மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.5.09

நீ எங்கே, நான் அங்கே! - பகுதி இரண்டு


நீ எங்கே, நான் அங்கே! - பகுதி இரண்டு

லக்கின அதிபதி சென்று அமரும் இடங்களுக்கான பலன்கள்.

ஒன்று முதல் ஆறு வீடுகளில் லக்கினாதிபதி அமர்ந்திருக்கும் வீட்டிற்கான
பலனை, இதன் முதற்பகுதியில் எழுதியுள்ளேன்.

இப்போது அதற்கு அடுத்து வரும் வீடுகளுக்கான பலன்களைப் பார்ப்போம்

லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும்.
சிலர் வாழ்க்கையின் பின் பகுதியில் சந்நியாசியாகி விடுவார்கள்.
மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன் செல்வந்தனாக
இருப்பான் அல்லது ஏழையாக இருப்பான்.
ஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான்.
மனைவியால் சொத்துக்கள் கிடைக்கும்.
சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும்.
சிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக இருப்பார்கள்.
எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள்
எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள்.

இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு
சென்று, பெரும்பொருள் ஈட்டி மகிழ்வுடன் வாழ்வான்.
===========================================
லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

ஜாதகன் கல்வியில் சிறந்தவனாக இருப்பான்.
சூதாட்ட மனப்பான்மை மிகுந்திருக்கும்.
ஒழுக்கக் குறைவு ஏற்படும்.
சிலருக்கு மரணம் - அது வரும் நேரத்தில் அமைதியானதாகவும்,
ஒரு நொடியில் ஏற்படுவதாகவும் அமையும்.
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் நீண்ட ஆயுளை
உடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும்.
ஜாதகன் பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும்.
சிலருக்கு உடலில் அங்கக் குறைபாடுகள் இருக்கும்
சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை
எடுத்து வளர்க்க நேரிடும்.

இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம
ஆயுளை உடையவன்.
வாழ்க்கையில் வறுமை ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்
சிலருக்குப் பலவிதங்களில் அவப்பெயர் உண்டாகும்.
=============================================
லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

பொதுவாக இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும்.
ஜாதகன் பலருக்கும் உதவுபவனாக இருப்பான்.
நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது.
இது பாக்கியஸ்தானம் அதை மனதில் கொள்க!
ஜாதகனுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தந்தை
கிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும் ஜாதகனுக்குக்
கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும்
ஜாதகன் பெரியவர்களை மதிக்கும் குணம் உடையவனாக இருப்பான்
சிறந்த பக்திமானாக விளங்குவான்.
தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான்,
நேர்மையாளனாக இருப்பான்.
வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள்
எதுவும் இருக்காது.
=================================================
லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

தொழிலில் அல்லது வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான
அமைப்பு இது.
பத்தாம் அதிபதிக்கும், லக்கின அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட
தொழிலைச் ஜாதகன் செய்து அதில் மேன்மையடைவான்.
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில்
அல்லது நல்ல வேலை அமையும். கை நிறையச் சம்பாதிப்பான்.
நற்பெயரையும், செல்வாக்கையும் உடையவனாக இருப்பான்.
தொழிலில் மேன்மை அடைவான்.
அதிகாரமும், பதவிகளும் தேடிவரும்.
அரசியல் செல்வாக்கு அல்லது அரசாங்க செல்வாக்கு இருக்கும்.
சிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள்.
நிலபுலன்கள், பெரிய வீடு, வண்டி, வாகன வசதிகளுடனான
வாழ்க்கை ஏற்படும்.
==================================================
லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான
தொழிலைச் செய்வான்.
நற்பெயரும், செல்வாக்கும் தேடிவரும்.
மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும்.
இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தாலும், அல்லது இந்த
பதினொன்றாம் இடத்து அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று
இருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள்.

ஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம் வீட்டினால் ஏற்படும் பயன்களுடன்
இந்த அமைப்பும் சேர்ந்து மேலும் பலவிதமான நன்மைகளைச் செய்யும்
Gains; Gains: Gains - அவ்வளவுதான்.
ஜாதகனுக்குப் பணக்கஷ்டமே இல்லாத வாழ்க்கை அமையும்.

இந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு
மேற்கூறிய நன்மைகள் இருக்காது.
ஜாதகனுக்குப் பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் உண்டாகும்
==================================================
லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து
கொண்டே இருக்கும்.

எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின்
கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும்.

வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும்.
வாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்.

இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய
கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம்
செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி
இல்லாதவனாகவும் இருப்பான்.

அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம்
அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும்.
திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும்
வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்

சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன
நிறைவு, மன அமைதி பெறுவார்கள்
====================================================
(அலசல் தொடரும்)

ஒரு வார காலமாக பல சொந்த வேலைகள் காரணமாக வகுப்பறையில்
கவனம் செலுத்த முடியவில்லை. மன்னிக்கவும்.
அதே போல இன்னும் ஒரு வார காலத்திற்கும் அதே சூழ்நிலைதான்
பொறுத்துக் கொள்ளுங்கள்.
ஜூன் ஒன்று முதல் நிலைமை சீராகிவிடும். வகுப்பறையும் சுறுசுறுப்பாக
இயங்கும்

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

64 comments:

 1. ம்ம் ஜயா வந்திருக்கிறாரு. நன்றி ஜயா விளங்குது உங்களின் பளு பரவாயில்லை ஆறுதலாய் வாருங்கள். என்(எம்) மன நிலையும் பாடத்தில் இல்லை.

  ReplyDelete
 2. Present Sir

  If lagna lord is in ninth house, you have written about very good results.

  I have two questions.

  1.If the ninth lord also joins the lagna lord in the same ninth house, what will be the effect?

  2.If 11 th lord(At the same time pathagathipathi for thula lagna) also joins the lagna lord and ninth lord in the same ninth house,how will it affect the good results.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. ³Â¡ Åñì¸õ.

  ±ÉÐ ÄìÉ¡¾¢À¾¢Ôõ (¾ÛÍ- ÌÕ) ¿¡ý¸¡õ ţΠ«¾¢À¾¢ÔÁ¡¸¢Â ÌÕ, ²Æ¡õ Å£¼¡¸¢Â (À¨¸) Á¢ÐÉò¾¢ø «Á÷ÐûÇ¡÷. Äì¸Éò¨¾ ÌÕ (Äì¸É¡¾¢À¾¢§Â) À¨¸ Å£ðËø þÕóÐ À¡÷À¾¡ø ÀÄý (¸øÅ¢, ÅÕÁÉõ, Å¡ú¨¸) ±ôÀË «¨ÁÔõ. §ÁÖõ Äì¸Éò¾¢ø Ò¾ý þÐ ÀâÅ÷¾É¡ §Â¡¸Á¡. §ÁÖõ þó¾ À¡¼ò¾¢ø 7 ø ÄìÉ¡¾¢À¾¢ «Á÷ó¾¡ø ƒ¡¾¸ý ¦ÅÇ¢ ¿¡Î ¦ºøÄ Å¡öôÒ ¯ûÇÐ ±ýÀÐ §À¡ø ¿¡ý þô¦À¡ØÐ ¦ÅÇ¢ ¿¡ðÊø ¯û§Çý.

  ÌÈ¢ôÒ : ±ýÉø, º¢.² ÁüÚõ ±õ.À¢.² ÀÊô¨À ÓÊì¸ ÓÊÂÅ¢ø¨Ä,

  þÐ ±ÉÐ Ó¾ø À¢ýÛð¼õ ¾ÅÚ¸¨Ç ÁñÉ¢ì¸×õ.

  áõÌÁ¡÷.


  pls rectifity the fons sir, i am not able to do it properly for tamil

  ReplyDelete
 6. Wednesday, May 20, 2009 8:58:00 PM
  Blogger Ram said...

  ஐயா வண்க்கம்.

  எனது லக்னாதிபதியும் (தனுசு- குரு) நான்காம் வீடு அதிபதியுமாகிய குரு, ஏழாம் வீடாகிய (பகை) மிதுனத்தில் அமர்துள்ளார். லக்கனத்தை குரு (லக்கனாதிபதியே) பகை வீட்டீல் இருந்து பார்பதால் பலன் (கல்வி, வருமனம், வாழ்கை) எப்படீ அமையும். மேலும் லக்கனத்தில் புதன் இது பரிவர்தனா யோகமா. மேலும் இந்த பாடத்தில் 7 ல் லக்னாதிபதி அமர்ந்தால் ஜாதகன் வெளி நாடு செல்ல வாய்ப்பு உள்ளது என்பது போல் நான் இப்பொழுது வெளி நாட்டில் உள்ளேன்.

  குறிப்பு : என்னல், சி.ஏ மற்றும் எம்.பி.ஏ படிப்பை முடிக்க முடியவில்லை,

  இது எனது முதல் பின்னுட்டம் தவறுகளை மண்னிக்கவும்.

  ராம்குமார்.


  //// pls rectifity the fonts sir, i am not able to do it properly for tamil////

  ReplyDelete
 7. I understand your work load sir. Personal life is also important and part of our life.

  Sir, I am waiting for your answer for my question in the earlier part.

  Thanks sir

  ReplyDelete
 8. ஆசிரியர்க்கு,

  வணக்கம்.

  ஆசானே! வகுப்பிற்கு வராததற்கு எங்களிடம் எதற்கு "மன்னிப்பு" கோருகிறீர்கள்? மிக வருத்தமாக உள்ளது. தவிர்க்க வேண்டுகிறேன்.

  லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டான செய்திகள். மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். மிக நன்றி.

  புண்ணியப் பயணத்தைத் தொடருங்கள்.

  அன்புடன்,

  செந்தில் முருகன். வே

  ReplyDelete
 9. அய்யா,

  பாடம், சற்று தாமதமாக வந்தாலும். தரமாக உள்ளது. நீங்கள் உங்கள் சேவையை தொடர்ந்து செய்ய (தாமதம் ஒரு பொருட்டே இல்லை) வேண்டுகிறேன்.

  நன்றி

  ஸ்ரீதர்

  ReplyDelete
 10. உள்ளேன் அய்யா!!

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. present sir.
  you have mentioned if lagna lord is in 7th house, he makes good money by working in abroad. At what age this happens and is it possible to say how many years? my lagna lord is saturn (kumba rasi) is in 7th house, simha rasi(in enemy house) with raghu.

  ReplyDelete
 13. பாடம் சரி...படங்கள்..?

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 14. எனக்கு லக்னாதிபதி புதன் 8ல் 2,9 அதிபதியான சுக்கிரனுடன் இருக்கிறார். அந்த ஸ்தானதிபதியான செவ்வாய் 4ம் பார்வையாக பார்க்கிறார். கூட்டி கழித்துப் பார்த்தால் பலன் எப்படி இருக்கும் என்று புரிகிறது.

  எனது உறவினர் ஒருவர். லக்னாதிபதி சூரியன் ராகுவுடன் 12ல் இருக்கிறார். அவர் வாழ்க்கையைப் பார்த்து ஏன் இப்படி இருக்கிறார் என்றும் புரிந்தது. இதில் சுய அஷ்டவர்கத்தில் 0 பரல் கொண்ட சனி தசை வேறு. சுய அஷ்ட வர்கத்தில் ஒரு பரல் கூட இல்லாத கிரகம், அதன் தசை வேறு, இப்படிப்பட்ட ஜாதகத்தை என் வாழ்நாளிலேயே இப்போதுதான் பார்க்கிறேன் என்று அவரிடம் சொல்ல தவறவில்லை.

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. We understand your difficulties. You can teach at your own convenient time. We appreciate your good work.

  ReplyDelete
 17. சார் present sir ,என்னோட லக்ன அதிபதி சூரியன் நான் சிம்ம லக்னம் என்னகு பதினோராவது இடத்தில சூரியன் இருக்காரு .இத சுப கிரகம் பாக்குத இல்ல அசுப கிரகம் பார்க்கிறதா எப்படி தெரிஞ்சிக்க முடிஉம் கொஞ்சம் சொல்லுங்க சார்,

  ReplyDelete
 18. Dear Sir

  Lagnadhibadhi 11il (sevvai) 7il guru -- Guru parvai undu...

  En magan Lagnadhibhadhi (moon) 9il Uchha sukkiranudan -- Palan Arumai.

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 19. vanakam aiya

  nan ipothu CA entrance exam
  preperation seithu kondirukiren.
  ipothu paarkum jobil irundu kondu
  padika mudiyathu,athanaal velai
  maatram allathu leave eduthu padikalam yendru irukiren ipothu velai maatram
  seiyalaama ? yenudaya kalvi,tholil
  yogam yeppadi ullathu ?

  Date of birth : 01-01-1985
  time : 08:25 am
  place : coimbatore

  ReplyDelete
 20. ஐயா வண்க்கம்,
  ஒரு கிரகம மற்றொரு கிரகத்தின் மீது பார்வை பெற்றது என்று எப்படி அறிவது, ஏழாம் பார்வை பற்றிய விளக்கம் உள்ளது வேறு என்ன என்ன பார்வைகள் இருக்கிறது (How to find out one planet is aspecting other planet apart from 7th planet ) ?

  ReplyDelete
 21. லக்கினாதிபதி 9ல்(கடகத்தில்) சுக்கிரனுடன் ஆனால் நல்ல நிலைமையில் இல்லை. லக்கினாதி செவ்வாய் நீசம் அடைந்துள்ளது. சுக்கிரனும் பகை.

  ReplyDelete
 22. எல்லா கிரகங்களுக்கும் 7ம் பார்வை பொதுவானது. சனி கிரகத்திற்கு 3,10 பார்வை, குருவிற்கு 5,9 பார்வை, செவ்வாய்க்கு 4,8 இட பார்வை விசேஷ பார்வை உண்டு. இது தாங்கள் முன்பே சொன்னதுதான். இது சம்பந்தமாக ஒரு கேள்வி. மற்ற கிரகங்கள் 3,10 இடத்தை கால் பார்வையாகவும், 5,9 அரைப் பார்வையாகவும், 4,8 இடத்தை முக்கால் பார்வையாக பார்ப்பார்கள் என்று படித்திருக்கிறேன். ராசிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட்ட பார்வை உண்டு. அதன் மூலமாக அதில் இருக்கும் கிரகங்களும் அந்த குறிப்பிட்ட ராசியைப் பார்க்கும் என்றும் படித்திருக்கிறேன். இது குறித்து தங்களின் கருத்து என்ன ஆசிரியரே.

  ReplyDelete
 23. Though I am following the blog for long, I am placing the comment now for the first time.Your lessons are simple, easy to understand,interesting,readable,to the point,and useful.My appreciation to your noble work.
  How to post in Tamil in your blogspot? I am also a blogger.
  www.parppu.blogspot.com

  Now coming to my horoscope,I am Poosam star,so Kataka Rasi and Lagna is also Kataka! So Chandra, the Lagnathipathi is in Lagna itself.But Guru is sitting in Makara, seventh place in a Neecha state and directly aspects the Lagna!The seventh Athipathi is in second Simmah with Surya and Kethu in Simmah itself!What is your comment,beloved Vathiar Ayya?

  ReplyDelete
 24. ////Blogger அமர பாரதி said...
  உள்ளேன் அய்யா.////

  நன்றி அமரபாரதி!

  ReplyDelete
 25. /////Blogger Emmanuel Arul Gobinath said...
  ம்ம் ஜயா வந்திருக்கிறாரு. நன்றி ஜயா விளங்குது உங்களின் பளு பரவாயில்லை ஆறுதலாய் வாருங்கள். என்(எம்) மன நிலையும் பாடத்தில் இல்லை./////

  உங்கள் (இலங்கைவாழ் மக்கள்) மனநிலை சீராக ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்!

  ReplyDelete
 26. ///////Blogger Ragu Sivanmalai said... Present Sir
  If lagna lord is in ninth house, you have written about very good results.
  I have two questions.
  1.If the ninth lord also joins the lagna lord in the same ninth house, what will be the effect?///////

  இருவருடைய தசாபுத்திகளிலும் ஜாதகன் ஒன்பதாம் வீட்டிற்குரிய பலன்களை அடைவான்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  2.If 11 th lord(At the same time pathagathipathi for thula lagna) also joins the lagna lord and ninth lord in the same ninth house,how will it affect the good results./////////

  இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு இடத்தில் இருக்கும்போது, அஸ்தமணம், கிரகயுத்தம் என்னும் பல பிரச்சினைகள் உள்ளன. அதை ஆராய்ந்து மட்டுமே பலன் சொல்ல முடியும். நல்ல ஜோதிடராகப் பார்த்து ஆராயச் சொல்லுங்கள். தனிப்பட்ட ஜாதகங்களை ஆராயும் அளவிற்கு எனக்கு நேரமில்லை!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  ReplyDelete
 27. /////Blogger Ram said...
  ³Â¡ Åணì¸õ.
  ±ÉÐ ÄìÉ¡¾¢À¾¢Ôõ (¾ÛÍ- ÌÕ) ¿¡ý¸¡õ ţΠ«¾¢À¾¢ÔÁ¡¸¢Â ÌÕ, ²Æ¡õ Å£¼¡¸¢Â (À¨¸) Á¢ÐÉò¾¢ø «Á÷ÐûÇ¡÷. Äì¸Éò¨¾ ÌÕ (Äì¸É¡¾¢À¾¢§Â) À¨¸ Å£ðËø þÕóÐ À¡÷ப்À¾¡ø ÀÄý (¸øÅ¢, ÅÕமாÉõ, Å¡ú¨¸) ±ôÀடி «¨ÁÔõ. §ÁÖõ Äì¸Éò¾¢ø Ò¾ý þÐ ÀâÅ÷¾É¡ §Â¡¸Á¡? §ÁÖõ þó¾ À¡¼ò¾¢ø 7 ø ÄìÉ¡¾¢À¾¢ «Á÷ó¾¡ø ƒ¡¾¸ý ¦ÅÇ¢ ¿¡Î ¦ºøÄ Å¡öôÒ ¯ûÇÐ ±ýÀÐ §À¡ø ¿¡ý þô¦À¡ØÐ ¦ÅÇ¢ ¿¡ðÊø ¯û§Çý.
  ÌÈ¢ôÒ : ±ýனாø, º¢.² ÁüÚõ ±õ.À¢.² ÀÊô¨À ÓÊì¸ ÓÊÂÅ¢ø¨Ä,
  þÐ ±ÉÐ Ó¾ø À¢ýÛð¼õ ¾ÅÚ¸¨Ç ÁñÉ¢ì¸×õ.
  áõÌÁ¡÷./////////

  1. நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவனே! குரு பகை வீட்டில் இருப்பதற்காக கவலைப் படாதீர்கள். அவர் 7ல் இருப்பதால் நல்லதையே செய்வார். பகை வீட்டில் இருப்பதால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்.
  2. பரிவர்த்தனை யோகம் உள்ளது.
  3. படிப்பை முடிக்க முடியாமல் போனதற்கு, தசாபுத்திகள், கோள்சாரம் ஆகியவை காரணமாக இருக்கும்.
  தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்

  ReplyDelete
 28. //////Blogger Krushna Cumaar said...
  I understand your work load sir. Personal life is also important and part of our life.
  Sir, I am waiting for your answer for my question in the earlier part.
  Thanks sir////

  அந்தப் பகுதியிலேயே பாருங்கள். பதில் வரும்!

  ReplyDelete
 29. ////Blogger senthil said...
  ஆசிரியருக்கு,
  வணக்கம்.
  ஆசானே! வகுப்பிற்கு வராததற்கு எங்களிடம் எதற்கு "மன்னிப்பு" கோருகிறீர்கள்? மிக வருத்தமாக உள்ளது. தவிர்க்க வேண்டுகிறேன்.
  லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டான செய்திகள். மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். மிக நன்றி.
  புண்ணியப் பயணத்தைத் தொடருங்கள்.
  அன்புடன்,
  செந்தில் முருகன். வே/////

  இதற்குக் கூட புண்ணியக் கணக்கு உள்ளதா என்ன?:-))))))
  ஒரு ஆர்வத்தில் எழுதுகிறேன்.

  ReplyDelete
 30. /////Blogger Sridhar said...
  அய்யா,
  பாடம், சற்று தாமதமாக வந்தாலும். தரமாக உள்ளது. நீங்கள் உங்கள் சேவையை தொடர்ந்து செய்ய (தாமதம் ஒரு பொருட்டே இல்லை) வேண்டுகிறேன்.
  நன்றி
  ஸ்ரீதர்/////

  நன்றி ஸ்ரீதர்!

  ReplyDelete
 31. /////Blogger Geekay said...
  உள்ளேன் அய்யா!!/////

  வருகைப் பதிவு போட்டாயிற்று ஜீக்கே!

  ReplyDelete
 32. //////Blogger saadu said...
  present sir.
  you have mentioned if lagna lord is in 7th house, he makes good money by working in abroad. At what age this happens and is it possible to say how many years? my lagna lord is saturn (kumba rasi) is in 7th house, simha rasi(in enemy house) with raghu.///////

  சனி தசா புத்திகளில் பலன்கள் கிடைக்கும். கிடைத்துக் கொண்டே இருக்கும். பகை வீடு என்பதால் பலன்கள்
  பாதியாகக் குறைந்துவிடும்!ஆனால் கிடைக்கும்

  ReplyDelete
 33. ////Blogger வேலன். said...
  பாடம் சரி...படங்கள்..?
  வாழ்க வளமுடன்,
  வேலன்./////

  நீ எங்கே, என் நினைவுகள் அங்கே! இதை மனதில் வைத்துக் கொண்டு படத்தைப் பாருங்கள் வேலன்!

  ReplyDelete
 34. /////Blogger ananth said...
  எனக்கு லக்னாதிபதி புதன் 8ல் 2,9 அதிபதியான சுக்கிரனுடன் இருக்கிறார். அந்த ஸ்தானதிபதியான செவ்வாய் 4ம் பார்வையாக பார்க்கிறார். கூட்டி கழித்துப் பார்த்தால் பலன் எப்படி இருக்கும் என்று புரிகிறது.
  எனது உறவினர் ஒருவர். லக்னாதிபதி சூரியன் ராகுவுடன் 12ல் இருக்கிறார். அவர் வாழ்க்கையைப் பார்த்து ஏன் இப்படி இருக்கிறார் என்றும் புரிந்தது. இதில் சுய அஷ்டவர்கத்தில் 0 பரல் கொண்ட சனி தசை வேறு. சுய அஷ்ட வர்கத்தில் ஒரு பரல் கூட இல்லாத கிரகம், அதன் தசை வேறு, இப்படிப்பட்ட ஜாதகத்தை என் வாழ்நாளிலேயே இப்போதுதான் பார்க்கிறேன் என்று அவரிடம் சொல்ல தவறவில்லை.////

  தகவலுக்கு நன்றி ஆனந்த்!

  ReplyDelete
 35. /////Blogger krish said...
  We understand your difficulties. You can teach at your own convenient time. We appreciate your good work./////

  நன்றி க்ரீஷ்!

  ReplyDelete
 36. ////Blogger DD said...
  சார் present sir ,என்னோட லக்ன அதிபதி சூரியன் நான் சிம்ம லக்னம் என்னகு பதினோராவது இடத்தில சூரியன் இருக்காரு .இத சுப கிரகம் பார்க்கிறதா இல்லை அசுப கிரகம் பார்க்கிறதா எப்படி தெரிஞ்சிக்க முடியும் கொஞ்சம் சொல்லுங்க சார்,////

  1.லக்கினாதிபதி பதினொன்றில் இருப்பதால் இயற்கையாகவே நீங்கள் அதிர்ஷ்டம் உடையவர்.
  2.பார்வைகள் பற்றிய பழைய பாடத்தைப் படியுங்கள். விவரம் தெரியவரும்

  ReplyDelete
 37. /////Blogger Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Lagnadhibadhi 11il (sevvai) 7il guru -- Guru parvai undu...
  En magan Lagnadhibhadhi (moon) 9il Uchha sukkiranudan -- Palan Arumai.
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman///////

  எல்லாம் நன்றாக உள்ளது. சந்தோஷமாக இருங்கள்

  ReplyDelete
 38. /////Blogger sundar said...
  vanakam aiya
  nan ipothu CA entrance exam
  preperation seithu kondirukiren.
  ipothu paarkum jobil irundu kondu
  padika mudiyathu,athanaal velai
  maatram allathu leave eduthu padikalam yendru irukiren ipothu velai maatram
  seiyalaama ? yenudaya kalvi,tholil
  yogam yeppadi ullathu ?
  Date of birth : 01-01-1985
  time : 08:25 am
  place : coimbatore/////

  உங்களுக்கு மகர லக்கினம். அஸ்விணி நட்சத்திரம். தொழில் ஸ்தானத்தில் 33 பரல்கள். தொழில் ஸ்தானம் நன்றாக உள்ளது. தொழிலில் தொடர்ந்து பல உயரங்களைத் தொடுவீர்கள்.வேலையில் இருந்து கொண்டே படியுங்கள். loss of pay ஆனாலும் பரவாயில்லை. லீவு எடுத்துக் கொண்டு படியுங்கள்.

  ReplyDelete
 39. ///////////Blogger Suresh said...
  ஐயா வணக்கம்,
  ஒரு கிரகம மற்றொரு கிரகத்தின் மீது பார்வை பெற்றது என்று எப்படி அறிவது, ஏழாம் பார்வை பற்றிய விளக்கம் உள்ளது வேறு என்ன என்ன பார்வைகள் இருக்கிறது (How to find out one planet is aspecting other planet apart from 7th planet ) ?/////

  கிரகங்களின் பார்வைகள் பற்றி முன் பாடங்களில் நிறைய எழுதியுள்ளேன். பழைய பாடங்களை நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது. பழைய பாடங்களை ஒவ்வொன்றாகப் படியுங்கள். கொஞ்சம் கஷ்டம்தான்.
  200 பாடங்களுக்கு மேல் உள்ளதே!

  ReplyDelete
 40. /////Blogger Emmanuel Arul Gobinath said...
  லக்கினாதிபதி 9ல்(கடகத்தில்) சுக்கிரனுடன் ஆனால் நல்ல நிலைமையில் இல்லை. லக்கினாதி செவ்வாய் நீசம் அடைந்துள்ளது. சுக்கிரனும் பகை.//////

  எந்தக் கிரகமும் நீசமானால் பலன் இல்லை. இருந்தாலும் வேறு அமைப்புக்களால் நீசம் நிவர்த்தியாகி இருக்கலாம். சுயவர்க்கப் பரல்களைப் பாருங்கள். அதில் தெரியும்.

  ReplyDelete
 41. /////Blogger ananth said...
  எல்லா கிரகங்களுக்கும் 7ம் பார்வை பொதுவானது. சனி கிரகத்திற்கு 3,10 பார்வை, குருவிற்கு 5,9 பார்வை, செவ்வாய்க்கு 4,8 இட பார்வை விசேஷ பார்வை உண்டு. இது தாங்கள் முன்பே சொன்னதுதான். இது சம்பந்தமாக ஒரு கேள்வி. மற்ற கிரகங்கள் 3,10 இடத்தை கால் பார்வையாகவும், 5,9 அரைப் பார்வையாகவும், 4,8 இடத்தை முக்கால் பார்வையாக பார்ப்பார்கள் என்று படித்திருக்கிறேன். ராசிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட்ட பார்வை உண்டு. அதன் மூலமாக அதில் இருக்கும் கிரகங்களும் அந்த குறிப்பிட்ட ராசியைப் பார்க்கும் என்றும் படித்திருக்கிறேன். இது குறித்து தங்களின் கருத்து என்ன ஆசிரியரே.///////

  கால், அரை என்று எல்லாம் கிடையாது. பார்வை பார்வைதான்.

  ReplyDelete
 42. ////Blogger kmr.krishnan said...
  Though I am following the blog for long, I am placing the comment now for the first time.Your lessons are simple, easy to understand,interesting,readable,to the point,and useful.My appreciation to your noble work.
  How to post in Tamil in your blogspot? I am also a blogger.
  www.parppu.blogspot.com/////

  இந்த சுட்டியைப் பாருங்கள் http://www.tamilmanam.net/index.html
  முகப்புப் பக்கத்தில் உள்ள சைடுபாரில் தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன

  Now coming to my horoscope,I am Poosam star,so Kataka Rasi and Lagna is also Kataka! So Chandra, the Lagnathipathi is in Lagna itself.But Guru is sitting in Makara, seventh place in a Neecha state and directly aspects the Lagna!The seventh Athipathi is in second Simmah with Surya and Kethu in Simmah itself!What is your comment,beloved Vathiar Ayya?

  7ல் குரு இருப்பது நல்லது. நல்லவன் என்ன நிலையில் இருந்தாலும் நல்லவனே. குரு நீசமானலும் 7ல் அமர்ந்ததற்கான பலனைத்தருவார். அதோடு அவர் சந்திரனையும் பார்ப்பதால் குருச் சந்திர யோகம் உள்ளது.
  அந்த யோகத்தால் என்ன பலன் என்பது பின்னால் யோகங்களைப் பற்றிய பாடத்தில் வரும். பொறுத்திருந்து படியுங்கள்

  ReplyDelete
 43. ஜயா உங்கள் பிராத்தனைக்கு நன்றி. செவ்வாய் நீசமடைந்தால் நீசபங்க யோகம் என்டு இந்த software கூறுது அது சரியா ? சுய வர்க்கம் 9ல் உள்ள சுக்கிரன் நவாம்சத்தில் உச்சம் அடைந்துள்ளதால் 6 பரல்கள். செவ்வாய்க்கு 3 பரல்கள் தான்.. அது சரி ஜயா எப்பொழுது 8ம் இடம் பற்றி அலச போறியல் ;).

  ReplyDelete
 44. hi sir.
  i have a doubt sir. if mars is in the 4th house with guru in thanusu rasi(kanya lagna) then is it sevvai dosa or not?

  ReplyDelete
 45. //////Blogger Emmanuel Arul Gobinath said...
  ஜயா உங்கள் பிராத்தனைக்கு நன்றி. செவ்வாய் நீசமடைந்தால் நீசபங்க யோகம் என்டு இந்த software கூறுது அது சரியா ? சுய வர்க்கம் 9ல் உள்ள சுக்கிரன் நவாம்சத்தில் உச்சம் அடைந்துள்ளதால் 6 பரல்கள். செவ்வாய்க்கு 3 பரல்கள் தான்.. அது சரி ஜயா எப்பொழுது 8ம் இடம் பற்றி அலசப் போகின்றீர்கள்?./////


  1. செவ்வாய் கடகத்தில் நீசமாக இருக்கும். அதன் உடன் உச்சமான குருவும் அதே வீட்டில் இருந்தால் மட்டுமே. அது நீசபங்க ராஜயோகமாகும். இல்லையென்றால் இல்லை!

  2. எட்டாம் இடம் மரணத்தைப் பற்றியது அல்லவா?
  எல்லாப் பாடங்களையும் நடத்திய பிறகு, இறுதிப்பாடம் அதுதான்.
  அதைச் சுவையாகச் சொல்லவுள்ளேன். விவரமாகவும் சொல்லவுள்ளேன்
  பாடத்தில் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது. அதுவும் அப்போது தெரியவரும்!

  ReplyDelete
 46. /////////Blogger sarupraba said...
  hi sir.
  i have a doubt sir. if mars is in the 4th house with guru in thanusu rasi(kanya lagna) then is it sevvai dosa or not?//////

  குருவும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் குரு மங்களயோகம்.
  2ஆம் வீட்டிலும் 4ஆம் வீட்டிலும் செவ்வாய் இருந்தால் 1/4 பங்கு செவ்வாய் தோஷம்.
  7லிலும் 8லிலும் செவ்வாய் இருந்தால் மட்டுமே முழுத் தோஷம்.
  அதற்கு விதிவிலக்கான லக்கினங்கள் மேஷமும், விருச்சிகமும்: ஏனென்றால் அந்த இரண்டு லக்கினங்களுக்கும் செவ்வாய் அதிபதி. ஆகவே அந்த லக்கினக்காரர்களுக்குத் தோஷம் கிடையாது

  ReplyDelete
 47. Dear Sir,

  Thank you very much for your valuable time and effort.

  If one planet gets debiliated (say mercury at pisces) and joins with sun, is that will have strong power...like budha aditya yoga will work good (say mercury sits next to sun at 10 degrees without combust)...can you explain that?

  one more question: If jupiter is with mars in any house (say 7th or 8th house) still considered sevvai dosham?

  Thanks
  Shankar

  ReplyDelete
 48. //
  2. எட்டாம் இடம் மரணத்தைப் பற்றியது அல்லவா?
  எல்லாப் பாடங்களையும் நடத்திய பிறகு, இறுதிப்பாடம் அதுதான்.
  அதைச் சுவையாகச் சொல்லவுள்ளேன். விவரமாகவும் சொல்லவுள்ளேன்
  பாடத்தில் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது. அதுவும் அப்போது தெரியவரும்!// ஆகா ஜயா பில்டப் பலமா இருக்கு... இப்பவே ;) ஜயா பிசியானாலும் இந்த முறை பின்னோட்டம் விட தவறவில்லை அதற்கு நன்றிகள்..

  ReplyDelete
 49. உள்ளேன் ஐயா.

  அன்புடன்,
  மதுரை தனா.

  ReplyDelete
 50. Dear Sir,

  We analysed various people horoscope (MK, India Gandhi, like people) Now they become the past history or in the end of there life. I like to Know about the people like Rahul Gandhi, Priyanka, Narendra Modi, MK Alaghiri, Kanimozhi & Maran like people as they are the future of the indian Politics which means they really going to affect us in the comming days, what i Like to know is, Is they can able to give us the proper governance or still we have to sit with the corrupt & muscle politics which is happening at now with them, No one should say that they are good or best of available as of now our politics is run with money and muscle power with out any excption of any one.

  ReplyDelete
 51. வணக்கம் ஐயா
  கடந்த சில நாட்களாக வகுப்பறைக்கு வரமுடியவில்லை ஆனாலும் பாடத்தை படித்துவருகிறேன் . எனக்கு சனி தசையில் சனி புக்க்தி நடக்கிறது அலைச்சலும் .தடங்கல்களும் தினசரி ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன .என் லக்ன நாதன் ஏழாம் இடத்தில இருக்கிறார் .லக்னம் மகரம் ,சனி கடகத்தில் இருக்கிறார் .சந்திரன் கும்பத்தில் பரிவர்த்தனையில் உள்ளார் .சொந்த தசா புக்தியில் பலன்களை கொடுக்க மாட்டார்கள் இன்பது சரியாக இருக்கிறது .
  வராத நாட்களுக்கும் சேர்த்து ப்ரெசென்ட் போட்டுவிடுமறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் [மெடிக்கல் லீவ் ]
  நன்றி
  கணேசன்

  ReplyDelete
 52. உங்களுக்கு மகர லக்கினம். அஸ்விணி நட்சத்திரம். தொழில் ஸ்தானத்தில் 33 பரல்கள். தொழில் ஸ்தானம் நன்றாக உள்ளது. தொழிலில் தொடர்ந்து பல உயரங்களைத் தொடுவீர்கள்.வேலையில் இருந்து கொண்டே படியுங்கள். loss of pay ஆனாலும் பரவாயில்லை. லீவு எடுத்துக் கொண்டு படியுங்கள்.

  Friday, May 22, 2009 7:54:00 PM
  ///

  vanakkam aiya

  neegal sollivitta piragu atharku maru pechu unda appadiye seikiren,

  ReplyDelete
 53. அதிகாலை வரை விழித்திருந்தோ அல்லது அவ்வளவு சீக்கிரமாக எழுந்தோ உள்ளேன் அய்யா சொல்லும் மாணவர்களும் இந்த வகுப்பறையில் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஆசிரியர் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று புரிகிறது. பாடம் படிக்கவும், பின்னூட்டம் இடவும் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறார்களே அதனால். தனக்காக போதுமான நேரம் ஒதுக்குவதில்லை என்று என் மனைவி புகார் கூறியதால் இரவு 7 மணிக்கு மேலும் வார இறுதி நாட்களிலும் கணிணியை தொடுவதே இல்லை. யாருக்கு என்ன ஆனாலும் சரி.

  ReplyDelete
 54. //////Blogger hotcat said...
  Dear Sir,
  Thank you very much for your valuable time and effort.
  If one planet gets debiliated (say mercury at pisces) and joins with sun, is that will have strong power...like budha aditya yoga will work good (say mercury sits next to sun at 10 degrees without combust)...can you explain that?//////

  சேர்க்கையினால் யோகம் உண்டு. நீசமானதால் யோகத்தின் அளவு குறையும்
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  one more question: If jupiter is with mars in any house (say 7th or 8th house) still considered sevvai dosham?
  Thanks
  Shankar///////

  செவ்வாயுடன் குரு சேர்ந்திருப்பதால் அதனுடைய இயற்கைத் தன்மை குறைந்துவிடுமா என்ன?
  தோஷம் உண்டு. மேஷம் & விருச்சிக லக்கினக்காரகளுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது. செவ்வாய் அந்த லக்கினங்களுக்கு அதிபதி. அதிபதி தனக்குத் தானே தோஷத்தை உண்டாக்கிக் கொள்ள மாட்டார்.

  ReplyDelete
 55. /////////Blogger Emmanuel Arul Gobinath said... //
  2. எட்டாம் இடம் மரணத்தைப் பற்றியது அல்லவா?
  எல்லாப் பாடங்களையும் நடத்திய பிறகு, இறுதிப்பாடம் அதுதான்.
  அதைச் சுவையாகச் சொல்லவுள்ளேன். விவரமாகவும் சொல்லவுள்ளேன்
  பாடத்தில் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது. அதுவும் அப்போது தெரியவரும்!// ஆகா ஜயா பில்டப் பலமா இருக்கு... இப்பவே ;) ஜயா பிசியானாலும் இந்த முறை பின்னோட்டம் விட தவறவில்லை அதற்கு நன்றிகள்..//////////

  பில்ட்டப் அல்ல - உண்மை அதுதான்!

  ReplyDelete
 56. ////////Blogger dhanan said...
  உள்ளேன் ஐயா.
  அன்புடன்,
  மதுரை தனா./////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 57. ///////////Blogger Ram said...
  Dear Sir,
  We analysed various people horoscope (MK, India Gandhi, like people) Now they become the past history or in the end of there life. I like to Know about the people like Rahul Gandhi, Priyanka, Narendra Modi, MK Alaghiri, Kanimozhi & Maran like people as they are the future of the indian Politics which means they really going to affect us in the comming days, what i Like to know is, Is they can able to give us the proper governance or still we have to sit with the corrupt & muscle politics which is happening at now with them, No one should say that they are good or best of available as of now our politics is run with money and muscle power with out any excption of any one.///////

  இந்தியா வல்லரசாக மாறும்போது அவைகள் - அந்த நிலைகள் களையப்பட்டு விடும். எப்படி என்று கேட்காதீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்!

  ReplyDelete
 58. //////Blogger choli ganesan said...
  வணக்கம் ஐயா
  கடந்த சில நாட்களாக வகுப்பறைக்கு வரமுடியவில்லை ஆனாலும் பாடத்தை படித்துவருகிறேன் . எனக்கு சனி தசையில் சனி புக்தி நடக்கிறது அலைச்சலும் .தடங்கல்களும் தினசரி ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன .என் லக்ன நாதன் ஏழாம் இடத்தில இருக்கிறார் .லக்னம் மகரம் ,சனி கடகத்தில் இருக்கிறார் .சந்திரன் கும்பத்தில் பரிவர்த்தனையில் உள்ளார் .சொந்த தசா புக்தியில் பலன்களை கொடுக்க மாட்டார்கள் இன்பது சரியாக இருக்கிறது .
  வராத நாட்களுக்கும் சேர்த்து ப்ரெசென்ட் போட்டுவிடுமறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் [மெடிக்கல் லீவ் ]
  நன்றி
  கணேசன்//////

  நானே அடிக்கடி விடுப்பில் போய் விடுகிறேன். ஆகவே லீவைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்
  வகுப்பிற்கு வருகின்ற அன்று சேர்த்துப் படித்து விடுங்கள்!

  ReplyDelete
 59. ////////Blogger sundar said...
  உங்களுக்கு மகர லக்கினம். அஸ்விணி நட்சத்திரம். தொழில் ஸ்தானத்தில் 33 பரல்கள். தொழில் ஸ்தானம் நன்றாக உள்ளது. தொழிலில் தொடர்ந்து பல உயரங்களைத் தொடுவீர்கள்.வேலையில் இருந்து கொண்டே படியுங்கள். loss of pay ஆனாலும் பரவாயில்லை. லீவு எடுத்துக் கொண்டு படியுங்கள்.
  Friday, May 22, 2009 7:54:00 PM
  ///
  vanakkam aiya
  neegal sollivitta piragu atharku maru pechu unda appadiye seikiren,////////

  நன்றி சுந்தர்!

  ReplyDelete
 60. /////Blogger செல்லி said...
  உள்ளேன், ஐயா!/////

  வருகைப் பதிவு போட்டாயிற்று சகோதரி!

  ReplyDelete
 61. //////////Blogger ananth said...
  அதிகாலை வரை விழித்திருந்தோ அல்லது அவ்வளவு சீக்கிரமாக எழுந்தோ உள்ளேன் அய்யா சொல்லும் மாணவர்களும் இந்த வகுப்பறையில் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஆசிரியர் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று புரிகிறது. பாடம் படிக்கவும், பின்னூட்டம் இடவும் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறார்களே அதனால். தனக்காக போதுமான நேரம் ஒதுக்குவதில்லை என்று என் மனைவி புகார் கூறியதால் இரவு 7 மணிக்கு மேலும் வார இறுதி நாட்களிலும் கணிணியை தொடுவதே இல்லை. யாருக்கு என்ன ஆனாலும் சரி.////////

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 62. Sir,

  You have mentioned that Chevvai dosham is an exception for mesham & viruchigam, since Chevvai being Lagnathipathi. In most of the astro books and panchangam more exceptions are given. On considering these exceptions it is said that other than few, many of them will not have chevvai dosham even if he is present in 2, 4. 7,8,12.
  கடக சிம்ம லக்னங்களுக்கு செவ்வாய் எங்கு இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை ( யோகக்காரகன் என்பதால் ) என்றும்
  -- உச்ச வீடான மகரத்திலும் . சொந்த வீடான மேஷம் , விருச்சிகம் இவைகளில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை .
  --நட்பு வீடான சூரியன் , சந்திரன் , குரு இவர்களின் வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
  --சனி , ராகு , கேது இவர்களுடன் சேர்ந்து இருந்தாலும் , இவர்களால் பார்க்கப்பட்டாலும் செவ்வாய் தோஷம் இல்லை
  -- செவ்வாய் இருக்கும் ராசி நாதன் , லக்னத்திற்கு கேந்திர , கோணங்களில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை என்றும்
  ---- செவ்வாய் இருக்கும் இரண்டாம் இடம் மிதுனம் - கன்னி யாகில் தோஷம் இல்லை
  ---- செவ்வாய் இருக்கும் நான்காம் இடம் மேஷம் விருசிகமாகில் தோஷம் இல்லை
  ----செவ்வாய் இருக்கும் ஏழாம் இடம் கடகம் மகரகம் ஆகில் தோஷம் இல்லை
  ----செவ்வாய் இருக்கும் எட்டாம் இடம் தனுசு , மீனமாகில் தோஷம் இல்லை
  ---செவ்வாய் இருக்கும் 12 ஆம் இடம் ரிஷபம் துலாமாகில் தோஷம் இல்லை என்றும்
  இவற்றை அனுசரித்தால் பெரும்பாலான பேருக்கு தோஷ நிவர்த்தி எனவும் . இதை நாரத மகரிஷி சொன்னதாகவும் உள்ளது

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com