மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

14.2.17

சனீஷ்வர பாதிப்பிற்கான பரிகாரம்!


சனீஷ்வர பாதிப்பிற்கான பரிகாரம்!

யாரும் சனியோட கடுமையால் கடுமையாக பாதிக்க படக் கூடாது என்பதற்காக சித்தர்கள் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்...

சனிக்கிழமை அன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்து விட்டு, அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப் பெருமானை மூன்று சுற்று சுற்றி விட்டு அந்த அரிசியை விநாயகரை சுற்றிப் போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.

அப்படித் தூக்கி சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய் விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் ,அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதைச் செய்யவும்.

அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழை காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும்.

எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள்
எடுத்துக் கொள்ளும்.

இப்படி இரண்டே கால் வருடங்கள் வரை எறும்புக் கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.இரண்டரை
ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்து போய் விடும்.இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை
எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பேர்களுக்கு அன்னதானம் செய்ததற்குச் சமம்.

எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி,சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.
====================================================
படித்தேன்; பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

kmr.krishnan said...

இவ்வளவு எளிய பரிஹாரங்கள் இருக்கும் போது ஏன் ஐயா சில ஜோதிடர்கள்
ஆயிரம் ல‌ட்சத்தில் செலவு செய்ய வைக்கிறார்கள்.

adithan said...

வணக்கம் ஐயா,எளிய காரியம்.எல்லோரும் எளிதாக கடைபிடிக்கலாம்.நன்றி.

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
இவ்வளவு எளிய பரிஹாரங்கள் இருக்கும் போது ஏன் ஐயா சில ஜோதிடர்கள்
ஆயிரம் ல‌ட்சத்தில் செலவு செய்ய வைக்கிறார்கள்./////

நமது அறியாமைதான் காரணம். உங்களின் பின்னூட்ட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger adithan said...
வணக்கம் ஐயா,எளிய காரியம்.எல்லோரும் எளிதாக கடைபிடிக்கலாம்.நன்றி./////

நல்லது. நன்றி ஆதித்தன்!!!

Anonymous said...

Ennai pondra eliyavarukku....
sirantha parikaaram guruve....

Unknown said...

மிக உதவிகரமான தகவல் ஐயா. நான் ரிசப ராசி. அஷ்டம சனியின் பாதிப்பினால் சென்ற வாரம் விபத்தில் சிக்கி கை முறிந்து சிரமப்பட்டு
க் கொண்டு இருக்கின்றேன். தாங்கள் கூறிய பரிகாரத்தை செய்கிறேன் ஐயா.

ச கார்த்திகேயன்,
கரூர்.

bala said...

Vanakkam iyya,

Intha eliya parikaarathai naan indru seithen... Vanni mara adiyil irukum pillayarai vanangi seithen .... Mikka nandri iyya..

Nandri,
Bala

Subbiah Veerappan said...

/////Blogger Vijay said...
Ennai pondra eliyavarukku....
sirantha parikaaram guruve..../////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger Unknown said...
மிக உதவிகரமான தகவல் ஐயா. நான் ரிசப ராசி. அஷ்டம சனியின் பாதிப்பினால் சென்ற வாரம் விபத்தில் சிக்கி கை முறிந்து சிரமப்பட்டு
க் கொண்டு இருக்கின்றேன். தாங்கள் கூறிய பரிகாரத்தை செய்கிறேன் ஐயா.
ச கார்த்திகேயன்,
கரூர். /////

அப்படியே, தினமும் விக்னேஷ்வர வழிபாட்டையும் செய்யுங்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger bala said...
Vanakkam iyya,
Intha eliya parikaarathai naan indru seithen... Vanni mara adiyil irukum pillayarai vanangi seithen .... Mikka nandri iyya..
Nandri,
Bala/////

நல்லது. நன்றி நண்பரே!

chinna thambi said...

பயனுள்ள தகவல் நன்றி ஐயா......