மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

29.12.09

Doubt: எவையெல்லாம் மாயமாகப் போகும்?

......................................................................................................
Doubt: எவையெல்லாம் மாயமாகப் போகும்?
Doubts: கேள்வி பதில் பகுதி ஐந்து!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஐந்து!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.19
சஞ்சனா

Ayya,
Nantri intha kelvi pathil sessionku.Ithu varai nadantha padangal
thavira matravatril irunthu doubts ketkalama?

வந்துள்ள நோய்களுக்கு (சந்தேகங்களுக்கு) மட்டும் இப்போது மருந்து கேளுங்கள். வரப்போகும் நோய்களைப் பின்னால் (அவைகள் வரும்போது) பார்த்துக் கொள்வோம்!

En Kelvikal

1. Lagna Suya Paral -in artham enna?

லக்கினம், மற்றும் ஏழு கிரகங்களுக்கு உரிய சுயபரல் அட்டவணைகளைத் (மொத்தம் 56) தயார் செய்து, கூட்டினால்தான் மொத்த அஷ்டகவர்க்கப்பரல்கள் கிடைக்கும். அதற்காகத் தயாரிக்கப்படும் அட்டவணைகளில் லக்கின சுய வர்க்கப்பரல் அட்டவணையும் ஒன்று. அதற்குத் தனியாகப் (லக்கின சுய வர்க்கப்பரல்களுக்கு) பலன் எதுவும் கிடையாது!

2.Sani(saturn) suya Paral kammiyaga irunthal enna palan?
Thangal athai padathil kura villai.Athu "0" aga irunthal ayul balam kuraiva?
En ketkiren enral Gandhiyin sani suya paral "0".Obama vin Jathagathilum
athu "0"...Neengal athu patri elai marai kaiyaga kuriyathu pol ennaku
patathu...

சனி தன்னுடைய சுயவர்க்கத்தில் 0 பரல்களுடன் இருந்தால், ஜாதகன் வேலைக்குச் செல்லமாட்டான்.அல்லது அவன் விரும்பும் வேலை கிடைக்காது. அத்துடன் கோள்சாரச் சனி சுற்றிவரும்போது, அதன் பலனைத் துல்லியமாகப் பார்க்க இந்தச் சனியின் சுயவர்க்க அட்டவணை உதவும். அத்துடன் சனி ஆயுள் காரகன் என்பதால் எட்டாம் வீட்டிற்கு இந்தச் சனியின் சுயவர்க்க அட்டவணை பெரிதும் உதவியாக இருக்கும். அது பற்றி எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் நடத்தும்போது தெரிந்துகொள்ளுங்கள்.

3.Suriyanal Asthamanam(combust) ana grahamgal weak agi vidum endru
padithen..Avai "Ucham" , Moola Trikonam" allathu Varkotham adainthu
irunthalum weaka thaan consider seiya venduma?

நீங்கள் நினைக்கும் கிரகம் அம்சத்தில் அஸ்தமனம் ஆகாமல் இருந்தால் பலன் உண்டு. அங்கேயும் ஆகியிருந்தால், பலன் இல்லை. அல்லது வேறு அமைப்புக்களை வைத்து, அடி வாங்கியும் (அதாவது அஸ்தமனம் ஆகியும்) எழுந்து உட்கார்ந்திருந்தால், (குறைவான) பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
-----------------------------------------------------
email No.20
பாலகுமாரன்.ஏ.ஜி

Dear Sir,

Can you clarify my doubt please. If a padagathipathi or a normal planet is conjuncted with lagnathipathi or Yogakaraka then the particular planet will also act as yogakaraka or not?
Thanks in advance.
Regards,
Balakumaran A G

பெருங்காய டப்பாவிற்குள் போட்டு வைக்கும் பொருள் எப்படிப் பெருங்காயமாகும்? பெருங்காயத்தின் வாசம் மட்டும்தானே அதனுடன் சேரும். அது பெருங்காயம் ஆகாதல்லவா? அதுபோல யோககாரனுடன் சேர்ந்ததற்காக, சேரும் கிரகம் யோககாரகனுடைய வேலைகளைச் செய்யாது.
----------------------------------------------------
email No.21
எஸ்பி.கருப்பையா
அய்யா வணக்கம்

இராசிக்கு 12ல் அல்லது லக்கினத்திற்கு 12ல் கேது இருந்தால் மோட்சம் என்கிறார்களே இதைபற்றி கூறவும்
இப்படிக்கு
SPK KKDI

எல்லாம் மாயை (illusion). சொத்து, சுகம், மனைவி, மக்கள், ஐ.டி கார்டு, ரேசன் கார்டு, வோட்டர்ஸ் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், வங்கி வைப்பு நிதிகள், சொத்துப் பத்திரங்கள், வாங்கிய விருதுகள் என்று அனைத்தும் ஒரு நாள் மாயமாகப் போகிறது. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு (including pending civil/property cases in the court) மனிதன் ஒரு நாள் மாயமாகப் போகிறான்.

அதைத்தான் கவியரசர் இப்படிச் சொன்னார்:

”ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன?

திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன…?


வீடுவரை உறவு

வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?”


சிலர் இந்த உலக அவலங்கள் வேண்டாம். அடுத்த பிறவி வேண்டாம் என்பார்கள். அடுத்த பிறவி வேண்டாம் என்றால், இறைவன் திருவடிகளைச் சென்றடைய வேண்டும். அந்த நிலையைத்தான் மோட்சமடைவது என்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் பிறவியில் இருந்து விடுதலை அடைவதுதான் மோட்ச நிலை

Liberation from the cycle of reincarnation and from the illusion of maya

ஜாதகத்தில் ஐந்தாம் வீடு முற்பிறவியைக் குறிக்கும். பன்னிரெண்டாம் வீடு அடுத்த பிறவியைக் குறிக்கும். அந்த வீட்டில் (அதாவது 12ல்) கேது இருந்தால் அடுத்த பிறவி இல்லையென்பார்கள். படித்திருக்கிறேன்.


ஆனால் அனுபவம் இல்லை; அனுபவித்ததில்லை.உறுதியாகச் சொல்ல முடியவில்லை:-))))
----------------------------------
email No.22
அரியப்பன் சாத்தப்பன்
வணக்கம் அய்யா,

1. வக்கிரக கிரகம் பலன் மாறுவதற்குக் காரணம் என்ன?

பாகற்காய் ஏன் கசக்கிறது? என்பதைப்போல் இருக்கிறது உங்கள் கேள்வி! ஒரு மனிதன் வக்கிரபுத்தி வந்தால் என்ன செய்கிறான். அண்ணன் தம்பி சொத்துக்களைத் தனதாக்க முயற்சிக்கிறான். அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுகிறான். அதிக வக்கிரம் பிடித்தால் பொது இடத்தில் குண்டு வைக்கிறான். அதைப்போய் ஏனென்று கேட்க முடியுமா? வக்கிரத்தின் தன்மையே அதுதான்.

அதுபோல வக்கிரம் பெற்ற கிரகங்கள், அதிகமாகத் தீமைகளைச் செய்யா
விட்டாலும், நன்மை செய்வதை நிறுத்திவிடும். தீய கிரகங்கள் வக்கிரம் பெற்றால், அதிகத் தீமைகளைச் செய்யும். சும்மா சுமப்பதை, ஜாதகன் நனைத்துச் சுமக்க வேண்டும். அறுந்த செருப்பைக் கையில் தூக்கிக் கொண்டு கொதிக்கும் வெய்யிலில் நடக்க நேரிடும்!


2. இரண்டு வீட்டிற்குச் சொந்தமான கிரகம் இரண்டும் பரிவர்த்தனை பெறும்போது,தான் இல்லாத வீட்டு பலனைத் தருமா?(இதில் நல்ல வீடும், கெட்ட வீடும் இருக்கின்றபோது)

அவர் இல்லாத வீட்டின் பலனை, அங்கே வந்து அமர்கிறவன் தருவான். கெட்டது எதுவும் மிஸ்ஸாகாது. கவலைப் படாதீர்கள்

3, இரு நீச்ச கிரகம் பரிவர்த்தனை பெற்றால் நல்ல பலன் உண்டா? அருள்கூர்ந்து எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

இரண்டு நீச கிரகங்கள் எப்படி பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்? ஒரு நீச கிரகத்தின் எதிர்வீடு அதன் உச்ச வீடு. நீச சந்திரனுக்கு மட்டும்தான் மற்றொரு நீசனுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படியே பரிவர்த்தனை செய்து கொண்டால் இருவரின் நீசத்தன்மையும் காணாமல் போய்விடாதா?எடுத்துக்காட்டுடன் நீங்கள் விளக்குங்கள். முடியாவிட்டால், இந்தக் கேள்வி பதில் வகுப்பு முடியும்வரை பெஞ்சு மேல் ஏறி நில்லுங்கள்

நல்ல வாய்ப்புத் தந்தற்கு நன்றி,
அரிபாய்.
வாழ்க வளமுடன்.

இன்னும் வாய்ப்பு முடியவில்லை. பெஞ்சு மேல் ஏறி நிற்கும் வாய்ப்பு பாக்கி உள்ளது!:-)))
----------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

56 comments:

Shyam Prasad said...

மிக்க நன்றி

kmr.krishnan said...

நற்காலை வணக்கம்!
பதில்கள் பளிங்குத்தண்ணீர் போல் அத்தனை தெளிவு.கிறிஸ்டல் கிளியர்.
மீண்டும் மீண்டும் வாசித்தேன்.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Shyam Prasad said...
மிக்க நன்றி/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////kmr.krishnan said...
நற்காலை வணக்கம்!
பதில்கள் பளிங்குத்தண்ணீர் போல் அத்தனை தெளிவு.கிறிஸ்டல் கிளியர்.
மீண்டும் மீண்டும் வாசித்தேன்.நன்றி!//////

உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

krish said...

கேள்வி-பதில் பகுதி மிக நன்றாக உள்ளது. கேது தலையில்லா கிரகம்.12ம் வீட்டு லக்கனத்திற்கு வியயா ஸ்தானம். அதனால் மறு பிறவி இல்லை என்று கூறுகிறார்கள். பராசரர் நவவாம்சத்தில் 12ம் இடம் என்கிறார். ராமகிருஷ்ணர், ரமணர் போன்ற நாம் அறிந்த ஞானிகளுக்கு இந்த அமைப்பு இல்லை. ஜார்ஜ் புஷ் அவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கிறது. சில ஜோதிட விதிகள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டவை போல் இருக்கிறது.

Thanuja said...

Present sir,

Question #21 is interesting...about ketu and no rebirth.....

Thanks
Thanuja

astroadhi said...

அய்யா இனிய காலை வணக்கம்.

இந்த வகுப்பு இனிய வகுப்பு ....கேள்வி பதில் பகுதி வேகம் எடுக்க துவங்கி உள்ளது ,,,,

சனி 0 பரல் வாங்கி இருந்தால் வேலைக்கு போகாமாட்டான் ,,,,சனி இன் சுயவர்கபரல் 8 ம் இடத்திற்க்கு பெரிதும் உதவி செய்யும் என்று கூறி 8ம் இடத்திற்க்கு அடி போட துவங்கி விட்டீர்கள் ....8 ம் இட பாடம் சைடு கேப்பில் தயாரகிரதோ ?


நன்றி வணக்கம்

kannan said...

ஐயா !!!!

அதிகாலை

வணக்கம்

நன்றி!!!

பித்தனின் வாக்கு said...

அய்யா நான் ஏற்கனவே பெஞ்சு மேல ஏறியாச்சு. எனக்கு இது போல சனியும்,செவ்வாயும் நீசமாக உள்ளார்கள். நன்றி அய்யா.(நல்லவேளை முட்டி போடச் சொல்லவில்லை) ஹைய்யா

kmr.krishnan said...

ஆம். பரமஹம்சருக்கு 12ல் உச்ச செவ்வாய். ஆனால் 4ல் இருந்து நீச‌ கேது
9ம் பார்வையாகப் பார்கிறார். ஆனால் ராகு‍ கேது பார்வைகள் என்பது முடிவுறாத விவாதமே!

Alasiam G said...

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
"பெருங்காய டப்பாக்குள் போன
எல்லாம் பெருங்காயம் ஆகாது"

கத்திரிக்காயுடன் முருங்கக்காய் (நாட்டு)
போட்டு வைத்த சாம்பாரில் சிறிதளவு
பெருங்கயத்தைப் போட்டால் அதன்
மணமும் ருசியும் தனி தான்.
அந்த சுவையை போன்றே
உதாரணமும் சுவைக்கிறது.

சனீஸ்வரனின் பரல்களைப் பற்றிய கேள்வி-பதில்
எனக்கு உபயோகம்.

நன்றிகள் குருவே!

சிங்கைசூரி said...

Thank you sir

arumuga nainar said...

Dear Sir,

உங்களுடைய தெளிவான பதில்களுக்கு மிக்க நன்றி.

Rgds
Nainar

Uma said...

என்க்கு நீச்ச சந், நீச்ச செவ் பரிவர்த்தனை. அப்படியானால் நீச்சம் ரத்தாகிவிட்டதா?

SP.VR. SUBBIAH said...

//////krish said...
கேள்வி-பதில் பகுதி மிக நன்றாக உள்ளது. கேது தலையில்லா கிரகம்.12ம் வீட்டு லக்கனத்திற்கு வியயா ஸ்தானம். அதனால் மறு பிறவி இல்லை என்று கூறுகிறார்கள். பராசரர் நவவாம்சத்தில் 12ம் இடம் என்கிறார். ராமகிருஷ்ணர், ரமணர் போன்ற நாம் அறிந்த ஞானிகளுக்கு இந்த அமைப்பு இல்லை. ஜார்ஜ் புஷ் அவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கிறது. சில ஜோதிட விதிகள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டவை போல் இருக்கிறது.////

உண்மை. பல நியதிகள் நமக்குப் பிடிபடாதவைகளே!

SP.VR. SUBBIAH said...

/////Thanuja said...
Present sir,
Question #21 is interesting...about ketu and no rebirth.....
Thanks
Thanuja////

நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

//////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்.
இந்த வகுப்பு இனிய வகுப்பு ....கேள்வி பதில் பகுதி வேகம் எடுக்க துவங்கி உள்ளது ,,,,
சனி 0 பரல் வாங்கி இருந்தால் வேலைக்கு போகமாட்டான் ,,,,சனியின் சுயவர்க்கப்பரல் 8 ம் இடத்திற்கு பெரிதும் உதவி செய்யும் என்று கூறி 8ம் இடத்திற்க்கு அடி போட துவங்கி விட்டீர்கள் ....8 ம் இட பாடம் சைடு கேப்பில் தயாரகிறதோ ? நன்றி வணக்கம்

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////kannan said...
ஐயா !!!! அதிகாலை வணக்கம்! நன்றி!!!//////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////பித்தனின் வாக்கு said...
அய்யா நான் ஏற்கனவே பெஞ்சு மேல ஏறியாச்சு. எனக்கு இது போல சனியும்,செவ்வாயும் நீசமாக உள்ளார்கள். நன்றி அய்யா.(நல்லவேளை முட்டி போடச் சொல்லவில்லை) ஹைய்யா/////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////kmr.krishnan said...
ஆம். பரமஹம்சருக்கு 12ல் உச்ச செவ்வாய். ஆனால் 4ல் இருந்து நீச‌ கேது
9ம் பார்வையாகப் பார்கிறார். ஆனால் ராகு‍ கேது பார்வைகள் என்பது முடிவுறாத விவாதமே!//////

ராகு சனியைப்போல வேலை செய்யும். கேது செவ்வாயைப் போல வேலை செய்யும். 12ல் இருக்கும் செவ்வாய்க்கு கேதுவின் பவர் வந்து அவருக்கு மோட்சத்தைக் கொடுத்ததோ என்னமோ?

SP.VR. SUBBIAH said...

//////Alasiam G said...
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம், "பெருங்காய டப்பாக்குள் போன எல்லாம் பெருங்காயம் ஆகாது"
கத்திரிக்காயுடன் முருங்கக்காய் (நாட்டு) போட்டு வைத்த சாம்பாரில் சிறிதளவு பெருங்கயத்தைப் போட்டால் அதன் மணமும் ருசியும் தனி தான். அந்த சுவையை போன்றே உதாரணமும் சுவைக்கிறது. சனீஸ்வரனின் பரல்களைப் பற்றிய கேள்வி-பதில் எனக்கு உபயோகம்.
நன்றிகள் குருவே!/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

SP.VR. SUBBIAH said...

//////சிங்கைசூரி said...
Thank you sir////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////arumuga nainar said...
Dear Sir,
உங்களுடைய தெளிவான பதில்களுக்கு மிக்க நன்றி.
Rgds
Nainar/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நைனா(ர்)!

krish said...

I read a book "Sri Ramana Maharishi's Moksha" by Sankara Bhagavathpada.It is a very elobarate work.Well written Astrological analysis of spiritual progress of Ramana Maharishi. K.N.Rao has written a book "Yogis,Destiny and Wheel of time". We get some clarity of thought by reading these reseach works.

Anonymous said...

Dear Sir,

Thanks for the clarifications.

Balakumaran

Ram said...

Dear sir,

Thanks for the answers, Just a small doubt, if a parivarthana is happend between plannet in Enemy house and Equal house i.e for examble parivarthana between Guru and mercury in Danush Rasi and Mithuna Rasi, what is the effect.

ananth said...

நம் வகுப்பறைக்கு இத்தனை followers இருந்தும் தங்களுக்கு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுக்கள் குறைவாகவே இருக்கிறது. பாடம் மட்டும் படித்தால் போதும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள் போலும். நான் தினமும் இரண்டிலும் தங்களுக்கு ஓட்டு போட்டுக்கொண்டுதான் வருகிறேன்.

SP.VR. SUBBIAH said...

////Uma said...
எனக்கு நீச்ச சந், நீச்ச செவ் பரிவர்த்தனை. அப்படியானால் நீச்சம் ரத்தாகிவிட்டதா?////

பாடத்தில் அதைத்தானே சகோதரி சொல்லியிருக்கிறேன். உங்கள் சந்தேகம் இன்னும் தீர்ந்தபாடில்லையா?

SP.VR. SUBBIAH said...

/////krish said...
I read a book "Sri Ramana Maharishi's Moksha" by Sankara Bhagavathpada.It is a very elobarate work.Well written Astrological analysis of spiritual progress of Ramana Maharishi. K.N.Rao has written a book "Yogis,Destiny and Wheel of time". We get some clarity of thought by reading these reseach works.////

தகவலுக்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

//KUMARAN said...
Dear Sir,
Thanks for the clarifications.
Balakumaran////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Ram said...
Dear sir,
Thanks for the answers, Just a small doubt, if a parivarthana is happend between plannet in Enemy house and Equal house i.e for examble parivarthana between Guru and mercury in Danush Rasi and Mithuna Rasi, what is the effect.//////

பரிவர்த்தனை பெற்றதால் பகை எல்லாம் ஒழிந்து விடும். சம்பந்தி ஆகிவிட்டால், பகை ஒழிந்து விடாதா?

Arun A. said...

Iyya Vanakkam,
12'th house kethu vai patriaya calarification is good.i have small doubt, pls clarify me.kethu with guru in 12 house but in that house kethu is ucham.so what kind of palangal ir will give.

pls forgive me if anything is wrong..
Thank you sir...

SP.VR. SUBBIAH said...

/////ananth said...
நம் வகுப்பறைக்கு இத்தனை followers இருந்தும் தங்களுக்கு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுக்கள் குறைவாகவே இருக்கிறது. பாடம் மட்டும் படித்தால் போதும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள் போலும். நான் தினமும் இரண்டிலும் தங்களுக்கு ஓட்டு போட்டுக்கொண்டுதான் வருகிறேன்.////

நானும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை, மற்றும் பதிவிற்கு விழும் வாக்குகள் பற்றி neither I am happy nor unhappy!

ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன். அதைப பற்றி சிந்தித்தால் ஆத்ம திருப்தி இல்லாமல் போய்விடும். உங்கள் பின்னூட்டத்திற்கும் வாக்களிப்புக்களுக்கும் நன்றி மிஸ்டர் ஆனந்த்!

SP.VR. SUBBIAH said...

////Arun A. said...
Iyya Vanakkam,
12'th house kethu vai patriaya calarification is good.i have small doubt, pls clarify me.kethu with guru in 12 house but in that house kethu is ucham.so what kind of palangal ir will give.
pls forgive me if anything is wrong..
Thank you sir...//////

கேது உச்சமாகி என்ன பயன்? லக்கினம் மற்றும் 4ஆம் இடத்து அதிபதியான குரு 12ல் மறைந்துவிட்டாரே ஸ்வாமி! அதைக் கவனியுங்கள்!

ananth said...

என் உறவுக்காரர் ஒருவருக்கு சுய வர்கத்தில் 0 பரல் கொண்ட சனி தசை 14 வயதிலிருந்து நடக்கிறது. அது முடிய இன்னும் 4 வருடங்கள் இருக்கிறன. தாங்கள் சொல்வது போல்தான். ஒழுங்காக வேலைக்கு போவதில்லை. போனாலும் எந்த வேலையும் நிரந்தரமாக செய்வதில்லை. பல வருடங்கள் வேலைக்கு போகாமல் கழித்திருக்கிறார். எனக்கு சுயவர்கத்தில் 2 பரல் உள்ள சனி தசை நடக்கிறது. தன் சுய புத்தியில் என் தொழில் அஸ்திவாரத்தை சற்று அசைத்துதான் பார்த்தார். இப்போது புதன் புத்தி நடக்கிறது.

subbu said...

வாத்தியார் அவர்களுக்கு,
வணக்கம்!

கேள்வி பதில்கள் மிகவும் அருமையாக உள்ளன. மிகவும் நன்றி.

நான் பதிவுலகுக்கு புதியவன், மற்றும் பார்வையாளனாக மட்டுமே இருக்கிறேன். ஆதலால் எனக்கு தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப் போடுவது போன்ற விவரங்கள் பரிச்சயமாக இல்லை. அதனால்தான் ஓட்டுப் போடவில்லை. மற்றபடி வாத்தியார் ஐயா அவர்கள் வாசகர்களின் இதய சிம்மாசனத்தில் ஏற்கனவே இடம் பிடித்து விட்டீர்கள்தானே!

அன்புடன்

மதுரை சுப்பு

Arun A. said...

Iyya,

லக்கினம் மற்றும் 4ஆம் இடத்து அதிபதியான குரு 12ல் மறைந்துவிட்டா with kethu.. then what kind of palangal will it give generally iyya.please answer iyya...

prithvi said...

வணக்கம் வாத்தியாரே ...
கெட்ட வீடுகளுக்கு சொந்தக்காரர்கள் மறைவு வீடுகளில் அமர்வது நல்லதா.அவர்கள் சுய வர்க்கத்தில் பலம் குறைந்து இருப்பது நல்லதா..அப்படிஎன்றால் மீன லக்னத்துக்கு சுக்ரன் கெட்டவன் தானே..அவர் மறைவு ஸ்தானங்களில் வர்கபலம் குறைந்து இருப்பது நல்லதா..
சுக்ரன் களத்திரகரன் அல்லவா அவர் மீன லக்ன ஜாதகத்திற்கு எல்லா நிலைகளிலும் கெட்டவர் என்றால்,மீன லக்னத்திற்கு திருமண வாழ்கையில் தடைகள் வருமா ..

SP.VR. SUBBIAH said...

/////ananth said...
என் உறவுக்காரர் ஒருவருக்கு சுய வர்கத்தில் 0 பரல் கொண்ட சனி தசை 14 வயதிலிருந்து நடக்கிறது. அது முடிய இன்னும் 4 வருடங்கள் இருக்கிறன. தாங்கள் சொல்வது போல்தான். ஒழுங்காக வேலைக்கு போவதில்லை. போனாலும் எந்த வேலையும் நிரந்தரமாக செய்வதில்லை. பல வருடங்கள் வேலைக்கு போகாமல் கழித்திருக்கிறார். எனக்கு சுயவர்கத்தில் 2 பரல் உள்ள சனி தசை நடக்கிறது. தன் சுய புத்தியில் என் தொழில் அஸ்திவாரத்தை சற்று அசைத்துதான் பார்த்தார். இப்போது புதன் புத்தி நடக்கிறது.////

பொதுவாக ஒரு மகா தசை அதிகமாக நல்ல பலன்களைத் தரவில்லை என்றால், அடுத்து வரும் மகாதசை, அதைச் செய்யும். ஆகவே புதன் மகா தசை உங்களுக்கு நன்மைகளை வழங்கட்டும்!

SP.VR. SUBBIAH said...

/////subbu said...
வாத்தியார் அவர்களுக்கு,
வணக்கம்!
கேள்வி பதில்கள் மிகவும் அருமையாக உள்ளன. மிகவும் நன்றி.
நான் பதிவுலகுக்கு புதியவன், மற்றும் பார்வையாளனாக மட்டுமே இருக்கிறேன். ஆதலால் எனக்கு தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப் போடுவது போன்ற விவரங்கள் பரிச்சயமாக இல்லை. அதனால்தான் ஓட்டுப் போடவில்லை. மற்றபடி வாத்தியார் ஐயா அவர்கள் வாசகர்களின் இதய சிம்மாசனத்தில் ஏற்கனவே இடம் பிடித்து விட்டீர்கள்தானே!
அன்புடன்
மதுரை சுப்பு////

அப்படித்தான் நம்பி சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறேன்:-))))

SP.VR. SUBBIAH said...

//////Arun A. said...
Iyya,
லக்கினம் மற்றும் 4ஆம் இடத்து அதிபதியான குரு 12ல் மறைந்துவிட்டார் with kethu.. then what kind of palangal will it give generally iyya.please answer iyya...//////

பலன்கள் அதுவாக வந்து கதவைத் தட்டாது. நீங்கள்தான் போராடித் தேடிப் பிடிக்க வேண்டும். லக்கினாதிபதி 12ல் மறைந்தால அதுதான் பலன்!

SP.VR. SUBBIAH said...

//////prithvi said...
வணக்கம் வாத்தியாரே ...
கெட்ட வீடுகளுக்கு சொந்தக்காரர்கள் மறைவு வீடுகளில் அமர்வது நல்லதா.அவர்கள் சுய வர்க்கத்தில் பலம் குறைந்து இருப்பது நல்லதா..அப்படிஎன்றால் மீன லக்னத்துக்கு சுக்ரன் கெட்டவன் தானே..அவர் மறைவு ஸ்தானங்களில் வர்கபலம் குறைந்து இருப்பது நல்லதா..
சுக்ரன் களத்திரகரன் அல்லவா அவர் மீன லக்ன ஜாதகத்திற்கு எல்லா நிலைகளிலும் கெட்டவர் என்றால்,மீன லக்னத்திற்கு திருமண வாழ்கையில் தடைகள் வருமா ..////

இதைப் பற்றி முன்பாகவே நிறைய எழுதியுள்ளேன். பழைய பாடங்களை நன்றாகப் படியுங்கள்!

krish said...

எப்படி வாக்களிக்க வேண்டும் என்று தெரியவில்லை. என் போல் பல மாணவர்களும் அது பதிவர்களுக்க்கு மட்டும் என்று நினைத்திருக்கலாம். வலைபதிவு உலகத்திற்கு நான் வந்தது 2008 இறுதியில் தான். அதைப் பற்றி சிவாஜி எம்.ஜி.ஆரை கேலி செய்து எழுதியிருப்பதாக ஜுனியர் விகடனில் எழுதியிருந்ததை படித்தேன். அஷ்டவர்க்கம் பற்றி தேடப்போய் உங்கள் பதிவுக்கு வந்தேன்.அதிலிருந்து தினமும் காலையில் எங்கேயிருந்தாலும் உங்கள் பதிவை பார்த்துவிடுவேன். பின்னோட்டம் இடுவதும் உண்டு. எப்படி வாக்களிப்பது என்று தெரிந்தால் நானும் வகுப்பறை கண்மணிகளும் நரசிம்மராவ் அவர்களுக்கு ஆந்திர மக்கள் வாக்களித்தது போல் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்.

sundari said...

ம் வகுப்பறைக்கு இத்தனை followers இருந்தும் தங்களுக்கு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுக்கள் குறைவாகவே இருக்கிறது. பாடம் மட்டும் படித்தால் போதும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள் போலும். நான் தினமும் இரண்டிலும் தங்களுக்கு ஓட்டு போட்டுக்கொண்டுதான் வருகிறேன்.////

நானும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை, மற்றும் பதிவிற்கு விழும் வாக்குகள் பற்றி neither I am happy nor unhappy!

ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன். அதைப பற்றி சிந்தித்தால் ஆத்ம திருப்தி இல்லாமல் போய்விடும். உங்கள் பின்னூட்டத்திற்கும் வாக்களிப்புக்களுக்கும் நன்றி மிஸ்டர் ஆனந்த்!///
எப்படி ஒட்டு போடுவது சொல்லி தங்க எனக்கு தெரிய வில்லை நான் தினமும் இரண்டிலும் தங்களுக்கு ஓட்டு போட்டுக்கொண்டுதான் வருகிறேன் என்று ஆனந்து
சர்ர் சொல்றரு என்க்கு தெரியவில்லை சொல்லி தங்க தினசரி நான் போடுவேன்.ஐயா வணக்கம் ரொம்பர் நாளா நான் எதும் கேட்க வில்லை 8ல் இருக்கிற சனி என் வாழ்க்கை தின்று விட்ட்து இதைவிட் என்க்கு சாவை(மரணத்தை) தந்து இருக்கலாம். சாலை விபத்தில் உயிர் இழந்து இருக்kalam

Arun A. said...

மிக்க நன்றி Ayya...neengal solvathu pole than poradavendi irrukuth.. porattam thaney valzkai...

M. Thiruvel Murugan said...

ஐயா வணக்கம்!

கேள்விகள் அருமை! தங்கள் பதில்களோ அருமையிலும் அருமை...! "உச்சனை உச்சன் பார்க்கில் பிச்சைக்குப் போனாலும் பிச்சை இல்லை" ( இராம பிரானின் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய 5 கிரகங்கள் உச்சமாக இருந்ததாகவும் அதனால்தான் இராமபிரான் வனவாசம் வரை சென்று கஸ்டப்பட நேர்ந்ததாகவும் ) எங்கேயோ படித்த ஞாபகம். அதுபோல் நீச்சனை நீச்சன் பார்த்தால் என்ன ஆகும் குருதேவா...? ( நானும் பெஞ்ச் மேல் ஏற வேண்டி இருக்குமோ..? )

தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
புது தில்லி

SP.VR. SUBBIAH said...

////krish said...
எப்படி வாக்களிக்க வேண்டும் என்று தெரியவில்லை. என் போல் பல மாணவர்களும் அது பதிவர்களுக்கு மட்டும் என்று நினைத்திருக்கலாம். வலைபதிவு உலகத்திற்கு நான் வந்தது 2008 இறுதியில் தான். அதைப் பற்றி சிவாஜி எம்.ஜி.ஆரை கேலி செய்து எழுதியிருப்பதாக ஜுனியர் விகடனில் எழுதியிருந்ததை படித்தேன். அஷ்டவர்க்கம் பற்றி தேடப்போய் உங்கள் பதிவுக்கு வந்தேன்.அதிலிருந்து தினமும் காலையில் எங்கேயிருந்தாலும் உங்கள் பதிவை பார்த்துவிடுவேன். பின்னோட்டம் இடுவதும் உண்டு. எப்படி வாக்களிப்பது என்று தெரிந்தால் நானும் வகுப்பறை கண்மணிகளும் நரசிம்மராவ் அவர்களுக்கு ஆந்திர மக்கள் வாக்களித்தது போல் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்./////

உங்கள் (மாணவர்களின்) அன்பு ஒன்று போதும் நண்பரே! அதைவிடப் பெரியது ஒன்றுமில்லை!

SP.VR. SUBBIAH said...

/////sundari said...
ம் வகுப்பறைக்கு இத்தனை followers இருந்தும் தங்களுக்கு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுக்கள் குறைவாகவே இருக்கிறது. பாடம் மட்டும் படித்தால் போதும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள் போலும். நான் தினமும் இரண்டிலும் தங்களுக்கு ஓட்டு போட்டுக்கொண்டுதான் வருகிறேன்.////
நானும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை, மற்றும் பதிவிற்கு விழும் வாக்குகள் பற்றி neither I am happy nor unhappy!
ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன். அதைப பற்றி சிந்தித்தால் ஆத்ம திருப்தி இல்லாமல் போய்விடும். உங்கள் பின்னூட்டத்திற்கும் வாக்களிப்புக்களுக்கும் நன்றி மிஸ்டர் ஆனந்த்!///
///// எப்படி ஒட்டு போடுவது சொல்லித் தாங்க எனக்கு தெரிய வில்லை நான் தினமும் இரண்டிலும் தங்களுக்கு ஓட்டு போட்டுக்கொண்டுதான் வருகிறேன் என்று ஆனந்து சார் சொல்றாரு எனக்குத் தெரியவில்லை. சொல்லி த் தாங்க தினசரி நான் போடுவேன்./////

உங்கள் (மாணவர்கள்/மாணவியர்களின்) அன்பு ஒன்று போதும் சகோதரி! அதைவிடப் பெரியது ஒன்றுமில்லை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////ஐயா வணக்கம் ரொம்பர் நாளா நான் எதும் கேட்க வில்லை 8ல் இருக்கிற சனி என் வாழ்க்கை தின்று விட்டது இதைவிட எனக்கு சாவை(மரணத்தை) தந்து இருக்கலாம். சாலை விபத்தில் உயிர் இழந்து இருக்கலாம்./////

உங்களைவிடக் கஷ்டப்படுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். நீங்கள் பார்த்ததில்லை போல!.
குப்பைத் தொட்டியில் கிடக்கும் குழந்தைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தக் குழந்தைகளைவிடவா உங்கள் துன்பங்கள் பெரியது?

SP.VR. SUBBIAH said...

/////Arun A. said...
மிக்க நன்றி Ayya...neengal solvathu pole than poradavendi irrukuth.. porattam thaney valzkai...////

சுற்றும்வரை பூமி,
எரியும்வரை நெருப்பு
போராடும்வரை மனிதன்!
சொன்னவர் கவிஞர் வைரமுத்து!

SP.VR. SUBBIAH said...

////M. Thiruvel Murugan said...
ஐயா வணக்கம்!
கேள்விகள் அருமை! தங்கள் பதில்களோ அருமையிலும் அருமை...! "உச்சனை உச்சன் பார்க்கில் பிச்சைக்குப் போனாலும் பிச்சை இல்லை" ( இராம பிரானின் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய 5 கிரகங்கள் உச்சமாக இருந்ததாகவும் அதனால்தான் இராமபிரான் வனவாசம் வரை சென்று கஷ்டப்பட நேர்ந்ததாகவும் ) எங்கேயோ படித்த ஞாபகம். அதுபோல் நீச்சனை நீச்சன் பார்த்தால் என்ன ஆகும் குருதேவா...? ( நானும் பெஞ்ச் மேல் ஏற வேண்டி இருக்குமோ..? )
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
புது தில்லி/////

”நீசனை நீசன் பார்த்தால், அடுத்தவன் எடுத்த பிச்சையை அடித்து உண்ண வேண்டியதிருக்கும்” என்று நாமாக ஏதாவது சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். அதிலெல்லாம் உண்மை இல்லை. அவையெல்லாம் சொல்லடைகள்.

நீச கிரகங்களுக்கு 20% பலன் உண்டு என்று சொல்வார்கள். நீசமான அந்த கிரகங்கள் அவற்றை வழங்கும்.

ananth said...

எனக்கு சனி தசை சுய புத்தியில்தான் தொழிலில் சில பிரச்சினை இருந்தது. அடுத்து வந்த புதன் புத்தியில் எல்லாம் மாறி விட்டது.

krish said...

சுந்தரி,
மன தளர்ச்சி அடையாதீர்கள். நடப்பவை எல்லாம் நமது நன்மைக்கே. Dr.Wayne Dyer audio lectures are available in You Tube.www.avaxhome.ws என்ற இணைய தளத்தில் அவரது audio books உள்ளன.அதை கேளுங்கள்.மனத்தெளிவு உண்டாகும்.

krish said...

ஆனந்த்,
வாத்தியார் தன்னடக்கத்துடன் வாக்களிக்குமுறை சொல்லமாட்டார். நீங்கள் கூறுங்கள்.நாங்கள் எல்லோரும் ரெடி.

SP.VR. SUBBIAH said...

////ananth said...
எனக்கு சனி தசை சுய புத்தியில்தான் தொழிலில் சில பிரச்சினை இருந்தது. அடுத்து வந்த புதன் புத்தியில் எல்லாம் மாறி விட்டது./////

புதன் புத்தி பொதுவாகவே பல மாற்றங்களைக் கொடுக்கும்!

SP.VR. SUBBIAH said...

///krish said...
சுந்தரி,
மன தளர்ச்சி அடையாதீர்கள். நடப்பவை எல்லாம் நமது நன்மைக்கே. Dr.Wayne Dyer audio lectures are available in You Tube.www.avaxhome.ws என்ற இணைய தளத்தில் அவரது audio books உள்ளன.அதை கேளுங்கள்.மனத்தெளிவு உண்டாகும்./////

தகவலுக்கு நன்றி. அனைவருக்கும் பயன்படட்டும்!

SP.VR. SUBBIAH said...

/////krish said...
ஆனந்த்,
வாத்தியார் தன்னடக்கத்துடன் வாக்களிக்குமுறை சொல்லமாட்டார். நீங்கள் கூறுங்கள்.நாங்கள் எல்லோரும் ரெடி./////

தமிழ்மணத்தின் முகப்பில் எல்லாம் உள்ளது நண்பரே. படித்துப் பாருங்கள்!