மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.12.09

ME and MY BOSS: நானும், என்னை வேலைக்கு வைத்திருப்பவரும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++

ME and MY BOSS: நானும், என்னை வேலைக்கு வைத்திருப்பவரும்!

அடிப்படைத் தேவைகளுக்கு யாரும் அலையக்கூடாது. என் மொழியில் சொன்னால் சிரமப் படக்கூடாது. அது துன்பமானது.

இன்றையப் பொருளாதாரச் சூழ்நிலையில் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றவில்லை! செலவுகளை இழுத்துப் பிடித்தாலும் போதவில்லை. பற்றாக்குறை

இன்றைய மனிதர்கள் இரண்டுவிதமாகப் பிரிந்திருக்கிறார்கள்

1. பணத்திற்கு என்ன செய்வது என்று அலைபவன் அல்லது கவலைப் படுபவன் முதல்வகை
2. பணத்தை வைத்துக் கொண்டு, அதை என்ன செய்வது? எப்படிக் காப்பாற்றுவது? எப்படி அதைப் பெறுக்குவது என்று கவலைப் படுபவன் இரண்டாவது வகை!

மொத்தத்தில் கவலை இல்லாத மனிதனே கிடையாது!

அது என்ன அடிப்படைத் தேவை?

இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு - இதுதான் அடிப்படைத்தேவை. ரோட்டி, கப்டா அவுர் மக்கான்!
------------------------------------------------------
ஒரு படத்தில் நாகேஷ், புரட்சித்தலைவரிடம் சொல்வார்: “ பணம் பத்தும் செய்யும். என்னிடம் பணத்தைக் கொடுத்தால் நான் பதினொன்றைச் செய்வேன்”

”அதென்ன பதினொன்றாவது?”

”பணத்தால் என்ன முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதையும் நான் செய்து தருகிறேன்”

உண்மைதான்! பணத்தை வைத்துக்கொண்டு எதை வேண்டுமென்றாலும் செய்து முடிக்கலாம். வெளியில் செல்ல வேண்டாம். வீடு தேடி அனைவரையும் வரவைக்கலாம்.

பணத்தால் முடியாதவை என்று சில இருக்கின்றன. நல்ல தாயை பணம் கொடுத்து வாங்க முடியாது! அன்பைப், பரிவைப் பணம் கொடுத்து வாங்க முடியாது.தூய காதலைப் பனம் கொடுத்து வாங்க முடியாது.

அதைச் சொன்னால்: “வரட்டு வேதாந்தம் பேசாதீர்கள்.” என்பான் இன்றைய இளைஞன்.

ஆகவே பணம் என்பது சுவாசத்தைப்போல முக்கியமானது. அதை மறுப்பதற்கில்லை. சுவாசமின்றி யாரும் உயிருடன் இருக்க முடியாது. பணத்தேவையும் அப்படிப்பட்டதுதான்!
-------------------------------------------------------
சரி, பணத்திற்கு என்ன செய்வது?

நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமைய வேண்டும்.

அதற்கு ஜாதகத்தில்

1.பத்தாம் வீடு
2.பத்தாம் வீட்டு அதிபதி
3.பத்தில் வந்து அமரும் கிரகம்
4.பத்தாம் வீட்டின் மேல் விழும்பார்வைகள்
5.பத்தாம் அதிபதியின் மேல் விழும் பார்வைகள்
6.அம்சத்தில் பத்தாம் வீட்டு அதிபதியின் நிலைமை
7.பத்தாம் வீட்டுக்காரகனுடன் கூட்டணி போட்டுள்ள கிரகங்கள்
8.பத்தாம் வீட்டின் அஷ்டகவர்க்கப் பரல்கள்
9.பத்தாம் அதிபதியின் சுய வர்க்கப் பரல்கள்
10. கர்மகாரகன் சனியின் நிலைமை

ஆகியவற்றை அலச வேண்டும். அலசினால் ஒரு முடிவிற்கு வரலாம்.

யாரை வைத்து அலசலாம்.

உங்கள் துணிகளை நீங்களேதான் அலச வேண்டும். வேறு யாரும் வந்து அலசித் தரமாட்டார்கள். அப்படி அலசினாலும் உங்களுக்கு உரிய அக்கறையுடன் அவர்கள் அலச மாட்டார்கள். வாங்குகிற காசுக்கு சும்மா அடித்துப் பிழிந்து போட்டுவிட்டுப் போய் விடுவார்கள்.

எப்படி அலச வேண்டும் என்று நான் சொல்லித் தருகிறேன். அழுக்குப்போகத் துவைத்து அலசி, நீங்களே காயப் போடுங்கள்.

அடுத்த பாடம் அதுதான். அது மேல் நிலைப் பாடம். மின்னஞ்சல் பாடம். நாளைக் காலை அனைவருக்கும் வரும். பொறுத்திருந்து படியுங்கள். தெரிந்து கொள்ளுங்கள்.
----------------------------------------------------------
“வாத்தியார், தலைப்பிற்கான செய்தி எங்கே?

”அது கீழே உள்ளது, படித்துப் பாருங்கள்”
------------------------------------------------------------
நான் கடந்த 25 ஆண்டுகளாக சுதந்திர மனிதன். சுய தொழில் செய்பவன். ஆனால் அதற்கு முன் சுமார் 10 ஆண்டு காலம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தவன். அதனால் எனக்கு அதன் அவலங்கள் தெரியும். அதாவது வேலைக்குச் செல்வதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் எனக்குத் தெரியும். அதை நீங்களும் அறியக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்

ME and MY BOSS
நானும், என்னை வேலைக்கு வைத்திருப்பவரும்!

When I Take a long time to finish, I am slow,
When my boss takes a long time, he is thorough
When I don't do it, I am lazy,
When my boss does not do it, he is busy,
When I do something without being told, I am trying to be smart,
When my boss does the same, he takes the initiative,
When I please my boss, I am apple polishing,
When my boss pleases his boss, he is cooperating,
When I make a mistake, I' am an idiot.
When my boss makes a mistake, he's only human.
When I am out of the office, I am wondering around.
When my boss is out of the office, he's on business.
When I am on a day off sick, I am always sick.
When my boss is a day off sick, he must be very ill.
When I apply for leave, I must be going for an interview
When my boss applies for leave, it's because he's overworked
When I do good, my boss never remembers,
When I do wrong, he never forgets
++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

113 comments:

  1. Present sir,

    Looking forward for this email lesson!!!

    Thanks
    Thanuja

    ReplyDelete
  2. Me and My Boss :
    Really, Super Vaathiyaare.

    Thanking you.

    ReplyDelete
  3. me and my boss பலர் வாழ்க்கையில் இப்படி நடந்தும் இருக்கிறது. அனைத்தும் அருமை.

    நானும் சில காலமாக தொழில் ஸ்தானத்தைப் பற்றி ஆராய்ந்து எப்படி பலன் காண்பது என்று மண்டையைக் குடைந்து கொண்டு இருக்கிறேன். பதில் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். (மேலோட்டமாக) பார்த்தால் எதற்கும் உதவாது என்பது போல் ஜாதகம் உள்ளவர்கள் நல்ல தொழில் செய்கிறார்கள். மிகவும் நன்றாக இருக்கும் ஜாதகம் உள்ளவர்கள் சாதாரன அல்லது மிக மிக சாதாரண தொழில் செய்கிறார்கள். முன்பு போல் அல்லாமல் இப்போது பல தொழில்கள். அதிலும் பல உட்பிரிவுகள். மற்ற ஸ்தானங்களுக்கு பலன் காண்பதைவிட 10 இடம் எனக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது.

    ReplyDelete
  4. நன்றிகள்... அருமை நண்பரே.

    பணம் என்பது சுவாசத்தைப்போல முக்கியமானது. அதை மறுப்பதற்கில்லை. சுவாசமின்றி யாரும் உயிருடன் இருக்க முடியாது. பணத்தேவையும் அப்படிப்பட்டதுதான்!

    அருமையான மேற்கோள்...

    நானும், என்னை வேலைக்கு வைத்திருப்பவரும்!

    அனைத்துமே அருமை. ஆனாலும் என்க்கு பிடித்தது. இது தான்...

    When I do something without being told, I am trying to be smart,
    When my boss does the same, he takes the initiative,

    நன்றி..

    ReplyDelete
  5. இன்று பலர் (நானும் அடக்கம்) படும் பாடு...... என்று மாறும் இந்த நிலைமை. 10 இட பாடத்தை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்...

    அன்புடன்
    கர்ண.இரத்தினவேல்

    ReplyDelete
  6. அய்யா இனிய காலை வணக்கம்,
    அருமயான கருத்துகள் .....உங்கள் susbense ஒரு வழியா லீக் பண்ணிட்டீங்க நாளைய மேல்நிலை பாடத்திற்க்கு காத்திருகிறேன் ....
    எதுக்கும் நாளைக்கு பின்னூட்ட பெட்டிக்கு பூட்டு பொட்டு வைங்க அய்யா.......
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  7. ஆசிரியருக்கு வணக்கம்,

    விரும்பியதும்! விதிக்கப்பட்டதும்!
    பதகையும் அது தாங்கிய செய்தியும்
    அருமை.
    நானும் எனது முதலாளியும் என்று
    அது கூரியச் செய்தியும்,
    இன்னும் அருமை.

    "பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை".
    அப்பொருளைத் தேட நல்ல வேலை தேவை.
    அப்படியே அது அமைந்தாலும், அது விரும்பியப்படி
    விதிக்கப்பட்டதாக இருந்தால் தான் இன்னும் சிறப்பு.

    எப்படி ஊருணியில் போட்ட நெல்லி மரம்
    தண்ணீரைத் தெள்ளத் தெளிவாக்கி பருகத் தருமோ அப்படியே
    வழக்கம் போல் தங்களின் பாட விளக்கமும்
    வந்துச் சேரும் என்பது உறுதி.
    விடிவெள்ளியாய் வரும் பாடத்தைப் படிக்க,
    விடியும் வரைக் காத்திருக்கிறேன்"
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  8. very good.
    It is happening in everybody's life who is working under any company.

    ReplyDelete
  9. Dear Sir,

    பணத்தை பற்றிய வாக்கியம் மிக அருமை.

    difference between interest and commitment excellent.

    Rgds
    Nainar.

    ReplyDelete
  10. Dear Sir,

    Thanks for the lessons.

    Balakumaran

    ReplyDelete
  11. //இது வகுப்பறை; கழிப்பறையல்ல! அதை மனதில் வையுங்கள் //

    அப்ப

    கழிப்பறைனு சொல்றது நீங்க வெச்சுருக்க இன்னொரு பிளாகயா!

    ReplyDelete
  12. present sir,
    waiting for the email lessons

    ReplyDelete
  13. அய்யா நான் அடிக்கடி என் வீட்டில் சொல்வதுண்டு,
    அசிங்கத்தில் மொய்க்கும் ஈக்களுக்கு நல்ல பதார்த்தம், அசிங்கம் என்ற பேதம் தெரியாது .
    அசிங்கத்தை உடனே சுத்தம் செய்வதைப் போலவே, நல்லவற்றை மூடி வைத்துப் பாத்து காக்கவேண்டும் என்று.
    இல்லை என்றால் ஈக்களும் கொசுக்களும் மொய்த்து நல்லவற்றை நாசம் செய்துவிடும். இங்கே நானும் சில ஈக்களைப் பார்க்கிறேன்.
    நான் சொல்வது சரிதானே குருவே.

    ReplyDelete
  14. //இல்லை என்றால் ஈக்களும் கொசுக்களும் மொய்த்து நல்லவற்றை நாசம் செய்துவிடும். இங்கே நானும் சில ஈக்களைப் பார்க்கிறேன்.
    நான் சொல்வது சரிதானே குருவே.//

    ஆமா ! ...... காஞ்சா ஈ போயிடும்

    ReplyDelete
  15. மாணவ மணிகள் ! பயங்கர விசுவாசமானவர்கள் போல ! யாராவது குறி சொல்றேன் ஜோசியம் பாக்கறேன்னு கடை விரிச்சா போதும் . நம்மாளுகளுக்கு எப்பிடி மூக்கு வேர்க்கும்னே தெரியாது .. நேரா போயி அய்யா சாமி எனக்கு அஞ்சுல சனி ! ....... ல மணின்னு கால்ல விழுந்துடவேண்டியது

    ReplyDelete
  16. //கழிப்பறைனு சொல்றது நீங்க வெச்சுருக்க இன்னொரு பிளாகயா!//

    காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு சாமியோவ்!

    ReplyDelete
  17. //நேரா போயி அய்யா சாமி எனக்கு அஞ்சுல சனி ! ....... ல மணின்னு கால்ல விழுந்துடவேண்டியது//

    பக்கத்து வீட்டுக்காரன் எட்டி பாக்குறதை விட்டுட்டிங்களே!

    ReplyDelete
  18. //காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு சாமியோவ்!//

    எத்தன கேரட்டு

    ReplyDelete
  19. //எத்தன கேரட்டு //

    ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு!

    ReplyDelete
  20. //பக்கத்து வீட்டுக்காரன் எட்டி பாக்குறதை விட்டுட்டிங்களே!//

    ஊரறிஞ்ச எழுத்தாளர்கள் கூட இன்னும் பிளாக் பக்கம் அவ்வளவா வர்றதில்ல ... ஆனா ஜோசிய காரங்க மட்டும் எப்புடித்தான் ஹை டெக்கா கடை போடறாங்களோ

    ReplyDelete
  21. //ஆனா ஜோசிய காரங்க மட்டும் எப்புடித்தான் ஹை டெக்கா கடை போடறாங்களோ //

    நல்ல நேரம் பார்த்து ஆரம்பிச்சிருப்பாங்க!

    ReplyDelete
  22. அதென்னவோ விடியற வரைக்கும் சன்யாசியா இருந்துட்டு விடிஞ்சா ஒடனே சம்சாரியானா நாட்டுக்கே சக்கரவர்த்தி ஆகலாமாமே !

    ReplyDelete
  23. அட எத்தன நேரந்தான் பல்ல கடிச்சுட்டு உக்காந்திருப்பீங்க பதில சொல்லுங்க பாஸு...

    ஓ! ஒரு வேல அதுக்கும் நல்ல நேரம் வருனுமோ!

    ReplyDelete
  24. //அதென்னவோ விடியற வரைக்கும் சன்யாசியா இருந்துட்டு விடிஞ்சா ஒடனே சம்சாரியானா நாட்டுக்கே சக்கரவர்த்தி ஆகலாமாமே ! //

    ஜெயிலுகுள்ள புல்லு புடுங்கிகிட்டு இருக்காராம் பிரேமானந்தா!

    ReplyDelete
  25. அதெல்லாம் ஓட்டபிடாரத்துக்கும் உடுமலைப் பெட்டிக்கும் நடுவுல இருக்கற அவங்கப்பன் பழனி மல முருகன் பாத்துப்பார்

    ReplyDelete
  26. //அதெல்லாம் ஓட்டபிடாரத்துக்கும் உடுமலைப் பெட்டிக்கும் நடுவுல இருக்கற அவங்கப்பன் பழனி மல முருகன் பாத்துப்பார் //

    அவனே கோவணத்தோட நிக்கிறானாம், அவன் இவனை பாப்பானா!?

    ReplyDelete
  27. நம் வாத்தியாருக்கு 1000த்துக்கும் மேல் follower இருக்கிறார்கள் என்றதும் எதற்கும்/யாருக்கும் பிரயோஜனப் படாத தங்கள் பதிவை யாரும் படிப்பதில்லை என்ற வயிற்றெறிச்சல் தாங்க முடியாமல் யார் யாரோ இங்கு வந்து கொட்டிவிட்டு போகிறார்கள். இப்படியாவது மலிவான விளம்பரம் தேடலாம் என்று. எந்த சுயநலமும் இல்லாமல் பிறருக்கு பயன் பட வேண்டும் என்று பதிவிட்டால் 1000 பேர் என்ன, 2000 பேர் கூட வருவார்கள். இந்த அறிவிலிகள் எப்போதுதான் புரிந்துக் கொள்ள போகிறார்களோ.

    ReplyDelete
  28. \\வால்பையன் said...

    //ஆனா ஜோசிய காரங்க மட்டும் எப்புடித்தான் ஹை டெக்கா கடை போடறாங்களோ //

    நல்ல நேரம் பார்த்து ஆரம்பிச்சிருப்பாங்க!\\

    வாத்தியார் சொல்லும் கதைக்கு வருவேன். சோதிடத்தை பெரிசா நம்புறதில்ல.,

    ஆனா வாலு சொல்றத பார்த்தா சோதிடம் உண்மைதான் போலிருக்கு..

    இனி கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் :))

    ReplyDelete
  29. ஆனந்த், சிலதுகளுக்கு சிலது புரியாது.
    பூமாலையும் கற்பூரமும் அப்படித்தான்.
    இவர்கள் எல்லாம் திருமணதிற்கு மலர் மாலையும்,
    சாவுக்கு, மலர்வளையத்தையும் மட்டும் சரியாகச் கொடுப்பார்கள்.

    "அது மட்டும் மூடப் பழக்கம் ஆகாது".
    கருவாட்டுக்
    கடைக்காரன் பூக்கடைக்குள் இருந்தால் அவனுக்கு குமட்டுமோ என்னமோ.
    இந்த பழைய வியாதிக்கு, காலமே மருந்து.

    மொழிபிரச்சனையை வேறு, மொழியே வேறு.
    அதிலும் சி.பி.யு. பழுதானக் கணிப் பொறியினுள்
    எந்த கட்டமைப்பும் செய்ய முடியாது.

    ReplyDelete
  30. \\rajan RADHAMANALAN said...

    //இது வகுப்பறை; கழிப்பறையல்ல! அதை மனதில் வையுங்கள் //

    அப்ப

    கழிப்பறைனு சொல்றது நீங்க வெச்சுருக்க இன்னொரு பிளாகயா!\\

    திருப்பூர் நண்பரே நானும் திருப்பூர்தான்..

    வாத்தியார் எழுதுவது பிடிக்கலைன்னா உங்களது பதிவில் எதிர்வினை ஆற்றுங்கள்.,

    மாறாக இங்கு கும்மி அடிப்பது அவ்வளவு சிறந்ததல்ல..

    மற்றவர்களுக்கு கிண்டலும், கேலியும், நக்கல், கும்மி எல்லாமே வரும்.

    நட்போடு இருக்கவேண்டும். பழக வேண்டும் என்ற நோக்கில் இதை சொல்கிறேன் நண்பரே

    ReplyDelete
  31. வாத்தியாரே..

    தயவு செய்து வால்பையன், ராஜன்ராதாமணாளனின் பின்னூட்டங்களே அழித்துவிட்டு இனிமேல் அவர்களை இங்கே அனுமதிக்காதீர்கள்..

    ஜனநாயகம் தேவைதான்.. அது வாதாடும்போது.. இது அதையெல்லாம் தாண்டிய கொள்கைப் பிடிப்பைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளியின் வகுப்பறை..!

    இங்கே இவர்களின் அலம்பல்களைக் கண்டிக்க வேண்டியது நமது பொறுப்பு. அடங்காதவர்கள் என்பது தெளிவாகத் தெரியும்போது எதற்காக அனுமதிக்க வேண்டும்..?

    பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாமல் நீக்கிவிடுங்கள். புரிந்து கொண்டு ஒதுங்கட்டும்..!

    ReplyDelete
  32. நான் வலையுலகில் வந்த போது வாத்தியாரிடம் மாடுரேசன் வைக்காமல் எப்படி பின்னூட்டங்களை அறிந்து கொள்வது என சந்தேகம் கேட்டேன்.

    மாடுரேசன் வைக்கும் அளவுக்கு நம் நண்பர்கள் யாரும் பின்னுட்டமிடுவதில்லை,

    மெயில் வசதி வைத்தால் போதும். என எனக்கு பதில் கொடுத்தார்.

    அப்படிப்பட்ட சோதிடம் எந்த அளவுக்கு கொடுத்தாரோ அதே அளவுக்கு மன வளம் பெற பல்வேறு கருத்துகளை தந்த வாத்தியாருக்கு வலையுலகம் தந்த பரிசு, அவரை மாடுரேசன் வைக்க வைத்ததுதான்.

    வாத்தியார் ஒரு தொழில்முறை சோதிடர் இல்லை என தெரிந்தும் ஏன் இப்படி என்பதுதான் புரியவில்லை.

    வலையுலக பண்பாடு என்பது எழுதுகிறோம். நாமே பின்பற்றவில்லை எனில் நாம் எங்கே சமுதாயம் மாற காரணமாக இருக்கப் போகிறோம்.

    ஆக எழுத்தொன்று, செயல் ஒன்று என நண்பர்கள் இருப்பது எனக்கு புரியாத புதிர்தான்

    நட்பு நட்பு நட்பு இந்த வார்த்தையின் பொருளும் கூட இன்னும் எனக்கு இங்கு வந்த பின்னூட்டங்களை பார்க்கும்போது புரியாமலே இருக்கிறது..

    ஒருவேளை எதிரே இல்லாததே இவ்வாறு எழுதத்தூண்டுகிறதோ..

    ReplyDelete
  33. உள்ளேன் ஐயா!
    பாடத்திற்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  34. ஐயா வணக்கம்
    அடிகடி வகுப்பு பக்கம் வந்த எட்டி பார்த்துவிட்டு சென்றுவிட்டேன் (கொஞம் வேலை ஐயா)

    ஐயா நான் பிளாக்கர்ல் எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.
    இன்று ஜோதிடத்திற்கு கொஞ்சம் தொடர்புள்ள ஒரு ஆக்கம் போட்டிருக்கிறேன் ஐயா (அதுவே முதலாவது ஆக்கமும்)
    ஐயா தங்களுக்கு நேரம் இருந்தால் கொஞ்சம் அந்தப் பக்கம் எட்டி பார்த்து ஆசிர்வாதம் வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா
    http://enakkuloruvan2009.blogspot.com/2009/12/blog-post_12.html

    ReplyDelete
  35. Dear Sir

    Atthanai Vasagamum Arumai.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  36. Vanakkam Sir,
    i beg to differ from the perception of Bosssism as not all bosses are that very bad when comes to the treatment of their subordinates.As usualthe other side of coin is not seen: there are GEMS who have inspired many to scale heights in their life:

    By the way i thought this link would be useful for analysing professions. http://www.srigaruda.com/visti/index.php/publications/articles/93-professions

    ReplyDelete
  37. ஐயா வணக்கம்,
    தாங்களின் இன்றைய பதிவு மிக அருமையாகயிருந்தது 10ஆம் வீட்டையும் அதோடு இணைத்து தொழிலாளியின் துன்ப்ங்களையும் முதலாளியின் மிருகதானமான செயல்களையும் சொன்னீங்க அதோடு தாங்கள் சிம்மலக்ன காரர்
    என்பதை 25 ஆண்டுகளுக்கு தன்னிச்சை(சுயமாக)யாக வேலை செய்து இருக்கிறீர்கள் என்பதனின் மூலம் நிருபித்துவிட்டீர்கள் ஐயா.
    சுந்தரி

    ReplyDelete
  38. Last sentences are 100% true.

    thanks sir

    ReplyDelete
  39. ஐயா வணக்கம்,
    தாங்களின் இன்றைய பதிவு மிக அருமையாகயிருந்தது 10ஆம் வீட்டையும் அதோடு இணைத்து தொழிலாளியின் துன்ப்ங்களையும் முதலாளியின் மிருகதானமான செயல்களையும் சொன்னீங்க அதோடு தாங்கள் சிம்மலக்ன காரர்
    என்பதை 25 ஆண்டுகளுக்கு தன்னிச்சை(சுயமாக)யாக வேலை செய்து இருக்கிறீர்கள் என்பதனின் மூலம் நிருபித்துவிட்டீர்கள் ஐயா.
    சுந்தரி

    ReplyDelete
  40. மறு பதிப்பு, வகுப்பில் என்னச் சொன்னாலும் புரியாத மாணவர்களுக்கு, சிலநேரங்களில் மற்ற மாணவர்கள் பழையப் பாடத்தை மீண்டும் நினைவுப் படுத்துவது போலத் தான். பள்ளிக் கூடம் சென்ற, பாடங்களைப் படிக்க முயற்சியாவது செய்த மாணவர்களுக்கு நன்றாகப் புரியும்.

    குரு பக்தி என்பது அது குருவாக இருக்க தகுதியானவகளிடம், தான் உண்மையில் நல்லதைப் பலவற்றைக் கற்றுக் கொள்கிறோம் என்று உணர்பவர்கள், அவர்களையும் மீறி ஒரு வித மரியாதை கலந்த பாசத்தை காண்பிப்பது. இதை உணரவே முடியும் அன்றி உணர்த்த முடியாது.

    இந்த சாத்திரங்களை கற்கும் நாங்கள் தற்குறிகள் அல்ல. வேறு பலத் துறையில் கற்றும் நிபுணத்துவம் பெற்றும், அந்தப் பலதுறையில் அறிய பல பணிகளை ஆற்றிய ஆற்றிக் கொண்டும் இருப்பவர்களே. (நான் தன் அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன். பொறியியல் துறையில் பட்டயம் பெற்றவன் அதன் பிறகு வேண்டிய அளவு சம்பாதித்த பிறகும் தமிழின் மீது உள்ள தீராத தாகத்தால் தமிழில் முதுகலைப் பயின்று பட்டமும் வாங்கியவன். இதைப் போல நிறையப் பேர்.)

    அதோடு நாங்கள் உழைக்காமல், விகண்டவாதம் பேசாமல்; நல்ல மகனாக, கணவானாக, தந்தையாக, நல்ல குடிமஹனாக, நல்ல தமிழனாகவும், நம் இனப் பெருமையை பன்னாட்டு மக்களும் போற்றும் படி தான் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    சோம்பேறியாக இருந்துக்கொண்டும், லாட்டரிச் சீட்டுவாங்கி கொண்டும் எப்போது பணக்காரராவது என்றும் எப்படி உழைக்காமல் சொகுசாக வாழ்வது என்றும் திரியவில்லை.

    கொள்கை வேறாக இருக்கலாம், தயவுக் கூர்ந்து கருத்துக்களை சொல்வதிலும் நாகரிகம் இருந்தால் தான் முதலில் ரசிக்கத் தோன்றும். மற்றவைகள் எல்லாம் பிறகு தான்.

    இதோ மறுபதிப்பு மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள் எதாவது புரியும்.

    "ஆசிரியருக்கு வணக்கம்,

    தங்களின் எச்சரிக்கையை என்ற முன் பத்தியைப்
    படித்தவுடன் நான் பள்ளியில்
    என் தமிழாசிரியர் கூறக் கேட்ட ஒரு அற்புதமான
    விசயம் ஞாபகத்திற்கு வருகிறது.

    தெய்வத்தை நம்பாவிட்டாலும் (ஒரு சிலரின் மேல் உள்ள கோபத்தால்)
    மனித சேவை செய்த ஒரு பகுத்தறிவாளர்
    (அவர் ஈ.வே.ரா அவர்களா அல்லது
    கம்பன் கழக திரு ஜீவா அவர்களா
    என்று மட்டும் ஞாபகம் இல்லை)

    ஒரு முறை மறைமலை அடிகளை பார்க்க சென்றாராம்.
    அடிகளாரின் வீட்டிற்கு வெளியில் ஒரு சமிக்கைப் பலகை
    அதில் தெய்வம் வசிக்கும் குடில். ஆகவே உள்ளே வருபவர்கள்
    காலணிகளை கழற்றி வைத்து விட்டு வரவும் என்று எழுதப் பட்டிருந்ததாம்.

    சென்ற இந்த பகுத்தறிவாளர் அப்படியேச் செய்தாராம்.
    அதற்கு கூட வந்த மற்றவர்கள் கேட்டார்களாம்,
    நீங்கள் தான் தெய்வத்தை நம்ப மாட்டீர்களே பிறகு ஏன்
    தெய்வத்திற்கு பயந்து காலனியை கழற்றி வைக்கிறீர்கள் என்று.

    அதற்கு அவர் கூறினாராம். அது என் நம்பிக்கை.
    அதோடு, நாம் மற்றவர்கள் இருப்பிடத்திற்கு வந்துள்ளோம்,
    அப்படி வரும் போது அவர்களின்
    சட்டத் திட்டத்திற்கு மதிப்புத் தரவண்டுமேயன்றி வேறு அல்ல என்று.

    இன்றும் என் மனதில் அந்த விசயம்
    பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது.

    இதைப் படிக்கும் யாவரும் தங்கள் நம்பிக்கை,
    கொள்கை, பழக்க வழக்கம் எதுவானாலும்
    வரும் இடத்தின் சட்ட திட்டங்களுக்கு
    கட்டுப் பட்டு நடக்கும் நாகரிகங்களைப்
    பின்பற்றுவார்களானால் நன்றாக இருக்கும்".

    ReplyDelete
  41. \\தயவு செய்து வால்பையன், ராஜன்ராதாமணாளனின் பின்னூட்டங்களே அழித்துவிட்டு இனிமேல் அவர்களை இங்கே அனுமதிக்காதீர்கள்..\\

    இருந்து விட்டுப் போகட்டும், அனுமதியுங்கள் :))

    \\அடங்காதவர்கள் என்பது தெளிவாகத் தெரியும்போது எதற்காக அனுமதிக்க வேண்டும்..?\\

    அப்படி செஞ்சா அவங்களின் மனதில் உள்ள எண்ணங்களை அனைவரும் எப்படி தெரிந்து கொள்வது ???

    உனா தனா வாத்தியாருக்காக நம் நண்பர்களான வாலுவையும், ராஜனயும் உரிமை எடுத்துக்கொண்டு உங்களால் கண்டிக்க முடியாதா?

    சீனியர் மாணவர் நீங்கள், மற்ற ஆயிரம் மாணவர்களில் அருணையும், ராஜனையும் எதிர்கொள்ளும் திறன் மாணவ கண்மணிகளுக்கு இல்லையென்றால் வாத்தியார் வகுப்பறையையே...விடலாம்.

    ReplyDelete
  42. ஐயா வணக்கம்,பணம்,ME AND MY BOSS is simply super. தங்கள் பத்தாமிட பதிவினை ஆவலுடன் எதிற்பாற்கிரேன்

    கே.ராஜன் பவானி.

    ReplyDelete
  43. rajan RADHAMANALAN & வால்பையன்

    Read this story and do something good to your country......

    http://www.thestar.com/news/sciencetech/environment/article/738151--boy-s-dream-to-build-windmill-transforms-lives-in-malawi

    http://www.thestar.com/videozone/737443

    ReplyDelete
  44. Dear sir,
    why dont u try to file some defamation case against these nuisense cases.there is clear evidences they had set already.and u too clearly exposed themselves by publishing their feedbacks..
    it is also a cybercrime.
    Else, it is no point in coming to ur classes..it is an insult to all the person coming here eagerly to follow ur blog..

    ReplyDelete
  45. Very Good blog pls accept me as a student and send me lessions to the following id:rpkaran1@gmail.com

    ReplyDelete
  46. Sir,

    WE expresss our solidarity and feel very sorry for things like this.May Palani Murugar forgive these insane.The best thing is to moderate as you did.

    ReplyDelete
  47. உள்ளேன் ஐயா
    சேர்மராஜ்

    ReplyDelete
  48. மேலதிகாரிகள் பற்றிய பதிவு நகைச்சுவையாகக் கொள்ள வேண்டும்.அருமையான சில மேலாள‌ர்களைச் சந்தித்து உள்ளேன்.

    வால் பையன் போன்றவர்களுக்கு பதில் அளிக்காமல் அலட்சியம் செய்வதே சிறந்தது.அவ்ர்களுக்கு பதில் அளிப்பது அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கச்
    செய்வதாக முடியும்.இப்படி சில சில்லுண்டி விஷமம் செய்து பெரியமனிதர் ஆக முயற்சி செய்கிறார்கள்.வகுப்பறை மாணவர்கள் யாரும் மெனக்கிட்டு இது போன்ற பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று அன்புடன்
    கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  49. Dear sir,

    Really I don't understand what is the email lessons. I never got it.
    My e mail address is padmakmuthaly@yahoo.ca
    Please,please, please send them to me because many times you open a very important subject but you finish it with 'deep details will be sending on personal emails'Many times I got stuck with.
    Today's subject about 10th place and the points to be checked, really brilliant. Thankyou once again. The way you teach astrology makes me addict to it.

    Please reply
    thanks
    padma

    ReplyDelete
  50. வணக்கம் குருவே !!!!!!!!!!

    இத்தனை வருடம் அனுபவத்தை மட்டும் கற்ற நான் பொருள் சேர்க்க போகும் பலனை அறிய ஆவலாக உள்ளேன் ஐயா !!!!

    10 க்கு உரியவன் (செவ்வாய் ), அவர் இருப்பது 6 ல் (கடகத்தில் நீசம்) . அங்கு சந்திரன் ஆட்சி ( நீசபங்க ராஜயோகம் அல்லவா?) அவருடன் சனி உள்ளார் இவர் இங்கு பகை, நல்லது அப்படி தானே? இந்த அமைப்பு (செவ்வாய்,சந்திரன், சனி ) கிரஹா ய்த்ததில் வருமா அல்லது சந்த்ரமங்கள யோகத்தில் வருமா ஐய!!!

    தாங்கள் சொல்லி உள்ளீர்கள் சந்திரன் கூட செவ்வாய் இருந்தால் அது சசி மங்கள யோகம் என்று சிறிய குழப்பம் ஐயா!!!1

    ReplyDelete
  51. //சீனியர் மாணவர் நீங்கள், மற்ற ஆயிரம் மாணவர்களில் அருணையும், ராஜனையும் எதிர்கொள்ளும் திறன் மாணவ கண்மணிகளுக்கு இல்லையென்றால் வாத்தியார் வகுப்பறையையே...விடலாம்.//

    என் பதிவில் பொருமையாக பதில் கூறி கொண்டு உள்ளேன். அப்போது தான் புரிந்தது இவர்களுக்கு அடிப்படை வானவியல் கூட தெரியவில்லை.

    ஆனால் சிலர் புரிந்து கொள்ள முயற்சி கூட செய்வதில்லையே. தாங்கள் அறிந்ததையே திரும்ப பகுத்தறிவு போர்வையில் திரும்ப கும்மி அடிப்பது ஏன் ?

    1. புதிதாக கற்க தெரியாமல் இருப்பது 2. மாற்று கருத்துகளை எதிர் கொள்ள தெரியாமல் இருப்பது என்ன வகையான பகுத்தறிவு?

    இவர்களுக்கு கண்டபடி கேள்வி கேட்டு அறிவாளி போல தங்களை காட்டி கொள்ள வேண்டியது தான் அடிப்படை போல உள்ளது.

    இல்லையெனில் நேர்மையான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்திருக்கும்.

    ReplyDelete
  52. தமிழுக்கு வந்த சோதணையும், கிரகங்களும் http://www.tamilscience.co.cc/2009/10/blog-post_30.html

    ReplyDelete
  53. //அட எத்தன நேரந்தான் பல்ல கடிச்சுட்டு உக்காந்திருப்பீங்க பதில சொல்லுங்க பாஸு...

    ஓ! ஒரு வேல அதுக்கும் நல்ல நேரம் வருனுமோ!//
    புத்தி இல்லதவங்களுக்கு பதில் சொல்றது புத்தி உள்ளவுங்களுக்கு அழகல்ல. அதனால்தான் பதில் இல்லை. உங்களுக்கு பதில் வேண்டுமாளால் என்னை தொடர்புகொள்ளுங்கள் (0065‍82669257). முடிந்தவரை விளக்கம் தருகிறேன். அதுவும் புத்தியிருந்தால் மண்டையில் ஏறும். எங்கள் வாத்தியாரை தொந்தரவு செய்யாதீர்கள்.....

    இந்தியாவில் உள்ள ஆன்மிக விசயங்களைப பற்றிப் பேசினால் 1500 ஆண்டுகளுக்குப் பேசலம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். அமெரிக்காவில் மனதத்துவ ஆராய்ச்ச்சிப் படிப்புக்கு (Phd) reference book நமது திருமந்திரமும், திருக்குறலும். இதைச் சொன்னவர், அந்தப் படிப்பிற்காக சிங்கப்பூரிலிருந்து சென்று படிப்பை முடித்துவந்தவர் சிங்கப்பூர் வானொலியில் சொன்ன செய்தி.
    ஆன்மிகமும் ஜோதிடமும் ஒன்றுக்கு ஒன்று தொட்ர்புடையது. இதெல்லாம் பகுத்தறிவாளர்களுக்கு எங்கே புரியப்போகிறது. ஐன்ஸ்டின் கொள்கையை இதுவரை புரிந்துகொண்ட விஞ்ஞானிகளை விரல் விட்டு எண்ணிவிடல்லாம் என்கிறார்கள் அறிவியல் மேதைகள். அப்படியென்றால் நமக்கு எங்கே புரியப்போகிறது. நமக்கு புரியவில்லை என்றால் ஐன்ஸ்டின் கொள்கைதான் தவறா அல்லது ஐன்ஸ்டின் முட்டாளா? இல்லை ஐன்ஸ்டின் கொள்கையை தெரிந்துகொள்ள முயற்சிப்பவர்கள்தான் முட்டாளா?

    இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்க வேண்டியது ஒன்றும் இல்லை. நமது முன்னோர்களுடைய வழி நடந்தாலே போதும். இந்தியா பெருமை அடையும். நாம் நிம்மதியாக வாழலாம்

    அநகரிகமாக நடந்துகொள்வதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யுங்கள் புரிந்ததா ராஜன் மற்றும் வால்பையா? இருவரும் என்ன படிப்பு தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  54. வால்பையன் மற்றும் ராஜன்ராதமணாளன் போன்றவர்கள் கழிப்பறைக்கும் வகுப்பறைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்பது புரிகிறது. பெற்றவர்களாவது அல்லது கற்றரிவத்தவர்களாவது சொல்லி திருத்தி இருக்க வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

    என் கேள்வி. இப்படிப்பட்ட குணக்கேடுகள் வருவதற்கு எந்த கிரகத்தின் நிலைப்பாடுகள் காரணம்?

    ReplyDelete
  55. ihaven't received the mail with this lesson yet ayya. waiting as u had said u r sending it in 2 sessions. thank you so much for the service.

    ReplyDelete
  56. Dear Sir,

    forget and forgive these people. no need to concern them too much, just block them and go ahead, we are waiting for your email lesson.

    ReplyDelete
  57. வால்பையன் மற்றும் ராஜன்ராதமணாளன் போன்ற பன்பில்லாதவ்ர்களை ராகு/கேது பிரிவில் சேர்த்துவிட்டு நாம் நம் வேலையை பார்க்க வேண்டியது தான்
    துஷ்டனை கன்டால் தூர விலகுவது தான் புததிசாலித்தனம்.

    ReplyDelete
  58. rajan RADHAMANALAN said...

    //இது வகுப்பறை; கழிப்பறையல்ல! அதை மனதில் வையுங்கள் //

    அப்ப

    கழிப்பறைனு சொல்றது நீங்க வெச்சுருக்க இன்னொரு பிளாகயா!

    ஏன் ராதாமனாளன் கழிப்பற்யை சுத்தம் செயய போகறீர்களா?

    ReplyDelete
  59. வால் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அது உங்கள் விருப்பம், அதை உங்களுக்கு என்று இருக்கும் பிளாக்கில் எழுங்கள்.இங்கு கும்மி வேண்டாம் என்று சொன்னபிறகும் இங்கு தாங்கள் நக்கல் அடிப்பது போன்று பின்னூட்டம் போடுவது சரி இல்லை.

    ReplyDelete
  60. Ayya,

    It is perturbed to read some useless/worthless/meaningless comments from somebody.

    These "somebody" will understand /helps their real life while they turned their heart towards god's blessings while blessings are always available to everybody.

    Regards.

    ReplyDelete
  61. ஐயா,

    எனக்கு இன்னும் மேல்நிலைப் பாடம் வந்து சேரவில்லை. ஆவன செய்வீர்களா?

    அன்புடன்,
    ஆனந்தி

    ReplyDelete
  62. /////Thanuja said...
    Present sir,
    Looking forward for this email lesson!!!
    Thanks
    Thanuja////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  63. //////Raju said...
    Me and My Boss :
    Really, Super Vaathiyaare.
    Thanking you./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  64. //////ananth said...
    me and my boss பலர் வாழ்க்கையில் இப்படி நடந்தும் இருக்கிறது. அனைத்தும் அருமை.
    நானும் சில காலமாக தொழில் ஸ்தானத்தைப் பற்றி ஆராய்ந்து எப்படி பலன் காண்பது என்று மண்டையைக் குடைந்து கொண்டு இருக்கிறேன். பதில் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். (மேலோட்டமாக) பார்த்தால் எதற்கும் உதவாது என்பது போல் ஜாதகம் உள்ளவர்கள் நல்ல தொழில் செய்கிறார்கள். மிகவும் நன்றாக இருக்கும் ஜாதகம் உள்ளவர்கள் சாதாரன அல்லது மிக மிக சாதாரண தொழில் செய்கிறார்கள். முன்பு போல் அல்லாமல் இப்போது பல தொழில்கள். அதிலும் பல உட்பிரிவுகள். மற்ற ஸ்தானங்களுக்கு பலன் காண்பதைவிட 10 இடம் எனக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது./////

    உண்மை. இருக்கும் வீடுகளில் பத்தாம் வீட்டிற்குப் பலன் சொல்வதுதான் மிகவும் கடினம். காரணம், இன்று வேலை என்பது, லட்சக்கணக்கான பிரிவுகளுடன் வளர்ந்துள்ளது. அதில் ஜாதகன் என்ன வேலைக்குப் போவான் என்று pin point ஆகக் கூறுவது கடினம்

    ReplyDelete
  65. /////Success said...
    நன்றிகள்... அருமை நண்பரே.
    பணம் என்பது சுவாசத்தைப்போல முக்கியமானது. அதை மறுப்பதற்கில்லை. சுவாசமின்றி யாரும் உயிருடன் இருக்க முடியாது. பணத்தேவையும் அப்படிப்பட்டதுதான்!
    அருமையான மேற்கோள்...
    நானும், என்னை வேலைக்கு வைத்திருப்பவரும்!
    அனைத்துமே அருமை. ஆனாலும் என்க்கு பிடித்தது. இது தான்...
    When I do something without being told, I am trying to be smart,
    When my boss does the same, he takes the initiative,
    நன்றி..//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  66. /////Rathinavel.C said...
    இன்று பலர் (நானும் அடக்கம்) படும் பாடு...... என்று மாறும் இந்த நிலைமை. 10 இட பாடத்தை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்...
    அன்புடன்
    கர்ண.இரத்தினவேல்/////

    உங்களின் ஆவல் வீண் போகாது. பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  67. /////nellai ram said...
    Timely correct article!

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  68. ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    அருமயான கருத்துகள் .....உங்கள் susbense ஒரு வழியா லீக் பண்ணிட்டீங்க நாளைய மேல்நிலை பாடத்திற்க்கு காத்திருகிறேன் ....
    எதுக்கும் நாளைக்கு பின்னூட்ட பெட்டிக்கு பூட்டு பொட்டு வைங்க அய்யா.......
    நன்றி வணக்கம்/////

    உங்கள் வாக்கு பலித்து விட்டது!:-)))

    ReplyDelete
  69. //////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    விரும்பியதும்! விதிக்கப்பட்டதும்! பதகையும் அது தாங்கிய செய்தியும் அருமை.
    நானும் எனது முதலாளியும் என்று அது கூரியச் செய்தியும், இன்னும் அருமை.
    "பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை".
    அப்பொருளைத் தேட நல்ல வேலை தேவை.
    அப்படியே அது அமைந்தாலும், அது விரும்பியப்படி விதிக்கப்பட்டதாக இருந்தால் தான் இன்னும் சிறப்பு.
    எப்படி ஊருணியில் போட்ட நெல்லி மரம் தண்ணீரைத் தெள்ளத் தெளிவாக்கி பருகத் தருமோ அப்படியே
    வழக்கம் போல் தங்களின் பாட விளக்கமும் வந்துச் சேரும் என்பது உறுதி. விடிவெள்ளியாய் வரும் பாடத்தைப் படிக்க, விடியும்வரை காத்திருக்கிறேன்"
    நன்றிகள் குருவே!/////

    எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? வந்தவுடன் படியுங்கள்.

    ReplyDelete
  70. /////jee said...
    very good.
    It is happening in everybody's life who is working under any company./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  71. /////arumuga nainar said...
    Dear Sir,
    பணத்தை பற்றிய வாக்கியம் மிக அருமை.
    difference between interest and commitment excellent.
    Rgds
    Nainar./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நைனா(ர்)!

    ReplyDelete
  72. ///////KUMARAN said...
    Dear Sir,
    Thanks for the lessons.
    Balakumaran/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  73. ////Ram said...
    present sir,
    waiting for the email lessons////

    எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? வரும். வந்தவுடன் படியுங்கள் ராம்!

    ReplyDelete
  74. /////Alasiam G said...
    அய்யா நான் அடிக்கடி என் வீட்டில் சொல்வதுண்டு,
    அசிங்கத்தில் மொய்க்கும் ஈக்களுக்கு நல்ல பதார்த்தம், அசிங்கம் என்ற பேதம் தெரியாது .
    அசிங்கத்தை உடனே சுத்தம் செய்வதைப் போலவே, நல்லவற்றை மூடி வைத்துப் பாத்து காக்கவேண்டும் என்று.
    இல்லை என்றால் ஈக்களும் கொசுக்களும் மொய்த்து நல்லவற்றை நாசம் செய்துவிடும். இங்கே நானும் சில ஈக்களைப் பார்க்கிறேன்.
    நான் சொல்வது சரிதானே குருவே.////

    சரிதான்! சரிதான்!

    ReplyDelete
  75. //////ananth said...
    நம் வாத்தியாருக்கு 1000த்துக்கும் மேல் follower இருக்கிறார்கள் என்றதும் எதற்கும்/யாருக்கும் பிரயோஜனப் படாத தங்கள் பதிவை யாரும் படிப்பதில்லை என்ற வயிற்றெறிச்சல் தாங்க முடியாமல் யார் யாரோ இங்கு வந்து கொட்டிவிட்டு போகிறார்கள். இப்படியாவது மலிவான விளம்பரம் தேடலாம் என்று. எந்த சுயநலமும் இல்லாமல் பிறருக்கு பயன் பட வேண்டும் என்று பதிவிட்டால் 1000 பேர் என்ன, 2000 பேர் கூட வருவார்கள். இந்த அறிவிலிகள் எப்போதுதான் புரிந்துக் கொள்ள போகிறார்களோ.//////

    புரிந்துகொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை என்பதே உண்மை!

    ReplyDelete
  76. //////நிகழ்காலத்தில்... said...
    \\வால்பையன் said...
    //ஆனா ஜோசிய காரங்க மட்டும் எப்புடித்தான் ஹை டெக்கா கடை போடறாங்களோ //
    நல்ல நேரம் பார்த்து ஆரம்பிச்சிருப்பாங்க!\\
    வாத்தியார் சொல்லும் கதைக்கு வருவேன். சோதிடத்தை பெரிசா நம்புறதில்ல.,
    ஆனா வாலு சொல்றத பார்த்தா சோதிடம் உண்மைதான் போலிருக்கு..
    இனி கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் :))/////

    அது உங்கள் சாய்ஸ்!:-))))

    ReplyDelete
  77. ////Alasiam G said...
    ஆனந்த், சிலதுகளுக்கு சிலது புரியாது. பூமாலையும் கற்பூரமும் அப்படித்தான்.
    இவர்கள் எல்லாம் திருமணதிற்கு மலர் மாலையும், சாவுக்கு, மலர்வளையத்தையும் மட்டும் சரியாகச் கொடுப்பார்கள். "அது மட்டும் மூடப் பழக்கம் ஆகாது". கருவாட்டுக் கடைக்காரன் பூக்கடைக்குள் இருந்தால் அவனுக்கு குமட்டுமோ என்னமோ. இந்த பழைய வியாதிக்கு, காலமே மருந்து.
    மொழிபிரச்சனை வேறு, மொழியே வேறு.
    அதிலும் சி.பி.யு. பழுதானக் கணிப் பொறியினுள் எந்த கட்டமைப்பும் செய்ய முடியாது./////

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  78. /////நிகழ்காலத்தில்... said...
    \\rajan RADHAMANALAN said...
    //இது வகுப்பறை; கழிப்பறையல்ல! அதை மனதில் வையுங்கள் //
    அப்ப கழிப்பறைனு சொல்றது நீங்க வெச்சுருக்க இன்னொரு பிளாகயா!\\
    திருப்பூர் நண்பரே நானும் திருப்பூர்தான்..
    வாத்தியார் எழுதுவது பிடிக்கலைன்னா உங்களது பதிவில் எதிர்வினை ஆற்றுங்கள்.,
    மாறாக இங்கு கும்மி அடிப்பது அவ்வளவு சிறந்ததல்ல..
    மற்றவர்களுக்கு கிண்டலும், கேலியும், நக்கல், கும்மி எல்லாமே வரும்.
    நட்போடு இருக்கவேண்டும். பழக வேண்டும் என்ற நோக்கில் இதை சொல்கிறேன் நண்பரே//////

    இல்லை. நமக்கு அதெல்லாம் வேண்டாம்!
    மன்னிப்போம்!
    மறப்போம்!
    நமது வேலையைப் பார்ப்போம்!

    ReplyDelete
  79. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    தயவு செய்து வால்பையன், ராஜன்ராதாமணாளனின் பின்னூட்டங்களே அழித்துவிட்டு இனிமேல் அவர்களை இங்கே அனுமதிக்காதீர்கள்..
    ஜனநாயகம் தேவைதான்.. அது வாதாடும்போது.. இது அதையெல்லாம் தாண்டிய கொள்கைப் பிடிப்பைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளியின் வகுப்பறை..!
    இங்கே இவர்களின் அலம்பல்களைக் கண்டிக்க வேண்டியது நமது பொறுப்பு. அடங்காதவர்கள் என்பது தெளிவாகத் தெரியும்போது எதற்காக அனுமதிக்க வேண்டும்..?
    பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாமல் நீக்கிவிடுங்கள். புரிந்து கொண்டு ஒதுங்கட்டும்..!//////

    நல்லது உண்மைத் தமிழரே! உங்கள் யோசனைக்கு நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  80. /////நிகழ்காலத்தில்... said...
    நான் வலையுலகில் வந்த போது வாத்தியாரிடம் மாடுரேசன் வைக்காமல் எப்படி பின்னூட்டங்களை அறிந்து கொள்வது என சந்தேகம் கேட்டேன்.
    மாடுரேசன் வைக்கும் அளவுக்கு நம் நண்பர்கள் யாரும் பின்னுட்டமிடுவதில்லை,
    மெயில் வசதி வைத்தால் போதும். என எனக்கு பதில் கொடுத்தார்.
    அப்படிப்பட்ட சோதிடம் எந்த அளவுக்கு கொடுத்தாரோ அதே அளவுக்கு மன வளம் பெற பல்வேறு கருத்துகளை தந்த வாத்தியாருக்கு வலையுலகம் தந்த பரிசு, அவரை மாடுரேசன் வைக்க வைத்ததுதான்.
    வாத்தியார் ஒரு தொழில்முறை சோதிடர் இல்லை என தெரிந்தும் ஏன் இப்படி என்பதுதான் புரியவில்லை.
    வலையுலக பண்பாடு என்பது எழுதுகிறோம். நாமே பின்பற்றவில்லை எனில் நாம் எங்கே சமுதாயம் மாற காரணமாக இருக்கப் போகிறோம்.
    ஆக எழுத்தொன்று, செயல் ஒன்று என நண்பர்கள் இருப்பது எனக்கு புரியாத புதிர்தான்
    நட்பு நட்பு நட்பு இந்த வார்த்தையின் பொருளும் கூட இன்னும் எனக்கு இங்கு வந்த பின்னூட்டங்களை பார்க்கும்போது புரியாமலே இருக்கிறது..
    ஒருவேளை எதிரே இல்லாததே இவ்வாறு எழுதத்தூண்டுகிறதோ..////

    இருக்கலாம்! நன்றி நண்பரே! ஒளிந்து நின்று கல் எறிவது வசதியானது!

    ReplyDelete
  81. /////aadhirai said...
    உள்ளேன் ஐயா!
    பாடத்திற்காக காத்திருக்கிறேன்.////

    வரும். சற்றுப்பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  82. /////Kumares said...
    ஐயா வணக்கம்
    அடிகடி வகுப்பு பக்கம் வந்த எட்டி பார்த்துவிட்டு சென்றுவிட்டேன் (கொஞம் வேலை ஐயா)
    ஐயா நான் பிளாக்கர்ல் எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.
    இன்று ஜோதிடத்திற்கு கொஞ்சம் தொடர்புள்ள ஒரு ஆக்கம் போட்டிருக்கிறேன் ஐயா (அதுவே முதலாவது ஆக்கமும்)
    ஐயா தங்களுக்கு நேரம் இருந்தால் கொஞ்சம் அந்தப் பக்கம் எட்டி பார்த்து ஆசிர்வாதம் வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா
    http://enakkuloruvan2009.blogspot.com/2009/12/blog-post_12.html////

    நன்று பார்த்துவிட்டு எழுதுகிறேன்!

    ReplyDelete
  83. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Atthanai Vasagamum Arumai.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  84. /////CUMAR said...
    Vanakkam Sir,
    i beg to differ from the perception of Bosssism as not all bosses are that very bad when comes to the treatment of their subordinates.As usualthe other side of coin is not seen: there are GEMS who have inspired many to scale heights in their life:
    By the way i thought this link would be useful for analysing professions. http://www.srigaruda.com/visti/index.php/publications/articles/93-professions///////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  85. ////sundari said...
    ஐயா வணக்கம்,
    தாங்களின் இன்றைய பதிவு மிக அருமையாகயிருந்தது 10ஆம் வீட்டையும் அதோடு இணைத்து தொழிலாளியின் துன்ப்ங்களையும் முதலாளியின் மிருகதானமான செயல்களையும் சொன்னீங்க அதோடு தாங்கள் சிம்மலக்ன காரர் என்பதை 25 ஆண்டுகளுக்கு தன்னிச்சை(சுயமாக)யாக வேலை செய்து இருக்கிறீர்கள் என்பதனின் மூலம் நிருபித்துவிட்டீர்கள் ஐயா.
    சுந்தரி////

    நான் எங்கே நிருபித்தேன். விதிவழிப் பயணம் அல்லவா சென்று கொண்டிருக்கிறேன். அதில் என் பங்கு ஒன்றுமில்லை!

    ReplyDelete
  86. /////rama said...
    Last sentences are 100% true.
    thanks sir////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  87. /////Alasiam G said...
    மறு பதிப்பு, வகுப்பில் என்னச் சொன்னாலும் புரியாத மாணவர்களுக்கு, சிலநேரங்களில் மற்ற மாணவர்கள் பழையப் பாடத்தை மீண்டும் நினைவுப் படுத்துவது போலத் தான். பள்ளிக் கூடம் சென்ற, பாடங்களைப் படிக்க முயற்சியாவது செய்த மாணவர்களுக்கு நன்றாகப் புரியும்.
    குரு பக்தி என்பது அது குருவாக இருக்க தகுதியானவகளிடம், தான் உண்மையில் நல்லதைப் பலவற்றைக் கற்றுக் கொள்கிறோம் என்று உணர்பவர்கள், அவர்களையும் மீறி ஒரு வித மரியாதை கலந்த பாசத்தை காண்பிப்பது. இதை உணரவே முடியும் அன்றி உணர்த்த முடியாது.
    இந்த சாத்திரங்களை கற்கும் நாங்கள் தற்குறிகள் அல்ல. வேறு பலத் துறையில் கற்றும் நிபுணத்துவம் பெற்றும், அந்தப் பலதுறையில் அறிய பல பணிகளை ஆற்றிய ஆற்றிக் கொண்டும் இருப்பவர்களே. (நான் தன் அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன். பொறியியல் துறையில் பட்டயம் பெற்றவன் அதன் பிறகு வேண்டிய அளவு சம்பாதித்த பிறகும் தமிழின் மீது உள்ள தீராத தாகத்தால் தமிழில் முதுகலைப் பயின்று பட்டமும் வாங்கியவன். இதைப் போல நிறையப் பேர்.)
    அதோடு நாங்கள் உழைக்காமல், விகண்டவாதம் பேசாமல்; நல்ல மகனாக, கணவானாக, தந்தையாக, நல்ல குடிமஹனாக, நல்ல தமிழனாகவும், நம் இனப் பெருமையை பன்னாட்டு மக்களும் போற்றும் படி தான் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
    சோம்பேறியாக இருந்துக்கொண்டும், லாட்டரிச் சீட்டுவாங்கி கொண்டும் எப்போது பணக்காரராவது என்றும் எப்படி உழைக்காமல் சொகுசாக வாழ்வது என்றும் திரியவில்லை.
    கொள்கை வேறாக இருக்கலாம், தயவுக் கூர்ந்து கருத்துக்களை சொல்வதிலும் நாகரிகம் இருந்தால் தான் முதலில் ரசிக்கத் தோன்றும். மற்றவைகள் எல்லாம் பிறகு தான்.
    இதோ மறுபதிப்பு மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள் எதாவது புரியும்.
    "ஆசிரியருக்கு வணக்கம்,
    தங்களின் எச்சரிக்கையை என்ற முன் பத்தியைப் படித்தவுடன் நான் பள்ளியில் என் தமிழாசிரியர் கூறக் கேட்ட ஒரு அற்புதமான விசயம் ஞாபகத்திற்கு வருகிறது.
    தெய்வத்தை நம்பாவிட்டாலும் (ஒரு சிலரின் மேல் உள்ள கோபத்தால்) மனித சேவை செய்த ஒரு பகுத்தறிவாளர் (அவர் ஈ.வே.ரா அவர்களா அல்லது கம்பன் கழக திரு ஜீவா அவர்களா என்று மட்டும் ஞாபகம் இல்லை)
    ஒரு முறை மறைமலை அடிகளை பார்க்க சென்றாராம். அடிகளாரின் வீட்டிற்கு வெளியில் ஒரு சமிக்கைப் பலகை அதில் தெய்வம் வசிக்கும் குடில். ஆகவே உள்ளே வருபவர்கள் காலணிகளை கழற்றி வைத்து விட்டு வரவும் என்று எழுதப் பட்டிருந்ததாம். சென்ற இந்த பகுத்தறிவாளர் அப்படியேச் செய்தாராம். அதற்கு கூட வந்த மற்றவர்கள் கேட்டார்களாம், நீங்கள் தான் தெய்வத்தை நம்ப மாட்டீர்களே பிறகு ஏன்
    தெய்வத்திற்கு பயந்து காலனியை கழற்றி வைக்கிறீர்கள் என்று. அதற்கு அவர் கூறினாராம். அது என் நம்பிக்கை. அதோடு, நாம் மற்றவர்கள் இருப்பிடத்திற்கு வந்துள்ளோம், அப்படி வரும் போது அவர்களின்
    சட்டத் திட்டத்திற்கு மதிப்புத் தரவேண்டுமேயன்றி வேறு அல்ல என்று. இன்றும் என் மனதில் அந்த விசயம்
    பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது. இதைப் படிக்கும் யாவரும் தங்கள் நம்பிக்கை,
    கொள்கை, பழக்க வழக்கம் எதுவானாலும் வரும் இடத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப் பட்டு நடக்கும் நாகரிகங்களைப் பின்பற்றுவார்களானால் நன்றாக இருக்கும்"./////

    உங்களின் நீண்ட பின்னூடத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  88. /////நிகழ்காலத்தில்... said...
    \\தயவு செய்து வால்பையன், ராஜன்ராதாமணாளனின் பின்னூட்டங்களே அழித்துவிட்டு இனிமேல் அவர்களை இங்கே அனுமதிக்காதீர்கள்..\\
    இருந்து விட்டுப் போகட்டும், அனுமதியுங்கள் :))
    \\அடங்காதவர்கள் என்பது தெளிவாகத் தெரியும்போது எதற்காக அனுமதிக்க வேண்டும்..?\\
    அப்படி செஞ்சா அவங்களின் மனதில் உள்ள எண்ணங்களை அனைவரும் எப்படி தெரிந்து கொள்வது ???
    உனா தனா வாத்தியாருக்காக நம் நண்பர்களான வாலுவையும், ராஜனயும் உரிமை எடுத்துக்கொண்டு உங்களால் கண்டிக்க முடியாதா?
    சீனியர் மாணவர் நீங்கள், மற்ற ஆயிரம் மாணவர்களில் அருணையும், ராஜனையும் எதிர்கொள்ளும் திறன் மாணவ கண்மணிகளுக்கு இல்லையென்றால் வாத்தியார் வகுப்பறையையே...விடலாம்.////

    அதெல்லாம் எதற்கு? வேண்டாம்
    நம் வழியே நாம் பயணிப்போம்!

    ReplyDelete
  89. /////krishnan said...
    ஐயா வணக்கம்,பணம்,ME AND MY BOSS is simply super. தங்கள் பத்தாமிட பதிவினை ஆவலுடன் எதிற்பாற்கிறேன்
    கே.ராஜன் பவானி./////

    வரும். சற்றுப் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  90. ////minorwall said...
    Dear sir,
    why dont u try to file some defamation case against these nuisense cases.there is clear evidences they had set already.and u too clearly exposed themselves by publishing their feedbacks.. it is also a cybercrime.
    Else, it is no point in coming to ur classes..it is an insult to all the person coming here eagerly to follow ur blog../////

    நாட்டு நடப்பை அறியாதவரா நீங்கள்? அதெல்லாம் வேண்டாம். பெட்டிக்குப் பூட்டுப் போட்டுவிட்டேன். அவர்கள் உள்ளே நுழையாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் ஆதங்கத்திற்கு நன்றி!

    ReplyDelete
  91. /////Praba said...
    Very Good blog pls accept me as a student and send me lessions to the following id:rpkaran1@gmail.com////

    உங்கள் பெயர் பதிவு செய்து கொள்ளப்படும். பாடங்கள அனுப்பிவைக்கப்படும். சற்றுப் பொறுத்திருங்கள் சகோதரி!

    ReplyDelete
  92. /////CUMAR said...
    Sir,
    WE expresss our solidarity and feel very sorry for things like this.May Palani Murugar forgive these insane.The best thing is to moderate as you did./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  93. /////tamiltemples said...
    உள்ளேன் ஐயா
    சேர்மராஜ்/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  94. /////kmr.krishnan said...
    மேலதிகாரிகள் பற்றிய பதிவு நகைச்சுவையாகக் கொள்ள வேண்டும்.அருமையான சில மேலாள‌ர்களைச் சந்தித்து உள்ளேன்.
    வால் பையன் போன்றவர்களுக்கு பதில் அளிக்காமல் அலட்சியம் செய்வதே சிறந்தது.அவ்ர்களுக்கு பதில் அளிப்பது அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கச்
    செய்வதாக முடியும்.இப்படி சில சில்லுண்டி விஷமம் செய்து பெரியமனிதர் ஆக முயற்சி செய்கிறார்கள்.வகுப்பறை மாணவர்கள் யாரும் மெனக்கிட்டு இது போன்ற பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று அன்புடன்
    கேட்டுக்கொள்கிறேன்./////

    உங்கள் கருத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  95. /////padma said...
    Dear sir,
    Really I don't understand what is the email lessons. I never got it.
    My e mail address is padmakmuthaly@yahoo.ca
    Please,please, please send them to me because many times you open a very important subject but you finish it with 'deep details will be sending on personal emails'Many times I got stuck with.
    Today's subject about 10th place and the points to be checked, really brilliant. Thankyou once again. The way you teach astrology makes me addict to it.
    Please reply
    thanks
    padma/////

    உங்கள் பெயர் பதிவு செய்து கொள்ளப்படும். பாடங்கள அனுப்பிவைக்கப்படும். சற்றுப் பொறுத்திருங்கள் சகோதரி!

    ReplyDelete
  96. //////kannan said...
    வணக்கம் குருவே !!!!!!!!!!
    இத்தனை வருடம் அனுபவத்தை மட்டும் கற்ற நான் பொருள் சேர்க்க போகும் பலனை அறிய ஆவலாக உள்ளேன் ஐயா !!!!
    10 க்கு உரியவன் (செவ்வாய் ), அவர் இருப்பது 6 ல் (கடகத்தில் நீசம்) . அங்கு சந்திரன் ஆட்சி ( நீசபங்க ராஜயோகம் அல்லவா?) அவருடன் சனி உள்ளார் இவர் இங்கு பகை, நல்லது அப்படி தானே? இந்த அமைப்பு (செவ்வாய்,சந்திரன், சனி ) கிரஹயுத்ததில் வருமா அல்லது சந்த்ரமங்கள யோகத்தில் வருமா ஐய!!!
    தாங்கள் சொல்லி உள்ளீர்கள் சந்திரன் கூட செவ்வாய் இருந்தால் அது சசி மங்கள யோகம் என்று சிறிய குழப்பம் ஐயா!!!1/////

    பழைய பாடங்களை முதலில் படியுங்கள். குழப்பம் நீங்கும்!

    ReplyDelete
  97. //////Sabarinathan Arthanari said...
    //சீனியர் மாணவர் நீங்கள், மற்ற ஆயிரம் மாணவர்களில் அருணையும், ராஜனையும் எதிர்கொள்ளும் திறன் மாணவ கண்மணிகளுக்கு இல்லையென்றால் வாத்தியார் வகுப்பறையையே...விடலாம்.//
    என் பதிவில் பொருமையாக பதில் கூறி கொண்டு உள்ளேன். அப்போது தான் புரிந்தது இவர்களுக்கு அடிப்படை வானவியல் கூடத் தெரியவில்லை.
    ஆனால் சிலர் புரிந்து கொள்ள முயற்சி கூட செய்வதில்லையே. தாங்கள் அறிந்ததையே திரும்ப பகுத்தறிவு போர்வையில் திரும்ப கும்மி அடிப்பது ஏன் ?
    1. புதிதாக கற்க தெரியாமல் இருப்பது 2. மாற்று கருத்துகளை எதிர் கொள்ள தெரியாமல் இருப்பது என்ன வகையான பகுத்தறிவு?
    இவர்களுக்கு கண்டபடி கேள்வி கேட்டு அறிவாளி போல தங்களை காட்டி கொள்ள வேண்டியது தான் அடிப்படை போல உள்ளது.
    இல்லையெனில் நேர்மையான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்திருக்கும்.////

    புரிதலுக்கும், உங்கள் கருத்துப் பகிர்விற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  98. /////Sabarinathan Arthanari said...
    தமிழுக்கு வந்த சோதணையும், கிரகங்களும் http://www.tamilscience.co.cc/2009/10/blog-post_30.html/////

    தகவலுக்கு நன்றி! படித்துப் பார்க்கிறேன்!

    ReplyDelete
  99. ////Mani said...
    //அட எத்தன நேரந்தான் பல்ல கடிச்சுட்டு உக்காந்திருப்பீங்க பதில சொல்லுங்க பாஸு...
    ஓ! ஒரு வேல அதுக்கும் நல்ல நேரம் வருனுமோ!//
    புத்தி இல்லதவங்களுக்கு பதில் சொல்றது புத்தி உள்ளவுங்களுக்கு அழகல்ல. அதனால்தான் பதில் இல்லை. உங்களுக்கு பதில் வேண்டுமாளால் என்னை தொடர்புகொள்ளுங்கள் (0065‍82669257). முடிந்தவரை விளக்கம் தருகிறேன். அதுவும் புத்தியிருந்தால் மண்டையில் ஏறும். எங்கள் வாத்தியாரை தொந்தரவு செய்யாதீர்கள்.....
    இந்தியாவில் உள்ள ஆன்மிக விசயங்களைப பற்றிப் பேசினால் 1500 ஆண்டுகளுக்குப் பேசலம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். அமெரிக்காவில் மனதத்துவ ஆராய்ச்ச்சிப் படிப்புக்கு (Phd) reference book நமது திருமந்திரமும், திருக்குறலும். இதைச் சொன்னவர், அந்தப் படிப்பிற்காக சிங்கப்பூரிலிருந்து சென்று படிப்பை முடித்துவந்தவர் சிங்கப்பூர் வானொலியில் சொன்ன செய்தி.
    ஆன்மிகமும் ஜோதிடமும் ஒன்றுக்கு ஒன்று தொட்ர்புடையது. இதெல்லாம் பகுத்தறிவாளர்களுக்கு எங்கே புரியப்போகிறது. ஐன்ஸ்டின் கொள்கையை இதுவரை புரிந்துகொண்ட விஞ்ஞானிகளை விரல் விட்டு எண்ணிவிடல்லாம் என்கிறார்கள் அறிவியல் மேதைகள். அப்படியென்றால் நமக்கு எங்கே புரியப்போகிறது. நமக்கு புரியவில்லை என்றால் ஐன்ஸ்டின் கொள்கைதான் தவறா அல்லது ஐன்ஸ்டின் முட்டாளா? இல்லை ஐன்ஸ்டின் கொள்கையை தெரிந்துகொள்ள முயற்சிப்பவர்கள்தான் முட்டாளா?
    இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்க வேண்டியது ஒன்றும் இல்லை. நமது முன்னோர்களுடைய வழி நடந்தாலே போதும். இந்தியா பெருமை அடையும். நாம் நிம்மதியாக வாழலாம்
    அநகரிகமாக நடந்துகொள்வதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யுங்கள் புரிந்ததா ராஜன் மற்றும் வால்பையா? இருவரும் என்ன படிப்பு தெரிந்து கொள்ளலாமா?/////

    அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்
    மன்னிப்போம்
    மறப்போம் - நமது வேலையைப்
    பார்ப்போம்!

    ReplyDelete
  100. /////Sekar said...
    வால்பையன் மற்றும் ராஜன்ராதமணாளன் போன்றவர்கள் கழிப்பறைக்கும் வகுப்பறைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்பது புரிகிறது. பெற்றவர்களாவது அல்லது கற்றரிவித்தவர்களாவது சொல்லி திருத்தி இருக்க வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
    என் கேள்வி. இப்படிப்பட்ட குணக்கேடுகள் வருவதற்கு எந்த கிரகத்தின் நிலைப்பாடுகள் காரணம்?/////

    பழைய பாடங்களில் உள்ளது நண்பரே! தேடிப் பிடித்துப் படிக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  101. /////aadhirai said...
    ihaven't received the mail with this lesson yet ayya. waiting as u had said u r sending it in 2 sessions. thank you so much for the service./////

    வரும் சகோதரி. சற்றுப் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  102. ////Ram said...
    Dear Sir,
    forget and forgive these people. no need to concern them too much, just block them and go ahead, we are waiting for your email lesson./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  103. ////Slakshmanan said...
    வால்பையன் மற்றும் ராஜன்ராதமணாளன் போன்ற பன்பில்லாதவ்ர்களை ராகு/கேது பிரிவில் சேர்த்துவிட்டு நாம் நம் வேலையை பார்க்க வேண்டியது தான்
    துஷ்டனை கன்டால் தூர விலகுவது தான் புததிசாலித்தனம்.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  104. ////Slakshmanan said...
    rajan RADHAMANALAN said...
    //இது வகுப்பறை; கழிப்பறையல்ல! அதை மனதில் வையுங்கள் //
    அப்ப கழிப்பறைனு சொல்றது நீங்க வெச்சுருக்க இன்னொரு பிளாகயா!/////
    ஏன் ராதாமனாளன் கழிப்பறையை சுத்தம் செயய போகறீர்களா?/////

    அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்
    மன்னிப்போம்
    மறப்போம் - நமது வேலையைப்
    பார்ப்போம்!

    ReplyDelete
  105. //////குசும்பன் said...
    வால் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அது உங்கள் விருப்பம், அதை உங்களுக்கு என்று இருக்கும் பிளாக்கில் எழுங்கள்.இங்கு கும்மி வேண்டாம் என்று சொன்னபிறகும் இங்கு தாங்கள் நக்கல் அடிப்பது போன்று பின்னூட்டம் போடுவது சரி இல்லை.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி குசும்பன்!

    ReplyDelete
  106. ////NSK said...
    Ayya,
    It is perturbed to read some useless/worthless/meaningless comments from somebody.
    These "somebody" will understand /helps their real life while they turned their heart towards god's blessings while blessings are always available to everybody.
    Regards./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி என்.எஸ்.கே!

    ReplyDelete
  107. ////Anandhi said...
    ஐயா,
    எனக்கு இன்னும் மேல்நிலைப் பாடம் வந்து சேரவில்லை. ஆவன செய்வீர்களா?
    அன்புடன்,
    ஆனந்தி////

    உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள். சோதித்துப் பார்க்கிறேன்

    ReplyDelete
  108. Vaathiyariya,

    Excellent info Me & My Boss.It is very true as I have seen in many of the companies where I worked with.Just forwarded this to my colleagues as well.

    If you get a Good Boss, then they cannot stay (or forced not to stay) for long time in the company.

    One of my Good Boss told me in 2004 in bangalore that You cannot decide (or not in your hand ) to get or select " A Good Boss and a Good Parents "

    Waiting for the email lessons as well.

    Thanks
    Rajan Kumaresan

    ReplyDelete
  109. ////Rajan said...
    Vaathiyariya,
    Excellent info Me & My Boss.It is very true as I have seen in many of the companies where I worked with.Just forwarded this to my colleagues as well.
    If you get a Good Boss, then they cannot stay (or forced not to stay) for long time in the company.
    One of my Good Boss told me in 2004 in bangalore that You cannot decide (or not in your hand ) to get or select " A Good Boss and a Good Parents "
    Waiting for the email lessons as well.
    Thanks
    Rajan Kumaresan////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  110. ஐயா,

    எனக்கு இன்னும் மேல்நிலைப் பாடம் வந்து சேரவில்லை. ஆவன செய்வீர்களா?

    dubaisaravanan@gmail.com

    ReplyDelete
  111. /////dubai saravanan said...
    ஐயா,
    எனக்கு இன்னும் மேல்நிலைப் பாடம் வந்து சேரவில்லை. ஆவன செய்வீர்களா?
    dubaisaravanan@gmail.com/////

    நீண்ட பாடம் அது. இன்னும் எழுதி முடிக்கப்படவில்லை. முடிந்தவுடன், அனைவருக்கும் வரும் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  112. Dear Sir,

    Have not received e-mail lessons yet.My id-raaju.ganapathy@gmail.com

    Thanks/Regards,

    Raju

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com