மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.5.17

ராஜராஜ சோழனின் பெருந்தன்மை!

ராஜராஜ சோழனின் பெருந்தன்மை!

ராஜ ராஜ சோழன் அரியணை ஏறிய காலம். இவர் மகள்களில்  மூத்தவள் (மாதேவடிகள்) புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டு மதம் மாற முடிவெடுத்த சமயம்.

காலை அரசவையில் மகள் வந்து நின்று தான் புத்த பிஷுனியாக மாறப் போவதாக உறைக்க அரசன் மறுப்பேதும் கூறாது ஒத்துக்கொண்டு அனுப்பினார்

சில காலஞ்சென்று அரசன் தன் மகளைக் காண இளவரசர் ராஜேந்திரனுடன் நாகையிலிருந்த சூடாமணி விகாரம் செல்கிறார். பிஷூக்கள் அரசரை வெளியில் வந்து வரவேற்று, மகளைக் காண்பதாக இருந்தால்  புத்தரின் சந்நிதானத்தில்தான் காண வேண்டுமென்றும் அரச அம்சங்களின்றிப் பார்க்க வேண்டுமென்றும் விதிகளின் அடிப்படையில் அனுமதித்தனர்

மறுக்காமல், அரசன் இதைக் கடைப்பிடித்து உள்ளே சென்று கண்டபோது முதல் முறையாக உறைந்து போனார். பாலுட்டி சீராட்டி வளர்ந்தவள் அன்று தலை வழித்து சிறு காதனி கூட இன்றி அரசரை சந்தித்தாள். புத்தரின் பாதத்தில், நான் நிம்மதியாக இருக்கிறேனென்று கூறிவிட்டு சென்றவிட்டாள்

வருந்திய முகத்துடனும் சிந்தனை பரவி காணப்பட்டவரைப் பார்த்து ராஜேந்திரன், "தந்தையே சொல்லுங்கள் தகர்த்து விடவா இந்த விகாரத்தை!" என்று வினவ தந்திரத்தில் வல்லவர் விடையளித்தார்:

    "மகனே இதைத் தகர்த்தால் நமக்கு நஷ்டமே, லாபமில்லை அதை விடுத்து..நமது சைவ விழாக்களையும் வழிபாடுகளையும் விரிவு படுத்துவோம்...அன்றி புத்த மதத்தை எதிர்த்தால் மக்கள் அதிக அளவில் மதம் மாற நாமே வித்திடுவதாகும், மேலும் "சீ விஜய"(Singapore) சாம்ராஜ்ய வர்த்தகம் பாதிக்கப்படும், ஆக இவர்களத் தொடாமல் நம்மை வளர்த்து இவர்களப் புறந்தள்ள வேனுமென்றார்

இதன் பிறகு வளர்ந்ததுதான் நாம் இன்று கானும் பெரிய கோவில். காலப்போக்கில் புத்த மதமும் மறைந்தது

இந்த நிகழ்வை தற்கால நம் சமூக நிலைக்கு உவமையாக எடுத்துக்கொள்ளுங்கள். கலப்பு மணங்கள் செய்பவர்களுக்கு, குறிப்பாக வேற்று மதங்களில் திர்மணம் செய்து கொள்பவர்கள் - அவர்கள் சுயத்தை இழக்க  நேரிடும் (அரச அம்சங்களைச் சோழன் மகள் களைந்தது போல) என்ற தெளிவில்லை.

ஆகவே கலப்பு மணங்களை எதிர்க்காதீர்கள். காலப் போக்கில் மாறியவர்களே உணர்வார்கள் என்று விட்டுவிடுங்கள்!

படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Yes sir I agree with your valuable words sir thanks sir

Kannan L R said...

ஐயா வணக்கம்
அருமை ஐயா
கண்ணன்

kmr.krishnan said...

முதல் முறையாக இதனைக் கேள்விப்படுகிறேன்.இந்நிகழ்ச்சிக்கான கல்வெட்டு ஆதாரம் ஏதேனும் உள்ளதா என்று கூறினால் மகிழ்வேன்.

பெள்த்த‌மத விகாரங்களுக்கு நிதி அளித்தது கல்வெட்டுக்களில் உள்ளது.

ராஜி said...

ராஜராஜச்சோழனின் மகள் புத்த மதத்தை தழுவுனவங்களா?! புது தகவலா இருக்கே!

Ravi Raina said...

இந்துவாய் சாகமாட்டேன். அம்பேத்கர்

மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய்விட்டன.
இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது முறைகளும் இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத்தான் அளிக்கும்.

இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம்முடிவு என்னவென்றால்,

நாம் இந்து மதத்தைவிட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்.

நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்மந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்.
நாம் நம்மை இந்துக்கள் என்று கூறிக்கொள்வது கூடாது.அதனால்தான் மேல் ஜாதிக்காரர்கள் நம்மை இழிவாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள்.

நாம் வேறு மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இப்படி கொடுமைப்படுத்த அவர்களுக்கு துணிவு இருந்திருக்காது. எந்த மதத்தினர் உங்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ அப்படிப்பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள்.

பிறக்கும் போதோ நான் தீண்டப்படாதவனாய் பிறந்தேன். என்றாலும் அது நான் செய்த குற்றமல்ல.

ஆனால் இறக்கும் போது தீண்டப்படாதவனாய் இறக்கமாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது. அதாவது நான் ஒரு இந்துவாய் இறக்கப் போவதில்லை
(நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் குடிஅரசு 20.10.1935

Ayathuray said...

இதன் பிறகு வளர்ந்ததுதான் நாம் இன்று கானும் பெரிய கோவில். காலப்போக்கில் புத்த மதமும் மறைந்தது

I am very happy to hear this particular sentence. The buddhist religion is no match to our Hindu religion.

Subbiah Veerappan said...

/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Yes sir I agree with your valuable words sir thanks sir/////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger Kannan L R said...
ஐயா வணக்கம்
அருமை ஐயா
கண்ணன்////

நல்லது. நன்றி நண்பரே!!!!!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
முதல் முறையாக இதனைக் கேள்விப்படுகிறேன்.இந்நிகழ்ச்சிக்கான கல்வெட்டு ஆதாரம் ஏதேனும் உள்ளதா என்று கூறினால் மகிழ்வேன்.
பெள்த்த‌மத விகாரங்களுக்கு நிதி அளித்தது கல்வெட்டுக்களில் உள்ளது./////

தேடிப் பார்த்துச் சொகிறேன். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

Subbiah Veerappan said...

/////Blogger ராஜி said...
ராஜராஜச்சோழனின் மகள் புத்த மதத்தை தழுவுனவங்களா?! புது தகவலா இருக்கே!/////

ஆமாம். வரலாற்று ஆசிரியர்கள் யாரும் அதைப் பற்றி எழுதினார்களா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.நல்லது நன்றி சகோதரி!!!!

Subbiah Veerappan said...

////Blogger Ravi Raina said...
இந்துவாய் சாகமாட்டேன். அம்பேத்கர்
மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய்விட்டன.
இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது முறைகளும் இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத்தான் அளிக்கும்.
இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம்முடிவு என்னவென்றால்,
நாம் இந்து மதத்தைவிட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்.
நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்மந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்.நாம் நம்மை இந்துக்கள் என்று கூறிக்கொள்வது கூடாது.அதனால்தான் மேல் ஜாதிக்காரர்கள் நம்மை இழிவாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள்.
நாம் வேறு மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இப்படி கொடுமைப்படுத்த அவர்களுக்கு துணிவு இருந்திருக்காது. எந்த மதத்தினர் உங்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ அப்படிப்பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள்.
பிறக்கும் போதோ நான் தீண்டப்படாதவனாய் பிறந்தேன். என்றாலும் அது நான் செய்த குற்றமல்ல.
ஆனால் இறக்கும் போது தீண்டப்படாதவனாய் இறக்கமாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது. அதாவது நான் ஒரு இந்துவாய் இறக்கப் போவதில்லை
(நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் குடிஅரசு 20.10.1935/////

உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!!!

Subbiah Veerappan said...

//////Blogger Ayathuray said...
இதன் பிறகு வளர்ந்ததுதான் நாம் இன்று கானும் பெரிய கோவில். காலப்போக்கில் புத்த மதமும் மறைந்தது
I am very happy to hear this particular sentence. The buddhist religion is no match to our Hindu religion./////

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!