மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.7.10

நீண்ட ஆயுள் நன்மையா அல்லது தீமையா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நீண்ட ஆயுள் நன்மையா அல்லது தீமையா?

எட்டாம் இடத்தில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்:

1
சூரியன்

பொதுவிதி - ஒரு வரியில்
Sun- medium life, eye diseases, and altercations (often heated, in which a difference of opinion is expressed)
******************
சூரியனுக்குப் பொதுவாக 1,2,3,4,5, 8, 9 & 11 ஆகிய இடங்கள் உகந்த இடங்கள்: 6, 7, 10 &12 ஒவ்வாத இடங்கள். 8ஆம் இடத்தில் வந்தமரும் சூரியன், ஜாதகனுக்கு, சிக்கலான சூழ்நிலைகளில் கைகொடுப்பான்.

ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சூரியன் வந்தமர்ந்திருந்தால், அதுவும் உச்சம் பெற்றிருந்தால், ஜாதகனுக்குப் பூரண ஆயுள் உண்டு. அரவிந்தசாமியைப் போல கவர்ச்சிகரமாக இருப்பான். சிலர் சிறந்த மேடைப் பேச்சாளராக
உருவெடுப்பார்கள். பெண்ணாக இருந்தால் தமண்னாவைப்போல கவர்ச்சியாக இருப்பாள்.

எட்டாம் இடத்தில் சூரியனுடன் எட்டாம் அதிபதி அல்லது 11ஆம் அதிபதி சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் திடீர்  பொருள் வரவுகள் உண்டாகும்

அதே நேரத்தில், எட்டாம் இடத்தில் வந்தமரும் சூரியன், பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது  நீசம் பெற்றிருந்தால் அல்லது தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றிருந்தால், அது ஜாதகனுக்குச் சாதகமானதல்ல.சிலருக்கு முகத்தில் தழும்புகள், வடுக்கள் ஏற்படும். வழ்க்கை சிலாக்கியமாக இருக்காது!
கண் பார்வைக் குறைவுகள் ஏற்படும்.

If the Sun occupies the 8th, the native will have deformed eyes, be devoid of wealth and happiness, be short- lived and will suffer separation from his relatives. - Saravali
-----------------------------------------------------

2.
சந்திரன்

பொதுவிதி - ஒரு வரியில்
Moon- Affected by phlegm, trouble in left eye, danger of drowning and loss of wealth
******************
எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தமர்ந்திருந்தால் மனப்போராட்டங்கள் மிகுந்த ஜாதகம். மன நிம்மதி இருக்காது. உளவியல் பிரச்சினைகள் உண்டாகும். நிலையான பிடிப்புடையவனாக ஜாதகன் இருக்க மாட்டான். உடல்
நலமில்லாதவனாகவும் இருப்பான். சிலருக்கு தாய் அவனுடைய சின்ன வயதிலேயே, ஜாதகியாக இருந்தால், அவளுடைய சின்ன வயதிலேயே
இறந்து போயிருப்பாள். தாயில்லாக்குழந்தையாக வளர்ந்திருப்பான். அல்லது
வளர்ந்திருப்பாள். கண் பார்வைக்குறைகள் உண்டாகும்.

வம்சாவழிச் சொத்துக்கள் வந்து சேரும். எதையும் அனுபவித்து மகிழக்கூடிய தன்மை இருக்கும். போர்க்குணம் மிகுந்திருக்கும். பெருந்தன்மையும் உடன் இருக்கும். சந்திரன் எட்டில் இருக்க, ஜாதகத்தில் (வேறு எங்கேனும்)
சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் கண்பார்வைக் கோளாறுகள் உண்டாகும்.

If the Moon is in 8th, the native will be very intelligent, very splendourous and will suffer from diseases. If the Moon 
be weak, he will be short-lived. - Saravali
-------------------------------------------------------

3.
செவ்வாய்

பொதுவிதி - ஒரு வரியில்
Mars-Short life, will kill wife, troubles from enemies
******************
ஜாதகத்தில் வேறு நல்ல அம்சங்கள் இல்லாமல், செவ்வாய் வந்து எட்டில் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் குறைந்த  ஆயுள். சிலர் மனைவியை இழந்து துன்பப்பட நேரிடும். குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகள் இருக்கும்.
தங்களது சுயமகிழ்ச்சிக்காகச் சிலர், வேறு பெண்களைத் தொடுப்பாக வைத்திருப்பார்கள். தொடுப்பு என்றால்  என்னவென்று தெரியுமல்லவா?. உறவுகளூடன் மோதல்கள் இருக்கும். குடும்ப வாழ்க்கை சண்டை சச்சரவுகளால் நிலை குலைந்து இருக்கும். அதாவது வெளியே சொல்லும்படியாக இருக்காது.

சிலருக்கு மூலநோய் (piles complaint) இருக்கும். மற்றவர்கள்மேல் அதிகாரம் செலுத்துவார்கள்.

If Mars occupies the 8th, the native will suffer from diseases, be short-lived, will possess an ugly, or  deformed  body, will do base acts and will suffer grief. - Saravali
-------------------------------------------------------

4.
புதன்

பொதுவிதி - ஒரு வரியில்
Mercury- Is always good in the 8th house. Learning of Scriptures and Long life.
*****************
எட்டாம் இடத்தில் புதன் வந்து அமர்வது சிறப்பான அமைப்பு.
ஜாதகனுக்குப் பல விஷேச குணங்கள் இருக்கும்.எல்லோரையும் அனுசரித்துப்போகும் தன்மை இருக்கும்.  யாரையும் சமாளிக்கும் அல்லது வளைத்துப்போடும் தன்மை இருக்கும்.

செல்வம் பலவழிகளில் வந்து சேரும். ஜாதகனும் தன் சொந்த முயற்சியில் பொருள் ஈட்டுவான். சுருக்கமாகச்  சொன்னால் செல்வந்தனாக இருப்பான் (பொதுவிதி)

அதிகம் கற்றவனாக இருப்பான். பண்டிதனாக இருப்பான். எல்லா விஷயங்களும் தெரிந்தவனாக இருப்பான். அதிக நாள் உயிரோடு இருப்பான். அதே நேரத்தில் ஆசாமி நோஞ்சான் வடிவத்தில் இருப்பான்.

If Mercury occupies the 8th, the native will win famous names (titles), be strong, long-lived, will support his family  and be equal to a king, or will become a justice - Saravali
-----------------------------------------------------

5
குரு

பொதுவிதி - ஒரு வரியில்
Jupiter- long life but sadness on account of sons.
******************
ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. மனதில் மகிழ்ச்சி இருக்காது. ஆனால் பெருந்தன்மை உடையவனாக  இருப்பான். அறங்கள் செய்பவனாக இருப்பான். பேச்சுத்திறமை இருக்காது. மறைமுகமாகப் பல தகாத  செயல்களைச் செய்வான். ஆனால் அவைகள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வான். சிலருக்கு விதவைப் பெண்களுடன் அல்லது தகாத பெண்களுடன் தொடர்பு இருக்கும். உடல் உபாதைகள், வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். மரணம் ஏற்படும் சமயத்தில், வலியில்லாத மரணம்  உடையவனாக இருப்பான்.

குரு நீசமடைந்திருந்தால், வாழ்க்கை சுத்தமாக மகிழ்ச்சியற்றதாக இருக்கும்

If Jupiter occupies the 8th, the native will be insulted, long-lived, be a servant, will serve his own  people, be pitiable and will have union with dirty women - Saravali
-----------------------------------------------------

6
சுக்கிரன்

பொதுவிதி - ஒரு வரியில்
Venus - long life, inheritance, scriptural knowledge.
******************
எட்டாம் இடத்தில் சுக்கிரன் வந்து அமர்வது சிறப்பான அமைப்பு. பல வரங்களுடன் பிறந்த அமைப்பு.(It is a  blessed position) ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வசதியான வாழ்க்கை அமையும்.

சிலருக்கு, அவர்களுடைய சின்ன வயது வாழ்க்கை ஏமாற்றங்களும், உணர்ச்சிப் போராட்டங்களும் நிறைந்ததாக  இருந்திருக்கும். அதன்காரணமாக வயதான காலத்தில் ஆன்மிகச் சிந்தனைகளும், தர்மச் சிந்தனைகளும்  உடையவர்களாக  இருப்பார்கள். தங்கள் பெற்றோர்கள் மீது அதீத அன்பையும் பாசத்தையும் வைத்திருப்பார்கள். எட்டாம் இடத்து சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால், அதீதமான செல்வம் சேரும்.

(சார் எனக்கு எட்டில் உச்சம் பெற்ற சுக்கிரன், அதீத செல்வம் சேரவில்லையே என்று யாரும் கேட்க வேண்டாம். நான் சிம்ம லக்கினக்காரன் எனக்கும் எட்டில் உச்சமான சுக்கிரன். செல்வம் வந்தது. அத்தனையும் காணாமல்  போய்விட்டது. செலவாகிவிட்டது. அதற்குக் காரணம் இரண்டாம் வீட்டில் பாப கிரகம் அமைந்துள்ளது. ஓட்டை  அண்டா. தண்ணீர் எப்படித் தேங்கும்? இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், பொதுவிதிகளை நம் ஜாதகத்தில்  உள்ள மற்ற அமைப்புக்களுடனும் சேர்த்துப் பரிசீலிக்க வேண்டும்)

எட்டில் அமரும் சுக்கிரன் நீசமடைந்திருப்பதோடு, சனியின் பார்வையைப் பெற்றிருந்தால், ஜாதகன் மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை வாழ நேரிடும்.

If Venus is in the 8th, the native will be long-lived, will enjoy incomparable happiness, be very rich, be equal to a king and moment after moment will feel delighted - Saravali
--------------------------------------------------------------

7
சனீஷ்வரன்

பொதுவிதி - ஒரு வரியில்
Saturn- Long life but sad life due to inadequate earnings
******************
எட்டாம் இடத்தில் சனீஷ்வரன் வந்து அமர்வது நன்மையான அமைப்பு. ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.நீண்ட ஆயுள் நன்மையான அமைப்பு என்று எடுத்துக்கொள்வோம்.

ஜாதகனுக்குப் பல பொறுப்புக்கள் வந்து சேரும். அனைத்தையும் அவன் அசத்தலாகக் கையாள்வான். அதாவது  சங்கடமின்றி முழுமனதுடன் செய்வான். இடையூறுகள், தடைகள் என்று எது வந்தாலும் அவற்றை உடைத்து செய்ல்புரிவான்.

சிலருக்குக் கண் பார்வைக்கோளாறுகள் ஏற்படும். குறைந்த எண்ணிக்கை யிலேயே குழந்தைகள் இருக்கும். பெண்கள் மேல் மயக்கம் கொண்டவனாக இருப்பான். பல பெண்களுடன் தொடர்பு இருக்கும். என்ன விதமான  தொடர்பு என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்:-))))

உடல் உபாதைகள் மற்றும் தீராத பிணிகள் இருக்கும். நோய் என்றால் திர்க்கஊடியது. பிணி என்றால் தீர்க்க முடியாதது என்று பொருள் கொள்க! சிலருக்குத் தீராத வயிற்றுக்கோளாறுகள், வாய்த்தொல்லைகள் கூடவே
இருந்து கழுத்தறுக்கும்

இங்கே வேறு தீய கிரகம் வந்து சனியுடன் சேர்ந்துகொண்டால், ஜாதகனுக்கு, அவனுடைய குழந்தைகளால்  மகிழ்ச்சி இருக்காது. சிலர் நேர்மையில்லாதவர் களாக இருப்பார்கள். (பல பெண்களின் தொடர்பு இருக்கும் என்று  முன்பே சொல்லிவிட்ட பிறகு, இதைச் சொல்ல வேண்டுமா என்ன?)

If Saturn occupies the 8th, the native will suffer from leprosy and fistula in the anus, or pudendum and will fail  in his undertakings - Saravali
----------------------------------------------------------------

8
ராகு

பொதுவிதி - ஒரு வரியில்
Rahu- Danger by poison
******************
எட்டாம் இடத்தில் ராகு வந்து அமர்வது நன்மையான அமைப்பு அல்ல!

ஜாதகனுக்குப் பலவிதமான நோய்கள் தேடிவந்து படுத்தி எடுக்கும். சமூகத்தில் உரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்காது. அல்லது அப்படிப்பட்ட நிலைமை ஏற்படும். நல்லது எது கெட்டது எது என்று ஆராயாமல் எதையும் எடுத்தேன், செய்தேன் என்று இருப்பான். தர்க்கம் செய்பவனாக இருப்பான். தகராறு செய்பவனாக இருப்பான்.

உப்புப் பெறாத விஷயத்திற்கெல்லாம் கைகலப்பில் இறங்குபவனாக இருப்பான் (பொதுவிதி) ஜாதகத்தில் சந்திரன் ஒரு தீய கிரகத்துடன் கூட்டாக இருந்து, அதே ஜாதகத்தில் ராகு 8, 12 அல்லது 5ஆம்  இடங்களில் இருந்தால் ஜாதகனுக்கு மன நோய் உண்டாகும்!
--------------------------------------------------------------------

9
கேது

பொதுவிதி - ஒரு வரியில்
Ketu- Health of Spouse will be affected
******************
எட்டாம் வீட்டில் கேது இருந்து, ஒரு சுபக்கிரகத்தின் பார்வையும் இருந்தால், ஜாதகன் நீண்ட நாட்கள் வாழ்வான்.  பூரண ஆயுள் உண்டு. அத்துடன் அதீத செல்வமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும்.

அதே கேது எட்டாம் வீட்டில் இருப்பதுடன் ஒரு தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றால், ஜாதகன்  அடுத்தவர்களின் சொத்தையும், சமயத்தில் பெண்களையும் அபகரித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவான்.
பலவிதமான நோகளுக்கும் ஆளாவான்
------------------------------------------------------------------------
எட்டாம் வீடு துன்பங்களுக்கும் உரிய வீடு. எட்டாம் வீடு கெட்டிருந்தால், ஜாதகனுக்கு உடல் நோய்கள் இருக்கும்  அல்லது மனநோய் இருக்கும். எட்டாம் வீடு கெட்டிருக்கும் அளவை வைத்து நோய்களின் அளவும் மாறுபடும்.
சாதாரண நோயாகவும் இருக்கலாம். அல்லது புற்றுநோய் (cancer) போன்ற கொடிய நோயாகவும் இருக்கலாம்.

எல்லாம் வாங்கிவந்த வரம். அதை மனதில் கொள்க!

If malefics occupy various Bhavas (other than 6th, 8th and 12th), they bring harm to the Bhavas, while benefics  increase their potence. Malefics are auspicious in evil Houses, i.e. 6th, 8th and 12th, while benefics prove  adverse in these Bhavas. According the strength of Yogakaraka planets, their beneficial  
relationship, friendly/inimical aspects etc. and position in exaltation/debilitation, the (good, or bad) results of Bhavas 
can vary  (i.e. be maximum, medium, or nil).- 30th Ch. entitled Effects of Planets in Bhavas in Kalyana Varma's Saravali.
-----------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி  நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

59 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    எட்டாம் இடத்தில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும்
    விளக்கமாக நன்கு புரியும்படியும்
    உள்ளது.
    தங்களுக்கு மிக்க நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-05

    ReplyDelete
  2. பாடம் அருமை!
    எனது உறவினர் ஒருவரின் குழந்தைக்கு
    எட்டாம் வீட்டில் 45 - பரல்கள்,
    ஒரே வரியில் என்ன கூறலாம்
    (நீண்ட ஆயுளைத் தவிர).
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  3. ஐயா!, ஆறில் சந்திரன் அமர்ந்திருந்தாலும் இதே போலொரு நிலை வருமா?

    ReplyDelete
  4. ஐயா,
    எட்டாம் வீடு படம் அருமை. இன்று பதித்த பாடத்தை மிகவும் ரசித்தேன். எனக்கு எட்டில் (மகரத்தில்) சூரியனும் புதன்உம் (ராசி நாதன், லக்னா அதிபதி) கூட்டு. பதித்த அத்தனை விதியும் அப்படியே உண்மை.

    அன்புடன்,
    தூரத்து சீடன், கணேஷ்

    ReplyDelete
  5. வண்ணப் பறவையை "படமாக" தந்து ..
    யாருக்கு இந்த சீட்டு(எட்டாம் இடம்)
    என சொல்லும் "பாடமாக" அமைந்தது அருமை..

    யாருமே இல்லாத அந்த இடத்திற்கு செல்ல இவர்கள் வந்து அமர்வதால் நமக்கென்ன பலன் என எடுத்து ச் சொல்லிய விதம் பாரட்டக் கூடியது. . .
    சுவாரசியமாக செல்லும் இந்த பாடத்தில் ஒரு சில (சில அல்ல.. பல..) சந்தேக கேள்வி உள்ளது .. .

    எட்டாம் இடம் பற்றிய நிறைவில் கேட்க வேண்டும் என வாத்தியார் சொன்னதால் அன்புடன் காத்திருக்கிறேன் . .

    ReplyDelete
  6. மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் பதிவு எழுதப்பட்டு,கோர்வையாக வெளியிடப்பட்டுள்ளது.இதுவரை வந்துள்ள பாடங்களில் இதுவே மாஸ்டர் பீஸ்!

    ReplyDelete
  7. Ayya,

    Good Morning!
    Mesha Lagnam and athil "Guru". Sani 8il ullar. 8am athipathi 6il ullar (sevvai 1 & 8 athipathi). sevvai suyavargam 5 paral. enna balan regarding to my aayul ayya? Pengal sagavasam arave illai ayya.

    Thanks
    Saravana

    ReplyDelete
  8. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    எட்டாம் இடத்தில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும்
    விளக்கமாக நன்கு புரியும்படியும்
    உள்ளது.
    தங்களுக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  9. ////Alasiam G said...
    பாடம் அருமை!
    எனது உறவினர் ஒருவரின் குழந்தைக்கு
    எட்டாம் வீட்டில் 45 - பரல்கள்,
    ஒரே வரியில் என்ன கூறலாம்
    (நீண்ட ஆயுளைத் தவிர).
    நன்றிகள் குருவே!/////

    வரும் துன்பங்களை எதிர் கொள்ளும் அபார சக்தியும் இருக்கும்!

    ReplyDelete
  10. //////Alasiam G said...
    ஐயா!, ஆறில் சந்திரன் அமர்ந்திருந்தாலும் இதே போலோரு நிலைமை வருமா?//////

    ஆறில் சந்திரன் அமர்ந்திருந்தால் என்ன ஆகும்? அதை முன்பே எழுதியுள்ளேன். அதன் சுட்டி இதோ:
    http://classroom2007.blogspot.com/2008/12/blog-post_17.html

    உங்களுக்காக அதை சுருக்காகவும் கொடுத்துள்ளேன்:
    Moon in the Sixth House
    Will be cruel and intelligent. Will have disorders of the digestive tract.
    Will face many a defeat. Will be intelligent and clever.
    Will be slightly lazy. This position is slightly detrimental to prosperity.

    ReplyDelete
  11. ////GKS said...
    ஐயா,
    எட்டாம் வீடு படம் அருமை. இன்று பதித்த பாடத்தை மிகவும் ரசித்தேன். எனக்கு எட்டில் (மகரத்தில்) சூரியனும் புதனும்ம் (ராசி நாதன், லக்னா அதிபதி) கூட்டு. பதித்த அத்தனை விதியும் அப்படியே உண்மை.
    அன்புடன்,
    தூரத்து சீடன், கணேஷ்////

    உங்களின் அனுபவத்தை எடுத்துச் சொன்னமைக்கு நன்றி!

    ReplyDelete
  12. ////iyer said...
    வண்ணப் பறவையை "படமாக" தந்து ..
    யாருக்கு இந்த சீட்டு(எட்டாம் இடம்)
    என சொல்லும் "பாடமாக" அமைந்தது அருமை..
    யாருமே இல்லாத அந்த இடத்திற்கு செல்ல இவர்கள் வந்து அமர்வதால் நமக்கென்ன பலன் என எடுத்துச் சொல்லிய விதம் பாரட்டக் கூடியது. . .
    சுவாரசியமாக செல்லும் இந்த பாடத்தில் ஒரு சில (சில அல்ல.. பல..) சந்தேக கேள்வி உள்ளது .. .
    எட்டாம் இடம் பற்றிய நிறைவில் கேட்க வேண்டும் என வாத்தியார் சொன்னதால் அன்புடன் காத்திருக்கிறேன் . .//////

    நானும் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  13. அய்யா வணக்கம்,,,,
    எட்டாம் இடத்தில் இருக்கும் கிரகங்களால் ஏற்படும் பலன் பிரமாதம் .....ஏறகனவெ லக்னாதிபதி பற்றிய முதல் பாடத்தில் லக்ன ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் எட்டாம் இடத்தில் இருக்க கூடாது என்று கூறி இருந்தீர்கள் ...இந்த பாடத்தில் புதன் ,சுக்ரன் சனி முதலான கிரகங்கள் 8 இல் இருப்பின் நன்மை செய்யும் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் ....சற்று விளக்கம் தேவை அய்யா .....

    நன்றி வணக்கம்...

    ReplyDelete
  14. my 8th lord chadra dasa is going to end in few months.. first four year was really great. the next 5yrs is the worst time of my life.I just want to erase it from my life. "adhai ninaithal indrum manam vedhanai padugindrathu".

    oruvanuku indha grahangal kuduthu edupathaivida ..kudukamale irundirukalam..

    next dasa is 5th lord mars dasa,who is placed in 11th house. varum thisai suuuper duper bumper ellam vendam, amaittthiyaaaga irundhale podumdaaa saami..

    thank u sir for your post on this 8th lords.

    ReplyDelete
  15. எனக்கு 8ல் (மேசம்) புதன், சுக்கிரன் இருக்கிறார்கள். செவ்வாய் 5ல் இருந்து 4ம் பார்வையாக பார்க்கிறார். என் மனைவிக்கும் 8ல் புதனும், சுக்கிரனும் இருக்கிறார்கள். லக்னாதிபதி சந்திரன்தான் 2ல் இருந்து 7ம் பார்வையாக பார்க்கிறார். வெவ்வேறு நூல்களின் படி இதன் பலன்கள் மாறுபட்டாலும் நீண்ட ஆயுள் என்பது மட்டும் எல்லா நூல்களும் தெரிவிக்கின்றன. இது சுகமா சுமையா, வரமா சாபமா என்று வயதான பிறகுதான் தெரியும்.

    இன்னொன்று, எனக்கு இருக்கும் இந்த அமைப்பினால் கைரேகை, ஜோதிடம், மந்திர தந்திர சாஸ்திரங்கள் போன்றவை (occult studies) நன்றாக கைவரும் என்று படித்திருக்கிறேன். பொது பலன்தான், இருந்தாலும் மற்ற அம்சங்களும் இதற்கு சாதகமாக இருக்கிறது.

    ReplyDelete
  16. கல்யாண வர்மாவின் சராவளியை மேற்கோள் காட்டி பலன்கள் சொல்லியிருந்ததும் மிகவும் அருமை. மிக சிறந்த ஜோதிட நூல்களின் வரிசையில் சராவளிக்கு எப்போதும் ஓர் இடம் உண்டு.

    ReplyDelete
  17. Sir ,
    Amsathil 8 il sukkiran ( Atchi ) ,ithuvum nanmai kodukkuma ?

    ReplyDelete
  18. ஐயா, பாடம் அருமை. சூரியனுக்கான பலன்களில் தமிழும் ஆங்கிலமும் மாறுபடுகின்றனவே. சரவளிப்படி மோசனமான பலன்கள் வருகிறதே?..எதை எடுத்துக்கொள்வது...

    என் முதல் அலுவலகத்தில் மின்னஞ்சல் பற்றி பாடம் எடுத்தபோது, முடிந்தவரை ஒரே வார்த்தை திரும்ப திரும்ப வராமல் வெவ்வேறு வார்த்தைகள் பயன்படுத்துவது சுவைகூட்டும் என்றார்கள்.(told, mentioned,informed)..தாங்களும் தொடர்பு,தொடுப்பு என ஒரு உவ்வே விஷயத்தை பலவித வார்த்தைகளில் விளக்குவது அழகு ஐய்யா..

    அன்புடன்,
    செங்கோவி

    ReplyDelete
  19. Dear Sir,

    Todays lessson is effective, one more question in the 8th house debliiated Mars and aspected by 8th lord Moon from 2nd house, how will be the effect.

    ReplyDelete
  20. எனக்கு விருச்சிக லக்கினம்.
    8லே கேது. அவரை குருவானவர் பாசமுடன் பார்க்கிறார். தாங்கள் இதற்கு சொன்னது இனிப்பான செய்தி..
    தனுசு-குருவுடன் கூடவே சேர்ந்து
    10ஆம் ஆதி சூரியனும் கேதுவை நேசமுடன் நேராக நோக்குவதால் நீங்கள் எழுதியுள்ள 2வது பாயிண்ட் ஏதும் வொர்க்-அவுட் ஆகிடப்போகுதோ...என்ற பயத்தில்..நடுங்கி இந்த கேள்விய கேக்குறேன்..
    (இந்த சூரியன் நல்லவரா?கெட்டவரா? - நாயகன் பாணியில்)
    நீங்களும் தெரியலையேப்பா.. என்று அதே பாணியில் சொல்லிவிடாமல் பதிலைச் சொல்லவும்..

    ReplyDelete
  21. ஐயா வணக்கம்...
    தங்களின் மேலான விளக்கங்களுடன் மற்றும் மேற்கோள்களுடன் கூடிய எளிமையான பாடங்களுக்கு முதற்கண் எனது நன்றிகள்.. நான் முதலில் எட்டாமிட பாடங்கள் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று நினைத்தேன்.. ஆனால் தாங்கள் கடினமாக உழைத்து பாடங்களை எளிமையாக்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.. புதிய பகுதியான `வகுப்பறையில் உங்கள் பகுதி', உபயோகமான ஒரு நல்ல பகுதி. நாளுக்கு நாள் தங்கள் எழுத்தில் மெருகு கூடிக்கொண்டே போகிறதே.. இதன் ரகசியம் தான் என்னவோ...? தங்கள் ஜாதகத்தை முழுமையாகப் பார்க்கும் பாக்கியத்தை தங்கள் மாணவர்களுக்கு எப்போது வழங்குவீர்களோ....?

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  22. அய்யா,

    கேது வை பற்றிய‌ பாடத்தில் 8இல் கேது இருந்தால் ஆயுள் தோஷம் என்று கூறி ullirgal.

    "சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே
    உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம்"

    இந்த பாடத்தில் "எட்டாம் வீட்டில் கேது இருந்து,ஒரு சுபக்கிரகத்தின் பார்வையும் இருந்தால், ஜாதகன் நீண்ட நாட்கள் வாழ்வான். பூரண ஆயுள் உண்டு." என்று கூறி ullirgal.

    எது சரி?

    ReplyDelete
  23. /////kmr.krishnan said...
    மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் பதிவு எழுதப்பட்டு,கோர்வையாக வெளியிடப்பட்டுள்ளது.இதுவரை வந்துள்ள பாடங்களில் இதுவே மாஸ்டர் பீஸ்!//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சார்! நீங்கள் ஒவ்வொருமுறை பாரட்டும்போதும் என்னுடைய பொறுப்புணர்வு மேலும் கூடுகிறது. எங்கே போய் முடியுமோ? அந்தப் பழநிஅப்பனுக்கே வெளிச்சம்!;-))))))

    ReplyDelete
  24. //////Saravana said...
    Ayya,
    Good Morning!
    Mesha Lagnam and athil "Guru". Sani 8il ullar. 8am athipathi 6il ullar (sevvai 1 & 8 athipathi). sevvai suyavargam 5 paral. enna balan regarding to my aayul ayya? Pengal sagavasam arave illai ayya.
    Thanks
    Saravana////

    சனி 8ல் உள்ளார் அல்லவா? நீண்டடடடடடடடடடட..........ஆயுள். கவலை எதற்கு? லக்கினத்தில் குரு இருக்கிறாரே! அவர் பார்த்துக்கொள்வார். உங்கள் ஜாதகத்தை ஒரு பத்து வருடங்களுக்கு மூடி வைத்துவிடுங்கள்!

    ReplyDelete
  25. /////astroadhi said...
    அய்யா வணக்கம்,,,,
    எட்டாம் இடத்தில் இருக்கும் கிரகங்களால் ஏற்படும் பலன் பிரமாதம் .....ஏறகனவே லக்னாதிபதி பற்றிய முதல் பாடத்தில் லக்ன ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் எட்டாம் இடத்தில் இருக்கக் கூடாது என்று கூறி இருந்தீர்கள் ...இந்த பாடத்தில் புதன் ,சுக்ரன் சனி முதலான கிரகங்கள் 8 இல் இருப்பின் நன்மை செய்யும் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் ....சற்று விளக்கம் தேவை அய்யா .....
    நன்றி வணக்கம்...//////

    லக்கினத்திற்குப் பலன் பார்க்கும்போது அதற்கான விதிகளை வைத்துப் பாருங்கள்.
    எட்டாம் வீட்டிற்குப் பலன் பார்க்கும்போது அதற்கான விதிகளை வைத்துப் பாருங்கள்.
    ஒரு பெண்ணிற்குப் பெண், மனைவி, மருமகள், தாய் என்று பல நிலைப்பாடுகள் உண்டு!
    அவளுடைய நிலைப்பாடுகள் ஒவ்வொரு ரோலிலும் மாறும்.
    ஒன்றைவைத்து ஒன்றைக் குழப்பைக்கொள்ளாதீர்கள். அர்த்தம் ஆனதா?

    ReplyDelete
  26. //////Jack Sparrow said...
    my 8th lord chadra dasa is going to end in few months.. first four year was really great. the next 5yrs is the worst time of my life.I just want to erase it from my life. "adhai ninaithal indrum manam vedhanai padugindrathu".
    oruvanuku indha grahangal kuduthu edupathaivida ..kudukamale irundirukalam..
    next dasa is 5th lord mars dasa,who is placed in 11th house. varum thisai suuuper duper bumper ellam vendam, amaittthiyaaaga irundhale podumdaaa saami..
    thank u sir for your post on this 8th lords./////

    நல்லது. மேலதிகத்தகவல்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. /////யாதவன் said...
    அருமை!/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  28. //////ananth said...
    எனக்கு 8ல் (மேசம்) புதன், சுக்கிரன் இருக்கிறார்கள். செவ்வாய் 5ல் இருந்து 4ம் பார்வையாக பார்க்கிறார். என் மனைவிக்கும் 8ல் புதனும், சுக்கிரனும் இருக்கிறார்கள். லக்னாதிபதி சந்திரன்தான் 2ல் இருந்து 7ம் பார்வையாக பார்க்கிறார். வெவ்வேறு நூல்களின் படி இதன் பலன்கள் மாறுபட்டாலும் நீண்ட ஆயுள் என்பது மட்டும் எல்லா நூல்களும் தெரிவிக்கின்றன. இது சுகமா சுமையா, வரமா சாபமா என்று வயதான பிறகுதான் தெரியும்.
    இன்னொன்று, எனக்கு இருக்கும் இந்த அமைப்பினால் கைரேகை, ஜோதிடம், மந்திர தந்திர சாஸ்திரங்கள் போன்றவை (occult studies) நன்றாக கைவரும் என்று படித்திருக்கிறேன். பொது பலன்தான், இருந்தாலும் மற்ற அம்சங்களும் இதற்கு சாதகமாக இருக்கிறது.///////

    உங்களின் பல பின்னூட்டங்கள் அதை உணர்த்துகின்றன. ஜமாயுங்கள்!

    ReplyDelete
  29. /////ananth said...
    கல்யாண வர்மாவின் சராவளியை மேற்கோள் காட்டி பலன்கள் சொல்லியிருந்ததும் மிகவும் அருமை. மிக சிறந்த ஜோதிட நூல்களின் வரிசையில் சராவளிக்கு எப்போதும் ஓர் இடம் உண்டு./////

    அதனால்தான் அதையும் கொடுத்தேன். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  30. //////Soundarraju said...
    Sir ,
    Amsathil 8 il sukkiran ( Atchi ) ,ithuvum nanmai kodukkuma?/////

    நிச்சயம் கொடுக்கும். அம்சம் ராசியின் விரிவாக்கம்தானே! அதை மறந்துவிடாதீர்கள்!

    ReplyDelete
  31. //////SHEN said...
    ஐயா, பாடம் அருமை. சூரியனுக்கான பலன்களில் தமிழும் ஆங்கிலமும் மாறுபடுகின்றனவே. சரவளிப்படி மோசனமான பலன்கள் வருகிறதே?..எதை எடுத்துக்கொள்வது...///////

    சரவளியில் உள்ளது பொதுப்பலன். சூரியன் உச்சமடைந்து கொடுக்கும் பலனைப் பற்றி அது சொல்லவில்லை.
    ஆகவே அந்த வேறுபாடு.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>
    என் முதல் அலுவலகத்தில் மின்னஞ்சல் பற்றி பாடம் எடுத்தபோது, முடிந்தவரை ஒரே வார்த்தை திரும்ப திரும்ப வராமல் வெவ்வேறு வார்த்தைகள் பயன்படுத்துவது சுவைகூட்டும் என்றார்கள்.(told, mentioned,informed)..தாங்களும் தொடர்பு,தொடுப்பு என ஒரு உவ்வே விஷயத்தை பலவித வார்த்தைகளில் விளக்குவது அழகு ஐய்யா..
    அன்புடன்,
    செங்கோவி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  32. /////Ram said...
    Dear Sir,
    Todays lessson is effective, one more question in the 8th house debliiated Mars and aspected by 8th lord Moon from 2nd house, how will be the effect.//////

    ஜோதிடப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், தங்கள் சொந்த ஜாதகத்தில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள்/பின்னூட்டங்கள் வருகின்றன. அதுபோல் வந்த மின்னஞ்சல்கள் அனைத்திற்கும் (100ற்கும் மேலாக) ஒரு தொடர் விளக்கத்தை முன்பு எழுதினேன். அது போல மீண்டும் ஒரு கேள்வி-பதில் sessionஐ வைக்க உள்ளேன். தற்சமயம் நேரம் இல்லை. இரண்டுமாதங்கள் பொறுத்திருங்கள். அந்தச் சமயம் பதிவில் அறிவிப்பு வரும். அப்போது உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். அனைத்திற்கும் பதில் பதிவிலேயே (in the blog) கிடைக்கும்
    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை.

    ReplyDelete
  33. /////minorwall said...
    எனக்கு விருச்சிக லக்கினம்.
    8லே கேது. அவரை குருவானவர் பாசமுடன் பார்க்கிறார். தாங்கள் இதற்கு சொன்னது இனிப்பான செய்தி..
    தனுசு-குருவுடன் கூடவே சேர்ந்து
    10ஆம் ஆதி சூரியனும் கேதுவை நேசமுடன் நேராக நோக்குவதால் நீங்கள் எழுதியுள்ள 2வது பாயிண்ட் ஏதும் வொர்க்-அவுட் ஆகிடப்போகுதோ...என்ற பயத்தில்..நடுங்கி இந்த கேள்விய கேக்குறேன்..
    (இந்த சூரியன் நல்லவரா?கெட்டவரா? - நாயகன் பாணியில்)
    நீங்களும் தெரியலையேப்பா.. என்று அதே பாணியில் சொல்லிவிடாமல் பதிலைச் சொல்லவும்..//////

    பத்தாம் அதிபதி தன்னுடைய வீட்டிற்கு ஐந்தாம் இடத்தில் இருப்பது - அதுவும் குருவுடன் கூடி இருப்பது நன்மையானது! கவலைப்பட வேண்டாம் மைனர்! உங்களுக்கு சீக்கிரம் நல்ல காலம் வரட்டும். “பொன்மகள் வந்தாள்; பொருள் கோடி தந்தாள்” என்று நீங்கள் பாடும் காலம் வரட்டும். ஜப்பானுக்கு இரண்டு ஏர் டிக்கெட் போட்டு வையுங்கள். கே.எம்.ஆர் சாரைக்கூட்டிக்கொண்டு நானும் வருகிறேன். சைவ உணவு கிடைக்கும் இல்லையா?

    ReplyDelete
  34. /////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...
    தங்களின் மேலான விளக்கங்களுடன் மற்றும் மேற்கோள்களுடன் கூடிய எளிமையான பாடங்களுக்கு முதற்கண் எனது நன்றிகள்.. நான் முதலில் எட்டாமிட பாடங்கள் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று நினைத்தேன்.. ஆனால் தாங்கள் கடினமாக உழைத்து பாடங்களை எளிமையாக்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.. புதிய பகுதியான `வகுப்பறையில் உங்கள் பகுதி', உபயோகமான ஒரு நல்ல பகுதி. நாளுக்கு நாள் தங்கள் எழுத்தில் மெருகு கூடிக்கொண்டே போகிறதே.. இதன் ரகசியம் தான் என்னவோ...? தங்கள் ஜாதகத்தை முழுமையாகப் பார்க்கும் பாக்கியத்தை தங்கள் மாணவர்களுக்கு எப்போது வழங்குவீர்களோ....?
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்///////

    அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்! என்னை நானே அரைத்துக்கொண்டிருக்கிறேன். பல உதாரண ஜாதகங்களை வைத்து ஒரு தொடர் உள்ளது. அப்போது நீங்கள் கேட்டது வரலாம்!

    ReplyDelete
  35. /////Strider said...
    அய்யா,
    கேது வை பற்றிய‌ பாடத்தில் 8இல் கேது இருந்தால் ஆயுள் தோஷம் என்று கூறி ullirgal.
    "சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே
    உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம்"
    இந்த பாடத்தில் "எட்டாம் வீட்டில் கேது இருந்து,ஒரு சுபக்கிரகத்தின் பார்வையும் இருந்தால், ஜாதகன் நீண்ட நாட்கள் வாழ்வான். பூரண ஆயுள் உண்டு." என்று கூறி ullirgal.
    எது சரி?//////

    சுபகிரகத்தின் பார்வை என்று ஒரு கொக்கியை மாட்டியிருக்கிறேனே அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்?

    ReplyDelete
  36. பத்தாம் அதிபதி தன்னுடைய வீட்டிற்கு ஐந்தாம் இடத்தில் இருப்பது - அதுவும் குருவுடன் கூடி இருப்பது நன்மையானது! கவலைப்பட வேண்டாம் மைனர்! உங்களுக்கு சீக்கிரம் நல்ல காலம் வரட்டும். “பொன்மகள் வந்தாள்; பொருள் கோடி தந்தாள்” என்று நீங்கள் பாடும் காலம் வரட்டும். ஜப்பானுக்கு இரண்டு ஏர் டிக்கெட் போட்டு வையுங்கள். கே.எம்.ஆர் சாரைக்கூட்டிக்கொண்டு நானும் வருகிறேன். சைவ உணவு கிடைக்கும் இல்லையா? ///
    வணக்கம் சார்,
    நானு என்னையும் கூட்டிட்டு போங்க சார். வர வர தாங்கள்
    எனனை எதிலும் சேர்த்து கொள்ள்வில்லை.
    சுந்தரி

    ReplyDelete
  37. Good evening sir,
    Thanks for ur 8th lessons sir. Lessons are very nice. But i feel very bad due to my 8th house has saturn and moon combination. I will get dire disease is it not This all our fate. we cannot change it.
    sundari

    ReplyDelete
  38. நல்லது..நன்றி..கே.எம்.ஆர். சாரை ரொம்ப நாளாக் காணோம்..கூட்டிட்டு வாங்க..but இங்கே குதிரைக் கறி அவியல், பச்சை மீன் துவையல், பன்றிக்கறி பொறியல், மாட்டுக்கறி மசியல் என்று நல்ல சைவ சாப்பாடு கிடைக்கும். .. நூடுல்ஸ் கேட்டால் அதிலேயும் பச்சைமுட்டையை உடைச்சு ஊத்திக் கொடுப்பார்கள்.. நம்ம ஊர் சரவணா பவன் எல்லாம் இங்கே இல்லை..north indian மக்கள்தான் சில இடங்களில் naan with our mutton ,chicken என்று கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள்..
    அதுவும் நம்ம செட்டிநாடு வகையறா taste நினைக்கவே முடியாது.. மொத்தத்தில் நான் இங்கே ஓரளவு சைவம்தான்...(மேற்கண்ட சமையல் சாப்பிட முடியாததால்..)
    தேடி கண்டுபிடித்துதான் இந்திய உணவுக்கு செல்ல வேண்டுமே தவிர அதிகபடியான ஜப்பானீஸ் உணவகங்கள் இப்படித்தான்...ரெண்டு பெரும் வாங்க..ஒரு வெட்டு வெட்டலாம்..?

    ReplyDelete
  39. ///paramasivam said...
    வணக்கம் சார்,
    நானு என்னையும் கூட்டிட்டு போங்க சார். வர வர தாங்கள்
    எனனை எதிலும் சேர்த்து கொள்ள்வில்லை.
    சுந்தரி///
    சுந்தரிம்மாவுக்கு குதிரைகறின்னா ரொம்ப இஷ்டம் போலே..வாங்க..நீங்களும்..

    ReplyDelete
  40. paramasivam said...
    பத்தாம் அதிபதி தன்னுடைய வீட்டிற்கு ஐந்தாம் இடத்தில் இருப்பது - அதுவும் குருவுடன் கூடி இருப்பது நன்மையானது! கவலைப்பட வேண்டாம் மைனர்! உங்களுக்கு சீக்கிரம் நல்ல காலம் வரட்டும். “பொன்மகள் வந்தாள்; பொருள் கோடி தந்தாள்” என்று நீங்கள் பாடும் காலம் வரட்டும். ஜப்பானுக்கு இரண்டு ஏர் டிக்கெட் போட்டு வையுங்கள். கே.எம்.ஆர் சாரைக்கூட்டிக்கொண்டு நானும் வருகிறேன். சைவ உணவு கிடைக்கும் இல்லையா? ///
    வணக்கம் சார்,
    நானு என்னையும் கூட்டிட்டு போங்க சார். வர வர தாங்கள்
    எனனை எதிலும் சேர்த்து கொள்ளவில்லை.
    சுந்தரி////

    இல்லை சகோதரி! 7:11 மணிக்கு வந்த மைனரின் நற்செய்தியைப் பாருங்கள். அதைல் ஜப்பானில் கிடைக்கும் உணவுகளைப் பட்டியல் இட்டுள்ளார். அதைப் படித்தவுடன், அங்கே செல்லும் ஆசை என்னை விட்டு நீங்கிவிட்டது. வள்ளுவரின் கொல்லாமை அதிகாரத்தைப் படித்த எவனுமே, ஜப்பானில் காலடி எடுத்து வைக்க மாட்டான். முத்துராமகிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். பொறுத்திருங்கள்.

    ReplyDelete
  41. ////paramasivam said...
    Good evening sir,
    Thanks for ur 8th lessons sir. Lessons are very nice. But i feel very bad due to my 8th house has saturn and moon combination. I will get dire disease is it not This all our fate. we cannot change it.
    sundari/////

    நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும் அதைப் பாருங்கள் சகோதரி. பாரபட்சமில்லாமல், அனைவருக்கும் 337தானே வரம்!

    ReplyDelete
  42. /////minorwall said...
    நல்லது..நன்றி..கே.எம்.ஆர். சாரை ரொம்ப நாளாக் காணோம்..கூட்டிட்டு வாங்க..but இங்கே குதிரைக் கறி அவியல், பச்சை மீன் துவையல், பன்றிக்கறி பொறியல், மாட்டுக்கறி மசியல் என்று நல்ல சைவ சாப்பாடு கிடைக்கும். .. நூடுல்ஸ் கேட்டால் அதிலேயும் பச்சைமுட்டையை உடைச்சு ஊத்திக் கொடுப்பார்கள்.. நம்ம ஊர் சரவணா பவன் எல்லாம் இங்கே இல்லை..north indian மக்கள்தான் சில இடங்களில் naan with our mutton ,chicken என்று கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள்..
    அதுவும் நம்ம செட்டிநாடு வகையறா taste நினைக்கவே முடியாது.. மொத்தத்தில் நான் இங்கே ஓரளவு சைவம்தான்...(மேற்கண்ட சமையல் சாப்பிட முடியாததால்..)
    தேடி கண்டுபிடித்துதான் இந்திய உணவுக்கு செல்ல வேண்டுமே தவிர அதிகபடியான ஜப்பானீஸ் உணவகங்கள் இப்படித்தான்...ரெண்டு பெரும் வாங்க..ஒரு வெட்டு வெட்டலாம்..?//////

    ஐயா மைனர் சாமி, வேண்டவே வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள்தான் இந்தப் புண்ணிய பூமியிலேயே அதைக் கழித்துவிடுகிறோம். தயிர் சாதம், ஊறுகாய், தினத்தந்தி பேப்பர், நாதஸ்வரம் போன்று ஒரு சீரியல் இருந்தால் போதும். எங்களுக்கு அதற்குமேல் ஆசை எதுவும் இல்லை! தேவைகளும் இல்லை!

    ReplyDelete
  43. ///minorwall said...
    ///paramasivam said...
    வணக்கம் சார்,
    நானு என்னையும் கூட்டிட்டு போங்க சார். வர வர தாங்கள்
    எனனை எதிலும் சேர்த்து கொள்ள்வில்லை.
    சுந்தரி///
    சுந்தரிம்மாவுக்கு குதிரைகறின்னா ரொம்ப இஷ்டம் போலே..வாங்க..நீங்களும்../////

    அடுத்தடுத்து உள்ள பின்னூட்டங்களை அவர்களும் படித்திருப்பார்கள். வர ஆசைப்படுவது சந்தேகமே மைனர்!

    ReplyDelete
  44. பாடம் அருமை, ஐயா. எட்டில் ராகு இருந்தாலும் அது எந்த ராசியில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டுமல்லவா? உதா. கடகத்தில் அதன் பலன் எடுபடாது அல்லவா? சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள்.
    நன்றி!

    ReplyDelete
  45. அய்யா வணக்கம் !
    எட்டில் மாந்தி வந்தமர்ந்தால் என்ன பலன் ?
    விளக்கவும் !

    ReplyDelete
  46. Vanakam sir,
    Eighth house padam is very good sir, but if saturn is exalted in eighth house, then life vanthu easya pokuma?

    Thanks
    Thanuja

    ReplyDelete
  47. ////Subbaraman said...
    பாடம் அருமை, ஐயா. எட்டில் ராகு இருந்தாலும் அது எந்த ராசியில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டுமல்லவா? உதா. கடகத்தில் அதன் பலன் எடுபடாது அல்லவா? சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள்.
    நன்றி!/////

    ஓ, உங்களுக்குத் தனுசு லக்கினம். எட்டாம் வீடான கடகத்தில், ராகு. அவ்வளவுதானே? கடகம் ராகுவிற்கு மூலத்திரிகோண ராசி ஒன்றும் செய்யாது என்று நினைக்கிறீகளா? அப்படியே வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருங்கள்.

    ஒரே பெண்தான், பெண், மனைவி, தாய், மருமகள், நாத்தினார், மாமியார் என்று வாழ்க்கைச் சக்கரத்தில் பல அவதாரங்கள் எடுப்பாள். எல்லா அவதாரத்திலும் அவளுடைய குணம் மற்றும் செயல்பாடுகள் ஒன்றுபோல்
    இருக்குமா சொல்லுங்கள்?

    ReplyDelete
  48. //////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    அய்யா வணக்கம் !
    எட்டில் மாந்தி வந்தமர்ந்தால் என்ன பலன் ?
    விளக்கவும்!/////////

    மாந்தி தான் இருக்கும் வீட்டில், அந்த வீட்டின் பலன்களைத் தீயதாக்கும். எட்டில் இருக்கும் மாந்தி ஆயுளில் கையை வைக்காது. மற்றபடி மாந்தியால் நன்மையான பலன்கள் இருக்காது.

    ReplyDelete
  49. ////sundarakannan said...
    ayya,
    Mesha lagnam kadaka raasi--- 8th place(sukran},
    Navamsam --- Mesha lagnam --8 th place(sukran)
    I have varthagothama laknam ,varthagothama sukran and vathagothama Guru(5th place for raasi and lagnam)
    But I am not wealthy.
    Thanks,
    SundaraKannan/////

    ஒரு வீட்டை மட்டும் வைத்துப் பலனைப் பார்த்தால் எப்படி? 2 & 11 ஆம் வீட்டையும் பாருங்கள். பைப்பும், அண்டாவும் சரியாக உள்ளதா பாருங்கள்.

    ReplyDelete
  50. /////Thanuja said...
    Vanakam sir,
    Eighth house padam is very good sir, but if saturn is exalted in eighth house, then life vanthu easya pokuma?
    Thanks
    Thanuja//////

    உங்களுக்கு அப்படி இருக்கிறதா? அது ஆயுள் ஸ்தானமல்லவா? செஞ்சுரி அடிப்பீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. ///எட்டாம் இடத்தில் புதன் வந்து அமர்வது சிறப்பான அமைப்பு.///ஐயா,மறைந்த புதன் நிறைந்த பலன் என்பார்களே அதுவோ?

    ReplyDelete
  52. சார்..எட்டாம் இடம் காலியாக எந்த கிரகமும் இல்லாம இருந்தால் என்ன பலன்.. அதே மாதிரி மற்ற இடங்களில் காலியாக இருந்தால் என்ன பலன்...விவரியுங்கள் சார்.

    ReplyDelete
  53. Sir, Eagerly wating 8th house was Superb.
    8th house Rah in thanu , Guru in 9th house neecham, 8th house with 30paral,in this scenario Rahu dasa eppadi erukum ?
    தெங்கபொட்டு அடிப்பாரா ? படுக்கபொட்டு அடிப்பாரா ?

    ReplyDelete
  54. ////தியாகராஜன் said...
    ///எட்டாம் இடத்தில் புதன் வந்து அமர்வது சிறப்பான அமைப்பு.///ஐயா,மறைந்த புதன் நிறைந்த பலன் என்பார்களே அதுவோ?/////

    நீங்கள் அப்படியே வைத்துக்கொள்ளலாம் தியாகராஜன்!

    ReplyDelete
  55. /////கண்ணகி said...
    சார்..எட்டாம் இடம் காலியாக எந்த கிரகமும் இல்லாம இருந்தால் என்ன பலன்.. அதே மாதிரி மற்ற இடங்களில் காலியாக இருந்தால் என்ன பலன்...விவரியுங்கள் சார்./////

    காலியாக இருக்கும் ராசியின் அதிபதி எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். முதலில் பழைய பாடங்களை எல்லாம் வரிசையாகப் படியுங்கள் சகோதரி!

    ReplyDelete
  56. /////சிங்கைசூரி said...
    Sir, Eagerly wating 8th house was Superb.
    8th house Rah in thanu , Guru in 9th house neecham, 8th house with 30paral,in this scenario Rahu dasa eppadi erukum ?
    தொங்கப்போட்டு அடிப்பாரா? படுக்கபொட்டு அடிப்பாரா? ////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை. பிறகு பார்க்கலாம்!

    ReplyDelete
  57. "தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும்"

    I absolutely know your time constraints, thats why i joined special class, but nows i dont receive any special class emails, i have send you email regarding whther still classes are going ? , but till now i haven't received any reply from you sir, sorry to write this here - atleast matter will come to your notice.

    ReplyDelete
  58. ////சிங்கைசூரி said...
    "தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும்"
    I absolutely know your time constraints, thats why i joined special class, but nows i dont receive any special class emails, i have send you email regarding whther still classes are going ? , but till now i haven't received any reply from you sir, sorry to write this here - atleast matter will come to your notice. ///////

    நடுவில் பணிச்சுமை காரணமாகத் தொய்வாகிவிட்டது. கடந்த 3 நாட்களாக மீண்டும் பாடங்கள் அனுப்பட்டுள்ளன. உங்களுக்கும் கிடைத்திருக்குமே?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com