மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

15.2.17

நமது நிலைமை - சில உண்மைகள்!

நமது நிலைமை - சில உண்மைகள்!

கேவலமான உண்மைகள்!!!!!!

1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ
40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம்.
ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன.
ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதைக்  கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.
பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது.
சாராயம் விற்று கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!
             
11.  வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,  சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

12.   பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும்  ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

13.  தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

 14. முதியோர் இல்லத்திற்கு
பணம் கொடுங்க,
பொருள் கொடுங்க,
உணவு கொடுங்க,
உடை கொடுங்க..
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

15. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு.. அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..

16.  டாக்டரை மறந்து விட்டு நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும் விசித்திரமான உலகம் இது.!

17. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,  ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான் பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

18. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள், பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.

19.  அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..   இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...

20 .கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்.. மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது.!              

21. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்..
ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

 21.  மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

 22.  ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான்,
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.

23.  ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க  - சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க?

24.  அறிவார்ந்த நண்பர்களே! இது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமாய் மனமுவந்து வேண்டுகின்றேன்!!!
-----------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

t.nagoji rao said...

Excellent Sir, Truthful words, also Painful

ravichandran said...

Respected Sir,

Happy morning... All are Excellent sir... Thanks for sharing.

Have a pleasant day.

Thanks & Regards,
Ravi-avn

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
சுவையான முத்துக்கள்!

Kumanan Samidurai said...

Ayya Vanakkam,

Migavum sariyana unmaigal... ithil pala en kannal parkren, anabavikren,

Nandri,

S.Kumanan

J Murugan said...

23. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க - சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க?

இதையும் சேர்த்துக்குங்க...

தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களின் துயரம் தீர்க்க கங்கை காவிரி நதிகளை எல்லாம் இணைப்பது எப்போது...

நதிகளை இணைக்க நிதிக்கு பஞ்சமில்லை அவனவன் கொள்ளையடித்து வைத்துள்ள வடிவத்தைக் கேட்கும்போது...

kmr.krishnan said...

nice Sir

Subbiah Veerappan said...

////Blogger t.nagoji rao said...
Excellent Sir, Truthful words, also Painful//////

ஆமாம். நன்றி நண்பரே!!!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... All are Excellent sir... Thanks for sharing.
Have a pleasant day.
Thanks & Regards,
Ravi-avn////

நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
சுவையான முத்துக்கள்!/////

நல்லது. நன்றி வரதராஜன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger Kumanan Samidurai said...
Ayya Vanakkam,
Migavum sariyana unmaigal... ithil pala en kannal parkren, anabavikren,
Nandri,
S.Kumanan/////

உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger J Murugan said...
23. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க - சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க?
இதையும் சேர்த்துக்குங்க...
தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களின் துயரம் தீர்க்க கங்கை காவிரி நதிகளை எல்லாம் இணைப்பது எப்போது...
நதிகளை இணைக்க நிதிக்கு பஞ்சமில்லை அவனவன் கொள்ளையடித்து வைத்துள்ள வடிவத்தைக் கேட்கும்போது.../////

தேர்தலின் போது வாக்குக்கொடுத்தார்கள். நிறைவேற்றுவார்களா?மாட்டார்களா என்பது தெரியவில்லை!!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
nice Sir/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

adithan said...

வணக்கம் ஐயா,சிந்திக்கவும்,சில சிரிக்கவும் வைத்த வரிகள்.மிகவும் பிடித்த வைர வரிகள்"தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்".நன்றி.

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,சிந்திக்கவும்,சில சிரிக்கவும் வைத்த வரிகள்.மிகவும் பிடித்த வைர வரிகள்"தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்".நன்றி./////

ஆமாம்.அதுதானே உண்மை! நன்றி ஆதித்தன்!!!!

siva shailee said...

Greetings Sir... I copied this "Truth" with your permission to share all... Sorry:))..

By,
Siva shailee