மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.11.09

Humour: நகைச்சுவை: பிரெயன் லாராவும் லாரா தத்தாவும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Humour: நகைச்சுவை: பிரெயன் லாராவும் லாரா தத்தாவும்!

எச்சரிக்கை: Week End Post or You can take it as Weak End Post
++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தை மறந்து விட்டு, சற்று நிம்மதியாகவும், மகிழ்ச்சியோடும் இருப்போம். வாருங்கள்! இது முற்றிலும் நகைச்சுவைக்காக எழுதப்பெற்றது. உம்மன்னா’ மூஞ்சி ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும். இது உங்களுக்கான பதிவு அல்ல!

++++++++++++++++++++++++++++++++++++++++++++

1

”வீட்டில் உள்ள பழைய மோட்டார் சைக்கிள் அல்லது காரை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது.”

”என்ன அது ?”

“புது மோட்டார் சைக்கிள் அல்லது புதுக்காரின் விலையைக் கேளுங்கள்”

“அதே போல நம் மனைவி அழகாக இல்லையே எனும் வருத்தத்தைப் போக்க ஏதாவது வழி இருக்கிறதா?”

“இருக்கிறது. அழகான பெண்ணிடம், அவள் கணவன் அடிவாங்கும்போது அல்லது கடி வாங்கும்போது பாருங்கள். “
+++++++++++++++++++++++++++++++++++
2.

தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள பிரச்சினைக்காக ஒட்டுமொத்தமாகப் பன்னிரெண்டு பெண்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.

வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிபதி சொன்னார்: “ உங்களில் யார் வயதில் மூத்தவரோ, அவர் வந்து குறைகளின் சாரம்சத்தைச் சொல்லலாம்”

யாரும் முன் வரவில்லை. அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திரும்பிப் போய்விட்டார்கள். வழக்கும் தள்ளுபடியாகிவிட்டது.
+++++++++++++++++++++++++++++++++
3

“நல்ல வக்கீலுக்கும் (good lawyer) பெரிய வக்கீலுக்கும் (great lawyer) என்ன வித்தியாசம்?

”நல்ல வக்கீலுக்கு சட்டம் நன்றாகத் தெரியும், பெரிய வக்கீலுக்கு நீதிபதியை நன்றாகத் தெரியும்!”
+++++++++++++++++++++++++++++++++
4.

சிறந்த நடிகரை அரசு தேர்ந்தெடுத்தால், அதற்குப் பெயர் தேசிய விருது!

சிறந்த நடிகரை மக்கள் தேர்ந்தெடுத்தால், அதற்குப் பெயர் தேர்தல் விருது!
+++++++++++++++++++++++++++++++++++
5.

எட்டாம் வகுப்பில், வாத்தியாரம்மா சொன்னார்: “ நான் கோடீஸ்வரன் ஆனால் என்ன செய்வேன் என்பதுதான் கட்டுரையின் தலைப்பு. அனைவரும் எழுதுங்கள்.”

சற்று நேரம் ஆனது.

ஒரு பயல் மட்டும் எழுதாமல் சும்மா உட்கார்ந்திருந்தான்.

அவன் அருகில் சென்ற வாத்தியாரம்மா கேட்டார்,” நீ ஏன்டா எதையும் எழுதாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறாய்?”

அவன் மெல்லிய குரலில் சொன்னான்:

“நான் என் செயளாலருக்காகக் காத்திருக்கிறேன் (I’m waiting for my secretary)”
+++++++++++++++++++++++++++++++++++
6

இரவு மணி பதினொன்று. ஒரு ஆதர்ச தம்பதிகள் கட்டிலில் படுத்திருந்தார்கள். இருவரும் வயதானவர்கள் (இதைக் கவனத்தில் கொள்ளவும்)

கணவன் அரைத் துக்கத்தில். மனைவிக்குத் தூக்கம் வரவில்லை.

மனைவி, குறையுடன் சொன்னாள்:

“இப்போதெல்லாம் நீங்கள், முன்னைப் போல இல்லை. மாறிவிட்டீர்கள். என் கையைப் பிடித்தவாறுதானே படுத்துக் கொள்வீர்கள். இன்று ஏன் அப்படிச் செய்யவில்லை?”

அரைத் தூக்கக் கணவனின் கை தன்னிச்சையாக வந்து மனைவியின் கையைப் பற்றிக் கொண்டது.

மனைவி தொடர்ந்து சொன்னாள்:

“முன்பெல்லாம் படுத்துத் தூங்கும் முன்பு, நீங்கள் என் கன்னத்தில் முத்தமிடுவது வழக்கம். இன்று ஏன் அதைச் செய்யவில்லை.

அதுவும் நடந்தது.

“முன்பெல்லாம் முத்தமிட்டவுடன் நீங்கள் என் ஆட்காட்டி விரலைச் செல்லமாகக் கடிப்பது வழக்கம். இன்று ஏன் அதைச் செய்யவில்லை?”

சாடாரென்று எழுந்த கணவன், போர்வையை உதறிவிட்டு, கட்டிலை விட்டு இறங்கினான்

மனைவி பதற்றத்துடன் கேட்டாள் ”எங்கே போகிறீர்கள்?”

”தொண தொணக்காமல் இருடி ராசாத்தி. பல் செட்டை எடுத்துக் கொண்டு வருகிறேன்!”

“+++++++++++++++++++++++++++++++++++
7. ஆண்டு இறுதி தேர்வு

பட்டப் படிப்பு. கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருந்தது. கேள்விகள் எல்லாம், ”ஆமாம்/இல்லை” என்று டிக்’ அடிக்கும்படியான கேள்விகள்.

அனைவரும் விறுவிறுப்பாகத் தேர்வு எழுதிக் கொண்டிருக்க, ஒருவன் மட்டும், கேள்வித்தாள் முழுவதையும் ஒரு முறை பார்த்துவிட்டுத் தன் பையில் இருந்து ஒரு ஒற்றை ரூபாய் நாணயத்தை வெளியே எடுத்தான்.

பணத்தைச் சுண்டிப் பார்த்து, தலை வரும் கேள்விகளுக்கு ஆமாம் என்றும், பூ வரும் கேள்விகளுக்கு இல்லை என்றும் டிக் அடித்துக் கொண்டே வந்தான். ஒரு வழியாக எழுதி முடித்தான். பேனாவை மூடி மகிழ்ச்சியோடு தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டான்.

சற்று தூரத்தில் இருந்து அந்தக் கருமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தேர்வுக் கண்காளிப்பாளர், தொலைகிறான் என்று சும்மா இருந்துவிட்டார்.

சற்று நேரம் சென்றது.

அரங்கின் மறு பக்கம் சென்று விட்டுத் திரும்பியவர், நமது ஆசாமி என்ன செய்கிறான் என்று பார்த்தார். இப்போது அவன் வியர்க்க விறுவிறுக்கக் கலவரத்துடன் காசை மீண்டும் சுண்டிப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வியப்படைந்த அவர், அவன் அருகில் சென்று மெல்லிய குரலில் கேட்டார்,” மறுபடியும் எதற்குக் காசைச் சுண்டிப் போட்டுப் பார்க்கிறாய்?”

அவன் கலங்கிய குரலில் சொன்னான்: “ எழுதியதை சரி பார்க்கிறேன். ஒன்றும் சரியாக வரமாட்டேன் என்கிறது!”
++++++++++++++++++++++++++++++++++++++++
8.
டீச்சர்: ஒரு வார்த்தை நான்கு முறை வரும்படியாக சொற்றொடர் ஒன்றைச் சொல்லு!

மாணவன்: லாரா தத்தா பிரெயன் லாராவை மணந்தால் அவருடைய பெயர் லாரா லாரா என்று மாறிவிடும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த எட்டில் எது நன்றாக உள்ளது?

நட்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

64 comments:

சிங்கைசூரி said...

அன்புள்ள ஆசானே,
i have not received Navamsam lesson sir ?

astroadhi said...

இனிய காலை வணக்கம் ....

இனிமயான நகைச்சுவை ,மேலோட்டமாக சிலவற்றையும்,சிலவற்றை ஊன்றி படித்தால் தான் விளங்கும் மொத்ததில் கமல் படம் பார்த்த எபெக்ட்(நகைச்சுவை)அய்யா...
நன்றி வணக்கம்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//அவன் கலங்கிய குரலில் சொன்னான்: //

இது மேட்டரு..,

saravanan said...

அன்புள்ள ஆசானே
முதலாம் நகைச்சுவை நன்றாக இருந்தது .
நன்றி

Success said...

அன்புள்ள ஐயா...

weekend விருந்து அருமை...5ம் 6ம் எனக்கு பிடித்தன...
ஆறில் முதல் வரியில் கொடுத்த ”இருவரும் வயதானவர்கள் (இதைக் கவனத்தில் கொள்ளவும்)”
இதை இருதியில் கொடுத்திருந்தால் என்ன???
நன்றி...

Alasiam G said...

ஆசிரியருக்கு வணக்கம்,
நகைச்சுவைகள் அருமை.
1,2,5 and6 என்னைக் கவர்ந்தன.
அன்புடன்,
ஆலாசியம் கோ.

கனககோபி said...

//நீதிபதி சொன்னார்: “ உங்களில் யார் வயதில் மூத்தவரோ, அவர் வந்து குறைகளின் சாரம்சத்தைச் சொல்லலாம்”

யாரும் முன் வரவில்லை. அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திரும்பிப் போய்விட்டார்கள். வழக்கும் தள்ளுபடியாகிவிட்டது. //

கட்டாயம் நடந்திருக்கும்....

நல்ல நகைச்சுவைகள்...
உங்கள் தளத்தை இன்று தான் கண்டுபிடித்தாலும் உங்களைப் பின்தொடர்ந்தால் ஏராளமான விடயங்கள் கிடைக்கும் போலுள்ளது....

கடைசி நகைச்சுவையில் உள்ள மாணவன் நான் தான்....
என் அனுமதி இன்றி அதை வெளியிட்டிருந்தாலும் நீங்கள் ஆசிரியர் என்பதால் மன்னிக்கிறேன்.... ஹி ஹி ஹி.....

govind said...

i like 5th one

prabakar.l.n said...

எட்டு லட்டுகளை வைத்து எந்த லட்டு சுவையானது என்று சொன்னால் எப்படி சொல்ல முடியும் அய்யா , தங்களின் அணைத்து நகைசுவையும் நன்று .

prabakar.l.n said...

எட்டு லட்டுகளை வைத்து எந்த லட்டு சுவையானது என்று சொன்னால் எப்படி சொல்ல முடியும் அய்யா , தங்களின் அணைத்து நகைசுவையும் நன்று .

SP.VR. SUBBIAH said...

/////சிங்கைசூரி said...
அன்புள்ள ஆசானே,
i have not received Navamsam lesson sir ?/////

இன்று காலையில் அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை உங்கள் மெயில் பெட்டியைப் பாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

////astroadhi said...
இனிய காலை வணக்கம் ....
இனிமயான நகைச்சுவை ,மேலோட்டமாக சிலவற்றையும்,சிலவற்றை ஊன்றி படித்தால் தான் விளங்கும் மொத்ததில் கமல் படம் பார்த்த எபெக்ட்(நகைச்சுவை)அய்யா...
நன்றி வணக்கம்////

உங்கள் பாராட்டிற்கு 50% நன்றி.! கமல் படத்தோடு தொடர்பு படத்தியதால் பாதி நன்றி ‘கட்’!

SP.VR. SUBBIAH said...

/////SUREஷ் (பழனியிலிருந்து) said...
//அவன் கலங்கிய குரலில் சொன்னான்: //
இது மேட்டரு..,////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////saravanan said...
அன்புள்ள ஆசானே
முதலாம் நகைச்சுவை நன்றாக இருந்தது .
நன்றி/////

நல்லது நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Success said...
அன்புள்ள ஐயா...
weekend விருந்து அருமை...5ம் 6ம் எனக்கு பிடித்தன...
ஆறில் முதல் வரியில் கொடுத்த ”இருவரும் வயதானவர்கள் (இதைக் கவனத்தில் கொள்ளவும்)”
இதை இறுதியில் கொடுத்திருந்தால் என்ன???
நன்றி.../////

முதலில் சொன்னால்தான் சுவாரசியம் இருக்கும்!

SP.VR. SUBBIAH said...

/////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
நகைச்சுவைகள் அருமை.
1,2,5 and6 என்னைக் கவர்ந்தன.
அன்புடன்,
ஆலாசியம் கோ./////

நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBIAH said...

/////கனககோபி said...
//நீதிபதி சொன்னார்: “ உங்களில் யார் வயதில் மூத்தவரோ, அவர் வந்து குறைகளின் சாரம்சத்தைச் சொல்லலாம்”
யாரும் முன் வரவில்லை. அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திரும்பிப் போய்விட்டார்கள். வழக்கும் தள்ளுபடியாகிவிட்டது. //
கட்டாயம் நடந்திருக்கும்....
நல்ல நகைச்சுவைகள்...
உங்கள் தளத்தை இன்று தான் கண்டுபிடித்தாலும் உங்களைப் பின்தொடர்ந்தால் ஏராளமான விடயங்கள் கிடைக்கும் போலுள்ளது....
கடைசி நகைச்சுவையில் உள்ள மாணவன் நான் தான்....
என் அனுமதி இன்றி அதை வெளியிட்டிருந்தாலும் நீங்கள் ஆசிரியர் என்பதால் மன்னிக்கிறேன்.... ஹி ஹி ஹி.....////

வாத்தி(யை/யாரை) மன்னித்த முதல் மாணவர் நீங்கள்தான்! அதனால், நீங்கள் இந்த வகுப்பறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளீர்கள். சேஷ்டைகள் இல்லாமல் நடத்துவதை/நடக்கிறதைப் பாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

////Blogger govind said...
i like 5th one///

நன்றி கோவிந்து!

SP.VR. SUBBIAH said...

/////Blogger prabakar.l.n said...
எட்டு லட்டுகளை வைத்து எந்த லட்டு சுவையானது என்று சொன்னால் எப்படி சொல்ல முடியும் அய்யா , தங்களின் அனைத்து நகைசுவையும் நன்று .////

அடடா, நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள்!:-))))

சிங்கைசூரி said...

அன்புள்ள ஆசானே,
I have received lesson நன்றி.
எவ்வளவு எளிமையான விளக்கம்,
i have no words to express சார், i think most of my doubts with Navamsam cleared, Thank you so much ஆசானே.

T K Arumugam said...

ஐயா வணக்கம்

ஒட்டு போடுவது என்றால் ஒருவருக்கு மட்டும்தான். அது போல என் ஒட்டு 2 க்கு தான்.

நன்றி

வாழ்த்துக்கள்

SP.VR. SUBBIAH said...

////சிங்கைசூரி said...
அன்புள்ள ஆசானே,
I have received lesson நன்றி.
எவ்வளவு எளிமையான விளக்கம்,
i have no words to express சார், i think most of my doubts with Navamsam cleared, Thank you so much ஆசானே.////

நல்லது நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////T K Arumugam said...
ஐயா வணக்கம்
ஒட்டு போடுவது என்றால் ஒருவருக்கு மட்டும்தான். அது போல என் ஒட்டு 2 க்கு தான்.
நன்றி
வாழ்த்துக்கள்/////

இதைச் விருந்துச் சாப்பாட்டுக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். முழுச்சாப்பாடு. அதில் எதெது நன்றாக இருந்தது என்று சொல்வோமில்லையா? அப்படிச் சொல்லலாம்!

கேசவன் .கு said...

/// இருடி ராசாத்தி. பல் செட்டை எடுத்துக் கொண்டு வருகிறேன் ///

தாத்தா தூக்கத்திலும் விழிப்புணர்வாய் இருக்கிறார் போலும்.

கேசவன் .கு said...

/// இருடி ராசாத்தி. பல் செட்டை எடுத்துக் கொண்டு வருகிறேன் ///

தாத்தா தூக்கத்திலும் விழிப்புணர்வாய் இருக்கிறார் போலும்.

sasi said...

no.7 is superb....

krish said...

சில பரிட்சைகள் CPA, CISA, ISA போன்றவற்றில் சாஸ் கேள்விகள் தான். விடை தெரியாமல் கிட்டத்தட்ட இந்த முறை பின்பற்றுவது வழக்கம் தான். பதிலை ஒரு முறை சரி பார் என்று சிறுவயது யோசனையை பின்பற்றினால் என்ன ஆகும் என்று நானும் என் நண்பர்களும் சிரித்தோம்.

Jawahar said...

எட்டாவது நல்லா இருக்கு. அவங்க பேர் லாரா லாரா ஆகும். பிரியான் லாராவை அவர் வீட்டம்மா டாரா டாரா கிழிச்சிட மாட்டாங்களா?

http://kgjawarlal.wordpress.com

SP.VR. SUBBIAH said...

/////கேசவன் .கு said...
/// இருடி ராசாத்தி. பல் செட்டை எடுத்துக் கொண்டு வருகிறேன் ///
தாத்தா தூக்கத்திலும் விழிப்புணர்வாய் இருக்கிறார் போலும்./////

பாட்டி சொல்லைத் தட்டாத தாத்தா!

SP.VR. SUBBIAH said...

///sasi said...
no.7 is superb....////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBIAH said...

////krish said...
சில பரிட்சைகள் CPA, CISA, ISA போன்றவற்றில் சாஸ் கேள்விகள் தான். விடை தெரியாமல் கிட்டத்தட்ட இந்த முறை பின்பற்றுவது வழக்கம் தான். பதிலை ஒரு முறை சரி பார் என்று சிறுவயது யோசனையை பின்பற்றினால் என்ன ஆகும் என்று நானும் என் நண்பர்களும் சிரித்தோம்./////

அனுபவஸ்தர்! இனியும், வாய்ப்புக் கிடைத்தால் தொடர வாழ்த்துக்கள்

SP.VR. SUBBIAH said...

////Jawahar said...
எட்டாவது நல்லா இருக்கு. அவங்க பேர் லாரா லாரா ஆகும். பிரியான் லாராவை அவர் வீட்டம்மா டாரா டாரா கிழிச்சிட மாட்டாங்களா?/////

லாரா என்ன சாதாரண ஆளா? டாரா, டாரா என்றால் மட்டையை வைத்து பவுண்டரி லைனிற்கு அனுப்பிவிடுவார்!

Sakthi Ganesh said...

Iyya migavum nandraga ullathu, ivaigalai thoguthu oru thani puthagama kodungal iyya (publish pannungal). Nandri. Sakthi ganesh.

Kumares said...

இனிய காலை வணக்கம் ஐயா...
குலுங்கும் அளவு பெரிய வயிறு இல்லாததால் வயிறு குலுங்காமல் சிரித்து மகிழ்ந்தோம்... :-)))

நான் படித்து மகிந்த ஒரு ஜோக் ஐ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ஐயா...

சிங் ஒருவர் பீச் இல் ஹாயாக படுத்து sunbath எடுத்திட்டு இருந்தாராம்...நம்மாள் ஒருத்தன் அவருகிட்ட போய் "R u Relaxing?" எண்டு கேட்டானாம்...

அவரு உடனே நோ, நோ! மை நேம் இஸ் குஸ்வந்த்சிங் என்னாரம்...

சிரிப்பு வருதா ஐயா...
வரும் ஆனா வராது.... :-))))

Raju said...

All the jokes are good. Especially two and six.

Rama said...

My vote for joke 5 and 6.

thanks for jokes.

kmr.krishnan said...

6வது நன்றாக உள்ளது.என் வயதுக்கேத்த ஜோக் அல்லவா?

sundari said...

ஐயா வணக்கம்,
அனைத்து நகைச்சுவையும் மிகவும் ந்ன்றாகயிருந்தது. ஆனால் எனக்கு 6.7ம் மிகவும் பிடித்தது. ஒரு வயதான பாட்டி தான் கணவரிடம் வைத்திருந்த அன்பை தாங்கள் நகைச்சுவை முலமாக நல்லா விளக்கியிருக்கிறிர்கள்.ம்ற்றும் விடை தெரியாத மாணவனின் மனநிலையை ந்கைச்சுவை முலமாக விளக்கியிருக்கிறிர்கள்.
சுந்தரி

tamil temples said...

ஆபீசர்ஸ் கிளப். வந்தவங்க எல்லாரும் அவங்கவங்களுக்கு பிடிச்ச கேம் விளையாடிகிட்டு இருந்தாங்க. அப்ப ஒரு செல்லுல இன்கமிங் கால். ஒருத்தர் எடுத்து பேசினார்.

"சொல்லும்மா.. என்ன விஷயம்.."

வொய்ப் கிட்ட பேசறார்னு புரிஞ்சுது.

"நகைக்கடைக்கு வந்தேன்.. ஒரு நெக்லஸ் புது மாடலா இருக்கு. விலை 25000 தான்.. வாங்கிக்கவா.."

ஓக்கேம்மா..

உடனே அவங்க புது மாடல் கார் வந்திருக்கு.. புக் பண்ணிரவான்னாங்க.. விலை எவ்வளவுன்னு கேட்டாரு.. போர் லாக்ஸ்தான்.. சூப்பர்.. புக் பண்ணிருன்னுட்டாரு. அப்ப இன்னொரு ஆசையும் சொல்லிரவான்னு கேட்டாங்க. சொல்லும்மான்னாரு. தோட்டத்தோட வீடு வாங்கணும்னு நினைச்சமே.. 20 லாக்ஸ்ல ஒரு ஆபர் வந்திருக்குன்னு சொன்னாங்க. ம்ம்.. 18க்கு கேளு.. இல்லாட்டி இருபதுக்கே முடிச்சிரு.. ஹைய்யோ.. ஐ லவ் யூன்னாங்க..

செல்லை எடுத்துப் பேசின ஆளு லைனை கட் பண்ணிட்டு எழுந்து நின்னு இது யாரோட செல்லுன்னார்"

SP.VR. SUBBIAH said...

////Sakthi Ganesh said...
Iyya migavum nandraga ullathu, ivaigalai thoguthu oru thani puthagama kodungal iyya (publish pannungal). Nandri. Sakthi ganesh.////

ஜோதிடப்புத்தகங்கள் முதல் 2 தொகுதிகள் முடிந்தவுடன், இதைச் செய்கிறேன் நண்பரே!
உங்கள் யோசனைக்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

////Kumares said...
இனிய காலை வணக்கம் ஐயா...
குலுங்கும் அளவு பெரிய வயிறு இல்லாததால் வயிறு குலுங்காமல் சிரித்து மகிழ்ந்தோம்... :-))) நான் படித்து மகிந்த ஒரு ஜோக் ஐ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ஐயா...
சிங் ஒருவர் பீச் இல் ஹாயாக படுத்து sunbath எடுத்திட்டு இருந்தாராம்...நம்மாள் ஒருத்தன் அவருகிட்ட போய் "R u Relaxing?" எண்டு கேட்டானாம்...
அவரு உடனே நோ, நோ! மை நேம் இஸ் குஸ்வந்த்சிங் என்னாரம்...
சிரிப்பு வருதா ஐயா...
வரும் ஆனா வராது.... :-))))////

நன்றி குமரேஸ்! நானும் இதைப் படித்திருக்கிறேன்!

SP.VR. SUBBIAH said...

/////Raju said...
All the jokes are good. Especially two and six./////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Rama said...
My vote for joke 5 and 6.
thanks for jokes./////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////kmr.krishnan said...
6வது நன்றாக உள்ளது.என் வயதுக்கேத்த ஜோக் அல்லவா?/////

உங்களைப் போன்ற ரசிகர்கள் பலருக்காகத்தான், அதை விலாவரியாக எழுதியுள்ளேன் சார்!

SP.VR. SUBBIAH said...

////sundari said...
ஐயா வணக்கம்,
அனைத்து நகைச்சுவையும் மிகவும் ந்ன்றாகயிருந்தது. ஆனால் எனக்கு 6.7ம் மிகவும் பிடித்தது. ஒரு வயதான பாட்டி தான் கணவரிடம் வைத்திருந்த அன்பை தாங்கள் நகைச்சுவை முலமாக நல்லா விளக்கியிருக்கிறிர்கள்.மற்றும் விடை தெரியாத மாணவனின் மனநிலையை ந்கைச்சுவை முலமாக விளக்கியிருக்கிறிர்கள்.
சுந்தரி/////

உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////tamil temples said...
ஆபீசர்ஸ் கிளப். வந்தவங்க எல்லாரும் அவங்கவங்களுக்கு பிடிச்ச கேம் விளையாடிகிட்டு இருந்தாங்க. அப்ப ஒரு செல்லுல இன்கமிங் கால். ஒருத்தர் எடுத்து பேசினார்.
"சொல்லும்மா.. என்ன விஷயம்.."
வொய்ப் கிட்ட பேசறார்னு புரிஞ்சுது.
"நகைக்கடைக்கு வந்தேன்.. ஒரு நெக்லஸ் புது மாடலா இருக்கு. விலை 25000 தான்.. வாங்கிக்கவா.."
ஓக்கேம்மா..
உடனே அவங்க புது மாடல் கார் வந்திருக்கு.. புக் பண்ணிரவான்னாங்க.. விலை எவ்வளவுன்னு கேட்டாரு.. போர் லாக்ஸ்தான்.. சூப்பர்.. புக் பண்ணிருன்னுட்டாரு. அப்ப இன்னொரு ஆசையும் சொல்லிரவான்னு கேட்டாங்க. சொல்லும்மான்னாரு. தோட்டத்தோட வீடு வாங்கணும்னு நினைச்சமே.. 20 லாக்ஸ்ல ஒரு ஆபர் வந்திருக்குன்னு சொன்னாங்க. ம்ம்.. 18க்கு கேளு.. இல்லாட்டி இருபதுக்கே முடிச்சிரு.. ஹைய்யோ.. ஐ லவ் யூன்னாங்க..
செல்லை எடுத்துப் பேசின ஆளு லைனை கட் பண்ணிட்டு எழுந்து நின்னு இது யாரோட செல்லுன்னார்"///////

நன்றி நண்பரே! இதை வேறு விதமாக நான் படித்திருக்கிறேன். இதுவும் நன்றாக உள்ளது!

Ram said...

presents Sir

SP.VR. SUBBIAH said...

////Ram said...
presents Sir////

நன்றி நண்பரே!

csekar2930 said...

Dear Sir,

All the jokes are good. Especially two and six.

Thanks

Chandrasekaran Surya

Arulkumar Rajaraman said...

Dear Sir

2,5,6 arumai sir.

Thank you

Loving student
Arulkumar Rajaraman

Sugumarje said...

Apartment Ladies and Judge, Simply superb. Ha, Ha, Got free when read out.

SP.VR. SUBBIAH said...

////csekar2930 said...
Dear Sir,
All the jokes are good. Especially two and six.
Thanks
Chandrasekaran Surya////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Arulkumar Rajaraman said...
Dear Sir
2,5,6 arumai sir.
Thank you
Loving student
Arulkumar Rajaraman/////

நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

/////Sugumarje said...
Apartment Ladies and Judge, Simply superb. Ha, Ha, Got free when read out./////

நன்றி நண்பரே!

Priya said...

my vote to 5th

Bala said...

Ayya chinna doubtu.........


Raasiyilum, Navaamsathilum 7il kethu but raasiyil sukran pagai but navaamsathil sukran aatchi.....

kethuvudan sernthu irukiraar..........ithu good uh?

Raasi and navaamsam same lagnam mesha lagna .........in both mars is exalted........

T K Arumugam said...

SP.VR. SUBBIAH said...
////T K Arumugam said...
ஐயா வணக்கம்
ஒட்டு போடுவது என்றால் ஒருவருக்கு மட்டும்தான். அது போல என் ஒட்டு 2 க்கு தான்.
நன்றி
வாழ்த்துக்கள்/////

இதைச் விருந்துச் சாப்பாட்டுக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். முழுச்சாப்பாடு. அதில் எதெது நன்றாக இருந்தது என்று சொல்வோமில்லையா? அப்படிச் சொல்லலாம்!//////


இதை விருந்து என்று எடுத்துகொண்டால் பரிமாறிய இலையை தவிர எல்லாமே நல்ல ருசி

வாழ்த்துக்கள்

SP.VR. SUBBIAH said...

///Priya said...
my vote to 5th////

நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

////Bala said...
Ayya chinna doubtu.........
Raasiyilum, Navaamsathilum 7il kethu but raasiyil sukran pagai but navaamsathil sukran aatchi.....
kethuvudan sernthu irukiraar..........ithu good uh?
Raasi and navaamsam same lagnam mesha lagna .........in both mars is exalted......../////

லக்கினமும் லக்கினாதிபதியும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். கவலையை விடுங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////T K Arumugam said...
SP.VR. SUBBIAH said...
////T K Arumugam said...
ஐயா வணக்கம்
ஒட்டு போடுவது என்றால் ஒருவருக்கு மட்டும்தான். அது போல என் ஒட்டு 2 க்கு தான்.
நன்றி
வாழ்த்துக்கள்/////
இதைச் விருந்துச் சாப்பாட்டுக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். முழுச்சாப்பாடு. அதில் எதெது நன்றாக இருந்தது என்று சொல்வோமில்லையா? அப்படிச் சொல்லலாம்!//////
இதை விருந்து என்று எடுத்துகொண்டால் பரிமாறிய இலையை தவிர எல்லாமே நல்ல ருசி
வாழ்த்துக்கள்////

உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

மிஸ்டர் அரட்டை said...

7 and 8 are super ....they were new to me..

Searchengines said...

I did not get a copy of the lesson on Navamsa. Kindly send me a copy.

SP.VR. SUBBIAH said...

////மிஸ்டர் அரட்டை said...
7 and 8 are super ....they were new to me../////

நல்லது நன்றி~!

SP.VR. SUBBIAH said...

/////Searchengines said...
I did not get a copy of the lesson on Navamsa. Kindly send me a copy.///

7.11.2010 தேதிப் பதிவில் 21.1.2010ஆம் தேதி பின்னூட்டத்தை எழுதியது ஏன் சாமி?