மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.5.09

வீரபாகு கேட்ட வரம்

என் நண்பரும், 'மல்லிகை மகள்' என்னும் பெருமைக்குரிய மாத இதழின்
ஆசிரியருமான திரு.ம.கா.சிவஞானம் அவர்கள் புத்தம் புதிய ஆன்மிக
மாத இதழ் ஒன்றை இந்த மாதம் முதல் வெளியிடத் துவங்கியுள்ளார்.

அதன் பெயர் "சுபவரம்" முதல் இதழ் இந்த மாதம் முதல் தேதியன்று
வெளியாகியுள்ளது. எல்லா Book Stall களிலும் கிடைக்கும்

இதழ் அசத்தலாக இருக்கிறது. அனைவரும் வாங்கிப்படித்து மகிழுங்கள்
--------------------------------------------------------------------------------------------
அதன் முதல் இதழில், கீழே எழுதியுள்ள எனது ஞானக் கதை
வெளியாகியுள்ளது.

அதேபோல நமது சக பதிவர். திரு ஓம்கார் சுவாமி அவர்களின்
இரண்டு சிறப்புக்கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.

அவை என்னவென்கிறீர்களா?

எல்லாவற்றையும் இங்கேயே சொல்லிவிட்டால், புத்தகம் விற்க வேண்டாமா?

ஆகவே ஸ்டாலில் வாங்கிப் படியுங்கள்
===================================================
முக்கியமான செய்தி கதைக்குப் பிறகு உள்ளது.

===========================================
அடியேன் எழுதிய அந்தக் கதை உங்கள் பார்வைக்காக!

வீரபாகு கேட்ட வரம்

உண்மையான பக்திக்கு முருகப் பெருமானின் முதன்மைப் பக்தரான
வீரபாகுவை உதாரணமாகக் கொள்ளலாம்.

ஒருமுறை தன்னை நினைத்து, மனம் உருகிப் பிரார்த்தனை செய்த
வீரபாகுவின் முன்பு முருகப்பெருமான் காட்சி கொடுத்தார்.

இறைவனை நேரில் கண்ட வீரபாகு, அளவிட முடியாத பரவசம்
அடைந்ததோடு, இறைவனின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
வணங்கியவர், இறைவனின் பொற்பாதங்களைப் பற்றிய நிலையில்
எழ மனமில்லாமல் அப்படியே கிடந்தார்.

தன் பக்தன் வீரபாகுவை எழச்செய்த முருகன், அவனுடைய பக்தியின்
தன்மையைச் சோதிக்க எண்ணிக் கேட்டார்

"வீரபாகு, என்ன வேண்டும் உனக்கு? கேள்,தருகிறேன்!"

"அய்யனே, உமதருளால் நான் மன நிறைவோடு இருக்கிறேன். எனக்கு
ஒன்றும் வேண்டாம். கேட்டுப் பெறும் நிலையில் எதுவும் இல்லை!
உங்கள் அருளாசி ஒன்று போதும்!" இது வீரபாகு.

விடுவாரா முருகன்? விடவில்லை!

"நான் காட்சி கொடுத்தால், ஏதாவது தந்துவிட்டுச் செல்வதுதான் வழக்கம்.
ஆகவே உனக்கு வரம் ஒன்றைத் தந்துவிட்டேன். என்ன வேண்டுமோ
அதை நீயே நிறைவு செய்து கொள்"

திகைத்துவிட்டார் வீரபாகு. காட்சி கொடுத்தவர் இப்போது கொடுத்திருப்பது
ப்ளாங் செக். எவ்வளவு வேண்டுமென்றாலும் எழுதிக் கொள்ளலாம்.
என்ன செய்தார் வீரபாகு?

"அய்யனே, என் வாழ் நாள் முழுவதும் உன்னைத் தொழுகின்ற பாக்கியம்
வேண்டும்."

பெருமான் விடவில்லை. "சரி, அது முதல் வரம். உன் எண்ணப்படி அதை
அளித்துவிட்டேன். இரண்டாவதாக உனக்கு, ஒரு வரம் தர விரும்புகிறேன்.
என்ன வேண்டும் கேள்?"

ஒன்றும் வேண்டாம், இருப்பதுபோதும் என்று வீரபாகு சொல்ல, முருகப்
பெருமான் வற்புறுத்தி மீண்டும் ஒரு வரத்தைத் தந்து, அதை நிறைவு செய்து
கொள்ளும்படி கட்டளையிட்டார்.

நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் என்று சற்று நினைத்துப் பாருங்கள்.

வீரபாகு, மின்னலாக யோசித்தார். விட்டால் ஆண்டவன், வரிசையாக
வரங்களாகத் தந்து, கடையில் இவ்வுலக இச்சைகளுக்கு ஆளாக
நேரிட்டுவிடுமோ, என்று சிந்தித்தவர், இறைவன் கொடுத்த இரண்டாவது
ப்ளாங் செக்கை - அதாவது வரத்தை அசத்தலாக நிறைவு செய்தார்.

அதற்குப் பிறகு அவரைச் சோதிக்க நினைத்து வந்த முருகனால் மூன்றாவது
வரத்தைக் கொடுக்க முடியாதபடி இரண்டாவது வரம் நிறைவு செய்யப்பட்டிருந்தது.

அப்படி எதைக் கேட்டிருப்பார் வீரபாகு?

எதைக் கேட்டு, அந்த வரத்தை அப்படி நிறைவு செய்திருப்பார் வீரபாகு?
யோசித்துப் பார்த்து விடையைச் சொல்லுங்கள்

விடையைத் தெரிந்துகொள்ள scroll down செய்து பாருங்கள்!
-----------------------------------------------------------------
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

விடை:

"உன்னைத் தொழுகின்ற பாக்கியம் தவிர வேறு சிந்தனை இல்லாத
மனதைக் கொடுங்கள் பெருமானே!"

அதுதான் வீரபாகு கேட்ட இரண்டாவது வரம். இறைவனைத் தொழுகின்ற
பாக்கியம் தவிர வேறு சிந்தனையில்லாத நிலை என்பது எவ்வளவு
உயர்ந்த நிலை! அதுதான் உண்மையான பக்தி!
==================================================
முக்கியமான செய்தி:

வாத்தியார் மூன்று தினங்கள் வெளியூர் செல்வதால், வகுப்பறைக்கு மூன்று
நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு, புதிய பாடத்துடன் 11.5.2009
திங்களன்று துவங்கும்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

26 comments:

  1. Dear Sir

    Gyanam Enbhadhu Edhayum Edhirparamal Irai Paniyai seyum nilai enbhadhai nangu arindhavar Veerabhagu..

    Thats why he didnt ask anything more...Idhu Asayadha Mananilayai Kattuvadhu..Ellorukkum Indha Nilay vendumendral Asayadha Manam Vendum...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  2. ஆஹா இது வல்லவோ பக்தி...

    வள்ளலார் திரு அருட்பாவில் எழுதிய மாதிரி...

    ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவுவேண்டும்
    உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
    உறவுகல வாமைவேண்டும்
    பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும்
    பொய்மை பேசா திருக்கவேண்டும்
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
    மதமானபேய் பிடியா திருக்கவேண்டும்
    மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்
    உனை மறவா திருக்கவேண்டும் மதிவேண்டும்
    நின்கருணை நிதிவேண்டும்
    நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும்
    தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள்
    வளர் தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி
    உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ReplyDelete
  3. வகுப்பறையில் உள்ளேன். அய்யா.,
    மறக்காமல் 13 ஆம் தேதிக்குள் ஓட்டுப்போட வந்து விடுங்கள்.

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  4. என்னைப் போன்ற வெளி நாட்டில் இருப்பருக்கு இந்த புத்தகம் கிடைப்பது கடினம். இருப்பினும் இந்த பக்தி இதழ் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

    விடுமுறை என்றால்தான் பழைய பாடங்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

    வள்ளலார் என்பதால் கருணை நிதி கேட்டார். நம்மிடையே இருக்கும் சிலராக இருந்தால் வேறு நிதி அல்லவா கேட்டிருப்பர்கள்.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,பக்திக்கதை மிகவும் நன்று.தங்கள் சேவைக்கு நன்றிகள்.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  6. வீரபாகு கேட்ட வரம் பக்திக்கு எல்லை

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா

    ஆஹா முருகர் மேல் என்ன பக்தி அவருக்கு! நல்ல கதை இது போல
    கதைகளால் நல்ல பாடங்களை நாம் கற்று கற்றுக்கொள்ளலாம்.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா

    ஐயா உங்கள் ஜோதிட கட்டுரைகள் அந்த இதழில் வெளிவருமா?

    ReplyDelete
  9. Dear Sir

    Tomorrow this time i will be in flight (San Francisco(SFO) to Bangalore)- return back to India Sir..

    I need book sir.. I will be in Bangalore or madurai sir..

    Please send me - First Copy of Astrology book(just now remember sir.If free or else I will pay through online)Sir..

    My(Parents) Address:

    Arulkumar Rajaraman
    No 155, Krishnapuram 6th West Extension Street,
    Krishnapuram Colony,
    Madurai -625014.
    Tamil Nadu

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  10. பதிவு ஜோதிடத்தைப் ப்ற்றியதாக இல்லாமல் பக்தியை பற்றியதாக இருப்பதால் தானோ என்னவோ பின்னூட்டங்கள் குறைவாக இருக்கின்றன. ஆசிரியருக்கு வேலை குறைவு. நானும் என் பின்னூட்டங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு விட்டேன்.

    ReplyDelete
  11. வணக்கம் ஜயா, சற்று நாட்களாக பின்னூட்டம் இடாவிட்டாலும் எட்டி பார்த்திவிட்டு போவேன். நாம வராத கடவுளுட்டையே போட்டு சதா நச்சரிக்கிறம் வந்தால் என்ன பண்ணுவம்.

    ReplyDelete
  12. /////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Gyanam Enbhadhu Edhayum Edhirparamal Irai Paniyai seyum nilai enbhadhai nangu arindhavar Veerabhagu..
    Thats why he didnt ask anything more...Idhu Asayadha Mananilayai Kattuvadhu..Ellorukkum Indha Nilay vendumendral Asayadha Manam Vendum...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    நன்றி ராஜாராமன்

    ReplyDelete
  13. ////////////Blogger இராகவன் நைஜிரியா said...
    ஆஹா இது வல்லவோ பக்தி...
    வள்ளலார் திரு அருட்பாவில் எழுதிய மாதிரி...
    ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவுவேண்டும்
    உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
    உறவுகல வாமைவேண்டும்
    பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும்
    பொய்மை பேசா திருக்கவேண்டும்
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
    மதமானபேய் பிடியா திருக்கவேண்டும்
    மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்
    உனை மறவா திருக்கவேண்டும் மதிவேண்டும்
    நின்கருணை நிதிவேண்டும்
    நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும்
    தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள்
    வளர் தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி
    உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே/////////

    நன்றி ராகவன்!

    ReplyDelete
  14. ////Blogger வேலன். said...
    வகுப்பறையில் உள்ளேன். அய்யா.,
    மறக்காமல் 13 ஆம் தேதிக்குள் ஓட்டுப்போட வந்து விடுங்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.////

    வந்துவிட்டேன் வேலன்!

    ReplyDelete
  15. /////Blogger ananth said...
    என்னைப் போன்ற வெளி நாட்டில் இருப்பருக்கு இந்த புத்தகம் கிடைப்பது கடினம். இருப்பினும் இந்த பக்தி இதழ் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.
    விடுமுறை என்றால்தான் பழைய பாடங்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
    வள்ளலார் என்பதால் கருணை நிதி கேட்டார். நம்மிடையே இருக்கும் சிலராக இருந்தால் வேறு நிதி அல்லவா கேட்டிருப்பர்கள்./////

    வேறு நிதி என்பது ஒரே நிதிதான். பணம்.பணம்.பணம்!

    ReplyDelete
  16. /////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,பக்திக்கதை மிகவும் நன்று.தங்கள் சேவைக்கு நன்றிகள்.
    அன்புடன்,
    மதுரை தனா./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. //////////Blogger krish said...
    வீரபாகு கேட்ட வரம் பக்திக்கு எல்லை//////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  18. ///////////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    ஆஹா முருகர் மேல் என்ன பக்தி அவருக்கு! நல்ல கதை இது போல
    கதைகளால் நல்ல பாடங்களை நாம் கற்று கற்றுக்கொள்ளலாம்.//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    ஐயா உங்கள் ஜோதிட கட்டுரைகள் அந்த இதழில் வெளிவருமா?/////

    நிச்சயம் வரும்!திங்கட்கிழமை வரை பொறுத்திருங்கள்

    ReplyDelete
  20. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Tomorrow this time i will be in flight (San Francisco(SFO) to Bangalore)- return back to India Sir..
    I need book sir.. I will be in Bangalore or madurai sir..
    Please send me - First Copy of Astrology book(just now remember sir.If free or else I will pay through online)Sir..
    My(Parents) Address:
    Arulkumar Rajaraman
    No 155, Krishnapuram 6th West Extension Street,
    Krishnapuram Colony,
    Madurai -625014.
    Tamil Nadu
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman///////

    ஜோதிட நூல் இன்னும் தயாராகவில்லை நண்பரே!

    ReplyDelete
  21. //////////Blogger VA P RAJAGOPAL said...
    Good story about Pious... Thanks sir////////

    நன்றி கோபால்

    ReplyDelete
  22. /////////////Blogger ananth said...
    பதிவு ஜோதிடத்தைப் பற்றியதாக இல்லாமல் பக்தியை பற்றியதாக இருப்பதால் தானோ என்னவோ பின்னூட்டங்கள் குறைவாக இருக்கின்றன. ஆசிரியருக்கு வேலை குறைவு. நானும் என் பின்னூட்டங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு விட்டேன்.////////

    பின்னூட்டங்களின் எண்ணிக்கை பற்றி நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை!
    அனைவரும் படித்தால் போதும்

    ReplyDelete
  23. //////Blogger Emmanuel Arul Gobinath said...
    வணக்கம் ஜயா, சற்று நாட்களாக பின்னூட்டம் இடாவிட்டாலும் எட்டி பார்த்துவிட்டு போவேன். நாம வராத கடவுளைப் போட்டு சதா நச்சரிக்கிறோம் வந்தால் என்ன பண்ணுவம்.//////

    அதனால்தான் அவர் காட்சி கொடுப்பதில்லை!

    ReplyDelete
  24. திரு வாத்தியார் அவர்களுக்கு,

    உங்கள் கட்டுரையை வரம் இதழில் கண்டேன்.

    அதை பற்றி பதிவிட்டமைக்கு நன்றி.

    காளமேகபுலவர் பற்றிய கட்டுரையும், வீரபாகுவின் வரமும் வரம் இதழுக்கு தரம் கூட்டியது.


    மகிழ்ச்சி

    ReplyDelete
  25. ///////////////Blogger ஸ்வாமி ஓம்கார் said...
    திரு வாத்தியார் அவர்களுக்கு,
    உங்கள் கட்டுரையை வரம் இதழில் கண்டேன்.
    அதை பற்றி பதிவிட்டமைக்கு நன்றி.
    காளமேகபுலவர் பற்றிய கட்டுரையும், வீரபாகுவின் வரமும் வரம் இதழுக்கு தரம் கூட்டியது.
    மகிழ்ச்சி/////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி ஸ்வாமிஜி அவர்களே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com