மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.5.09

தலை' யைப் பற்றிய தகவல்கள்

தலை' யைப் பற்றிய தகவல்கள்

தலை' என்றவுடன் நமக்கு உடனடியாக நினைவிற்கு வருவது ரசிகர்கள் மாய்ந்து
மாய்ந்து சொல்லும் தலைகளான அஜீத் அல்லது விஜய்!

பதிவு அவர்களைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணுபவர்கள் பதிவை விட்டு
விலகவும்.

இது அவர்களைவிட முக்கியமான தலையைப் பற்றிய பதிவு
=====================================================
ஜோதிடத்தில் தலை என்று தலைப் பகுதியான லக்கினத்தைக் குறிப்பிடுவார்கள்
எண் ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பதுபோல, பன்னிரெண்டு வீடுகள்
அடங்கிய ஜாதகத்திற்கு லக்கினமே பிரதானமானது. அதுதான் தலைப் பகுதி

லக்கினத்தைப் பற்றிய பாடம் விரிவாக நடத்தப்படவுள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன் லக்கினத்தைப் பற்றி, நான்கு பதிவுகளில் எழுதிய
செய்திகளைக் கீழே கொடுத்துள்ளேன். அதைப் படித்தால்தான் அல்லது
தெரிந்து கொண்டால்தான் அடுத்து எழுதுவது விளங்கும். ஆகவே அவற்றைத்
தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

அனைவரையும் பொறுமையாகப் படித்து அவற்றை உள் வாங்கிக் கொள்ள
வேண்டுகிறேன்.

அதைத் தொடர்ந்து, லக்கினத்தைப் பற்றி விரிவாக எழுத உள்ளதைப் படியுங்கள்
===================================================
லக்னம் என்றால் என்ன?

வானம் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பெற்று, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர்
தரப்பட்டுள்ளது. மேஷம் முதல் மீனம் வரை அதற்குப் பெயர்கள் உண்டு

வானவட்டம் 360 வகுத்தல் 12 = 30 பாகைகள் = ஒரு ராசி என்பது கணக்கு.
ஆரம்ப ராசி மேஷம்தான்.

சித்திரை மாதம் மேஷம்தான் சூரியனின் உதய ராசி. சூரியன் அந்த ராசியில்
தான் உதிக்கும். வைகாசி மாதம் ரிஷப ராசியில்தான் உதிக்கும், ஆனி மாதம்
மிதுனம் ஆடி மாதம் கடகம், ஆவணி மாதம் சிம்மம், புரட்டாசி மாதம்
கன்னி, ஐப்பசி மாதம் துலாம், கார்த்திகை மாதம் விருச்சிகம், மார்கழி மாதம்
தனுசு, தை மாதம் மகரம், மாசி மாதம் கும்பம் பங்குனி மாதம் மீனம் என்று
ஒரு சுற்று முடிந்து விடும்.

ஒரு வருடமும் முடிந்து விடும். மீண்டும் அடுத்த சுற்று மறுபடியும் மேஷத்தில்
தான் ஆரம்பமாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசியை வைத்து அவர் எந்த மாதம்
பிறந்தவர் என்று சொல்லிவிடலாம். உதாரணத்திற்குச் சூரியன் சிம்ம வீட்டில்
இருந்தால் அந்த ஜாதகர் ஆவணி மாதம்தான் பிறந்தவர்.

ஆனால் லக்கினம் என்பது வேறு!.

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடம், வானத்தை
எதிர் நோக்கி இருக்கும் பகுதிதான் அந்தக் குழந்தையின் லக்கினம் ஆகும்!

லக்(கி)னம் . பெயர்ச்சொல்: சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில்
குறிப்பிட்ட நேரத்தைக் கட்டுப்படுத்தும் ராசி. Zodiacal sign influencing events
at any given time of the day with reference to the time of sunrise

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடத்தைக்கட்டுப்
படுத்தும் ராசிதான் அந்தக் குழந்தையின் லக்கினம்

லக்கினம் என்பது ஒரு ஜாதகத்தின் தலைப்பகுதி. அதுதான் முதல் வீடு.
அதிலிருந்து கடிகாரச் சுற்று வரிசையில்தான் மற்ற வீடுகளைக் கணக்கில்
கொள்வார்கள்

சித்திரை மாதம் முதல் தேதி சூரிய உதயம் முதல் அடுத்து வரும் 2 மணி நேரம்
வரை உள்ள காலத்தில் பிறந்த குழந்தையின் லக்கினம் மேஷம்தான்.
அதற்குப் பிறகு ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அடுத்தடுத்த ராசி வரிசையில்
லக்கினங்கள் அமையும்

ஆனால் சித்திரை மாதம் 16 ம் தேதி காலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி
நேரம் வரை தான் மேஷ லக்கினம் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தை ரிஷப
லக்கினக் குழந்தையாகும்.

இந்த வித்தியாசம் ஏன்?

ஒரு ராசி என்பது 30 பாகைகள் - ஒரு ராசியின் கால அளவு = 24 மணிகள்
வகுத்தல் 12 ராசி = 2 மணி நேரம் = 120 நிமிடங்கள்

ஆகவே ஒவ்வொரு நாள் சுழற்சியிலும் சூரியன் ஒரு பாகையைத் தாண்டி
வந்துவிடும் (4 நிமிடங்கள்) 15 நாட்களில் 15 பாகைகளைக் கடந்து விடும்
ஆகவே 15 x 4 = 60 நிமிடங்கள் அந்தத் தேதிக்குள் கழிந்துவிடும்

இப்படியே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகை வீதம்
360 நாட்களில் 360 பாகைகள் வித்தியாசத்துடன் பிறக்கும் குழந்தைகளுக்கு
அது எந்தப் பாகையில் பிறந்ததோ அந்தப் பாகையின் பகுதிதான் லக்கினம்
ஆகும்.

உங்கள் மொழியில் சொன்னால் லக்கினம்தான் தலைமைச் செயலகம்!
----------------------------------------------------------
லக்கினத்தை வைத்துதான் ஒரு மனிதனின் குணத்தை, தோற்றத்தை, அவனுடைய
ஆளூமையைச் சொல்ல முடியும்.

அழகான் தோற்றம், உடற்கட்டு, நல்ல குணம் குறிப்பாக Heroவா? அல்லது
Villainனா? என்பது போன்ற கணிப்புக்களை, பெண்ணாக இருந்தால் நாயகியா
அல்லது வில்லியா என்று தெரிந்து கொள்வதற்கு லக்கினம்தான் ஆதாரம்!

அறிவாளியா- முட்டாளா, திறமைசாலியா- சோம்பேறியா, நல்லவனா- வக்கிரம்
பிடித்தவனா, அப்பாவியா - கல்லுளிமங்கனா, சமூகத்தோடு ஒத்துப்
போகக்கூடியவனா அல்லது விதண்டாவாதம் பேசி வீணாய்ப்போகிறவனா
என்று சொவதற்கும், தோற்றத்தில் அரவிந்தசாமியா அல்லது பி.எஸ் வீரப்பாவா.
ஓமக்குச்சி நரசிம்மனா அல்லது பயில்வான் ரங்கநாதனா பெண்ணாக இருந்தால்
நயன்தாராவா அல்லது காந்திமதியா (அவரேதான் 16 வயதினில் படத்தில்
மயிலின் அம்மாவாக வருவரே அதே காந்திமதிதான்) என்று சொல்வதெல்லாம்
லக்கினத்தை வைத்துத்தான்

எல்லாவற்றையும் ஒரே நாளில் லோட் செய்தால் வண்டி கவிழ்ந்து விடும். ஆகவே
முதலில் லக்கினம் என்பது என்ன என்பதை மட்டும் மனதில் வையுங்கள்.
அதன் பலா பலன்கள் 6 பகுதிகளாகப் பின் வரும் பதிவுகளில் சொல்லிக்
கொடுக்கப்படும்!
-----------------------------------------------------
லக்னம் (Ascendant) என்பதைப் பற்றி அறிவியல் பூர்வமாக நமது வணக்கத்திற்குரிய
கூகுள் ஆண்டவர் சொன்னால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்பதற்காக
லக்கினத்தைப்பற்றி அவர் சொல்வதையும் நீங்கள் தெரிந்துகொள்வதற்கான
சுட்டியைக் கொடுத்துள்ளேன்!

http://en.wikipedia.org/wiki/Ascendant

Written on 20.3.2007

இப்போது லக்கினத்தின் அடுத்த பகுதி!

1. லக்கினத்தில் மிகவும் முக்கியம் லக்கினநாதன் என்னும் அந்த வீட்டு அதிபதி
(Owner of the lagna or lagna lord) உதாரணம் சிம்ம லக்கினத்தின்
அதிபதி சூரியன்.அவர் எங்கே போய் உட்கார்ந்திருக்கிறார் என்பது முக்கியம்.
அவருடைய சிறப்பான அமர்விடம் லக்கினத்திலிருந்து 5ம் வீடு அல்லது 9ம் வீடு
(திரிகோண வீடுகள் எனப்படும்) அதுபோல 4ம் வீடும் 7ம் வீடும் அல்லது
10ம் வீடும் சிறப்பான வீடுகளே (கேந்திரம் எனப்படும் வீடுகள்)

2. ஏழாம் வீட்டிலிருந்து லக்கினாதிபதி லக்கினத்தைப் பார்த்தால் மிகவும் சிறப்பு.
180 பாகையிலிருந்து எல்லாகிரகஙகளும் எதிர்வீட்டைப் பார்க்கும்.
The lagna lord aspecting the lagna from the
7th place will confer standing power to the native!

3. லக்கினாதிபதி லக்கினத்திலிருந்து 6ம் வீடு, 8ம் வீடு 12ம் வீடு ஆகிய வீடுகளில்
மறைந்து விடக்கூடாது! These places are inimical places (தீய இடங்கள்)
அப்படி அமர்ந்தால் வாழ்க்கை போராட்டமாக அமையும்.
(உடனே ஜாதகத்தை எடுத்துப் பார்த்துவிட்டுக் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு
அமர்ந்து விடாதீர்கள் - பல விதிவிலக்குகள் உள்ளன - வரிசையாக அவைகளும்
சொல்லித்தரப்படும்)
You should not jump to any conclusion by seeing a single rule. The houses
are to be judged by various factors which will be taught one by one

4. லக்கினாதிபதி 12ல் அமர்ந்தால் (அதாவது விரைய ஸ்தானம் எனப்படும் -
house of lossesல் அமர்ந்தால், ஜாதகன் வாழ்க்கை அவனுக்குப் பயன்படாது.
அவனைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு மட்டுமே பயன் படும்.

5. அதுபோல விரையாதிபதி that is the owner of the 12th house லக்கினத்தில்
வந்து அமர்ந்தால் -உதாரணம் சிம்ம லக்கினத்தில் - அதற்குப் 12ம் வீடான
கடகத்தின் அதிபதி சந்திரன் வந்து அமர்ந்தால் - ஜாதகன் வாழக்கை விரயமாகி
விடும். அவனுடைய வாழக்கை யாருக்கும் பயன்படாது
You should not jump to any conclusion by seeing a single rule. The houses are
to be judged by various factors which will be taught one by one

6. லக்கினாதிபதியும், விரையாதிபதியும் - ஒன்று சேர்ந்து ஜாதகத்தில் எங்கு
அமர்ந்தாலும் அது ஜாதகனுக்குப் பயன் அளிக்காது.
Both the owner of the first house and owner of the 12th associated together in
any place in the horoscope will not confer any auspicious things to the native

7. லக்கினாதிபதி உச்சம் பெறுவது மிகவும் நல்லது. example - சிம்மலக்கின
ஜாதகத்தில் சூரியன் மேஷத்தில் இருப்பது.

8. லக்கினத்தில் குரு இருப்பது மிகவும் நல்லது. It is blessed horoscope

9. அதற்கு நேர் எதிர் லக்கினத்தில் சனி இருப்பது. நல்லதல்ல!
இதற்கு மகர லக்கினமும், குமப லக்கினமும் விதிவிலக்கு ஏனென்றால் அந்த
இரண்டு லக்கினங்களுக்கும் சனி அதிபதி.

10. லக்கினத்தைச் சந்திரன் பார்த்தாலோ (7ம் பார்வை) அல்லது லக்கினத்தில்
சந்திரன் இருந்தாலோ, ஜாதகன் அழகாக இருப்பான் - பெண் என்றால் ஜாதகி
அழகாக இருப்பாள்.

11. அதே போல சுக்கிரன் லக்கினத்தில் இருந்தாலும், அல்லது பார்த்தாலும்
அழகான தோற்றத்தை கொடுப்பான்

சினிமா நடிகைகளின் ஜாதகத்தில் இந்தக் combination இருக்கும். அதனால்தான்
அவர்கள் அழகான தோற்றத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள்
சரி பரிசோதனை செய்து பார்க்கலாம் என்றால் நடிகர்களின் ஜாதகங்கள்
தாராளமாகக் கிடைக்கின்றன். நடிகைகளின் ஜாதகங்கள் கிடைப்பதில்லை!
வெளியே வராது. வயது தெரிந்துபோய் விடுமே சாமி:-))))

நடிகைகள் என்றில்லை, பெண்களின் வயதையும் ஆண்களின் வருமானத்தையும்
கண்டுபிடிக்க முடியுமா? அல்லது கேட்பதுதான் நியாயமா?

12. அதே இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் அல்லது பார்த்தால் அபரிதமான
திறமையைக் கொடுப்பான்

13. எல்லா லக்கினங்களும் சமம். ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிகப்படியான
சிறப்பு உண்டு. சிம்ம லக்கினம் Heroக்களின் லக்கினம். அந்த லக்கினக்காரர்கள்
எல்லாம் நாயகர்கள்தான் (உதாரணம் - கமல்ஹாசன், ரஜினிகாந்த ஆகிய
இருவரின் ஜாதகங்கள்)
=============================================
சிம்ம லக்கினம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நானும்
சிம்ம லக்கினம்தான்..ஹி.ஹி:-))
திரைத்துறைக்குச் சென்றால்தான் ஹீரோவா? மனதளவில் நானும்
ஹீரோதான்..ஹி.ஹி:-))
----------------------------------------------------------------------------------
14. மகர, கும்ப லக்கினக்காரர்கள் கடின உழைப்பாளிகள். சனீஸ்வரன் அந்த
லக்கினங்களின் அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையிலே கடும்
உழைப்பாளிகள். எடுத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள்

15. கும்ப லக்கினக்காரர்கள் இயற்கையாகவே மிகவும் நல்லவர்கள்.
அவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கலாம். அவர்கள்
நிறைகுடம் போன்றவர்கள் அதனால்தான் கும்ப ராசியின் சின்னமாகக்
குடம் வழங்கப் பெற்றுள்ளது.

பெண்களுக்கு கும்ப லக்கினம்தான் சிறந்த லக்கினம். கும்ப லக்கினப்
பெண்களை மணந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

16.கன்னி லக்கினக்காரர்கள் மற்ற எல்லா லக்கினக்கார்களையும் சுலபமாக
ஈர்த்து விடக்கூடியவர்கள். They will attract or mix with any people
or any Society easily

17.மிதுன லக்கினக்காரர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் (உதாரணம்
- திரு.ஜெமினி கணேசன், செல்வி ஜெயலலிதா. திரு.ப. சிதம்பரம்
போன்றவர்கள்)

18. கடக லக்கினக்காரர்கள் பெரும்பாலும் அரசியல் வாழ்க்கையில்
ஈடுபடுபவர்கள். உதாரணம் - கலைஞர் மு.க, திருமதி இந்திரா காந்தி,
ஜவஹர்லால் நேரு போன்றவர்கள். அரசியல் இல்லையென்றாலும்
தலைமை தாங்கும் திறமையுடையவர்கள். நாட்டமையாக இருப்பவர்கள்

19. ரிஷபம், துலாம் லக்கினக்காரர்கள் கலைத்துறையில் பிரகாசிப்பார்கள்
(அதிபதி சுக்கிரன்). அதுபோல வாழ்க்கையை இயற்கையாகவே அனுபவிக்கக்
கூடியவர்கள். ரசனை உணர்வு மிக்கவர்கள். மெல்லிய உணர்வு மிக்கவர்கள்

20. மேஷம், விருச்சிக லக்கினக்காரர்க்ள் - செவ்வாய் அதிபதி அதனால்
போராடிப் பார்க்கும் மனப்பான்மை உள்ளவர்கள். யாருக்கும், எதற்கும்
பயப்பட மாட்டர்கள். ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில்
பரிணமிப்பவர்கள் இவர்கள்தான்.

21. தனுசு, மீன் லக்கினக்காரர்கள் - குரு அதிபதியானதால், இயற்கையாகவே
சிறந்த அறிவுடையவர்களாக இருப்பார்கள் (Keen Intelligence) Finance,
stock market, Banking, auditing, teaching, coaching போன்ற துறைகளில்
இவர்கள் பரிணமிக்கும் வாய்ப்பு இயற்கையாகவே இவர்களுக்கு இருக்கும்!

22. லக்கினாதிபதி சிறுவயது வாழ்க்கைக்கும், உடல் நலத்திற்கும் உரியவர்,
அவர் பலமாக இருந்தால் சிறுவயது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
உடல் நலமும் நன்றாக இருக்கும்

23. அவர் வலுவிழந்து இருந்தால் (உதாரணம் லக்கினாதிபதி சனி அல்லது
ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தால்
உடல் நலம் பாதிக்கப்படும்.

24. தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஒன்றுக்கு மேற்பட்ட தீய
கிரகமானால் வாழ்க்கை துன்பம் மிகுந்ததாகிவிடும்

25. கடவுள் கருணை மிக்கவர். ஜாதகத்தில் லக்கினத்தின் மூலம் உள்ள
குறைகளுக்கு அவர் நிவர்த்தியையும் கொடுத்துதான் அத்தனை ஜீவ
ராசிகளையும் பிறக்க வைக்கிறார். அதற்கு அதிரடியான சான்று - ஜாதகத்தின்
மொத்த மதிப்பெண் யாராக இருந்தாலும் 337தான்.

ஆட்டிற்கும், மாட்டிற்கும், மான்களுக்கும், கொம்பைக்கொடுத்த இறைவன்,
குதிரைக்கு ஏன் கொம்பைக் கொடுக்க வில்லை?

இதைச் சொன்னவுடன் என் நண்பர் ஒருவர் சொன்னார், "கழுதைக்கும்
கொம்பைக் கொடுக்கவில்லயே?"

நான் உடனே அவரிடம் சொன்னேன், "இல்லை இறைவன் Strengthஐ
கழுதைக்குக் கால்களில் கொடுத்துள்ளார் உதை வாங்கியவர்களுக்குத்
தெரியும் கேட்டுப்பார்"

அதற்குப் பெயர் சமப்படுத்தும் முறை!(Balancing Theory) Wealth இருக்கிறவனுக்கு
Health இருக்காது. Health இருக்கிறவனுக்கு Wealth இருக்காது. பயில்வானாக
இருக்கிறவனுக்கு மூளை Sharpஆக இருக்காது. Smart ஆக இருக்கிறவனுக்கு
உடல் பலம் மறுக்கப்பட்டிருக்கும்.

பிரதமருக்கும் 337தான், அம்பானிக்கும் 337தான். அவர்களுடைய கார்
டிரைவருக்கும் 337தான். கார் டிரைவர் Duty Time முடிந்தவுடன் தன்னுடைய
இரண்டு சக்கர வாகனத்தில் ஜாலியாக எங்கு வேண்டுமானலும் போவான்.
ஆனால் அவர்கள் Security இல்லாமல் எங்கும் செல்ல முடியாது

....................Written on 21.3.2007
========================================================
நீங்கள் பிறக்கும்போதே பன்னிரெண்டு சொந்தவீடுகளுடன்தான் பிறந்துள்ளீர்கள்.
அந்தப் பன்னிரெண்டு தொகுப்பு வீடுகள் கொண்ட இடத்தின் பெயர்தான் ஜாதகம்.

வட்டத்தின் 360 டிகிரி வகுத்தல் 12 கட்டங்கள் = 30 டிகிரி
அந்த முப்பது டிகிரிக்கு உட்பட்ட ஒரு இடம் ஒரு வீடு ஆகும்

ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு என்பார்கள்.
ஆங்கிலத்தில்,They will say them as houses.

உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது. அதுதான் தலைமைச்
செயலகம்.

அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.
மொத்தமாக சாதம், சாம்பார்,ரசம், பொரியல், தயிர் என்று
எல்லாவற்றையும் ஒன்றாக இலையில் கொட்டிவிட்டால் எப்படிச்
சாப்பிட முடியும்?

இன்று முதலாம் வீடு எனப்படும் லக்கினம் பற்றிய பாடம்!

முதல் வீட்டிலிருந்து ஒருவன் அல்லது ஒருத்தியின் தோற்றம், குணம்,
வாழ்க்கையில் அடையப்போகும் மேன்மை ஆகியவற்றைத் தெரிந்து
கொள்ளலாம்.

எல்லா லக்கினங்களுமே சமம் என்றாலும், சிம்ம லக்கினத்திற்கும் அதற்கு
எதிர்வீடான கும்ப லக்கினத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு.

அதனால்தான் சிம்ம லக்கினத்திற்கு அடையாளமாகச் சிங்கத்தையும் கும்ப
லக்கினத்திற்கு அடையாளமாக மாவிலை, தேங்காய்,சிறு செம்பு ஆகியவற்றின்
கூடிய கும்பத்தையும் அடையாளமாகக் கொடுத்துள்ளார்கள்

சிம்ம லக்கினத்தின் அதிபதி சூரியன். அதுபோல கும்ப லக்கினத்தின்
அதிபதி சனி. ஒன்றுக்கு ஒன்று எதிர்மறையான குணமுடைய லக்கினங்கள்

சிம்ம லக்கினக்காரர்கள் சமூகத்தில் அல்லது அவர்கள் இருக்கும் துறையில்
நாயகர்களாக இருப்பார்கள். (They will be Heroes)

சிம்ம லக்கினம் என்று மட்டுமில்லை சிம்ம ராசிக்காரர்களும் ஹீரோக்கள்தான்.
பெண்களாக இருந்தால் ஹீரோயினிகள்தான்.நல்ல உதாரணம் வேண்டு
மென்றால்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார்

சிம்மலக்கினக்காரர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்துடன்
இருப்பார்கள் பலரையும் கவரக்கூடிய தோற்றமாக இருக்கும்.

ஆனால் சூரியன் ஜாதகத்தில் அடிபட்டுப்போயிருந்தாலோ அல்லது
லக்கினத்தில் சனி அல்லது மாந்தி வந்து அமர்ந்திருந்தாலோ அப்படிப்பட்ட
தோற்றம் அவர்களுக்கு இருக்காது.

நவாம்சத்தில் சூரியன் கெட்டுப்போயிருந்தாலும் அதே பலன்தான்

சூரியன் என்ன தயிர்சாதமா - கெட்டுப்போவதற்கு? என்று கேட்பவர்களுக்கு
ஒரு சிறு விளக்கம். இங்கே கெட்டுப்போதல் என்னும் சொல். சூரியன்
லக்கினத்தில் இருந்து ஆறு அல்லது எட்டு அல்லது பன்னிரெண்டு ஆகிய
இடங்களில் அமர்வதையும், அதேபோல் பகை அல்லது நீச வீடுகளில் சென்று
அமர்ந்து விடுவதையும் அல்லது சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன்
சேர்ந்து விடுவதையும் குறிக்கும்.

சிம்ம லக்கினக்காரர்கள் முன் கோபக்காரர்கள்.பிடிவாதக்காரர்கள்
அவர்கள் நினைத்தால் நினைத்ததுதான். எந்த சக்தியாலும் அவர்களை மாற்ற
முடியாது. அவர்களுக்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்களை
யாரும் மடக்கிப் பிடித்துவிட முடியாது. அவர்களாக வந்தால்தான் உண்டு.
சிங்கம் தனியாக இருப்பதுபோல தனியாகத்தான் இருப்பார்கள். யாருடனும்
அதிகமான ஒட்டுதல் இருக்காது.வெளியில் ஒட்டியிருப்பதுபோல் தெரிந்தாலும்
உள் குணத்தால் பட்டும் படாமல் இருப்பார்கள்.அது வெளியே தெரியாமல்
பார்த்துக் கொள்வார்கள்

சிம்ம லக்கினத்தில், அதற்கு 4ம் வீட்டிற்கும், 9ம் வீட்டிற்கும் அதிபதியும்
(அதாவது ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு திரிகோண வீட்டிற்கும் அதிபதியானவரும்)
சிம்ம லக்கினத்திற்கு யோககாரனுமானமான செவ்வாய் கிரகம் வந்து அமர்ந்தால்
அந்த ஜாதகன் திறமைசாலியாக இருப்பான்.அவனிடம் பன்முகத் திறமை
இருக்கும். அதே பலன் லக்கினத்தில் வந்து அமராதபோதும் அந்த ஜாதகத்தில்
செவ்வாய் வலுவாக இருந்தாலும் கிடைக்கும்.

சிம்ம லக்கினத்திற்கு எதிர் வீடாகவும், முற்றிலும் மாறுதலான பலன்களைக்
கொண்டதாகவும் கும்ப லக்கினம் இருக்கும். கும்ப லக்கினக்காரர்கள்
நல்லவர்களாக இருப்பார்கள் கடும் உழைப்பாளிகள்.பொறுமைசாலிகள்.

கும்ப லக்கினப் பெண் என்றால் உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவளாக
இருப்பாள். அந்த லக்கினப் பெண் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அவளைத்
திருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கை அசத்தலாக இருக்கும்.

கும்ப லக்கின அதிபதியான சனி உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலோ அந்த ஜாதகன் வாழ்க்கையில் எல்லாவற்றையும்
சாதிக்கக் கூடிய சாதனையாளராக இருப்பார்.

அதேபோல கும்ப லக்கினத்திற்கு ஒரு இயற்கையான் கேடும் உள்ளது. கும்ப
லக்கினத்திற்கு லக்கின அதிபதியும் சனிதான் அதேபோல அந்த வீட்டிற்குக் கீழ்
வீடும், 12ம் வீடுமாகிய விரைய ஸ்தானத்திற்கு அதிபதியும் சனிதான். அதாவது
கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் அவனே - விரையாதிபதியும்
(Lord for the losses) அவனே!

ஆகவே கும்ப லக்கினத்திற்கு - either great success or great failure என்கின்ற
இரண்டு பலன்களில் ஒரு பலன் தான் வாழ்க்கையில் அமையும்!
..........Written on 17.10.2007
=====================================================
முதல் வீடு எனப்படும் லக்கினத்தைப் பற்றி ஒரு அடிப்படை விதியை நீங்கள்
அறிதல் அவசியம். ராசிகள் அட்டவனையைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று
தெள்ளத் தெளிவாக விளங்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும்
தலா ஒரு வீடுதான்.

மற்ற ஐந்து கிரகங்களுக்கும், அதாவது புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி
ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் இருக்கும். பலன்கள்
பெரும்பாலும் அந்த கிரகங்களின் குணங்களையும் உள்ளடக்கியிருக்கும்.
உதாரணமாக மிதுனம், கன்னி ஆகிய லக்கினக்காரர்களுக்குப் புதன்தான்
அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருப்பார்கள்.
அதேபோல சனி அதிபதியாக இருக்கும் மகரம், கும்பம் ஆகிய லக்கினத்தைச்
சேர்ந்தவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.சுக்கிரன் அதிபதியாக
இருப்பவர்கள்.கலைகளில் ஆர்வமுடையவர்களாகவும், குரு அதிபதியாக
இருப்பவர்கள், மனிதநேயம், தர்மசிந்தனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
இதெல்லாம் பொது விதி!.

1. லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் - அதாவது முன்னும், பின்னும் உள்ள
வீடுகளில் - சுபக் கிரகங்கள் இருந்தால் ஜாதகன் ராஜயோகம் உடையவனாக
இருப்பான். if Lagna is hemmed between benefic planets,the native will be
fortunate.

2. அதேபோல் லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் பாவக் கிரகங்கள் நின்றால்
அல்லது இருந்தால் - ஜாதகன் அதிர்ஷ்டமில்லாதவன். தரித்திரயோகம்.
வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும் அவன் அல்லது அவள்
எதையும் போராடித்தான் பெற வேண்டும்.

இரண்டு VIP வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால் எப்படி இருக்கும்
என்றும் அல்லது இரண்டு பேட்டை தாதாக்களின் வீடுகளுக்கு நடுவில் உங்கள்
வீடு இருந்தால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பாருங்கள்,
அப்போது உண்மை உங்களுக்குப் புலப்படும்.

இந்த விதி தலையான விதியாகும்.

இது லக்கினம் என்று மட்டுமில்லை, மற்ற எல்லா பாவங்களுக்குமே இது
பொருந்தும்.

இதே பலன்தான் ஏழாம் வீடு எனப்படும் திருமண வீடாக இருந்தாலும் சரி,
பத்தாம் வீடு எனப்படும் தொழில்/வேலை வீடாக இருந்தாலும் சரி, நான்காம்
வீடு எனப்படும் தாய், கல்வி, சுகம் ஆகியவற்றிற்கான வீடாக இருந்தாலும் சரி
அல்லது ஒன்பதாம் வீடு எனப்படும் தந்தை, முன்னோர் சொத்து, பாக்கியம்
ஆகியவை சம்பந்தப்பட்ட வீடாக இருந்தாலும் சரி பலன் அதற்கு ஏற்றார்
போலத்தான் இருக்கும்.

If the said house is surrounded by good planets, the results
of the said house will be good and on the contrary,
if it is surrounded by bad or melefic planets, the results of
the said houses will be bad.

ஜாதகத்தை அலசிப் பார்க்கும் போது இந்த விதியை நினைவில்
கொண்டு அலச வேண்டும்.

அந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம்

1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)
பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும்
நல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது
தொழில் செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில்
இருந்து நிறையப் பொருள் ஈட்டுவான்.

2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)
இருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக
வாழ்வான்.

3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் - அதாவது
ஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால்
அல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) அப்படியிருந்தாலும்
ஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால்
விதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான்.

4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்
(10th Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில்
இருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில்
பிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்.
...........Written on 21.11.2007

ஜோதிடம் என்பது மருந்து. Over dose ஆகிவிடக்கூடாது.
ஆகவே இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். நாளை சந்திப்போம்!

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

இந்தப் பதிவு வலை ஏற்றப்பட்ட நேரத்தைக் கவனியுங்கள்.
எல்லாம் உங்களுக்காகத்தான்!
அதோடு இன்னொன்றையும் கவனியுங்கள். இது ஜோதிடப் பாடத்தின்
200 வது பதிவு.

வாழ்க வளமுடன்!

57 comments:

வேலன். said...

200 வது பதிவிற்கு வாழ்ததுக்கள் அய்யா.. எல்லாம் ப்ளாஷ் பேக் பாடமாகவே போட்டுவிட்டிர்கள்.(இருக்கட்டும் புதிய மாணவர்கள் அப்படியாவது படிக்க வசதியாக இருக்கும்)
வாழ்க வளமுடன்,
வேலன்.

Thanuja said...

I really liked this topic...
so interesting the way u writing in tamil sir
Lagnam for me is Meenam and jupiter is in the 10th house....sagitarius wat would is your suggestion sir? Wat about navamsa lagnam? I heard it for your spouse...It's kumba lagnam saturn placed in gemini (5th house)?

SP.VR. SUBBIAH said...

////Blogger வேலன். said...
200 வது பதிவிற்கு வாழ்ததுக்கள் அய்யா.. எல்லாம் ப்ளாஷ் பேக் பாடமாகவே போட்டுவிட்டிர்கள்.(இருக்கட்டும் புதிய மாணவர்கள் அப்படியாவது படிக்க வசதியாக இருக்கும்)
வாழ்க வளமுடன்,
வேலன்./////

எழுதவிருக்கும் பாடத்திற்கு இந்த முன்னோட்டம் அவசியம். அதனால்தான் அதைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Thanuja said...
I really liked this topic...
so interesting the way u writing in tamil sir
Lagnam for me is Meenam and jupiter is in the 10th house....sagitarius wat would is your suggestion sir? Wat about navamsa lagnam? I heard it for your spouse...It's kumba lagnam saturn placed in gemini (5th house)?/////

Particulars are not sufficient to give you answer ; Please inform your birth details through email with only one specific question!

ananth said...

எனக்கு லக்னத்திலும் அதற்கு 2 பக்கமும் காலியாகத்தான் இருக்கிறது. இதனால்தானோ என்னவோ இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று பாடும் (அல்லது அப்படி விரும்பும் நிலையில்) இருந்திருக்கிறேனோ என்னவோ. முன்பு இப்போதல்ல. 1,10க்கு அதிபதியான புதன் 8ல் இருக்கிறார். 10க்கு 2 பக்கமும் 3 வில்லன்கள் வேறு இருக்கிறார்கள். இருந்தும் வேலை தேடி கஷ்டப்பட்டதும் இல்லை. வேலையில் கஷ்டம். பிரச்சினை என்று வந்ததில்லை. ஒரு வேலை போனால் வேறு வேலை சுலபமாக கிடைத்திருக்கிறது. இது எதனால் என்று நன்றாக ஆராய்ந்து பார்க்கிறேன். ஒரு வேலை இந்த பாட முடிவில் எனக்கு விடை கிடைக்கலாம்.

dhanan said...

வணக்கம் ஐயா,லக்னம் என்பது உடலமைப்பு,அழகு,பலம் சார்ந்தது மற்றும் சந்திரனே மன காரகன் என கூறி உள்ளீர்கள்.அவரை பொறுத்துதானே குணங்கள் அமய வேண்டும்.லக்னத்தை பொறுத்து எப்படி?சிறிய குழப்பம் தயவுகூர்ந்து விளக்கவும்.

அன்புடன்,
மதுரை தனா.

Slakshmanan said...

குருவே, ஒரு சந்தேகம், லக்கினாதிபதி 4ம் இல்லத்தில் அமர்வு பெற்றுள்ளார் ஆனால் அவ்வீடு அவருக்கு பகை, அவ்வாறு உள்ள சூழ்நிலையில் ஜாதகனின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?

துலா லக்கினத்திற்கு லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திற்க்கும்,8க்கும் உடையவர். பொதுவாக 8க்குடையவர் 2ல் அம்ர்வு பெறுவது சிறப்பல்லவே, ஆனால் லக்கினத்திற்க்கு உடையவர் 2ல் அமர்வு பெற்றால் சிறப்பு, இந்த அமைப்புள்ள் ஜாதகரின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?

Geekay said...

200 வது பதிவிற்கு வாழ்ததுக்கள் ஐயா!!

Slakshmanan said...

congrats for the 200th Edition of this epic on line teaching of vedic eyes, I wish to continue the same for grown this teaching session for much more editions.

Dr.Vinothkumar said...

amazing that you have finished 200 astro posts till date.Best wishes for your blog and also your book that will be published.

i have a doubt regarding the gender of the native.

I read somewhere that the gender of a native is found from the lagna.Each lagna when rising is in a particular tatwa and it denotes
the gender of a native.

can you explain this concept with examples as to how to find a chart is female or male?or any other method to find the gender of native?

sundar said...

வணக்கம் ஐயா

புரட்டி பார்க்க வேண்டிய பாடம் இதுபோல அதிகமாக இருக்கிறது,
அதயெலம் முதலில் நன்றாக படிக்கவேண்டும் அடிப்படை பாடங்கள்
முக்கியம்.எனக்கு லக்நதில் முன்னும் பின்னும் சுப கிரகம் , பவக்கிரகம்
இரண்டுமே இருக்கிறது மகர லக்கிணம் 12 ல் குரு , சூரியன் 2 ல் சுக்ரன் ,செவ்வாய்.

வாய்ப்பாடி குமார் said...

அய்யா, வணக்கம்.
தொழிலில் ஏற்ப்படும் கடன் அடைக்கவும்,வசூலாகவும் எந்தக் கடவுளை
வணங்கலாம் ?

வசூலும், உழைப்பும் நம்மளுடையதுதான்,ஆனால் ஒரு மன ஆறுதலுக்கும்,
நம்பிக்கைக்கும் மட்டுமே இந்த கேள்வி.

mike said...

hello sir, the nandhalala song was really nice. at times i feel it hasbeen written for me.lol

ananth sir, so are you kanniga lagna? cheers me too. but my lagna lord is in 6th house makara. 11 th lord(moon) is with guru in 2n house. gonna start budha dasha soon? wonder how its gonna be ?

master sir , did you check the link called " mars effect " on wiki. its about mars n sportsmen . makes for interesting reading. thanx

also isnt veerabhagu lordmurugas armygeneral ?

லோகு said...

நானும்
சிம்ம லக்கினம்தான்...

Indian said...

// ஒரு ராசி என்பது 30 பாகைகள் - ஒரு ராசியின் கால அளவு 24 மணிகள் வகுத்தால் 12 ராசி = 2 மணி நேரம் = 120 நிமிடங்கள் //

என்பதை,

** ஒரு ராசியின் கால அளவு = 2 மணி நேரம், அதாவது ஒரு நாளின் 24 மணிகளை ராசிகளின் எண்ணிக்கையான 12 ஆல் வகுத்தால் வருவது 2 மணி நேரம் = 120 நிமிடங்கள் ** என விளக்கியிருக்கலாம் ஐயா.

ஒரு ராசியின் கால அளவு 24 மணிகள் என்கிறீர்களே எனக் குழம்பிவிட்டேன். அங்கே மாட்டி நின்றவன் நகர தாமதம் ஆகிவிட்டது.

Ram said...

Dear Sir,

This is very interesting article about lagna. I have been a silent reader of your blog. Sir, I have a question.

Whenever we want to analyze both mine and my wife's horoscopes, astrologers always say that after marriage wife's horoscope has no effect, so we should not see their horoscope. I heard this only from astrologers in south India. But North India, astrologers say that everyone has individual horoscopes, so we must see both horoscopes. This is kind of confusing.
Let me tell you my problem. I am a south Indian and married to a North India girl. If we go to south Indian astrologer my wife is not happy about it because they simply refuse to see hers. So please tell me which is correct?

Thanks,
Ram

Dr.Vinothkumar said...

Dear Ram

if you can share your and your wife's birth details with us it will be interesting and helpful tool for learning as your case is peculiar

If you are willing please share the details

Hope our sir also will approve this request of mine.

Thanks

vinoth

SP.VR. SUBBIAH said...

/////Blogger ananth said...
எனக்கு லக்னத்திலும் அதற்கு 2 பக்கமும் காலியாகத்தான் இருக்கிறது. இதனால்தானோ என்னவோ இனிது

இனிது ஏகாந்தம் இனிது என்று பாடும் (அல்லது அப்படி விரும்பும் நிலையில்) இருந்திருக்கிறேனோ என்னவோ.

முன்பு இப்போதல்ல. 1,10க்கு அதிபதியான புதன் 8ல் இருக்கிறார். 10க்கு 2 பக்கமும் 3 வில்லன்கள் வேறு

இருக்கிறார்கள். இருந்தும் வேலை தேடி கஷ்டப்பட்டதும் இல்லை. வேலையில் கஷ்டம். பிரச்சினை என்று

வந்ததில்லை. ஒரு வேலை போனால் வேறு வேலை சுலபமாக கிடைத்திருக்கிறது. இது எதனால் என்று நன்றாக

ஆராய்ந்து பார்க்கிறேன். ஒரு வேலை இந்த பாட முடிவில் எனக்கு விடை கிடைக்கலாம்.//////

அஷ்டகவர்க்கத்தில் அதற்கான விடை கிடைக்கும். பொதுவாக 1,9,10,11 ஆகிய வீடுகளில் 30ம் அதற்கு

மேற்பட்ட பரல்களும் இருக்குமேயாயின் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். வெற்றிகரமாக இருக்கும்

SP.VR. SUBBIAH said...

/////Blogger dhanan said...
வணக்கம் ஐயா,லக்னம் என்பது உடலமைப்பு,அழகு,பலம் சார்ந்தது மற்றும் சந்திரனே மன காரகன் என கூறி

உள்ளீர்கள்.அவரை பொறுத்துதானே குணங்கள் அமய வேண்டும்.லக்னத்தை பொறுத்து எப்படி?சிறிய குழப்பம்

தயவுகூர்ந்து விளக்கவும்.
அன்புடன்,
மதுரை தனா./////

தோற்றத்திற்கும், மனோபாவத்திற்கும் உரிய இடம் லக்கினம். உடல்காரகன் சூரியன், மனகாரகன் சந்திரன்.
வீட்டையும், வீட்டு அதிபதிகளையும், காரகர்களையும் வைத்து மொத்தப் பலன். ஆகவே குழப்பம் வேண்டாம்

லக்கினம் நன்றாக இருந்தால் பதிப்பலன். காரகர்களும், அதிபதிகளும் நன்றாக இருந்தால் மட்டுமே முழுப்பலன்

SP.VR. SUBBIAH said...

/////Blogger Slakshmanan said...
குருவே, ஒரு சந்தேகம், லக்கினாதிபதி 4ம் இல்லத்தில் அமர்வு பெற்றுள்ளார் ஆனால் அவ்வீடு அவருக்கு

பகை, அவ்வாறு உள்ள சூழ்நிலையில் ஜாதகனின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?///////

அப்படி இருந்தால் mixed result
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
துலா லக்கினத்திற்கு லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திற்க்கும்,8க்கும் உடையவர். பொதுவாக 8க்குடையவர்

2ல் அம்ர்வு பெறுவது சிறப்பல்லவே, ஆனால் லக்கினத்திற்கு உடையவர் 2ல் அமர்வு பெற்றால் சிறப்பு, இந்த

அமைப்புள்ள ஜாதகரின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?

லக்கினாதிபதி 2ல் அமர்வதுடன், பார்வைகள், சுயவர்க்கப் பரல்கள் ஆகியவற்றிலும் சிறந்து இருக்க வேண்டும்.

அப்போதுதான் முழுப்பலன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

SP.VR. SUBBIAH said...

/////Blogger Geekay said...
200 வது பதிவிற்கு வாழ்ததுக்கள் ஐயா!!/////

நன்றி ஜீக்கே!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Slakshmanan said...
congrats for the 200th Edition of this epic on line teaching of vedic eyes, I wish to continue the same for

grown this teaching session for much more editions.///////

உங்கள் விருப்பம் நிறைவேறும்!

SP Sanjay said...

200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

Slakshmanan said...

குருவே ஒரு சந்தேகம்,

ரிஷப லக்கினத்திற்க்கு சனி யோக காரகன் (9க்கும், 10க்கும் உடையவர்) அவர் லக்கினத்திற்கு 5ல்(கன்னி) அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் தடைபடுமா? அதே வீட்டில் சூரியன்(4க்கு உடையவர்) மற்றும் குரு பகவான்(சுப கிரகம்) உடன் சனி இருந்தால்

பொதுவாக,9க்கு உடயவர் 5ல் இருந்தால் புத்திரர்களால் பிரபல யோகததுடன் விளங்குவார்கள் என்பது பொது விதி

10க்கு உடயவர் 5ல் இருந்தால் புத்திர விருத்தி ,செல்வாக்குடன் கூடிய குடும்பத்துடன் ஜாதகன் வாழ்வான் என்பது பொது விதியல்லவா?

இந்த விதி ரிஷப லக்கின காரர்களுக்கு பொருந்துமா?

4க்கு உடயவர் 5ல் இருந்தால் புத்திர விருத்தி மற்றும் வாகன் வசதி உடயவராகவும் இருப்பார் என்பது விதி இந்த ஜாதகதில் 4க்கு உடயவர் (சூரியன்) 5ல் இருப்பதால் இந்த பொது விதி மாறுமா?

மற்றுமொரு Scenario

துலா லக்கின காரர்களுக்கு சனி (4க்கும் 5க்கும் உடயவர்) ,அவர் 11ல்(சிம்மத்தில் அமர்ந்து 5வது பாவத்தை பார்த்தால் குழந்தை பாக்கியம் எவ்வாறு இருக்கும், 5ல் கேது. 11ல் சனியுடன் ராகு.
பொதுவாக் புததிர ஸ்தானத்தை சனி/ராகு பார்த்தால் நல்லதலலவே
பொதுவாக லக்கினத்திற்கு 5க்குடையவர் 11ல் இருந்தால் புத்திர விருத்தி மற்றும் குடும்ப அமைதியும் கொன்டவர்களாக இருப்பார்கள் என்பது பொது விதியல்லவா?

லக்கினம் சந்தி லக்கினமாக இருந்தால் மேற்கூறிய பலன்கள் எவ்வாறு இருக்கும்?

sundar said...

வணக்கம் ஐயா

எனக்கு லக்நதில் முன்னும் பின்னும் சுப கிரகம் , பவக்கிரகம்
இரண்டுமே இருக்கிறது மகர லக்கிணம் 12 ல் குரு , சூரியன். 2 ல் சுக்ரன் ,செவ்வாய் ?

வாய்ப்பாடி குமார் said...

மீண்டும் ஒரு முறை :

அய்யா, வணக்கம்.
தொழிலில் ஏற்ப்படும் கடன் அடைக்கவும்,வசூலாகவும் எந்தக் கடவுளை
வணங்கலாம் ?

Emmanuel Arul Gobinath said...

4.17 am ஜயாவின் வேலை பளு தெரிகிறது. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள். தேவையான ஒரு பதிவு மீட்டிபார்க்க !

Sridhar said...

அய்யா,

பாடம் சூப்பர், தலையாகிய லக்கினம் பற்றிய பாடம் புரிந்தது. பன்னிரண்டாம் வீட்டு அதிபதியும் முதல் வீட்டு அதிபதியும் எங்கு சேர்ந்தாலும் அது நன்மை பயக்காது - சற்று விளக்க முடியுமா?

நன்றி.

ஸ்ரீதர்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

200-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா..

பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்..

தேர்தல் வேலைகளால் கொஞ்சம் பிஸியாகிவிட்டதால் கொஞ்சம் தாமதம்..

மன்னிக்கவும்..

Monickam said...
This comment has been removed by the author.
SP.VR. SUBBIAH said...

//////Blogger Dr.Vinothkumar said...
amazing that you have finished 200 astro posts till date.Best wishes for your blog and also your book that

will be published.
i have a doubt regarding the gender of the native.
I read somewhere that the gender of a native is found from the lagna.Each lagna when rising is in a

particular tatwa and it denotes
the gender of a native.
can you explain this concept with examples as to how to find a chart is female or male?or any other

method to find the gender of native?///////

There is no easy tool or method to find the gender of native.

The Ardha Nadiamsa (Nadi Divisions) mostly holds the secret of the sex of beings.

Naadi is 150th of division(D150) and Ardha naadi takes has Uttara(Fore)
and Purva(Hind) part of each division. Hence we get 300th of division.

Parasara's Sixteen charts compositely divide zodiac in 150 unequal
parts. Equal 150 division can also be made.

Equal division divides a Bhaava of 120Mins into 300 parts of 24
Seconds each. 24 Seconds is called Vighatika. Similar in calculation
like Hora Lagna (1 Hour equal duration), Bhava Lagna(2 Hour equal
notation).

I have appended a link for horai calculation
http://www.agasthiar.org/panchang/horai/horai.htm
from horai you can calculate the ardha nadi. But fixing 24 seconds of a particular birth is very difficult.

SP.VR. SUBBIAH said...

Blogger sundar said...
வணக்கம் ஐயா
புரட்டி பார்க்க வேண்டிய பாடம் இதுபோல அதிகமாக இருக்கிறது,
அதையெல்லாம் முதலில் நன்றாக படிக்கவேண்டும் அடிப்படை பாடங்கள்
முக்கியம்.எனக்கு லக்னத்தில் முன்னும் பின்னும் சுப கிரகம் , பாவக்கிரகம்
இரண்டுமே இருக்கிறது மகர லக்கினம் 12 ல் குரு , சூரியன் 2 ல் சுக்ரன் ,செவ்வாய்.

அப்படியிருந்தால் கலவையான பலன்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger வாய்ப்பாடி குமார் said...
அய்யா, வணக்கம்.
தொழிலில் ஏற்படும் கடன் அடைக்கவும்,வசூலாகவும் எந்தக் கடவுளை
வணங்கலாம் ?
வசூலும், உழைப்பும் நம்மளுடையதுதான்,ஆனால் ஒரு மன ஆறுதலுக்கும்,
நம்பிக்கைக்கும் மட்டுமே இந்த கேள்வி./////

கடவுள் ஒருவர்தான். அவரைப் பலவடிவங்களில் நாம் வணங்குகிறோம். உங்களுக்கு எந்த வடிவில் பிடித்திருக்கிறதோ அந்த வடிவில் வணங்குங்கள்

செல்லி said...

Dear Sir
It is an interesting article to read about Lagna. The explanations about Lagna and the example are excellent!
//ஆட்டிற்கும், மாட்டிற்கும், மான்களுக்கும், கொம்பைக்கொடுத்த இறைவன்,
குதிரைக்கு ஏன் கொம்பைக் கொடுக்க வில்லை?

இதைச் சொன்னவுடன் என் நண்பர் ஒருவர் சொன்னார், "கழுதைக்கும்
கொம்பைக் கொடுக்கவில்லயே?"//

As you requested I have sent my (sister's )sons birth details via email. Could you please help me when you have time?
Thank you for your time.
Thanks again , Sir

SP.VR. SUBBIAH said...

Blogger mike said...
hello sir, the nandhalala song was really nice. at times i feel it hasbeen written for me.lol
ananth sir, so are you kanniga lagna? cheers me too. but my lagna lord is in 6th house makara. 11 th lord(moon) is with guru in 2n house. gonna start budha dasha soon? wonder how its gonna be ?
master sir , did you check the link called " mars effect " on wiki. its about mars n sportsmen . makes for interesting reading. thanx
also isnt veerabhagu lordmurugas armygeneral ?//////

முருகனின் படைவீரர்களில் வீரபாகுவும் ஒருவர்!

SP.VR. SUBBIAH said...

////Blogger லோகு said...
நானும்
சிம்ம லக்கினம்தான்.../////

தகவலுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

Blogger Indian said...
// ஒரு ராசி என்பது 30 பாகைகள் - ஒரு ராசியின் கால அளவு 24 மணிகள் வகுத்தல் 12 ராசி = 2 மணி நேரம் = 120 நிமிடங்கள் //
என்பதை,
** ஒரு ராசியின் கால அளவு = 2 மணி நேரம், அதாவது ஒரு நாளின் 24 மணிகளை ராசிகளின் எண்ணிக்கையான 12 ஆல் வகுத்தால் வருவது 2 மணி நேரம் = 120 நிமிடங்கள் ** என விளக்கியிருக்கலாம் ஐயா.
ஒரு ராசியின் கால அளவு 24 மணிகள் என்கிறீர்களே எனக் குழம்பிவிட்டேன். அங்கே மாட்டி நின்றவன் நகர தாமதம் ஆகிவிட்டது.//////

கால அளவு = 24 மணிகள் வகுத்தல் 12 ராசிகள் = 2 மணி நேரம்
equal to என்னும் குறி விடுபட்டுவிட்டதால் வந்த குழப்பம். குறியைச் சேர்த்துவிட்டேன். இப்போது படித்துப்பாருங்கள்

SP.VR. SUBBIAH said...

///////Blogger Ram said...
Dear Sir,
This is very interesting article about lagna. I have been a silent reader of your blog. Sir, I have a question.
Whenever we want to analyze both mine and my wife's horoscopes, astrologers always say that after marriage wife's horoscope has no effect, so we should not see their horoscope. I heard this only from astrologers in south India. But North India, astrologers say that everyone has individual horoscopes, so we must see both horoscopes. This is kind of confusing.
Let me tell you my problem. I am a south Indian and married to a North India girl. If we go to south Indian astrologer my wife is not happy about it because they simply refuse to see hers. So please tell me which is correct?
Thanks,
Ram/////
அது உண்மையல்ல. ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது. ஒன்றை ஒன்று சார்ந்ததல்ல!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Dr.Vinothkumar said...
Dear Ram
if you can share your and your wife's birth details with us it will be interesting and helpful tool for learning as your case is peculiar
If you are willing please share the details
Hope our sir also will approve this request of mine.
Thanks
vinoth//////

அது உண்மையல்ல. ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது. ஒன்றை ஒன்று சார்ந்ததல்ல!
ஆகவே உங்கள் ஆய்விற்கு அது தேவைப்படாது!

SP.VR. SUBBIAH said...

/////Blogger SP Sanjay said...
200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்////

நன்றி சஞ்சைய்!

SP.VR. SUBBIAH said...

//////////Blogger Slakshmanan said...
குருவே ஒரு சந்தேகம்,
ரிஷப லக்கினத்திற்க்கு சனி யோககாரகன் (9க்கும், 10க்கும் உடையவர்) அவர் லக்கினத்திற்கு 5ல்(கன்னி) அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் தடைபடுமா? அதே வீட்டில் சூரியன்(4க்கு உடையவர்) மற்றும் குரு பகவான்(சுப கிரகம்) உடன் சனி இருந்தால்///////

யோககாரகன் தடையாக இருக்கமாட்டார். அப்புறம் யோககாரகன் என்ற பதவி எதற்கு?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பொதுவாக,9க்கு உடையவர் 5ல் இருந்தால் புத்திரர்களால் பிரபல யோகததுடன் விளங்குவார்கள் என்பது பொது விதி
10க்கு உடயவர் 5ல் இருந்தால் புத்திர விருத்தி ,செல்வாக்குடன் கூடிய குடும்பத்துடன் ஜாதகன் வாழ்வான் என்பது பொது விதியல்லவா?
இந்த விதி ரிஷப லக்கின காரர்களுக்கு பொருந்துமா?////////

பொருந்தும்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
4க்கு உடயவர் 5ல் இருந்தால் புத்திர விருத்தி மற்றும் வாகன் வசதி உடையவராகவும் இருப்பார் என்பது விதி இந்த ஜாதகதில் 4க்கு உடயவர் (சூரியன்) 5ல் இருப்பதால் இந்த பொது விதி மாறுமா?/////

புத்திர ஸ்தானத்தை வைத்து மடக்கி மடக்கி கேள்விகள் கேட்கிறீர்களே?
அதைவிடச் சுலபமான வழி இருக்கிறது.
புத்தர ஸ்தானம், அதன் அதிபதி அமர்ந்த வீடு, காரகன் குரு அமர்ந்த வீடு, ஆகிய மூன்று வீடுகளிலும்
30 பரல்களோ அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களோ இருக்கிறதா என்று பாருங்கள்.
அதைக் கணவன், மனைவி இருவருக்கும் பார்க்க வேண்டும்

SP.VR. SUBBIAH said...

////Blogger Emmanuel Arul Gobinath said...
4.17 am ஜயாவின் வேலை பளு தெரிகிறது. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள். தேவையான ஒரு பதிவு மீட்டிபார்க்க !//////

நன்றி இமானுவேல்!

SP.VR. SUBBIAH said...

////Blogger Sridhar said...
அய்யா,
பாடம் சூப்பர், தலையாகிய லக்கினம் பற்றிய பாடம் புரிந்தது. பன்னிரண்டாம் வீட்டு அதிபதியும் முதல் வீட்டு அதிபதியும் எங்கு சேர்ந்தாலும் அது நன்மை பயக்காது - சற்று விளக்க முடியுமா?
நன்றி.
ஸ்ரீதர்////

12ஆம் வீட்டு அதிபதி விரைய ஸ்தானத்திற்கு அதிபதி. ஆகவே அவர் லக்கின நாதனுடன் சேர்வது நன்மையளிக்காது!

SP.VR. SUBBIAH said...

////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
200-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா..
பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்..
தேர்தல் வேலைகளால் கொஞ்சம் பிஸியாகிவிட்டதால் கொஞ்சம் தாமதம்..
மன்னிக்கவும்..//////

நன்றி ஊனா தானா! நீங்கள் வேலை செய்யும் கட்சி வெற்றிபெற பானா ழானா உதவி செய்வார்!

SP.VR. SUBBIAH said...

Blogger செல்லி said...
Dear Sir
It is an interesting article to read about Lagna. The explanations about Lagna and the example are excellent!
//ஆட்டிற்கும், மாட்டிற்கும், மான்களுக்கும், கொம்பைக்கொடுத்த இறைவன்,
குதிரைக்கு ஏன் கொம்பைக் கொடுக்க வில்லை?
இதைச் சொன்னவுடன் என் நண்பர் ஒருவர் சொன்னார், "கழுதைக்கும்
கொம்பைக் கொடுக்கவில்லயே?"//
As you requested I have sent my (sister's )sons birth details via email. Could you please help me when you have time?
Thank you for your time.
Thanks again , Sir///////

பார்த்துச் சொல்கிறேன். ஆனால் பொறுமையாக இருக்க வேண்டும்.
எனது மெயில் பாக்ஸில் 200க்கும் மேற்பட்ட மெயில்கள் பதிலுக்காக உள்ளன.
அனைத்திற்கும் ஒரே நாளில் பதில் எழுதுவது எப்படி சாத்தியமாகும்?
அதில் ஒருவர் மெயிலை அனுப்பிவிட்டு மூன்றே நாட்களில் 18 ரிமைண்டர்கள்
அனுப்பியுள்ளார்.

Slakshmanan said...
This comment has been removed by the author.
Sridhar said...

////Blogger Sridhar said...
அய்யா,
பாடம் சூப்பர், தலையாகிய லக்கினம் பற்றிய பாடம் புரிந்தது. பன்னிரண்டாம் வீட்டு அதிபதியும் முதல் வீட்டு அதிபதியும் எங்கு சேர்ந்தாலும் அது நன்மை பயக்காது - சற்று விளக்க முடியுமா?
நன்றி.
ஸ்ரீதர்////

12ஆம் வீட்டு அதிபதி விரைய ஸ்தானத்திற்கு அதிபதி. ஆகவே அவர் லக்கின நாதனுடன் சேர்வது நன்மையளிக்காது!/////

நன்றி,

என் ஜாதகத்தில் - மிதுன லக்னம், புதன் மற்றும் சுக்கிரன் கன்னி ராசியில் (புதன் ஒன்று மற்றும் நான்காம் வீட்டு அதிபதி. பன்னிரெண்டாம் வீட்டு அதிபதி சுக்கிரன் - அவரே ஐந்தாம் வீட்டு அதிபதி - முதல மற்றும் நான்காம் வீடு தலா 30 பரல்கள். பன்னிரெண்டாம் வீடு 30 பரல்கள். ஐந்தாம் வீடு 27 பரல்கள்.

புதன் தசை எனக்கு பெரிதாக ஒன்றும் கொடுக்க வில்லை. தற்போது சுக்கிரன் தசை (சுய புக்தி) நடை பெறுகிறது.

எப்படி எடுத்து கொள்வது? தயவு செய்து விளக்க முடியுமா?

நன்றி,

ஸ்ரீதர்

செல்லி said...

//பார்த்துச் சொல்கிறேன். ஆனால் பொறுமையாக இருக்க வேண்டும்.
//
I will, Sir

Thanks

Slakshmanan said...

குருவே ஒரு சந்தேகம்,

ரிஷப லக்கினத்திற்க்கு சனி யோககாரகன் (9க்கும், 10க்கும் உடையவர்) அவர் லக்கினத்திற்கு 5ல்(கன்னி) அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் தடைபடுமா? அதே வீட்டில் சூரியன்(4க்கு உடையவர்) மற்றும் குரு பகவான்(சுப கிரகம்) உடன் சனி இருந்தால்///////

யோககாரகன் தடையாக இருக்கமாட்டார். அப்புறம் யோககாரகன் என்ற பதவி எதற்கு?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பொதுவாக,9க்கு உடையவர் 5ல் இருந்தால் புத்திரர்களால் பிரபல யோகததுடன் விளங்குவார்கள் என்பது பொது விதி

10க்கு உடயவர் 5ல் இருந்தால் புத்திர விருத்தி ,செல்வாக்குடன் கூடிய குடும்பத்துடன் ஜாதகன் வாழ்வான் என்பது பொது விதியல்லவா?
இந்த விதி ரிஷப லக்கின காரர்களுக்கு பொருந்துமா?////////

பொருந்தும்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
4க்கு உடயவர் 5ல் இருந்தால் புத்திர விருத்தி மற்றும் வாகன் வசதி உடையவராகவும் இருப்பார் என்பது விதி இந்த ஜாதகதில் 4க்கு உடயவர் (சூரியன்) 5ல் இருப்பதால் இந்த பொது விதி மாறுமா?/////

புத்திர ஸ்தானத்தை வைத்து மடக்கி மடக்கி கேள்விகள் கேட்கிறீர்களே?
அதைவிடச் சுலபமான வழி இருக்கிறது.
புத்தர ஸ்தானம், அதன் அதிபதி அமர்ந்த வீடு, காரகன் குரு அமர்ந்த வீடு, ஆகிய மூன்று வீடுகளிலும்
30 பரல்களோ அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களோ இருக்கிறதா என்று பாருங்கள்.
அதைக் கணவன், மனைவி இருவருக்கும் பார்க்க வேண்டும்
===============================================
இந்த விஷயத்தில் இவர்களுக்கு positive ஆன விஷயங்கள் பொது விதியில் இருந்தாலும் வெகு நாட்களாக குழந்தை இல்லை

கனவர் ஜாதகம் :

லக்கினம் : துலாம்
ராசி : கடகம்
ந்ட்ச்த்திரம் : ஆயில்யம்(பால் உள்ளது)

புத்தர ஸ்தானம் 27 பரல்கள்
அதன் அதிபதி அமர்ந்த வீடு(சனி/சிம்மம்) 31 பரல்கள்
காரகன் குரு அமர்ந்த வீடு(கடகம்/உச்சம்(வ்)) 25 பரல்கள்

===============================================

மனைவி ஜாதகம்

லக்கினம் : ரிஷபம்
ராசி : கடகம்
நட்ச்த்திரம்: புனர்பூசம்

புத்தர ஸ்தானம் 23 பரல்கள்
அதன் அதிபதி அமர்ந்த வீடு(புதன்/துலாம்) 24 பரல்கள்
காரகன் குரு அமர்ந்த வீடு(கன்னி) 23 பரல்கள்

===============================================

சற்று சிக்கலாகத்தான் உள்ளது, மேலும் ஒரு சந்தேகம், ஜகநாத ஹோரா/பராசரா/ஹொராஸ்கோப் எகஸ்ப்ளோரர் போன்ற மென்பொருள்க்ள் கனவர் ஜாதகத்தில் ராகு புத்திரகாரகன் என்றும் மனைவி ஜாதகத்தில் சுக்கிரன் புத்திரகாரகன் என்றும் குறிப்பிட்டுள்ளன். இந்த் மென்பொருள்க்ள் எவ்வாறு அப்படி கணக்கிடுகின்றன்?

அந்த கனக்கில் பார்த்தால்

கனவர் ஜாதகம் :

காரகன் (ராகு/சிம்மம் உடன் சனி) 31 பரல்கள்

மனைவி ஜாதகம்
காரகன் (சுக்கிரன்/சிம்மம்) 31 பரல்கள்

ச்ற்று சிக்கலாக இருந்தாலும் மிக் குழ்ப்பமாக உள்ளது

மற்ற அம்சங்க்ள் ஆராய்ந்து பார்ககும் பொழுது

கனவர் ஜாதகம்

positive

மகரத்தில் செவ்வாய் (உச்சம்) : இது போன்ற அமைப்பில் 40 வய்துக்கு மேல் கர்ம் புத்திரர்க்ள் பிறப்பர் என்பது பொது விதி

குருவிற்கு 5ல் சுக்கிரன்

negative

5ல் கேது (சனி,புத்திரஸ்தானதிபதி பார்வை)

Arulkumar Rajaraman said...

Dear Sir

Sara, Isthira, ubhaya lagnam - Adhan bhadhagadhibadhi patri satru vilakkavum..

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

வாய்ப்பாடி குமார் said...

அய்யா, வணக்கம்.
தொழிலில் ஏற்படும் கடன் அடைக்கவும்,வசூலாகவும் எந்தக் கடவுளை
வணங்கலாம் ?
வசூலும், உழைப்பும் நம்மளுடையதுதான்,ஆனால் ஒரு மன ஆறுதலுக்கும்,
நம்பிக்கைக்கும் மட்டுமே இந்த கேள்வி./////

கடவுள் ஒருவர்தான். அவரைப் பலவடிவங்களில் நாம் வணங்குகிறோம். உங்களுக்கு எந்த வடிவில் பிடித்திருக்கிறதோ அந்த வடிவில் வணங்குங்கள்"////

நன்றி. தெளிவான பதில்.

நிதர்சனம்.

SP.VR. SUBBIAH said...

Blogger Sridhar said...
////Blogger Sridhar said...
அய்யா,
பாடம் சூப்பர், தலையாகிய லக்கினம் பற்றிய பாடம் புரிந்தது. பன்னிரண்டாம் வீட்டு அதிபதியும் முதல் வீட்டு அதிபதியும் எங்கு சேர்ந்தாலும் அது நன்மை பயக்காது - சற்று விளக்க முடியுமா?
நன்றி.
ஸ்ரீதர்////
12ஆம் வீட்டு அதிபதி விரைய ஸ்தானத்திற்கு அதிபதி. ஆகவே அவர் லக்கின நாதனுடன் சேர்வது நன்மையளிக்காது!/////
நன்றி,
என் ஜாதகத்தில் - மிதுன லக்னம், புதன் மற்றும் சுக்கிரன் கன்னி ராசியில் (புதன் ஒன்று மற்றும் நான்காம் வீட்டு அதிபதி. பன்னிரெண்டாம் வீட்டு அதிபதி சுக்கிரன் - அவரே ஐந்தாம் வீட்டு அதிபதி - முதல மற்றும் நான்காம் வீடு தலா 30 பரல்கள். பன்னிரெண்டாம் வீடு 30 பரல்கள். ஐந்தாம் வீடு 27 பரல்கள்.
புதன் தசை எனக்கு பெரிதாக ஒன்றும் கொடுக்க வில்லை. தற்போது சுக்கிரன் தசை (சுய புக்தி) நடை பெறுகிறது.
எப்படி எடுத்து கொள்வது? தயவு செய்து விளக்க முடியுமா?
நன்றி,
ஸ்ரீதர்//////

கன்னியில் புதன் உச்சம், சுக்கிரன் நீசம். இருவரும் சேர்ந்து நீசபங்க ராஜயோகத்தைத் தருவார்கள்.
சற்றுப் பொறுமையாக இருங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்!

SP.VR. SUBBIAH said...

///////////Blogger செல்லி said...
//பார்த்துச் சொல்கிறேன். ஆனால் பொறுமையாக இருக்க வேண்டும்.
// I will, Sir
Thanks/////

நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

Blogger Slakshmanan said...
குருவே ஒரு சந்தேகம்,
ரிஷப லக்கினத்திற்க்கு சனி யோககாரகன் (9க்கும், 10க்கும் உடையவர்) அவர் லக்கினத்திற்கு 5ல்(கன்னி) அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் தடைபடுமா? அதே வீட்டில் சூரியன்(4க்கு உடையவர்) மற்றும் குரு பகவான்(சுப கிரகம்) உடன் சனி இருந்தால்///////
யோககாரகன் தடையாக இருக்கமாட்டார். அப்புறம் யோககாரகன் என்ற பதவி எதற்கு?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பொதுவாக,9க்கு உடையவர் 5ல் இருந்தால் புத்திரர்களால் பிரபல யோகததுடன் விளங்குவார்கள் என்பது பொது விதி
10க்கு உடயவர் 5ல் இருந்தால் புத்திர விருத்தி ,செல்வாக்குடன் கூடிய குடும்பத்துடன் ஜாதகன் வாழ்வான் என்பது பொது விதியல்லவா?
இந்த விதி ரிஷப லக்கின காரர்களுக்கு பொருந்துமா?////////
பொருந்தும்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
4க்கு உடயவர் 5ல் இருந்தால் புத்திர விருத்தி மற்றும் வாகன் வசதி உடையவராகவும் இருப்பார் என்பது விதி இந்த ஜாதகதில் 4க்கு உடயவர் (சூரியன்) 5ல் இருப்பதால் இந்த பொது விதி மாறுமா?/////

புத்திர ஸ்தானத்தை வைத்து மடக்கி மடக்கி கேள்விகள் கேட்கிறீர்களே?
அதைவிடச் சுலபமான வழி இருக்கிறது.
புத்தர ஸ்தானம், அதன் அதிபதி அமர்ந்த வீடு, காரகன் குரு அமர்ந்த வீடு, ஆகிய மூன்று வீடுகளிலும்
30 பரல்களோ அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களோ இருக்கிறதா என்று பாருங்கள்.
அதைக் கணவன், மனைவி இருவருக்கும் பார்க்க வேண்டும்
===============================================
இந்த விஷயத்தில் இவர்களுக்கு positive ஆன விஷயங்கள் பொது விதியில் இருந்தாலும் வெகு நாட்களாக குழந்தை இல்லை
கனவர் ஜாதகம் : லக்கினம் : துலாம்
ராசி : கடகம்
ந்ட்ச்த்திரம் : ஆயில்யம்(பால் உள்ளது)
புத்தர ஸ்தானம் 27 பரல்கள்
அதன் அதிபதி அமர்ந்த வீடு(சனி/சிம்மம்) 31 பரல்கள்
காரகன் குரு அமர்ந்த வீடு(கடகம்/உச்சம்(வ்)) 25 பரல்கள்
===============================================
மனைவி ஜாதகம்
லக்கினம் : ரிஷபம்
ராசி : கடகம்
நட்ச்த்திரம்: புனர்பூசம்
புத்தர ஸ்தானம் 23 பரல்கள்
அதன் அதிபதி அமர்ந்த வீடு(புதன்/துலாம்) 24 பரல்கள்
காரகன் குரு அமர்ந்த வீடு(கன்னி) 23 பரல்கள்
===============================================
சற்று சிக்கலாகத்தான் உள்ளது, மேலும் ஒரு சந்தேகம், ஜகநாத ஹோரா/பராசரா/ஹொராஸ்கோப் எகஸ்ப்ளோரர் போன்ற மென்பொருள்க்ள் கனவர் ஜாதகத்தில் ராகு புத்திரகாரகன் என்றும் மனைவி ஜாதகத்தில் சுக்கிரன் புத்திரகாரகன் என்றும் குறிப்பிட்டுள்ளன். இந்த் மென்பொருள்க்ள் எவ்வாறு அப்படி கணக்கிடுகின்றன்?
அந்த கனக்கில் பார்த்தால்
கனவர் ஜாதகம் :
காரகன் (ராகு/சிம்மம் உடன் சனி) 31 பரல்கள்
மனைவி ஜாதகம்
காரகன் (சுக்கிரன்/சிம்மம்) 31 பரல்கள்
ச்ற்று சிக்கலாக இருந்தாலும் மிக் குழ்ப்பமாக உள்ளது
மற்ற அம்சங்க்ள் ஆராய்ந்து பார்ககும் பொழுது
கனவர் ஜாதகம்
positive
மகரத்தில் செவ்வாய் (உச்சம்) : இது போன்ற அமைப்பில் 40 வய்துக்கு மேல் கர்ம் புத்திரர்க்ள் பிறப்பர் என்பது பொது விதி
குருவிற்கு 5ல் சுக்கிரன்
negative
5ல் கேது (சனி,புத்திரஸ்தானதிபதி பார்வை)////////////
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மனைவியின் ஜாதகத்தில் மூன்று இடங்களிலும் பரல்கள் 25ற்கும் குறைவாக உள்ளது.
மிகவும் குழம்பிக் கொள்ளாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் கருணை என்று ஒன்று உள்ளது.
அந்தப் பெண்மணியைத் தினமும், மாலை நேரங்களில் விளக்கேற்றி இறைவனை வழிபடச்சொல்லுங்கள்!

SP.VR. SUBBIAH said...

Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Sara, Isthira, ubhaya lagnam - Adhan bhadhagadhibadhi patri satru vilakkavum..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////

அடுத்தடுத்து எழுதுவேன். சற்றுப் பொறுமையாக இருந்து படியுங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger வாய்ப்பாடி குமார் said...
அய்யா, வணக்கம்.
தொழிலில் ஏற்படும் கடன் அடைக்கவும்,வசூலாகவும் எந்தக் கடவுளை
வணங்கலாம் ?
வசூலும், உழைப்பும் நம்மளுடையதுதான்,ஆனால் ஒரு மன ஆறுதலுக்கும்,
நம்பிக்கைக்கும் மட்டுமே இந்த கேள்வி./////
கடவுள் ஒருவர்தான். அவரைப் பலவடிவங்களில் நாம் வணங்குகிறோம். உங்களுக்கு எந்த வடிவில் பிடித்திருக்கிறதோ அந்த வடிவில் வணங்குங்கள்"////
நன்றி. தெளிவான பதில்.
நிதர்சனம்//////

நன்றி குமார்!

Krushna Cumaar said...

Sir
when I refer a computer horoscope I could see the parals of each houses. But I am not able to understand about suyavargam of 7 planets. You have mentioned in your earlier lessons that each planet has 8 parals and atleast each should have a minimum of 4 parals. In Ashtavargam chart name of 7 planets are given horzondally at the top and 12 houses are given vertically on left hand side. When I refered to that I could understand about the parals of houses which generally varies from 20 to 40 parals. Similarly all 7 planets are also having parals which are inbetween 35 t0 50. But you have mentioned that each planets have only 8. I am confused. Please explain. Out of interest I am workig on this subject at this time. (now it is 1.10 am midnight)
Orelse should we devide this by 12?
I was trying to find out from your earlier lessons and unable to find out.
Thanks