மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

20.11.09

Lesson: Mutual aspect and mutual exchange!: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson: Mutual aspect and mutual exchange!: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!

ஒரு திரைப்படத்தில், நடிகர் பாண்டியராஜன் மாணவராக வருவார். வகுப்பில் ஆசிரியர், அன்பிற்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கும்போது, இப்படிப் பதில் சொல்வார்:

“சார், உங்கள் பெண்ணிற்கு நீங்கள் லெட்டர் எழுதினா, அது அன்பு. நான் எழுதினா, அது காதல்!”

அதுபோல, கிரகங்களின் பரஸ்பர பார்வைக்கும் (mutual aspect) பரிவர்த்தனைக்கும் (mutual exchange of places) வித்தியாசம் உண்டு!

பரஸ்பர பார்வை என்பது அன்பு. பரிவர்த்தனை என்பது காதல்.

காதலில், காதலர்கள் இருவருமே நேசம் மிகுந்தவர்களாக, விசுவாசமிக்கவர் களாக, ஒத்த மனப்பான்மை உடையவர்களாக இருந்தால் காதல் திருமணத்தில் முடியும். வாழ்க்கை ஒளி மயமாக இருக்கும்.

அதுபோல பரிவத்தனையாகும் கிரகங்கள் இருவருமே சுபக்கிரகங்களாக இருந்தால், அவர்கள் பரிவர்த்தனையான வீட்டிற்கான பலன்கள் அசத்தலாக இருக்கும். ஜாதகனின் வாழ்க்கை அந்த இரண்டு வீடுகளைப் பொறுத்தவரை அற்புதமாக இருக்கும்

காதலர்கள் இருவரில், ஒருவர் வேஷக்காரராக, வில்லத்தனம் மிகுந்தவராக இருந்தால் காதலின் முடிவு அல்லது அவர்களின் மண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்
+++++++++++++++++++++++++++++++++
சரி, காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் என்பவர்களுக்கு, வேறு உதாரணம் சொல்கிறேன்.

பரஸ்பர பார்வை:
1
உங்கள் நண்பர் - அதாவது உங்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், அன்பு மிக்கவர், உங்கள் மேல் பிரியமுள்ளவர், உங்கள் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்?
2.
உங்களுக்கு வேண்டாத விரோதி எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்?

பரிவர்த்தனை:
1. மிகவும் செல்வாக்கு, சொல்வாக்கு, பண பலம் மிகுந்த நண்பர் உங்களுக்குத் தொழிலில் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்?

2.உங்கள் விருப்பத்திற்கு மாறாக, தீயவன் ஒருவன், ஏமாற்றிக் கவிழ்க்கக் கூடியவன் ஒருவன் உங்களுக்குக் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்?
+++++++++++++++++++++++++++++++++
கோள்களின் பரஸ்வர பார்வையாலும், பரிவர்த்தனையாலும் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றிய விரிவான பாடம் அடுத்த பாடம். பாடத்தின் தலைப்பு: கிரகங்களின் பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும் (Mutual aspect and exchange of planets)

அது மேல் நிலைப் பாடம். மின்னஞ்சல் பாடமாக வரும்!
++++++++++++++++++++++++++++++++++

“வாத்தி (யார்) எப்போது அது வரும்?”

”மூன்று நாட்கள் கழித்து 24.11.2009 செவ்வாய்க்கிழமையன்று வரும்”

”ஏன் அப்படி?”

”இடையில் மூன்று நாட்கள் வாத்தியார் வெளியூர் செல்வதால் வகுப்பறைக்கு விடுமுறை!”

“சரி, அதை ஏன் இப்போதே சொல்லி, எங்களைச் சஸ்பென்ஸில் வைத்துவிட்டுப் போகிறீர்கள்?”

“பத்திரிக்கைகளுக்குக் கதைகள் எழுதி எழுதி, அடுத்தவர்களை சஸ்பென்சில் வைப்பது வாத்தியாருக்குக் பழகிவிட்டது. ஆகவே குறுகுறுப்போடு பொறுத்திருங்கள். பாடம் சுவையாக இருக்கும்!”
........................................................................
வகுப்பறை பதிவேட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,012
மின்னஞ்சல் வகுப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 760 மட்டுமே!
மீதம் உள்ளவர்களுக்குப் பாடம் வேண்டாமா?
உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தெரிந்தால்தானே பாடங்களை அனுப்ப முடியும்?

ஆகவே இதுவரை மின்னஞ்சல் பாடங்கள் கிடைக்காதவர்கள், தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வாத்தியாருக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

gmail contacts folderல் வருகின்ற பெயர்களைச் சேர்ப்பதற்கு (வாத்தியாரின் பல வேலைகளுக் கிடையே) இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும். ஆகவே தெரிவித்த பிறகு மூன்று நாட்கள் பொறுமை காக்க வேண்டும். அதையும் மனதில் வையுங்கள்

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
........................................................................
அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

106 comments:

Shyam Prasad said...

மிக்க நன்றி

rajesh said...

Eagerly waiting for tat lesson, sir.

DHANA said...

நன்றி ஐயா!

ananth said...

என் ஜாதகத்தில் கிரகங்கள் பரஸ்பர பார்வை இருக்கிறது. பரிவர்தனை இல்லை. என் மனைவிக்கு இரண்டும் இருக்கிறது. பலன்கள் எப்படி என்று செவ்வாய் கிழமை படித்துத் தெரிந்து கொள்கிறேன்.

sury said...

For me, rishaba lagna, 3rd house lord chandra is in 12th, 12th house lord mars is in 3rd. Therefore, parivarthanam very much.Added to that, the planet mars is in kendra position to chandra, with which it has swapped its position. Does it have any significance?
Subbu rathinam.

Thanuja said...

Present Sir,

Thanks
Thanuja

Saravana said...

அய்யா,

வகுப்புக்கு ஆஜர்!!!!

கீழ்படிந்த மாணவன்
சரவணா
(வாத்தியாரின் ஊரில் இருந்து, ஹா ஹா ஹா)

சிங்கைசூரி said...

மிக்க நன்றி ஆசானே.

Success said...

வணக்க்க்க்ம்....

உங்கள் பரஸ்பர பார்வை மீண்டும், வகுப்பறையில் பதியும் வரை குறுகுறுப்போடு பொறுத்திருக்கும்
உங்கள் மாணவன்.....

(நீண்ட வணக்கதிற்கு காரணம் நீங்கள் நீண்ட விடுப்பு எடுப்பதால்)

மூன்று நாட்கள் வெளியூரில், பயணம் இனிதாகவும், ஹாட்ரிக் வெற்றியுடன் அமைய அம்பாளின் அருளை வேண்டுகிறேன்....

நன்றி...

பித்தனின் வாக்கு said...

நல்ல நகைச் சுவையுடன் கூடிய நல்ல பதிவு. நன்றி அய்யா.
மின் அஞ்சலுக்காக காத்துள்ளேம். நன்றி.

Uma said...

மின் அஞ்சலுக்காக காத்துள்ளேம். நன்றி.

maharaja said...

hiya leave! leave !

sridhar said...

ok sir

Alasiam G said...

அன்பும் கனிவும் கொண்ட ஆசானுக்கு,
தங்களின் பாடங்களுக்காகக் காத்திருப்பேன்.

உங்களின் இந்த சேவைக்கு
எப்படி நன்றி கூறுவது என்றேத் தெரியவில்லை.
ஜோதிடத்தை மற்றவர்கள் கூற கேட்டு
அதில் உண்மை இருந்தாலும், ஒரு சந்தேகம்,
குழப்பத்துடனே இருக்கவேண்டிய நிலையை
முற்றிலுமாக மாற உங்களின்
சுவைமிகுந்த பாடங்களின் வழியே
எங்கள் ஜோதிட அறிவை பெருக்க,
திறக்க செய்த,எங்கள் நல்ல
குருவிற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
ஐயா நீங்கள் இன்னும் சீரும் சிறப்பும்,
பெரும் புகழும் பெற்று நீடுடி வாழ
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
அ(இ)ந்த இறைவனை!
வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்க நீவிர்! வளர்க உமது சீரியத் தொண்டு!!.

RVC said...

thanks for the email-lesson sir. waiting for -mutual aspect and exchange lesson.

Thanuja said...

வணக்கம் சார்,
ஈமெயில் பாடம் கிடைச்சிது, இந்த பாடம் படிச்சிகிட்டே இருக்கனும் போல இருக்கு. Thank u sir! எனக்கு ஒரு கேள்வி, நீங்க பரல்ஸ் 30 இந்த வீடுல 1,2,6,8,9,11,12 இருந்தா நல்லது. ஆனால் அது எப்படி டுச்தன வீடில நிறைய பரல்ஸ் இருந்தா how does it benefit? Because 6,8,12 houses with more parals be helpful?
Thanks
Thanuja

Chiruthuli said...

குரு வணக்கம்,


பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!" பாடம் அருமை


அன்புடன்
சிறுதுளி

Kumares said...

வணக்கம் ஐயா
காத்திருக்கிறேன் மிகவும் ஆவலோடு...

jadam said...

Present sir!

Awaiting emial lesson.

Have a nice holiday!

Alasiam G said...

அஷ்டவர்க்க அவசியம் பற்றிய பாடம் (ஜோதிடப்பாடம் ),
கிடைக்கப் பெற்றேன். இது பரஸ்பரப் பார்வை மற்றும் பரிவர்த்தனை பாடத்திற்கான அடிப்படை என நினைக்கிறேன். அதனால் தான் முன்னோட்டப் பாடமாக வந்துள்ளதாக நினைக்கிறேன். அஷ்டவர்க்கப் பாடத்திற்கு முன் தாங்கள் தங்களுக்கே உரிய நடையில்,
சமைத்த அருமை, என் கண்கள் என் மனதிற்கும் என் புத்திக்கும் பிளாட்டினக் கம்பியால் (Super conductor) இணைப்புற்ற தடையில்லாத அணுவோட்டத்தைப் பெற்ற மின்கருவிபோல் அப்படி ஒரு இயக்கம் பெற்றது. நடையின் அருமை, அதை சமைத்தவர் திறமை. இது அத்தனையும் உண்மை.
கடவுள்-நாத்திகன்-ஆத்திகன். ஆகா, தாங்கள் தந்தது ஒரு துளித்தான் அதை முழுவதுமாக என் உள்ளங்கையில்க் கொண்டு என் நாவால் நயமாக சொட்டாங்கிப் போட்டுச் சாப்பிட்ட என்போன்றோருக்குத் தான் தெரியும் அதன் அருமை. உங்கள் நடையில் ஆன்மமும்-மானுடமும்- எதார்த்தமும் கலந்து சுவை நிறைந்த கதைகளை கேட்க்க விருப்பம். நன்றிகள் குருவே!

T K Arumugam said...

ஐயா வணக்கம்

எங்க ஐயன் ( எங்கள் அப்பாவை இப்படித்தான் அழைப்போம்) கொள்ளைக்கு போனாலும் கூட்டு ஆகாது என்பார்.
பாடம் வந்த பின்பு தான் தெரியும் நமக்கு நல்ல கூட்டு இருக்கிறதா அல்லது எதிர் வீட்டில் நண்பன் இருக்கிறான அல்லது எதிரி இருக்கிறானா என்று ??

நன்றி

வாழ்த்துக்கள்

jee said...

Thank you sir.
waiting for your email lession

tamiltemples said...

உள்ளேன் ஐயா... கடும் வேலைப்பளு காரணமாக வகுப்பறைக்கு வரமுடியவில்லை. மன்னிக்க வேண்டும் ஐயா. தவற விட்ட வகுப்பறை பாடங்களை படித்து விட்டேன்.
- சேர்மராஜ்

Raju said...

This week also, lessons are interest.
I am waiting your email lessons.

Scorpion King said...

ஜாதகத்தில் சுப கிரகங்கள் பரஸ்பர பார்வை மற்றும் பரிவர்தனை இரண்டும் இருக்கிறது. இதனால் என்ன நல்ல பலன்கள் கிடைக்கிறது என்று செவ்வாய் கிழமை பார்க்கலாம்...

KS said...

வணக்கம் ஆசானே

உங்கள் சேவைக்கு வந்தன்ங்கள்.

இவ்வளவு பெரிய மாணவர் தொகையை எப்படிச் சமாளிக்கிறீர்கள்.
பலரின் கண்ணூறு உங்களில் படாமல் இருக்க ஆண்டவன் அருளட்டும்.

ஒரு சந்தேகம் இரு கிரகங்களின் நட்சத்திரப் பரிவர்த்தனையானது வளமையான ராசிப் பரிவர்த்தனைபோல் பலந்தருமா அல்லது வேறுபடுமா.

இதுபற்றித் தங்களின் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி.

Arulkumar Rajaraman said...

Dear Sir

Nice sir. Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Rajan said...

Dear Vaathiyariya,

Email Lesson about the Astavargam Paral was very simple and excellent to read/understand as usual.

Waiting for the houses exchange positions and explanations..

Thanks
Rajan

Sas said...

thankz sir

prabakar.l.n said...

vaathiyar ayya voda valai thalathil avarudaiya comment box il thamilil ezhutha yaravathu tamil ezhthi soft were vaikalame tamilil comment kodukka konjam siramamaka iruku

Alasiam G said...

நண்பர் பிரபாகர். நீங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள வலை முகவரியில் தமிழில் தட்டச்சுச் செய்து நகல் எடுத்து பின்னூட்டப் பகுதியில் ஒட்டலாம் சுலபமாக
இருக்கும்.
http://www.google.com/transliterate/indic/TAMIL

iyer said...

kaadhal.. kathirikkayellam sari..

Neengal manavargal meedu vaithiruppadhuu
Kaadhala.. Aanba...!!

Ram said...

Dear Sir,

Very good lessons.

Please create a google group and you can easily publish the lessons to many peoples in one time.

Thanks and warm regards,
Ramalingam

jee said...

If guru in mithunam(lagna also mithunam), guru is in opposite.
but in navamsa guru is in its own position Dhanusu, then which we have to consider?

dubai saravanan said...

நல்ல நகைச் சுவையுடன் கூடிய நல்ல பதிவு. நன்றி அய்யா

6ம் வீடும் 11ம் வீடும் பரிவர்த்தனை. (குரு சந்திரன்) 6ம் வீடு பரிவர்த்தனை ஆகியுருப்பதால் தீமையான பலன்களா?

aryboy said...

வனக்கம் அய்யா,
கன்டிப்பு இன்ரி கனிவோடு பாடம் நடதுத்தும் வாத்தியார் என்பதை
நினைவுபடுத்தியது என்ட்ரைய பதிவு வெகு சோர்.
நான் வான்கி வந்த வரம்,ரிசபஇலக்கினம்.
சனிபகவான்+செவ்வாய்,சுக்கிரபகவான்+குருபகவான்
பரிவர்த்தனை(10+7,6.+11).கடைசி காலத்திலாவது
தெருவேனா அய்யா ?.னன்ரி.வால்க வழமுடமன்.
அரிபாய்

CUMAR said...

Dear Sir,
All parivarthana is not going to bring favours,as you mentioned it depends on the placement and position.I ve read in a article that there are 66 types of parivarthana and are classified into 3 types as Maha yoga,kahala yoga and dainya yoga.Will there be more light on this in the mail lesson i am eagerly waiting..
thanks

aadhirai said...

waiting for 24th aasaane!

Karthi said...

ayya,,Padam miga arumai...waiting for mail lesson!!

ஈழத்துப் புயல் said...

மிக்க நன்றி

csekar2930 said...

குருவிற்கு வணக்கம்

இன்றைய பாடம் நன்றாக உள்ளது. இமெயிலில் கிடைக்க பெற்றதற்கு மிகவும் நன்றி

என்றும் வாழ்க வளமுடன்

சந்திரசேகரன் சூர்யா

DHANA said...

இமெயில் பாடம் கிடைத்தது நன்றி ஐயா!

SP.VR. SUBBIAH said...

/////Shyam Prasad said...
மிக்க நன்றி////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////rajesh said...
Eagerly waiting for tat lesson, sir.////

உங்களின் ஆர்வத்திற்கு நன்றி.

SP.VR. SUBBIAH said...

/////DHANA said...
நன்றி ஐயா!////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////ananth said...
என் ஜாதகத்தில் கிரகங்கள் பரஸ்பர பார்வை இருக்கிறது. பரிவர்தனை இல்லை. என்

மனைவிக்கு இரண்டும் இருக்கிறது. பலன்கள் எப்படி என்று செவ்வாய் கிழமை படித்துத் தெரிந்து

கொள்கிறேன்./////

ஆகா, படித்தபிறகு வழக்கம்போல உங்கள் கருத்தை எழுதுங்கள்ஆனந்த்! நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////sury said...
For me, rishaba lagna, 3rd house lord chandra is in 12th, 12th house lord mars is in 3rd.

Therefore, parivarthanam very much.Added to that, the planet mars is in kendra position to

chandra, with which it has swapped its position. Does it have any significance?
Subbu rathinam./////

எதுவுமே முழுமையாக ஸ்வாப் ஆகாது. நல்லதும் கலந்திருக்கும்! நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////Thanuja said...
Present Sir,
Thanks
Thanuja////

வருகைப்பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

////Saravana said...
அய்யா,
வகுப்புக்கு ஆஜர்!!!!
கீழ்படிந்த மாணவன்
சரவணா
(வாத்தியாரின் ஊரில் இருந்து, ஹா ஹா ஹா)/////

என்னிடம் டைகர் பாம், கோடாலித் தைலம் என்று பாதுகாப்பிற்கு வேண்டியன எல்லாம் இருக்கிறது
ஹா ஹா ஹா

SP.VR. SUBBIAH said...

/////சிங்கைசூரி said...
மிக்க நன்றி ஆசானே.////

நன்றி, எனது அன்பார்ந்த சீடரே!

SP.VR. SUBBIAH said...

/////Success said...
வணக்கம்....
உங்கள் பரஸ்பர பார்வை மீண்டும், வகுப்பறையில் பதியும் வரை குறுகுறுப்போடு

பொறுத்திருக்கும் உங்கள் மாணவன்.....
(நீண்ட வணக்கதிற்கு காரணம் நீங்கள் நீண்ட விடுப்பு எடுப்பதால்)
மூன்று நாட்கள் வெளியூரில், பயணம் இனிதாகவும், ஹாட்ரிக் வெற்றியுடன் அமைய அம்பாளின்

அருளை வேண்டுகிறேன்....
நன்றி...////

இதற்கெல்லாம் அம்பாளைக்கூப்பிடலாமா என்ன?

SP.VR. SUBBIAH said...

////பித்தனின் வாக்கு said...
நல்ல நகைச் சுவையுடன் கூடிய நல்ல பதிவு. நன்றி அய்யா.
மின் அஞ்சலுக்காக காத்துள்ளேம். நன்றி.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Uma said...
மின் அஞ்சலுக்காக காத்துள்ளேம். நன்றி.////

செவ்வாய்க்கிழமைவரை பொறுமையோடு மட்டும் இருங்கள் போதும். காத்திருத்தல் வேண்டாமே!

SP.VR. SUBBIAH said...

/////maharaja said...
hiya leave! leave !/////

கடைசி பெஞ்ச் கண்மணியா? மகிழ்ச்சி!

SP.VR. SUBBIAH said...

/////sridhar said...
ok sir////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Alasiam G said...
அன்பும் கனிவும் கொண்ட ஆசானுக்கு, தங்களின் பாடங்களுக்காகக் காத்திருப்பேன்.
உங்களின் இந்த சேவைக்கு எப்படி நன்றி கூறுவது என்றேத் தெரியவில்லை.
ஜோதிடத்தை மற்றவர்கள் கூற கேட்டு அதில் உண்மை இருந்தாலும், ஒரு சந்தேகம்,
குழப்பத்துடனே இருக்கவேண்டிய நிலையை முற்றிலுமாக மாற உங்களின்
சுவைமிகுந்த பாடங்களின் வழியே எங்கள் ஜோதிட அறிவை பெருக்க,
திறக்க செய்த,எங்கள் நல்ல குருவிற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
ஐயா நீங்கள் இன்னும் சீரும் சிறப்பும், பெரும் புகழும் பெற்று நீடுழி வாழ
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த அ(இ)ந்த இறைவனை!
வேண்டிக்கொள்கிறேன். வாழ்க நீவிர்! வளர்க உமது சீரியத் தொண்டு!!.//////

நன்றி, எனது அன்பார்ந்த சீடரே! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

SP.VR. SUBBIAH said...

/////RVC said...
thanks for the email-lesson sir. waiting for mutual aspect and exchange lesson./////

நீங்கள் காத்திருந்தால் எனக்குக் கால் வலிக்கும். செவ்வாய்க்கிழமைவரை பொறுமையோடு மட்டும்

இருங்கள் போதும். காத்திருத்தல் வேண்டாமே!

SP.VR. SUBBIAH said...

/////Thanuja said...
வணக்கம் சார்,
ஈமெயில் பாடம் கிடைச்சிது, இந்த பாடம் படிச்சிகிட்டே இருக்கனும் போல இருக்கு. Thank u

sir! எனக்கு ஒரு கேள்வி, நீங்க பரல்ஸ் 30 இந்த வீடுல 1,2,6,8,9,11,12 இருந்தா நல்லது. ஆனால் அது

எப்படி இத்தனை வீட்டில நிறைய பரல்ஸ் இருந்தா how does it benefit? Because 6,8,12 houses with more parals be helpful?
Thanks
Thanuja////

எல்லா வீடுகளிலும் பரல்கள் எப்படி அதிகமாக இருக்க முடியும்? நான்கு வீடுகளில் (1,9,10,11) பரல்கள் அதிகமாக இருந்தால் போதும்

SP.VR. SUBBIAH said...

////Chiruthuli said...
குரு வணக்கம்,
பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!" பாடம் அருமை
அன்புடன்
சிறுதுளி/////

இன்னும் பாடம் முடியவில்லையே!

SP.VR. SUBBIAH said...

/////Kumares said...
வணக்கம் ஐயா
காத்திருக்கிறேன் மிகவும் ஆவலோடு.../////

உங்களின் ஆர்வத்திற்கு நன்றி.

SP.VR. SUBBIAH said...

////jadam said...
Present sir!
Awaiting emial lesson.
Have a nice holiday!/////

உங்களின் ஆர்வத்திற்கு நன்றி.பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////Alasiam G said...
அஷ்டவர்க்க அவசியம் பற்றிய பாடம் (ஜோதிடப்பாடம் ),
கிடைக்கப் பெற்றேன். இது பரஸ்பரப் பார்வை மற்றும் பரிவர்த்தனை பாடத்திற்கான அடிப்படை

என நினைக்கிறேன். அதனால் தான் முன்னோட்டப் பாடமாக வந்துள்ளதாக நினைக்கிறேன்.

அஷ்டவர்க்கப் பாடத்திற்கு முன் தாங்கள் தங்களுக்கே உரிய நடையில்,
சமைத்த அருமை, என் கண்கள் என் மனதிற்கும் என் புத்திக்கும் பிளாட்டினக் கம்பியால் (Super

conductor) இணைப்புற்ற தடையில்லாத அணுவோட்டத்தைப் பெற்ற மின்கருவிபோல் அப்படி ஒரு

இயக்கம் பெற்றது. நடையின் அருமை, அதை சமைத்தவர் திறமை. இது அத்தனையும் உண்மை.
கடவுள்-நாத்திகன்-ஆத்திகன். ஆகா, தாங்கள் தந்தது ஒரு துளித்தான் அதை முழுவதுமாக என்

உள்ளங்கையில்க் கொண்டு என் நாவால் நயமாக சொட்டாங்கிப் போட்டுச் சாப்பிட்ட

என்போன்றோருக்குத் தான் தெரியும் அதன் அருமை. உங்கள் நடையில் ஆன்மமும்-மானுடமும்-

எதார்த்தமும் கலந்து சுவை நிறைந்த கதைகளை கேட்க்க விருப்பம். நன்றிகள் குருவே!////

எனது கதைத் தொகுப்புக்கள் மூன்றிலும் அதைச் (மானுடமும்,எதார்த்தமும் கலந்து சுவை நிறைந்த கதைகள்) செய்திருக்கிறேனே சாமி!

SP.VR. SUBBIAH said...

////T K Arumugam said...
ஐயா வணக்கம்
எங்க ஐயன் ( எங்கள் அப்பாவை இப்படித்தான் அழைப்போம்) கொள்ளைக்கு போனாலும் கூட்டு

ஆகாது என்பார்.
பாடம் வந்த பின்பு தான் தெரியும் நமக்கு நல்ல கூட்டு இருக்கிறதா அல்லது எதிர் வீட்டில்

நண்பன் இருக்கிறானா அல்லது எதிரி இருக்கிறானா என்று ??
நன்றி
வாழ்த்துக்கள்/////

உண்மை. பெரியவர்கள் (பெரிசுகள்) தங்கள் அனுபவத்தைச் சொல்வதால் அது நன்மையுடையதாகத்தான் இருக்கும். அதை எடுத்துக்கொள்வதும் பயனடைவதும் நம்கையில் இருக்கிறது!

SP.VR. SUBBIAH said...

////jee said...
Thank you sir.
waiting for your email lession////

உங்களின் ஆர்வத்திற்கு நன்றி.

SP.VR. SUBBIAH said...

///tamiltemples said...
உள்ளேன் ஐயா... கடும் வேலைப்பளு காரணமாக வகுப்பறைக்கு வரமுடியவில்லை. மன்னிக்க

வேண்டும் ஐயா. தவற விட்ட வகுப்பறை பாடங்களை படித்து விட்டேன்.
- சேர்மராஜ்////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Raju said...
This week also, lessons are interest.
I am waiting your email lessons.////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Scorpion King said...
ஜாதகத்தில் சுப கிரகங்கள் பரஸ்பர பார்வை மற்றும் பரிவர்தனை இரண்டும் இருக்கிறது.

இதனால் என்ன நல்ல பலன்கள் கிடைக்கிறது என்று செவ்வாய் கிழமை பார்க்கலாம்.../////

ஆமாம் பார்த்துப் பயன் பெறுங்கள். நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////KS said...
வணக்கம் ஆசானே
உங்கள் சேவைக்கு வந்தனங்கள்.
இவ்வளவு பெரிய மாணவர் தொகையை எப்படிச் சமாளிக்கிறீர்கள்.
பலரின் கண்ணூறு உங்களில் படாமல் இருக்க ஆண்டவன் அருளட்டும்.
ஒரு சந்தேகம் இரு கிரகங்களின் நட்சத்திரப் பரிவர்த்தனையானது வளமையான ராசிப்

பரிவர்த்தனைபோல் பலந்தருமா அல்லது வேறுபடுமா.
இதுபற்றித் தங்களின் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி./////

இணைய வகுப்பு. அதனால் சமாளிக்க முடிகிறது. கண்ணேறா? பழநிஅப்பன் பார்த்துக்கொள்வான்!:-)))

SP.VR. SUBBIAH said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Nice sir. Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

/////Rajan said...
Dear Vaathiyariya,
Email Lesson about the Astavargam Paral was very simple and excellent to read/understand as

usual. Waiting for the houses exchange positions and explanations..
Thanks
Rajan/////

உங்களின் ஆர்வத்திற்கு நன்றி.

SP.VR. SUBBIAH said...

/////Sas said...
thankz sir////

நன்றி சாஸ்!

SP.VR. SUBBIAH said...

//////prabakar.l.n said...
vaathiyar ayya voda valai thalathil avarudaiya comment box il thamilil ezhutha yaravathu tamil

ezhthi soft were vaikalame tamilil comment kodukka konjam siramamaka iruku////

சைடு பாரில் தமிழ் எழுதி உள்ளது அங்கே தட்டச்சி, பின்னூட்டப் பெட்டியில் ஒட்டி (paste செய்து) விடுங்கள்

SP.VR. SUBBIAH said...

//////Alasiam G said...
நண்பர் பிரபாகர். நீங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள வலை முகவரியில் தமிழில் தட்டச்சுச்

செய்து நகல் எடுத்து பின்னூட்டப் பகுதியில் ஒட்டலாம் சுலபமாக இருக்கும்.
http://www.google.com/transliterate/indic/TAMIL/////

வகுப்பறை சைடு பாரில் சுட்டி உள்ளது. ஏன் பலரும் அதைப் பார்ப்பதில்லை?

SP.VR. SUBBIAH said...

////iyer said...
kaadhal.. kathirikkayellam sari..
Neengal manavargal meedu vaithiruppadhuu
Kaadhala.. Aanba...!!/////

பந்தம், பாசம், பரிவு என்று எல்லாம் உள்ளது!

SP.VR. SUBBIAH said...

//////Ram said...
Dear Sir,
Very good lessons.
Please create a google group and you can easily publish the lessons to many peoples in one

time. Thanks and warm regards,
Ramalingam/////

உங்கள் ஆலோசனைக்கு நன்றி நண்பரே1

SP.VR. SUBBIAH said...

/////jee said...
If guru in mithunam(lagna also mithunam), guru is in opposite.
but in navamsa guru is in its own position Dhanusu, then which we have to consider?/////

நவாம்சத்தில் உள்ளதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////dubai saravanan said...
நல்ல நகைச் சுவையுடன் கூடிய நல்ல பதிவு. நன்றி அய்யா
6ம் வீடும் 11ம் வீடும் பரிவர்த்தனை. (குரு சந்திரன்) 6ம் வீடு பரிவர்த்தனை ஆகியிருப்பதால்

தீமையான பலன்களா?/////

பழைய பாடத்தில் அதற்கான பலன்கள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பழைய பாடங்களைப் படியுங்கள் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////aryboy said...
வணக்கம் அய்யா, கண்டிப்பு இன்றிக் கனிவோடு பாடம் நடதுத்தும் வாத்தியார் என்பதை
நினைவுபடுத்தியது இன்றையப் பதிவு வெகு ஜோர்.
நான் வாங்கி வந்த வரம்,
ரிசபஇலக்கினம். சனிபகவான்+செவ்வாய்,சுக்கிரபகவான்+குருபகவான்
பரிவர்த்தனை(10+7,6.+11).கடைசி காலத்திலாவது
தேறுவேனா அய்யா ?.நனறி வாழ்க வளமுடமன்.
அரிபாய்//////

தேறாமல் யாருக்கும் டிக்கெட் கிடைக்காது. ஆகவே அனைவருக்கும் தேர்ச்சி உண்டு! நம்பிக்கையோடு இருங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////CUMAR said...
Dear Sir,
All parivarthana is not going to bring favours,as you mentioned it depends on the placement

and position.I ve read in a article that there are 66 types of parivarthana and are classified into 3

types as Maha yoga,kahala yoga and dainya yoga.Will there be more light on this in the mail

lesson i am eagerly waiting..
thanks/////

உங்களின் ஆர்வத்திற்கு நன்றி.

SP.VR. SUBBIAH said...

/////aadhirai said...
waiting for 24th aasaane!/////

உங்களின் ஆர்வத்திற்கு நன்றி. பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBIAH said...

////Karthi said...
ayya,,Padam miga arumai...waiting for mail lesson!!////

நல்லது நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////ஈழத்துப் புயல் said...
மிக்க நன்றி////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////csekar2930 said...
குருவிற்கு வணக்கம்
இன்றைய பாடம் நன்றாக உள்ளது. இமெயிலில் கிடைக்க பெற்றதற்கு மிகவும் நன்றி
என்றும் வாழ்க வளமுடன் சந்திரசேகரன் சூர்யா////

தகவலுக்கு நன்றி சேகர்!

SP.VR. SUBBIAH said...

/////DHANA said...
இமெயில் பாடம் கிடைத்தது நன்றி ஐயா!/////

தகவலுக்கு நன்றி தனா!

JS said...

குரு வணக்கம்.
Waiting for the mail.

Anonymous said...

Dear Sir,

Thanks for the lessons.I read it.

I have a query ,
In a chart,let us say Jupiter is the yogakarka for that chart.

1. Jupiter has got own house in the Rashi chart.
2. Jupiter has got own house in the Drekkana chart.
3. Jupiter has got enemy house in the Navamsha chart.

Please tell me whether Jupiter is strong in general.

Regards,
Balakumaran

sundari said...

Good evening sir,
Thanks for email lesson sir.

Vash said...

ஜயா,
அப்போ நீங்கள் இதுவரைக்கும் சொல்லித்தந்ததிலிருந்து பார்க்கின்றபோது, நானும், எனது எட்டு நண்பர்களின் குணங்களும் செயல்களுமே இந்த கோள்களுக்கும், எம்மீது என்பது இதிலிருந்து புலப்படுகின்றது. இதிலிருந்து எமது 337ம் எமக்குத்தெளிவாக புலப்படுகின்றது.

SP.VR. SUBBIAH said...

////JS said...
குரு வணக்கம்.
Waiting for the mail.////

Please wait for one more day!

SP.VR. SUBBIAH said...

////KUMARAN said...
Dear Sir,
Thanks for the lessons.I read it.
I have a query ,
In a chart,let us say Jupiter is the yogakarka for that chart.
1. Jupiter has got own house in the Rashi chart.
2. Jupiter has got own house in the Drekkana chart.
3. Jupiter has got enemy house in the Navamsha chart.
Please tell me whether Jupiter is strong in general.
Regards,
Balakumaran////

அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்.!

SP.VR. SUBBIAH said...

////sundari said...
Good evening sir,
Thanks for email lesson sir./////

நல்லது! நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////Vash said...
ஜயா,
அப்போ நீங்கள் இதுவரைக்கும் சொல்லித்தந்ததிலிருந்து பார்க்கின்றபோது, நானும், எனது எட்டு நண்பர்களின் குணங்களும் செயல்களுமே இந்த கோள்களுக்கும், எம்மீது என்பது இதிலிருந்து புலப்படுகின்றது. இதிலிருந்து எமது 337ம் எமக்குத்தெளிவாக புலப்படுகின்றது.////

புலப்பட்டவரைக்கும் எனக்கும் மகிழ்ச்சியே! நன்றி!

k subraa said...

அய்யா,
எனக்கு இது வரை E-mail பாடம் வந்தது. ஆனால் இந்த பாடம் வரவில்லை. தயவு செய்து எனக்கு e-mail பாடம் அனுப்பவும்
E-mail : ksubramanian08@yahoo.com.

rama said...

sir,

i not received the lesson.

please send the lesson to my mail id...

rama150486@gmail.com

Kumares said...

ஐயா மின் அஞ்சல் பாடம் கிடைக்க பெற்றது.....:-))

தலைப்பு: ஜோதிடம் என்ன செய்யும்?

மிகவும் நன்றி ஐயா

SP.VR. SUBBIAH said...

////k subraa said...
அய்யா,
எனக்கு இது வரை E-mail பாடம் வந்தது. ஆனால் இந்த பாடம் வரவில்லை. தயவு செய்து எனக்கு e-mail பாடம் அனுப்பவும்
E-mail : ksubramanian08@yahoo.com./////

வரும். பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////rama said...
sir,
i not received the lesson.
please send the lesson to my mail id...
rama150486@gmail.com/////

வரும். பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBIAH said...

///Kumares said...
ஐயா மின் அஞ்சல் பாடம் கிடைக்க பெற்றது.....:-))
தலைப்பு: ஜோதிடம் என்ன செய்யும்?
மிகவும் நன்றி ஐயா/////

நல்லது. நன்றி முருகா!

maharaja said...

//நவாம்சத்தில் நவாம்ச செவ்வாயும், நவாம்ச சுக்கிரனும் பரிவர்த்தனையாகியிருந்தால்:
இந்த அமைப்பு பெண்கள் ஜாதகத்திற்கு நல்லதல்ல. இந்த அமைப்புள்ள பெண், ஆண்கள் மேல் அதிக மோகம் கொண்டவளாக இருப்பாள். இதே அமைப்பில் அந்தப் பெண்ணின் நவாம்சத்தில் 7ல் சந்திரன் இருந்தால், அவளுடைய கணவனும் ஒழுக்கமற்றவனாக ஸ்த்ரீலோலனாக இருப்பான்//ஆண்களுக்கு அப்படி இருந்தால் என்ன செய்வர் ?

rama said...

I got the lesson sir,

Thanks for the lesson.

In rasi chart 10th lord sukran in his own house (rishabam).

But in navamsa chart lagnam viruchakam. Sukran is in kanni rasi (his neesa rasi).

But parivatna yoga happened sukran with budan (11th lord )in navamsam.

So sukran will give any good result?

maharaja said...

//நவாம்சத்தில் நவாம்ச செவ்வாயும், நவாம்ச சுக்கிரனும் பரிவர்த்தனையாகியிருந்தால்:
இந்த அமைப்பு பெண்கள் ஜாதகத்திற்கு நல்லதல்ல. இந்த அமைப்புள்ள பெண், ஆண்கள் மேல் அதிக மோகம் கொண்டவளாக இருப்பாள். இதே அமைப்பில் அந்தப் பெண்ணின் நவாம்சத்தில் 7ல் சந்திரன் இருந்தால், அவளுடைய கணவனும் ஒழுக்கமற்றவனாக ஸ்த்ரீலோலனாக இருப்பான்//
ஆண்களுக்கு அப்படி இருந்தால் என்ன செய்வர் ?
அய்யா கடைசி பென்ச் மாணவன் என்பதால் பதில் இல்லையா ?
இனி ஒழுங்காக படிப்பேன் ! பதில் தரவும்

SP.VR. SUBBIAH said...

/////maharaja said...
//நவாம்சத்தில் நவாம்ச செவ்வாயும், நவாம்ச சுக்கிரனும் பரிவர்த்தனையாகியிருந்தால்:
இந்த அமைப்பு பெண்கள் ஜாதகத்திற்கு நல்லதல்ல. இந்த அமைப்புள்ள பெண், ஆண்கள் மேல் அதிக மோகம் கொண்டவளாக இருப்பாள். இதே அமைப்பில் அந்தப் பெண்ணின் நவாம்சத்தில் 7ல் சந்திரன் இருந்தால், அவளுடைய கணவனும் ஒழுக்கமற்றவனாக ஸ்த்ரீலோலனாக இருப்பான்//ஆண்களுக்கு அப்படி இருந்தால் என்ன செய்வார் ?/////

என்ன கேள்வி சாமி? ஆணுக்கு இருந்தால் ஸ்த்ரீலோலனாக இருப்பான். போதுமா?

SP.VR. SUBBIAH said...

/////rama said...
I got the lesson sir,
Thanks for the lesson.
In rasi chart 10th lord sukran in his own house (rishabam).
But in navamsa chart lagnam viruchakam. Sukran is in kanni rasi (his neesa rasi).
But parivatna yoga happened sukran with budan (11th lord )in navamsam.
So sukran will give any good result?/////

முன்பே பலமுறை எழுதியிருக்கிறேன். ராசியின் அமைப்பைத் தனியாகப் பார்க்கவும், நவாம்சத்தைத் தனியாகப் பார்க்கவும். இரண்டையும் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு படுத்திக் குழப்ப வேண்டாம். சுக்கிரனின் அமைப்பைப் பார்க்கும்போது கன்னியில் இருப்பதை மட்டும் பார்த்தால் போதும். நவாம்ச லக்கினத்தையும் வைத்து ஏன் கும்மி அடிக்கிறீர்கள்?

SP.VR. SUBBIAH said...

/////maharaja said...
//நவாம்சத்தில் நவாம்ச செவ்வாயும், நவாம்ச சுக்கிரனும் பரிவர்த்தனையாகியிருந்தால்:
இந்த அமைப்பு பெண்கள் ஜாதகத்திற்கு நல்லதல்ல. இந்த அமைப்புள்ள பெண், ஆண்கள் மேல் அதிக மோகம் கொண்டவளாக இருப்பாள். இதே அமைப்பில் அந்தப் பெண்ணின் நவாம்சத்தில் 7ல் சந்திரன் இருந்தால், அவளுடைய கணவனும் ஒழுக்கமற்றவனாக ஸ்த்ரீலோலனாக இருப்பான்//
ஆண்களுக்கு அப்படி இருந்தால் என்ன செய்வர் ?////

என்ன கேள்வி சாமி? ஆணுக்கு இருந்தால் ஸ்த்ரீலோலனாக இருப்பான். போதுமா?

rama said...

/////rama said...
I got the lesson sir,
Thanks for the lesson.
In rasi chart 10th lord sukran in his own house (rishabam).
But in navamsa chart lagnam viruchakam. Sukran is in kanni rasi (his neesa rasi).
But parivatna yoga happened sukran with budan (11th lord )in navamsam.
So sukran will give any good result?/////

முன்பே பலமுறை எழுதியிருக்கிறேன். ராசியின் அமைப்பைத் தனியாகப் பார்க்கவும், நவாம்சத்தைத் தனியாகப் பார்க்கவும். இரண்டையும் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு படுத்திக் குழப்ப வேண்டாம். சுக்கிரனின் அமைப்பைப் பார்க்கும்போது கன்னியில் இருப்பதை மட்டும் பார்த்தால் போதும். நவாம்ச லக்கினத்தையும் வைத்து ஏன் கும்மி அடிக்கிறீர்கள்?
////

Dear Sir,

Thanks for your explanation.

sukran in nessa rasi (kanni).

As per navamsa lesson karaga for marriage is debilited in navamsam.

But he is parivatna yoga with budan.

So how about sukran power sir?

SP.VR. SUBBIAH said...

////rama said...
/////rama said...
I got the lesson sir,
Thanks for the lesson.
In rasi chart 10th lord sukran in his own house (rishabam).
But in navamsa chart lagnam viruchakam. Sukran is in kanni rasi (his neesa rasi).
But parivatna yoga happened sukran with budan (11th lord )in navamsam.
So sukran will give any good result?/////
முன்பே பலமுறை எழுதியிருக்கிறேன். ராசியின் அமைப்பைத் தனியாகப் பார்க்கவும், நவாம்சத்தைத் தனியாகப் பார்க்கவும். இரண்டையும் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு படுத்திக் குழப்ப வேண்டாம். சுக்கிரனின் அமைப்பைப் பார்க்கும்போது கன்னியில் இருப்பதை மட்டும் பார்த்தால் போதும். நவாம்ச லக்கினத்தையும் வைத்து ஏன் கும்மி அடிக்கிறீர்கள்?
////
Dear Sir,
Thanks for your explanation.
sukran in nessa rasi (kanni).
As per navamsa lesson karaga for marriage is debilited in navamsam.
But he is parivatna yoga with budan.
So how about sukran power sir?

உச்சமான புதனுடன் பரிவர்த்தனை பெற்றதால், நீசத்தன்மை குறைந்துவிடும். ஏழாம் வீட்டு அதிபதி, அவருடைய சுயவக்கர்ப் பரல்கள், ஏழாம் வீட்டில் உள்ள அஷ்டகவர்க்கப்பரல்கள் என்று திருமணத்திற்குப் பல விஷயங்கள்/அமைப்புக்கள் உள்ளன! ஒன்றை வைத்து மட்டும் குழம்பாதீர்கள்!