Astrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது
Seniority & Periority எல்லாம் இங்கே செல்லாது. முன்னுரிமை, முக்கியத்துவம் என்ற வாதம் எல்லாம் இங்கே எடுபடாது
Seniority (மூப்புரிமை)
1. The state of being older than another or others or higher in rank than another or others.
2. Precedence of position, especially precedence over others of the same rank by reason of a longer span of service.
Priority (முன்னுரிமை)
1. Precedence, especially established by order of importance or urgency.
2. a. An established right to precedence.b. An authoritative rating that establishes such precedence.
3. A preceding or coming earlier in time.
4. Something afforded or deserving prior attention.
மூத்தவன், இளையவன் என்ற பாகுபாடு எல்லாம் இங்கே கிடையாது. நான் பெரியவன், இவன் சின்னவன் என்ற வேறுபாடும் இங்கே கிடையாது. நான் ஸீனியர். நீண்ட நாட்கள் அனுபவம் மிக்கவன். இவன் எனக்குப் பிறகு வந்தவன். ஜீனியர்.ஆகவே எனக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இடமில்லை. சுருக்கமாகச் சொன்னால் உங்கள் நிலைப்பாடுகள், வாதங்கள் எதுவுமே இங்கே செல்லாது.
எங்கே?
அதாவது ஸீனியாரிட்டிக்கும், பீரியாரிட்டிக்கும் மதிப்பே இல்லாத இடம் எது?
காலதேவனின் மேற்பார்வையில் இருக்கும் மரண அமைச்சகம்தான் அது (Ministry of death)
நேரம் முடியும்போது சொல்லாமல் கொள்ளாமல் அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள், அவனுடைய தூதர்கள்
“காலா, வாடா! உன்னைக் காலால் மிதிக்கிறேன்” என்று ஒரு மாபெரும் கவிஞன் சொன்னான். அவனையும் காலதேவன் விட்டு வைக்கவில்லை. 39 வயது முடிவதற்குள்ளாகவே அவரைத் தூக்கிக்கொண்டு போய்விட்டான்
“காலன் ஒரு படிப்பறிவில்லாதவன். கண்ணதாசன் என்ற அரிய புத்தகத்தைக் கிழித்துப்போட்டுவிட்டான்” என்றார் கவிஞர் வாலி. ஆதங்கத்திலும், துக்கத்திலும் நாம் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளலாம்.
Meeting is always a pleasure
Parting is always painful
மரணத்தைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்கள்:
1. மரணம் அனைவருக்கும் பொதுவானது (Death is common to all)
2. மரணம் தவிக்கமுடியாததது (inevitable, Impossible to avoid or prevent)
3. ஒவ்வொருநாளும் நாம் மரணத்தை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம் (walking towards death)
சாதாரண மனிதனுக்கு இதெல்லாம் தெரியாது. தான் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் வாழப்போவதாக நம்பிக்கொண்டிருப்பான்.
ஊரை அடித்து உலையில் போட்டுப் பணத்தைச் சேர்த்துக்கொண்டிருப்பான்.
கேட்டால் பணம், மரணத்திற்கான பாதுகாப்புத் தொகை என்பான். Money is the security against death என்பான்
அதாவது பணம் இருந்தால் வயதான காலத்தில் அது தன்னைக் காப்பாற்றும் என்பான். நோய்வாய்ப் பட்டுப் படுத்தால், ஒரு நல்ல மருத்துவமனையில் சிகிச்சைபெற பணம் தேவைப்படும் என்பான்.
மரணம் எப்போது வரும், எப்படி வரும் என்ற சிந்தனை இல்லாததால் அல்லது அறியாமையால் அப்படிச் சொல்வான்.
மரணம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்போது வேண்டுமென்றாலும் வரும்.
பலரை இரவு தூக்கத்திலேயே மரணம் சுருட்டிக்கொண்டு போயிருக்கிறது. விபத்தில் ஒரு நொடியில் மரணத்தைச் சந்தித்தவனும் உண்டு. பல ஆண்டுகள் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்பட்டு, பலரை அவஸ்தைக்கு உள்ளாக்கி இறந்தவனும் உண்டு.
மரணம் நமக்குத் தெரியாமல் வர வேண்டும். உயிர் நாம் அறியாமல் போக வேண்டும். அதுதான் உன்னத மரணம்.
அதற்கு வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
நம் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரியுமா?
தெரியும்.
அதைப் பற்றிய விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளேன். இங்கேயல்ல! வகுப்பறையின் தனி இணைய தளத்தில் அது வந்தது.. இங்கே வந்தால், வகுப்பறையின் சுற்றுச் சுவர்களில் குந்திக் கொண்டிருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய் விடுவார்கள். திருட்டுப் போகக்கூடாது என்பதற்காக தனி இணைய தளத்தில் எழுதியுள்ளேன்!!! அந்த இணைய தளம். பயனர் பெயர் (User Name), கடவுச் சொல்லுடன் (Password) கூடியது அந்த இணைய தளத்தில் இது போன்ற மேல் நிலைப் பாடங்கள் பலவற்றை எழுதியுள்ளேன்!!!!
மேல் நிலைப் பாடங்கள், அலசல் பாடங்கள், அஷ்டகவர்க்கப் பாடங்கள், ஜாதக நுட்பங்கள் என்று கலக்கலாக எழுதிய பாடங்கள் அனைத்தும் அதில் வந்துள்ளன!!!.
பின்னால் அவைகள் அனைத்தும் புத்தக வடிவாக வரும்போது நீங்கள் அனைவரும் படித்துப் பயன் பெறலாம்!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Im waiting for your valuable astrology book sir when can i expect it sir thanks sir vazhga valamudan
ReplyDelete"மரணம் நமக்குத் தெரியாமல் வர வேண்டும். உயிர் நாம் அறியாமல் போக வேண்டும். அதுதான் உன்னத மரணம்."
ReplyDeleteஇதை இறைவனிடம் வேண்டுதல் மூலம் பெறலாம் . அதற்கான ஸ்லோகம் இதோ.
"அனாயச மரணம் வினாதைன்யேன ஜீவனம்
தேகிமே கிருபையா சம்போ த்துவை
பக்திம் அசந்சலாம். "
இது சமஸ்கிருதத்தில் உள்ள ஸ்லோகம் . எனக்கு தெரிந்த தமிழில் எழுதியிருக்கிறேன்
அர்த்தம்
வாழும்பொழுது கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும்
மரணம் நிகழும் பொழுதும் கஷ்டம் இல்லாமல் நிகழவேண்டும்
என்னிடம் உள்ள உன் பக்தியின் மூலமாகவும்
இறைவா உன்னுடைய கருனையினால் மூலமாகவும்
அருள்வாய்.
என்னுடைய தாய் எனக்கு சிறு வயதில் கற்று கொடுத்த ஸ்லோகம்.
தினமும் காலை மாலையில் சொல்லிக்கொண்டு வந்தணம் செய்கிறோம்.
வணக்கம் ஐயா,அனைத்து வரிகளுமே வாழ்க்கையின் எதார்த்தம்.நன்றி.
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
ReplyDelete////மரணம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்போது வேண்டுமென்றாலும் வரும்.
பலரை இரவு தூக்கத்திலேயே மரணம் சுருட்டிக்கொண்டு போயிருக்கிறது. விபத்தில் ஒரு நொடியில் மரணத்தைச் சந்தித்தவனும் உண்டு. பல ஆண்டுகள் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்பட்டு, பலரை அவஸ்தைக்கு உள்ளாக்கி இறந்தவனும் உண்டு.
மரணம் நமக்குத் தெரியாமல் வர வேண்டும். உயிர் நாம் அறியாமல் போக வேண்டும். அதுதான் உன்னத மரணம்.
அதற்கு வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.////
மரணம் எப்போது வேண்டுமானாலும் வரட்டும் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை ஐயா. ஆனால் அது எப்படி பட்டது என்பதில் சிக்கலே.
மரணப்படுக்கையில் பல காலம் இருந்து மற்றவர்களை அவஸ்தை படுத்தி வந்து விடக்கூடாது என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கும்.
கேரள ஜோதிடர் ஆசானின் கூற்றுப்படி,
தங்களின் தந்தைக்கு ஏற்பட்டது போல உன்னதமான ஒரு மரணத்தை தான் சாமான்யர்களின் மனம் விரும்புவது தவிர்க்க இயலாத ஒன்றே ஐயா.
நம் மரணம் கூட மற்றவர்களுக்கு அவஸ்தை ஆகி விடக்கூடாது என்று நினைக்கும் ஆயிரமாயிரம் ஆன்மாக்களில் அடியேனும் ஒருவனே.
இப்பதிவு எனக்கென்றே எழுதப்பட்ட ஒன்றாகவே எடுத்துக்கொள்கிறேன்.
அந்த கேள்வி தங்கள் வகுப்பறையில் பாடம் படிக்க ஆரம்பித்த காலத்தில் ஏற்பட்ட ஒன்று ஐயா.
இப்போதெல்லாம் மனம்
"எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை."
-என்னும் தங்களின் கருத்துக்களை உள்வாங்கி கொண்ட பின் ஏற்படுவதில்லை ஐயா.
சில படிநிலைகளை தாண்டி முன்னேறிய பின் சில முயற்சிகள் குழந்தைத்தனமாக தோன்றுமில்லையா அப்படியான ஒன்றே அது ஐயா!
முகம்மறைத்து வெட்கங்கொண்ட அனுபவத்துடன்,
மணிவண்ணன் நம்பியப்பன்.
ஆசிரியர் வகுப்பறைப்பாடத்தை இணையவெளியில் எழுதிக்கொண்டு இருந்த போது நான் என் உயர்நிலை வகுப்பறைப்பாடத்தை ஓட்டு வெளிகளில் அமர்ந்து கற்றுக்கொண்டிருந்த காரணத்தினால் தான் தங்களின் சிறப்பு வகுப்பறைப்பாடத்திற்கு அனுமதி கிடைக்காமலே போயிற்று. அதை எண்ணி சிறிது வருத்தமே.
ReplyDeleteஎனினும் தங்களின் வகுப்பறைப்பாடங்கள் அனைத்தும் மேன்பட்ட முறையில் 4 தொகுதிகளாக புத்தகங்களாக வரப்போவதை எண்ணி மகிழ்ந்தேன்.
அந்த புத்தங்களின் வருகையை மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
மகிழ்ச்சிகளுடன்,
மணிவண்ணன் நம்பியப்பன்.
/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteIm waiting for your valuable astrology book sir when can i expect it sir thanks sir vazhga valamudan/////
எனது உடல்நிலை காரணமாகவும் வேலைப்பளுவின் காரணமாகவும் புத்தக தொகுப்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உங்களைப் போல நானும் ஆர்வமாக உள்ளேன். கூடிய சீக்கிரம் வெளிவரும் பொறுத்திருங்கள் அன்பரே!!!!
////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDelete"மரணம் நமக்குத் தெரியாமல் வர வேண்டும். உயிர் நாம் அறியாமல் போக வேண்டும். அதுதான் உன்னத மரணம்."
இதை இறைவனிடம் வேண்டுதல் மூலம் பெறலாம் . அதற்கான ஸ்லோகம் இதோ.
"அனாயச மரணம் வினாதைன்யேன ஜீவனம்
தேகிமே கிருபையா சம்போ த்துவை
பக்திம் அசந்சலாம். "
இது சமஸ்கிருதத்தில் உள்ள ஸ்லோகம் . எனக்கு தெரிந்த தமிழில் எழுதியிருக்கிறேன்
அர்த்தம்
வாழும்பொழுது கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும்
மரணம் நிகழும் பொழுதும் கஷ்டம் இல்லாமல் நிகழவேண்டும்
என்னிடம் உள்ள உன் பக்தியின் மூலமாகவும்
இறைவா உன்னுடைய கருனையினால் மூலமாகவும்
அருள்வாய்.
என்னுடைய தாய் எனக்கு சிறு வயதில் கற்று கொடுத்த ஸ்லோகம்.
தினமும் காலை மாலையில் சொல்லிக்கொண்டு வந்தணம் செய்கிறோம்.////
ஸ்லோகத்தை அனைவரும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!!!
///Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,அனைத்து வரிகளுமே வாழ்க்கையின் எதார்த்தம்.நன்றி./////
உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!
///Blogger Manivannan said...
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
////மரணம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்போது வேண்டுமென்றாலும் வரும்.
பலரை இரவு தூக்கத்திலேயே மரணம் சுருட்டிக்கொண்டு போயிருக்கிறது. விபத்தில் ஒரு நொடியில் மரணத்தைச் சந்தித்தவனும் உண்டு. பல ஆண்டுகள் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்பட்டு, பலரை அவஸ்தைக்கு உள்ளாக்கி இறந்தவனும் உண்டு.
மரணம் நமக்குத் தெரியாமல் வர வேண்டும். உயிர் நாம் அறியாமல் போக வேண்டும். அதுதான் உன்னத மரணம்.
அதற்கு வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.////
மரணம் எப்போது வேண்டுமானாலும் வரட்டும் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை ஐயா. ஆனால் அது எப்படி பட்டது என்பதில் சிக்கலே.
மரணப்படுக்கையில் பல காலம் இருந்து மற்றவர்களை அவஸ்தை படுத்தி வந்து விடக்கூடாது என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கும்.
கேரள ஜோதிடர் ஆசானின் கூற்றுப்படி,தங்களின் தந்தைக்கு ஏற்பட்டது போல உன்னதமான ஒரு மரணத்தை தான் சாமான்யர்களின் மனம் விரும்புவது தவிர்க்க இயலாத ஒன்றே ஐயா.
நம் மரணம் கூட மற்றவர்களுக்கு அவஸ்தை ஆகி விடக்கூடாது என்று நினைக்கும் ஆயிரமாயிரம் ஆன்மாக்களில் அடியேனும் ஒருவனே.
இப்பதிவு எனக்கென்றே எழுதப்பட்ட ஒன்றாகவே எடுத்துக்கொள்கிறேன்.
அந்த கேள்வி தங்கள் வகுப்பறையில் பாடம் படிக்க ஆரம்பித்த காலத்தில் ஏற்பட்ட ஒன்று ஐயா.
இப்போதெல்லாம் மனம்
"எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை."
-என்னும் தங்களின் கருத்துக்களை உள்வாங்கி கொண்ட பின் ஏற்படுவதில்லை ஐயா.
சில படிநிலைகளை தாண்டி முன்னேறிய பின் சில முயற்சிகள் குழந்தைத்தனமாக தோன்றுமில்லையா அப்படியான ஒன்றே அது ஐயா!
முகம்மறைத்து வெட்கங்கொண்ட அனுபவத்துடன்,
மணிவண்ணன் நம்பியப்பன்./////
நல்லது.உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி நண்பரே!!!!
////Blogger Manivannan said...
ReplyDeleteஆசிரியர் வகுப்பறைப்பாடத்தை இணையவெளியில் எழுதிக்கொண்டு இருந்த போது நான் என் உயர்நிலை வகுப்பறைப்பாடத்தை ஓட்டு வெளிகளில் அமர்ந்து கற்றுக்கொண்டிருந்த காரணத்தினால் தான் தங்களின் சிறப்பு வகுப்பறைப்பாடத்திற்கு அனுமதி கிடைக்காமலே போயிற்று. அதை எண்ணி சிறிது வருத்தமே.
எனினும் தங்களின் வகுப்பறைப்பாடங்கள் அனைத்தும் மேன்பட்ட முறையில் 4 தொகுதிகளாக புத்தகங்களாக வரப்போவதை எண்ணி மகிழ்ந்தேன்.
அந்த புத்தங்களின் வருகையை மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
மகிழ்ச்சிகளுடன்,
மணிவண்ணன் நம்பியப்பன்/////.
உங்களின் ஆர்வத்திற்கு நன்றி. முயற்சி செய்து புத்தகத்தின் மற்ற பகுதிகளை கூடிய விரைவில் வெளியிட ஏற்பாடு செய்கிறேன். நன்றி!!!!