"If you do not hope, you will not find what is beyond your hopes"படத்தைக் கர்சரால் அழுத்திப் பார்த்தால், அருமையான இந்த வாசகம் தெரியும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Yoga: Misfortune: அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!
’என்ன சார் அதிர்ஷ்டம் இல்லாமல் இருப்பது கூட யோகத்தில் வருமா?” என்று யாரும் கேட்க வேண்டாம். அது அவயோகக் கணக்கில் வரும். லட்சணமான பெண், லட்சணமில்லாத பெண் என்று இருவகையினர் இருப்பதைப்போல அல்லது அரவிந்தசாமி போன்ற தோற்றமுடைய ஆண்கள் அல்லது ஓமக்குச்சி நரசிம்மன் போன்ற தோற்றமுடைய ஆண்கள் இருப்பதைப்போல யோகத்திலும் இரண்டு வகைகள் உண்டு. நல்ல யோகம். அவயோகம்.
அதற்கு உதாரணத்தைக் கவியரசர் பாடலில் இருந்து தருகிறேன்.
”இளமைவரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான்
தனிமைவரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்”
இங்கே அவர் குறிப்பிட்டிருக்கும் பயணம், வாழ்க்கைப் பயணம்!
நல்லது கெட்டது கலந்ததுதான் வாழ்க்கை - இரவு பகலைப் போல!
அதைப்போல, அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்ததுதான் வாழ்க்கை. அதிர்ஷ்டமாகட்டும் அல்லது துரதிர்ஷ்டமாகட்டும், சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா/புத்திகளில் மட்டுமே பலனைக் கொடுக்கும். உங்கள் மொழியில் சொன்னால் வேலையைக் காட்டும்.
ஒரேயடியாக வாழ்க்கை முழுவதும் அதிர்ஷ்டத்தோடு அல்லது துரதிர்ஷ்டத்தோடு இருந்தவன் இல்லை!
இந்தியாவின்மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர், வாத நோயால் அவதிப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றால் இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். அதீத கோடிஸ்வரர்கள் பலர் பய உணர்வோடுதன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் தாதாக்கூட்டங்களால் அல்லது தீவிரவாதக் கும்பல்களால் கடத்தப் பட்டுவிடுவோமோ எனும் பய உணர்வு அவர்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும். அந்த பய உணர்வு, ப்ளாட்பாரத்தில் குடும்பம் நடத்துபவனுக்கு அல்லது அன்றாடம் காய்ச்சிக்குக் கிடையாது. அதை உணருங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதை போதும். பாடத்தைப் பார்ப்போம்!
யோகத்தின் பெயர்: அரிஷ்ட யோகம்:
அதற்கான கிரக அமைப்பு: பல அமைப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புக்களில் ஒன்று இருந்தாலும் ஜாதகத்தில் உள்ள நல்ல தன்மைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜாதகனுக்குப் பலவிதமான சிரமங்களை அது கொடுக்கும்.
தெரிந்தவரை சில அமைப்புக்களைக் கொடுத்துள்ளேன்.
.....................................................................................
1. 6, 8, 12ஆம் வீட்டுடன் அல்லது அதன் அதிபதியுடன், சேர்க்கை அல்லது பார்வையில் தீய கிரகங்கள் கூட்டு வைத்திருப்பது (Malefic associated with the 6th, 8th and 12th houses or their lords)
அதாவது குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் 6, 8, 12ஆம் வீட்டு அதிபதிகளாக இருந்து அந்த வீட்டை, சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஒன்று சேர்க்கை அல்லது பார்வையில் அவர்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது.
...........................................................
2. நீசமாக உள்ள அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3ம் அல்லது அதற்குக் கீழாகவும் பெற்றுள்ள சந்திரன் தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்
............................................................
3. ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்

4. எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்

5. பலவீனமாக உள்ள லக்கின அதிபதியை அல்லது சூரியனை தீய கிரகங்கள் பார்த்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்

6. லக்கினத்தில், சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகிய நால்வரில் ஒருவர் இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்
.............................................................
7. செவ்வாயும், சனியும் இரண்டாம் வீட்டில் இருக்க,ராகு மூன்றாம் வீட்டில் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
...............................................................
8. நான்காம் வீட்டில் ராகு, 6 அல்லது 8ஆம் வீட்டில் சந்திரன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

9. 7ல் செவ்வாய், 8ல் சுக்கிரன், 9ல் சூரியன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
..................................................................
10. 7 & 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
........................................................................
11. லக்கினாதிபதி தீய கிரகத்துடன் கூட்டாக இருந்தாலோ அல்லது லக்கினத்திற்கு இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது 7ஆம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தாலோ அது இந்த அமைப்பிற்குள் வரும்
.......................................................................
12. எட்டில் சனி, லக்கினத்தில் சந்திரன் அல்லது சுக்கிரன் (அல்லது சுக்கிரனும், சந்திரனும் சேர்ந்து 6 அல்லது 8ல் இருக்கும் நிலைப்பாடு) அது இந்த அமைப்பிற்குள் வரும்
......................................................................
13. சந்திரனும், புதனும் 6 அல்லது 8ல் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
+++++++++++++++++++++++++++++++++++++
பலன்: ஒரே சொல்; துரதிர்ஷ்டம் (Misfortune)
+++++++++++++++++++++++++++++++++++++
Duration of the misfortune: இந்த அமைப்பின் பலனால் அவதிப்பட வேண்டிய காலம்: சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசா/புத்திக் காலம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
பாடத்தைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். யாரும் உடனே பலத்த கவலைக்கு ஆளாகிவிட வேண்டாம். பலத்த யோசனையில் மூழ்கிவிட வேண்டாம்.
ஜாதகத்தில் நஷ்டஈடு வழங்கப் பெற்றிருக்கும். அது என்ன என்று பார்த்து அல்லது பார்க்காமல் அமைதி கொள்ளுங்கள். அதை எப்படி உறுதியாகச் சொல்கிறேன் என்றால் அனைவருக்கும் வாங்கி வந்த வரத்தின் மொத்த மதிப்பு (அதாவது ஜாதகத்தின் மதிப்பு) 337தான். அதை நினைவில் வையுங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
வேண்டுகோள்.
கடந்த 3 மாதங்களுக்குள் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விட்டது.
பின்னூட்டங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விட்டது.
எனக்கு நேரமின்மை இரண்டு மடங்காகி விட்டது
ஆகவே
1. தேவைப் பட்டால் மட்டுமே கேள்வி கேளுங்கள்.
2. பாடத்திற்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள்
3. உங்கள் ஜாதகத்தைவைத்து, கொக்கிக் கேள்விகளைக் கேட்காதீர்கள்
அந்த மாதிரிக் கேள்விகளுக்கு அனுமதி இல்லை.
ஆமாம், பின்னூட்டப் பெட்டிக்குக் காவல் போடப் பட்டுள்ளது.
ஆயிரம் மாணவர்களை வைத்துப் பாடம் நடத்தும் ஒரே வாத்தியார் நானாகத்தான் இருக்கும்! அதற்காக எனக்கு விருதுகள் வேண்டாம்.
என்னை நீங்கள் புரிந்து கொண்டு நடப்பதுதான் எனக்கு உண்மையான விருது!!!!!!!
---------------------------------------------------------------
புதிதாக வருபவர்களுக்கு, வந்துள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
1. வகுப்பறையில் 270 பாடங்கள் உள்ளன
2. ஆவண அறையில் 8 அடிப்படைப் பாடங்கள் உள்ளன (Link: http://vaaththiyar.blogspot.com/)
3. மின்னஞ்சல் வகுப்பில் 10 அலசல் பாடங்கள் உள்ளன
அவை அனைத்தையும் படித்து, மனதில் ஏற்றிக் கொண்ட பிறகு புதுப் பாடங்களுக்கு வாருங்கள். தற்சமயம் நடத்தப் படுபவை மேல் நிலைப் பாடங்கள். அவைகள் புரிவதற்கு நீங்கள் நான் சொன்ன 288 பாடங்களையும்
படிப்பது ஒன்றுதான் வழி. குறுக்கு வழியெல்லாம் கிடையாது. அதை மனதில் வையுங்கள்
இல்லையென்றால் 2ஆம் வாய்ப்பாடு தெரியாத குழந்தை ப்ளஸ் டூ வகுப்பில் சேர்ந்து பாடத்தைக் கவனிக்கும் நிலை உங்களுக்கு ஏற்படும்!
----------------------------------------------------------------
உங்கள் அனைவரையும் ஜோதிடத்தில் மேதை ஆக்குவது என் நோக்கமல்ல! ஜோதிடத்தை அறியத்தருவது மட்டுமே என் நோக்கம். நீங்கள் மேதையாவது உங்கள் கையில் இருக்கிறது.
அன்புடன்
வாத்தியார்,

வாழ்க வளமுடன்!

78 comments:
மிக்க நன்றி
nanri ayya.
present sir
'நேரம்மின்மை' ஒரு பெரிய குறைதான்...இருந்தும் பாடம் நடப்பது பெரிய சாதனைதான்
Thank you very much Sir.
Student...
Alasiam G
Thank you very much Sir.
Alasiam G
எனக்கு அதிர்ஷ்டத்திற்கான யோகமும் இருக்கிறது. அதிர்ஷ்டமின்மைக்கான யோகமும் இருக்கிறது. தாங்கள் சொல்வது போல் எல்லோர் ஜாதகத்திலும் இழப்பீடு என்பது இருக்கும்.
அய்யா இனிய காலை வணக்கம்,
அருமயான பாடம் உங்கள் நடையில் இனிமை....அய்யா நீங்கள் கொடுத்துள்ள அமைப்பில் பெரும்பாலான ஜாதகங்கள் அடங்கிவிடும் என்று நினைக்கிறேன் ,,,
நன்றி வணக்கம் ....
வணக்கம்...
இருநாட்களாக உடல்நிலை சரியில்லை ஐயா...அதனால் பின்னூட்டம் எழுத இயலவில்லை...
அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!
அருமையான் விளக்கம்,என்ன சொல்வது என்றே தெரியவில்லை....
வாழ்க வளமுடன்..
இந்த யோகம் மட்டும் எனக்கு ஜாதகத்திலும், நடைமுறையிலும் கச்சிதமாக பொருந்தும் என்று நினைக்கின்றேன். என் நேரம் சார் எல்லா கிரகங்களும் என்னை மட்டும் கூட்டனி போட்டு கும்மியடிக்கின்றார்கள். ச அடிக்கட்டும் எதோ அவங்களால முடிந்தது அதான். நன்றி சார்.
////Shyam Prasad said...
மிக்க நன்றி////
நல்லது. நன்றி!
////ALLINALL said...
present sir////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
/////Indian said...
nanri ayya./////
நல்லது. நன்றி!
/////Success said...
வணக்கம்...
இருநாட்களாக உடல்நிலை சரியில்லை ஐயா...அதனால் பின்னூட்டம் எழுத
இயலவில்லை...
அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!
அருமையான் விளக்கம்,என்ன சொல்வது என்றே தெரியவில்லை....
வாழ்க வளமுடன்..////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
////மதி said...
'நேரமின்மை' ஒரு பெரிய குறைதான்...இருந்தும் பாடம் நடப்பது பெரிய சாதனைதான்/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
///ananth said...
எனக்கு அதிர்ஷ்டத்திற்கான யோகமும் இருக்கிறது. அதிர்ஷ்டமின்மைக்கான யோகமும்
இருக்கிறது. தாங்கள் சொல்வது போல் எல்லோர் ஜாதகத்திலும் இழப்பீடு என்பது
இருக்கும்.////
நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனந்த்!
////Alasiam G said...
Thank you very much Sir.
Student...
Alasiam G////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
////பித்தனின் வாக்கு said...
இந்த யோகம் மட்டும் எனக்கு ஜாதகத்திலும், நடைமுறையிலும் கச்சிதமாக பொருந்தும்
என்று நினைக்கின்றேன். என் நேரம் சார் எல்லா கிரகங்களும் என்னை மட்டும் கூட்டனி
போட்டு கும்மியடிக்கின்றார்கள். அடிக்கட்டும் எதோ அவங்களால முடிந்தது அதான். நன்றி
சார்.////
மாஜிக் டானிக் 337 இருக்கிறதே. தினமும் காலை மாலை வேளைகளில் விடாமல் ஒவ்வொரு
ஸ்பூன் சாப்பிடுங்கள்! மனக்கவலை நோய் குணமாகிவிடும்!
////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்,
அருமயான பாடம் உங்கள் நடையில் இனிமை....அய்யா நீங்கள் கொடுத்துள்ள அமைப்பில்
பெரும்பாலான ஜாதகங்கள் அடங்கிவிடும் என்று நினைக்கிறேன் ,,,
நன்றி வணக்கம் ....////
நீங்கள் சொல்வது உண்மைதான்! அதனால்தான் அனைவருக்கும் மதிப்பெண் 337 எனும் கணக்கு சரியாக வரும்!
Sir, I enjoyed todays lesson! Quotes of kannadasan I really liked it! Thanks
Thanuja
நன்றி ஆசானே.
as per today lesson, 9 சூரியன், சிம்மத்தில் இருக்க(ஆட்சி)so அவயோகம் is nullified,is it rgட் to say no Good No bad- CONSIDERED சமம்.
உள்ளேன் ஐயா...எனக்கும் இருக்குதுல...
- சேர்மராஜ்
thx sir
Dear Sir,
Presnt for Today. Yet to read the Full informations.
Thanks
Saravana
///Thanuja said...
Sir, I enjoyed todays lesson! Quotes of kannadasan I really liked it! Thanks
Thanuja////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
////சிங்கைசூரி said...
நன்றி ஆசானே.
as per today lesson, 9 சூரியன், சிம்மத்தில் இருக்க(ஆட்சி)so அவயோகம் is nullified,is it rgட் to say no
Good No bad- CONSIDERED சமம்.////
வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!
////tamiltemples said...
உள்ளேன் ஐயா...எனக்கும் இருக்குதுல...
- சேர்மராஜ்///
மாஜிக் டானிக் 337 இருக்கிறதே! எதற்குக் கவலை?
////Sabarinathan Arthanari said...
thx sir////
நல்லது. நன்றி!
////Saravana said...
Dear Sir,
Presnt for Today. Yet to read the Full informations.
Thanks
Saravana/////
இத்துடன் விட்டதற்கு நன்றி முருகா!:-))))))
Looks like most of the people will have this yogam.....
thx
பாடம் அருமை குருவே..! ராசியில் தப்பினாலும் நவாம்சத்தில் மாட்டுவோம் போல..! நவாம்சத்தில் அவயோகம் இருக்குமானால் எந்த தள்ளுபடியும் கிடையாது..! சரிதானே குருவே?
லக்னாதிபதி அவர்கள் தீய கிரக சேர்க்கை, அவர்கள் அந்த லக்னத்துக்கு சுபராக இருந்தாலுமா?
சந்திரன் 6 அல்லது 8 இருந்து , அவர்கள் அந்த லக்னத்துக்கு அசுபரக இருந்தாலுமா?
Misfortune yoga is a good lesson.
But simha lagnam yogakaraka mars in 5 th place means trikona place.
Then how it will create the yoga?
But all are having same magic number: 337
So no problem.
"நீங்கள் மேதையாவது உங்கள் கையில் இருக்கிறது."
பாடம் அருமை.
பாடத்தின் கடைசி வரி
அருமையோ அருமை.
நன்றி அய்யா.
present
good lesson
Misfrtune yoga lesson is good.
But as you said all are having 337.
So no problem.
////Rama said... Misfortune yoga is a good lesson.
But simha lagnam yogakaraka mars in 5 th place means trikona place.
Then how it will create the yoga?
But all are having same magic number: 337
So no problem./////
அது பொதுவிதி. சிம்மலக்கினக்காரர்களுக்கு செவ்வாய் யோககாரகன். அவர்களுக்கு செவ்வாயின் இந்த அமைப்பில் இருந்து விதிவிலக்குக் கிடைக்கும்!
/////Rama said...
present
good lesson/////
வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!
////ceylonstar said...
Looks like most of the people will have this yogam.....
thx/////
நீங்கள் சொல்வது உண்மைதான் சிலோன் ஸ்டாரே!
/////k subraa said...
லக்னாதிபதி அவர்கள் தீய கிரக சேர்க்கை, அவர்கள் அந்த லக்னத்துக்கு சுபராக இருந்தாலுமா?/////
தீய கிரகம் எனும் போது, எப்படி சுபராக முடியும்? ஒரு நல்ல உதாரணத்துடன் கேள்வியை மீண்டும் கேளுங்கள்!
///RVC said...
பாடம் அருமை குருவே..! ராசியில் தப்பினாலும் நவாம்சத்தில் மாட்டுவோம் போல..! நவாம்சத்தில் அவயோகம் இருக்குமானால் எந்த தள்ளுபடியும் கிடையாது..! சரிதானே குருவே?////
100/100 சரிதான்!
/////thirunarayanan said...
"நீங்கள் மேதையாவது உங்கள் கையில் இருக்கிறது."
பாடம் அருமை.
பாடத்தின் கடைசி வரி
அருமையோ அருமை.
நன்றி அய்யா./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
வணக்கம் ஐயா
உள்ளேன் ஐயா!
"நீங்கள் மேதையாவது உங்கள் கையில் இருக்கிறது."
புரிகிறது ஐயா...
நிச்சயமாய் முயற்சிக்கிறேன் ஐயா.
ஐயா வணக்கம்
இன்றைய பாடம் தெளிவாக இருந்தது. எனக்கு லக்கினத்தில் சூரியன், 12 இல ராகு, இப்பதான் தெரியுது ஏன்னு ? யோகக்காரன் ?????
நன்றி
வாழ்த்துக்கள்
Dear Sir
Padam Arumai Sir
Loving Student
Arulkumar Rajaraman
குரு வணக்கம்,
அதிர்ஷ்டமின்மைக்கான யோகம் பாடம் வழக்கம் போல் அருமை
இந்த யோகம் நம் வகுப்பில் பலருக்கு இருக்கும்
என்பது என் தழ்மையான கருத்து...
கஷ்டப்படாமல் எந்த கல்லும் சிலையாகாது.
ஏர் உழும் போது வலி என்று நினைத்த எந்த நிலமும் விளைந்து நிற்காது.
இன்றைய கஷ்டம் தான் நாளைய வரலாறு
இன்றைய சந்தோஷம் எப்போதும் வரலாறு ஆகவே ஆகாது
சாதித்தவர்களில் பலபேர் கஷ்டபட்டவர்கள்தான்
(நமது குருவின் பொன் மொழி 337 இருக்க பயமேன்)
Ayya i have this avayogam..For me in Lagnam Saturn is exalted...and in 11th place Mercury,Moon,Mars,Venus combination...
Ayya is this applicable for Navamasam....
In Navamasam in Lagam ketu,Fifth place Sun and Mars,7th place Moon and Rahu..
Ayya is there any parikaram for this..
Please tell me...
பின்னுட்டத்திற்கு காவல் போட்டதிற்கு எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறேன். மதில் மேல் ஏறி வருவதற்கு ஏதேனும் வழி உண்டா?
Dear Sir
Padam Arumai Sir. Sollaponal Navamsamthan 70% velai seikiradhu. Rasi 30% velai seiykiradhu sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
அய்யா,
மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ஆகிய லக்னங்களுக்கு - 11 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி என்று படிது உள்ளேன்.
if sani is present in 11th house(Thula) and 9th place athipathy budhan budhi in Sani dasa will
give dangerous effect to natives father?
My father expired in the above mentioned Sani Dasa & Budhan bhudhi.
Thanks
Saravana
Present sir,
Your wording super. As per nature law none of them idiot none of them intellegent all are equal in front of nature.
Your lessons particularly misfortune yoga
to give courage to all of us.
Sankar
Karur
////Saravana said...
அய்யா,
மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ஆகிய லக்னங்களுக்கு - 11 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி என்று படித்து உள்ளேன்.
if sani is present in 11th house(Thula) and 9th place athipathy budhan budhi in Sani dasa will
give dangerous effect to natives father?
My father expired in the above mentioned Sani Dasa & Budhan bhudhi.
Thanks
Saravana/////
உங்கள் தந்தையாரின் ஜாதகத்தில், அவர்கள் இருவரில் ஒருவர் மாரக அதிபதியாக இருந்திருக்கலாம். அதனால், அவருடைய தசாபுத்தியில் மரணம் ஏற்பட்டிருக்கும்.
/////jadam said...
Present sir,
Your wording super. As per nature law none of them idiot none of them intellegent all are equal in front of nature.
Your lessons particularly misfortune yoga
to give courage to all of us.
Sankar
Karur////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
////ceylonstar said...
பின்னுட்டத்திற்கு காவல் போட்டதிற்கு எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறேன். மதில் மேல் ஏறி வருவதற்கு ஏதேனும் வழி உண்டா?//////
காவலுக்கு நிற்கும் ஆள், கூகுள் ஆண்டவர் கம்பெனியில் இருந்து வந்தவர். அதனால் நீங்கள் உள்ளே நுழைவதற்குச் சான்சே இல்லை!
////Arulkumar Rajaraman said...
Dear Sir
Padam Arumai Sir. Sollaponal Navamsamthan 70% velai seikiradhu. Rasi 30% velai seiykiradhu sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////
நல்லது. நன்றி!
/////Self Realization said...
Ayya i have this avayogam..For me in Lagnam Saturn is exalted...and in 11th place Mercury,Moon,Mars,Venus combination...
Ayya is this applicable for Navamasam....
In Navamasam in Lagam ketu,Fifth place Sun and Mars,7th place Moon and Rahu..
Ayya is there any parikaram for this..
Please tell me...////
இறைவழிபாடு ஒன்றுதான் பரிகாரம் !
/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Padam Arumai Sir
Loving Student
Arulkumar Rajaraman////
வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!
/////Chiruthuli said...
குரு வணக்கம்,
அதிர்ஷ்டமின்மைக்கான யோகம் பாடம் வழக்கம் போல் அருமை
இந்த யோகம் நம் வகுப்பில் பலருக்கு இருக்கும்
என்பது என் தழ்மையான கருத்து...
கஷ்டப்படாமல் எந்த கல்லும் சிலையாகாது.
ஏர் உழும் போது வலி என்று நினைத்த எந்த நிலமும் விளைந்து நிற்காது.
இன்றைய கஷ்டம் தான் நாளைய வரலாறு
இன்றைய சந்தோஷம் எப்போதும் வரலாறு ஆகவே ஆகாது
சாதித்தவர்களில் பலபேர் கஷ்டபட்டவர்கள்தான்
(நமது குருவின் பொன் மொழி 337 இருக்க பயமேன்)////
அதானே.மனத்துணிவோடு இருங்கள்! அதைவிட வேறு என்ன வேண்டும்?
///T K Arumugam said...
ஐயா வணக்கம்
இன்றைய பாடம் தெளிவாக இருந்தது. எனக்கு லக்கினத்தில் சூரியன், 12 இல ராகு, இப்பதான் தெரியுது ஏன்னு ? யோகக்காரன் ?????
நன்றி
வாழ்த்துக்கள்////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Kumares said...
வணக்கம் ஐயா
உள்ளேன் ஐயா!
"நீங்கள் மேதையாவது உங்கள் கையில் இருக்கிறது."
புரிகிறது ஐயா...
நிச்சயமாய் முயற்சிக்கிறேன் ஐயா.////
புரிதலுக்கு நன்றி!
vanakkam saar.
raasi sakkaraththil athipaththiyam
mukkiyama,alladu eyarkai supar,papar
mukkiyama?.e.ka.thanusukku 2el sany,
sevvay,dulaamkku 5elsany,sevvay,nala
palan tharuma alladu avayokaththai
tharuma?thayavu vilakkavum.naan rem
pa kaalathamatham mannikkavum.en sulnilaithaan kaaranam saar.nantry.
valkavalamudan.
aryboy.
////aryboy said...

aryboy./////
சைடு பாரில் தமிழ் எழுதி உள்ளது. அல்லது NHM writer என்னும் தமிழில் எழுத உதவும் மென் பொருள் இணையத்தில் இலவசமாமக் கிடைக்கிறது. அதைப் பயன் படுத்துங்கள். அல்லது சுத்தமான ஆங்கிலத்தில் எழுதுங்கள். இப்படித் தங்கிலீஷில் எழுதினால் படிப்பதற்கு நெருடலாக உள்ளது!
ஐயா வணக்கம்,
ரொம்ப நன்றி பாடம் நல்லாயிருந்தது. நேற்று நீங்க அந்த புகைபடங்களில் ஏன் முன்வரிசையில் அமரவில்லை மேலும் ஏன் அடியவன் என்று சொல்றிங்க வாத்தியார் என்று சொல்லுங்க இனிமே ஐயா. என்னுடைய சந்திர தசை சனி புத்தியில் அப்பா செத்துட்டார் மார்ச் 24ந் தேதி 2009 சனி புத்தியும் இறுதி சட்ங்கும் துல்லியம்மா முடிந்தது ஐந்து நாட்களுக்கு பிற்கு புதன் புத்தி ஆரம்பித்தது. தொந்தரவுக்கு மன்னிக்கவும் அவயோகம் ரொம்ப இருக்கிறது கவலையில்லை காரணம் அம்ச,ருச்சுக,மாள்விய,பத்ர,புத ஆதித்ய யோகம்
வர்கோத்தம ராகு,கேது,புதன்,சந்திரன்,மாந்தி நல்லது செய்யும் ஐயா.
அடியவள்
சுந்தரி
ஆ மற்ந்து விட்டேன் புத்தகம் அனுப்பிட்டிங்களா?.
Sorry..typed the cooment in TANGLISH.
*** WE have the good fortune to hear and learn from your class ..I think that is enough...****
மிகவும் எழுமை ......வாழ்க உங்கள் தொண்டு...
நீசன் அனா சந்திரன் சனியை பார்க்கிறார் , எனக்கு இப்போழுது எல்லாம் கவலை இல்லை ,உங்கள் வகுப்பில் வந்த பின் மந்திர வார்த்தை 337 மனதை கவலை படாதே என்று அறுதல் சொல்லும்

இந்த தன்னம்பிக்கைதான்
நமது தாரக மந்திரம்.
சுந்தரி அம்மாவிற்கு வாழ்த்துக்கள்
நல்லா தமிழில் எழுத கத்துகிட்டீங்க.
உங்கள் இந்த முயற்சிக்கு என்னுடைய
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
காவலுக்கு நிற்கும் ஆள், கூகுள் ஆண்டவர் கம்பெனியில் இருந்து வந்தவர். அதனால் நீங்கள் உள்ளே நுழைவதற்குச் சான்சே இல்லை!
சூப்பர் அய்யா.
/////sundari said...
ஐயா வணக்கம்,
ரொம்ப நன்றி பாடம் நல்லாயிருந்தது. நேற்று நீங்க அந்த புகைபடங்களில் ஏன் முன்வரிசையில்
அமரவில்லை மேலும் ஏன் அடியவன் என்று சொல்றிங்க வாத்தியார் என்று சொல்லுங்க இனிமே ஐயா.
என்னுடைய சந்திர தசை சனி புத்தியில் அப்பா செத்துட்டார் மார்ச் 24ந் தேதி 2009 சனி புத்தியும் இறுதி
சடங்கும் துல்லியம்மா முடிந்தது ஐந்து நாட்களுக்கு பிறகு புதன் புத்தி ஆரம்பித்தது. தொந்தரவுக்கு
மன்னிக்கவும் அவயோகம் ரொம்ப இருக்கிறது கவலையில்லை காரணம் அம்ச,ருச்சுக,மாள்விய,பத்ர,புத
ஆதித்ய யோகம் வர்கோத்தம ராகு,கேது,புதன்,சந்திரன்,மாந்தி நல்லது செய்யும் ஐயா.
அடியவள்
சுந்தரி
ஆ மற்ந்து விட்டேன் புத்தகம் அனுப்பிட்டிங்களா?.////
புத்தகம் சனிக்கிழமை கிடைக்கும். பொறுத்திருங்கள்!
////Priya said...
மிகவும் எளிமை ......வாழ்க உங்கள் தொண்டு...
நீசன் அனா சந்திரன் சனியை பார்க்கிறார் , எனக்கு இப்போழுது எல்லாம் கவலை இல்லை ,உங்கள்
வகுப்பில் வந்த பின் மந்திர வார்த்தை 337 மனதை கவலை படாதே என்று அறுதல் சொல்லும்///
எழுதுவதன் மூலம் அனைவருக்கும் தன்னம்பிக்கை கொடுப்பதுதான் என்னுடைய முதல் பணி1
/////மிஸ்டர் அரட்டை said...
Sorry..typed the cooment in TANGLISH.
*** WE have the good fortune to hear and learn from your class ..I think that is enough...****////
நீங்கள் சொன்னால் சரிதான்!
///thirunarayanan said...
காவலுக்கு நிற்கும் ஆள், கூகுள் ஆண்டவர் கம்பெனியில் இருந்து வந்தவர். அதனால் நீங்கள் உள்ளே
நுழைவதற்குச் சான்சே இல்லை!
சூப்பர் அய்யா.////
உண்மையைத்தான் சொன்னேன். உண்மை எப்போதும் பளிச் சென்று இருக்கும்!
////thirunarayanan said...
நீசன் அனா சந்திரன் சனியை பார்க்கிறார் , எனக்கு இப்போழுது எல்லாம் கவலை இல்லை ,உங்கள்
வகுப்பில் வந்த பின் மந்திர வார்த்தை 337 மனதை கவலை படாதே என்று அறுதல் சொல்லும்
இந்த தன்னம்பிக்கைதான்
நமது தாரக மந்திரம்.////
நல்லது.நன்றி திருநாராயணன்!
குறியீ13 ட்டில் 2 எனக்குப் பொருந்துகிறது. செவ்வேள் அருளால் பெரிய பாதிப்பு இல்லாமல் இப்பிறப்பில் தப்பித்துவிட்டேன்.கடக லக்னம் கடகராசி ஆனதால் செவ்வாபுதுமை. நன்றி அய்யாய் யோககாரகனாக ஆனதால் அவர் 12ல் அமர்ந்தும் பார்வையை 6ம் இடத்திற்கு செலுத்தியும் பெரிய பாதிப்பு இல்லை.வழக்கம் போல பாடம் எளிமை, அருமை,!!
வனக்கம் ஐயா,பாடம் நன்றாக இருந்தது
///rnsaravana said...
வணக்கம் ஐயா,பாடம் நன்றாக இருந்தது////
நன்றி நண்பரே!
/////kmr.krishnan said...
குறியீ13 ட்டில் 2 எனக்குப் பொருந்துகிறது. செவ்வேள் அருளால் பெரிய பாதிப்பு இல்லாமல் இப்பிறப்பில் தப்பித்துவிட்டேன்.கடக லக்னம் கடகராசி ஆனதால் செவ்வாபுதுமை. நன்றி அய்யாய் யோககாரகனாக ஆனதால் அவர் 12ல் அமர்ந்தும் பார்வையை 6ம் இடத்திற்கு செலுத்தியும் பெரிய பாதிப்பு இல்லை.வழக்கம் போல பாடம் எளிமை, அருமை,!!/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி சார்!
Post a Comment