மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

15.3.17

நான் என்ற எண்ணம் வேண்டவே வேண்டாம்!!!!!


நான் என்ற எண்ணம் வேண்டவே  வேண்டாம்!!!!!

*நான்... நான்... நான்...*_

*நான்* சம்பாதித்தேன்,
*நான்* காப்பாற்றினேன்,
*நான்* தான் வீடு கட்டினேன்,
*நான்* தான் உதவி  செய்தேன்,
*நான்* உதவி  செய்யவில்லையென்றால்,  அவர்  நிலைமை என்ன ஆகும்?
*நான்*  பெரியவன்,
*நான்*  தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன், *நான்  நான்  நான்  நான்*  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!...

*நான்*தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்*  தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்*  தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்*  தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல

முடியுமா??

*நான்*  தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?

*நான்*  தான்  காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா ?

*நான்* தான் கடலில்  மீன்  பிடிக்கிறவனுடைய வலையில்  மீனை சிக்க  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்

உண்டு..

ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.
*அன்பே* அனைத்து துன்பப் பூட்டையும் திறக்கும் திறவுகோல்.

ஆகையால் நாம் *அன்பை பரிமாறிக் கொள்வோம்*
*அன்புடன்*
*நான்* அல்ல
நாம்.
------------------------------------------
2
*ஏழுவித_ஆச்சரியங்கள்*

1. *மரணம்*என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள்,  கவலைப்படாமல்,
தன் கடமைகளச் செய்யாமல் *சிரித்துக் கொண்டிருப்பது* ஆச்சரியம்...

2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்* என்பதை அறிந்த மனிதன், *உலகத்தின்மீது*
*மோகம்* கொண்டிருப்பது ஆச்சரியம்...

3. எந்த ஒரு செயலும் *இறைவன் விதித்தபடியே நடக்கும்* என்பதை அறிந்த மனிதன்,
கைநழுவிச் சென்றவற்றை எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது* ஆச்சரியம்...

4. *மறுமை வாழ்க்கைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே இருப்பதை  நம்புகின்ற மனிதன்,
அதனைப் பற்றி *அக்கறையின்றி* வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...

5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன், அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு* செய்வது ஆச்சரியம்...

6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை* நிறை வேற்றுவது ஆச்சரியம்...

7. *சுவர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன், *உலக செல்வங்களை சேர்த்து* வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது
*ஆச்சரியம்...!*

*ஆச்சரியம்...!*
*ஆச்சரியம்...!*
*ஆச்சரியம்...!*
-------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

ravichandran said...

Respected Sir,

Happy morning... Excellant post.

Have a great day.

Thanks & Regards,
Ravi-avn

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
இரண்டு விதமான தகவல்கள். இரண்டுமே தத்துவார்த்தங்கள்!
மனிதன் தன் அறியாமையால், தானும்,
இவ்வுலகில் காணும் மற்ற யாவும்
மாயை என்பதை உணராமல், அவற்றின் மீது பற்று வைத்து, அதனால் தொடர்ந்து அகம்பாவத்தால்
பாபச் செயல்களில் ஈடுபட்டு,மீளாத் துயருக்கு ஆளாகி, அதன் பொருட்டு,
மீண்டும் பிறவிப் பிணிக்கு உட்படுகிறான்!
என்று தணியும் மனிதனின் இந்த ஆசையும், மோகமும்!?
தங்களின் இன்றைய பதிவு விறுவிறுப்பு!

adithan said...

வணக்கம் ஐயா,நான் என்று சொல்லும்போது இதழ்கள் கூட ஒட்ட மறுக்கின்றன.நாம் என்று சொல்லும்போது அவை இணக்கமாய் இணைகின்றன.நாம் என்ற வார்த்தைக்கே இவ்வளவு சக்தியென்றால்!நான் எனும் செருக்கொழித்தால்,அன்பு பிராவகமெடுத்து பூலகமே சொர்கமாய் மாறுமல்லவா!?.நன்றி.

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Excellant post.
Have a great day.
Thanks & Regards,
Ravi-avn////

நல்லது. நன்றி அவனாசி ரவி!!!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
இரண்டு விதமான தகவல்கள். இரண்டுமே தத்துவார்த்தங்கள்!
மனிதன் தன் அறியாமையால், தானும்,
இவ்வுலகில் காணும் மற்ற யாவும்
மாயை என்பதை உணராமல், அவற்றின் மீது பற்று வைத்து, அதனால் தொடர்ந்து அகம்பாவத்தால்
பாபச் செயல்களில் ஈடுபட்டு,மீளாத் துயருக்கு ஆளாகி, அதன் பொருட்டு,
மீண்டும் பிறவிப் பிணிக்கு உட்படுகிறான்!
என்று தணியும் மனிதனின் இந்த ஆசையும், மோகமும்!?
தங்களின் இன்றைய பதிவு விறுவிறுப்பு!////

நல்லது. தங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,நான் என்று சொல்லும்போது இதழ்கள் கூட ஒட்ட மறுக்கின்றன.நாம் என்று சொல்லும்போது அவை இணக்கமாய் இணைகின்றன.நாம் என்ற வார்த்தைக்கே இவ்வளவு சக்தியென்றால்!நான் எனும் செருக்கொழித்தால்,அன்பு பிராவகமெடுத்து பூலகமே சொர்கமாய் மாறுமல்லவா!?.நன்றி./////

உண்மைதான். புரிந்துணர்விற்கு நன்றி ஆதித்தன்!!!!