மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.7.10

நடக்குமென்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்துவிடும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நடக்குமென்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்துவிடும்!

சென்ற பதிவின் தொடர்ச்சி! அதைப் படித்துவிட்டு, இதைப் படிக்கவும்.

1
ராசிகளில் மேஷம், கடகம், துலாம் ,மகரம் - ஆகியவை சரராசிகள் எனப்படும்.
இந்தச் சரராசிகளுக்கு 11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு  அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும்.
மேஷத்திற்குப் 11-ம் வீடு கும்பம். அதன் அதிபதி சனி. மேஷத்திற்கு
சனி பாதகாதிபதியாகிறார். கடகத்திற்கு 11-ம் வீடு ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன். கடகத்திற்கு பாதகாதிபதியாகிறார்.   துலாத்திற்கு 11-ம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியன். துலாத்திற்கு சூரியன் பாதகாதிபதியாகிறார்.
பாதகாதிபதி என்றால் ஆயுள் முடியும் போது மரணத்தைக் கொடுப்பார்கள்.
மற்றபடி அவர்கள் வேறு எந்த உபத்திரவத்தையும் கொடுக்க மாட்டார்கள்
-------------------------------------------------------------------------------------------------------------------------.
உதாரணத்திற்கு மேஷ ராசியை எடுத்துக் கொள்வோம். அதன் பாதக அதிபதி சனி. அதன் லாபாதியும் அவரே! ஜாதகனுக்கு பலவிதங்களில் லாபத்தைக் கொடுத்துக்கொண்டே வருபவர் உரிய நேரம்  வரும்போது ஜாதகனைப் போட்டுத் தள்ளவும் தயங்க மாட்டார். ஜாதகனுக்கு ஹீரோவாக செயல்பட்ட சனி, ஒரே நாளில் வில்லனாகிக் கத்தியை உருவி ஒரே போடாகப் போட்டு மேலே அனுப்பிவிடுவார்,

லாபாதிபதியே பாதகாதிபதியாவது அப்படித்தான் நடக்கும். அப்போது அவர் லாபாதிபதியாகச் செயல் படமாட்டார். பாதகாதிபதியாகச் செயல்படுவார்.
மாரகம் என்று வரும் போது மரணத்தைக் கொடுக்கத் தயங்க மாட்டார். கடமை தவறாதவர்கள் கிரகாதிபதிகள்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
2
ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியோருக்கு 9-ம் வீட்டிற்கதிபதிகளான முறையே சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் பாதகாதிபதி ஆகின்றனர். அவர்கள் ஆயுள் முடியும் போது தங்கள் தசா, புக்திக் காலங்களில் மரணத்தைக் கொடுப்பார்கள். ரிஷபத்திற்கு சனி யோககாரகன் ஆவார். அவர் தன்னுடைய தசாபுக்தி காலங்களில் நன்மையைத்தான் செய்வார்.

ஆயினும் ஜாதகனுக்கு ஆயுள் முடியும்போது அவர் தன் கடமையைச் செய்யாமல் விடுவதில்லை. அவர் மரணத்தைக் கொடுப்பார். ஆயுள் இருக்கும்போது நன்மைகளைச் செய்தவர், ஆயுள் முடியம்போது
மரணத்தைக் கொடுக்கத் தவறுவதில்லை!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
3
உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றிற்கு 7-ம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாகிறார். மிதுனத்திற்கு 7-ம் வீட்டின் அதிபதி குரு, கன்னிக்கு 7-ம் வீடான மீனத்திற்கு அதிபதி குரு பாதகாதிபதியாகிறார்.
தனுசுவிற்கும், மீனத்திற்கும் புதன் 7-ம் வீட்டிற்கதிபதியாகி அவர் பாதகாதிபதியாகிறார். இளமையில்  திருமணத்தைச் செய்து வைத்து ஜாதகனை மகிழ்வித்த குருவும், புதனும் ஆயுள் முடியும்போது, ஜாதகனை மேலே  அனுப்பிவைக்கவும் செய்வார்கள்.

மாரகாதிபதிபதிகள், பாதகாதிபதிகள் யார் யார் என்பதைச் சொல்லிக்கொடுத்துவிட்டேன்.

இனி அடுத்தபாடம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  “நடக்குமென்பார் நடக்காது
      நடக்காதென்பார் நடந்துவிடும்
   கிடைக்குமென்பார் கிடைக்காது
      கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்”


என்று கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதினார். அது ஜோதிடத்திற்கு முற்றிலும் பொருந்தும்.

ஜோதிடத்திற்குப் பலவிதிகள் மற்றும் விதிவிலக்குகள் உள்ளன. எல்லாவற்றையும் சீர் துக்கிப் பார்த்துப் பலனைச்  சொல்ல வேண்டும். அதற்கு ஜோதிடத்தில் நல்ல பாண்டித்யமும், பொறுமையும் வேண்டும். அதைவிட முக்கியமாக தெய்வ அனுக்கிரகமும் வேண்டும். அப்போதுதான் வாக்குப் பலிதம் இருக்கும். சொன்னது சொன்னபடி நடக்கும்.

இல்லாவிட்டால் ஊற்றிக் கொண்டுவிடும்.

தசாபுத்திப் பலன்களையும், கோள்சாரப் பலனையும், எந்த ஜோதிடன் வேண்டுமென்றாலும் சரியாகச் சொல்வான். மரணத்தைக் கணிப்பதற்கு மட்டும் அதீதத் திறமையும், ஞானமும் வேண்டும்.

என் சொந்தக்காரர் ஒருவருக்கு, ஜோதிடர் ஒருவர், நீங்கள் இன்னும் பத்து ஆண்டுகள் உயிரோடு இருப்பீர்கள் என்றார். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் அடுத்து வந்த மூன்றாவது மாதமே இறந்துவிட்டார். சும்மா இறக்கவில்லை.
வயிற்றில் பெரிய வீக்கம் ஏற்பட்டு, பத்து நாட்கள் மருத்துவமனையில், அவதிப்பட்டுவிட்டு இறந்து போனார்.

அதுபோன்று நிறைய உண்மைக் கதைகள் இருக்கின்றன.

அதானால்தான் ஜோதிடம் கற்கும்போது முதல் விதியாக இதைச் சொல்லித் தருவார்கள்:

ஜோதிடத்தால் என்ன நடக்கவுள்ளது என்பதை மட்டுமே ஜோதிடர் கோடிட்டுக் காட்டலாம். ஆனால் அறுதியிட்டுச் சொல்லக் கூடாது. அந்த சக்தி ஆண்டவன் ஒருவருக்கு மட்டுமே உண்டு!
----------------------------------------------------------------------------------------------------------------------
முதலில் குழந்தைப் பருவத்தில் தவறிப்போகும் ஜாதகர்களைப் பற்றிப் பார்ப்போம்:

அதற்கு பாலரிஷ்ட தோஷம் என்று பெயர்:

பிறந்த நாளில் இருந்து எட்டு வயதிற்குள் இறந்துவிடும் அமைப்பு அது! பாலரிஷ்ட தோஷம்!

ஜாதகத்தில் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் சந்திரன் இருந்து, அதன் மேல் தீயகிரகங்களின் (malefic planets) பார்வை விழுந்தால், அது இந்த தோஷத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் இந்தக் குறிப்பிட்டுள்ள மூன்று  வீடுகளில் உள்ள சந்திரனின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை விழுந்தால், பாலரிஷ்ட தோஷம்
நிவர்த்தியாகிவிடும். உங்கள் மொழியில் சொன்னால் காணாமல் போய்விடும்.

ரிஷப லக்கினக் குழந்தைக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் அது பாலரிஷ்டம் போன்று தோற்றமளிக்கும். ஆனால் சந்திரன் இருக்கும் அந்த வீடு, சுபக்கிரகமான சுக்கிரன் வீடு, லக்கினாதிபதியும் அவரே! அதனால்
குழந்தை தப்பித்துவிடும். பாலரிஷ்டம் ஒன்றும் செய்யாது.

சிம்ம லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கு, ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால், அது பாபக் கிரகமான சனியின் வீடு. அந்த வீட்டின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை எதுவும் இல்லை என்றால், பாலரிஷ்ட தோஷம் தன் வேலையைக் காட்டிவிடும்.
---------------------------------------------------------------------------
குழந்தைகள், நீரில் தவறி விழுந்து அதாவது ஆறு, குளம் அல்லது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தவறி விழுந்து, இறந்து விடுவதுதான் இந்த வயதுச் சாவுகளில் அதிகமான சாவுகளாக இருக்கும். அல்லது கடுமையான
நோய் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிடும் குழந்தைகளும் இருக்கும்.

எது எப்படியானும், அது விதிக்கப்பட்டது. பெற்றோர்களால் ஒன்றும் செய்ய முடியாது - பரிதவிப்பதைத் தவிர.

அதற்கான நிலைப்பாடுகள் (அனைத்தும் பொது விதிகள்):

கண்டம் எனும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது அதற்குப் பொருள்:

1. சந்திரன் 8ஆம் வீடு, அல்லது 12ஆம் வீடு, அல்லது 6ஆம் வீடுகளில் இருந்து ராகுவின் பார்வையைப்  பெற்றிருந்தால், சின்ன வயதில் கண்டம்.

2. லக்கினத்தில் தேய்பிறைச் சந்திரன் இருக்க, கேந்திரங்களில் அல்லது எட்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்.

3. 6ஆம் வீட்டில் அல்லது 8ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், மற்றும் சனி கூட்டாக இருக்க, சுபக்கிரகங்களின்  பார்வை அல்லது சேர்க்கை இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்.

4. சூரியன், செவ்வாய், மற்றும் சனி ஆகிய கிரகங்கள் 5ஆம் வீட்டில் கூட்டாக இருந்தால்,குழந்தைக்குக் கண்டம்

5. லக்கினத்தில் சந்திரன் இருக்க, அதன் இருபுறமும், தீய கிரகங்கள் இருக்க (பாபகர்த்தாரி யோக அமைப்பு) சுபகிரகங்களின் பார்வை எதுவும் லக்கினத்தின் மேல் இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்

6. ஜாதகத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருந்து, ஜாதகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில்  சுபக்கிரகங்களான குரு  அல்லது  சுக்கிரன் பாபகர்த்தாரி  யோகத்தில்  மாட்டிக் கொண்டிருந்தால்  குழந்தைக்குக் கண்டம்

7. லக்கினத்தில் சந்திரனும், சனியும் இருக்க, எட்டில் செவ்வாய் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்

8. லக்கினம் மற்றும் லக்கினத்தில் இருந்து 6, 7 , 8 ஆகிய நான்கு வீடுகளிலும் தீய கிரகங்கள் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்.

9. ஜாதகத்தில் சந்திரனும், சனியும் கைகோர்த்துக்கொண்டு ஒன்றாக இருக்க, 12ல் சூரியனும், 4ல் செவ்வாயும் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்

10. ஏழாம் வீட்டில் சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்து, சுபக்கிரகங்களின் பார்வையை அவர்கள் பெறவில்லை  என்றால், குழந்தைக்குக் கண்டம்
--------------------------------------------------------------------
முக்கியமானவற்றை மட்டுமே கூறியுள்ளேன். இன்னும் நூறுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஜோதிட நூல்களில்  சொல்லப்பட்டுள்ளன. அத்தனையையும் எடுத்து எழுதினால் ஓவர் டோசாகிவிடும். ஒரு தூக்க மாத்திரைக்குப் பதிலாக  ஐம்பது  தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டால் என்ன ஆகுமோ அது ஆகிவிடும். ஆகவே பாலரிஷ்ட  தோஷத்திற்கான அமைப்பை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நானும் ஜோதிடர் வேலைக்குச் செல்லப் போவதில்லை. இதைப் படிக்கும் நீங்களும் ஜோதிடர் வேலைக்குச்  செல்லப்போவதில்லை. ஆகவே இது போதும்.

இல்லை நாங்கள் முழு விதிகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம் என்பவர்கள், பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற புராண ஜோதிட நூல்களை வாங்கிப் படிக்கலாம்.

அடுத்ததாக அல்பாய்சு, மத்திம ஆயுசு, பூரண ஆயுசு ஆகியவற்றிற்கான கிரக அமைப்புக்களைப் பார்க்கலாம்.

இன்றல்ல. இதன் தொடர்ச்சியாக அது 19.7.2010 திங்களன்று வரும்.

இடைப்பட்ட நாட்களில் வேறு பாடங்கள் நடைபெறும். தொடர்ந்து சாம்பார் சாதத்தையே சாப்பிட்டுக்கொண்டிருக்க  முடியுமா? அதாவது தொடர்ந்து ஜோதிடத்தையே படித்துக் கொண்டிருக்கலாமா? இடையில் வற்றல்குழம்பு, ரசம்,  கெட்டித் தயிர், பாயசம் என்று வெரைட்டியாக உணவு இருக்க வேண்டாமா?

ஒரு வார்த்தை சொல்லுங்கள்!

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

43 comments:

  1. Thank you very much for the lesson Sir.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா
    இன்றைய பாடம் சிறப்பாக இருக்கிறது. ஒரு சந்தேகம் ஒரு சில ஜாதகங்களில் சில கிரகங்களுக்கு சுயவர்க்கத்தில் பரல்களே இல்லை (0). இதற்கு எப்படி பலன்கள் அமையும்.

    என்னிடம் பல ஆங்கில சோதிட நூல்கள் மின்னூல் வடிவத்தில் (pdf) இருக்கின்றன. வகுப்பறை மாணவர்கள் யாருக்காவது தேவைப்பட்டால் கீழ்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் stlekshmanan@yahoo..com

    நன்றி
    இப்படிக்கு
    தி. லெட்சுமணன்

    ReplyDelete
  3. Very very interesting..... looking to read more about 8th house.

    ReplyDelete
  4. தெய்வ அனுக்கிரகம் தேவை என சொல்வது மிக மிக சரியே . . .

    இது துய்மையான உள்ளமும் சீரிய ஒழுக்கமும் மற்றவர்களின் நலத்தை விரும்பும் நிலையும் இருந்தால் தான் தெய்வ அனுக்கிரகம் ஏற்படும் அப்போது தான் வாக்கு பலிதம் ஏற்படும்

    ரிஷப காளை ராசியான என்னை மகர ராசியான வாத்தியாரிடம் சேர்த்தது . . வலைப்பூவில் சோதிடம் தேடியதால் இல்லை,

    அது முருகன் அருளால் . .
    ஆம் முருகன் அருள் என்ற வலைப்பூ தான். . . அங்கே முருகனை போற்றுபவர் என நம் வாத்தியார் இருந்தார் பிரித்து படித்தேன் வகுப்பறைக்குள் வந்து விட்டேன். . .

    ReplyDelete
  5. வணக்கம் அய்யா....

    இன்றைய பாடம் அருமை .....சொல்ல வந்த கருத்தை எளிமையான நடையில் தரும் உங்களின் பணி போற்றுதலுக்கு உரியது.....

    நன்றி வணக்கம்....

    ReplyDelete
  6. வணக்கம் அய்யா.
    எட்டாம் வீட்டை பற்றியும்
    பாலாரிஸ்டம் பற்றியும்
    மிக தெளிவாக பாடம் இருக்கிறது.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  7. sir ,
    8th house lesson is really testing our will power, sure we will be molded nicely after this lessons ,thank you sir,....

    ReplyDelete
  8. Dear Sir

    Paadam Arumai Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  9. என் ஜாதகத்தில் சந்/ராகு மற்றும் சூர்/கேது சேர்ந்து உள்ளன. எனக்கு பலாரிஷ்ட தோஷம் இருந்தது என்று என் தாத்தா சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன இன்னொரு விஷயம் பாலாரிஷ்ட தோஷத்திலிருந்து தப்பித்தவர்களின் பின்பாதி வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது. உங்கள் கருத்து என்ன?

    ReplyDelete
  10. மாரகாதிபதிகள் தங்கள் தசை காலங்களில் யோக கிரகங்களின் புத்திகளில் யோக பலனைக் கொடுத்து தசை முடிவதற்குள் மாரகமும் செய்வார்கள் என்று படித்திருக்கிறேன். மாரகம் என்பது கூட ஆயுள் முடிவு என்றால்தான் மரணமும் இல்லாவிட்டால் தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது என்பது போல் கண்டம் ஏற்பட்டு முடிந்து விடும். எப்படியோ யோகம் கொடுத்தால்தான் மாரகம் செய்வார்கள். கொடுத்தவனே பறித்துக் கொண்டான் என்பது போல். பாதகாதிபதிகளைப் பற்றி இன்றைய ஜோதிடர்கள்கள் தான் அதிகம் பேசுகிறார்கள். புராதாண ஜோதிட நூல்களில் இதைப் பற்றிய குறிப்புகள் எதுவும் காண முடியவில்லை. தெரிந்தவர்கள் யாரும் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  11. Dear Sir,

    Thanks for the today's lessons.

    with the blessings i hope we keep learning the basics.

    ReplyDelete
  12. தெளிவாகச் சொல்கிறீர்கள் சார்..நன்றி.

    ReplyDelete
  13. //////Alasiam G said...
    Thank you very much for the lesson Sir./////

    நல்லது. நன்றி ஆலாசியம்.

    ReplyDelete
  14. //////Lakshmanan said...
    வணக்கம் ஐயா
    இன்றைய பாடம் சிறப்பாக இருக்கிறது. ஒரு சந்தேகம் ஒரு சில ஜாதகங்களில் சில கிரகங்களுக்கு சுயவர்க்கத்தில் பரல்களே இல்லை (0). இதற்கு எப்படி பலன்கள் அமையும்.//////

    0 பரல் நீசத்திற்குச் சமம். அந்தக் கிரகத்தால் எந்தப் பலனும் ஜாதகனுக்குக் கிடைக்காது
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //////என்னிடம் பல ஆங்கில சோதிட நூல்கள் மின்னூல் வடிவத்தில் (pdf) இருக்கின்றன. வகுப்பறை மாணவர்கள் யாருக்காவது தேவைப்பட்டால் கீழ்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் stlekshmanan@yahoo..com
    நன்றி
    இப்படிக்கு
    தி. லெட்சுமணன்//////
    இணையத்தில் மென் நூல்கள் நிறையக் கிடைக்கின்றன. படிப்பதற்குத்தான் நேரம் இருப்பதில்லை. உங்கள் சேவை மனப்பன்மைக்கு நன்றி. இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்து, உங்களுக்கு மின்னஞ்சல் கொடுப்பவர்களுக்கு அனுப்பிவையுங்கள்.

    ReplyDelete
  15. /////sundarkmy said...
    Very very interesting..... looking to read more about 8th house./////

    ஆகா, தொடர்ந்து வரும். படித்து மகிழுங்கள்.

    ReplyDelete
  16. iyer said...
    தெய்வ அனுக்கிரகம் தேவை என சொல்வது மிக மிக சரியே . . .
    இது துய்மையான உள்ளமும் சீரிய ஒழுக்கமும் மற்றவர்களின் நலத்தை விரும்பும் நிலையும் இருந்தால் தான் தெய்வ அனுக்கிரகம் ஏற்படும் அப்போது தான் வாக்கு பலிதம் ஏற்படும்
    ரிஷப காளை ராசியான என்னை மகர ராசியான வாத்தியாரிடம் சேர்த்தது . . வலைப்பூவில் சோதிடம் தேடியதால் இல்லை,
    அது முருகன் அருளால் . .
    ஆம் முருகன் அருள் என்ற வலைப்பூ தான். . . அங்கே முருகனை போற்றுபவர் என நம் வாத்தியார் இருந்தார் பிரித்து படித்தேன் வகுப்பறைக்குள் வந்து விட்டேன். . //////.

    நல்லது. நன்றி நண்பரே! என்னை எழுதவைப்பவன் அவன்தான்.

    ReplyDelete
  17. //////astroadhi said...
    வணக்கம் அய்யா....
    இன்றைய பாடம் அருமை .....சொல்ல வந்த கருத்தை எளிமையான நடையில் தரும் உங்களின் பணி போற்றுதலுக்கு உரியது.....
    நன்றி வணக்கம்..../////

    நடை எளிமையாக, புரியும்படியாக இல்லை என்றால் நானே படிக்க மாட்டேன். அதனால் எழுதுவதிலும் அதை நான் கடைப்பிடிக்கிறேன். உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  18. /////thirunarayanan said...
    வணக்கம் அய்யா. எட்டாம் வீட்டை பற்றியும் பாலாரிஸ்டம் பற்றியும் மிக தெளிவாக பாடம் இருக்கிறது.
    நன்றி அய்யா./////

    பாடத்தை விடுங்கள். இத்தனை நாட்களாக எங்கே சென்றிருந்தீர்கள்? வகுப்பறையில் உங்களை இன்று பார்த்தவுடந்தான் மனம் சற்று நிம்மதி அடைந்தது. ஸ்ரீரங்கநாதர் நலமாக இருக்கிறாரா? அடிக்கடி அவரைத் தரிசிக்கிறீர்களா?

    ReplyDelete
  19. //////Soundarraju said...
    sir ,
    8th house lesson is really testing our will power, sure we will be molded nicely after this lessons ,thank you sir,..../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. //////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Paadam Arumai Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman///////

    நன்றி ராஜாராமன்.

    ReplyDelete
  21. /////Uma said...
    என் ஜாதகத்தில் சந்/ராகு மற்றும் சூர்/கேது சேர்ந்து உள்ளன. எனக்கு பலாரிஷ்ட தோஷம் இருந்தது என்று என் தாத்தா சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன இன்னொரு விஷயம் பாலாரிஷ்ட தோஷத்திலிருந்து தப்பித்தவர்களின் பின்பாதி வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது. உங்கள் கருத்து என்ன?///////

    அனைவருடைய வாழ்க்கையிலும் நன்மையும், தீமையும் கலந்துதான் இருக்கும் (337ஐ நினைத்துக்கொள்ளுங்கள்)
    ஆகவே நீங்கள் சொல்லும் தப்பித்தவர்கள், அதற்கு விலக்காவதற்கு வழியில்லை!

    ReplyDelete
  22. //////ananth said...
    மாரகாதிபதிகள் தங்கள் தசை காலங்களில் யோக கிரகங்களின் புத்திகளில் யோக பலனைக் கொடுத்து தசை முடிவதற்குள் மாரகமும் செய்வார்கள் என்று படித்திருக்கிறேன். மாரகம் என்பது கூட ஆயுள் முடிவு என்றால்தான் மரணமும் இல்லாவிட்டால் தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது என்பது போல் கண்டம் ஏற்பட்டு முடிந்து விடும். எப்படியோ யோகம் கொடுத்தால்தான் மாரகம் செய்வார்கள். கொடுத்தவனே பறித்துக் கொண்டான் என்பது போல். பாதகாதிபதிகளைப் பற்றி இன்றைய ஜோதிடர்கள்கள் தான் அதிகம் பேசுகிறார்கள். புராதாண ஜோதிட நூல்களில் இதைப் பற்றிய குறிப்புகள் எதுவும் காண முடியவில்லை. தெரிந்தவர்கள் யாரும் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்.//////

    சூர்யநாராயண ராவ், B.V.ராமன், KP, போன்றவர்கள் அனுபவத்தில் எழுதிவைத்துவிட்டுப் போனவைகளும் இன்று ஒன்றெனக்கலந்துவிட்டன. அதுதான் காரணம்

    ReplyDelete
  23. /////Ram said...
    Dear Sir,
    Thanks for the today's lessons.
    with the blessings i hope we keep learning the basics.//////

    நல்லது. தொடர்ந்து படியுங்கள்.

    ReplyDelete
  24. /////கண்ணகி said...
    தெளிவாகச் சொல்கிறீர்கள் சார்..நன்றி.////

    எல்லா வயதினரும் படிக்கின்றார்கள். அகவே சொல்வதைத் தெளிவுறச் சொல்வது அவசியமாகிறது. சகோதரி.
    உங்களின் பாரட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  25. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    சென்ற பதிவின் தொடர்ச்சி,"மாரகாதிபதிபதிகள், பாதகாதிபதிகள் யார்", மற்றும் இன்றைய பாடம்,"பாலரிஷ்ட தோஷம்" நன்கு தெளிவாகவும், எளிதில் புரியும்படியாகவும் உள்ளது.
    நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-13௦

    ReplyDelete
  26. Dear sir,
    Lessons on 8th house is interesting. Could you please, tell the date, by which the book on astrology, written by you, is available for us to purchase?
    Thank you sir,
    J.SENDHIL

    ReplyDelete
  27. ஐயா வணக்கம்...!
    பாலரிஷ்டம் பற்றிய பாடங்கள் என்னை புல்லரிக்க வைத்துவிட்டன. காரணம், என் மகளுக்கு மிதுன லக்கினம், மகர ராசி (எட்டில் குரு (நீசம்) - சந்திரன்). அவளுக்கு 2 வயதானபோது தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து மயிரிழையில் உயிர் தப்பினாள். தங்களின் பாடங்கள் மிகத்துல்லியமாக, நிஜத்தை ஒட்டி சென்று கொண்டிருக்கின்றன. எனவே தங்கள் பாடங்களை இன்னும் தங்களால் இயன்றவரை விரிவாகக் கொண்டு சென்றால் நாங்கள் அனைவரும் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம். அல்லது தங்கள் புத்தகத்திலாவது விரிவாக விவரிக்கவும். ஏனெனில், பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற புத்தகங்களைப் படித்து புரிந்து கொள்ளும் ஆற்றல் என் போன்ற எளியோருக்கு இல்லை என்பது அடியேனின் தாழ்மையான கருத்து..

    மிக்க நன்றியுடன்
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  28. பாடம் வழக்கம் போல் அருமை...எனக்கும் பாலரிஷ்டம் உண்டு என ஜோதிடர்களால் சொல்லப்பட்டு, முருகன் அருளால் தப்பிப்பிழைத்தவன்..

    ஐயா, சொந்த அழுவாள் காரணமாக அடுத்து வரும் மூன்று வாரங்களுக்கு அடிக்கடி இணையப்பக்கம் வர இயலாது..வாத்தியார் பொறுத்தருளவும்..

    தன்னிடமுள்ள புத்தகங்களை பகிர்ந்தளிக்க முன்வரும் சக அன்பர் லக்ஷ்மணன்னுக்கு நன்றிகள்..

    அன்புடன்
    செங்கோவி

    ReplyDelete
  29. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    சென்ற பதிவின் தொடர்ச்சி,"மாரகாதிபதிபதிகள், பாதகாதிபதிகள் யார்", மற்றும் இன்றைய பாடம்,"பாலரிஷ்ட தோஷம்" நன்கு தெளிவாகவும், எளிதில் புரியும்படியாகவும் உள்ளது.
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. ////dhilse said...
    Dear sir,
    Lessons on 8th house is interesting. Could you please, tell the date, by which the book on astrology, written by you, is available for us to purchase?
    Thank you sir,
    J.SENDHIL/////

    இறையருளால், இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளிவரும்

    ReplyDelete
  31. //////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    பாலரிஷ்டம் பற்றிய பாடங்கள் என்னை புல்லரிக்க வைத்துவிட்டன. காரணம், என் மகளுக்கு மிதுன லக்கினம், மகர ராசி (எட்டில் குரு (நீசம்) - சந்திரன்). அவளுக்கு 2 வயதானபோது தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து மயிரிழையில் உயிர் தப்பினாள். தங்களின் பாடங்கள் மிகத்துல்லியமாக, நிஜத்தை ஒட்டி சென்று கொண்டிருக்கின்றன. எனவே தங்கள் பாடங்களை இன்னும் தங்களால் இயன்றவரை விரிவாகக் கொண்டு சென்றால் நாங்கள் அனைவரும் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம். அல்லது தங்கள் புத்தகத்திலாவது விரிவாக விவரிக்கவும். ஏனெனில், பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற புத்தகங்களைப் படித்து புரிந்து கொள்ளும் ஆற்றல் என் போன்ற எளியோருக்கு இல்லை என்பது அடியேனின் தாழ்மையான கருத்து..
    மிக்க நன்றியுடன்
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்//////

    எனக்கும் பாலரிஷ்ட தோஷம் இருந்திருக்கிறது. மூன்று வயதில் வீட்டிற்குப் பின்புறம் இருந்த வாய்க்காலில் தவறி விழுந்து, அங்கே இருந்த மலையாளப் பெண்மணி ஒருவரால் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறேன்.
    அப்போது என் பெற்றோர்கள் திருநெல்வேலி வாகடி முக்கில் இருக்கும் பெரிய வீட்டில் குடியிருந்திருக்கிறார்கள். கதைகதையாக என் சின்ன வயதுக்குறும்புகளைச் சொல்வார்கள்.

    எனக்கு ஆறில் சந்திரன். பரிவர்த்தனை யோகத்தில், உடன் லக்கினாதிபதி சூரியனும் இருக்கிறார். அதனால் தப்பிப் பிழைத்திருக்கிறேன். இல்லை என்றால் இந்நேரம் எங்கே பதிவில் எழுதிக்கொண்டிருப்பது? பாலரிஷ்ட தோஷத்தால் சிவலோகம் போயிருப்பேன். எல்லாம் பரிவர்த்தனை யோகம் செய்த வேலை.

    ReplyDelete
  32. ////SHEN said...
    பாடம் வழக்கம் போல் அருமை...எனக்கும் பாலரிஷ்டம் உண்டு என ஜோதிடர்களால் சொல்லப்பட்டு, முருகன் அருளால் தப்பிப்பிழைத்தவன்..
    ஐயா, சொந்த அழுவாள் காரணமாக அடுத்து வரும் மூன்று வாரங்களுக்கு அடிக்கடி இணையப்பக்கம் வர இயலாது..வாத்தியார் பொறுத்தருளவும்..
    தன்னிடமுள்ள புத்தகங்களை பகிர்ந்தளிக்க முன்வரும் சக அன்பர் லக்ஷ்மணன்னுக்கு நன்றிகள்..
    அன்புடன்
    செங்கோவி///

    அழுவாள் இல்லை சாமி. அலுவல் என்று சொல்லுங்கள்!

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. ஐயா! ரொம்ப மகிழ்ச்சி!
    உங்களைக் கண்டு மிக்க அகமகிழ்வர்.
    கடவுளும், கவியரசரும்!
    நன்றிகள்!

    ReplyDelete
  35. //////அண்ணாமலை..!! said...
    ஐயா! ரொம்ப மகிழ்ச்சி!
    உங்களைக் கண்டு மிக்க அகமகிழ்வர்.
    கடவுளும், கவியரசரும்!
    நன்றிகள்! //////

    "கீழே கிடந்து 10ரூ நோட்டை எடுத்தால் அதற்கு மகிழ்ச்சியடையாமல் அதைத் தவறவிட்டவருக்காக வருத்தப்படுபவன்..!!(தேடிச் சென்று கொடுத்தேனா என்றெல்லாம் கேட்காதீர்கள்..!!) இந்த நிமிடம் உன்னுடைய ஆயுளை முடித்துக்கொண்டால் தமிழுக்கு நூறு வருடங்கள் ஆயுள் அதிகரிக்கப்படும் என்று யாராவது சொன்னால் தயங்காமல் உடனே தரத் தயாராயிருப்பவன்..!!(சிறிது யோசிக்க நேரம் கொடுத்தால் முடிவில் மாற்றம் ஏற்படக்கூடும்..!!) தமிழின் வளமை,பழமை,இனிமை குறிப்பாகத் தாய்மொழி என்பதன் காரணமாக அதனை என் சுவாசம் போல நேசிக்கிறேன்.!!!" என்று உங்கள் பதிவில் இருக்கும் உங்கள் சுய அறிமுகத்தைக் கண்டு நான் மகிழ்ந்தேன். நன்றி!

    அண்ணாமலையார் துணை என்று எழுதிப் பழகப்பெற்ற குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். அதனால் அண்ணாமலை எனும் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் (ஆனால் பல ஆண்டுகளாக ஸ்ரீசண்முகநாதன் துணை என்றுதான் நான் எழுதி வருகிறேன். பழநியப்பன் எனும் பெயர்தான் எனது கதைகளில் வரும் பல நாயகர்களின் பெயராக இருக்கும். அதற்கு நான் காரணமல்ல. என்ன ஆட்கொண்டு விட்ட பழநிஅப்பனே காரணம்.)

    ReplyDelete
  36. நான் தினமும் நமதுவகுப்பறைக்கு
    வந்துகொண்டுதான் இருக்கிறேன்.
    பின்னூட்டம் இடுவதில்லை.
    என்னை மறக்காமல்,ரங்கநாதரையும்
    விசாரித்ததற்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  37. aandavan kooduthadhai yaaraalum eduka mudiyadu. aandhavan yeduthadai yaaralum koduka mudiyathu...ennvoru unmai...!!

    indru enudaiya " 9weeks chevvai kilamai viradham aarambam" . mudhal vaaram . morning 6 vadapalani aandavanai dharisithuvittu..sasti kavasam padithuvitu...pinbu ipoludu eve adhe vadapalani andavanai dharisithuvittu ...satru munbudhan milk arundhinen...

    one small doubt.. Tuesday fastingla evening 6pmuku appuram enna vendumalaum sapidalama?..viradham 6 pmodu overa?...hehehe

    ReplyDelete
  38. /////thirunarayanan said...
    நான் தினமும் நமதுவகுப்பறைக்கு
    வந்துகொண்டுதான் இருக்கிறேன்.
    பின்னூட்டம் இடுவதில்லை.
    என்னை மறக்காமல்,ரங்கநாதரையும்
    விசாரித்ததற்கு நன்றி அய்யா./////

    பின்னூட்டம் முக்கியமில்லை. தவறாமல் தொடர்ந்து படியுங்கள்!

    ReplyDelete
  39. ///Jack Sparrow said...
    aandavan kooduthadhai yaaraalum eduka mudiyadu. aandhavan yeduthadai yaaralum koduka mudiyathu...ennvoru unmai...!!
    indru enudaiya " 9weeks chevvai kilamai viradham aarambam" . mudhal vaaram . morning 6 vadapalani aandavanai dharisithuvittu..sasti kavasam padithuvitu...pinbu ipoludu eve adhe vadapalani andavanai dharisithuvittu ...satru munbudhan milk arundhinen...
    one small doubt.. Tuesday fastingla evening 6pmuku appuram enna vendumalaum sapidalama?..viradham 6 pmodu overa?...hehehe/////

    இல்லை, ஆறுமணிக்குமேல் சர்க்கரை சாதம் அல்லது அரிசி வெல்லப் பாயாசத்தை (வீட்டில்) நைவேத்தியமாக விளக்கின் முன் வைத்து பிரார்த்தனை செய்துவிட்டு, சாப்பிடலாம். அல்லது கனிந்த வாழைப்பழம், பால் நைவேத்தியமாக விளக்கின் முன் வைத்து பிரார்த்தனை செய்துவிட்டு, சாப்பிடலாம். கண்டிப்பாக இட்லி, தோசை, பிரியாணி போன்ற தினசரி உணவுப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும்!

    ReplyDelete
  40. வணக்கம் ஐயா,
    One doubt -
    'Kumba Lagnam' - Lagnathipathi 'Sani' is in 6th Place -

    What kind of prediction we can give to this ?

    Because, 'Sani' in 6th place is good, but lagnathipathi in 6th place is not good ?

    நன்றி
    Ramesh

    ReplyDelete
  41. ////Ramesh said...
    வணக்கம் ஐயா,
    One doubt -
    'Kumba Lagnam' - Lagnathipathi 'Sani' is in 6th Place -
    What kind of prediction we can give to this ?
    Because, 'Sani' in 6th place is good, but lagnathipathi in 6th place is not good ?
    நன்றி
    Ramesh ////

    லக்கினாதிபதி 6ல் இருப்பது நன்மையான அமைப்பு அல்ல! எதிர்நீச்சல் போட வேண்டியதாக இருக்கும்!
    எதையும் தேடிப் பிடித்துத்தான் பெறவேண்டியதாக இருக்கும். தானாக எதுவும் கிடைக்காது!

    ReplyDelete
  42. வணக்கம் அய்யா,
    தாங்கல் சொன்னது சரிதான்.ஸ்த்ர லக்கணக்கினத்துக்கு
    (ரிசபம்)பாக்கியாதிபதி (சனிபகவான்.வக்) சப்தமத்தில் இருக்க,
    9ல்சந்திரன்,10ல்செவ்வாய் இருக்க, சனிபகவான் திசையில் சுயபுத்தியில்
    எனது தந்தை மரணம் அடைந்தார்.
    நான் மலெசியா போய் கன்டம்தான் இல்லை,ஆனால் அதுக்கு
    இனையான (மலையில் தோட்டவேலை எப்படி இருக்கும்)கஸ்டம்
    அடைந்தென்.
    நன்றியுடன் அரிபாய் . வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  43. ////aryboy said...
    வணக்கம் அய்யா,
    தாங்கள் சொன்னது சரிதான்.ஸ்த்ர லக்கணக்கினத்துக்கு
    (ரிசபம்)பாக்கியாதிபதி (சனிபகவான்.வக்) சப்தமத்தில் இருக்க,
    9ல்சந்திரன்,10ல்செவ்வாய் இருக்க, சனிபகவான் திசையில் சுயபுத்தியில்
    எனது தந்தை மரணம் அடைந்தார்.
    நான் மலேசியா போய் கன்டம்தான் இல்லை,ஆனால் அதுக்கு
    இனையான (மலையில் தோட்டவேலை எப்படி இருக்கும்)கஷ்டம்
    அடைந்தேன். நன்றியுடன் அரிபாய் . வாழ்க வளமுடன்.////

    உங்களின் மேலதிகத்தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com