக பலருக்கு பல ஆசைகள். அது இல்லாவிட்டால் அவன் உயிருள்ள மனிதனாக இருக்க முடியாது.

Bala அவர்களே தங்கள் கேள்விக்கு அஷ்டவர்க பரல் பார்க்காமல் பலன் சொன்னால் அது தவறாகி விடும்.

bala said...

Ok sir.......(Ananth....)

Astavarga paral enaku paarka theriyaathu.........

Yen birth detail ithu somebody tell pls.......

12.7.1986////sivagangai district///
12.58AM////////

Therinthavargal Uthavungal

[[[[my doubt cleared but saturn is seeing mars(3rd aspect)......

in chevvai desai i was failed..8th std 2times i studied....

(MY QUESTION is due to saturn aspect i failed uh???]]]]]]

bala said...

Hello freinds............

I forgot to tell 1 important

Mars is exalted(lagnathipathy)

saravanan said...

வாத்தியார் அவர்களுக்கு,

என்னுடைய அச்டவர்க பரல்கள் படி
12 ஆம் வீடு - 36 ( மிகவும் அதிகம் மற்றவைகளை விட), 2 ஆம் வீடு 23 பரல்கள், 9 ஆம் வீடு 21 பரல்கள்.( இவை 2 ம் மிகவும் குறைவானவை) .

என் நிதி நிலைமை பிட்சை பாத்திரம் அளவிற்கு மிகவும் மோசமாக இருக்கிறதா?

SP.VR. SUBBIAH said...

/////Blogger Krushna Cumaar said...
"அனைத்துக்கும் ஆசைப்படு" என்பதில்தான் எனக்கும் உடன்பாடு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஆசை பேராசையாக மாறும்போதுதான் பிரச்சனை வருகிறது. நன்றி/////

அனைத்திற்கும் ஆசைப்படுவது எப்படி நியாயமாகும்?
நியாமான ஆசைகள் மட்டுமே நன்மை பயக்கும்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger bala said...
Dear sir,(YAARAVATHU SOLLUNGAL)
ill ask my single question here itself..............
mesha lagnam...chevvai(exalted) in 10th place........sani(pagai) in 8th place(it is chevvai ome).....
they are parivarthanai........10 and 8 are good parivarthana or bad........this is my QUESTION???
Thats all.../////

ஏனிந்த குழப்பம்? பாடங்களை முழுமையாகப் படிக்காததினால் ஏற்படும் குழப்பங்கள் இவை!
மேஷ செவ்வாய் மகரவீட்டில் (10ல்) உச்சம். அதுவே நன்மையானது! அதோடு அந்த இடத்தின் அதிபதியுடன் பரிவர்த்தனைவேறு. மேலும் நன்மையானது.

SP.VR. SUBBIAH said...

//////Blogger Emmanuel Arul Gobinath said...
அய்யாவுக்கு இன்று என்ன ஆச்சு இரண்டு பதிவுகளை போட்டு இருக்கிறார்../////

இமானுவேலிற்க்காக ஒரு பதிவு, கோபிநாத்திற்காக ஒரு பதிவு!

SP.VR. SUBBIAH said...

/////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஆஹா..
நியாயமான பேச்சுதான் வாத்தியாரே..!
மனிதன் எல்லாம் தன்னால் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்..
அதனால்தான் அவனால் படைக்குப்படுபவை எல்லாம் பிறிதொரு நாள் வேறொரு மனிதனால் மீறப்படுகிறது.. உடைக்கப்படுகிறது..
காலத்தை உணர்ந்து கொள்ள மனித ஜாதியால் முடியாது போலிருக்கிறது..!//////

ஆமாம் தமிழரே! 99.9% மனிதர்கள் உணரமாட்டர்கள். அதுதான் சோகம்!

SP.VR. SUBBIAH said...

Blogger bala said...
YAARAVATHU SOLLUNGAL
YAARAVATHU SOLLUNGAL
YAARAVATHU SOLLUNGAL
YAARAVATHU SOLLUNGAL
YAARAVATHU SOLLUNGAL
YAARAVATHU SOLLUNGAL

சொல்லிவிட்டேன்! சொல்லிவிட்டேன்! சொல்லிவிட்டேன்!

SP.VR. SUBBIAH said...

////Blogger kmr.krishnan said...
Nan solkiren bala! en intha alaral?
Parivarthanai of Mars and Saturn is good only.The subject is fit to be an IAS officer.He will prove to be a great administrator. 8th place sani will improve the longevity. Also 8th place is panaparam. If the 10th lord fills a panaparam and being a pagaivan hidden in 8th,money from profession will be abundant.
kmr.krishnan.
http://parppu.blogspot.com/////

Also IPS or Military Service!
Thanks for your reply my dear friend!

SP.VR. SUBBIAH said...

/////Blogger வேலன். said...
என்ன ஆச்சு ஆசிரியருக்கு:.
ஒரெ நாளில் இரண்டு பதிவுகள்.அந்த இரண்டுபதிவுகளிலும் தத்துவங்கள்?
சூப்பர்...
வாழ்க வளமுடன்,
வேலன்.////

எல்லாம் வேலன் என்னும் பெயருக்காகத்தான்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger bala said...
KMR.....Krishnan( please answer for this only SIR)
Miga Nanri...
Thank u sir...........
my doubt cleared but saturn is seeing mars(3rd aspect)......
in chevvai desai i was failed..8th std 2times i studied....
(MY QUESTION is due to saturn aspect i failed uh???)//////

என்ன புத்தியில்?

SP.VR. SUBBIAH said...

/////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Asaiyum thunbamum undan pirava Sagothargal...Eppoludhum Irai Unarvu than meiyanadhu.. Matrathellam poiyanadhu..
Asai Veru --- Latchiyum veru (Kolgai Veru)... Adhai purindhu Kondal Valkayil eppoludhum inbam...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
As usual "Pinneeteenga"!!!////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Blogger அமர பாரதி said...
வாத்தியாரையா, என்ன ஆச்சு? ஒரே தத்துவமா இருக்கே?//////

அப்பப்ப கொஞ்சம் மனதை டிரிம் செய்து கொள்ள!
தலைவாரிக் கொள்வதைப்போல!

SP.VR. SUBBIAH said...

/////Blogger ananth said...
ஆசை படக் கூடாது என்று நினைப்பதும் ஒரு ஆசைதான். ஆசை இருக்கலாம். அது பேராசையாக மாறக் கூடாது. இது என் கருத்து. நன்றாக வாழ வேண்டும், பிறர் மதிக்க வாழ வேண்டும், இப்படி வரிசையாக பலருக்கு பல ஆசைகள். அது இல்லாவிட்டால் அவன் உயிருள்ள மனிதனாக இருக்க முடியாது.
Bala அவர்களே தங்கள் கேள்விக்கு அஷ்டவர்க பரல் பார்க்காமல் பலன் சொன்னால் அது தவறாகி விடும்.//////

ஆமாம் அதுவும் உண்மை. சுய வர்க்கத்தில் பரல் குறைவு என்றால், உச்சம் பெற்றும் பலன் இல்லாமல் போய்விடும்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger bala said...
Ok sir.......(Ananth....)
Astavarga paral enaku paarka theriyaathu.........
Yen birth detail ithu somebody tell pls.......
12.7.1986////sivagangai district///
12.58AM////////
Therinthavargal Uthavungal
[[[[my doubt cleared but saturn is seeing mars(3rd aspect)......
in chevvai desai i was failed..8th std 2times i studied....
(MY QUESTION is due to saturn aspect i failed uh???]]]]]]

பாடங்களை முழுமையாகப் படிக்காததினால் ஏற்படும் குழப்பங்கள் இவை!
பழைய பாடங்களை எல்லாம் முதலில் படியுங்கள். தானாகத் தெரியவரும்!

SP.VR. SUBBIAH said...

////Blogger bala said...
Hello freinds............
I forgot to tell 1 important
Mars is exalted(lagnathipathy)////

அதைத் தெரிந்து கொள்ள இவ்வளவு நேரம் பிடித்திருக்கிறது.
பாடங்களை முறையாகப் படித்திருந்தால் அது எப்போதோ கவனத்திற்கு வந்திருக்கும்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger saravanan said...
வாத்தியார் அவர்களுக்கு,
என்னுடைய அச்டவர்க பரல்கள் படி
12 ஆம் வீடு - 36 ( மிகவும் அதிகம் மற்றவைகளை விட), 2 ஆம் வீடு 23 பரல்கள், 9 ஆம் வீடு 21 பரல்கள்.( இவை 2 ம் மிகவும் குறைவானவை) .
என் நிதி நிலைமை பிட்சை பாத்திரம் அளவிற்கு மிகவும் மோசமாக இருக்கிறதா?/////

2 & 11 ஆம் வீட்டு அதிபதிகளின் சுயவர்க்கப் பரல்களையும், அவர்கள் இருக்கும் இடங்களையும் முதலில் சொல்லுங்கள். பிறகு பலன்!

///////////////////////////////////////////////////////

2 ஆம் வீடு அதிபதி குரு, IN 6 ஆம் வீடான மறைவு ஸ்தானத்தில். அவருடைய பரல் FOR 6 ஆம் வீடு - 3.
11 ஆம் வீடு அதிபதி சுக்கிரன், IN 3 ஆம் வீட்டில் சந்திரனோடு. சுக்கிரன் பரல் FOR 3RD HOUSE - 5.

என்னுடைய லக்னம் விருச்சிகம். 3 AND 9 ஆம் வீடு அதிபதிகள் பரிவர்த்தனை.(சனி, சந்திரன்).

Krushna Cumaar said...

நிச்சயமாக நியாயமான ஆசைகள் மட்டும்தான். அதில் சந்தேகமில்லை. இனி வரும் காலங்களில் தெளிவாகவே குறிப்பிடுகிறேன். மன்னிக்கவும்.