மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.7.10

எமனின் பயோடேட்டா!

இது பழைய படம்; புதிதாக  எடுக்கப்பெற்ற படம் கிடைக்கவில்லை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எமனின் பயோடேட்டா!

”என்ன வாத்தியார், எமனுக்கே பயோடேட்டாவா?”

“நேற்று வந்த தமன்னாவிற்குப் பயோடேட்டா போடும்போது, எமனுக்குப் போட்டால் என்ன ராசா?”
------------------------------------------------------------------------------------------------------------------
1. பெயர்: எமன்

2. முழுப்பெயர்: எமதர்மன்

3. புனைப்பெயர்கள்: காலன், யமராஜா

4. புராணப்பெயர்கள்: The seven names of Yama, viz Yama, Dharma-raja, Mrtyu, Antaka, Vaivasvata, Kala, Sarva-pranahara

5. சைனாவில் அவரின் பெயர்: யான்லோ (Yanluo)

6. ஜப்பானில் அவரின் பெயர்: என்மாவ் (Enma-O)

(இந்த இரண்டு பெயர்களின் உச்சரிப்பை நமது ஜப்பான் மைனர் உறுதி செய்வார்)
Yama also known as Yamaraja in India, Yanluo in China and Enma-O in Japan, The Buddhist Yama became an integral part of Chinese and Japanese mythology.

7. தந்தையின் பெயர்: சூரிய பகவான்

8. தாயாரின் பெயர்: உஷா தேவி

9. உடன் பிறப்பின் பெயர்: சனீஷ்வரன்

10. வயது: அறிந்தவர் யாருமில்லை

11. கல்வித்தகுதி: கவியரசர் கண்ணதாசனைப்போல சுயமாகப் படித்துத் தேறியவர்.

12. திருமணம்: ஆகிவிட்டது.

13. மனைவியின் பெயர்: சியாமளா தேவி

14. வாகனம்: அன்றும், இன்றும், என்றும்: எருமை மாடு (அவருடைய வாகனம் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு வேகமாகச் செல்லக்கூடியது. நீங்கள் லோக்கல் எருமை மாட்டை நினைத்துக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பில்லை)

15. பதவி: Lord of Death

16. இவருக்குப் படியளப்பவர்கள்: (Bosses) Lord Shiva & Lord Vishnu

17. நிரந்தர உதவியாளரின் பெயர்: சித்திரகுப்தன்

18. உறவு என்று சொல்லும்படியாக உள்ளவர்: Greek deity Hades, the god of the underworld.

19. இவரைப் புகழ்ந்து பாடிய ஒரே புலவர்: பாரதியார்.
பாடல்:

"காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்"

 என்னும் புகழ் பெற்ற பாடல். முழுமையான பாடல் வரிகள் பதிவின் இறுதிப்பகுதியில் உள்ளது.

20. ஆயுதம்: தண்டாயுதம்.

21. அடையாளம்: கையில் பாசக் கயிறு இருக்கும். He holds a noose of rope (pāśa) in one hand.

22. இவருடைய செயலகம் இருக்கும் இடம்: பூமிக்குத் தென்திசையில் உள்ளது. விருப்பமுள்ளவர்கள்  சென்று பார்த்துவிட்டு வரலாம். முன் அனுமதி வேண்டும்.

23. இவரைப்பற்றி எழுதப்பட்டுள்ள முக்கியமான நூல்கள்: கருடபுராணம், மார்க்கண்டேயபுராணம்

24. இவருக்கும், இவருடைய உடன் பிறப்பான சனீஷ்வரனுக்கும் உள்ள தொழில் வித்தியாசம்:
சனீஷ்வரன் மனிதனை இறக்கும்வரை வதைப்பார். எமன் இறந்தபிறகு வதைப்பார்
Shani gives us the results of one's deeds through one's life through appropriate punishments and rewards; Yama grants the results of one's deeds after death

25. இவருடைய இரண்டாவது வேலை: மனிதனுடைய நல்ல செயல்களையும், நல்லவை அல்லாத செயல்களையும், ஒன்று விடாமல் கணக்கு எடுத்து, எழுதிவைத்துக்கொண்டு வருபவர் இவர்தான். வங்கி, வருமானவரி, விற்பனைவரி, சேவை வரிக்கணக்குகளை சக மனிதர்கள் எழுதுவதைப் போல இவர் மாற்றி எழுதாமல், அச்சரம் பிசகாமல் சுத்தமாக எழுதிக்கொண்டு வருவார். அதற்கு அவரிடம் எத்தனை ஊழியர்கள், எத்தனை கணினிகள், எத்தனை சர்வர்கள் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.
assigned with the task of keeping complete records of actions of human beings on the earth, and upon their death, deciding to have them reincarnated as a superior or inferior organism, depending on their actions on the earth (Karma). Yama is also the lord of justice and is sometimes referred to as Dharma, in reference to his unswerving dedication to maintaining order and adherence to harmony.

மேலதிகத்தகவல்கள்: இது இளைஞர்களுக்கு மட்டும்!

1. முகவரி: திருவாளர் எமன், எமவிலாஸ், 1,பிரதானச் சாலை, எமப்பாக்கம், எமாபுரி, நரகம்

2. மின்னஞ்சல் முகவரி: yamaraj@yamaloha.org

3. மொபைல் நம்பர்: அழைப்பவர் யாருமில்லை: அதனால் அவர் வைத்துக்கொள்ளவில்லை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த டேட்டா போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

நட்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------

பாரதியின் பாடல் - உங்களுக்காக முழுமையாகக் கொடுத்துள்ளேன்

காலனுக்கு உரைத்தல்
ராகம் - சக்கரவாகம்
தாளம்-ஆதி

பல்லவி

காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன் -அட
(காலா)


சரணங்கள்

வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்; என்றன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கிறேன் -ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே?அட
(காலா)

ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினையறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட
(காலா)

=====================================================
வாழ்க வளமுடன்!

54 comments:

 1. மிக்க நன்றி. மேலும் ஒரு தகவல். திருக்கடையூரில் மார்க்கண்டையருக்காக யமனை சம்காரம் செய்த பொழுது, திருச்சி அருகில் திருப்பைஞ்ஞீலி என்ற ஸ்தலத்தில் யமனுடைய பூத உடல் வெளிப் பிரகாரத்தில் விழுந்து விடுகிறது. ஆதலால் பூமியில் இறப்பே நடை பிறவில்லை. ரிஷிகள் இறைவனை பிரார்த்தனை செய்ததால் ,நீலிவநேஸ்வரர்(சிவபெருமான்) பங்குனி மாதம் உத்திர நக்க்ஷதிரத்தில்,யமதர்மருக்கு மீண்டும் உயிர் மீட்டுகிறார். இதை திருவிழாவாக திருப்பைஞ்ஞீலி கோவிலில் ஒவ்வரு வருடமும் நடைபெறுகிறது.ஆதலால் யமதர்மருக்கு திருப்பைஞ்ஞீலி கோவிலில் சன்னதி உள்ளது .

  ReplyDelete
 2. அய்யா,
  இதுவரை படிக்காத பயோடேட்டா இது. மிகவும் நன்றாக உள்ளது. ஆங்கிலத்தில் இருக்கும் வரிகள் உங்கள் உழைப்பைக் காட்டுகிறது.கூகுள் ஆண்டவர் துணையோடு.

  ReplyDelete
 3. /////Shyam Prasad said...
  மிக்க நன்றி. மேலும் ஒரு தகவல். திருக்கடையூரில் மார்க்கண்டையருக்காக யமனை சம்காரம் செய்த பொழுது, திருச்சி அருகில் திருப்பைஞ்ஞீலி என்ற ஸ்தலத்தில் யமனுடைய பூத உடல் வெளிப் பிரகாரத்தில் விழுந்து விடுகிறது. ஆதலால் பூமியில் இறப்பே நடை பிறவில்லை. ரிஷிகள் இறைவனை பிரார்த்தனை செய்ததால் ,நீலிவநேஸ்வரர்(சிவபெருமான்) பங்குனி மாதம் உத்திர நக்க்ஷதிரத்தில்,யமதர்மருக்கு மீண்டும் உயிர் மீட்டுகிறார். இதை திருவிழாவாக திருப்பைஞ்ஞீலி கோவிலில் ஒவ்வரு வருடமும் நடைபெறுகிறது.ஆதலால் யமதர்மருக்கு திருப்பைஞ்ஞீலி கோவிலில் சன்னதி உள்ளது//////

  மேலதிகத்தகவல்களுக்கு நன்றி ஷ்யாம் பிரசாத்!

  ReplyDelete
 4. ////Sai said...
  அய்யா,
  இதுவரை படிக்காத பயோடேட்டா இது. மிகவும் நன்றாக உள்ளது. ஆங்கிலத்தில் இருக்கும் வரிகள் உங்கள் உழைப்பைக் காட்டுகிறது.கூகுள் ஆண்டவர் துணையோடு./////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி சாய்!

  ReplyDelete
 5. " நீங்கள் லோக்கல் எருமை மாட்டை நினைத்துக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பில்லை"
  இதுபோன்ற ஆஷ்யம் உங்களின் தனி சிறப்பு......

  யமனை எதித்து போராடியது சாவித்திரி, என்று புராணம் கூறுகிறது....
  நம்ம மகாகவியைப் பாருங்கள்...
  என்ன துணிச்சல்... எமனையே இங்கு வாடா! உன்னை மிதிக்கிறேன்...
  அதுவும் அவனை சும்மா கூப்பிடாமல் அவனது தோல்விகளை எல்லாம் சொல்லி கூறி உசுப்பேத்தி பிறகு கூப்பிட்டு...
  நான் ஹரியும் ஹரனுமாக நிற்கிறேன் வாடா! என்கிறான்..... தன் முனைப்பு, துணிச்சல், கொள்கை பிடிப்பு, தன்னுள் குடிகொண்டுள்ள இறைவனின் மேல் அணுஅளவும் பிசகாத நம்பிக்கை.... இது அந்த மஹாகவி, தீர்க்கதர்ஷணன், சுப்பையாவுக்கு மட்டுமே இருந்தது....
  ஆனால், அந்த எமனும் வஞ்சம் தீர்த்து விட்டான்..... பாரதியை, 39 - வயதிலே அள்ளிக் கொண்டு போய்விட்டான்... முற்றும் பழுத்த ஞானப் பழம் இறைவன் திருப்பாதம் அடைவது தானே நியாயம்....
  நன்றிகள் ஐயா!

  ReplyDelete
 6. /////Alasiam G said...
  " நீங்கள் லோக்கல் எருமை மாட்டை நினைத்துக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பில்லை"
  இதுபோன்ற ஹாஷ்யம் உங்களின் தனி சிறப்பு......
  யமனை எதித்து போராடியது சாவித்திரி, என்று புராணம் கூறுகிறது....
  நம்ம மகாகவியைப் பாருங்கள்...
  என்ன துணிச்சல்... எமனையே இங்கு வாடா! உன்னை மிதிக்கிறேன்...
  அதுவும் அவனை சும்மா கூப்பிடாமல் அவனது தோல்விகளை எல்லாம் சொல்லி கூறி உசுப்பேத்தி பிறகு கூப்பிட்டு...
  நான் ஹரியும் ஹரனுமாக நிற்கிறேன் வாடா! என்கிறான்..... தன் முனைப்பு, துணிச்சல், கொள்கை பிடிப்பு, தன்னுள் குடிகொண்டுள்ள இறைவனின் மேல் அணுஅளவும் பிசகாத நம்பிக்கை.... இது அந்த மஹாகவி, தீர்க்கதர்ஷணன், சுப்பையாவுக்கு மட்டுமே இருந்தது....
  ஆனால், அந்த எமனும் வஞ்சம் தீர்த்து விட்டான்..... பாரதியை, 39 - வயதிலே அள்ளிக் கொண்டு போய்விட்டான்... முற்றும் பழுத்த ஞானப் பழம் இறைவன் திருப்பாதம் அடைவது தானே நியாயம்....
  நன்றிகள் ஐயா!/////

  39 வயதிற்குள் பாரதி பல சாதனைகளைப் பாடல்களில் செய்திருக்கிறார். சிச்சுவேசன் கவிஞர்களைப் போல இல்லாமல், பல சூழ்நிலைகளை அவரே தன் மனதிற்குள் உருவாக்கிக்கொண்டு பல பாடல்களைப் புனைந்திருக்கிறார்.

  மத்திம வயதில் இறந்தவர்களில் முக்கியமானவர்கள்:
  ஆதிசங்கரர், விவேகானந்தர், பாரதியார், கண்ணதாசன். அல்பாயுளில் இறந்தவர்களில் முக்கியமானவர் கவிஞர்.பட்டுக்கொட்டை கல்யாணசுந்தரம்

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. தட்டச்சுப்பிழை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்

  ReplyDelete
 9. எல்லோர்க்கும் சம தர்மனான எம தர்மனைப் பற்றிய தகவல் நன்று. எதற்காகவும், யாருக்காகவும் கடமை தவறாதவர். எப்பேர்பட்டவராக இருந்தாலும் கடைசியில் இவரிடம் அடி பணிந்துதான் ஆக வேண்டும்.

  ReplyDelete
 10. என்னவொரு மனத் திண்மையிருந்தால் மகாகவி காலனைத் தன் காலருகே அழைத்து அவனைச் சற்றே மிதிக்க விரும்புவான்! வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்த மேலோர்கள் சொன்ன கருத்தை எண்ணியே அவன் இப்படி அழைக்கிறான். திருக்கடவூரில் எமசம்ஹாரம் பற்றி எழுதியிருக்கிறார்கள். திருவையாற்றிலும் சுசரிதன் எனும் சிறுவனின் ஆயுள் முடிந்து விட்டது என்று காலன் அவன் உயிரை எடுக்க வந்தான். தன் ஆயுள் முடியப் போகிறது என்பதறிந்து சுசரிதனும் ஐயாறப்பரை அணுகி அவர் முன் தவமிருந்தான். உயிரைக் கவர வந்த யமனை தடுத்து நிறுத்த தன் தென்கோபுர வாயில் துவாரபாலகரான ஆட்கொண்டாரைச் சிவன் பணிக்க, ஆட்கொண்டாரும் யமனை சம்ஹாரம் செய்து விடுகிறார். பின்னர் பிரம்மன் முதலானவர் வேண்டிக்கொள்ள யமன் உயிர் பெற சிவன் அனுக்கிரகம் செய்கிறார். திருவையாறும் இவ்விஷயத்தில் முக்கியத் தலம்.

  ReplyDelete
 11. வணக்கம் அய்யா .....

  எமன் பயோடேட்டா கலக்கல்......எமனை பற்றிய மேலதிக தகவலுக்கு நன்றி.....
  வணக்கம்....

  ReplyDelete
 12. எமன் பயோடேட்டா நல்ல‌ நகைச்சுவை.இந்த பயோடேட்டாவை டைடல் பார்கில் ஏதாவது ஒரு ஐடி நிறுவனத்திற்கு அனுப்ப‌லாம். வேலை நிச்சயம்.


  ஒரு முஸ்லிமாவிடம்(இஸ்லாமியப் பெண்மணி)மதம் பற்றி ஆரோக்யமான விவாதம் நடத்தினேன்.இரு மதஙகளிலும் இறப்புக்குப் பின்னே என்ன நடக்கிறது என்று பேசினோம்.இஸ்லாத்தில் இந்த ஒரு பிறவி மட்டுமே.இறந்தவர்கள் அனைவரும் தீர்ப்பு நாளை எதிர் நோக்கி எங்கேயோ
  காத்துக் கிடக்கிறார்கள்.அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது ஆண்டவர் மட்டுமே அறிந்த ரகசியம். இந்து மதத்தில் இறந்த ஆத்மா தன் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மறு பிறவி எடுத்துவிடும்.முஸ்லிமா கேட்டார்கள்,

  "மறுபிறவிக்கு ஆதாரம் உண்டா?"

  நான்:"உளவியலில் இன்று முக்கியமான ஆய்வே இதுதான்.அருள் கூர்ந்து கீழ்க்காணும் வலைப்பதிவை வாசிக்கவும்" என்றேன். நீங்களும் வாசியுங்கள்.
  Scientific Evidence for Survival
  Of consciousness after death
  http://www.near-death.com/evidence.html

  ReplyDelete
 13. பயோடேட்டா அருமை ஐயா.. அப்படியே எல்லாக் கடவுளுக்கும் எழுதுங்க..

  ReplyDelete
 14. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

  அருமையான பழைய காலத்திய படம்
  நன்றாக உள்ளது.

  சனீஷ்வரன் மனிதனை இறக்கும்வரை வதைப்பார். எமன் இறந்தபிறகு வதைப்பார்

  கஷ்ட்டமான தொழில்,ஏனெனில் அவரவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து அதர்க் கேற்ப பலனை அளிக்கவேண்டும்.
  பயோ டேட்டா நன்கு தயாரிக்கப் பட்டுள்ளது.

  நன்றி.

  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்

  வ.தட்சணாமூர்த்தி

  2010-07-08௦

  ReplyDelete
 15. ////Blogger ananth said...
  எல்லோர்க்கும் சம தர்மனான எம தர்மனைப் பற்றிய தகவல் நன்று. எதற்காகவும், யாருக்காகவும் கடமை தவறாதவர். எப்பேர்பட்டவராக இருந்தாலும் கடைசியில் இவரிடம் அடி பணிந்துதான் ஆக வேண்டும்.////

  எவ்வளவு பாதுகாப்புப்போட்டிருந்தாலும், அதை சத்தமில்லாமல் உடைத்துவிட்டு நுழையக்கூடியவர் இவர் ஒருவர்தான்!:-))))

  ReplyDelete
 16. Blogger Thanjavooraan said...
  என்னவொரு மனத் திண்மையிருந்தால் மகாகவி காலனைத் தன் காலருகே அழைத்து அவனைச் சற்றே மிதிக்க விரும்புவான்! வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்த மேலோர்கள் சொன்ன கருத்தை எண்ணியே அவன் இப்படி அழைக்கிறான். திருக்கடவூரில் எமசம்ஹாரம் பற்றி எழுதியிருக்கிறார்கள். திருவையாற்றிலும் சுசரிதன் எனும் சிறுவனின் ஆயுள் முடிந்து விட்டது என்று காலன் அவன் உயிரை எடுக்க வந்தான். தன் ஆயுள் முடியப் போகிறது என்பதறிந்து சுசரிதனும் ஐயாறப்பரை அணுகி அவர் முன் தவமிருந்தான். உயிரைக் கவர வந்த யமனை தடுத்து நிறுத்த தன் தென்கோபுர வாயில் துவாரபாலகரான ஆட்கொண்டாரைச் சிவன் பணிக்க, ஆட்கொண்டாரும் யமனை சம்ஹாரம் செய்து விடுகிறார். பின்னர் பிரம்மன் முதலானவர் வேண்டிக்கொள்ள யமன் உயிர் பெற சிவன் அனுக்கிரகம் செய்கிறார். திருவையாறும் இவ்விஷயத்தில் முக்கியத் தலம்.//////

  உங்களுடைய பின்னூட்டத்திற்கும் மேலதிகத்தகவல்களுக்கும் நன்றி சார்! உங்களுடைய பதிவில் உள்ள உங்களுடைய புகைப்படத்தைப் பார்த்தேன். அமைதிக்கே அத்தாரிட்டிபோன்ற தோற்றத்துடன் இருக்கிறீர்கள். பழநிஅப்பன் அருளால் நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து தமிழுக்கு மேலும் பல பணிகளைச் செய்ய வேண்டும்!

  ReplyDelete
 17. /////Blogger kmr.krishnan said...
  எமன் பயோடேட்டா நல்ல‌ நகைச்சுவை.இந்த பயோடேட்டாவை டைடல் பார்கில் ஏதாவது ஒரு ஐடி நிறுவனத்திற்கு அனுப்ப‌லாம். வேலை நிச்சயம்.///////

  யாருக்கு வேலை நிச்சயம் - எமனுக்கா அல்லது எழுதிய எனக்கா? அதைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?:-)))))
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  ஒரு முஸ்லிமாவிடம்(இஸ்லாமியப் பெண்மணி)மதம் பற்றி ஆரோக்யமான விவாதம் நடத்தினேன்.இரு மதஙகளிலும் இறப்புக்குப் பின்னே என்ன நடக்கிறது என்று பேசினோம்.இஸ்லாத்தில் இந்த ஒரு பிறவி மட்டுமே.இறந்தவர்கள் அனைவரும் தீர்ப்பு நாளை எதிர் நோக்கி எங்கேயோ காத்துக் கிடக்கிறார்கள்.அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது ஆண்டவர் மட்டுமே அறிந்த ரகசியம். இந்து மதத்தில் இறந்த ஆத்மா தன் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மறு பிறவி எடுத்துவிடும்.முஸ்லிமா கேட்டார்கள்,
  "மறுபிறவிக்கு ஆதாரம் உண்டா?"
  நான்:"உளவியலில் இன்று முக்கியமான ஆய்வே இதுதான்.அருள் கூர்ந்து கீழ்க்காணும் வலைப்பதிவை வாசிக்கவும்" என்றேன். நீங்களும் வாசியுங்கள்.
  Scientific Evidence for Survival
  Of consciousness after death
  http://www.near-death.com/evidence.html//////

  சுட்டிக்கு நன்றி. சென்று பார்க்கிறேன் சார்!

  ReplyDelete
 18. ////Blogger astroadhi said...
  வணக்கம் அய்யா .....
  எமன் பயோடேட்டா கலக்கல்......எமனை பற்றிய மேலதிக தகவலுக்கு நன்றி.....
  வணக்கம்....//////

  உங்களுக்குப் பிடித்திருந்தால் சரிதான், ஆதிராஜ்!

  ReplyDelete
 19. /////Blogger கே.ஆர்.பி.செந்தில் said...
  பயோடேட்டா அருமை ஐயா.. அப்படியே எல்லாக் கடவுளுக்கும் எழுதுங்க../////

  ஆகா, நேரம் கிடைக்கும்போதும், சம்பந்தப்பட்ட பதிவுகள் வரும்போதும் எழுதுகிறேன் சாமி!

  ReplyDelete
 20. /////Blogger V Dhakshanamoorthy said...
  அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  அருமையான பழைய காலத்திய படம்
  நன்றாக உள்ளது.
  சனீஷ்வரன் மனிதனை இறக்கும்வரை வதைப்பார். எமன் இறந்தபிறகு வதைப்பார்
  கஷ்ட்டமான தொழில்,ஏனெனில் அவரவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து அதற்க் கேற்ப பலனை அளிக்கவேண்டும். பயோ டேட்டா நன்கு தயாரிக்கப் பட்டுள்ளது.
  நன்றி.
  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி/////

  எப்போதுமே பாராட்டுக்கள்தானா? குறை சொல்லிப் பழக்கம் இல்லையா? வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 21. அது என்னவோ தெரியவில்லை, கிரஹங்களில் சனி பகவானைப் பிடித்திரிக்கிறார்ப்போல் எமனைப் பற்றியும் உயர்ந்த மதிப்பு மனதில் உள்ளது. அவர் கடமை தவறாதவர், எல்லோரும் அவருக்கு சமம் என்பதால் இருக்கலாம்.

  யாராவது உடம்பு மிக மோசமாக இருந்தாலோ, உயிருக்கு ஆபத்து என்றாலோ எமகண்ட நேரத்தில் எள் உருண்டை செய்து நைவேத்தியம் செய்தால், சரியாகும் என்று படித்திருக்கிறேன். ஸ்ரீ வாஞ்சியத்தில் உள்ள எமன் சிலைக்கு நெய் அபிஷேகம் செய்தாலும் பலன் உண்டு.

  ReplyDelete
 22. அது சரி . .

  வீட்டில் செல்ல பிள்ளைகளைத் தான் ராஜா என செல்லமாக கூப்பிடுவார்கள் . .
  நீங்கள் எமனையே ராஜா என அழைத்து எமதர்ம"ராஜா"ன்னு கூப்பிட்ட அன்பு பாராட்க் கூடியது . . .

  அவரை எதுக்கு இப்போ பயோடேட்டா எடுத்து போட்டீங்க . .

  அவர் தான் நம்ம வகுப்பிற்கு ஏற்கனவே வந்துட்டாரே . . (எட்டாமிடம்)

  இருக்கட்டும் இதுவும் நல்லாத்தேன் இருக்கு . .

  ReplyDelete
 23. அய்யா வணக்கம்

  அப்போ ரவி குமார் என்ற பெயர் எமனை அல்லது சனி பகவானை தானே குறிக்கும்....

  ரவி - சூரியன்

  :)

  அய்யா ஒரு சிறு விண்ணப்பம்....

  பதிவுகளை நக்கல் பண்ணும் விதமாக வரும் பின்னூட்டங்களை தவிர்த்து விடுங்கள் அய்யா...

  அவர்கள் இங்கு சரியாக பேசுற மாதிரி பேசுகிறார்கள்... அவர்களுடைய சொந்த பதிவில் தங்களுடைய வன்ம குணத்தை காட்டுகிறார்கள்...

  தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்...

  என்றும் உங்கள் அருண் பிரசங்கி

  ReplyDelete
 24. //எப்போதுமே பாராட்டுக்கள்தானா? குறை சொல்லிப் பழக்கம் இல்லையா?//

  நான் ஏதாவது குறை சொல்லி ஆரம்பித்து வைக்கட்டுமா (சும்மா தமாஷ்). தங்கள் பாடங்கள் ’குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா’ (சுப்பையா வாத்தியார்) என்ற பாடலுக்கு ஏற்ப இருக்கிறது. அல்லது குறைந்த பட்சம் பலர் கண்களுக்கு அப்படி தெரிகிறது.

  ReplyDelete
 25. எமனுக்கே பயோ டேட்டாவா ...வாத்தியாரின் கற்பனைத்திறனுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு...அரமை ஐயா..

  அன்புடன்
  செங்கோவி

  ReplyDelete
 26. அதற்கு அவரிடம் எத்தனை ஊழியர்கள், எத்தனை கணினிகள், எத்தனை சர்வர்கள் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.


  Dear Mr.Yamaraj,
  I would like to apply for the job as computer operator, So I send u already CV To yamaraj@yamaloha.org


  Pls if you have vacancy, you can contact வாத்தியார்

  ReplyDelete
 27. யமனுடன் பிறந்தவள் யமுனா நதி;
  அவள் ரவி குமாரி
  அவளது நிறமும் கருமை  தேவ்

  ReplyDelete
 28. ஐயா,
  பதிவிற்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி/வேண்டுகோள்...

  நான் சமீபத்தில் காரைக்குடியில் ஒரு ஜோதிடரை சந்தித்தேன். அவர் எனது மற்றும் என் நண்பரது ஜாதகத்தைப் பார்த்தவுடனே எங்களுக்கு உடன்பிறந்தோர் எத்தனை பேர்,அதில் ஆண்/பெண் எத்தனை, மூத்தது எத்தனை, இளையது எத்தனை,,குழந்தைகள் ஆண்/பெண் எத்தனை பேர் என மிகச்சரியாகச் சொன்னார்...அதைப்பற்றி கேட்டபோது ஒரு ஜாகத்தில் குறிக்கப்பட்டிருக்கும் பிறந்த நேரம் சரியா என்பதையே இதன்மூலம் கண்டுபிடிப்பதாகவும், அது பொருந்தவில்லை எனில் மேற்கொண்டு பலன் சொல்வது அர்த்தமில்லாதது என்றும் சொன்னார்...தாங்கள் மூன்றாம் பாடம் நடத்தியபோது சக அன்பர் ஒருவர் இதனை எப்படி கண்டுபிடிப்பது எனக்கேட்டார்..தாங்களும் 'அது மேல்நிலைப்பாடம்..பின்னால் வரும்' என்று சொன்னீர்கள்...எட்டம்பாடம் முடிந்தபின் அத்தகைய மேல்நிலைப்பாடங்களை எதிர்பார்க்கலாமா?...நன்றி..

  அன்புடன்,
  செங்கோவி

  ReplyDelete
 29. Thank you Sir..
  What an imagination with a lot of humour? Is there any hidden information to (y)our Class Room Students about Yamaraj?

  M. Thiruvel Murugan

  ReplyDelete
 30. Uma said...
  அது என்னவோ தெரியவில்லை, கிரஹங்களில் சனி பகவானைப் பிடித்திருக்கிறார்ப்போல் எமனைப் பற்றியும் உயர்ந்த மதிப்பு மனதில் உள்ளது. அவர் கடமை தவறாதவர், எல்லோரும் அவருக்கு சமம் என்பதால் இருக்கலாம்.
  யாராவது உடம்பு மிக மோசமாக இருந்தாலோ, உயிருக்கு ஆபத்து என்றாலோ எமகண்ட நேரத்தில் எள் உருண்டை செய்து நைவேத்தியம் செய்தால், சரியாகும் என்று படித்திருக்கிறேன். ஸ்ரீ வாஞ்சியத்தில் உள்ள எமன் சிலைக்கு நெய் அபிஷேகம் செய்தாலும் பலன் உண்டு.//////

  கண்டம் நீங்கும். ஆனால் உரிய நேரம் வரும்போது, அண்ணன் (சனி)போர்டிங் பாஸ் கொடுப்பார், தம்பி (எமன்) பறக்கும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போய்விடுவார்!

  ReplyDelete
 31. /////CJeevanantham said...
  Namaskar to the great Yamaraj./////

  சுக்ரியா ஜீவானந்தம்ஜீ
  - எமராஜ்!

  ReplyDelete
 32. /////iyer said...
  அது சரி . .
  வீட்டில் செல்ல பிள்ளைகளைத் தான் ராஜா என செல்லமாக கூப்பிடுவார்கள் . .
  நீங்கள் எமனையே ராஜா என அழைத்து எமதர்ம"ராஜா"ன்னு கூப்பிட்ட அன்பு பாராட்டக் கூடியது . . .
  அவரை எதுக்கு இப்போ பயோடேட்டா எடுத்து போட்டீங்க . .
  அவர் தான் நம்ம வகுப்பிற்கு ஏற்கனவே வந்துட்டாரே . . (எட்டாமிடம்)
  இருக்கட்டும் இதுவும் நல்லாத்தேன் இருக்கு . ./////

  நல்லது நன்றி (இத்துடன் விட்டதற்கு)!:-))))))

  ReplyDelete
 33. /////அருண் பிரசங்கி said...
  அய்யா வணக்கம்
  அப்போ ரவி குமார் என்ற பெயர் எமனை அல்லது சனி பகவானை தானே குறிக்கும்...
  ரவி - சூரியன் :)
  அய்யா ஒரு சிறு விண்ணப்பம்....
  பதிவுகளை நக்கல் பண்ணும் விதமாக வரும் பின்னூட்டங்களை தவிர்த்து விடுங்கள் அய்யா...
  அவர்கள் இங்கு சரியாக பேசுற மாதிரி பேசுகிறார்கள்... அவர்களுடைய சொந்த பதிவில் தங்களுடைய வன்ம குணத்தை காட்டுகிறார்கள்...
  தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்...
  என்றும் உங்கள் அருண் பிரசங்கி////

  வகுப்பறையில் வாலாட்டுபவர்களை மட்டும்தான் கண்டிக்க முடியும். வெளியே சென்று என்ன கூத்தடித்தாலும் அடித்துவிட்டுப் போகிறார்கள். வயதுக்கோளாறு. கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்

  ReplyDelete
 34. /////ananth said...
  //எப்போதுமே பாராட்டுக்கள்தானா? குறை சொல்லிப் பழக்கம் இல்லையா?//
  நான் ஏதாவது குறை சொல்லி ஆரம்பித்து வைக்கட்டுமா (சும்மா தமாஷ்). தங்கள் பாடங்கள் ’குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா’ (சுப்பையா வாத்தியார்) என்ற பாடலுக்கு ஏற்ப இருக்கிறது. அல்லது குறைந்த பட்சம் பலர் கண்களுக்கு அப்படி தெரிகிறது.//////

  தங்களுடைய விளக்கத்திற்கு நன்றி ஆனந்த்!

  ReplyDelete
 35. /////SRM said...
  /////அதற்கு அவரிடம் எத்தனை ஊழியர்கள், எத்தனை கணினிகள், எத்தனை சர்வர்கள் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.///
  Dear Mr.Yamaraj,
  I would like to apply for the job as computer operator, So I send u already CV To yamaraj@yamaloha.org
  Pls if you have vacancy, you can contact வாத்தியார்//////

  உயில் எழுதி வைத்து விட்டீர்களா?

  ReplyDelete
 36. //////R.DEVARAJAN said...
  யமனுடன் பிறந்தவள் யமுனா நதி;
  அவள் ரவி குமாரி
  அவளது நிறமும் கருமை
  தேவ்//////

  நீங்கள் சொல்வது புதிய செய்தியாக உள்ளது!

  ReplyDelete
 37. /////SHEN said...
  ஐயா,
  பதிவிற்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி/வேண்டுகோள்...
  நான் சமீபத்தில் காரைக்குடியில் ஒரு ஜோதிடரை சந்தித்தேன். அவர் எனது மற்றும் என் நண்பரது ஜாதகத்தைப் பார்த்தவுடனே எங்களுக்கு உடன்பிறந்தோர் எத்தனை பேர்,அதில் ஆண்/பெண் எத்தனை, மூத்தது எத்தனை, இளையது எத்தனை,,குழந்தைகள் ஆண்/பெண் எத்தனை பேர் என மிகச்சரியாகச் சொன்னார்...அதைப்பற்றி கேட்டபோது ஒரு ஜாகத்தில் குறிக்கப்பட்டிருக்கும் பிறந்த நேரம் சரியா என்பதையே இதன்மூலம் கண்டுபிடிப்பதாகவும், அது பொருந்தவில்லை எனில் மேற்கொண்டு பலன் சொல்வது அர்த்தமில்லாதது என்றும் சொன்னார்...தாங்கள் மூன்றாம் பாடம் நடத்தியபோது சக அன்பர் ஒருவர் இதனை எப்படி கண்டுபிடிப்பது எனக்கேட்டார்..தாங்களும் 'அது மேல்நிலைப்பாடம்..பின்னால் வரும்' என்று சொன்னீர்கள்...எட்டம்பாடம் முடிந்தபின் அத்தகைய மேல்நிலைப்பாடங்களை எதிர்பார்க்கலாமா?...நன்றி..
  அன்புடன்,
  செங்கோவி/////

  அந்த காரைக்குடி ஜோதிடரின் முகவரியைக் கொடுங்கள்!

  ReplyDelete
 38. //////M. Thiruvel Murugan said...
  Thank you Sir..
  What an imagination with a lot of humour? Is there any hidden information to (y)our Class Room Students about Yamaraj?
  M. Thiruvel Murugan//////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி. மறைமுகமான செய்தி எதுவும் இல்லை!

  ReplyDelete
 39. iyya yamadharma raja's bio data super 'O' super. valga ungal eluthu nadai. athilum yama's mail id ungal karpanaikku oru 'O'
  nandri. sakthi ganesh.

  ReplyDelete
 40. //அந்த காரைக்குடி ஜோதிடரின் முகவரியைக் கொடுங்கள்!//

  ஐயா,

  அந்த ஜோதிடரின் பெயர் திரு.மாணிக்கம்...புதிய பேருந்து நிலையம் அருகில், சந்தைப்பேட்டையில் வசிக்கின்றார்...

  அன்புடன்
  செங்கோவி

  ReplyDelete
 41. R.DEVARAJAN said...
  //யமனுடன் பிறந்தவள் யமுனா நதி;
  அவள் ரவி குமாரி அவளது நிறமும் கருமை //

  நீங்கள் சொல்வது புதிய செய்தியாக உள்ளது!

  The goddess of the river, also known as Yami, is the sister of Yama, god of death, and the daughter of Surya, the Sun god, and his wife Samjñā.

  The river Yamuna is also connect ed to the religious beliefs sur rounding Krishna, the Krishna ism, and various stories connec ted with Him are found in Hindu mythology

  http://en.wikipedia.org/wiki/Yamuna

  Dev

  ReplyDelete
 42. /////Sakthi Ganesh said...
  iyya yamadharma raja's bio data super 'O' super. valga ungal eluthu nadai. athilum yama's mail id ungal karpanaikku oru 'O'
  nandri. sakthi ganesh./////

  நல்லது. உங்களின் அன்பிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 43. ////SHEN said...
  //அந்த காரைக்குடி ஜோதிடரின் முகவரியைக் கொடுங்கள்!//
  ஐயா,
  அந்த ஜோதிடரின் பெயர் திரு.மாணிக்கம்...புதிய பேருந்து நிலையம் அருகில், சந்தைப்பேட்டையில் வசிக்கின்றார்...
  அன்புடன்
  செங்கோவி///////

  தகவலுக்கு நன்றி. நீங்கள் கேட்டுள்ள பகுதி பின்னால் வரும்

  ReplyDelete
 44. ///R.DEVARAJAN said...
  R.DEVARAJAN said...
  //யமனுடன் பிறந்தவள் யமுனா நதி;
  அவள் ரவி குமாரி அவளது நிறமும் கருமை //
  நீங்கள் சொல்வது புதிய செய்தியாக உள்ளது!
  The goddess of the river, also known as Yami, is the sister of Yama, god of death, and the daughter of Surya, the Sun god, and his wife Samjñā.
  The river Yamuna is also connect ed to the religious beliefs sur rounding Krishna, the Krishna ism, and various stories connec ted with Him are found in Hindu mythology
  http://en.wikipedia.org/wiki/Yamuna
  Dev//////

  சான்றுடன் கூடிய உங்களின் விளக்கத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 45. அன்பு ஆசிரியருக்கு,
  நான் இதுவரை வாழ்க்கைக்கு ஆதாரமான விஷயங்களைத்தான் தேடி படித்து வருகிறேன்.
  இந்த யமதர்ம ராஜா எல்லாத்துக்குமே வேட்டு வைத்து சங்கு ஊதுபவராகத் தெரிவதால் அதிகம் இவரைப் பற்றி ஆராய்ந்தறிய விரும்பவில்லை.. இருந்த போதிலும்
  ஜப்பானீஸ் நண்பர்களை (55 ,60 வயது நண்பர்களை) கேட்டும் அவர்களுக்கும் இந்த விவரங்கள் தெரியவில்லை..அப்படி போர்ட்போலியோ ஒதுக்கி கொண்டு கடவுளர்கள் செயல்படுவது பற்றிய சித்தாந்தமே இவர்கள் புதிது போலே கேட்கிறார்கள்..புத்தர் மட்டுமே கடவுள் என்ற ரீதியில் பேசுகிறார்கள்..எனவே எனக்கு இந்த enma-o பற்றிய விளக்கம் தெரிந்துகொள்ளமுடியவில்லை. மீண்டும் சில ஜப்பானீஸ் ஆசிரியர்களை வரும் ஞாயிறு அன்று சந்திக்க இருப்பதால் கேட்டுத் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்..
  நன்றி..

  ReplyDelete
 46. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 47. /////minorwall said...
  அன்பு ஆசிரியருக்கு,
  நான் இதுவரை வாழ்க்கைக்கு ஆதாரமான விஷயங்களைத்தான் தேடி படித்து வருகிறேன்.
  இந்த யமதர்ம ராஜா எல்லாத்துக்குமே வேட்டு வைத்து சங்கு ஊதுபவராகத் தெரிவதால் அதிகம் இவரைப் பற்றி ஆராய்ந்தறிய விரும்பவில்லை.. இருந்த போதிலும்
  ஜப்பானீஸ் நண்பர்களை (55 ,60 வயது நண்பர்களை) கேட்டும் அவர்களுக்கும் இந்த விவரங்கள் தெரியவில்லை..அப்படி போர்ட்போலியோ ஒதுக்கி கொண்டு கடவுளர்கள் செயல்படுவது பற்றிய சித்தாந்தமே இவர்கள் புதிது போலே கேட்கிறார்கள்..புத்தர் மட்டுமே கடவுள் என்ற ரீதியில் பேசுகிறார்கள்..எனவே எனக்கு இந்த enma-o பற்றிய விளக்கம் தெரிந்துகொள்ளமுடியவில்லை. மீண்டும் சில ஜப்பானீஸ் ஆசிரியர்களை வரும் ஞாயிறு அன்று சந்திக்க இருப்பதால் கேட்டுத் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்..
  நன்றி../////

  ஆகா, அவசரமில்லை. மெதுவாகக் கேட்டு, முடிந்தால் பதில் சொல்லுங்கள் மைனர். உங்களுடைய நேரம் வீணாகக்கூடாது. அதுதான் என் கவலை!

  ReplyDelete
 48. Dear Sir,

  I love your articles. Excellent and informative. Thanks

  ReplyDelete
 49. /////J V Management said...
  Dear Sir,
  I love your articles. Excellent and informative. Thanks /////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 50. ஐயா பின்னுட்டம் எழுத வந்தேன். அப்பெட்டியின் மேலே தங்களின் இக்குறிப்பை பார்த்து என்னால் நகைப்பை அடக்கமுடியவில்லை.(ஜோதிடத்தையும் நக்கலடித்து வருகிற பின்னூட்டங்களை வடிகட்டவே இந்த ஏற்பாடு. அதற்கெல்லாம் குட்டிச் சுவர்கள் உள்ளன. அவர்கள் அங்கே சென்று தேவையானதை எழுதி, மகிழ்ந்து கொள்ளலாம்) பொதுவாகவே இப்போது பதிவுலகில் பிரபலமாவதற்கு தங்களையும் ஜோதிடத்தையும் இழுப்பதே வழக்கமாகிவிட்டது

  ReplyDelete
 51. /////கூடுதுறை said...
  ஐயா பின்னுட்டம் எழுத வந்தேன். அப்பெட்டியின் மேலே தங்களின் இக்குறிப்பை பார்த்து என்னால் நகைப்பை அடக்கமுடியவில்லை.(ஜோதிடத்தையும் நக்கலடித்து வருகிற பின்னூட்டங்களை வடிகட்டவே இந்த ஏற்பாடு. அதற்கெல்லாம் குட்டிச் சுவர்கள் உள்ளன. அவர்கள் அங்கே சென்று தேவையானதை எழுதி, மகிழ்ந்து கொள்ளலாம்) பொதுவாகவே இப்போது பதிவுலகில் பிரபலமாவதற்கு தங்களையும் ஜோதிடத்தையும் இழுப்பதே வழக்கமாகிவிட்டது //////

  அது அவர்களுடைய அறியாமை!
  எழுதுவதை நன்றாக எழுதினால்
  எல்லோரும் படிப்பார்கள்
  அதுதான் பதிவுகளைப் பிரபலப்படுத்துவத்ற்கு உள்ள உண்மையான வழி!

  ReplyDelete
 52. dear sir
  i am new .but now i reach ur 2009 blog post. i have some question in that post . i ask u with my jathakam and my friend jathakam . now i also have 15 jathakam in my hand to anlies them .
  reply me sir
  thank u for u teaching

  ReplyDelete
 53. //////மகேஷ் ராஜ் said...
  dear sir
  i am new .but now i reach ur 2009 blog post. i have some question in that post . i ask u with my jathakam and my friend jathakam . now i also have 15 jathakam in my hand to anlies them .
  reply me sir
  thank u for u teaching////


  ஜோதிடப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், தங்கள் சொந்த ஜாதகத்தில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அதுபோல் வந்த மின்னஞ்சல்கள் அனைத்திற்கும் (100ற்கும் மேலாக) ஒரு தொடர் விளக்கத்தை முன்பு எழுதினேன். அது போல மீண்டும் ஒரு கேள்வி-பதில் sessionஐ வைக்க உள்ளேன். தற்சமயம் நேரம் இல்லை. இரண்டுமாதங்கள் பொறுத்திருங்கள்.
  அந்தச் சமயம் பதிவில் அறிவிப்பு வரும். அப்போது உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். அனைத்திற்கும் பதில் பதிவிலேயே (in the blog) கிடைக்கும்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com