மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

21.3.17

செவ்வாய் தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்?


செவ்வாய் தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

அதற்கான பதில் கட்டுரையின் நடுவில் வருகிறது. முதலில் கட்டுரையை முழுவதுமாகப் படியுங்கள்!!!
-------------------------------------------------------------------------------
"வைத்தீஸ்வரன் கோயில்  [புள்ளிருக்கு வேளூர்] தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி  திருக்கோயில்".

சீர்காழியிலிருந்து 6 கி.மீ. தருமை ஆதினத்தின் மேற்பார்வையில் இக்கோயில் உள்ளது!

நாளொரு விழாவும், பொழுதொரு சிறப்பு பூஜைகளும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

குமரகுருபர ஸ்வாமிகள் இந்த முத்துக்குமாரனுக்குப் பிள்ளைத்தமிழ் இயற்றி,கொண்டாடியிருக்கிறார்.

தருமை ஆதீன குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் இயற்றிய ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருவருட்பாகூட இத்தல  முருகனை,முத்துக்குமரனை ஆராட்டுகிறது,.

முருகன் செல்வ முத்துக் குமரன் எனும் பெயரோடு வள்ளி,தெய்வயானை உடன் விளங்குகின்றார்.இங்கு அர்த்த சாமப்பூஜை செல்வ முத்துக்குமார சுவாமிக்குச் செய்த
பின்புதான் ஈசனுக்கு செய்யப் பெறுகின்றது.

அர்த்தசாமப் பூஜையின்போது முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப் பெறும் சந்தனமான ‘நேத்திரிப்படி’ [புழுகாப்பு] சந்தனம் தீராத கொடிய நோய்களையும் அகற்றும்.இங்கு உள்ள பழனி ஆண்டவர் சன்னதி சகல வளம்களையும் அள்ளித்தரும்.அப்பர் சுவாமிகள்,''மந்திரமும் தந்திரமும்
மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னை'' என்று வைத்தீஸ்வரனைப் பாடுகிறார்.

உண்மையில் சிவனும் உமையும் இத்திருத்தலத்தில் வைத்தியர்களாக அமர்வதற்குக் காரணமாயிருந்தவன் அவர்களுடைய செல்லப்பிள்ளையான
முத்துக்குமாரன்தான் .தாரகாசுரனோடு போர் புரிந்த நேரத்தில் முருகனுடைய பூதப்படை வீரர்கள் பலர் காயமுற்றுச் செயலிழந்தனர். அவர்களைக் குணப்படுத்திக்காப்பாற்றியாகவேண்டும். அந்த ஆற்றல் முருகனுக்கே இருந்தபோதிலும் அதனை அம்மையப்பர்களின் பொறுப்பாக்கி, அவர்களே உலகம் உய்யச் செய்பவர்கள் என்று உணர்த்த விரும்பினான் முருகன்.

இருவரையும் வேண்டி அழைக்க, அவர்கள் வைத்தியநாதராகவும் தையல் நாயகியாகவும் வந்தமர்ந்த இடம்தான் வைத்தீஸ்வரன் கோயில்.

மனித இனத்தை எல்லாப் பிணிகளிலிருந்தும் நீக்குவதற்காக இங்கு குடிகொண்டுள்ளார் வைத்தியநாதர்.இத்திருக்கோயில் திருக்குளத்தில் நீராடி,சுவாமி அம்பாள் வழிபாடு அர்ச்சனை செய்து,இங்கு தரப்படும் ''திருச்சாந்துருண்டை'' என்னும் பிரசாதம் வாங்கி உண்டு வந்தால் வெகு விரைவில் உடல்,மன நோய்கள் குணமாகும்,.

உடல் ,மன  நோய்கள் குணமாகியதும் முன்பு போல ஆலயம் வந்து முடி காணிக்கை செலுத்தி நீராடி, வழிபட்டு  ஈசன்,அம்பாள்,விநாயகர்,பைரவர்,காளி,அங்காரன்,பைரவர் ,தன்வந்தரி வழிபடுவது நலம் பயக்கும்.இத்தலத்தில் வில்வத்தையும், சந்தனத்தையும், விபூதியையும் கலந்தளித்து சிவபெருமான் வழங்கிய மருந்தே எல்லா நோய்களையும் தீர்த்த்தென்று இத் திருத்தலப் புராணம் பகர்கிறது.

அதன்படி இன்றும் இங்கு ஆலயத்தின் சார்பில் பிரத்தியேகமாக  ''திருச்சாந்துருண்டை''என்னும் மருந்து தயாரித்து அளிக்கிறார்கள். இந்த திருச்சாந்துருண்டையை எடுத்துக்கொண்டால், இப்பிறவியில் பீடித்துள்ள நோய் மட்டுமின்றி, இனி எடுக்கப்போகும்  பிறவிகளுக்கும் எந்த நோயும் அண்டாது என்று கூறப்படுகிறது.

புள்(ஜடாயு). இருக்கு (ரிக்வேதம்), வேள் (முருகன்),  ஊர்(சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது.    

அங்காரகன் வழிபட்ட திருத்தலம். அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது. அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு.இரண்டும் தனித்தனிச் சந்நிதிகளாக உள்ளன.

அங்காரக தோஷம்  (செவ்வாய் தோஷம்) உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் தோஷம் நீங்கப் பெறுவர்.'

''தெற்கில் கணேசன் திகழ்மேற்கில் பைரவரும்,
தொக்கவடக்கில் தொடர்காளி மிக்க கிழக்கு
உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன்,
புள்ளிருக்கு வேளூரிற்போய்''
எனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும்,மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும்

காவல் புரிகின்றனர் என்று அறியலாம்.

கோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது.கொடிய நோய்  தீர இங்கு வெல்லக்கட்டி கரைத்து பயன் அடையலாம்.

தன்வந்திரி,சப்த கன்னிகள் சன்னதிகளும் உள்ளன.இங்கு ஈசன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ளார்.அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைலபாத்திரமும்,அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர,இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளாகின்றனர்.இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம்
முதலானவையும் கூட அகலும்என்பர்.

''பேராயிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
[அப்பர்]......

"நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப் பெற்றேன்?"
."வர இருக்கும் பிறவியிலும்  வாழ்த்திடுவேன் நின் அருளை".
"நாயேனை ஆட்கொண்டஅண்ணாமலையானைப் பாடுதும் காண்".
"நாயேனை நாளும் நல்லவனாக்க, ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்"..
."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,
வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,
எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்"
--------------------------------------------------------
செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது எப்படித் தெரியும்?

திருக்கணித முறையில் 34 பக்க ஜாதகக் கணிப்பில் அது விபரமாகக் கொடுக்கப்பெற்றிருக்கும்!!!

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

ravichandran said...

Respected Sir,

Happy morning.... Nice Spiritual post.

Have a holy day.

Thanks & regards,
Ravi-avn

kmr.krishnan said...

good information.Thank you Sir.

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
மிக நல்ல பயனுள்ள தகவல்கள்!

Unknown said...

Good information about the temple.

How parikarams or visiting temples will void the astrological chart yoga/dosha? Chevvai dosha is related with blood in medical astrological view and if you consult with another astrologer they will still say you got the dosha.

Not saying god don't have the ability to cute anything, but it's people who can't make to that receptive point.

Also logical astrological thinking is not allowing me to accept it. As astrology is common for atheist and religious. Hindu or Christian. Fate prevails.

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning.... Nice Spiritual post.
Have a holy day.
Thanks & regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
good information.Thank you Sir./////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
மிக நல்ல பயனுள்ள தகவல்கள்!////

நல்லது. நன்றி வரதராஜன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger Unknown said...
Good information about the temple.
How parikarams or visiting temples will void the astrological chart yoga/dosha? Chevvai dosha is related with blood in medical astrological view and if you consult with another astrologer they will still say you got the dosha.
Not saying god don't have the ability to cute anything, but it's people who can't make to that receptive point.
Also logical astrological thinking is not allowing me to accept it. As astrology is common for atheist and religious. Hindu or Christian. Fate prevails.//////

Not visiting temples. Praying god என்று திருத்திக் கொள்ளுங்கள்!
காலையில் எழுந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் இரவில் படுக்கிறோம். ஊருக்குப் போய்ச் சேர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் தான் பயணிக்கிறோம். வாழ்க்கையே நம்பிக்கையை வைத்துத்தான்!!!
விதியை வைத்துத்தான் எல்லாம். விதி வலியது. விதியை விதிக்கப்பெற்றதை மாற்ற முடியாது.
அறத்துப் பாலில் கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை கடைசி அத்தியாயமாக ஊழ்வினையைப் (Destiny) பற்றித்தான் 10 குறள்களை எழுதியுள்ளார். நானும் விதியை நம்புகிறவன் தான்.
ஆனாலும் தாக்குப் பிடிக்கும் சக்தியை இறைவன் அளிப்பார்,
ஜாதகப் பொருத்தம் பார்த்து செய்யப்பெற்ற திருமணங்கள் எல்லாம் வெற்றிகரமாக அமைந்துள்ளதா?
அதுபோல செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் குழப்பம் அடையாமல் இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது மட்டும்தான் கட்டுரையின் நோக்கம். Take it in the right sense நண்பரே!!!!!1

adithan said...

வணக்கம் ஐயா,தெரியாத தகவல்கள் பல.நன்றி.

Subbiah Veerappan said...

////Blogger adithan said...
வணக்கம் ஐயா,தெரியாத தகவல்கள் பல.நன்றி.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!