மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

22.9.07

சிங்கைக் கண்ணனாருக்காக ஒரு பதிவு!

சிங்கைக் கண்ணனாருக்காக ஒரு பதிவு!

நேற்றைய பதிவிற்கு அன்பர் சிங்கைக்
கோவி கண்ணனார் அவர்கள் எழுப்பிய
வினாக்களுக்கு உரிய பதில்கள் -
நீண்டதாக இருந்த காரணத்தால் தனிப் பதிவாக:

////கோவியார் அவர்கள் சொல்லியது:
பெரும்பாலும் விதியை 'மனு'தாரர்கள்
நம்புகிறார்களோ இல்லையோ, தாழ்த்தப்
பட்டவனை தாழ்த்தியே வைத்திருப்பதற்கு
விதியை காரணம் காட்டுவார்கள்.
எல்லாம் விதிக்கப்பட்டது என்பார்கள்.
விதி உண்மையோ பொய்யோ ஆனால்
சில சமூகங்களின் வயிற்றுப்பிழைப்
பிற்காக விதி நன்றாக செயலாற்றுகிறது.////

எனக்குத் தெரிந்த மனுதாரர்கள் எல்லாம்
ரேஷன்கார்டிற்காகத் தாலூகா ஆபீஸ்களில்
மனுக்கொடுப்பவர்கள்தான். நீங்கள் யாரைச்
சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை!

எல்லோருக்கும் ஒவ்வொரு திறமையைக்
கடவுள் கொடுத்துள்ளார்.
யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை.

இறைவன் படைப்பில் அனைவரும் சமம்.

ஒரு ஆரூர்தாஸ், ஒரு பீம்சிங், ஒரு எம்.எஸ்,வி,
ஒரு செளந்தரராஜன், ஒரு சுசீலா அம்மையார்,
ஒரு கவியரசர், ஒரு சிவாஜி, ஒரு சாவித்திரி
அம்மையார் போன்ற பல திறமையயளர்கள்
சேர்ந்து பணியாற்றியதால் தான் பாசமலர்
என்ற ஒரு அற்புதமான திரைப்படம் கிடைத்தது.
அதுபோல பல திறமையாளர்கள் சேர்ந்ததுதான்
ஒரு வலிமையான தேசம்.

இந்தியாவை மேலும் வலிமைப்
படுத்துவோம் - கைகொடுங்கள்!

கவியரசர் கண்ணதாசன் அவர்களின்
பாடலைப் பாருங்கள்:

தலைப்பு: இனமேது?
"சுடுகாட் டெலும்புகளைச்
சோதித்துப் பார்த்ததிலே
வடநாட் டெலும்பென்று
வந்தஎலும் பில்லையடி!
தென்னாட்ட் டெலும்பென்று
தெரிந்த எலும் பில்லையடி!
நம்நாட் டெலும்பென்றும்
எழுதிவைக்க வில்லையடி!
ஒருநாட்டு மக்களுக்குள்
ஓராயிரம் பிரிவை
எரியூட்ட வில்லையெனில்
எந்நாளும் துன்பமடி!"

ஓராயிரம் பிரிவை ஏற்படுத்தியது
கடவுளா? சக மனிதன்தானே?

ஏற்படுத்தியவர்களூம், ஏற்றுக் கொண்ட
வர்களும் அடிபட்டுத் திருந்தட்டும் என்று
கடவுள் விட்டு வைத்திருக்கலாம்.

ரோடு போடுவதைப்போல, குடிதண்ணீர்
வழங்குவதைப்போல சமூக நீதிகளும்
அரசின் வேலைதான். கடவுளின் வேலையல்ல!

அதை (தமிழகத்தைப் பொறுதவரை) காமராஜர்
காலத்தில் இருந்து இன்று வரை (52 ஆண்டுகளாக)
எல்லா ஆட்சியாளர்களும் செய்து கொண்டுதான்
இருக்கிறார்கள்.
இல்லையென்று சொல்லுங்கள்
பார்ப்போம்

அதற்கும் கவியரசரின் பாடல் உள்ளது:

"ஆண்டான் அடிமை மேலோர் கீழோர்
என்பது மாறாதோ?
அரசனில்லாமல் ஜனங்கள் ஆளும்
காலமும் வாராதோ?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு!

- படம் : பச்சை விளக்கு - வருடம் 1964

1964ம் வருடமே - அதாவது நீங்கள் பிறக்கு
முன்பே கண்ணதாசன் நிலைமையை
விளக்கிப் பாட்டெழுதி விட்டார்.

நீங்கள்தான் இன்னமும் எதையோ நினைத்துக்
கொண்டும், நாட்டு நடப்பு அறியாமலேயே
எதையோ பிடித்துத் தொங்கிக் கொண்டும்,
முனுமுனுத்துக் கொண்டும் இருக்கிறீர்கள்.

உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்.
காட்சிகள் தெரியும்: கவலைகள் மறையும்!

இது ஒத்தடம் அல்ல: உண்மை!

விதி வலியது. விதியைவைத்து யாரும்
வயிற்றுப் பிழைப்பு நடத்த முடியாது
மாறாக விதிதான் பலபேரை வயிற்றுப்
பசிக்காகத் தட்டுடன் கோவில் வாசல்களிலும்,
தேவாலய வாசல்களிலும்,
தெருவிலும் நிறுத்தியிருக்கிறது!
இது அவர்கள் செய்த கர்மவினையின் பலன்

நீங்கள் சிங்கையில் இருப்பதனால் உங்கள்
கண்ணில் அவைகள் பட வாய்ப்பில்லை!
அடுதமுறை வரும்போது சென்று பாருங்கள்

///உங்கள் கருத்துக்களை மறுக்க வேண்டும்
என்ற நோக்கம் இல்லை. எனது கருத்தை
நான் சொல்வதற்கு உங்கள் வகுப்பில்
தடையில்லை என்பதால் சொன்னேன். :)///

ஆகா, தாராளமாகச் சொல்லலாம்!

தவறான கருத்தென்றால் ஆசிரியர் என்று
பாராமல் நீங்கள் தட்டிக் கேட்கலாம்
(அடித்து அல்ல - அடிதாங்கும் வயசை
அடியேன் தாண்டி விட்டேன்)

வகுப்பில் நீங்கள் முதல் வரிசை மாணவர்.
ஆகவே உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு
- வாத்தியார் சீட்டில் குண்டூசி வைப்பதைத் தவிர!

//விதிப்படியே எல்லாம் நடக்கிறதென்றால்
சோதிடம் பார்த்து பலன் அறிந்து கொள்வதில் என்ன பலன் ?//

ஜோதிடம் பொய் என்றே வைத்துக்
கொள்வோம் - ஒரு வருடம் கழித்து உனக்கு
நல்ல காலம் வருகிறது என்றால் - அந்த ஒரு
வருடமாவது கேட்டுவிட்டுச்
செல்பவன்
நிம்மதியாகத் தூங்குவானே - அது குறைந்த
பட்சப் பலன். அதுகூடக்

கிடைக்கக்கூடாது என்கிறீர்களா?

///விதிப்படியே எல்லாம் நடக்கிறது என்று
உறுதியாக நம்பினால் கடவுள் நம்பிக்கையால்
அதை மாற்ற முடியாது என்றும் சொல்கிறீர்கள்.
ஆனால் அது மனத்திடம் தருவதற்கென்று
ஒத்தடமும் கொடுக்கிறீர்கள். விதிகள் வகுத்தது
யார் ? என்ற கேள்வியில் கடவுளை புகுத்தி

விடைகாண முடியும். அதே சமயத்தில் விதிப்படி
என்றால் சுனாமி, சோகங்களும்,

கும்பகோணம் குழந்தைகள் சாம்பலுக்கும்
விதிமேல் பலியை போட்டு விடலாம் ?
ஆனால் விதியை படைத்தவன் இறைவன்
என்று நம்பினால் கடவுள் கருணையற்றவ
ராகத்தானே தெரிகிறார். நெருப்பு எதையும்
சுடும் அதற்கு குழந்தையோ, கண் இல்லாத
வரோ தெரியாது என்பது தானே இயற்பியல்
விதி ? கத்தி எதையும் கைவிரலையும் வெட்டும்,
கழுத்தையும் வெட்டும் அதுவும்

இயற்பியல் விதி. இந்த இயற்பியலைப்
போல்தான் விதிகள் என்று நம்பப்படுவது

இயக்கங்கள் அனைத்தும் சார்பு நிலை
தத்துவத்தில் இயங்குகிறது. நமது

மனதையும், முன்நிகழ்வுகளையும் வைத்து
இயக்கங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது

இது நன்மை, இது தீமை என்கிறோம்.
ஆனால் அவை யாவும் வெறும் நிகழ்வு

மட்டுமே. நன்மை / தீமை என்ற பகுப்பில்
பார்பதால் நன்மைக்கு சாதகமான

பின்னனியாக இறைநம்பிக்கையும்,
தீமைக்க்கு காரணமாக வினையையும்

வசதியாக வைத்துக் கொள்கிறோம்.:))///

விதியை யாரும் வகுப்பதில்லை.
It is an auto process - self eveolving system
என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
வினை விதத்தவன் வினை அறுப்பான்.
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
என்று சொல்கிறோம் இல்லையா - அப்படிப்
பட்ட ஒழுங்குமுறை என்று

வைத்துக் கொள்ளூங்களேன். அது
செயல்களை வைத்துப் பலன் தரும்

ஒரு ஒழுங்குமுறை என்றும் வைத்துக் கொள்ளலாம்

தரையைத் துழைத்து கோடிக்கணக்கான
பேரல்கள் அளவில் தண்ணீரையும், பெட்ரோலிய
எண்ணையையும் மனிதன்

உறிஞ்சுகிறான். 80% சதவிகித மரங்களை
வெட்டிப் பயன்படுத்திவிட்டான்.

அதனால் தான் இயற்கைச் சீற்றங்கள்.
அதற்குக் கடவுள் என்ன செய்வார் பாவம்?


இந்த உடம்பு கடவுள் கொடுத்ததுதான்
ஆத்மா குடியிருக்க! அந்த உடம்பை ஒழுங்காக
வைத்திருக்கிறோமா?
ஜானிவாக்கர் விஸ்கி,
பட்டை சாராயம், பான்பராக், அபின், கஞ்சா,
சிக்கன் மட்டன், தந்தூரி
புரோட்டாவென
கண்ட கண்ட கழுதைகளையெல்லாம் உள்ளே
தள்ளிப்
பாழ்படுத்திவைத்திருக்கிறோம்.

அதற்கும் கடவுள்தான் காரணமா?

கவிஞர் திரு.வரமுத்து சொன்னார்:
40 வயதுவரை நாம் சாப்பிட உணவு:
40ற்கு மேல நம்மையே சாப்பிடும் அந்த உணவு!

பாதிப்பேர் முதலில் பல்லையே ஒழுங்காக
விளக்குவதில்லை. கடவுள் என்ன செய்வார்
பாவம்? உலகில் உள்ள 600 கோடி பேர்களுக்கும்
ஆள்வைத்து அவரா பல்லை
விளக்கிவிட முடியும்?

நன்றும் தீதும் பிறர்தர வாரா!

எல்லா புற அவலங்களுக்கும் நாமே காரணம்.
அதன் பலனை நாமேதான் அனுபவிக்க வேண்டும்.

நான்காவது மாடியில் குறுகிய இடத்தில்,
ஓலைக் கூரையின் கீழ் பள்ளிக்கூடத்தை
வைத்து நடத்தியது யார்?

அனுமதித்தது யார்?

ஆடும்வரை மனிதன் ஆடுவான்
அடிபட்டபின் கடவுளைக் கூப்பிடுவான்.
அல்லது கடவுளின்மேல் குற்றம் சுமத்துவான்

நாம் செய்யும் தவறுகளுக்கு அவர்
எப்படிப் பொறுப்பாவார்?

யோசித்துப் பார்த்துவிட்டு
(வீட்டுப் பாடங்களையும் - அதாவது
Home Work ஐ எழுதிவிட்டு)
நாளை வகுப்பிற்கு வாருங்கள்!

நட்புடன்
வாத்தியார்

11 comments:

வடுவூர் குமார் said...

அப்பாடியோவ்!!!

SP.VR. SUBBIAH said...

'அப்பாடியோவ்' என்று சொல்லாதீர்கள் வடுவூராரே - அம்மாடியோவ்' என்று சொல்லுங்கள்!
நாமெல்லாம் தமிழர்கள்.
தாயாரால் வளர்க்கப்பெற்றவர்கள்
அதனால் இன்மேல் எங்காவது சொன்னால்
அம்மாடியோவ்' என்றே சொல்லுங்கள்.
இது வேண்டுகோள்!

கோவி.கண்ணன் said...

//யோசித்துப் பார்த்துவிட்டு
(வீட்டுப் பாடங்களையும் - அதாவது
Home Work ஐ எழுதிவிட்டு)
நாளை வகுப்பிற்கு வாருங்கள்! //

யோசித்து யோசித்து பார்த்தாலூம். நம்பிக்கைகள் என்ற புதிர்களுக்கான விடையை தேடும் போது கிடைக்காமல் போனால் மேலான சக்தி இருப்பது என்ற முன்னோர் சொன்னதை ஒப்புக் கொண்டு வழக்கமான வேலைகளைப் பார்பது ஒருவகை. அதை தவறென்றே சொல்ல மாட்டேன். அந்த தேடலில் நேரம் போவதைத் தவிர ஒன்றும் ஆவதில்லை என்பதை பலரும் உணர்ந்திருப்பதாலேயே இறைவன் இருக்கிறாரா ? என்ற ஆராய்ச்ச்சியை விட இருக்கும் என்று சொல்லிவிட்டால் இறை சாபத்திற்கு ஆளாக மாட்டோம் என்று சென்று கொண்டே இருப்பது ஒருவகைதான் 99 விழுக்காட்டு நம்பிக்கையாளர்கள் இந்த வகைதான். மீதம் 1 விழுக்காட்டினர் இவை உண்மையா ? பொய்யா ? என்று அறிந்து கொள்ள முற்படுவர்.

//தரையைத் துழைத்து கோடிக்கணக்கான
பேரல்கள் அளவில் தண்ணீரையும், பெட்ரோலிய
எண்ணையையும் மனிதன்
உறிஞ்சுகிறான். 80% சதவிகித மரங்களை
வெட்டிப் பயன்படுத்திவிட்டான்.
அதனால் தான் இயற்கைச் சீற்றங்கள்.
அதற்குக் கடவுள் என்ன செய்வார் பாவம்?// உங்கள் கூற்றுப்படி இதுவும் விதிப்படி நடப்பது தானே ?

விதியைக் காரணம் காட்டிவிட்டு சென்றால் மனிதனால் செயல்படாமல் போய்விடும். மனிதனால் பறக்க முடியாது என்பது விதி. ஆனால் அதை மீறித்தானே விமானங்களில் பறக்கிறோம். இதுவும் ஒரு விதி என்று வசதியாக சொல்லிவிடாதீர்கள். :)

//இந்த உடம்பு கடவுள் கொடுத்ததுதான்
ஆத்மா குடியிருக்க! அந்த உடம்பை ஒழுங்காக
வைத்திருக்கிறோமா? ஜானிவாக்கர் விஸ்கி,
பட்டை சாராயம், பான்பராக், அபின், கஞ்சா,
சிக்கன் மட்டன், தந்தூரி புரோட்டாவென
கண்ட கண்ட கழுதைகளையெல்லாம் உள்ளே
தள்ளிப் பாழ்படுத்திவைத்திருக்கிறோம்.// உங்கள் கூற்றுப்படி தனிஒருவன் தானாகவே விரும்பி செய்யவில்லை. விதியே அவனை வழிநடத்துகிறது / கெட்டுப் போக வைக்கிறது. என்று சொல்லத் துணியும் போது. இதை அபத்தம் என்று சொல்ல முடியும். :)) அப்படி சொன்னால் அதையும் விதியே என்று ஏற்றுக் கொண்டுதானே செல்ல முடியும். :)

தலித்துக்களின் தாழ்வு நிலைக்கு விதி என்று காரணம் காட்டினால், இன்றைக்கு உயர்சாதியினருக்கு எதிராக நடக்கும் பல்வேறு மனக்கசப்புகளும், போராட்டங்களும் விதி வகுத்தது அல்லவா ? இதை விதியை நம்புவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ?

//ஏற்படுத்தியவர்களூம், ஏற்றுக் கொண்ட
வர்களும் அடிபட்டுத் திருந்தட்டும் என்று
கடவுள் விட்டு வைத்திருக்கலாம். // முன்பு அடிவாங்கியவர்கள் இன்று திருப்பி தாக்குவதை ஏன் விதி என்று கொள்ள முடியவில்லை.
நடப்பதெல்லாம் நம்கையில் இல்லை என்பதையும், நாம் நினைப்பது எல்லாம் அப்படியே நடக்கும், நடத்தமுடியும் என்று சொல்வதற்கு இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும். நடந்தவற்றில் விரும்பத்தாகதவைகளை விதி என்று அரைமனதுடன் ஏற்று தேற்றிக் கொள்வதற்கு வேண்டுமானால் 'விதி' என்ற கால சொல் பயன்படலாம்.

ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு பேருந்தில் பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டதில் ஒருவர் மட்டுமே காயம் எதுவுமின்றி உயிர்தப்புகிறார். அவர் ஆத்திகராக இருந்தால் உடனே பகவானுக்கு நன்றி சொல்லிவிடுவார், நடமாடும் கடவுள் / இறைவன் தன்னை காப்பாற்றியதாகவும் அளந்துவிடுவார் . ஆனால் அதே பேருந்தில் அவருடைய குடும்பமும் பயணம் செய்து இருந்தால் பகவானுக்கு நன்றி சொல்ல அவரால் முடியுமா ?. இரண்டாவது சொன்னதில் எல்லாம் விதி என்று நொந்து கொள்ளத்தானே முடியும் ?

சுப்பையா ஐயா,
நல்ல விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். மாற்றுக் கருத்து இருந்தாலும் உங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வினை விதைத்தால் வினை தினை விதைத்தால் தினை.
இது இயற்கை. இதை மீறும்போது தவறுகள் நடக்கின்றன.
அழிவு நெருங்குகிறது.

விவரமாக பதிவு கொடுத்திருக்கிறீர்கள்.
மீண்டும் மீண்டும் படித்துக் கொள்ளுகிறேன். மிக்க நன்றி.

SP.VR. SUBBIAH said...

கவலைப்படாதீர்கள் கண்ணன்!

வாழ்க்கையில் கவலை இருக்கலாம்
ஆனால் கவலையே வாழ்க்கையென்றாகி விடக்கூடாது!

தலித்துக்களில் இன்று எந்தனையோ பேர் காவல்துறையிலும் வருவாய்த்துறையிலும், வங்கிகளிலும், மற்றும் பிற அரசுத் துறைகளிலும்
பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். அரசின் கல்வி ஒதுக்கீடு திட்டத்தால் ஆயிரக்கான தலித் இளைஞர்கள் உயர் கல்வி பயின்று கொண்டிருக்கின்றார்கள்

மேலும் இன்று பன்னாட்டு நிறுவனங்களில் வேல பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்களால் கலப்புத் திருமணம் அசுர வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது

இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் ஜாதிகள் ஒழிந்துவிடும். அது உறுதி

அதற்குப் பிறகு அமெரிக்க கலாச்சாரம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டு விடும்
அதைச் சரிபன்ன -அந்தக் காலகட்டத்தில் - வயதாகிவிட்ட உங்களைப் போன்ற
அன்பர்கள் குரல் கொடுக்கத் துவங்கிவிடலாம்

விதி விடாது.சனியும் விடாது. நமக்குத் தொடர்ந்து விதம் விதமான பிரச்சினைகள் இருந்து கொண்டேதான் இருக்கும்

நம்மால் முடிந்தது ஓரளவே - எல்லாம் அவன் செயல் என்று இருந்தால்
மகிழ்ச்சியாக இருக்கலாம் - எப்போதும்!

நான் அப்படித்தான் இருக்கிறேன்
அதுதான் வழி என்று நீங்களும் ஒரு நாள் இருக்கத்தான் போகிறீர்கள்

எதற்கும் இந்தப் பதிவைக் பிரதியெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
25 அண்டுகள் கழித்து ' அன்றே சொன்னானடா அந்த வாத்தி (யார்)'
என்று ஆறுதல் கொள்ள அது உதவும்!

சம்பவாமி யுகே யுகே!

SP.VR. SUBBIAH said...

///திருமதி வல்லிசிம்ஹன் அவர்கள் சொல்லியது:வினை விதைத்தால் வினை தினை விதைத்தால் தினை.
இது இயற்கை. இதை மீறும்போது தவறுகள் நடக்கின்றன.
அழிவு நெருங்குகிறது.
விவரமாக பதிவு கொடுத்திருக்கிறீர்கள்.
மீண்டும் மீண்டும் படித்துக் கொள்ளுகிறேன். மிக்க நன்றி.///

சிறப்பாகப் பதிவை உள்வாங்கிக் கொண்டிருக்கி்றீர்கள் சகோதரி
நன்றி உரித்தாகுக!

விக்னேஷ்வரன் அடைக்கலம் said...

நல்ல பதிவு. அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

விதியை மதியால் வெல்லலாம் என்றுதான் கூறியுள்ளார்கள்... அதாவது வருவதை எதிர்க் கொண்டு குறைத்துக் கொள்ளலாம் அல்லது தக்கபடி அமைத்துக் கொள்ளலாம் அவ்வளவே....

விதியை மதியால் மாற்ற முடியாது அன்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சரிதானே ஐயா.

தொடருங்கள்..

நன்றி

விக்னேஸ்

விக்னேஷ்வரன் அடைக்கலம் said...

////நான் திருச்சி - சென்னை வழித்தடத்தில் பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்
நீங்கள் திருநெல்வேலிக்கு டிக்கெட் கேட்கிறீர்கள்?

சற்றுப் பொறுங்கள். சில பிரச்சினைகள் காரணமாக ஜோதிடப் பதிவை 32.அத்தியாயங்களுடன் நிறுத்தி வைத்திருக்கிறேன். ஆறு அல்லது எட்டு வாரங்களுக்குப் பின் அந்தத் தொடரை மீண்டும் ஓட்டும்போது உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். சரிதானே நண்பரே?////


கண்டிப்பாக..... ஆனால் நீங்கள் கூறிய தூர அளவு எனக்கு தெரியவில்லை. சென்னையிலிருந்து நிருநெல்வேளி அதிக தூரமோ? பரவாயில்லை. காத்திருக்கிறேன். உங்கள் சேவையை தொடருங்கள். நன்றி

கோணி ஊசி விற்பவன் said...

//வாத்தியார் சீட்டில் குண்டூசி வைப்பதைத் தவிர!//

உங்க ஸ்டூடண்டு ஒருத்தரு நம்ம கடைக்கு வந்து கூர்மையா ஒரு கோணி ஊசி வேணும்னு கேட்டுட்டுப் போனாரு! அவருதான் கோவி.கண்ணனா?

SP.VR. SUBBIAH said...

இல்லை - அவர்பெயர்
நாமக்கல் சிபி!

whoami said...

உலகில் எந்த ஒரு கருத்திற்கும் எதிர்மறையான கருத்திறுப்பது ஏற்றுகொள்ள வேண்டியதே. God's Debris - A Thought Experiment by Scot Adams ebook. மிக நல்ல புத்தகம், இந்த் விசயத்தின் இன்னும் கொஞ்சம் வலு சேர்க்கும். கூகுள் செய்யுங்கள். படித்துப் பாருங்கள்.