சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?
“சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?
தென்றலே உனக்கேது சொந்த வீடு?
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு”
என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அசத்தலாக எழுதினார். அவருடைய பாடல்கள்தான் எனக்கு வேதங்கள்.
இந்தப் பாடல்வரிகள்தான் என் எழுத்திற்கு அளவுகோல்!
நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல! தீவிர வாசகன். அது மட்டுமே என் தகுதி. எழுத வந்ததெல்லாம் தற்செயலாக நடந்தது.
கமகமக்கும் குனேகா சென்ட்டுடன் வரும் அந்தக்காலக் 'குமுதம்' என்னை வாசிப்பிற்குள் இழுத்துச் சென்றது. 'பகடை பன்னிரெண்டு' என்னும் சித்திரத் தொடரை வாசிக்கத் துவங்கியவன், பிறகு அட்டை முதல் அட்டைவரை வாசிக்கும் ரசிகனானேன்.
நான் தமிழ்வழிக் கல்வி பயின்றவன். சிறு வயதிலேயே தமிழின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே எனது வாசிப்புப் பயணம் துவங்கி விட்டது.
தங்கள் எழுத்தால் என்னை மயக்கியவர்களைப் பட்டியல் இட்டால் மாளாது. குமுதம் ஆசிரியர் திரு.S.A.P அண்ணாமலை, உதவி ஆசிரியர்கள்
திருவாளர்கள் ராகி.ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் மற்றும்
சரித்திர நாவலாசிரியர் திரு. சாண்டில்யன், கல்கண்டு ஆசிரியர்
தமிழ்வாணன், சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், ஜெகச்சிற்பியன்,
விந்தன், நா.பார்த்தசாரதி, அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று அனைவருடைய எழுத்துக்களும்
எனக்குப் பரீட்சயம்; விருப்பம்.
என்னை கவர்ந்தவர்களில் எழுத்தாளர் கல்கி அவர்களுக்குத் தனி இடம் உண்டு. அவருடைய 'பொன்னியின் செல்வன்' தொகுப்பைக் ணக்கின்றிப்பலமுறைகள் படித்து மகிழ்ந்திருக்கிறேன். நாயகன் வந்தியத்தேவனுடன் நானும் குதிரையில் பயணித்திருக்கிறேன்.
அது எல்லாம் ஒரு இருபது வருட காலம். அவ்வளவுதான். பிறகு
கவிதைகளில் நாட்டம் கொண்டு பல கவிதை நூல்களைப் படிக்கத் துவங்கினேன். கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதைகள்
மற்றும் அவருடைய எழுத்துக்கள் எனக்குத் தமிழில் ஒரு புதிய
பரிமாணத்தைக் காட்டின. கவிஞர். வாலி அவர்களின் கவிதைகள், பட்டுக்கோட்டையார், கவிஞர்.வைரமுத்து அவர்களின் கவிதைகள், தொடர்ந்து செட்டிநாட்டுக் கவிஞர்கள் திருவாளர்கள் முனைவர்
அர.சிங்கார வடிவேலன், கவிஞர்.சோம. சிவப்பிரகாசம், ஆத்தங்குடிக்
கவிஞர் அழ.அண்ணாமலை, கவிஞர் அரு.நாகப்பன், கவித்தென்றல் காசு.மணியன் என்று எல்லாக் கவிஞர்களின் கவிதைகளிலும் முங்கி எழுந்தேன். நீந்திக் களித்தேன்.
பிறகு ஆன்மீகத்தின் பக்கம் பார்வை திரும்பியது. வாரியார் சுவாமிகளின் நூல்களும், சுவாமி தயானந்த சரஸ்வதியின் நூல்களும்,ஓஷோவின் நூல்களும் மனதைப் புரட்டிப் போட்டன.
இடையில் James Hadley Chase, Jefferey Archer போன்ற பிரபலமான ஆங்கில நாவலாசிரியரின் நூல்களை எல்லாம் தேடிப் பிடித்துப் படித்தேன். அவற்றிற்கு இணை அவைதான். வேறு ஒன்றையும் இணையாகச் சொல்ல முடியாது. அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்து நடையைக் கொண்டது அவர்களின் ஆக்கங்கள்!
Jefferey Archer ரின் Twist in the tale என்னும் சிறுகதைத் தொகுப்பு அசத்தலாக இருக்கும். தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்கள். சிறுகதை இலக்கணத்திற்கு அந்த நூலை அரிச்சுவடியாகச் சொல்லலாம்.
கதை சொல்லும் உத்தியை இந்த வாசிப்புக்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தன.எப்படி எழுத வேண்டும் என்பதைவிட, எப்படி எழுதக்கூடாது என்பதில் ஒரு பயிற்சி கிடைத்தது. அந்த மாதிரி நூல்களையும் படிக்க நேர்ந்தது.
சுவாரசியமாகக் கதை சொல்லும் வாய்ப்பைப் பெறுவதற்கு, முதலில் பலரது நூல்களையும் படிக்க வேண்டும். வாசிப்பின் மூலமே சொல்லும் உத்தி அல்லது எழுதும் உத்தி வசப்படும். எனக்கும் எழுத்து அவ்விதமே வசப்பட்டது. உண்மையைச் சொன்னால் என்னையறியாமல் எழுத்து எனக்கு வசப்பட்டது. என்னை ஆட்கொண்டது!
இதுவரை 60 சிறுகதைகளையும், இரண்டு தொடர் கட்டுரைகளையும், சுமார் 100 குட்டிக் கதைகளையும் எழுதியுள்ளேன்.
எழுதியவற்றில் 60 சிறுகதைகளைத் தொகுத்து, புத்தக வடிவில் தவழ விட்டிருக்கிறேன். தொடர்ந்து மற்ற ஆக்கங்களும் புத்தகமாக வரும்!
சமீபத்தில் எனது 28 குட்டிக்கதைகளைத் தொகுத்து பத்தகமாக்கியுள்ளேன். கோவைக்கு பெருமை சேர்க்கும் விஜயா பதிப்பகத்தார் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.
அந்தப் புத்தகத்தின் முகப்புப் பகுதியையும், பின் பகுதியையும், உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன். 104 பக்கங்கள் கொண்ட அந்த் நூலின் விலை ரூ.40:00. தனியாக உங்களுக்கு அனுப்பினால் கூரியர் செலவு ரூ25:00 ஆகும். அதனால் அனைவரும் பொறுத்திருங்கள். எனது ஜோதிட நூல்கள் வெளியாகும்போது அவைகளுடன் அந்த நூலையும் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். நமது வகுப்பறை
மாணவர் திரு. ஆனந்த் அவர்கள் ஜோதிடப் பாடங்களுக்கென
வலைப்பதிவு ஒன்றைத் துவங்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்.
பின்னூட்டத்தின் மூலம் அவர் இப்படிச் சொல்லியுள்ளார்:
////////ஜோதிடம் என்பது கடல். அந்த கடலில் வாத்தியார் போகாத
இடங்கள் (அதாவது பாடம் நடத்தாத விஷயங்கள்) பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து பதிவாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். Suggestions are welcome from our fellow students. ////////
நான் எழுதாததைத் தேடிப்பிடித்து அவர் எழுத வேண்டாம். நான் எழுத உள்ளதற்காகக் காத்திருந்து எழுதவும் வேண்டாம். அது சாத்தியமில்லை. எழுத்திற்கெல்லாம் கட்டுப்பாடு கிடையாது. இருக்கவும் கூடாது.
அவருக்கு ஒரு வேண்டுகோள். அவருக்கு விருப்பமானதை அவர் எழுதலாம். ஜோதிடம் பெரிய கடல். எதை வேண்டுமென்றாலும் அவர் எழுதலாம்.
“காற்றுக்கென்ன வேலி; கடலுக்கென்ன மூடி?” என்று கவியரசர் சொன்னார். அதுபோல ஜோதிடத்திற்கு யாரும் வேலி போடவும் முடியாது. மூடி போடவும் முடியாது. சொந்தம் கொண்டாடவும்
முடியாது. அது பொதுச் சொத்து.
எழுதுவதை நன்றாக எழுத முடியும் என்றால், யார் வேண்டுமென்றாலும் எழுதலாம். நம் வகுப்பறையில் இன்றுள்ள 1685 மாணவர்களில் யார் வேண்டுமென்றாலும் எழுதலாம். நண்பர் ஆலாசியம் அவர்களுக்கும்,
ஜப்பான் மைனருக்கும் ஆர்வமும், திறமையும் இருக்கிறது. இருவரும்
வலைப் பதிவைத் துவங்கி எழுதலாம். ஜோதிடம் என்று இல்லை. எதை வேண்டுமென்றாலும் எழுதலாம். எழுதுவது உபயோகமாகவும், சுவாரசியமாகவும் இருக்க வேண்டும் அவ்வளவுதான்!திருவாளர் ஆனந்த அவர்களின் வலைப்பதிவு வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! உங்களைப் போல, தஞ்சை திரு.K.M.R.கிருஷ்ணன் அவர்களைப் போல நானும் அவருடைய பதிவுகளைப் படிக்க ஆர்வமாக உள்ளேன்.
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மிக்க நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் வாத்தியாரே..!
ReplyDeleteஜோதிட வரலாற்றை சீக்கிரமாக புத்தகமாக பார்க்க ஆசை..!
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteநான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், மதிக்கிறேன், நீங்கள் எழுதிய எழுத்துக்கள் உங்களைக் கூறும். தங்களின் அனுபவம், தாங்கள் நடந்து வந்த பாதை, தாங்கள் இதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சி யாவையும் என்னால் உணர முடிகிறது. ஒரு சாமான்யர் செய்யக்கூடியது அல்ல. விருந்துக்கு வந்த இடத்தில், விருந்தாளியாக மட்டுமே நடந்து கொள்ளவேண்டும் என்பதும், விருந்து சமைப்பவரை சங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது என்பது எனது ஆழ் மனதில் தானாக எழுதப் பட்டது. (பலரும் இப்படி இருக்கலாம்) அதை மீறுவோரைக் காணும் பொது என்னையும் மீறி ஏதாவது சொல்லிவிடுவது எனது குறை. நீங்கள் கொடுத்த விருந்தைப் போல நானும் உங்களுக்குத் தர விரும்பினால் அதை அமைதியாக ஏற்பாடு செய்து விட்டு தங்களை அழைக்க வேண்டும், உங்களிடம் வேறு ஏதேனும் கேட்க விரும்பினால் அதை சபையில் கேட்பது நாகரிகமஆகாது என்பது எனது தாழ்வானக் கருத்து. பாராட்டுக்கு மயங்காதார் யார், ஆண்டவனே!... அவனை ஒப்புக்கு அல்லாமல் உள்மனதில் இருந்து, அதாவது பாரதி சொல்வான் "உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்" என்று, பேர், புகழ், சரித்திரத்தில் இடம், மாலை மரியாதை, அல்லது சொர்க்கத்தில் இடம் என்றெல்லாம் நினைக்காமல் பெற்ற தாயும் அவளின் பாசமுமாக, ஞானசம்பந்தர் கூறுவது போல் கறந்தப் பாலை போல... போற்றினால் பாடினால் இறைவனும் மயங்குவான் அந்த நிலை கடுந்தவத்திற்கு பிறகே கிடைக்கும். இது எல்லாவிசயத்திர்க்கும் பொருந்தும். நாங்கள் நீங்கள் செய்யும் அறப் பணிக்கு பொன்னும் பொருளும் தரவில்லை அது உங்களுக்கு அவசியமும் இல்லை மாறாக அன்பைக்கூட காட்ட வேண்டாம், உங்களை சங்கடப் படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். ஒவொரு முறையும் பின்னூட்டத்திற்கு பிறகு அது எந்த விதத்திலாவது உங்களை சங்கடப் படுத்திவிடுமோ என்று கவலை யுறுவேன்.... பாராட்டு தாலாட்டு போன்றது அதை சற்றே அனுபவிக்கலாம் கூடினால் தூங்க வைத்துவிடும்..... விமர்சனம் மாறாக தூக்கத்தை கெடுத்துவிடுவதோடு வரும் படைப்புகளுக்கு உரமாகும். நான் வாழ்க்கையில் நடந்து வந்த பாதை வளர்ந்த சூழல் உங்களைப் போன்ற பெரியோரை கூர்ந்து கவனித்தது, மேலும் நான் ஒரு பாரதிப் பித்தன் அது எப்படி நிகழ்ந்தது (ஒத்தக் குணம் உடையவர்கள் ஒன்றிவிடுவார்களே அதைப் போல அதை சொல்லவும் தயக்கம், அவனின் நின் அணுச்சிறியன்) என்று எனக்குத் தெரியாது...தமிழின் மீது தாகம் என்று கூறிக்கொண்டு அதை பருகாமல் பிதற்றிக் கொண்டு திரிகிறேன்..... எனக்கு சக்தி வரட்டும் நான் போர்களத்திற்கு போகிறேன், எனக்கு முழு புத்தி வரட்டும் எழுத்துக் களத்திற்கு வருகிறேன். நாற்பது அகவை இன்னும் பக்குவப் படவில்லை என்பதை நான் அறிவேன்.... நான் வாசகன் மாத்திரமே.. சமைப்பது சிரமம் சாப்பிடுவது மிக சுலபம்; அதற்க்கு மேல் அதில் நோட்டம் சொல்வது மிக மிக சுலபம். தவறில்லை?!.. அது அவரர் நாக்கைப் பொறுத்ததே அன்றி வேறு??.. நீங்கள் தொடருங்கள் சூர்யக் கதிரைப் போல்... கோபுரம் ஊருக்கு எல்லையிலே தெரிந்துவிடும் அதுவே அவ்வூருக்கு வழியும் சொல்லும்...
"கருதியது இயற்றுவாய் வா! வா! வா!"
(இளைய பாரதத்திற்கு பாரதி சொன்னது)
பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பாரத நாட்டிய கூத்திடு வீரே!
(பிறவியில் வரும் என்றால் இவன் எதற்க்காக பிதற்றிருக்க வேண்டும்)
அதுவும் அந்த கொள்ளைக் காரன் தான் சொன்னான்.
புதிதாய் சொல்ல எதுவும் இல்லை, தமிழில் எல்லாம் இருக்கிறது அதை பாரதி, கண்ணதாசனைப் போல் எளிமைப் படுத்தி நயம் பட உரைக்க....யார்? என்ன? எழுதினாலும் அது வள்ளுவனையும், கம்பனையும், இளங்கோவையும் மறுமொழிவதே!!! உங்களை நாங்கள் அறிவோம், எங்களை நீங்கள் அறிவீர்கள். வகுப்பறைத் தொடரட்டும்... நன்றிகள் குருவே!
கைபேசி கோபுரங்கள் சிட்டுக் குருவிகளை தூர விரட்டி விட்டன. குழந்தைகளுக்குக் காட்டக் கூட பேருக்கு ஒரு குருவி நகரத்தில் இல்லை அய்யா!
ReplyDelete"விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்த
சிட்டுகுருவியைப் போலே"
என்பார் எட்டயபுரத்தார்.அந்தப் பாடலுக்கான
உரை நடையும் எழுதியுள்ளார்."ஏது!தலைநோவு என்று குருவி ஒருநாளாவது
சுணங்கியது உண்டா!?" என்பார்.
சென்ற பதிவின் பின்னூட்டத்திலேயே ஆனந்துக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டேன்.அவ்ர் ஆதார நூல்களின் அறிவு அதிகம் பெற்றுள்ளார்.
அந்நூல்களின் சுருக்கங்களை பழகு தமிழில் எழுதுவது பெரிய சேவை.
கேபி போன்றவர்கள் பாரம்பரியத்தில் இருந்து எப்படி மாறுபடுகிறார்கள் என்று
எழுதலாம்.
"மாணவனின் வகுப்பறை"
என்ற பெயரே அசத்தலாக உள்ளது.
http://www.ananth-classroom.blogspot.com
வேழமுகத்தானுக்கு வணக்கம் சொல்லி முதல் பதிவை போடுங்கள் ஆனந்த்!எழுத்துவசப்படும்.
வாழ்த்துக்கள்.
அவருக்கு விருப்பமானதை அவர் எழுதலாம். ஜோதிடம் பெரிய கடல். //எதை வேண்டுமென்றாலும் அவர் எழுதலாம்.
ReplyDelete“காற்றுக்கென்ன வேலி; கடலுக்கென்ன மூடி?” என்று கவியரசர் சொன்னார். அதுபோல ஜோதிடத்திற்கு யாரும் வேலி போடவும் முடியாது. மூடி போடவும் முடியாது. சொந்தம் கொண்டாடவும்
முடியாது. அது பொதுச் சொத்து.//
சோதிடம் ஒரு கடல் என்று சொன்னீர்கள். அக்கடலில்
மானுடத்தின் தேடல் என்றென்றும் இருக்கும்.
மனமும் ஒரு கடல். அக்கடலில் மீனா ?
இனம், மொழி, மதம் இவையெல்லாமிருக்கும்.
இருப்பினும் இவையெல்லாம் கடந்து
அன்பெனும் முத்து அளவில்லாது கிடைக்கும்.
ஆயினும் அது "முத்துக்குளித்தவர்க்கும்
மூச்சை அடக்கினவர்க்கு" மே தெரியும்.
கடல் பெரிது. வாத்தியார் மனமும்
பெரிது.
ஜாதகம் பிருஹத் . எங்கள்
சுப்பு வாத்தியாரும் பிருஹத்.
சுப்பு ரத்தினம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் வாங்கியதையடுத்து, தமிழகத்தில் மதிமுகவின் மாநில கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் புதுச்சேரியில் பாமகவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது செய்தி.
ReplyDeleteஇது போன்று நல்ல வேளையாக ப்ளாக் பதிவுக்களுக்கான வாசகர் அங்கீகாரம் இல்லாத பதிவர்களின் பதிவுகள் ரத்து செய்யப்படும் என்ற நிலை ஒன்றம் இல்லை.பழைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இருந்த அடிப்படை நிதிநிலை சிக்கல்களான புத்தகங்களை அச்சிட்டு அவை வாசகர் ஆதரவை பெறாமல் முடங்குமானால் வரும் நஷ்டம் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக நீங்கி (நவீன?) புதுத்தலைமுறை எழுத்தார்வலருக்கென கதவுகள் அகலமாகத் திறந்திருக்கின்றன என்பது மகிழ்ச்சியே.
இருந்த போதிலும் எழுத்து என்பது படிக்கப்படுவதனால் மட்டுமே அழகுபடுத்தப்படும் ஒரு கலை.(கண்ணாடி எப்படி பார்க்கப்பட்டால் மட்டுமே உபயோகமாகுமோ அதைப்போலே)
எனவே வாசகர் வட்டம் வேண்டுமென்பது ஒரு எழுதப்படாத சட்டமாகிறது..இன்றைக்கு நெட்டிலே search சினால் ஏகப்பட்ட வலைத்தளங்கள் ஒவ்வொரு துறைக்கும்.அனைத்திலுமே தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.இருந்தபோதிலும் வாசிப்பவரின் இதயங்களுக்குள் நுழைந்து சொல்வதை கேட்க வைத்து சொல்ல நினைத்ததை மனதினில் பதிய வைக்க அட்லீஸ்ட் பார்வையிடும் அளவினில் செய்ய முயற்சி என்பது ஒரு பதிவாளரால் எடுக்கப்படாதபோது அவரது பதிவு வெறும் தகவல் களஞ்சியமாகவே மாறிவிடும்.
ஒரு interactiveஆன விமர்சனங்களுடன் கூடியதாக தன் பதிவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பினில் ஒரு பதிவர் பதிவிடுவாரேயானால் எதிர்பார்ப்பு நிறைவேற அதீதப் பிரயத்தனம் ஆகும் அபாயம் தெரிகிறது..பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்த கதையாகி போகும் அபாயம்..இவ்விதம் கன்னி(முதல்)முயற்சி எடுக்கும்,எடுத்த அனைத்து எழுத்தார்வலருக்குமே பொருந்தி வரும் விஷயங்களை மனதில் கொண்டு எதிர்பார்ப்புகளை விலக்கி தன்னுடைய பதிவுகளின் மூலமும் சில விஷயங்களை வெளி உலகுக்கு கொணர்வோம் என்கிற அளவிலே ஆர்வத்தை உள்ளடக்கி பதிவிடுவது கன்னிப்பதிவர்க்கு நல்லது என்று நினைக்கிறேன்..
KMRகிருஷ்ணன் சாரின் முன்மொழிதலோடும் சக தோழ தோழியரின் வழிமொழிதல்களோடும் வாத்தியார் அவர்களின் தனிப்பதிவின் வாழ்த்துதல்களோடும் முனைவர் ஆனந்த் அவர்களை நானும் ஆர்வமுடன் அழைக்கிறேன்..(என்னைப் பற்றியும் சிலாகித்து இந்தப் பதிவில் எழுத்து அங்கீகாரம் அளித்த ஆசிரியருக்கு அன்பு வணக்கங்கள்..)
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteதாங்கள் பெற்றுள்ள கதை சொல்லும் உத்தியையும்,
எப்படி எழுதக்கூடாது என்பதற்கான பயிற்சியையும் எப்படி அடைந்தீர்கள் என்பதோடு,
===="சுவாரசியமாகக் கதை சொல்லும் வாய்ப்பைப் பெறுவதற்கு, முதலில் பலரது நூல்களையும் படிக்க வேண்டும். வாசிப்பின் மூலமே சொல்லும் உத்தி அல்லது எழுதும் உத்தி வசப்படும்"====
போன்ற நல்ல வழி காட்டுதல்களை காண்பித்துள்ள தங்களுக்கு மிக்க நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-07-30
அடேங்கப்பா,1688 ஃபாலோயர்ஸா?இதுதான் ரெக்கார்டுனு நினைக்கிறேன்.வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteஇவ்வாறு மனம் திறந்து வாழ்த்துவ தற்குப் பரந்த மனம் வேண்டும்;
ReplyDeleteபாராட்டுகிறேன் நண்பரே
தேவ்
"ஒத்தக் குணம் உடையவர்கள் ஒன்றிவிடுவார்களே அதைப் போல அதை சொல்லவும் தயக்கம், அவனின் நின் அணுச்சிறியன்"
ReplyDeleteஅய்யா! மன்னிக்கணும்,
எழுத்துப் பிழை.
அவனின் "நான்" அணுச்சிறியன்
என்று நான் எழுதியது;
தவறுதலாக "நின்" என்றாகிவிட்டது தயவுசெய்து
என் பிழைத் திருத்தி விடுங்கள்....
எனது எந்தப் பின்னூட்டமும் தங்களை சிலேடையாக சாடுவதாக ஒருபோதும் இருந்ததில்லை; இருக்காது (அதற்கு அவசியமே இருக்காது அது திண்ணம்), என்னுடைய நிறை; இல்லை, அதுவே குறையும் கூட சொல்லவந்ததை நேராகச் சொல்லிவ்டுவேன்
"சமீபத்தில் எனது 28 குட்டிக்கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கியுள்ளேன்.
ஜோதிட நூல்கள் வெளியாகும்போது அவைகளுடன்
அந்த நூலையும் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்."
ஓ... இதைத்தான் முன்னொருமுறை ஜோதிட புத்தகத்தோடு இன்னொரு அதிசயமும் காத்திருக்கிறது என்று சொல்லியிருந்தீர்கள் என்று நினைக்கிறேன்.
நன்றிகள் குருவே!
திருவாளர் ஆனந்த அவர்களின் வலைப்பதிவு வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ReplyDelete"நமது வகுப்பறை மாணவர் திரு. ஆனந்த் அவர்கள் அவரின் 30 07 2010 தேதிய வகுப்பறை பின்னூட்டத்தின் மூலம் ://////////" ஜோதிடம் என்பது கடல். அந்த கடலில் வாத்தியார் போகாத இடங்கள் (அதாவது பாடம் நடத்தாத விஷயங்கள்) பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து பதிவாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். Suggestions are welcome from our fellow students"////////////////
ReplyDeleteஎன்று குறிப்பிட்டுள்ளார். "Suggestions are welcome from our fellow students " இதற்கு என்னுடையக் கருத்தினை வெளியிடவேண்டியதாக இருப்பதால் இதனைப் பதிவு செய்கிறேன்.
- - - - - - - - - - -- - - - - - - - -- - - - -- -
திரு. ஆனந்த் அவர்களின் வலைப்பதிவு
சிறப்போடு செயல்படுவதற்கு எனது வாழ்த்துக்கள்.
திரு. ஆனந்த் அவர்கள் வலைப்பதிவு ஒன்றைத் துவங்க இருப்பதில் எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை.
வரவேர்க்கத்தகுந்ததே.ஜோதிட சம்மந்தமான ஆராய்சிக் குறித்தோ, ஜோதிடம் பற்றியோ ,வரலாறுகள் பற்றியோ,புதியதாகக் கண்டு பிடிபபன பற்றியோ எது வேண்டுமானாலும் பதிவேற்றலாம்.சக மாணவர் என்ற முறையில் படித்துப் பார்த்து மகிழ்வேன்., ரசனையோடு,தெய்வீக ஆற்றலுடன் படைப்புக்கள் அமையுமாயின், நல்ல பதிவுகளை அளிப்பவர் என்ற பெயரை எடுத்து பாராட்டுக்களையும் தகுந்த பரிசுகளையும் பெறலாம். எதனையும் எதிர் பாராமல் பதிவுகளையும் உடனடியாகவும் வலை ஏற்றம் செய்யலாம்.
- - - - - - - - - - - - -- - - - - - -- - - - - - -- - --- - - - - -
திரு. ஆனந்த் அவர்கள் இவரின் பதிவுகளில்,------- "வாத்தியார் பாடம் நடத்தாத விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து பதிவாக வெளியிடலாம்", --------------என்று கூறும் கருத்து ஏற்புடையதாக,நடைமுறையில் நடைபெறக்கூடியதாக இல்லை.
ஏனெனில்,வாத்தியார் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறார்.அதனை ஒரு எல்லைக்குள் எப்படிக் கொண்டுவர முடியும்.அவர் மிகுந்த உழைப்புகளுக்குப் பின்னரே,மாணவர்களின் எதிர்ப் பார்ப்புக்களின் படி மிகுந்த கவனத்தோடு பாடங்களை வகைப்படுத்தி,எந்த நேரத்தில் பாடங்களை எந்த விதத்தில் பதிவேற்ற வேண்டும் என்பதை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து பாடங்களை அளித்து வருகிறார். இந்த நிலையில் பாடம் நடத்தாத விஷயங்கள் விடுபட்டவை என எதனை எடுத்துக் கொள்ள முடியும்.
திரு. ஆனந்த் அவர்கள் யோசித்து செயல்படவேண்டும்.. நன்றி.
- - - - - - - - - - - -- - - - - -
/////"நமது வகுப்பறை
மாணவர் திரு. ஆனந்த் அவர்கள் ஜோதிடப் பாடங்களுக்கென
வலைப்பதிவு ஒன்றைத் துவங்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்".////////--வாத்தியார்.
வாத்தியார் அவர்கள் அவருக்கே உரித்தான பெருந்தன்மையோடு, வலைப்பதிவு ஒன்றைத் துவங்க உள்ள வகுப்பறை மாணவர் திரு. ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அளித்ததோடு தானும் அவருடைய பதிவுகளைப் படிக்க ஆர்வமாக உள்ளேன் என்றக் கருத்தையும் தெரிவித்துள்ளார்.
வாத்தியார் அவர்களின் இந்த கருத்து
சிறப்பானது வரவேற்கக் கூடியது.
மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள வகுப்பறை மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010 07 31
/////Shyam Prasad said...
ReplyDeleteமிக்க நன்றி/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாழ்த்துக்கள் வாத்தியாரே..!
ஜோதிட வரலாற்றை சீக்கிரமாக புத்தகமாக பார்க்க ஆசை..!/////
ஆகா, புத்த்கம் வெளிவந்தவுடன், உங்களுக்குத் தகவல் அனுப்புகிறேன் ஊனா தானா!
//////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், மதிக்கிறேன், நீங்கள் எழுதிய எழுத்துக்கள் உங்களைக் கூறும். தங்களின் அனுபவம், தாங்கள் நடந்து வந்த பாதை, தாங்கள் இதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சி யாவையும் என்னால் உணர முடிகிறது. ஒரு சாமான்யர் செய்யக்கூடியது அல்ல. விருந்துக்கு வந்த இடத்தில், விருந்தாளியாக மட்டுமே நடந்து கொள்ளவேண்டும் என்பதும், விருந்து சமைப்பவரை சங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது என்பது எனது ஆழ் மனதில் தானாக எழுதப் பட்டது. (பலரும் இப்படி இருக்கலாம்) அதை மீறுவோரைக் காணும் பொது என்னையும் மீறி ஏதாவது சொல்லிவிடுவது எனது குறை. நீங்கள் கொடுத்த விருந்தைப் போல நானும் உங்களுக்குத் தர விரும்பினால் அதை அமைதியாக ஏற்பாடு செய்து விட்டு தங்களை அழைக்க வேண்டும், உங்களிடம் வேறு ஏதேனும் கேட்க விரும்பினால் அதை சபையில் கேட்பது நாகரிகமஆகாது என்பது எனது தாழ்வானக் கருத்து. பாராட்டுக்கு மயங்காதார் யார், ஆண்டவனே!... அவனை ஒப்புக்கு அல்லாமல் உள்மனதில் இருந்து, அதாவது பாரதி சொல்வான் "உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்" என்று, பேர், புகழ், சரித்திரத்தில் இடம், மாலை மரியாதை, அல்லது சொர்க்கத்தில் இடம் என்றெல்லாம் நினைக்காமல் பெற்ற தாயும் அவளின் பாசமுமாக, ஞானசம்பந்தர் கூறுவது போல் கறந்தப் பாலை போல... போற்றினால் பாடினால் இறைவனும் மயங்குவான் அந்த நிலை கடுந்தவத்திற்கு பிறகே கிடைக்கும். இது எல்லாவிசயத்திர்க்கும் பொருந்தும். நாங்கள் நீங்கள் செய்யும் அறப் பணிக்கு பொன்னும் பொருளும் தரவில்லை அது உங்களுக்கு அவசியமும் இல்லை மாறாக அன்பைக்கூட காட்ட வேண்டாம், உங்களை சங்கடப் படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். ஒவொரு முறையும் பின்னூட்டத்திற்கு பிறகு அது எந்த விதத்திலாவது உங்களை சங்கடப் படுத்திவிடுமோ என்று கவலை யுறுவேன்.... பாராட்டு தாலாட்டு போன்றது அதை சற்றே அனுபவிக்கலாம் கூடினால் தூங்க வைத்துவிடும்..... விமர்சனம் மாறாக தூக்கத்தை கெடுத்துவிடுவதோடு வரும் படைப்புகளுக்கு உரமாகும். நான் வாழ்க்கையில் நடந்து வந்த பாதை வளர்ந்த சூழல் உங்களைப் போன்ற பெரியோரை கூர்ந்து கவனித்தது, மேலும் நான் ஒரு பாரதிப் பித்தன் அது எப்படி நிகழ்ந்தது (ஒத்தக் குணம் உடையவர்கள் ஒன்றிவிடுவார்களே அதைப் போல அதை சொல்லவும் தயக்கம், அவனின் நின் அணுச்சிறியன்) என்று எனக்குத் தெரியாது...தமிழின் மீது தாகம் என்று கூறிக்கொண்டு அதை பருகாமல் பிதற்றிக் கொண்டு திரிகிறேன்..... எனக்கு சக்தி வரட்டும் நான் போர்களத்திற்கு போகிறேன், எனக்கு முழு புத்தி வரட்டும் எழுத்துக் களத்திற்கு வருகிறேன். நாற்பது அகவை இன்னும் பக்குவப் படவில்லை என்பதை நான் அறிவேன்.... நான் வாசகன் மாத்திரமே.. சமைப்பது சிரமம் சாப்பிடுவது மிக சுலபம்; அதற்க்கு மேல் அதில் நோட்டம் சொல்வது மிக மிக சுலபம். தவறில்லை?!.. அது அவரர் நாக்கைப் பொறுத்ததே அன்றி வேறு??.. நீங்கள் தொடருங்கள் சூர்யக் கதிரைப் போல்... கோபுரம் ஊருக்கு எல்லையிலே தெரிந்துவிடும் அதுவே அவ்வூருக்கு வழியும் சொல்லும்...
"கருதியது இயற்றுவாய் வா! வா! வா!"
(இளைய பாரதத்திற்கு பாரதி சொன்னது)
பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பாரத நாட்டிய கூத்திடு வீரே!
(பிறவியில் வரும் என்றால் இவன் எதற்க்காக பிதற்றிருக்க வேண்டும்)
அதுவும் அந்த கொள்ளைக் காரன் தான் சொன்னான்.
புதிதாய் சொல்ல எதுவும் இல்லை, தமிழில் எல்லாம் இருக்கிறது அதை பாரதி, கண்ணதாசனைப் போல் எளிமைப் படுத்தி நயம் பட உரைக்க....யார்? என்ன? எழுதினாலும் அது வள்ளுவனையும், கம்பனையும், இளங்கோவையும் மறுமொழிவதே!!! உங்களை நாங்கள் அறிவோம், எங்களை நீங்கள் அறிவீர்கள். வகுப்பறைத் தொடரட்டும்... நன்றிகள் குருவே!//////
உங்களின் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஆலாசியம்!
///////kmr.krishnan said...
ReplyDeleteகைபேசி கோபுரங்கள் சிட்டுக் குருவிகளை தூர விரட்டி விட்டன. குழந்தைகளுக்குக் காட்டக் கூட பேருக்கு ஒரு குருவி நகரத்தில் இல்லை அய்யா!
"விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்த
சிட்டுகுருவியைப் போலே"
என்பார் எட்டயபுரத்தார்.அந்தப் பாடலுக்கான
உரை நடையும் எழுதியுள்ளார்."ஏது!தலைநோவு என்று குருவி ஒருநாளாவது
சுணங்கியது உண்டா!?" என்பார்.
சென்ற பதிவின் பின்னூட்டத்திலேயே ஆனந்துக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டேன்.அவ்ர் ஆதார நூல்களின் அறிவு அதிகம் பெற்றுள்ளார்.
அந்நூல்களின் சுருக்கங்களை பழகு தமிழில் எழுதுவது பெரிய சேவை.
கேபி போன்றவர்கள் பாரம்பரியத்தில் இருந்து எப்படி மாறுபடுகிறார்கள் என்று
எழுதலாம்.
"மாணவனின் வகுப்பறை"
என்ற பெயரே அசத்தலாக உள்ளது.
http://www.ananth-classroom.blogspot.com
வேழமுகத்தானுக்கு வணக்கம் சொல்லி முதல் பதிவை போடுங்கள் ஆனந்த்!எழுத்துவசப்படும்.
வாழ்த்துக்கள்./////
நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்னன் சார்!
/////sury said...
ReplyDeleteஅவருக்கு விருப்பமானதை அவர் எழுதலாம். ஜோதிடம் பெரிய கடல். //எதை வேண்டுமென்றாலும் அவர் எழுதலாம்.
“காற்றுக்கென்ன வேலி; கடலுக்கென்ன மூடி?” என்று கவியரசர் சொன்னார். அதுபோல ஜோதிடத்திற்கு யாரும் வேலி போடவும் முடியாது. மூடி போடவும் முடியாது. சொந்தம் கொண்டாடவும்
முடியாது. அது பொதுச் சொத்து.//
சோதிடம் ஒரு கடல் என்று சொன்னீர்கள். அக்கடலில்
மானுடத்தின் தேடல் என்றென்றும் இருக்கும்.
மனமும் ஒரு கடல். அக்கடலில் மீனா ?
இனம், மொழி, மதம் இவையெல்லாமிருக்கும்.
இருப்பினும் இவையெல்லாம் கடந்து
அன்பெனும் முத்து அளவில்லாது கிடைக்கும்.
ஆயினும் அது "முத்துக்குளித்தவர்க்கும்
மூச்சை அடக்கினவர்க்கு" மே தெரியும்.
கடல் பெரிது. வாத்தியார் மனமும்
பெரிது.
ஜாதகம் பிருஹத் . எங்கள்
சுப்பு வாத்தியாரும் பிருஹத்.
சுப்பு ரத்தினம்.////
உங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி சார்! உங்களைப் போன்ற பெரியோர்களின் பாராட்டுக்கள் எனக்கு ஊக்க மருந்தாகும் (Tonic) தொடர்ந்து எழுதுவதற்கான உத்வேகத்தை அது கொடுக்கும்! நன்றி!
/////minorwall said...
ReplyDeleteகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் வாங்கியதையடுத்து, தமிழகத்தில் மதிமுகவின் மாநில கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் புதுச்சேரியில் பாமகவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது செய்தி.
இது போன்று நல்ல வேளையாக ப்ளாக் பதிவுக்களுக்கான வாசகர் அங்கீகாரம் இல்லாத பதிவர்களின் பதிவுகள் ரத்து செய்யப்படும் என்ற நிலை ஒன்றம் இல்லை.பழைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இருந்த அடிப்படை நிதிநிலை சிக்கல்களான புத்தகங்களை அச்சிட்டு அவை வாசகர் ஆதரவை பெறாமல் முடங்குமானால் வரும் நஷ்டம் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக நீங்கி (நவீன?) புதுத்தலைமுறை எழுத்தார்வலருக்கென கதவுகள் அகலமாகத் திறந்திருக்கின்றன என்பது மகிழ்ச்சியே.
இருந்த போதிலும் எழுத்து என்பது படிக்கப்படுவதனால் மட்டுமே அழகுபடுத்தப்படும் ஒரு கலை.(கண்ணாடி எப்படி பார்க்கப்பட்டால் மட்டுமே உபயோகமாகுமோ அதைப்போலே)
எனவே வாசகர் வட்டம் வேண்டுமென்பது ஒரு எழுதப்படாத சட்டமாகிறது..இன்றைக்கு நெட்டிலே search சினால் ஏகப்பட்ட வலைத்தளங்கள் ஒவ்வொரு துறைக்கும்.அனைத்திலுமே தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.இருந்தபோதிலும் வாசிப்பவரின் இதயங்களுக்குள் நுழைந்து சொல்வதை கேட்க வைத்து சொல்ல நினைத்ததை மனதினில் பதிய வைக்க அட்லீஸ்ட் பார்வையிடும் அளவினில் செய்ய முயற்சி என்பது ஒரு பதிவாளரால் எடுக்கப்படாதபோது அவரது பதிவு வெறும் தகவல் களஞ்சியமாகவே மாறிவிடும்.
ஒரு interactiveஆன விமர்சனங்களுடன் கூடியதாக தன் பதிவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பினில் ஒரு பதிவர் பதிவிடுவாரேயானால் எதிர்பார்ப்பு நிறைவேற அதீதப் பிரயத்தனம் ஆகும் அபாயம் தெரிகிறது..பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்த கதையாகி போகும் அபாயம்..இவ்விதம் கன்னி(முதல்)முயற்சி எடுக்கும்,எடுத்த அனைத்து எழுத்தார்வலருக்குமே பொருந்தி வரும் விஷயங்களை மனதில் கொண்டு எதிர்பார்ப்புகளை விலக்கி தன்னுடைய பதிவுகளின் மூலமும் சில விஷயங்களை வெளி உலகுக்கு கொணர்வோம் என்கிற அளவிலே ஆர்வத்தை உள்ளடக்கி பதிவிடுவது கன்னிப்பதிவர்க்கு நல்லது என்று நினைக்கிறேன்..
KMRகிருஷ்ணன் சாரின் முன்மொழிதலோடும் சக தோழ தோழியரின் வழிமொழிதல்களோடும் வாத்தியார் அவர்களின் தனிப்பதிவின் வாழ்த்துதல்களோடும் முனைவர் ஆனந்த் அவர்களை நானும் ஆர்வமுடன் அழைக்கிறேன்..(என்னைப் பற்றியும் சிலாகித்து இந்தப் பதிவில் எழுத்து அங்கீகாரம் அளித்த ஆசிரியருக்கு அன்பு வணக்கங்கள்..)////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி மைனர்!!
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
தாங்கள் பெற்றுள்ள கதை சொல்லும் உத்தியையும்,
எப்படி எழுதக்கூடாது என்பதற்கான பயிற்சியையும் எப்படி அடைந்தீர்கள் என்பதோடு,
===="சுவாரசியமாகக் கதை சொல்லும் வாய்ப்பைப் பெறுவதற்கு, முதலில் பலரது நூல்களையும் படிக்க வேண்டும். வாசிப்பின் மூலமே சொல்லும் உத்தி அல்லது எழுதும் உத்தி வசப்படும்"====
போன்ற நல்ல வழி காட்டுதல்களை காண்பித்துள்ள தங்களுக்கு மிக்க நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!
/////சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஅடேங்கப்பா,1688 ஃபாலோயர்ஸா?இதுதான் ரெக்கார்டுனு நினைக்கிறேன்.வாழ்த்துக்கள் ஐயா/////
அந்த 1688 உங்களையும் சேர்த்தா? அல்லது சேர்க்காமலா?:-)))))
/////R.DEVARAJAN said...
ReplyDeleteஇவ்வாறு மனம் திறந்து வாழ்த்துவதற்குப் பரந்த மனம் வேண்டும்;
பாராட்டுகிறேன் நண்பரே
தேவ்/////
நல்லது. உங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!
//////Alasiam G said...
ReplyDelete"ஒத்தக் குணம் உடையவர்கள் ஒன்றிவிடுவார்களே அதைப் போல அதை சொல்லவும் தயக்கம், அவனின் நின் அணுச்சிறியன்"
அய்யா! மன்னிக்கணும்,
எழுத்துப் பிழை.
அவனின் "நான்" அணுச்சிறியன்
என்று நான் எழுதியது;
தவறுதலாக "நின்" என்றாகிவிட்டது தயவுசெய்து
என் பிழைத் திருத்தி விடுங்கள்....
எனது எந்தப் பின்னூட்டமும் தங்களை சிலேடையாக சாடுவதாக ஒருபோதும் இருந்ததில்லை; இருக்காது (அதற்கு அவசியமே இருக்காது அது திண்ணம்), என்னுடைய நிறை; இல்லை, அதுவே குறையும் கூட சொல்லவந்ததை நேராகச் சொல்லிவ்டுவேன்
"சமீபத்தில் எனது 28 குட்டிக்கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கியுள்ளேன்.
ஜோதிட நூல்கள் வெளியாகும்போது அவைகளுடன்
அந்த நூலையும் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்."
ஓ... இதைத்தான் முன்னொருமுறை ஜோதிட புத்தகத்தோடு இன்னொரு அதிசயமும் காத்திருக்கிறது என்று சொல்லியிருந்தீர்கள் என்று நினைக்கிறேன்.
நன்றிகள் குருவே!/////
ஆமாம். நன்றி ஆலாசியம்!
/////Pugazhenthi said...
ReplyDeleteதிருவாளர் ஆனந்த அவர்களின் வலைப்பதிவு வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!/////
நல்லது. நன்றி!
/////V Dhakshanamoorthy said...
ReplyDelete"நமது வகுப்பறை மாணவர் திரு. ஆனந்த் அவர்கள் அவரின் 30 07 2010 தேதிய வகுப்பறை பின்னூட்டத்தின் மூலம் ://////////" ஜோதிடம் என்பது கடல். அந்த கடலில் வாத்தியார் போகாத இடங்கள் (அதாவது பாடம் நடத்தாத விஷயங்கள்) பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து பதிவாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். Suggestions are welcome from our fellow students"////////////////
என்று குறிப்பிட்டுள்ளார். "Suggestions are welcome from our fellow students " இதற்கு என்னுடையக் கருத்தினை வெளியிடவேண்டியதாக இருப்பதால் இதனைப் பதிவு செய்கிறேன்.
- - - - - - - - - - -- - - - - - - - -- - - - -- -
திரு. ஆனந்த் அவர்களின் வலைப்பதிவு
சிறப்போடு செயல்படுவதற்கு எனது வாழ்த்துக்கள்.
திரு. ஆனந்த் அவர்கள் வலைப்பதிவு ஒன்றைத் துவங்க இருப்பதில் எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை.
வரவேர்க்கத்தகுந்ததே.ஜோதிட சம்மந்தமான ஆராய்சிக் குறித்தோ, ஜோதிடம் பற்றியோ ,வரலாறுகள் பற்றியோ,புதியதாகக் கண்டு பிடிபபன பற்றியோ எது வேண்டுமானாலும் பதிவேற்றலாம்.சக மாணவர் என்ற முறையில் படித்துப் பார்த்து மகிழ்வேன்., ரசனையோடு,தெய்வீக ஆற்றலுடன் படைப்புக்கள் அமையுமாயின், நல்ல பதிவுகளை அளிப்பவர் என்ற பெயரை எடுத்து பாராட்டுக்களையும் தகுந்த பரிசுகளையும் பெறலாம். எதனையும் எதிர் பாராமல் பதிவுகளையும் உடனடியாகவும் வலை ஏற்றம் செய்யலாம்.
- - - - - - - - - - - - -- - - - - - -- - - - - - -- - --- - - - - -
திரு. ஆனந்த் அவர்கள் இவரின் பதிவுகளில்,------- "வாத்தியார் பாடம் நடத்தாத விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து பதிவாக வெளியிடலாம்", --------------என்று கூறும் கருத்து ஏற்புடையதாக,நடைமுறையில் நடைபெறக்கூடியதாக இல்லை.
ஏனெனில்,வாத்தியார் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறார்.அதனை ஒரு எல்லைக்குள் எப்படிக் கொண்டுவர முடியும்.அவர் மிகுந்த உழைப்புகளுக்குப் பின்னரே,மாணவர்களின் எதிர்ப் பார்ப்புக்களின் படி மிகுந்த கவனத்தோடு பாடங்களை வகைப்படுத்தி,எந்த நேரத்தில் பாடங்களை எந்த விதத்தில் பதிவேற்ற வேண்டும் என்பதை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து பாடங்களை அளித்து வருகிறார். இந்த நிலையில் பாடம் நடத்தாத விஷயங்கள் விடுபட்டவை என எதனை எடுத்துக் கொள்ள முடியும்.
திரு. ஆனந்த் அவர்கள் யோசித்து செயல்படவேண்டும்.. நன்றி.
- - - - - - - - - - - -- - - - - -
/////"நமது வகுப்பறை
மாணவர் திரு. ஆனந்த் அவர்கள் ஜோதிடப் பாடங்களுக்கென
வலைப்பதிவு ஒன்றைத் துவங்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்".////////--வாத்தியார்.
வாத்தியார் அவர்கள் அவருக்கே உரித்தான பெருந்தன்மையோடு, வலைப்பதிவு ஒன்றைத் துவங்க உள்ள வகுப்பறை மாணவர் திரு. ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அளித்ததோடு தானும் அவருடைய பதிவுகளைப் படிக்க ஆர்வமாக உள்ளேன் என்றக் கருத்தையும் தெரிவித்துள்ளார்.
வாத்தியார் அவர்களின் இந்த கருத்து
சிறப்பானது வரவேற்கக் கூடியது.
மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள வகுப்பறை மாணவன்
வ.தட்சணாமூர்த்தி//////
நல்லது. உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி!