மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.11.09

காரைக்குடிக் கலாச்சாரம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காரைக்குடிக் கலாச்சாரம்!

இரண்டு நாள் பயணமாகக் காரைக்குடிக்குச் சென்றிருந்தேன். நான்கு சுப நிகழ்வுகள். திருமண விழாக்கள். கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி என்னவென்றால், எனது செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - மூன்றாம் தொகுப்பு - நூலின் 650 பிரதிகளை ஒரு குடும்பத்தினர் விலைக்கு வாங்கி, திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசாகக் கொடுத்தனர்.

அதுபோல வேறு ஒரு நண்பர் வீட்டுத்திருமணத்தில் நான் எழுதிய பரந்தாமன் எனும் சிறு நூலை (1/16 அளவு - 24 பக்கங்கள் - 800 புத்தகங்கள்) நானும் வந்திருந்த விருந்தினர்கள் படித்து மகிழ பரிசாகக் கொடுத்தேன்.

அது மட்டுமல்ல. காரைக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கல்லுப்பட்டி என்னும் சிற்றூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டேன். அவர்கள் மூன்று புத்தகங்களையும், ஸ்ரீராமர், அனுமன் ஜாதகப் படத்தையும் பரிசாகக் கொடுத்து அசத்திவிட்டனர். அதோடு வந்திருந்த அனைவருக்கும் சுவையான விருந்து, அத்துடன் திரு.சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற்றது.

திருமணத்திற்கு வந்து திரும்புபவர்களுக்குப் பயணக் களைப்பு ஏற்படுமா என்ன?

காரைக்குடிப் பகுதியில் நிலவிவரும் இந்தக்கலாச்சாரம், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவ வேண்டும்.

ஆமாம், பிறந்தநாள் விழா, திருமண விழாக்கள், மணிவிழாக்கள், ஆகியவற்றில் வரும் விருந்தினர்களுக்குப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்கும் பண்பு வளர வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்

படங்களின் மீது கர்சரைவைத்து அழுத்திப் பாருங்கள். படங்கள் பெரிதாகத் தெரியும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++


ஸ்ரீராமர், அனுமன் ஜாதகங்கள்
பட்டிமன்ற நிகழ்ச்சி

வாத்தியாரின் குட்டிப் புத்தகம்

பரிசாகக் கிடைத்த திரு.ரா.கணபதி அவர்கள் எழுதிய காமகோடி, ராம்கோடி நூல்

பரிசாகக் கிடைத்த இலக்கியமேகம்.திரு.சீனிவாசன் அவர்கள் எழுதிய சுந்தரகாண்டம் நூல்


பரிசாகக் கிடைத்த கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பகவத்கீதை விளக்க உரை நூல்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

50 comments:

  1. சார் வணக்கம். ரொம்ப நாளாச்சு. நல்லாருக்கீங்களா?
    Net
    connection கிடைக்குரதுலே கொஞ்சம் வெயிட் பண்றமாதிரி ஆச்சு.
    so long gap . sorry .
    lessonsஒரு glance பார்த்தேன். யோகம் ஸ்பெஷல் மற்றும் நவாம்சம் ஸ்பெஷல் எல்லா கிளாசும் ரியல்லி சுப்பேர்ப்.
    நவாம்சம் நல்ல டீப்பா புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்ன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
    மற்றபடி காரைக்குடி என்னிக்குமே இந்த மாதிரி விஷயங்களிலே pioneerதான்.
    once again hats off to காரைக்குடி மக்காள்.

    ReplyDelete
  2. ////minorwall said...
    சார் வணக்கம். ரொம்ப நாளாச்சு. நல்லாருக்கீங்களா?
    Net connection கிடைக்கிறதிலே கொஞ்சம் வெயிட் பண்றமாதிரி ஆச்சு.
    so long gap . sorry . lessonsஒரு glance பார்த்தேன். யோகம் ஸ்பெஷல் மற்றும் நவாம்சம் ஸ்பெஷல் எல்லா கிளாசும் ரியல்லி சுப்பேர்ப்.
    நவாம்சம் நல்ல டீப்பா புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்ன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
    மற்றபடி காரைக்குடி என்னிக்குமே இந்த மாதிரி விஷயங்களிலே pioneerதான்.
    once again hats off to காரைக்குடி மக்கள்.////

    மைனர்வாள், வாங்க, வாங்க, வாங்க!
    இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதே சாமி, நீங்கள் வகுப்பறைக்கு வந்து!
    வந்ததற்கு சந்தோஷம்தான்! ஜப்பானில் எல்லோரும் நலம்தானே?

    ReplyDelete
  3. karaikudi kalaasaram patri thelivaaga eduthu solkireekal avarkal veedu amaithirukum muraium mutinthaal sollungal suvaiyaaga irukum ayya




    nandru thangaludaiya melnilai paadam 12 aam paguthi nandraaga vanthullathu ayya mikka nandri
    nan sathuragiri malai sendraathaal sendra naalkal ennal thankaludaiya idukaikalai kavanikka mutiya villai

    ReplyDelete
  4. உறவினர்களைப் பார்ப்பதே மகிழ்ச்சியா விஷயம். இங்கு உங்கள் மகிழ்ச்சி இரண்டு அடுக்காக மாறியுள்ளது.

    நல்ல நல்ல புத்தகங்கள் கைக்கு கிடைக்கப் பெற்றீர்கள்.

    உங்கள் பகிர்விக்கு நன்றி.

    ReplyDelete
  5. karaikudi pakka poitu vanthu puthu thembooda irukara mathiri iruku.

    santhosham ayya.

    ReplyDelete
  6. /////prabakar.l.n said...
    karaikudi kalaasaram patri thelivaaga eduthu solkireekal avarkal veedu amaithirukum muraium mutinthaal sollungal suvaiyaaga irukum ayya/////

    முன்பே எனது பல்சுவைப் பதிவில் பதிவிட்டுள்ளேன். அதற்கு சிறந்த பதிவிற்கான விருதும் கிடைத்திருக்கிறது ஸ்வாமி!
    சுட்டி: http://devakottai.blogspot.com/2008/03/star-posting_26.html
    தேதி 26.3.2008 தலைப்பு: செட்டிநாட்டு வீடுகள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ///// nandru thangaludaiya melnilai paadam 12 aam paguthi nandraaga vanthullathu ayya mikka nandri nan sathuragiri malai sendraathaal sendra naalkal ennal thankaludaiya idukaikalai kavanikka mutiya villai/////

    முடிந்தபோது வாருங்கள்! குறையொன்றுமில்லை!

    ReplyDelete
  7. /////இராகவன் நைஜிரியா said...
    உறவினர்களைப் பார்ப்பதே மகிழ்ச்சியா விஷயம். இங்கு உங்கள் மகிழ்ச்சி இரண்டு அடுக்காக மாறியுள்ளது.
    நல்ல நல்ல புத்தகங்கள் கைக்கு கிடைக்கப் பெற்றீர்கள்.
    உங்கள் பகிர்விற்கு நன்றி./////

    உண்மைதான். நன்றி ராகவன்!

    ReplyDelete
  8. ////புதுகைத் தென்றல் said...
    karaikudi pakkam poitu vanthu puthu thembooda irukara mathiri iruku.
    santhosham ayya./////

    சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊரு போலாகுமா? - இளையராஜா

    ReplyDelete
  9. எஸ் எம் எஸ் மொழி மட்டுமே அறிந்தவர்களுக்கு நடுவில் புத்த‌கம் வாஙக‌
    ஆர்வம் காட்டும் காரைக்குடி வாழ் பெருமக்கள் ப‌ண்பு பாராட்டுக்குரியதே.ந‌கரத்தார்களின் இலக்கிய‌ ஆர்வம் என் வயதுக்காரர்களுக்குப்
    புதிதல்ல.காரைக்குடி கம்பன் விழா, கம்பனடிப்பொடி தெய்வத்திரு சா.கணேசன்,ரோஜா முத்தைய்யா,எடிட்டர் எஸ் ஏ.பி,குழந்தைக் கவிஞர்
    அழ.வள்ளியப்பா, ராய.சொ, வானதி திருனாவுக்கரசு,பழனியப்பா பிரதர்ஸ்,
    இப்போது தாஙக‌ள்.....பட்டியல் முடியவில்லை.

    ReplyDelete
  10. நம்ம ஊர் மக்களின் மாண்பு மகத்தானது.
    அதை உங்களின் இந்தப் பதிவு உறுதி செய்கிறது. மனம் மகிழ்கிறேன்
    நன்றியுடன்
    த.நெ.

    ReplyDelete
  11. ஐயா வணக்கம்,
    நீங்க காரைக்குடிக்கு போயிருந்திங்களா? சார் நீங்க முன்னவனை கும்மிட்டீங்களா
    சொல்லுங்க சார் அதான் சார் கற்பக விநாயகர் சார் நானு இரண்டு முறை வணங்கினேன் சார். ஐயா காரைக்குடி ரொம்ப் அழகாயிருந்தது. மேலும் ஓட்டல்ல
    அளவில்லா சாதததை மிகவும் அன்புடன் பரிமாறினார்கள் உணவும் மிக சுவையாகயிருந்தது. நான் இருக்கும் இடத்தில் அப்படியில்லை உயர்தரமான உணவகத்தில் கூட ஐயா.
    சுந்தரி.

    ReplyDelete
  12. Good evening sir,
    Lot of thanks for Sri Rama and Sri Hanuman horoscope sir. i will take print out and put in my purse sir.
    I will have in my pooja room sir. So much thanks for that.
    sundari.p

    ReplyDelete
  13. படிக்கவே மனசுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனுபவித்த உங்க்ளுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்?..
    தமிழக புத்தக விற்பனைச் சந்தை மிக அதிக அளவில், நூலக விற்பனையையே எதிர்பார்த்திருக்கிற நிலையில், குடும்ப விழாக்களில் அவற்றை மகிழ்ச்சியுடன் வழங்குகிற பழக்கம் பரவுமானால், அதை விட எழுதுவோருக்கும் பதிப்பகத்தாருக்கும், படிப்போருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய வேறொன்று இருக்க முடியாது..
    இதில் இன்னொரு நல்ல அம்சம் என்னவென்றால், குடும்பம் பூராவும் கூடி உட்கார்ந்து படிக்கக் கூடிய--பொது விழாக்களில் வழங்க 'தகுதி'பெற்ற நல்ல நூல்களே அதிக அளவில் புழக்கத்திற்கு வரும் என்பது..
    இந்த ஆரோக்கியமான சூழ்நிலை பரவ, பதிப்பகத் துறையில் பெரிதும் ஈடுபட்டிருக்கும்
    நகரத்தார் தங்கள் பங்களிப்பை (விழாவுக்கான வழங்கல் என்றால், தள்ளூபடி விலையில் தருவது போன்ற) தந்தால், இந்த முயற்சிகள் பெருமளவில் வெற்றி பெரும் என்று நம்புகிறேன்.
    இந்த மாதிரி முயற்சிகளை நாலு பேர் அறியச் செய்த உங்களுக்கும், தொடங்கி வைத்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. /////kmr.krishnan said...
    எஸ் எம் எஸ் மொழி மட்டுமே அறிந்தவர்களுக்கு நடுவில் புத்த‌கம் வாஙக‌
    ஆர்வம் காட்டும் காரைக்குடி வாழ் பெருமக்கள் ப‌ண்பு பாராட்டுக்குரியதே.ந‌கரத்தார்களின்

    இலக்கிய‌ ஆர்வம் என் வயதுக்காரர்களுக்குப் புதிதல்ல.காரைக்குடி கம்பன் விழா, கம்பனடிப்பொடி

    தெய்வத்திரு சா.கணேசன்,ரோஜா முத்தைய்யா,எடிட்டர் எஸ் ஏ.பி,குழந்தைக் கவிஞர்

    அழ.வள்ளியப்பா, ராய.சொ, வானதி திருநாவுக்கரசு,பழனியப்பா பிரதர்ஸ், இப்போது

    தாஙக‌ள்.....பட்டியல் முடியவில்லை./////

    சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. /////TamilNenjam said...
    நம்ம ஊர் மக்களின் மாண்பு மகத்தானது.
    அதை உங்களின் இந்தப் பதிவு உறுதி செய்கிறது. மனம் மகிழ்கிறேன்
    நன்றியுடன்
    த.நெ.////

    நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ////sundari said...
    ஐயா வணக்கம்,
    நீங்க காரைக்குடிக்கு போயிருந்திங்களா? சார் நீங்க முன்னவனை கும்மிட்டீங்களா
    சொல்லுங்க சார் அதான் சார் கற்பக விநாயகர் சார் நானு இரண்டு முறை வணங்கினேன் சார்.

    ஐயா காரைக்குடி ரொம்ப அழகாயிருந்தது. மேலும் ஓட்டல்ல அளவில்லா சாதததை மிகவும்

    அன்புடன் பரிமாறினார்கள் உணவும் மிக சுவையாகயிருந்தது. நான் இருக்கும் இடத்தில்

    அப்படியில்லை உயர்தரமான உணவகத்தில் கூட ஐயா.
    சுந்தரி./////

    அடுத்தமுறை சென்றால், பிள்ளையார்பட்டியில் உள்ள விடுதியில் சுவையான மதிய உணவைப்

    பக்தர்கள் அனைவருக்கும் வழங்குவார்கள். சாப்பிட்டுப்பாருங்கள் சகோதரி!

    ReplyDelete
  17. /////sundari said...
    Good evening sir,
    Lot of thanks for Sri Rama and Sri Hanuman horoscope sir. i will take print out and put in my

    purse sir. I will have in my pooja room sir. So much thanks for that.
    sundari.p////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  18. /////ஜீவி said...
    படிக்கவே மனசுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனுபவித்த உங்களுக்கு எவ்வளவு

    சந்தோஷமாக இருந்திருக்கும்?..
    தமிழக புத்தக விற்பனைச் சந்தை மிக அதிக அளவில், நூலக விற்பனையையே

    எதிர்பார்த்திருக்கிற நிலையில், குடும்ப விழாக்களில் அவற்றை மகிழ்ச்சியுடன் வழங்குகிற பழக்கம்

    பரவுமானால், அதை விட எழுதுவோருக்கும் பதிப்பகத்தாருக்கும், படிப்போருக்கும்

    மகிழ்ச்சியளிக்கக் கூடிய வேறொன்று இருக்க முடியாது..
    இதில் இன்னொரு நல்ல அம்சம் என்னவென்றால், குடும்பம் பூராவும் கூடி உட்கார்ந்து படிக்கக்

    கூடிய--பொது விழாக்களில் வழங்க 'தகுதி'பெற்ற நல்ல நூல்களே அதிக அளவில் புழக்கத்திற்கு

    வரும் என்பது..
    இந்த ஆரோக்கியமான சூழ்நிலை பரவ, பதிப்பகத் துறையில் பெரிதும் ஈடுபட்டிருக்கும்
    நகரத்தார் தங்கள் பங்களிப்பை (விழாவுக்கான வழங்கல் என்றால், தள்ளூபடி விலையில் தருவது

    போன்ற) தந்தால், இந்த முயற்சிகள் பெருமளவில் வெற்றி பெரும் என்று நம்புகிறேன்.
    இந்த மாதிரி முயற்சிகளை நாலு பேர் அறியச் செய்த உங்களுக்கும், தொடங்கி வைத்த

    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்./////

    என்னுடைய சிறுகதைத் தொகுப்பு நூல்கள் மூன்றுமே காரைக்குடியில்தான் வெளியானது. அதுவும்,

    மணிவிழாக்கள், திருமண நிகழ்ச்சி என்று நடத்திய அன்பர்களே அவற்றை வாங்கி பரிசாக

    அளித்தார்கள். 80% சதவிகித நூல்கள் மூன்று நிகழ்ச்சிகளிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. அதோடு

    அதைப் படித்த அன்பர்கள், மகிழ்ந்து தங்கள் நணபர்கள் வட்டத்தில் பரிசாக அளிப்பதற்காக

    மீதமுள்ள நூல்களையும் வாங்கிக் கொண்டு விட்டார்கள். அதை நன்றியுடன் சொல்லிக்கொள்கிறேன்!
    இந்தப் பண்பு தமிழகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்!

    ReplyDelete
  19. சார் வணக்கம் ,
    இது மாதிரியான நல்ல விஷயங்கள் நடப்பதே அரிதான இக்காலத்தில், நடந்தது மட்டும் இல்லாமல் அதை ஒரு கலாச்சாரமாக பின்பற்றும் மக்களுக்கு நன்றி. எனது மகளின் பிறந்த நாளில் ௦கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் என தோன்ற வைத்ததிற்கு மிக மிக நன்றி.

    ReplyDelete
  20. அய்யா வணக்கம். ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் . எனக்கு துலா லக்னம் ,துலா ராசி. 7,2 க்கு அதிபதி செவ்வாய் , 10 ல் நீச்சம் (ராசியில்) . அனால் நவாம்சத்தில் கும்ப லக்னம் , 12 ல் செவ்வாய் உச்சம் . ராசியில் நீச்சம் ஆனது சரி ஆகிவிட்டதா ?? . கேட்பதற்கு காரணம் : 12 ல் செவ்வாய் அமைந்து உள்ளது .

    ReplyDelete
  21. Dear Sir

    Arumai Sir. Thangal Pani sirakka iravanidam vendugiren.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  22. Iyaaaaaaaaaaaaaaaaaaaa!

    Guruveeeeeeeeeeeeeeeee!

    Vanakkam

    ReplyDelete
  23. வானம் பார்த்த தமிழ் பூமியில்
    ஞானம் நிறைந்தோர் மத்தியில்

    பரந்தாமன் புத்தகத்தை சடுதியில்
    பரந்தமனத்துடன் மணவிடுதியில்

    பரிசளித்த ஆசானுக்கரிது துயில்
    உபரியாய் அவரன்பின் மிகுதியில்

    நமது மனமும் பெருமகிழ்ச்சியில்
    ராம/பக்த ஜாதகமும் நம் கையில்!

    என்றோ ஒருநாள் வந்தாலும்
    நன்றி மறவாத மாணவன்
    அன்றில் பறவை/தமாம் பாலா

    ReplyDelete
  24. //////CUMAR said...
    சார் வணக்கம் ,
    இது மாதிரியான நல்ல விஷயங்கள் நடப்பதே அரிதான இக்காலத்தில், நடந்தது மட்டும் இல்லாமல் அதை ஒரு கலாச்சாரமாக பின்பற்றும் மக்களுக்கு நன்றி. எனது மகளின் பிறந்த நாளில் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் என தோன்ற வைத்ததிற்கு மிக மிக நன்றி./////

    நல்லது.அப்படியே செய்யுங்கள்! நன்றி!

    ReplyDelete
  25. //////sundinesh1 said...
    அய்யா வணக்கம். ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் . எனக்கு துலா லக்னம் ,துலா ராசி. 7,2 க்கு அதிபதி செவ்வாய் , 10 ல் நீச்சம் (ராசியில்) . அனால் நவாம்சத்தில் கும்ப லக்னம் , 12 ல் செவ்வாய் உச்சம் . ராசியில் நீச்சம் ஆனது சரி ஆகிவிட்டதா ?? . கேட்பதற்கு காரணம் : 12 ல் செவ்வாய் அமைந்து உள்ளது.//////

    அம்சத்தில் உச்சம் பெற்றதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அதே போல அம்சத்தில் உச்சம்பெற்றும் 12ல் அமர்ந்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். பலன்கள் குறைந்து விடும்!

    ReplyDelete
  26. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Arumai Sir. Thangal Pani sirakka iravanidam vendugiren.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  27. ////kannan said...
    Iyaaaaaaaaaaaaaaaaaaaa!
    Guruveeeeeeeeeeeeeeeee!
    Vanakkam/////

    நன்றி கண்ணன்!

    ReplyDelete
  28. /////தமாம் பாலா (dammam bala) said...
    வானம் பார்த்த தமிழ் பூமியில்
    ஞானம் நிறைந்தோர் மத்தியில்
    பரந்தாமன் புத்தகத்தை சடுதியில்
    பரந்தமனத்துடன் மணவிடுதியில்
    பரிசளித்த ஆசானுக்கரிது துயில்
    உபரியாய் அவரன்பின் மிகுதியில்
    நமது மனமும் பெருமகிழ்ச்சியில்
    ராம/பக்த ஜாதகமும் நம் கையில்!
    என்றோ ஒருநாள் வந்தாலும்
    நன்றி மறவாத மாணவன்
    அன்றில் பறவை/தமாம் பாலா/////

    நன்றி பாலா! உங்கள் அன்பிற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!

    ReplyDelete
  29. இந்த சுழல்லே மீண்டு இப்போதான் கொஞ்சம் relieve ஆனேன்.

    ReplyDelete
  30. இங்கே எல்லா வீட்டிலேயுமே நெட் connection இருப்பதனாலே optical கேபிள் updation நடக்குது. முதல்ல ADSL . NTT என்று (நம்ம ஊரு BSNL போலே) companyலேர்ந்து லைன் மட்டும் கடன் வாங்கி பிரைவேட் ISP (internet service providers ) தொழில் நடத்துகிறார்கள். YahooBB ,FLETS ,KDDI ,NIFTY என்று ஒரு லிஸ்ட் ..இதிலேFLETS கம்பெனி NTT நேரடியாக நடத்தும் செர்விஸ்.எனவே YahooBB க்கு என்று quota ஓவர் என்று NTT monopoly ஸ்டைலுக்கு ட்ரை பண்ணுவதால் இந்தப்பாடு. இதிலே YahooBB லே இந்தியாவுடன் பேச உபயோகிக்கும் டெலிபோன் கார்டு schemeலே கொஞ்சம் அதிக பட்ச சலுகை.ரூ.1500க்கு ஒரு கார்டு வாங்கினால் 18 மணி நேரம் பேசலாம்.அதனால் பொறுத்திருந்து YahooBB யையே டார்கெட் பண்ணி புடிச்சுட்டேன். அதான் இவ்வளோ லேட்.

    ReplyDelete
  31. வணக்கம் சாமி.வணக்கம்.
    யாவரும் நலமே.
    இங்கே foreigner க்கு வீடு வாடகைக்கு கிடைப்பது பெரும்பாடு.(even for japanese esp. nowadays just because of the deep impact of recession.)
    எதைத் தொட்டாலும் guarantor தொல்லை.வீடு வாடகைக்கு என்றால் ரூ .25000 to ரூ. 30000 வரை மாத வாடகை வீட்டுக்கு ஆரம்ப தொகையாக 5 மடங்கு (கிட்டத்தட்ட ஜப்பானில் எங்குமே டபுள் ரூம் வீட்டுக்கு இந்த நிலைதான்.இது கொஞ்சம் tokyo outskirt range (outskirtவார்த்தையை தமிழ்படுத்தினால் வெளிப்பாவாடை என்று கொஞ்சம் வித்தியாசமான வார்த்தையாக மாறிவிடும் அபாயம்). இந்த
    தொகை அப்படியே ஸ்வாஹா.(நம்ம ஊரு குத்தகை,லீஸ் டைப் இல்லை)2 வருட ஒப்பந்தம்.வெளியேறும் பட்சத்தில்சுவற்றில் கீறல் தரையில் பள்ளம் என்று கணக்குப்போட்டு 3 to 5 லட்சங்கள் காலியாகும் அபாயம் இருப்பதால் guarantee யாரும் கொடுப்பதில்லை.humanresources deputation கம்பெனீஸ் மட்டுமே(இதை வைத்தே பிழைப்பு நடத்துவதால்)
    guarantee கொடுப்பார்கள். contract period ஐ கணக்குப்பண்ணி.

    ReplyDelete
  32. நான் அந்த ஸ்டைலில் இருந்து தப்பித்து நேரடி japaneese கம்பெனியிலே வேலை செய்வதால் இந்த மாதிரி விஷயங்களிலே japanese
    போலவே treat பண்ண முனைகிறார் என் கம்பெனி president (அவர்தான் முதலாளியும் கூட).கடைசியில் அவரே ஒரு வகையாக முடிவுக்கு வந்து guarantee கொடுக்கிறேன் என்று சொல்லும்போது எனக்கு அதை பெற்று கொள்ளும் விருப்பம் வெறுப்பாக மாறிவிட்டது.நானே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.வேறு வகை இன்சுரன்ஸ் கம்பனிகள் போன்று இந்த guarantee கொடுக்கும் கம்பெனி விசாரித்து அதற்கு பணம் செலுத்தி இப்படி புது வீட்டுக்கு குடி பெயர்ந்திருக்கிறேன்.
    வாடகைக்கே இந்த கதி என்றால் சொந்த வீட்டுக்கு 1crore ரூ.க்கு மேலே 1000sq.ft ரேஞ்சு individual வீட்டுக்கு.நான் இருக்கும் areaviலே . areaவை பொறுத்து variations உண்டு.(detail விவரம் அடுத்தடுத்து)
    so சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தப் பாடு.
    அதுவும் ஏதோ ரிஷப ராசிக்கு 4லேர்ந்து 5க்கு வந்த சனி பகவான் புண்ணியத்திலே இந்த இடப்பெயர்ச்சி.கரெக்டா செப் 26 சனிப்பெயர்ச்சி.நான் அக்ட்.1லெ வீடு மாறினேன். அதோட சேந்து மனைவியின் (துலாம் ராசி - ஏழரை சனி துவக்கம் ) hospital விரயமாக ஒரு 2லட்சம் ஒரே மாசத்திலே போச்சு.
    இந்த சுழல்லே மீண்டு இப்போதான் கொஞ்சம் relieve ஆனேன்.

    ReplyDelete
  33. Newly built 38-story high-rise condominium at the redevelopm...

    Property City Tower Azabu-juban 13F
    Address 1, Mita, Minato-ku, Tokyo
    Price ¥108,000,000
    =Rs 5.4Cr(apprx)
    Plan 3BR
    Ownership Freehold
    Floor Area 78.12 sq.m.(23.63 tsubo)
    Completion August, 2009

    Other one\\\\
    This building is designed to blend in with Kagurazaka town s...

    Property Kagurazaka Minamimachi Apartment 1-3F
    Address Minamicho, Shinjuku-ku, Tokyo
    Price ¥66,800,000 =Rs 3.34Cr(apprx)
    Plan 2BR(Parking available)
    Ownership Freehold
    Floor Area 84.74 sq.m.(25.63 tsubo)
    Completion February, 2007


    These are some examples of flat/
    Apartment style houses in central areas of Tokyo metro.corp.
    search made thru godgoogle..
    courtesy:
    http://www.realestate-tokyo.com/sale/hot/index.aspx?area=8

    ReplyDelete
  34. ////minorwall said...
    இந்த சுழல்லே மீண்டு இப்போதான் கொஞ்சம் relieve ஆனேன்./////

    தொடர்ந்து ஐந்து பின்னூட்டங்களா மைனர்? சுழலில் இருந்து மீண்டு வந்த சந்தோஷம் பின்னூட்டங்களில் தெரிகிறது!

    ReplyDelete
  35. ////minorwall said...
    இங்கே எல்லா வீட்டிலேயுமே நெட் connection இருப்பதனாலே optical கேபிள் updation நடக்குது. முதல்ல ADSL . NTT என்று (நம்ம ஊரு BSNL போலே) companyலேர்ந்து லைன் மட்டும் கடன் வாங்கி பிரைவேட் ISP (internet service providers ) தொழில் நடத்துகிறார்கள். YahooBB ,FLETS ,KDDI ,NIFTY என்று ஒரு லிஸ்ட் ..இதிலேFLETS கம்பெனி NTT நேரடியாக நடத்தும் செர்விஸ்.எனவே YahooBB க்கு என்று quota ஓவர் என்று NTT monopoly ஸ்டைலுக்கு ட்ரை பண்ணுவதால் இந்தப்பாடு. இதிலே YahooBB லே இந்தியாவுடன் பேச உபயோகிக்கும் டெலிபோன் கார்டு schemeலே கொஞ்சம் அதிக பட்ச சலுகை.ரூ.1500க்கு ஒரு கார்டு வாங்கினால் 18 மணி நேரம் பேசலாம்.அதனால் பொறுத்திருந்து YahooBB யையே டார்கெட் பண்ணி புடிச்சுட்டேன். அதான் இவ்வளோ லேட்.////

    ஆகா, பெற்றோர்களுடன் பேசி மகிழ அந்த அட்டையைப் பயன் படுத்துங்கள்! நன்றி!

    ReplyDelete
  36. /////minorwall said...
    வணக்கம் சாமி.வணக்கம்.
    யாவரும் நலமே.
    இங்கே foreigner க்கு வீடு வாடகைக்கு கிடைப்பது பெரும்பாடு.(even for japanese esp. nowadays just because of the deep impact of recession.)
    எதைத் தொட்டாலும் guarantor தொல்லை.வீடு வாடகைக்கு என்றால் ரூ .25000 to ரூ. 30000 வரை மாத வாடகை வீட்டுக்கு ஆரம்ப தொகையாக 5 மடங்கு (கிட்டத்தட்ட ஜப்பானில் எங்குமே டபுள் ரூம் வீட்டுக்கு இந்த நிலைதான்.இது கொஞ்சம் tokyo outskirt range (outskirtவார்த்தையை தமிழ்படுத்தினால் வெளிப்பாவாடை என்று கொஞ்சம் வித்தியாசமான வார்த்தையாக மாறிவிடும் அபாயம்). //////

    outskirt = புறநகர்ப்பகுதி!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ////இந்தத்தொகை அப்படியே ஸ்வாஹா.(நம்ம ஊரு குத்தகை,லீஸ் டைப் இல்லை)2 வருட ஒப்பந்தம்.வெளியேறும் பட்சத்தில்சுவற்றில் கீறல் தரையில் பள்ளம் என்று கணக்குப்போட்டு 3 to 5 லட்சங்கள் காலியாகும் அபாயம் இருப்பதால் guarantee யாரும் கொடுப்பதில்லை.humanresources deputation கம்பெனீஸ் மட்டுமே(இதை வைத்தே பிழைப்பு நடத்துவதால்)
    guarantee கொடுப்பார்கள். contract period ஐ கணக்குப்பண்ணி./////

    கொள்ளை என்பது எல்லா நாட்டு மக்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கிறது!:-))))
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  37. /////minorwall said...
    நான் அந்த ஸ்டைலில் இருந்து தப்பித்து நேரடி japaneese கம்பெனியிலே வேலை செய்வதால் இந்த மாதிரி விஷயங்களிலே japanese
    போலவே treat பண்ண முனைகிறார் என் கம்பெனி president (அவர்தான் முதலாளியும் கூட).கடைசியில் அவரே ஒரு வகையாக முடிவுக்கு வந்து guarantee கொடுக்கிறேன் என்று சொல்லும்போது எனக்கு அதை பெற்று கொள்ளும் விருப்பம் வெறுப்பாக மாறிவிட்டது.நானே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.வேறு வகை இன்சுரன்ஸ் கம்பனிகள் போன்று இந்த guarantee கொடுக்கும் கம்பெனி விசாரித்து அதற்கு பணம் செலுத்தி இப்படி புது வீட்டுக்கு குடி பெயர்ந்திருக்கிறேன்.
    வாடகைக்கே இந்த கதி என்றால் சொந்த வீட்டுக்கு 1crore ரூ.க்கு மேலே 1000sq.ft ரேஞ்சு individual வீட்டுக்கு.நான் இருக்கும் areaviலே . areaவை பொறுத்து variations உண்டு.(detail விவரம் அடுத்தடுத்து)
    so சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தப் பாடு.
    அதுவும் ஏதோ ரிஷப ராசிக்கு 4லேர்ந்து 5க்கு வந்த சனி பகவான் புண்ணியத்திலே இந்த இடப்பெயர்ச்சி.கரெக்டா செப் 26 சனிப்பெயர்ச்சி.நான் அக்ட்.1லெ வீடு மாறினேன். அதோட சேந்து மனைவியின் (துலாம் ராசி - ஏழரை சனி துவக்கம் ) hospital விரயமாக ஒரு 2லட்சம் ஒரே மாசத்திலே போச்சு.
    இந்த சுழல்லே மீண்டு இப்போதான் கொஞ்சம் relieve ஆனேன்./////

    நீங்கள் சுழலில் இருந்து விடுபட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி மைனர்! மீண்டும் எந்த சுழலும் உங்கள் பக்கம் வராமலிருக்க அன்னை வேளாங்கன்னியைப் பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  38. /////minorwall said...
    Newly built 38-story high-rise condominium at the redevelopm...
    Property City Tower Azabu-juban 13F
    Address 1, Mita, Minato-ku, Tokyo
    Price ¥108,000,000
    =Rs 5.4Cr(apprx)
    Plan 3BR
    Ownership Freehold
    Floor Area 78.12 sq.m.(23.63 tsubo)
    Completion August, 2009
    Other one\\\\
    This building is designed to blend in with Kagurazaka town s...
    Property Kagurazaka Minamimachi Apartment 1-3F
    Address Minamicho, Shinjuku-ku, Tokyo
    Price ¥66,800,000 =Rs 3.34Cr(apprx)
    Plan 2BR(Parking available)
    Ownership Freehold
    Floor Area 84.74 sq.m.(25.63 tsubo)
    Completion February, 2007
    These are some examples of flat/
    Apartment style houses in central areas of Tokyo metro.corp.
    search made thru godgoogle..
    courtesy:
    http://www.realestate-tokyo.com/sale/hot/index.aspx?area=8//////

    வேண்டாம் சாமி! இந்தப் பணத்திற்கு காரைக்குடியில் தரைப் பகுதியில் இருக்கும்படியான சூப்பர் வீடாக இருபது வீடுகளை வாங்கிவிடலாம். சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊரு போலாகுமா? - --இளையராஜா

    ReplyDelete
  39. ////Blogger minorwall said...
    78.12sq.mt
    =840.88sq.ft////

    விளக்கத்திற்கு நன்றி!

    ReplyDelete
  40. காரைக்குடி கலாச்சாரம் தனிதான். சென்னையில் கல்யாண வீட்டில் சாப்பிட கூட கூப்பிட மாட்டார்கள்.
    சில விஷயங்களில் நம் நாடு எவ்வளவோ மேல். பிரான்ஸ் ஏர் போர்டில் இருந்து இந்தியாவிற்கு கூப்பிட தலைகீழாக நிற்க வேண்டியதாகிவிட்டது. நம் ஊர் போல் போன் வசதி இல்லை. நாம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து விட்டோம். வெகு நாள் முன் அனுமான் ஜாதகம் கேட்டிருந்தேன்.இப்போது கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  41. எல்லாத்தையுமே ஒரே பாராவாக upload பண்ணிப்பார்த்து நேத்து nightலேருந்து 10 தடவைக்கும் அதிகமாக ட்ரை பண்ணி பிளாக்கர் problem .bX-p43cdf errorcode.
    அதான் இப்பிடி ஸ்ப்ளிட் பண்ணி 5 பின்னூட்டமாக்கிட்டேன். workout ஆகிடுச்சு.
    உங்கள் கமெண்ட் அனைத்துக்கும் நன்றி.
    இதுலே என்ன காமேடின்னால் டோக்யோலே geologists are expedcting a major earthquake in the very near future..with a very high magnitude of 7-8 richter range.
    எல்லாமே multistory condo buildings ..
    TOKYO and its outlying cities are home to almost one-quarter of Japan’s 127 million people. Tokyo dominates Japan’s politics, arts, finance, trade, and communications, and accounts for a third of its wealth. Eighty years ago, the region suffered one of the world’s most destructive earthquakes, killing 143,000 people, destroying two-thirds of Tokyo, and all of Yokohama. The earthquake left $68 billion in property damage, ten times that wrought by the 1995 M=6.9 Kobe earthquake. Today, the population of greater Tokyo is six times larger than it was in 1923. To accommodate this growth, about 385 square kilometers of land rimming Tokyo Bay, or about a quarter of the bay, has been reclaimed for urban and industrial use. A repeat of the 1923 M=7.9 Kanto earthquake is estimated to cause 30-60,000 deaths 80-100,000 hospitalized injuries, and total economic losses of $2.1-3.3 trillion, comprised equally of property and business-interruption losses. Insured losses were estimated to be $31-36 பில்லியன்
    http://feww.wordpress.com/2009/05/18/earthquake-forecast-tokyo-japan/


    World's Largest Earthquake Shake Table Test in Japan

    A full-scale, seven-story wood-framed condominium tower not only survived a 7.5 magnitude earthquake, but it escaped with barely a scratch – just minor drywall damage. In July, Simpson Strong-Tie participated in an unprecedented research event to highlight the importance of earthquake-resistant construction around the world.

    pls. go thru this following site for clipings..

    http://www.strongtie.com/about/research/capstone.html

    ReplyDelete
  42. Hello sir,

    Mine is Viruchika lagnam...i am having parivarthana between 3rd(sani) and 9th lord(chandra). SO,it is Khahala yogam and it is induced by chandra(benefic).

    But i like to know whether because of parivarthana, sani in the 9th house can give good results and 9th house benefits?

    ReplyDelete
  43. ////krishnamoorthy said...
    காரைக்குடி கலாச்சாரம் தனிதான். சென்னையில் கல்யாண வீட்டில் சாப்பிட கூட கூப்பிட மாட்டார்கள்.
    சில விஷயங்களில் நம் நாடு எவ்வளவோ மேல். பிரான்ஸ் ஏர் போர்டில் இருந்து இந்தியாவிற்கு கூப்பிட தலைகீழாக நிற்க வேண்டியதாகிவிட்டது. நம் ஊர் போல் போன் வசதி இல்லை. நாம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து விட்டோம். வெகு நாள் முன் அனுமான் ஜாதகம் கேட்டிருந்தேன்.இப்போது கிடைத்தது. நன்றி.////

    ஒட்டு மொத்தமாக ஒரு ஊரைக் குறை சொல்ல முடியாது. நீங்கள் சொல்லும் அன்பர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள்! நன்றி!

    ReplyDelete
  44. /////minorwall said...
    எல்லாத்தையுமே ஒரே பாராவாக upload பண்ணிப்பார்த்து நேத்து nightலேருந்து 10 தடவைக்கும் அதிகமாக ட்ரை பண்ணி பிளாக்கர் problem .bX-p43cdf errorcode.
    அதான் இப்பிடி ஸ்ப்ளிட் பண்ணி 5 பின்னூட்டமாக்கிட்டேன். workout ஆகிடுச்சு.
    உங்கள் கமெண்ட் அனைத்துக்கும் நன்றி.
    இதுலே என்ன காமேடின்னால் டோக்யோலே geologists are expedcting a major earthquake in the very near future..with a very high magnitude of 7-8 richter range.
    எல்லாமே multistory condo buildings ..
    TOKYO and its outlying cities are home to almost one-quarter of Japan’s 127 million people. Tokyo dominates Japan’s politics, arts, finance, trade, and communications, and accounts for a third of its wealth. Eighty years ago, the region suffered one of the world’s most destructive earthquakes, killing 143,000 people, destroying two-thirds of Tokyo, and all of Yokohama. The earthquake left $68 billion in property damage, ten times that wrought by the 1995 M=6.9 Kobe earthquake. Today, the population of greater Tokyo is six times larger than it was in 1923. To accommodate this growth, about 385 square kilometers of land rimming Tokyo Bay, or about a quarter of the bay, has been reclaimed for urban and industrial use. A repeat of the 1923 M=7.9 Kanto earthquake is estimated to cause 30-60,000 deaths 80-100,000 hospitalized injuries, and total economic losses of $2.1-3.3 trillion, comprised equally of property and business-interruption losses. Insured losses were estimated to be $31-36 பில்லியன்
    http://feww.wordpress.com/2009/05/18/earthquake-forecast-tokyo-japan/
    World's Largest Earthquake Shake Table Test in Japan
    A full-scale, seven-story wood-framed condominium tower not only survived a 7.5 magnitude earthquake, but it escaped with barely a scratch – just minor drywall damage. In July, Simpson Strong-Tie participated in an unprecedented research event to highlight the importance of earthquake-resistant construction around the world.
    pls. go thru this following site for clipings..
    http://www.strongtie.com/about/research/capstone.html//////

    இறைவன் இருக்கிறார். பார்த்துக்கொள்வார் எனும் நம்பிக்கையில் வாழ வேண்டியதுதான்! உங்களின் விரிவான பின்னூட்டங்களுக்கு நன்றி மைனர்வாள்!

    ReplyDelete
  45. ////Vaalga valamudan-Saravanan said...
    Hello sir,
    Mine is Viruchika lagnam...i am having parivarthana between 3rd(sani) and 9th lord(chandra). SO,it is Khahala yogam and it is induced by chandra(benefic).
    But i like to know whether because of parivarthana, sani in the 9th house can give good results and 9th house benefits?//////

    பர்வர்த்தனைக்கான பலனை சனி கொடுப்பார். அவருடைய தசை/புத்திகளில் கொடுப்பார். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  46. /////Alasiam G said...
    Present Sir.////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  47. ஐயா வணக்கம் ,
    ஸ்வந்த ஊருக்கு போவது என்டாலே மகிழ்ச்சி , இதில் marriage வீட்டு எண்டால் டபுள் மகிழ்ச்சி , அதிலும் புத்தக பரிசு எண்டால் , நேனைதலே இனிக்குதே !!!
    எங்கயோ இருந்து பணத்துக்கு அக்க அல்லாம் miss பண்றோம்

    ReplyDelete
  48. /////Priya said...
    ஐயா வணக்கம் ,
    சொந்த ஊருக்கு போவது என்றாலே மகிழ்ச்சி , இதில் marriage வீடு என்றால் டபுள் மகிழ்ச்சி , அதிலும் புத்தக பரிசு என்றால் , நினைத்தாலே இனிக்குதே !!!
    எங்கயோ இருந்து பணத்துக்காக எல்லாவற்ரையும் miss பண்ணுகிறோம்//////

    உண்மைதான். பலர் பொருளீட்டலில் ஈடுபட்டு (தொழில்/வேலையால்) எத்ற்கும் நேரம் இல்லை என்கிறார்கள்.
    வாழ்வின் பல மகிழ்ச்சியான தருணங்களை அவர்கள் இழக்கிறார்கள். எதை எதை இழக்கிறோம் என்பதை அறியாமலேயே! நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com