மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

15.6.17

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

கல்வி, வைத்தியம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மப் பணிகள். அதெல்லாம் முற்காலத்தில். அத்தொழிலைச் செய்பவர்களுக்கெல்லாம் மன்னர் மானியம் தருவார். அதனால் அன்றைய காலகட்டத்தில் அது சாத்தியப்பட்டது.

இப்போது மன்னர்களையும் ஒழித்துவிட்டார்கள். அதோடு அவர்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தையும் ஒழித்துவிட்டார்கள். எல்லாம் கலியுகம். கலி முற்றிக்கொண்டு வருகிறது.

இப்போது அவை மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழில்!

சரி, போகட்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். வகுப்பறைக்கு வருபவர்களில் சிலர் (தனி மின்னஞ்சல் மூலமாக) கேட்கும் முக்கியமான கேள்விகள் இரண்டு உண்டு!

1. சார், எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)
2. சார், நான் ஜோதிடராகப் பணி புரிய ஆசைப் படுகிறேன். அதற்கான வாய்ப்பு (என் ஜாதகப்படி) எனக்கு உண்டா?

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! அத்துடன் கற்றுக்கொண்டவை அவ்வப்போது மறந்து போகாமல் இருப்பதற்கு, நினைவாற்றல் முக்கியம். முக்கியமான விதிகளைத் திரும்பத் திரும்பவும் படிக்க வேண்டும்.

புரிதலுக்கும், நினைவாற்றலுக்கும், ஜாதகப்படி (அதைச் சொல்லாவிட்டால் கடைசி பெஞ்ச் கண்மணி விடமாட்டாரே) புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். வலு என்றால் என்ன என்பதைப் பலமுறை சொல்லித்தந்திருக்கிறேன். புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கேந்திரங்கள் அல்லது திரிகோணங்களில் இருந்தால் நல்லது.

விளக்கம் போதுமா?

போதாது!

இரண்டாவது கேள்வி பாக்கியுள்ளது.

நீங்கள் ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதுடன், பலரது ஜாதகத்தைப் பார்த்து, அலசி, பலன் சொல்லி, அவர்கள் அதைக்கேட்டு முகம் மலர்ந்த அனுபவம் வேண்டும். ஜோதிடத் தொழில் முதலில் டல்’ லடிக்கும். நீங்கள் பிரபலமான பிறகு, உங்களிடம் வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவார்கள். பலரையும் கூட்டிக் கொண்டு வருவார்கள். அல்லது பலரையும் அனுப்பி வைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க முடியும்!

“அந்தக் கதை எல்லாம் வேண்டாம். ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்? அதைச் சொல்லுங்கள்”

புதன் (Planet for Astrology) வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.

ஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியமாக நீங்கள் அட்டை (Board) மாட்டி ஜோதிடம் சொல்லத் துவங்குவதற்கு உங்களுக்கு நல்ல தசா புத்தி நடைபெறவேண்டும்

அதெல்லாம் எதற்கு?

எதையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆகவே இந்தக் கட்டுரையின் ஏழாம் பத்தியை மீண்டும் ஒருமுறை தருகிறேன். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! இறையருளால் நமக்கு வேறு தொழில் இருக்கிறது. ஆகவே கற்றுக்கொள்வதுடன், அதைவைத்து நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்வதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்!

என்ன சரிதானா?

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Truely said sir thanks sir

Unknown said...

ஐயா வணக்கம், 6ல் சுக்கிரன் மறைவு ஸ்தானம் 7ல் புதன் இருவரும்
பாரிவார்தனை தயவு செய்து பலன் கூறுங்கள் எனக்கு 29 வயதிகும் இதுவரை வேலை
கிடைக்கவில்லை திருமணம் ஆகவில்லை

Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Truely said sir thanks sir////

நல்லது. நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

///Blogger Unknown said...
ஐயா வணக்கம், 6ல் சுக்கிரன் மறைவு ஸ்தானம் 7ல் புதன் இருவரும்
பாரிவார்தனை தயவு செய்து பலன் கூறுங்கள் எனக்கு 29 வயதிகும் இதுவரை வேலை
கிடைக்கவில்லை திருமணம் ஆகவில்லை//////

உங்கள் பெயர் என்ன? ஏன் Unknown என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?
முதலில் கிடைக்கிற வேலையில் சேருங்கள். வேலையில் இருந்தால் அல்லவா திருமணம் ஆகும்?
என்ன லக்கினம்? அது முக்கியமில்லையா?

adithan said...

வணக்கம் ஐயா,நீங்கள் சொல்வது சரிதான்.ஆர்வமிருந்தாலும்,ஜாதகத்தில் அமைப்பில்லாவிடில், அதிகம் படிக்க,படிக்க குழப்பம்தான் மிஞ்சும் போலும்.நன்றி.

Vasanth said...

I agree. Sir..in my horoscope budhan in midhunam..own house along with Venus..but it is sixth house from Lagana magara laknam

கார்த்திக் Sree Vadivel Tex said...

ஐயா,
My DOB 24.12.1987 TIME 6.10 am PLACE Palladam

CONFUSION IN PREDICTING CORRECT NAKSHATRA...
some astrologer says as AVITTAM and few says as THIRUVONNAM....
Hope this problem is due to ayanamsam difference....what would be my correct nakshatra....

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,நீங்கள் சொல்வது சரிதான்.ஆர்வமிருந்தாலும்,ஜாதகத்தில் அமைப்பில்லாவிடில், அதிகம் படிக்க,படிக்க குழப்பம்தான் மிஞ்சும் போலும்.நன்றி./////

உண்மைதான். உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி ஆதித்தன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger Vasanth said...
I agree. Sir..in my horoscope budhan in midhunam..own house along with Venus..but it is sixth house from Lagana magara laknam/////

நல்லது. நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

/////Blogger கார்த்திக் Sree Vadivel Tex said...
ஐயா,
My DOB 24.12.1987 TIME 6.10 am PLACE Palladam
CONFUSION IN PREDICTING CORRECT NAKSHATRA...
some astrologer says as AVITTAM and few says as THIRUVONNAM....
Hope this problem is due to ayanamsam difference....what would be my correct nakshatra..../////

திருவோணம் 4ம் பாதம்.தனுசு லக்கினம்!!!

கார்த்திக் Sree Vadivel Tex said...

ஐயா,

எனது கேள்விக்கு பதில் அளித்ததற்க்கு மிக்க நன்றி....

குரு பார்க்க கோடி புண்ணியம் என்பீர்களே......

தாங்கள் (குரு) எனது ஜாதகத்தை பார்த்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி...........

angr said...

ஜோதிடர்களுக்கு 2ல் சனி,அல்லது பார்வை சம்பந்தம் இருக்கவேண்டும்.அனுபவமூலம் அறிந்துள்ளேன்

Lakshmi Narayanan Balasubramanian said...

அருமை வாத்தியார் அவர்களே!!!

கிரகங்களும், அதனால் ஏற்படும் மனித குணங்களும்ன்னு ஒரு அலசல் பாடம் தேவை...

அதில், கோபம், கருணை, பொறுமை, தந்திரம், ஆன்மிகம், பொருளீட்டல், இவற்றுள் எது ஜாதகருக்கு அதிகம் உள்ளது என ஒரு பழரசம் தேவை, எல்லா மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்... கேள்வி தவறு எனில் மன்னிக்கவும்.அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

Subbiah Veerappan said...

////Blogger கார்த்திக் Sree Vadivel Tex said...
ஐயா,
எனது கேள்விக்கு பதில் அளித்ததற்க்கு மிக்க நன்றி....
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பீர்களே......
தாங்கள் (குரு) எனது ஜாதகத்தை பார்த்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.........../////

பரவாயில்லை. அதற்கு ஒரு நன்றியும் பின்னூட்டமுமா?

Subbiah Veerappan said...

////Blogger angr said...
ஜோதிடர்களுக்கு 2ல் சனி,
அல்லது பார்வை சம்பந்தம் இருக்கவேண்டும்.அனுபவமூலம் அறிந்துள்ளேன்/////

உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!!!

Subbiah Veerappan said...

////Blogger Lakshmi Narayanan Balasubramanian said...
அருமை வாத்தியார் அவர்களே!!!
கிரகங்களும், அதனால் ஏற்படும் மனித குணங்களும்ன்னு ஒரு அலசல் பாடம் தேவை...
அதில், கோபம், கருணை, பொறுமை, தந்திரம், ஆன்மிகம், பொருளீட்டல், இவற்றுள் எது ஜாதகருக்கு அதிகம் உள்ளது என ஒரு பழரசம் தேவை, எல்லா மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்... கேள்வி தவறு எனில் மன்னிக்கவும்.
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி./////

நேரம் கிடைக்கும்போது பின்னொரு நாளில் எழுதுகிறேன். பொறுத்திருங்கள். நன்றி!!!!

தனிமரம் said...

அருமையான விளக்கம் ஐயா!

Subbiah Veerappan said...

////Blogger தனிமரம் said...
அருமையான விளக்கம் ஐயா!////

நன்றி! தனிமரமாக இருக்காதீர்கள்!! ஒரு துணையைத் தேடிக்கொண்டு தோப்பாக மாறுங்கள்!!!!