மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.6.17

அன்றே சொன்னது அருமையாக உள்ளது!


அவ்வையார் என்றால் நமக்கெல்லாம் சட்டென்று நினைவிற்கு வருவது கே.பி.எஸ் அவர்கள்தான். அதனால் அவர்கள் படத்தையே இங்கே கொடுத்துள்ளேன்!!!!
----------------------------------------------------------------------------------------------------------
அன்றே சொன்னது அருமையாக உள்ளது!

நம் முன்னோர்கள், நாம் தெரிந்துகொள்ள வேண்டியதை எல்லாம் நச்’ சென்று நாலு வரிகளிலேயே சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

நமக்குத்தான் அவற்றைப் படிப்பதற்கு நேரமுமில்லை. படித்தால் கடைப்பிடிப்பதற்கு மனமுமில்லை.

கடைப்பிடிப்பதும் கடைப்பிடிக்காததும் உங்கள் விருப்பம். யாரும் உங்களைக்கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் தெரிந்தாவது
வைத்துக்கொள்ளலாம் இல்லையா?

உங்களுக்காக ஒரு பழைய பாடலை - அசத்தலான பாடலைக் கொடுத்துள்ளேன்.  படித்து மகிழுங்கள். முடிந்தால் கடைப்பிடித்துப் பயன் அடையுங்கள்
-----------------------------------------------------------------------
நல்ல காரியங்களுக்கு ஒரு ரூபாய்கூட செலவழிக்காமல், ஒட்டு மொத்தமாகச் சேர்த்துவைக்கப்படும் செல்வத்தின் அதாவது பணத்தின் நிலைமை  என்ன ஆகும்?

நீங்கள் யாருக்காக அத்தனை கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கின்றீர்களோ, அந்த செல்வங்கள், உங்களுக்குப் பிறகு, அதாவது நீங்கள் சனீஷ்வரனிடம்  போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மேல் உலகம் சென்ற பிறகு, நீங்கள் சேர்த்து வைத்துவிட்டுப்போன செல்வங்கள், உங்கள் வாரிசுகளால் அல்லது
அவர்களின் வாரிசுகளால் என்ன நிலமைக்கு உள்ளாகும் என்பதை ஒளவை மூதாட்டி அழகாக நான்கே வரிகளில் நச்’சென்று சொல்லியுள்ளார்.

முதலில் பாடலைப் பாருங்கள்:

“நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளையர்க்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்!”
- ஒளவையார்

நம்பன் அடியவர்க்கு - சிவனின் அடியவர்களுக்கு
நல்காத் திரவியங்கள் - மனமுவந்து வழங்காத செல்வங்கள்
பம்புக்காம் - சூனிய வித்தைகளுக்கும்
பேய்க்காம் - பேய் வழிபாடுகளுக்கும்
பரத்தையர்க்காம் - தாசிகளுக்கும்
வம்புக்காம் - வீண் செலவுகளுக்கும்
கொள்ளையர்க்காம் - கொள்ளை கொடுப்பதற்கும்
கள்ளுக்காம் - மதுவிற்கும்
கோவுக்காம் - பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்
சாவுக்காம் - அவனுடைய சாவிற்கும்
கள்ளர்க்காம் - கள்வர்களால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும்
தீக்காகும் - நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்கும்
காண் - உரியனவாகும் என்று தெரிந்து கொள்வாயாக!

இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பொருள் கொள்ள வேண்டும். அடியார்கள் என்பவர்கள் உலகம் மேன்மையுறப் பாடுபடுபவர்கள் என்று பொருள்  கொள்ளுங்கள்.

சூனிய வித்தைகள் என்பதை இன்றைய காலகட்டத்தில், குதிரை ரேஸ், லாட்டரி சீட்டுக்கள், சீட்டாட்டம், விளயாட்டுக்களை வைத்து நடைபெறும்  சூதாட்டங்கள் (betting)  என்று பொருள் கொள்ளுங்கள்

பேய்வழிபாடுகள் என்பதற்கு கடலை போடும் பெண்களைக் கூட்டிக்கொண்டுபோய், அல்லது நமது தீய நட்புக்களைக் கூட்டிக்கொண்டுபோய் - அதாவது கஃபிற்கும், ப்ஃபிற்கும் அல்லது பார்களுக்கும் கூட்டிக் கொண்டுபோய்ச் செய்யும் செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்

பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும் என்பதற்கு, வம்பு, வழக்கு, நீதிமன்றத்தண்டனை போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு செய்யும்  செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்

சாவிற்கும் என்பதற்கு, தீராத நோய் நொடிகள் வந்து லட்சக்கணக்கில் சாகும்வரை செய்யப்படும் மருத்துவச் செலவுகள் என்று பொருள்  கொள்ளுங்கள்

மற்ற வீண் செலவுகளுக்குச் சொல்லப்பட்டிற்கும் வார்த்தைகள் எல்லாம் எளிய சொற்களே. அதில் பொதிந்துள்ள பொருள் அனைவருக்கும் விளங்கும்படியாகவே உள்ளது. ஆகவே அவற்றிற்கு விளக்கம் சொல்லவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி என்ன செய்ய வேண்டும்?

அளவு முக்கியமில்லை! உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை - அதாவது 5% முதல் 10% வரை - எடுத்துக்காட்டுக்காகச் சதவிகிதத்தில்
சொல்லியிருக்கிறேன் - நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்.

தர்ம காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்.

இறைப்பணிக்கு, கல்விப்பணிக்கு, ஏழைப் பெண்களின் திருமணங்கள் போன்றவற்றிற்கு, வறியவர்களுக்கு, முதியவர்களுக்குத் தானமாகக் கொடுங்கள். அன்னதானம் செய்யுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவர் களுக்குக் கொடுங்கள். செய்யுங்கள். அதுதான் தானமாகும்.

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

kmr.krishnan said...

நல்லுரைக்கு நன்றி ஐயா!

அனபர்கள் அவ்வையின் சொற்கேட்டு தானம் செய்ய விரும்பினால் என்னுடன் தொடர்பு கொள்க. தஞ்சையில் அடியேன் தானமாக அளித்துள்ள சிறிய நிலத்தில் சேவாலயா என்ற தொண்டு நிறுவனம் முதியோர் இல்லம் கட்ட இருக்கிறார்கள்.www.sevalaya.org
கட்டிட வேலைக்கும் மற்ற தளவாடங்களுக்கும் தானம் அளிக்கலாம். வருமான வரிக்கழிவு வசதி உள்ளது. வெளிநாட்டு தானங்கள் பெற ரிசர்வ் வங்கி அனுமதி உள்ளது.

மேலும் நாள் தோறும் 100 பஞ்சாயதுப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கிறோம். ஒரு நாள் சிலவு ரூ2000/‍ ஆகிறது.

K.MUTHURAMAKRISHNAN CELL: 90475 16699
MAIL ID: kmrk1949@gmail.com

Ravi Raina said...

Kalai vanakkam... Vathiyare...

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Migavum arumaiyana pathivu sir, doing good deed helps the soul to attain moksha and future generations will live healthy and happiest life

adithan said...

வணக்கம் ஐயா,நல்ல சிந்தனைகள்.முடிந்தவரை,தகுதியானவர்களுக்கு உதவும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் மகழ்சியும்,கிடைக்கும் வாழ்த்துகளும் வேறு எதற்க்கும் ஈடாகாது.நன்றி.

siva kumar said...

வணக்கம் ஐயா

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
நல்லுரைக்கு நன்றி ஐயா!
அனபர்கள் அவ்வையின் சொற்கேட்டு தானம் செய்ய விரும்பினால் என்னுடன் தொடர்பு கொள்க. தஞ்சையில் அடியேன் தானமாக அளித்துள்ள சிறிய நிலத்தில் சேவாலயா என்ற தொண்டு நிறுவனம் முதியோர் இல்லம் கட்ட இருக்கிறார்கள்.www.sevalaya.org
கட்டிட வேலைக்கும் மற்ற தளவாடங்களுக்கும் தானம் அளிக்கலாம். வருமான வரிக்கழிவு வசதி உள்ளது. வெளிநாட்டு தானங்கள் பெற ரிசர்வ் வங்கி அனுமதி உள்ளது.
மேலும் நாள் தோறும் 100 பஞ்சாயதுப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கிறோம். ஒரு நாள் சிலவு ரூ2000/‍ ஆகிறது.
K.MUTHURAMAKRISHNAN CELL: 90475 16699
MAIL ID: kmrk1949@gmail.com/////

உங்களின் தர்ம சிந்தனையும் பொது சேவையும் வாழ்க! உங்களின் பணி தொடரட்டும்.
பதிவைப் படிப்பதுபோலவே பின்னூட்டங்களையும் அதற்கான எனது பதிலையும் படிப்பவர்கள் அதிகம்.
ஆகவே இதைப் படிப்பவர்கள் உங்களுக்கு உதவ முன் வருவார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி! வணக்கம்
அன்புடன்
வாத்தியார்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..

Subbiah Veerappan said...

////Blogger Ravi Raina said...
Kalai vanakkam... Vathiyare...////

நல்லது. நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Migavum arumaiyana pathivu sir, doing good deed helps the soul to attain moksha and future generations will live healthy and happiest life////

உண்மைதான். வாழ்க வளமுடன். நன்றி!!!!

Subbiah Veerappan said...

////Blogger adithan said...
வணக்கம் ஐயா,நல்ல சிந்தனைகள்.முடிந்தவரை,தகுதியானவர்களுக்கு உதவும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் மகழ்சியும்,கிடைக்கும் வாழ்த்துகளும் வேறு எதற்க்கும் ஈடாகாது.நன்றி.////

உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

Subbiah Veerappan said...

////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா/////

வணக்கம் சகோதரரே!!!!!