உலகக் கால்பந்துக் கோப்பையை இந்த முறை தட்டிச் சென்ற
ஸ்பெயின் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு
நம் வகுப்பறையின் மூலம் வாழ்த்துக்களைச்
சொல்லி வைப்போம்!
வெற்றிக் கனியைப் பெற்றுத் தந்த வீரர் பந்தை உள்ளே செலுத்தும்
அற்புதக் காட்சி!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++"மரணம் என்னும் தூது வந்தது - அது மங்கை வந்த வழியில் வந்தது!”
Our killers - நம்மைக் கொல்பவர்கள்!
நம்மைக் கொல்பவர்களில், இரண்டு வகை உண்டு.
தங்கள் விழிகளால், விழி அம்புகளால் - வேல் வீச்சால், கடைக்கண் பார்வைகளால், தோற்றத்தால், நளினத்தால் கொல்பவர்கள் ஒருவகை (அவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியும்)
ஆனால் உண்மையிலேயே நம்மைக் கொன்று, அதாவது மரணத்தை ஏற்படுத்தி, நம்மைச் சிவலோகத்திற்கு அனுப்பி வைப்பவர்கள் இரண்டாவது வகை.
ஆனால் அந்த இருவகையினருக்குமே ஒரு அதிசயமான ஒற்றுமை இருக்கிறது. இருவருமே நமது ஜாதகத்தின் ஏழாம் பாவ அதிபதிகள். அதாவது ஏழாவது வீட்டின் சொந்தக்காரர்கள்.
அது எப்படி என்பதை இன்று பார்ப்போம்!
------------------------------------------------------------------
எந்த ஒரு பாவத்திற்கும் அல்லது வீட்டிற்கும், அதற்கு முந்தைய வீடு - அதாவது அந்த வீட்டிற்குப் 12ஆம் வீடு எதிர்மறையான பலன்களைத்தான் கொடுக்கும்.
8ஆம் வீடு, 3ஆம் வீடு, ஆகிய வீடுகள்தான் ஒரு மனிதனின் வாழ்நாட்களை நிர்ணயிக்கும் வீடுகளாகும். அவற்றிற்கு முன் வீடு, அதாவது 7ஆம் வீடும், 2ஆம் வீடும்தான் - அதாவது அவற்றின் அதிபதிகள்தான் ஜாதகனைக் கொல்லும் வலிமை படைத்தவர்கள். ஒரு ஜாதகனின் மாரகர்கள் - அதாவது மரணத்தைக் கொடுப்பவர்கள் அவர்கள்தான். அந்த வீடுகளுக்குத் தீயவர்கள் அவர்கள்தான்.
அதாவது விளங்கச் சொன்னால், எட்டாம் வீட்டிற்குத் தீயவன் 7ஆம் வீட்டுக்காரன். 3ஆம் வீட்டிற்குத் தீயவன் 2ஆம் வீட்டுக்காரன்.
லக்கினத்திற்குத் தீயவன் 12ஆம் வீட்டுக்காரன். ஏழாம் வீட்டிற்குத் தீயவன் ஆறாம் வீட்டுக்காரன். தம்பதிகளிடையே, பூசல்கள், விரிசல்கள், பிரச்சினைகள் ஏற்பட ஆறாம் வீட்டுக்காரனே காரணமாக இருப்பான்.
அவர்களுக்கு (அதாவது 7th & 2nd Lords) மாரகர்கள் (killers) என்று பெயர்
அவர்களுடைய தசா புத்திகளில் மரணம் ஏற்படும்.
உதாரணத்திற்கு, சிம்ம லக்கின ஜாதகத்திற்கு ஏழாம் அதிபதி சனி. இரண்டாம் அதிபதி புதன். அதனால் சிம்ம லக்கினக்காரர்களின் மரணம், சனி தசை புதன் புத்தியில் அல்லது புதன் தசை சனி புத்தியில் ஏற்படும். (இது பொது விதி) இதை இன்னும் ஃபைன் டியூனிங் செய்வதற்கு அடுத்தடுத்த பாடங்களில், வழிமுறைகளைச் சொல்லித் தருகிறேன். பொறுமையாகப் படித்துக்கொண்டே வாருங்கள்.
7-வது வீடு களத்திர ஸ்தானம். அதாவது திருமணத்திற்கு உரிய இடம். அதை அனைவரும் அறிவோம். வாலிப வயதில் திருமணத்தைக் கொடுத்து, ஒரு வேல்விழியாள் மூலம் நம்மைப் பாதி கொல்லும் ஏழாம் அதிபதி, வயதான காலத்தில் அல்லது உரிய நேரம் வரும்போது, நம்மை முழுமையாகக் கொன்று விடுவார்.
அவர்தான் நம்பர் ஒன் மாரக அதிபதி.
அவர்கள் இருவரைத் தவிர, அதாவது 7 & 2ஆம் அதிபர்களைத் தவிர வேறு யாராவது மாரகத்தைக் கொடுப்பார்களா? இருக்கிறார்கள். அவர்களைக் கீழே பார்ப்போம்.
மரணம் என்பது உடல் சம்பந்தப்பட்டது என்றாலும், அதாவது உடலை விட்டு உயிர் நீங்குவது என்றாலும், உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், வலி இல்லாமல் உயிர் பிரியும் நிலைமையும் உண்டு. உடலை வருத்தி, உபாதைகளுக்கு ஆளாக்கி, அவதிக்கு ஆளாக்கி, துன்பத்திற்கு ஆளாக்கி உடல் பிரியும் நிலைமையும் உண்டு. இரண்டாவது நிலைமை சோகமானது.
விபத்தில், விபத்து நடந்த இடத்திலேயே, ஷண நேரத்திலேயே, அந்த நொடியிலேயே, உயிர் பிரிந்துவிட்டால், ஒரு பிரச்சினையும் இல்லை.
ஆனால் அங்கே காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,
பத்து நாட்கள் சிகிச்சை, ஐ.சி.யு, இத்யாதிகள், சில லட்சம் பணவிரயம், உறவினர்களின் அச்சச்சோ, இச்சச்சோக்களுக்குப் பிறகு உயிர் போவது அவதியானது.
ஆனால் எதுவும் நம் கையில் இல்லை. எல்லாம் விதிக்கப்பட்டது (Pre - destined)
அதைத் தெரிந்துகொண்டு, அதைப்பற்றிக் கவலைப்பட்டு, இருக்கும் நாட்களையும் துன்பமாக்கிக் கொள்வது, பேதமையானது.
இறைவன்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, எல்லாம் அவன் செயல், அவன் பார்த்துக்கொள்வான் என்று நிம்மதியாக இருக்கும் நிலையே உன்னதமானது. அதைத்தான் நாம் செய்ய வேண்டும். இறைவழிபாடு அதற்கு உதவும். அதைத்தான் எல்லா மதங்களும் நமக்கு வலியுறுத்துகின்றன.
ஆகவே அந்த நிலைக்குத் தயாராக இருப்பவர்கள், இத்துடன் எட்டாம் பாடத்தைப் படிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். இல்லை முடியாது, "களவும் கற்று மற” என்பதைப்போல இதையும் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். தெரிந்து கொண்டாலும் சீரியசாக மாட்டோம் என்பவர்கள் மட்டும் மேலே தொடரலாம்.
-------------------------------------------------------------------------------------
"மரணம் என்னும் தூது வந்தது - அது
மங்கை என்னும் வடிவில் வந்தது!”
என்று கவியரசர் கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலின் சரணத்தில் எழுதினார். ஏழாம் வீட்டில் ஒரு ஒற்றுமை இருப்பதைத் தெரிந்து, அவர் அதை எழுதவில்லை. படத்தின் கதை அமைப்பிற்காகவே அப்படி எழுதினார். ஆனால் ஜோதிடப்பாடத்தில் மங்கையை நமக்குக் கொடுப்பவnதான் மரணத்தையும் கொடுக்கிறான். அதுவே பெண்ணாக இருந்தால், ஆணின் துணையைக் கொடுப்பவன்தான் மரணத்தையும் கொடுக்கிறான்.
அதனால் கவியரசரின் வரிகளை அதே வரிகளை இப்படி மாற்றினால் நம் பாடத்திற்கு அது சரியாக இருக்கும்
"மரணம் என்னும் தூது வந்தது - அது
மங்கை வந்த வழியில் வந்தது!”
பெண்கள் அதே வரிகளை இப்படி மாற்றிக்கொள்லலாம்.
"காலன் என்னும் கள்ளன் வந்தான் - அவன்
கணவன் வந்த வழியில் வந்தான்!"
(இதை எழுதவில்லை என்றால் அவர்கள் வருத்தமுறலாம்...ஹி.ஹி.ஹி!)
------------------------------------------------------------------------------------
7ஆம் அதிபதியும், 2ஆம் அதிபதியும் தான் மரணத்தைக் கொடுப்பார்களா? வேறு யாரும் இல்லையா?
ஏன் இல்லை? இன்னும் ஒருவர் இருக்கிறார்.
ஜாதகத்தில் அவரின் பெயர் பாதகாதிபதி!
1
சர ராசிகள் (Movable signs)
மேஷம் (Aries), கடகம் (Cancer), துலாம் (Libra), மகரம் (Capricorn)
சர ராசிகளுக்கு 11ஆம் அதிபதி பாதகாதிபதி
----------------------------------------------------------------
2
ஸ்திர ராசிகள் (Fixed signs)
ரிஷபம் (Taurus), சிம்மம் (Leo), விருச்சிகம் (Scorpio) கும்பம் (Aquarius)
ஸ்திர ராசிகளுக்கு 9ஆம் அதிபதி பாதகாதிபதி
-----------------------------------------------------------------
3
உபய ராசிகள் (Dual signs)
மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces)
உபய ராசிகளுக்கு மூன்றாம் ஆசாமி இல்லை. 7ஆம் அதிபதியே பாதகாதிபதி
-----------------------------------------------------------------
இந்தப் பாதகாதிபதி என்றால் ஆயுள் முடியும் போது மட்டும் மரணத்தைக் கொடுப்பார்கள். மற்ற காலங்களில் அவர்கள் வேறு எந்தக் கெடுதலையும் செய்ய மாட்டார்கள்
லாபாதிபதியும், பாக்யாதிபதியும் எப்படி மரணத்தைக் கொடுப்பார்கள் என்கின்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அதைப் பற்றிய விவரத்தை நாளை பார்ப்போம். பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்
நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்
------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteகொல்லாமல் கொல்பவர்களுடன்
கொன்று தீர்ப்பவர்கள்......
நன்றிகள் ஐயா!
நெருப்பாறு கீழே ஓட, முடியால் ஆன பாலத்தில் நடை பயில எவ்வளவு கவனம் தேவையோ அவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறது உங்கள் எழுத்து நடை. உண்மையாகவே சரஸ்வதிதேவியின் அருள் பெற்றவர்தான் நீங்கள்.
ReplyDeleteஇந்த மாரகாதிபதிகளை
ReplyDeleteபுராண பாத்திரங்களோடு ஒப்பிட்டு பார்க்க முடியுமா . .
உதாரணம் ராவணன் (பெண் வழி மரணம்)
இது வித்தியாசமாக இருந்தாலும் அநேகமாக எல்லோரும் தெரிந்தது தானே..
அய்யா வணக்கம்.....
ReplyDeleteஎட்டாம் இடம் பற்றிய பாடம் நாளுக்கு நாள் சுவாரசியமாக செல்கின்றது.....மாரகாதிபதிகள் பற்றிய விளக்கம் சிறப்பு....
நன்றி....
////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
கொல்லாமல் கொல்பவர்களுடன்
கொன்று தீர்ப்பவர்கள்......
நன்றிகள் ஐயா!////
நல்லது. நன்றி ஆலாசியம்!
////kmr.krishnan said...
ReplyDeleteநெருப்பாறு கீழே ஓட, முடியால் ஆன பாலத்தில் நடை பயில எவ்வளவு கவனம் தேவையோ அவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறது உங்கள் எழுத்து நடை. உண்மையாகவே சரஸ்வதிதேவியின் அருள் பெற்றவர்தான் நீங்கள்.////
தவறான தகவல்களைத் தரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். பல வயதில் வாசகர்கள் இருக்கிறார்கள். இருபால் இனத்தவரும் வாசிக்கின்றார்கள். ஆகவே யாருடைய வருத்தத்திற்கும் ஆளாகக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அத்துடன் யாரும் பயம் கொள்ளக்கூடாது, குழப்பம் அடையக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறேன். ஒருமுறைக்கு மூன்று முறைகள் எழுதியதைப் படித்துப் பார்த்துவிட்டுத்தான் பதிவில் ஏற்றுகிறேன். இன்று பதிவை வலை ஏற்றிய நேரத்தைப் பாருங்கள். எழுதுபவர்கள் அனைவருக்குமே சரஸ்வதியின் அருள் உண்டு. உங்களுக்கும் உண்டு. எனக்கும் உண்டு.
/////iyer said...
ReplyDeleteஇந்த மாரகாதிபதிகளை
புராண பாத்திரங்களோடு ஒப்பிட்டு பார்க்க முடியுமா . .
உதாரணம் ராவணன் (பெண் வழி மரணம்)
இது வித்தியாசமாக இருந்தாலும் அநேகமாக எல்லோரும் தெரிந்தது தானே../////
ராவணனுக்குப் பெண்வழி மரணமா? இல்லை. பெண் ஆசையால் மரணத்தை வரவழைத்துக்கொண்டான். அவ்வளவுதான். அது விதிவழி மரணம்தான்! எல்லா மரணங்களுமே விதிவழியாக வருவதுதான்!
///astroadhi said...
ReplyDeleteஅய்யா வணக்கம்.....
எட்டாம் இடம் பற்றிய பாடம் நாளுக்கு நாள் சுவாரசியமாக செல்கின்றது.....மாரகாதிபதிகள் பற்றிய விளக்கம் சிறப்பு....
நன்றி..../////
சுவாரசியம் இல்லாவிட்டால் யாரும் படிக்கமாட்டார்கள். நல்ல எழுத்தின் முதல் அடையாளம் அதுதான். ஆகவே அதில் நான் சற்றுக்கவனமாக இருக்கிறேன். நன்றி ஆதிராஜ்!
ஐயா!!!
ReplyDeleteபாதகாதிபதிகளை சர,ஸ்திர,உபய லக்கினத்தை வைத்து கணக்கிடுவதா அல்லது சந்திரன் நின்ற ராசியை (சர,ஸ்திர,உபய)வைத்து கணக்கிடுவதா?
எடுத்துக்காட்டாக ஜாதகனுக்கு தனுசு லக்னம் ,கடகத்தில் சந்திரன்(அவன் ராசி கடகம்). இப்போது 7ம் அதிபதி புதன் பாதகாதிபதியா? அல்லது கடக ராசிக்கு 11மிட அதிபதி சுக்கிரன் பாதகாதிபதியா?
Dear Sir
ReplyDeletePaadam Arumai Sir...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
Thanks for the lessons sir
ReplyDeleteDear sir,
ReplyDeleteTodays lesson was good. How to count aathipathiyam either from lagnam or rasi? Why the confusion is, to know paathakathipathy you are mentioned the things for rasi i.e., Movable, fixed signs (rasi)?
thanks sir
J.SENDHIL
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteமாரகர்கள் பற்றிய இன்றைய பாடம்
விளக்கங்களுடன் நன்கு புரியும்படியும்
கொடுத்துள்ள
தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-07-10
ஐயா வணக்கம்...!
ReplyDeleteகசப்பு மருந்து என நினைத்த எட்டாமிட பாடங்களைக் கூட தாங்கள் தங்களுக்கே உரிய பாணியில் தேன் கலந்து வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள்... அருமை...! மிக்க நன்றி...!
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
Arul said...
ReplyDeleteஐயா!!!
பாதகாதிபதிகளை சர,ஸ்திர,உபய லக்கினத்தை வைத்து கணக்கிடுவதா அல்லது சந்திரன் நின்ற ராசியை (சர,ஸ்திர,உபய)வைத்து கணக்கிடுவதா?
எடுத்துக்காட்டாக ஜாதகனுக்கு தனுசு லக்னம் ,கடகத்தில் சந்திரன்(அவன் ராசி கடகம்). இப்போது 7ம் அதிபதி புதன் பாதகாதிபதியா? அல்லது கடக ராசிக்கு 11மிட அதிபதி சுக்கிரன் பாதகாதிபதியா?
தனுசு லக்கினம் என்றால் அது உபய லக்கினம். ஏழாம் அதிபதி புதன்தான் அதன் பாதகாதிபதி. ஓக்கேயா?
////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Paadam Arumai Sir...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
நல்லது. நன்றி ராஜாராமன்.
////Ram said...
ReplyDeleteThanks for the lessons sir/////
நல்லது. நன்றி!
/////dhilse said...
ReplyDeleteDear sir,
Todays lesson was good. How to count aathipathiyam either from lagnam or rasi? Why the confusion is, to know paathakathipathy you are mentioned the things for rasi i.e., Movable, fixed signs (rasi)?
thanks sir
J.SENDHIL/////
Rasi is a general name. Counting is to be done only from lagna. For example, If your lagna is mesham, you belongs to movable sign and the 11th lord Saturn is the padhakathipathi.
////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
மாரகர்கள் பற்றிய இன்றைய பாடம்
விளக்கங்களுடன் நன்கு புரியும்படியும்
கொடுத்துள்ள
தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி////
நல்லது நன்றி தட்சணாமூர்த்தி!
////M.Thiruvel Murugan said...
ReplyDeleteஐயா வணக்கம்...!
கசப்பு மருந்து என நினைத்த எட்டாமிட பாடங்களைக் கூட தாங்கள் தங்களுக்கே உரிய பாணியில் தேன் கலந்து வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள்... அருமை...! மிக்க நன்றி...!
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்/////
தேன் இல்லாமல் மருந்தா? நானே சாப்பிடமாட்டேன்:-)))))
2,7ம் அதிபதிகள் மாரகர்களாக இருப்பதற்கு கொலையும் செய்வாள் பத்தினி என்பதயும் உவமானமாகக் கூறலாம்.
ReplyDelete////ananth said...
ReplyDelete2,7ம் அதிபதிகள் மாரகர்களாக இருப்பதற்கு கொலையும் செய்வாள் பத்தினி என்பதயும் உவமானமாகக் கூறலாம்.////
நீங்கள் அதை உவமானமாகச் சொல்லலாம் ஆனந்த்! நான் வாத்தியார். அதைச் சொல்ல முடியாது. வகுப்பறைப்பு வந்து செல்லும் தாய்க்குலங்களின் மனம் நோகும்!
சென்ற பதிவில் வெளியிடப்பட்டிருந்த பிரபாகரன் தொடர்பான ஜாதகம் உண்மையானதாக இருக்கும் பட்சத்தில், ஜாதக ரீதியில் இன்றைய பாட அடிப்படையில் (jahannaatha hora ) அடிப்படையில் சந்திர தசை புதன் புத்தி நடந்த சமயம் (2008 -05 -27 to 2009 - 10 - 26 ) அவர் மரணம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.
ReplyDeleteஅவரின் லக்கினம் கும்ப லக்கினமாதலால் மாரகாதிபதி என 7ஆம் ஆதியாக சூரியனும், 2ஆம் ஆதியாக குருவும் அமைவதாலும்
விருச்சிக ராசிக்கு பாதகாதிபதியான 9ஆம் ஆதி சுக்கிரனும் இந்த தச புத்தி காலத்தில் சம்பந்தப்படவில்லை என்பதால் இந்த கால கட்டத்தில் மரணம் நிகழவில்லை என்று பொருள் கொள்ளலாமா? இனிவரும் காலங்களில் குரு தசை சூரிய புத்தி ( 2048 -02 -07 to 2048 - 11 - 25 ) வரையிலான காலத்தில்தான் நிகழ வாய்ப்பிருக்கிறது என்று கணிக்கலாமா?
ஆசிரியர் விளக்கத்தை வைத்து பாடத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
தயவு செய்து படத்தை மாற்றவும். என் போன்ற பெற்றோர்கள் மகேந்ரா சிடி போன்ற புறநகர் பகுதிகளுக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு இரவில் நெடுநேரம் காத்திருக்கிறோம்.
ReplyDelete//////minorwall said...
ReplyDeleteசென்ற பதிவில் வெளியிடப்பட்டிருந்த பிரபாகரன் தொடர்பான ஜாதகம் உண்மையானதாக இருக்கும் பட்சத்தில், ஜாதக ரீதியில் இன்றைய பாட அடிப்படையில் (jahannaatha hora ) அடிப்படையில் சந்திர தசை புதன் புத்தி நடந்த சமயம் (2008 -05 -27 to 2009 - 10 - 26 ) அவர் மரணம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவரின் லக்கினம் கும்ப லக்கினமாதலால் மாரகாதிபதி என 7ஆம் ஆதியாக சூரியனும், 2ஆம் ஆதியாக குருவும் அமைவதாலும்
விருச்சிக ராசிக்கு பாதகாதிபதியான 9ஆம் ஆதி சுக்கிரனும் இந்த தச புத்தி காலத்தில் சம்பந்தப்படவில்லை என்பதால் இந்த கால கட்டத்தில் மரணம் நிகழவில்லை என்று பொருள் கொள்ளலாமா? இனிவரும் காலங்களில் குரு தசை சூரிய புத்தி ( 2048 -02 -07 to 2048 - 11 - 25 ) வரையிலான காலத்தில்தான் நிகழ வாய்ப்பிருக்கிறது என்று கணிக்கலாமா?
ஆசிரியர் விளக்கத்தை வைத்து பாடத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.///////
ஆகா, அப்படியே கணிக்கலாம். அந்த ஜாதகம் உண்மையாக இருக்கும் என்றால், உங்கள் கணிப்பு 75% சதவிகிதம் சரியாக இருக்கும். பாக்கி 25% என்ன ஆச்சு? அஷ்டகவக்கத்தில் ஒரு ஃபார்முலா இருக்கிறது. அதையும் பார்க்க வேண்டும். அது பற்றிய பாடம் வரும்வரை பொறுத்திருங்கள்!
///krish said...
ReplyDeleteதயவு செய்து படத்தை மாற்றவும். என் போன்ற பெற்றோர்கள் மகேந்ரா சிட்டி போன்ற புறநகர் பகுதிகளுக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு இரவில் நெடுநேரம் காத்திருக்கிறோம்.////
உங்கள் உணர்விற்கு மதிப்பளிக்கிறேன். படத்தை மாற்றிவிட்டேன். நன்றி க்ரீஷ்!