மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.11.09

Lesson on Astrology: Basic Strength: அடிப்படை வலிமை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Astrology: Basic Strength: அடிப்படை வலிமை!
--------------------------------------------------
உச்சம் பெற்ற கிரகத்திற்கும், வர்கோத்தமம் பெற்ற கிரகத்திற்கும், மூலத்திரி கோணத்தில் இருக்கும் கிரகத்திற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? அந்த நிலைப்பாடுகளில் எது வலிமையானது? எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
--------------------------------------------------
முதலில் கிரகங்களின் அடிப்படை நிலைமையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, பிறகு மேலே உள்ள கேள்விக்கு வருவோம்.

1. இயற்கைத் தன்மை அல்லது இயற்கைக் குணம்:
நன்மை செய்யக்கூடிய கிரகம் அல்லது தீமை செய்யக்கூடிய கிரகம்
(நல்லவன் அல்லது கெட்டவன்) (benefic or malefic)

2. வலிமை:
பலம் பொருந்தியவன் அல்லது பலமில்லாதவன். அல்லது இப்படி வைத்துக்கொள்ளுங்கள்: வலிமை உடையவன் அல்லது வலிமை இல்லாதவன் strength (strong or weak)

கிரகங்களுக்கு இந்த நிலைப்பாடுகள் உண்டு. அதை உதாரணங்களுடன் விரிவு படுத்திப்பார்ப்போம்:
------------------------------------------------
1
சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஜாதகத்தில் வலிமையான நிலையில்:

பலன்: உங்களை விரும்பும் மாமனார். உங்களுக்காக உயிரையும் தரக்கூடியவர். அதோடு அவர் கோடிஸ்வரர்! (அட, நன்றாக இருக்கிறதே:-)))
-------------------------------------------------
1 -A
சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஆனால் வலிமை குன்றிய நிலையில்:

பலன்: தன் குழந்தைகளின் மேல் மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாய் - ஆனால் குழந்தைகளைக் கவனித்து, சீராட்டி வளர்ப்பதற்கு வேண்டிய பொருளாதாரம் இல்லாத நிலைமை. உங்கள் மொழியில் சொன்னால் தினமும் இரண்டு வேளை உணவிற்குக் கூட வழியில்லாத நிலைமையில் உள்ள தாய்!
---------------------------------------------------
2
தீய கிரகம் - ஆனால் வலிமை குன்றிய நிலையில்:

பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் அவன் இருப்பதோ சிறையில் எனும் நிலைப்பாடு!
----------------------------------------------------
2 -A
தீய கிரகம் - ஜாதகத்தில் வலிமையான நிலையில்:

பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் பார்க்கும் உத்தி யோகமோ காவல்துறையில் உயர் அதிகாரி! Deputy Commissioner of Police என்று வைத்துக் கொள்ளூங்கள்!
-------------------------------------------------
சரி, இப்போது கேள்விக்கு வருவோம். உச்சம், வர்கோத்தமம், மூலத்திரிகோணம் என்று ஒரு கிரகம் கையில் என்ன ஆயுதத்தை வைத்திருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள 1, 1-A, 2, 2-A என்னும் கட்டுப்பாட்டுக்குள் ஒடுங்கிவிடும்! அல்லது ஒதுங்கிவிடும்.

உச்சத்திற்கும், மூலத்திரிகோணத்திற்கும் தனி மதிப்பு, மரியாதை உண்டு. முறையாகக் கல்லூரியில் படித்த பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள். வர்கோத்தமம், அவற்றிற்கு அடுத்தபடிதான். அஞ்சல் வழிக் கல்வியில் கற்ற பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அப்படி முறையாகப் படித்த பட்டதாரிகளிலும், பிலானி, ஐ.ஐ.டி, களில் படித்த பட்டதாரிகளுக்கும் உப்புமா கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளுக்கும் வித்தியாசம் இருப்பதைப்போல, கிரகங்களுக்கும் படித்த விதத்திற்கான தனி மதிப்பு உண்டு. படிப்பை வைத்து உத்தியோகமும் சம்பளமும் கிடைப்பதைப் போல, கிரகங்கள் வாங்கிய மதிப்பெண்களை வைத்து ஜாதகனுக்குப் பலன்கள்
கிடைக்கும்.பெற்ற மதிப்பெண்களையும், கிடைத்த வேலையையும் வைத்துத்தான் கிரகங்கள் ஜாதகத்தில் வேலை செய்யும்!

கிரகங்களின் மதிப்பெண்கள்: தராதரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்:

உச்சம் - 100% வலிமை
மூலத்திரிகோணம் - 90% வலிமை
சொந்த வீடு - 80% வலிமை
நட்பு வீடுகள் - 60% வலிமை
சம வீடுகள் - 50% வலிமை
பகை வீடுகள் - 40% வலிமை
நீச வீடுகள் - 10% வலிமை

இந்த அளவுகள் எல்லாம் எடைபார்க்கும் இயந்திரத்தை வைத்துச் சொல்லப் பட்டதல்ல! அனுபவத்தில் பெற்ற உத்தேச அளவுகள்.

40% வரை பாஸ். 40% ற்குக்கீழே ஃபெயில்

ஒருவரின் ஜாதகத்தில் சனீஷ்வரன் துலா ராசியில் இருந்தால் அவன் உச்சம் பெற்று இருப்பான். உச்சம் பெற்று அவன் அங்கே வலிமையோடு இருந்தால், உங்களுக்கு அவன் மேலே குறிப்பிட்டுள்ளதைப்போல உங்களை விரும்பும் கோடீஸ்வர மாமனாராக இருப்பான். அல்லது அங்கே உச்சம் பெற்றும் வலிமை குன்றிய நிலையில் இருந்தால், உங்கள் மீது மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாயைப் போல இருப்பான். அதே சனீஷ்வரன் ஒருவரின் ஜாதகத்தில் மேஷ ராசியில் இருந்தால் நீசமாகி இருப்பான். நீசம் பெற்றவன் வலிமையின்றி இருந்தால் 2ஆம் எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள். வலிமையோடு இருந்தால் 2-A எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள்.

அர்த்தமானதா? புரியும்படி உள்ளதா?
-----------------------------------------------
வர்கோத்தமத்தைப் பற்றி முன்பே எழுதிவிட்டேன். மூலத்திரிகோணத்தைப்பற்றி எழுத வேண்டும். அதை நாளை எழுதுகிறேன். பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

92 comments:

  1. புரிந்த மாதிரி இருக்கு .....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஐயா,
    சனி பகவான் துலா ராசியில் உச்சம் பெற்று இருக்கிறார், ஆனால் வக்கிரமடைந்து இருக்கிறார், ஆகையால் அவர் மேலே குறிப்பிட்டுள்ள 1, 1-A, 2, 2-A ல் எந்த பலனை தருவார் ......

    ReplyDelete
  4. அய்யா.. உற்சாக டானிக்.. துலா ராசியில் சனிபகவான் உச்சம்.. இப்போது ஏழரை சனி ஆரம்பித்துள்ளது. பயந்த நெஞ்சத்துக்கு பயம் நீக்கினீர்கள். (ராசியும் துலாதான்).. இது இரண்டாவது சுற்று.

    ReplyDelete
  5. /////அதே சனீஷ்வரன் ஒருவரின் ஜாதகத்தில் மேஷ ராசியில் இருந்தால் நீசமாகி இருப்பான். நீசம் பெற்றவன் வலிமையின்றி இருந்தால் 2ஆம் எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள். வலிமையோடு இருந்தால் 2-A எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள்.//////

    நீசம் பெற்றவன் எவ்வாறு ஐயா வலிமை பெற முடியும்? இரண்டு உதாராணம் தாருங்கள் ஐயா!

    ReplyDelete
  6. வலிமையான கிரகத்தின் காரகப் பலன்களும் ஆதிபத்திய பலன்களும் குறைவின்றி கிடைக்கும். இல்லாவிட்டால் இல்லை. சரிதானே.

    Jagannatha Hora ஆசிரியர் திரு PVR நரசிம்மராவ் அவர்கள் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் ஆகியவற்றுக்கு அவருடைய ஒரு புத்தகத்தில் அவர் பாணியில் சற்று வித்தியாசமாக விளக்கியிருந்தார். அதை ஆசிரியர் அவர்கள் அனுமதித்தால் மட்டும் இங்கு எழுதுகிறேன்.

    ReplyDelete
  7. எளிமையாக விளக்கியுள்ளீர்கள். நன்றி

    ReplyDelete
  8. Good Morning....


    Excellent Explanation...

    ReplyDelete
  9. அய்யா இனிய காலை வணக்கம்.
    பாடம் உங்கள் கைவண்ணத்தில் அருமை ....சிறிது ஊன்றி படித்த பின் தான் விளங்குகின்றது....எனது தனுசு லக்னதிற்க்கு killer சனிபகவான் என்று பழய பதிவில் தாங்கள் கூறியது
    நினைவு உள்ளது அவர் 12 இல் பகை ஆக சிறை வைக்கபட்ட killer என்று நினைக்களாமா? உங்கள் கருத்து அரிய ஆவல் ..........

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  10. அய்யா ,

    எனக்கு கிரகங்களின் பார்வையும் ,பரிவர்தனையும் மின் அஞ்சல் பாடம் என்று வரும் ...எனக்கு இது வரை வரவில்லை அய்யா ...

    ReplyDelete
  11. அற்புதம் ஆபாரம், இவ்வளவு எளிமையாய் நான் எங்கும் படித்ததில்லை, யாரும் செல்லிக்கெடுப்பதும் இல்லை,மிக்க நன்றி.

    மூலத்திரிகோணம் என்றால் மிதுனம்,கன்னி,தனு,மீனம் இடங்கள் அல்லவா ஆசானே.

    ReplyDelete
  12. ஐயா,

    ஒரு நீசம் பெற்ற நட்பு கிரகம் வர்கோத்தம் பெற்றால் எவ்வளவு வலிமை பெரும் ?

    நன்றி,
    குமார்

    ReplyDelete
  13. Dear sir,

    Here 1, 1-A is considered for good effects as sani is in uccham. This can be substanitiated where sani is situated from lagnam.

    2, 2-A is considered as bad effects as sani is in neesam. This also can be substanitiated where sani is situated from lagnam.

    Suppose evil houses are there where sani sits, Then there may be opposite effects to 1,1A,2,2A points.
    Is it correct sir?
    Please correct me sir if i am wrong.

    Regards
    NSK.

    ReplyDelete
  14. வணக்கம் குருவே

    எனது நீண்ட நாள் சந்தேகம்


    எனது லக்கணம் விருட்ஷிகம் லக்ணதில் கேது உச்சம் 10 ம் இடம் சிம்மம் அதன் அதிபதியான சூரியனும் 3,4 ம் இடதுகு அதிபதியான சனியும் 12‍ம் இடதில் உள்ளனர் மேலும் 8,11 ம் இடதுக்கு அதிபதியும் 12ல் இருக்கிறார். சூரியனுக்கு அடுத்து வரும் கிரகம் 10 பகை விட்டு இருக்க வேண்டும் என்றீர்கள் ஆனால் 2ம் சூரியனுக்கு (12,13) 10 பாகை தள்ளி இருக்கு ஜெகனாத் ல அச்தன்கம் ஆகிவிட்டதா சொல்றான்க இதனை சற்று விளக்கிகூறவும் இந்த கூட்டனி நல்லதா?

    Panivanputan

    Unkal Manavan SPK

    ReplyDelete
  15. வணக்கம் குருவே

    எனது நீண்ட நாள் சந்தேகம்


    எனது லக்கணம் விருட்ஷிகம் லக்ணதில் கேது உச்சம் 10 ம் இடம் சிம்மம் அதன் அதிபதியான சூரியனும் 3,4 ம் இடதுகு அதிபதியான சனியும் 12‍ம் இடதில் உள்ளனர் மேலும் 8,11 ம் இடதுக்கு அதிபதியும் 12ல் இருக்கிறார். சூரியனுக்கு அடுத்து வரும் கிரகம் 10 பகை விட்டு இருக்க வேண்டும் என்றீர்கள் ஆனால் 2ம் சூரியனுக்கு (12,13) 10 பாகை தள்ளி இருக்கு ஜெகனாத் ல அச்தன்கம் ஆகிவிட்டதா சொல்றான்க இதனை சற்று விளக்கிகூறவும் இந்த கூட்டனி நல்லதா?

    Panivanputan

    Unkal Manavan SPK

    ReplyDelete
  16. Vanakam sir,
    Saturn is ruler of 11th & 12th house for my lagna and he is in the8th house libra(ucham but 8th house)is he good, bad or both mixed sir?

    Thanks
    Thanuja

    ReplyDelete
  17. அய்யா இந்த பாடத்தில் இரண்டு சந்தோகங்கள் உள்ளன.
    1. உச்ச கிரகம் 100% வலிமை, அது போல ஆட்சி வீட்டிலும் 100% வலிமையுடையதா?
    2. ஒரு ஜாதகத்தின் இராசினாதன் அல்லது லக்கினாதிபதி பாவக் கிரகமாக இருந்தால், அவனும் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால், அவர்கள் தீய பலன் களைத்தான் செய்வார்களா?
    உதாரனமாக எனது ஜாதகத்தில் சூரியன்(தீய கிரகம்) இராசினாதன். அவன் ஏழாம் வீட்டில்(களத்திரம்) சிம்மத்தில் ஆட்சியாக வலிமையுடன் இருக்கின்றான். அவன் அங்கு சந்திரன், புதன்,குரு, சுக்கிரன் என கூட்டனியுடன் உள்ளதால், மற்ற கிரகங்கள் வலிமை இழக்கின்றன. கும்ப லக்கின சனியும், பத்தாமிட செவ்வாயும் கடகத்தில் நீசம் ஆனதால், எனக்கு சூரியம் மட்டும் வலிமை தரும். ஆனால் அவனும் தீய கிரகம் என்றால் எனக்கு நடக்கும் பலன் தீயவை ஆக இருக்குமா?

    தயவு செய்து விளக்குங்கள், நன்றி அய்யா

    ReplyDelete
  18. ஐயா, மின்னஞ்சல் பாடம் இன்னும் கிடைக்கவில்லை. பகுதி-2 மாணாக்கர்களுக்கு அனுப்பி விட்டீர்களா?

    ReplyDelete
  19. Dear Sir,

    Presnt today sir.

    Lesson 11 is fantastic sir!!! Simple and very explanatory.

    question: I have 25,30,31,44 parals in 1,9,10,11.

    But only 16 in 12th hous. what is the bad effect? I remember from our lessons that the 12th house should have less parals.

    Thanks
    Saravana
    Coimbatore

    ReplyDelete
  20. காலை வணக்கம் ஐயா!!!

    மின்னஞ்சல் பாடம் இன்னும் கிடைக்க பெறவில்லை...கொஞ்சம் பார்க்கவும்...

    ReplyDelete
  21. வணக்கம் அய்யா.
    பாடம் புரிந்த மாதிரியும் இருக்கு.
    புரியாத மாதிரியும் இருக்கு.
    நான் கேட்க நினைத்த சந்தேகங்கள்
    மற்ற மாணாக்கர்களும் கேட்டு உள்ளதால்
    நான் எதுவும் கேட்க போவதில்லை.
    பாடத்திற்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  22. ஐயா...

    Thank you for this lesson.
    இந்த பாடம் லக்னத்தை பிரதானமாக கொண்டு கணிக்கப்படும் Benifics & Malefics மட்டும் பொருந்துமா? அல்லது தனி தனி வீடுகளுக்கும் பார்க்கப்படும் Benefics and Malfics க்கும் பொருந்துமா?

    நீங்கள் உங்கள் 90-100 பாடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் Benefic&Malefic பற்றி ஒரு அட்டவணை கொடுத்துள்ளீர்கள்.உதாரணத்துக்கு ஒரு சிம்ம லக்ன ஜாதகம்.சிம்ம லக்னத்துக்கு சில சுபர்கள்&பாபர்கள்.2 மிட கன்னிக்கு சில சுபர்கள்&பாபர்கள்.இப்போது இந்த ஜாதகத்துக்கு பொருளாதார நிலை பற்றி அறிய சிம்ம லக்ன சுபர்&பாபர்களை கணக்கில் எடுக்க வேண்டுமா அல்லது 2 மிட கன்னிக்குண்டான சுபர்&பாபர்களை கணக்கில் எடுக்க வேண்டுமா? ஒரு வரியில் பதில் சொல்லி விடாமல் தயவு செய்து தெளிவு படுத்தவும்.

    நன்றி ஐயா...

    ReplyDelete
  23. >>>பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் பார்க்கும் உத்தி யோகமோ காவல்துறையில் உயர் அதிகாரி! Deputy Commissioner of Police என்று வைத்துக் கொள்ளூங்கள்!<<<

    இந்த உதாரணம் பயமா இருக்கு...

    ReplyDelete
  24. Ayya Sani Bhagavan Nanmai Seiyum Graham illaiyey..Avar Natural Malefic Planet allava..Piragu Example kurum pothu Avar Ucham petral nanmai seivathu pol eluthi irukinga...

    Oru Theeya Graham Neecham agi Anal Nanmai seiyum idathil irunthal enna palan?Like Rahu 10th idathil nallathu seivar enduru padithen.Anal avar neechamagi 10th edathil irunthal enna palan?

    ReplyDelete
  25. Examples and explanations are extremely good and very easy to remember. M.N.Krushna Cumaar

    ReplyDelete
  26. வனக்கம் அய்யா,
    இன்ரைய மாமனார் பதிவு
    ரெம்பசுவையானது.துலையில் சனி
    பகவானுக்கு உச்சம், பிரகு எப்படி
    பலம்குரையும்.ஆதிபத்திய ரீதியில,அல்லது
    அம்சத்தில் பகை,னீச்சம்,அல்லது
    ராசியில் பாவகிரக பார்வையால?
    தயவுசெய்து விலக்கவும்.
    நன்ரியுடன் அரிபாய்.
    வாழ்க வழமுடன்.

    ReplyDelete
  27. ஐயா வணக்கம்

    இன்றைய பாடம் புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது. வலிமை பெறுவதும், வலிமை குன்றுவதும் எப்படி என்பது சரியாக புரியவில்லை. அனேகமாக சுயபரல்கள் கணக்கில் தான் வலிமை பெறுவது, வலிமை குன்றுவது கணக்கிடப்படுகிறது என்று நினைக்கிறேன். சரியா ?? அதே போல் அந்தந்த இடங்களுக்கு உண்டான வலிமையை 337 பரல் கணக்கில் வரும் என்று நினைக்கிறேன். சரியா ???

    நன்றி

    வணக்கம்

    ReplyDelete
  28. மதி said...

    >>>பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் பார்க்கும் உத்தி யோகமோ காவல்துறையில் உயர் அதிகாரி! Deputy Commissioner of Police என்று வைத்துக் கொள்ளூங்கள்!<<<

    இந்த உதாரணம் பயமா இருக்கு
    Brother mathy,
    Donot be afraid of these example. we donot get afraid of anything in this world. U got so many brothers and sisters in the classroom. we are reading with u. Be happy now.
    sister,
    sundari.p

    ReplyDelete
  29. Good afternoon sir,
    Thanks for today lesson sir. It is very nice that too so much sir. I read it very well sir. I did not have doubt in the lesson and super example sir.
    But i got already experience so much ur lessons always
    glittering like diamond.
    sundari.p

    ReplyDelete
  30. Dear Sir,

    Thanks.I read it,

    Balakumaran.

    ReplyDelete
  31. ////Shyam Prasad said...
    மிக்க நன்றி/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  32. /////ceylonstar said...
    புரிந்த மாதிரி இருக்கு ...../////

    மீண்டும் 3/4 முறைகள் படியுங்கள். பிடிபடும்!

    ReplyDelete
  33. /////Thirumal said...
    ஐயா,
    சனி பகவான் துலா ராசியில் உச்சம் பெற்று இருக்கிறார், ஆனால் வக்கிரமடைந்து இருக்கிறார்,

    ஆகையால் அவர் மேலே குறிப்பிட்டுள்ள 1, 1-A, 2, 2-A ல் எந்த பலனை தருவார் ....../////

    ”பாட்டில் பிழை இருந்தால், அதற்குத்தகுந்தாற்போல, பரிசுத்தொகையைக் கழித்துக் கொடுங்கள் மன்னா!” என்று திருவிளையாடலில் தருமி சொல்வாரே - அது போல வக்கிரம் பெற்றதற்கு உரிய தொகை கழிக்கப்பெற்று மிச்சம் வரும்!

    ReplyDelete
  34. /////Selvakumar said...
    அய்யா.. உற்சாக டானிக்.. துலா ராசியில் சனிபகவான் உச்சம்.. இப்போது ஏழரை சனி

    ஆரம்பித்துள்ளது. பயந்த நெஞ்சத்துக்கு பயம் நீக்கினீர்கள். (ராசியும் துலாதான்).. இது

    இரண்டாவது சுற்று./////

    பயம் வரவும் வேண்டாம். அதை நீக்கவும் வேண்டாம். இறைவன் பார்த்துக்கொள்வான் என்று விட்டு
    விடுவதே சாலச் சிறந்தது.

    ReplyDelete
  35. /////Alasiam G said...
    Thank you for the lesson Sir.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  36. /////ananth said...
    வலிமையான கிரகத்தின் காரகப் பலன்களும் ஆதிபத்திய பலன்களும் குறைவின்றி கிடைக்கும்.

    இல்லாவிட்டால் இல்லை. சரிதானே.////

    சரிதான் மிஸ்டர் ஆனந்த்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////Jagannatha Hora ஆசிரியர் திரு PVR நரசிம்மராவ் அவர்கள் ஆட்சி, உச்சம், மூலத்

    திரிகோணம் ஆகியவற்றுக்கு அவருடைய ஒரு புத்தகத்தில் அவர் பாணியில் சற்று வித்தியாசமாக

    விளக்கியிருந்தார். அதை ஆசிரியர் அவர்கள் அனுமதித்தால் மட்டும் இங்கு எழுதுகிறேன்./////

    கருத்தைச் சொல்லும் உரிமை அனைவருக்கும் உண்டு. நீங்கள் சொல்லலாம்!

    ReplyDelete
  37. ////krish said...
    எளிமையாக விளக்கியுள்ளீர்கள். நன்றி////

    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  38. /////Success said...
    Good Morning....
    Excellent Explanation...////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  39. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்.
    பாடம் உங்கள் கைவண்ணத்தில் அருமை ....சிறிது ஊன்றிப் படித்த பின்தான்

    விளங்குகின்றது....எனது தனுசு லக்னதிற்க்கு killer சனிபகவான் என்று பழய பதிவில் தாங்கள்

    கூறியது நினைவு உள்ளது அவர் 12 இல் பகை ஆக சிறை வைக்கபட்ட killer என்று நினைக்கலாமா? உங்கள் கருத்து அரிய ஆவல் ..........
    நன்றி வணக்கம்/////

    அப்படியே நினைத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  40. /////astroadhi said...
    அய்யா ,
    எனக்கு கிரகங்களின் பார்வையும் ,பரிவர்தனையும் மின் அஞ்சல் பாடம் என்று வரும் ...எனக்கு

    இது வரை வரவில்லை அய்யா .../////

    வரும்.பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  41. //////சிங்கைசூரி said...
    அற்புதம் ஆபாரம், இவ்வளவு எளிமையாய் நான் எங்கும் படித்ததில்லை, யாரும்

    செல்லிக்கெடுப்பதும் இல்லை,மிக்க நன்றி.
    மூலத்திரிகோணம் என்றால் மிதுனம்,கன்னி,தனு,மீனம் இடங்கள் அல்லவா ஆசானே./////

    இல்லை! அது பற்றிய பாடம் அடுத்த பாடம். பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  42. /////kumar.S said...
    ஐயா,
    ஒரு நீசம் பெற்ற நட்பு கிரகம் வர்கோத்தம் பெற்றால் எவ்வளவு வலிமை பெறும் ?
    நன்றி,
    குமார்//////

    வர்கோத்தமம் எனும்போது, அம்சத்திலும் நீசம் பெறுவார். பெரிய மாறுதல் அல்லது பெரிதான பலன்
    ஒன்றும் இருக்காது.

    ReplyDelete
  43. /////NSK said...
    Dear sir,
    Here 1, 1-A is considered for good effects as sani is in uccham. This can be substanitiated

    where sani is situated from lagnam.
    2, 2-A is considered as bad effects as sani is in neesam. This also can be substanitiated

    where sani is situated from lagnam.
    Suppose evil houses are there where sani sits, Then there may be opposite effects to 1,1A,2,2A

    points. Is it correct sir?
    Please correct me sir if i am wrong.
    Regards
    NSK./////

    Saturn's results will be as per the ownership of houses in individual horoscopes. Do not mix the general rules related with Ucham, neecham & melefic houses

    ReplyDelete
  44. /////KKK said...
    வணக்கம் குருவே
    எனது நீண்ட நாள் சந்தேகம்
    எனது லக்கினம் விருச்சிகம் லக்கினத்தில் கேது உச்சம் 10 ம் இடம் சிம்மம் அதன் அதிபதியான

    சூரியனும் 3,4 ம் இடதுகு அதிபதியான சனியும் 12‍ம் இடதில் உள்ளனர் மேலும் 8,11 ம் இடதுக்கு

    அதிபதியும் 12ல் இருக்கிறார். சூரியனுக்கு அடுத்து வரும் கிரகம் 10 பகை விட்டு இருக்க வேண்டும்

    என்றீர்கள் ஆனால் 2ம் சூரியனுக்கு (12,13) 10 பாகை தள்ளி இருக்கு ஜெகனாத் ல அச்தன்கம்

    ஆகிவிட்டதா சொல்றான்க இதனை சற்று விளக்கிகூறவும் இந்த கூட்டனி நல்லதா?
    Panivanputan
    Unkal Manavan SPK/////

    தனிப்பட்ட ஜாதகங்களை வைத்துக் கேள்விகள் கேட்பதைத் தவிர்க்கவும். பாடத்தில் உள்ள சந்தேகங்களை மட்டும் கேளுங்கள். தனிப்பட்ட ஜாதகங்களை அலசிப் பதில் சொல்வதற்கு தற்சமயம் எனக்கு நேரமில்லை!

    ReplyDelete
  45. /////Thanuja said...
    Vanakam sir,
    Saturn is ruler of 11th & 12th house for my lagna and he is in the8th house libra(ucham but 8th

    house)is he good, bad or both mixed sir?
    Thanks
    Thanuja/////

    mixed!

    ReplyDelete
  46. /////பித்தனின் வாக்கு said...
    அய்யா இந்த பாடத்தில் இரண்டு சந்தோகங்கள் உள்ளன.
    1. உச்ச கிரகம் 100% வலிமை, அது போல ஆட்சி வீட்டிலும் 100% வலிமையுடையதா?//////

    பாடத்தில் சொல்லியுள்ளேன். மீண்டும் படியுங்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    2. ஒரு ஜாதகத்தின் இராசினாதன் அல்லது லக்கினாதிபதி பாவக் கிரகமாக இருந்தால், அவனும்

    ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால், அவர்கள் தீய பலன்களைத்தான் செய்வார்களா?/////

    லக்கினநாதன் தனக்குத்தானே கேடுகளைச் செய்து கொள்ள மாட்டான். இதைப் பலமுறைகள் சொல்லியுள்ளேன்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  47. /////Scorpion King said...
    ஐயா, மின்னஞ்சல் பாடம் இன்னும் கிடைக்கவில்லை. பகுதி-2 மாணாக்கர்களுக்கு அனுப்பி
    விட்டீர்களா?/////

    வரும்.பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  48. ////Saravana said...
    Dear Sir,
    Presnt today sir.
    Lesson 11 is fantastic sir!!! Simple and very explanatory.
    question: I have 25,30,31,44 parals in 1,9,10,11.
    But only 16 in 12th hous. what is the bad effect? I remember from our lessons that the 12th

    house should have less parals.
    Thanks
    Saravana
    Coimbatore/////

    12ல் குறைவான பரல்கள் இருப்பது நல்லதுதான்!

    ReplyDelete
  49. //////maharaja said...
    pls send email lesson/////

    வரும்.பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  50. /////Arul said...
    காலை வணக்கம் ஐயா!!!
    மின்னஞ்சல் பாடம் இன்னும் கிடைக்க பெறவில்லை...கொஞ்சம் பார்க்கவும்...////

    வரும்.பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  51. /////thirunarayanan said...
    வணக்கம் அய்யா.
    பாடம் புரிந்த மாதிரியும் இருக்கு.
    புரியாத மாதிரியும் இருக்கு.
    நான் கேட்க நினைத்த சந்தேகங்கள்
    மற்ற மாணாக்கர்களும் கேட்டு உள்ளதால்
    நான் எதுவும் கேட்க போவதில்லை.
    பாடத்திற்கு நன்றி அய்யா./////

    இப்போது புரிகிறதா - பாருங்கள்!

    ReplyDelete
  52. ////Arul said...
    ஐயா...
    Thank you for this lesson.
    இந்த பாடம் லக்னத்தை பிரதானமாக கொண்டு கணிக்கப்படும் Benifics & Malefics மட்டும்

    பொருந்துமா? அல்லது தனி தனி வீடுகளுக்கும் பார்க்கப்படும் Benefics and Malfics க்கும்

    பொருந்துமா?
    நீங்கள் உங்கள் 90-100 பாடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் Benefic&Malefic பற்றி ஒரு

    அட்டவணை கொடுத்துள்ளீர்கள்.உதாரணத்துக்கு ஒரு சிம்ம லக்ன ஜாதகம்.சிம்ம லக்னத்துக்கு சில

    சுபர்கள்&பாபர்கள்.2 மிட கன்னிக்கு சில சுபர்கள்&பாபர்கள்.இப்போது இந்த ஜாதகத்துக்கு

    பொருளாதார நிலை பற்றி அறிய சிம்ம லக்ன சுபர்&பாபர்களை கணக்கில் எடுக்க வேண்டுமா

    அல்லது 2 மிட கன்னிக்குண்டான சுபர்&பாபர்களை கணக்கில் எடுக்க வேண்டுமா? ஒரு வரியில்

    பதில் சொல்லி விடாமல் தயவு செய்து தெளிவு படுத்தவும்.
    நன்றி ஐயா.../////

    குழப்பாதீர்கள். சுபக்கிரகங்கள். பாபக்கிரகங்களுக்கு இது பொருந்தும். சுபக் கிரகங்கள் எவை? பாபக்கிரகங்கள் எவை? சொல்லுங்கள்!

    ReplyDelete
  53. /////மதி said...
    >>>பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் பார்க்கும் உத்தி யோகமோ

    காவல்துறையில் உயர் அதிகாரி! Deputy Commissioner of Police என்று வைத்துக் கொள்ளூங்கள்!

    <<<
    இந்த உதாரணம் பயமா இருக்கு...////

    இதுக்கே பயமாக இருக்கிறது என்றால் எப்படி? இறைவன் இருக்கிறார் பார்த்துக்கொள்வார் என்று துணிவோடு இருங்கள்! அது அழுத்தமான உதாரணத்திற்காகச் சொல்லப்பட்டது!

    ReplyDelete
  54. ////Strider said...
    Ayya Sani Bhagavan Nanmai Seiyum Graham illaiyey..Avar Natural Malefic Planet allava..Piragu

    Example kurum pothu Avar Ucham petral nanmai seivathu pol eluthi irukinga...//////

    சனீஷ்வரன் ஆயுள்காரகன். சனீஷ்வரன் கர்மகாரகன் (authority for profession/ work)
    இவை இரண்டையும் மறந்துவிட்டு, உங்கள் நோக்கப்படி சனீஷ்வரனைப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    Oru Theeya Graham Neecham agi Anal Nanmai seiyum idathil irunthal enna palan?Like Rahu

    10th idathil nallathu seivar enduru padithen.Anal avar neechamagi 10th edathil irunthal enna

    palan?////

    நீசம் ஆனாலே 10% பலன் என்று சொல்லியிருக்கிறேன். அவர் நன்மை செய்யும் இடத்தில் இருப்பதனால் நீசம் கேன்சலாகுமா? கேன்சல் ஆகாது. அதை மனதில் வையுங்கள்

    ReplyDelete
  55. ////RVC said...
    uLLeen ayyaa////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  56. வணக்கம் ஐயா
    அருமையான விளக்கம் ஐயா
    நன்றி

    ReplyDelete
  57. ////kannan said...
    Yes Sir////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  58. ////Geekay said...
    Present Sir,/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  59. /////Krushna Cumaar said...
    Examples and explanations are extremely good and very easy to remember. M.N.Krushna Cumaar/////

    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  60. /////aryboy said...
    வனக்கம் அய்யா, இன்றைய மாமனார் பதிவு
    ரெம்பசுவையானது.துலையில் சனி பகவானுக்கு உச்சம், பிறகு எப்படி
    பலம்குறையும்.ஆதிபத்திய ரீதியில,அல்லது அம்சத்தில் பகை,னீச்சம்,அல்லது
    ராசியில் பாவகிரக பார்வையால? தயவுசெய்து விலக்கவும்.
    நன்ரியுடன் அரிபாய்.
    வாழ்க வழமுடன்.////

    நீங்களே கேள்வியையும் கேட்டு, பதிலையும் சொல்லிவிட்டீர்கள். எனக்கு வேலை இல்லை!

    ReplyDelete
  61. T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    இன்றைய பாடம் புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது. வலிமை பெறுவதும், வலிமை குன்றுவதும் எப்படி என்பது சரியாக புரியவில்லை. அனேகமாக சுயபரல்கள் கணக்கில் தான் வலிமை பெறுவது, வலிமை குன்றுவது கணக்கிடப்படுகிறது என்று நினைக்கிறேன். சரியா ?? அதே போல் அந்தந்த இடங்களுக்கு உண்டான வலிமையை 337 பரல் கணக்கில் வரும் என்று நினைக்கிறேன். சரியா ???
    நன்றி
    வணக்கம்/////

    1. ராசியில் உச்சமான கிரகம் அம்சத்தில் நீசமாக இருந்தால் வலிமை குறையாதா?
    2. உச்ச வீட்டில் இருக்கும் கிரகம் வக்கிரம் பெற்றிருந்தால் வலிமை குறையாதா?
    3. உச்சம் பெற்ற கிரகம் அஸ்தமனம் அல்லது கிரக யுத்தத்தில் இருந்தால் வலிமை குறையாதா?
    4. உச்சம் பெற்ற கிரகம் சுய வர்க்கத்தில் 3 அல்லது அத்ற்குக் கீழான பரல்களைப் பெற்றிருந்தால்
    வலிமை குறையாதா? நிச்சயமாகக் குறையும்!

    விளக்கம் போதுமா நண்பரே!

    ReplyDelete
  62. ////sundari said...
    Good afternoon sir,
    Thanks for today lesson sir. It is very nice that too so much sir. I read it very well sir. I did not have doubt in the lesson and super example sir.
    But i got already experience so much ur lessons always
    glittering like diamond.
    sundari.p/////

    கையில் மோதிரமாகப் போட்டுக் கொள்ள முடியாத வைரம்!:-))))

    ReplyDelete
  63. /////KUMARAN said...
    Dear Sir,
    Thanks.I read it,
    Balakumaran.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  64. Jagannatha hora ஆசிரியர் கிரகங்களின் உச்ச, ஆட்சி வீடுகளைப் பற்றி சொல்லியுள்ளதை கீழே கொடுத்திருக்கிறேன். இது அவருடைய Vedic Astrology - An Integrated Approach என்னும் புத்தகத்தில் உள்ளது.

    Own rasi of a planet (e.g. Pisces of Jupiter) is like one's home. One is most natural and comfortable at home. That is exactly what a planet in own rasi is. Moolatrikona of a planet (e.g. Sagittarius of Jupiter) is like one's office. One executes one's formal job and performs one's duty at office. One is powerful and duty-minded at office. Exaltation sign of a planet (e.g. Cancer of Jupiter) is like a favorite party/picnic. One is excited to be at one's favorite party/picnic. So an exalted planet is like an excited person at his favorite picnic spot. Debilitation sign of a planet (e.g. Capricorn of Jupiter) is like one's worst party. A debilitated planet is like an unhappy person stuck at a place he hates.

    ReplyDelete
  65. Dear Sir,

    Could you please clarify me the following,

    1.If a Maraka Planet is associated with Lagnathipathi/yogakaraka then what type of the result would be there for Maraka Planet and Lagnathipathi/Yogakaraka?

    Regards,
    Balakumaran

    ReplyDelete
  66. நன்றி வாத்தியாரே நன்றி

    ReplyDelete
  67. ////Kumares said...
    வணக்கம் ஐயா
    அருமையான விளக்கம் ஐயா
    நன்றி////

    நல்லது.நன்றி முருகா!

    ReplyDelete
  68. /////ananth said...
    Jagannatha hora ஆசிரியர் கிரகங்களின் உச்ச, ஆட்சி வீடுகளைப் பற்றி சொல்லியுள்ளதை கீழே கொடுத்திருக்கிறேன். இது அவருடைய Vedic Astrology - An Integrated Approach என்னும் புத்தகத்தில் உள்ளது.
    Own rasi of a planet (e.g. Pisces of Jupiter) is like one's home. One is most natural and comfortable at home. That is exactly what a planet in own rasi is. Moolatrikona of a planet (e.g. Sagittarius of Jupiter) is like one's office. One executes one's formal job and performs one's duty at office. One is powerful and duty-minded at office. Exaltation sign of a planet (e.g. Cancer of Jupiter) is like a favorite party/picnic. One is excited to be at one's favorite party/picnic. So an exalted planet is like an excited person at his favorite picnic spot. Debilitation sign of a planet (e.g. Capricorn of Jupiter) is like one's worst party. A debilitated planet is like an unhappy person stuck at a place he hates./////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  69. ////KUMARAN said...
    Dear Sir,
    Could you please clarify me the following,
    1.If a Maraka Planet is associated with Lagnathipathi/yogakaraka then what type of the result would be there for Maraka Planet and Lagnathipathi/Yogakaraka?
    Regards,
    Balakumaran/////

    மாரகத்தைக் கொடுக்கும் அதிபதி லக்கினத்திற்கு லக்கினம் வேறுபடும். மாரகத்தை மனதில் வைத்து மட்டுமே அவருடைய பலன்களைப் பார்க்க வேண்டும்! இது பற்றி பின்னால் தனிப் பதிவு ஒன்றை எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

    ReplyDelete
  70. ////T K Arumugam said...
    நன்றி வாத்தியாரே நன்றி/////

    நல்லது!

    ReplyDelete
  71. Dear Sir

    Excellent Sir.

    Ennudaya manaivi Jadhagathil - 5il (Thula)Saturn Uchham, 10il -(Meenam) Sukiran Uchham and 11il - (Mesham) Suriyan Uchham.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  72. Dear sir,
    சிம்ம லக்கண்ம்
    செவ்வாய் 4 & 9 கு உடைய்வ்ர்

    ராசியில் பகை வீட்டில்( மிதுனம்)
    அம்சதில் ஆட்சி( விருச்ச்கம்)
    சுய பரல்கலள் 2
    செவ்வாய் பலம் குறைந்து உள்ளார்

    ராசியில் செவ்வாய் 4& 9 உடையவர்

    9ம் வீடு மெஷம் 34 பரலகள்
    4ம் வீடு விருச்ச்கம் 27 பரல்க்ள்
    அந்த விட்டின் பலன் எப்ப்டி இருகும்,
    9ம் விடு ப்ரல்க்ள் அதிகம் இருபதால் விட்டின் பலன் நன்றாக இருகுமா.
    அலலது செவ்வாய் சுய பரல் 2 இருப்தால் பலன் இருகாதா

    ReplyDelete
  73. The lesson is crystal clear.Thank you,Sir!

    ReplyDelete
  74. Anaithu Grahamgalin Suya paralgalum 6 ku mel (7 allathu 8) ulla Jathagam Ethavathu thangal Parthathu unda?

    Nan ithu varai partha varaiyil Anaithum 5/5th ku mel ulla Jathagam arithai thaan parthu irukiren..Athalal Ketkiren..

    ReplyDelete
  75. lesson is very simple to understand..thank you sir

    ReplyDelete
  76. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Excellent Sir.
    Ennudaya manaivi Jadhagathil - 5il (Thula)Saturn Uchham, 10il -(Meenam) Sukiran Uchham and 11il - (Mesham) Suriyan Uchham.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    தகவலுக்கு நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  77. /////Ezhil said...
    Dear sir,
    சிம்ம லக்கண்ம் செவ்வாய் 4 & 9 கு உடையவர்
    ராசியில் பகை வீட்டில்( மிதுனம்)
    அம்சதில் ஆட்சி( விருச்ச்கம்)
    சுய பரல்கலள் 2 செவ்வாய் பலம் குறைந்து உள்ளார்
    ராசியில் செவ்வாய் 4& 9 உடையவர்
    9ம் வீடு மெஷம் 34 பரலகள்
    4ம் வீடு விருச்ச்கம் 27 பரல்க்ள்
    அந்த விட்டின் பலன் எப்ப்டி இருகும்,
    9ம் விடு ப்ரல்க்ள் அதிகம் இருபதால் விட்டின் பலன் நன்றாக இருகுமா.
    அலலது செவ்வாய் சுய பரல் 2 இருப்தால் பலன் இருகாதா?////

    9ஆம் வீடு பாக்கியஸ்தானம். அதில் பரல்கள் அதிகமாக இருப்பதால், பலன்கள் நன்றாக இருக்கும். கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  78. ////kmr.krishnan said...
    The lesson is crystal clear.Thank you,Sir!/////

    நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  79. /////Strider said...
    Anaithu Grahamgalin Suya paralgalum 6 ku mel (7 allathu 8) ulla Jathagam Ethavathu thangal Parthathu unda?
    Nan ithu varai partha varaiyil Anaithum 5/5th ku mel ulla Jathagam arithai thaan parthu irukiren..Athalal Ketkiren../////

    நான் பார்த்ததில்லை! அது அபூர்வம்!

    ReplyDelete
  80. ////Priya said...
    lesson is very simple to understand..thank you sir/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  81. Dear Sir,
    I read an article in "
    திண்ணை" about "எது சுதந்திர எண்ணம், எது முன்னரே நிச்சயிக்கப்பட்ட விஷயம்". The argument goes like this. நியோ ஒரு கிழவியிடம் ஆலோசனைகேட்கச் செல்கிறான். அவன் உள்ளே வந்ததும், அவள் திரும்பிப்பார்க்காமலேயே, 'அந்த ஜாடியைப் பற்றிக்கவலைப்படாதே ' என்கிறாள். நியோ 'எந்த ஜாடி ? ' என்று திரும்பிப்பார்க்கிறான். அவன் அப்படித் திரும்புவதால் ஒரு ஜாடியில் இடித்து அந்த ஜாடி கீழே விழுந்து உடைகிறது. 'அந்த ஜாடி ' என்று சொல்கிறாள் கிழவி.

    இப்போது கேள்வி, ஜாடி உடையப்போகிறது என்று கிழவிக்குத் தெரியும். அவன் திரும்புவதால்தான் அந்த ஜாடி விழும் என்றும் தெரியும். அவன் திரும்ப வேண்டுமென்றால், கிழவி, அந்த ஜாடியைப் பற்றிப் பேச வேண்டும். அவள் அந்த ஜாடி உடைவதைப் பற்றி பேசுவதால் அது உடைகிறது. என்ன மாயச்சுழல்!

    'நான் அந்த ஜாடியை பற்றி பேசாமல் இருந்திருந்தால் ஜாடி உடைந்திருக்குமா என்று யோசித்துக்கொண்டே போ ' என்று சொல்கிறாள் கிழவி.

    தன்னைத் தானே நிஜமாக்கிக் கொள்ளும் ஜோதிடம் என்று சொல்வது போன்றது இது. ஒருவனைப் பார்த்து, நீ ஓட்டப்பந்தயத்தில் முதலாவது ஆளாக வருவாய் என்று சொல்ல, அவன் நமக்கு அந்த திறமை இருக்கிறது போலும் என்று நினைத்து பயிற்சி செய்து அவன் ஓட்டப்பந்தயத்தில் முதலாவது ஆளாக வருவது போன்றது. ஜோதிடம் சொல்லாமல் இருந்திருந்தால் அவன் ஓட்டப்பந்தயத்தில் முதலாவது ஆளாக வந்திருப்பானா ?

    May I seek your explanation on the comment "தன்னைத் தானே நிஜமாக்கிக் கொள்ளும் ஜோதிடம்".

    Link: http://www.thinnai.com/?module=displaystory&story_id=60204072&format=html

    ReplyDelete
  82. //////Neela Narayanan Venkataram said...
    தன்னைத் தானே நிஜமாக்கிக் கொள்ளும் ஜோதிடம் என்று சொல்வது போன்றது இது. ஒருவனைப் பார்த்து, நீ ஓட்டப்பந்தயத்தில் முதலாவது ஆளாக வருவாய் என்று சொல்ல, அவன் நமக்கு அந்த திறமை இருக்கிறது போலும் என்று நினைத்து பயிற்சி செய்து அவன் ஓட்டப்பந்தயத்தில் முதலாவது ஆளாக வருவது போன்றது. ஜோதிடம் சொல்லாமல் இருந்திருந்தால் அவன் ஓட்டப்பந்தயத்தில் முதலாவது ஆளாக வந்திருப்பானா?
    May I seek your explanation on the comment "தன்னைத் தானே நிஜமாக்கிக் கொள்ளும் ஜோதிடம்"./////

    இதைவிட மோசமானது ஒன்று இருக்கிறது. கடவுள் இல்லை. கற்பனை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? ஆமாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட வேண்டியதுதான். முன்பே கவியரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்.”உண்டு என்றால் அது உண்டு; இல்லையென்றால் அது இல்லை!” கடவுள், ஜோதிடம் இரண்டும் பொய் என்று சொல்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும் என்ற அவசியம் நமக்கு இல்லை! It is their problem. They have to find the solution/answer for it on their own!

    ReplyDelete
  83. மாட்ரிக்ஸ் கதை கீழ் நாடுகளின் சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்டது. ”அசகோமாய கமயா’ என்ற வேத மந்திரம் பின் இசை ஒலிக்கிறது. கதை புரிந்தால் சரிதான்.ஜோதிடம் எங்கே அதில் வருகிறது.

    ReplyDelete
  84. Dear Sir,
    Thank you for the explanation. I understood your point. Jothidam is based on belief and don't question its validity. If you believe Jothidam, then there is no question about its validity and reliability.

    >>>>>>>>>>>>>>>>>
    மாட்ரிக்ஸ் கதை கீழ் நாடுகளின் சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்டது. ”அசகோமாய கமயா’ என்ற வேத மந்திரம் பின் இசை ஒலிக்கிறது. கதை புரிந்தால் சரிதான்.ஜோதிடம் எங்கே அதில் வருகிறது.

    I have not seed the film. Just read this post and raised my dobut. For further information, you can read the link and ask the questions to the author.

    ReplyDelete
  85. ////krish said...
    மாட்ரிக்ஸ் கதை கீழ் நாடுகளின் சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்டது. ”அசகோமாய கமயா’ என்ற வேத மந்திரம் பின் இசை ஒலிக்கிறது. கதை புரிந்தால் சரிதான்.ஜோதிடம் எங்கே அதில் வருகிறது.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  86. /////Blogger Neela Narayanan Venkataram said...
    Dear Sir,
    Thank you for the explanation. I understood your point. Jothidam is based on belief and don't question its validity. If you believe Jothidam, then there is no question about its validity and reliability.
    >>>>>>>>>>>>>>>>>
    மாட்ரிக்ஸ் கதை கீழ் நாடுகளின் சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்டது. ”அசகோமாய கமயா’ என்ற வேத மந்திரம் பின் இசை ஒலிக்கிறது. கதை புரிந்தால் சரிதான்.ஜோதிடம் எங்கே அதில் வருகிறது.
    I have not seed the film. Just read this post and raised my dobut. For further information, you can read the link and ask the questions to the author./////

    தகவலுக்கு நன்றி! புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com