மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.8.16

குரு பெயர்ச்சிப் பலன்கள்!

குரு பெயர்ச்சிப் பலன்கள்!

பெயர்ச்சிகளைக் கண்டு அயர்ச்சி அடையாதீர்கள். ஜாதகத்தின் பலன்களை நடக்கின்ற மகாதிசைகளும், Major Dasa Periods அதில் வரும் உப திசைகளும் (புத்திகளும்) Sub Periods தான் நமக்குத் தரும். பெயர்ச்சிப் பலன்கள் எல்லாம் அதற்கு அடுத்துத்தான் வரிசையில் நிற்க வேண்டியதிருக்கும்.

எல்லா ஊடகங்களும், குறிப்பாக நாளிதழ்களும், வார இதழ்களும் குருப்பெயர்ச்சிப் பலன்களை எழுதி அனைவரையும் கலக்கியிருக்கின்றன. 50%, 60% 80% 90% என்று பலன்களுக்கு மதிப்பும் கொடுத்துள்ளார்கள். அவற்றை எல்லாம் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆகவே விரிவான பலனை நான் எழுதவில்லை.

2-8=2016 செவ்வாயன்று குருபகவான், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். நமது ராசிகளை வைத்துத்தான் பலன்களைப் பார்க்க வேண்டும்.

அதனால் பொதுவான நன்மைகளை அடையப்போவது. மகர ராசிக்காரர்களுக்கு 9ல் குரு.மீன ராசிக்காரர்களுக்கு 7ல் குரு. ரிஷப ராசிக்காரர்களுக்கு 5ல் குரு, விருச்சிக ராசிக்கு 11ல் குரு இந்த 4 ராசிக்காரர்களும் நன்மையான பலன்களை அடைவார்கள்

தற்போது குருபகவான் இருக்கும் இடமான கன்னி வீட்டிற்கு, 6, 8, 12ம் வீடுகளைக் கொண்ட ராசிக்காரர்களுக்கு  கும்ப ராசி (8ம் இடத்தில் குரு), மேஷ ராசி (6ம் இடத்தில் குரு), துலாம் ராசிக்கு 12ம் இடத்தில் குரு - ஆக இந்த ராசிக்காரர்களுக்கு சொல்லும்படியான நன்மைகள் அதிகம் இருக்காது.

மற்ற ராசிக்காரர்களுக்கு மத்திமமான பலன்கள் இருக்கும்

இந்தப் பலன்கள் எல்லாம் ஒரு ஆண்டிற்குத்தான். அதாவது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரு இடம் மாறும் வரைதான். அதை மனதில் கொள்க!

இந்தியாவின் ஜனத்தொகை 120 கோடி. சராசரியாக ஒரு ராசிக்கு 10 கோடி பேர்கள். அந்த பத்துக் கோடி பேர்களுக்கும்  நன்மை தீமைகள் அவரவர் ஜாதகப்படியும், நடக்கும் மகாதிசைகள், உப திசைகளின் படிதான் நடக்குமே ஒழிய பெயர்ச்சிகளால் அதிகம் பாதிப்பு இருக்காது. நான் வலியுறுத்திச் சொல்வதும் அதைத்தான். அதையும் மனதில் கொள்க!
----------------------------------------------------
அதெல்லாம் கிடக்கட்டும் நீங்கள் ராசிவாரியான பலன்களைச் சொல்லுங்கள் என்று பிடிவாதம் பிடிப்பவர்களுக்காக எளிய முறையில் பலன்களைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்கள் அனைவரும் அதைப் பார்த்து உங்கள் ராசிக்கான பலனைத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------


















வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
===================================================

23 comments:

 1. ஐயா வணக்கம்
  ராசி பலன் சும்மா நச்சுனு இருக்கு ஐயா
  நன்றி
  கண்ணன்

  ReplyDelete
 2. Super memes and reiview, Guru peyarchui review in different way.

  ReplyDelete
 3. super review and mems, Guru peyarchi result in different way.. cheers

  ReplyDelete
 4. வணக்கம் குருவே!
  நேர்த்தியான பதிவு! நன்றி!

  ReplyDelete
 5. Respected sir,

  Thank you sir for brief with pictorial explanation about all RASI's for one year.

  with kind regards,

  Visvanathan N

  ReplyDelete
 6. குரு பெயர்ச்சி பலன் பதிவை எப்ப‌ போடுவீங்க! என நச்சரித்தவர்களுக்கு "நச்"சுனு உங்க பாணியில் போட்ட எல்லா ராசி பலன்களும் சூப்பர் வாத்தியார் அய்யா!

  ReplyDelete
 7. ஐயா பதிவு சூப்பர்

  இயக்குனர்கள் நடிகர்களிடம் படத்தின் கதையை ஒரு வார்த்தையில் சொல்லுவது போல் அழகா சொல்லிருக்கிறீகள்

  நன்றி

  ReplyDelete
 8. /////Blogger Nallaswamy Raju said...
  SUPER/////

  நல்லது. நன்றி நல்லஸ்வாமி!

  ReplyDelete
 9. /////Blogger lrk said...
  ஐயா வணக்கம்
  ராசி பலன் சும்மா நச்சுனு இருக்கு ஐயா
  நன்றி
  கண்ணன்/////

  உங்களுக்குப் பிடித்திருந்தால் சரிதான். நன்றி கண்ணன்!!!!

  ReplyDelete
 10. //////Blogger jay kumar said...
  Super memes and reiview, Guru peyarchui review in different way./////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜெயகுமார்!

  ReplyDelete
 11. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  நேர்த்தியான பதிவு! நன்றி!////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!!!

  ReplyDelete
 12. //////Blogger Visvanathan N said...
  Respected sir,
  Thank you sir for brief with pictorial explanation about all RASI's for one year.
  with kind regards,
  Visvanathan N/////

  நல்லது. நன்றி விஸ்வநாதன்!

  ReplyDelete
 13. ///////Blogger venkatesh r said...
  குரு பெயர்ச்சி பலன் பதிவை எப்ப‌ போடுவீங்க! என நச்சரித்தவர்களுக்கு "நச்"சுனு உங்க பாணியில் போட்ட எல்லா ராசி பலன்களும் சூப்பர் வாத்தியார் அய்யா!/////

  உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வெங்கடேஷ்!

  ReplyDelete
 14. ////Blogger kmr.krishnan said...
  Super.////

  நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 15. /////Blogger HOT CINEMA NEWS said...
  ஐயா பதிவு சூப்பர்
  இயக்குனர்கள் நடிகர்களிடம் படத்தின் கதையை ஒரு வார்த்தையில் சொல்லுவது போல் அழகா சொல்லிருக்கிறீகள்
  நன்றி/////

  நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 16. அன்பு ஆசிரியரே!,
  குரு பெயர்ச்சி பதிவுக்கு நன்றி!. எனக்கு சந்திரன் ராசி சந்திப்பில் இருக்கிறார். என் ஜாதகத்தை கனித்தவர் தனசு என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது சந்திரன் 270.18', ஆகையால் கொஞ்சம் மகர ராசியில். ஆகையால் மகர ராசி என்று எடுத்துக் கொள்ளலாமா? குருவே!
  இன்னும் ஒரு கேள்வி, நான் சிம்ம லக்னம், குரு 8ல், குரு மகாதிசா குரு புத்தி நடக்கிறது. பலன் எப்படி இருக்கும், சொந்த நாட்டிற்கு திரும்ப முயற்சி செய்கிறேன், கைகூடுமா ஆசிரியரே. உங்களின் அரிய நேரத்திற்கு நன்றி! ஓம் நமசிவாய உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்சிய்யையும் தந்து அருளட்டும்.
  நன்ற்!! பன்னிர்செல்வம்.இரா.

  ReplyDelete
 17. வணக்கம் ஐயா,குரு பெயர்ச்சி பலனை காலை முதல் பல்வேறு தொலைகாட்சிகளில் பார்த்தாயிற்று.ஆசிரியரின் பலன் எப்படி இருக்கும் என ஆவலாய் இருந்தேன்.ஒருவரியில் சொல்லி,தசா,புத்திக்குதான் முதலிடம்.தேவையில்லாமல் குழம்ப வேண்டாம் என்று சொன்ன அறிவுரைக்கு நன்றி.

  ReplyDelete
 18. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,குரு பெயர்ச்சி பலனை காலை முதல் பல்வேறு தொலைகாட்சிகளில் பார்த்தாயிற்று.ஆசிரியரின் பலன் எப்படி இருக்கும் என ஆவலாய் இருந்தேன்.ஒருவரியில் சொல்லி,தசா,புத்திக்குதான் முதலிடம்.தேவையில்லாமல் குழம்ப வேண்டாம் என்று சொன்ன அறிவுரைக்கு நன்றி.//////

  எல்லாம் உங்களைப் போன்றோருக்காத்தான் சொன்னேன். நன்றி ஆதித்தன்!

  ReplyDelete
 19. குரு 3ம் வீட்டிற்கு பெயர்வது சிறப்பில்லை என்று படித்திருக்கிறேன். மற்ற வீடுகளை விட 3ம் வீட்டிற்கு வரும்ப்போதே அவர் பெரும் சோதனைகளை தருவார் என்று படித்தேன். ஆனால் அனுபவத்தில் எனக்கு அவர் 2ம் வீட்டிற்கு வரும்போது பெரும் சோதனைகளை தந்திருக்கிறார். இத்தனைக்கும் 2ம் வீட்டு குரு சிறப்பான பலன்களை தருவதாக பொதுவான அபிப்பிராயம் உண்டு.

  கடக இராசிக்கு ஜனவரி முதல் இராகு 2ம் வீட்டிற்கும் கேது 8ம் வீட்டிற்கும் பெயர்ந்தனர். பிப்ரவரியில் செவ்வாய் 5ம் வீட்டிற்கு பெயர்ந்து இன்னும் அங்கு சனியோடு கூட்டணி போட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு பிப்ரவரியில் தொடங்கியது சோதனை. அனைத்து கிரகங்களும் சேர்ந்து தொங்க விட்டு அடிக்கின்றனர்:( ஏதோ ஒன்று போனாலும் இன்னொன்று வந்துள்ளது. ஆனால் சரிசமமான மாற்றம் என்று கூற இயலாது. என்று நல்ல மாற்றம் வரும் என்று காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 20. Super appu! the way of expression is really excellent and I like your sense of humor.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com