மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

29.9.07

செல்லாவே வரலாமா? பதிலைத் தரலாமா?

செல்லாவே வரலாமா? கேள்விக்குப் பதிலைத் தரலாமா?

தேனினும் இனிய, மலரினும் மெல்லிய எனது
வகுப்புக் கண்மணிகள் அனைவருக்கும்,
வாத்தியாரின் காலை வணக்கங்கள்!

என் மதிப்பை அதிகம் பெற்றவறான நம் வகுப்பு
மாணவர் செல்லா அவர்கள், நேற்று நடத்திய
பாடத்தில் ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்துக்
கொள்ளூம் முகமாகப் போஸ்டர் அடித்து
ஒட்டியிருக்கிறார். (அதாவது தனிப் பதிவு
போட்டிருக்கிறார்) அதை அவர் வகுப்பறையிலே
கேட்டிருக்கலாம். இருந்தாலும் பரவயில்லை!
பதில்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

சிவப்பு வண்ண எழுத்துக்கள் கேள்விகளாகும்
கருப்பு வண்ண எழுத்துக்கள் பதில்களாகும்

1. * கடவுள் உண்டா இல்லையா? ….

பதிவை மீண்டும் படிக்கவும். பதில் அதில்
உள்ளது! இருந்தாலும் என் வகுப்பு மாணவராகிய
உங்களுக்காக மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.
கடவுள் இருக்கிறார். சர்வ நிச்சயமாக இருக்கிறார்

2. *கடவுள் என்றால் என்ன?

கடவுள் என்றால் எல்லாவற்றையும் கடந்தவர்
கடவுள் எனப்படுபவர் உலகம், உயிர் ஆகியவற்றின்
தோற்றத்துக்குக் காரணமாகக் கருதப்படும் மனித
ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாகக்
கருதப்படும் மேலான சக்தி - God

கடந்தவர் என்றால் எல்லாநிலைகளையும் தாண்டிய
நிலையில் உள்ள மேலானவர் என்று பொருள்படும்

3.* அவர் எப்படி இருப்பார்?

உருவமும் அருவமும அற்றவர் கடவுள்
உருவம் = மனிதன், விலங்கு முதலியவற்றின்
வெளித்தோற்றம்: முழு உடல் (Human, Animal)
Figure, body, shape
அருவம் = உருவம் இல்லாதது that which has no form

4. *முக்காலம் உணர்ந்தவர் என்பது உங்கள் பதிலா?

இல்லை! அதற்கும் மேலானவர் அவர்.
காலமே அவர்தான்!
He is the creator and everyting in the space
is created by him.
In short he is the everything
The space is a part of creation, space cannot be
separate from its material cause for this universe.
So what is space?
Space is the Lord.
Time is also the Lord

5. மற்ற உதிரிக்கேள்விகளில் மூன்றில் இரண்டு
நீங்கள் பார்த்த திரைப்படத்தை வைத்துக்
கேட்டிருக்கின்றீர்கள். அதற்குரிய விளக்கங்களை
அப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியவர்
களைக் கேட்பதுதான் உசிதமானது. அவர்களையே
கேளுங்கள். (எனக்காகவும் சேர்த்துக் கேளுங்கள். )

(* திருவிளையாடல்கள்: “மக்களை சோதிப்பது
மற்றும் சோதனைக்கு உள்ளாக்குவது இதில்எல்லாம்
சிறந்தவர் நீங்கள் தான்” என்று பரம சிவனைப்
பார்த்து படத்தில் கேட்பார் பார்வதி!
முக்காலத்தையும் அறிந்த சிவனுக்கு சோதனை
ஏன் தேவைப் படுகிறது? சந்தேகம் தானே
சோதனைகளின் தாய்! அப்படியானால்
அவருக்கு முக்கா(லு) லம் தெரியாதா முழுவதும்
தெரியாதா? இந்த லட்சனத்தில் “நல்லவங்களை
ஆண்டவன் சோதிப்பான் … ஆன கைவிட மாட்டான்
…என்று வெட்டிச் சவடால்கள் வேறு. நம்மை
மாதிரி வெங்காயங்களை சோதித்துதான் அறியும்
நிலைமை / கொடுமை ஆண்டவனுக்கு ஏன் ஏற்பட்டது?)

6.* அடித்துக் கொண்டு சாவார்கள் என்ற விசயம்
தெரிந்தே தான் இவ்வுலகைப் படைத்தாரா?

யார் சொன்னது மதங்களை அவர் படைத்தார் என்று?
Only one - That is God கடவுள் ஒருவர்தான் என்று
பதிவில் சொல்லியிருக்கிறேன். மீண்டும் படியுங்கள்

அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுபோல
"ஒன்றே குலம் - ஒருவனே தேவன்" என்பதுதான்
என்னுடைய சித்தாந்தம். அதைத்தான் பதிவிலும்
சொல்லியிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை
பதிவைப்
படித்துப் பாருங்கள்.

மதங்களைப் பற்றிய உங்கடைய சந்தேகங்களுக்கு
அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களையே கேளுங்கள்.
மதங்களைப் பற்றிப் பேசும் உரிமையை
யாரும் எனக்குத் தரவில்லை.
அது என்னுடைய வேலையும் அல்ல!

7.* எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றை(!)
ஏன் நம்பச் சொல்கிறார்கள்? அதன் அவசியம்
என்ன! சிந்தனை செய் மனமே!

"எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றை" என்று
நீங்களே குறிப்பிட்டு என் வேலையைச் சற்று
எளிதாக்கி விட்டீர்கள்!

உங்களை யார் நம்பச் சொன்னது?
எதை நம்பச்சொன்னது?
உங்களை நம்பச்சொல்வதற்கு யாருக்கும்
அதிகாரமில்லை. அவசியமுமில்லை.
உங்களை நம்பவைக்க வேண்டிய
அவசியம் என்ன?
அதனால் கிடைக்கப் போகும்
பலன் என்ன?
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

8* ஒரு மகாசக்தியா கடவுள்? தன் பக்தனையே
நம்பாத கடவுள் தன்னை சாதாரண மனிதர்கள்
நம்ப வேண்டும் என்று சொல்வது .. அவரது
மரியாதையைக் குறைக்கும் செயலல்லவா!?

கடவுள் எப்போது தன்னை நம்பும்படி சொன்னார்?
அல்லது கேட்டுக்கொண்டார்?
நீங்களும் நானும் நம்புவதால் அவருக்கு
என்ன ஆகப் போகிறது?
உங்களிடமும், என்னிடமும் மரியாதை குறைவதால்
அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது?
ஆதாலால் இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல
கவலையை விடுங்கள்!

9* எந்த சக்தியும் இல்லாத என்னிடம் ” எப்படி
சாத்தானை சமாளிப்பது” என்ற புத்தகத்தை
ஏன் கொடுக்கிறார்?! போராளியாயிருக்க
வேண்டியவர் … புத்தகாசிரியர் ஆன கொடுமை
ஏன் நிகழ்ந்தது! ????

கடவுளா உங்களிடம் அதைக் கொடுத்தார்?
இல்லை அனுப்பி வைத்தாரா?
சரியாகச் சொல்லுங்கள்.
அந்தப் புத்தகத்தை படித்துப் பார்க்காமல்
நான் எப்படிப் பதில் சொல்வது?
ஆகவே இந்தக் கேள்வியை சாய்ஸ்ஸில்
விட்டு விடுகிறேன். அது எந்த அச்சகத்தில்
அடிக்கப் பெற்றது என்று பாருங்கள்
அங்கே சென்றால் இந்தக் கேள்விக்குச் சரியான
விடை கிடைக்கலாம்!

10*இவை அனைத்தும் ஆசிரமங்கள் ஆசிரமங்களாக
நான் பயணித்த போது எனக்குள் ஏற்பட்ட கேள்விகள்.

தொடர்ந்து செல்லுங்கள்.நிச்சயம் ஒரு நாள்
தெரியவரும். அதுவும் ஒரு தேடல்தான்.

இன்றைய இளைஞரெல்லாம் டாஸ்மாக் பார்களிலும்,
ரெஸ்டாரென்ட்களிலும் தங்கள் பொழுதையும்
(நேரத்தையும்) பொருளையும் (பணத்தையும்) வீணாக்கும்
போது - நீங்கள்தான் ஆசிரமங்களில் பொழுதைக்
கழித்திருக்கின்றீர்கள்.

கேட்பதற்கு சந்தோசமாகவும், பெருமையாகவும்
இருக்கிறது. Jeep it up!
என் வகுப்பின் நல்மாணவன் விருது உங்களுக்குத்தான்.
(நல்லாசிரியர் என்பதுபோல)
திருமதி பிரதிபா பாட்டீல் அவர்களுக்குப் பரிந்துரை
செய்கிறேன்.

நன்றி, வணக்கத்துடன்,
வாத்தி (யார்)
------------------------------------------------------------
திரு.செல்லா அவர்களுக்கு முடிந்தவரை பதில்
சொல்லிவிட்டேன்.

வேறு இரண்டு கேள்விகள் பின்னூட்டத்தில்
வந்துள்ளன. கீழே கொடுத்துள்ளேன்

1.ஒரு அன்பர் கேட்டுள்ளார். இருபது ஆண்டு
களுக்கு முன்பு செத்துப்போன என்னுடைய
பாட்டியை உங்கள் கடவுள் எழுப்பித்தருவாரா?
(அதாவது மீட்டுத் தருவாரா?)
அப்படித் தந்தால் கடவுளை நம்பத் தயாராக உள்ளேன்

அவராது பரவாயில்லை. பாட்டிமேல் உள்ள
பாசத்தில் தெரியாமல் கேட்டிருக்கிறார் என்று
நினைத்துக் கொள்ளலாம்
அடுத்த கேள்வியைப் பாருங்கள்

2.உணர்வது பற்றி எழுதியிருக்கிறீர்கள்.கண்களால்
பார்க்காமல் அல்லது கைகளால் தொடாமல்
ஒன்றை எப்படி உணர்வது? உதாரணத்திற்கு
காதல் உணர்வு என்கிறார்களே அது காதலி
கிடைத்த பின்பு, அவளைத் தொட்டுத் தழுவிய
பிறகுதானே ஏற்படும். ஆகவே கடவுளையும்
நான் தொட்டுத் தழுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
நான் கடவுளை நம்பத்தயார்!

இவர்கள் இருவருக்கும் என்ன பதில் சொல்வது
என்று என் சிற்றறிவிற்குத் தெரியவில்லை.
தெரிந்தவர்கள் சொல்லலாம்.

இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் உள்ளது
என்று அன்பர் ஒருவர் சென்ற வாரம் தன்னுடைய
பதிவில் குறிப்பிட்டிருந்தார்

இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
"இணையத்தில் கட்டற்ற கொடுமையும் உள்ளது!"

It is my turn now!
கேள்வி அன்பர் செல்லாவிற்கு - கடைசி வரியில்
குறிப்பிட்டுள்ளதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
மற்றவர்களும் பதில் சொல்லலாம்!

------------------------------------------------------------------

18 comments:

எழில் said...

சாதாரணமான கேள்விகள்
அருமையான பதில்கள்.

புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் நல்லதுதான்.

இந்த மாதிரியான ஆசிரியர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்!

தாமோதர் சந்துரு said...

செல்லா கேட்ட நச் கேள்விகளைப் பார்த்து
வாத்தியார் நல்லா மாட்டிக்கிட்டாருன்னு
நினைச்சேன். உங்கள் பதில் மூலம் அசத்திட்டீங்க.

மதுமிதா said...

///கருப்பு வண்ண எழுத்துக்கள் கேள்விகளாகும்
சிவப்பு வண்ண எழுத்துக்கள் பதில்களாகும்///
மாற்றி எழுதணுமோ?

ம‌ண்ணாங்க‌ட்டிக்கு இவ்வ‌ள‌வு வ‌ர‌வேற்பு இருக்குமென்று நினைக்க‌வில்லைங்க‌:-)
http://madhumithaa.blogspot.com/2007/09/blog-post_1319.htmல்

ஆசிரிய‌ருக்கும் செல்லாவுக்கும் ந‌ன்றி

✪சிந்தாநதி said...

//கண்களால்
பார்க்காமல் அல்லது கைகளால் தொடாமல்
ஒன்றை எப்படி உணர்வது?//

வலி

வலியை உணர பார்க்கவோ தொடவோ அவசியமில்லை.

உடலுக்கு மட்டுமல்ல நாவினால் சுட்ட வடு என்பது கூட மனதின் வலிதான்.

அன்பு, பாசம் என்பவை கூட அப்படித்தான்.

பக்தி என்பது நம்பிக்கையால் வருவது.
நம்பிக்கையால் உணர்வதும் பார்வை, தொடுகை அவசியமற்றது.

✪சிந்தாநதி said...

//காதல் உணர்வு என்கிறார்களே அது காதலி
கிடைத்த பின்பு, அவளைத் தொட்டுத் தழுவிய
பிறகுதானே ஏற்படும்.//

அது உடலின் காதல்! அதை காமம் என்று தான் சொல்ல வேண்டும்.

மனதின் காதல், உண்மை நட்பு போன்றவைக்கு பார்வையோ தொடுகையோ அவசியமில்லை...

இணையத்தில் நாம் காணும் எத்தனையோ நட்புகளை நேரில் கண்டதில்லையே?

SP.VR. SUBBIAH said...

///எழில் said...
சாதாரணமான கேள்விகள்
அருமையான பதில்கள்.///
இந்த மாதிரியான ஆசிரியர் கிடைப்பதற்கு
கொடுத்து வைத்திருக்கவேண்டும்!///

நான் வேறு மாதிரியாக நினைக்கிறேன்.
மீண்டும் மீண்டும் என்னை எழுதத்தூண்டும் மாணவமணிகள் அதிகமான் அளவில் வகுப்பறைக்கு வந்து போவதற்கு நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

SP.VR. SUBBIAH said...

//தாமோதர் சந்துரு said...
செல்லா கேட்ட நச் கேள்விகளைப் பார்த்து
வாத்தியார் நல்லா மாட்டிக்கிட்டாருன்னு
நினைச்சேன். உங்கள் பதில் மூலம் அசத்திட்டீங்க.///

உண்மையை எங்கு வேண்டுமென்றாலும் சொல்லலாம்.எதில் வேண்டுமென்றாலும் எழுதலாம். உண்மை எப்போதுமே அழகானது.
அழகானவை எல்லாம் எப்போதும் அசத்தத்தான் செய்யும்.

SP.VR. SUBBIAH said...

///மதுமிதா said...கருப்பு வண்ண எழுத்துக்கள் கேள்விகளாகும்
சிவப்பு வண்ண எழுத்துக்கள் பதில்களாகும்///
மாற்றி எழுதணுமோ?///

சொற்கள் இடம் மாறியுள்ளன. மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோதரி

///ம‌ண்ணாங்க‌ட்டிக்கு இவ்வ‌ள‌வு வ‌ர‌வேற்பு இருக்குமென்று நினைக்க‌வில்லைங்க‌:-)
http://madhumithaa.blogspot.com/2007/09/blog-post_1319.htmல்//

என் கண்ணில் படாமல் போய்விட்டது.அதனால் என்ன? இதோ வந்து படித்து விட்டுச் சொல்கிறேன் சகோதரி

SP.VR. SUBBIAH said...

///சிந்தாநதி said...கண்களால்
பார்க்காமல் அல்லது கைகளால் தொடாமல்
ஒன்றை எப்படி உணர்வது?//
வலி வலியை உணர பார்க்கவோ தொடவோ அவசியமில்லை.
நம்பிக்கையால் உணர்வதும் பார்வை, தொடுகை அவசியமற்றது.//
உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.ஆனால் என்னிடம் காதலைப் பற்றிக்கேட்ட அன்பருக்கு அது தெரியவில்லையே

இதைப் படித்து விட்டு அவர் மீண்டும் ஒரு கேள்வி கேட்டாலும்
கேட்பார்.

பிரசவ வலிதான் மோசமான அல்லது அதிகப்படியான வலி என்கிறார்களே
அதை பெண்கள் மட்டும்தானே உணர முடியும்? ஆண்கள் அதை எப்படி நம்புவது?
அதைவிடப் பெரியவலி உண்டா? இல்லையா? என்று கேட்டாலும் கேட்பார்

தப்பித்தவறி அவர் அப்படிக் கேட்டால் அவருக்குச் சொல்வதற்கு என்னிடம் அருமையான பதில் ஒன்று இருக்கிறது.காத்துக் கொண்டிருக்கிறேன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாத்யாரே.. இது பற்றி நான் முன்பே எழுதிய பதிவு இது http://truetamilans.blogspot.com/2007/06/100.html.

கடவுளைப் புரிந்து கொள்ள வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும். பக்தியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற சாமான்யர்களிடம் நமக்குத் தெரிந்ததைச் சொல்லிப் புரிய வைக்கலாம்.

செல்லா போன்ற நாத்திகர்களிடம் ஆத்திகத்தைப் புரிய வைப்பது முடியாத காரியம்.. விட்டுவிடுங்கள்.

அவருக்கும் அனுபவம் கிட்டட்டும். பின்பு புரியும். புரியவில்லையெனில் என்றாலும் ஒன்றும் பாதகமில்லை. இறைவன் தன்னை விரும்புபவன், வெறுப்பவன் இருவரையும் ஒன்றாகத்தான் பாவிப்பான்.

செல்லாவுக்காக நாம் வேண்டிக் கொள்வோம்.

மதுமிதா said...

///தப்பித்தவறி அவர் அப்படிக் கேட்டால் அவருக்குச் சொல்வதற்கு என்னிடம் அருமையான பதில் ஒன்று இருக்கிறது.காத்துக் கொண்டிருக்கிறேன்
///

அவர் கேட்காவிட்டாலும் பதிலை எழுதுங்கள்.

SP.VR. SUBBIAH said...

///மதுமிதா அவர்கள் சொல்லியது: அவர் கேட்காவிட்டாலும் பதிலை எழுதுங்கள். ///

சரி, சகோதரி உங்களுக்காகச் சொல்கிறேன்

கேள்வி: பிரசவ வலியை விட அதிகமான வலி எது?
ஆண்களும் உணரும்படியாக இருக்க வேண்டும் அது!

பதில்: பிரசவ வலியை விட பன்மடங்கு அதிகமானது. கடுமையான
தீக்காயம் (பாதி உடல் வெந்த நிலைமை). உணர்ந்துதான்
அதன் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினால் - முயன்று பார்க்கலாம்!

பதில் எப்படி உள்ளது சகோதரி?

SP.VR. SUBBIAH said...

மிஸ்டர் மணிகண்டன்,
உங்களுடைய ஜாதகப் பலன் என்பது, நீங்கள் மட்டுமே அறிய வேண்டிய தனிப்பட்ட விஷ்யம்
பதிவில் அதைச் சொல்வது உசிதமல்ல!

உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிக்கவும்
பதில் மின்ஞ்சலில் மட்டுமே!

பாபு மனோகர் said...

நன்றி வாத்தியாரய்யா...

தங்கள் மாணவர்கள் நல்ல முறையில் வருவார்கள்.

SP.VR. SUBBIAH said...

///பாபு மனோகர் அவர்கள் சொல்லியது:
நன்றி வாத்தியாரய்யா...
தங்கள் மாணவர்கள் நல்ல முறையில் வருவார்கள///

வகுப்புக்கு வந்துதான் நல்லமுறை வசப்படவேண்டும்
என்ற நிலையில் இங்கே வந்து செல்பவர்களில் யாரும் இல்லை
ஏற்கனவே அவர்கள் அனைவரும் நல்ல நிலைமையில்தான் இருக்கிறார்கள்!
யோசித்துப் பாருங்கள் புரியும் நண்பரே!

VSK said...

சிந்தாமல், சிதறாமல், அருமையாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு,
பதறாமல், குதறாமல் பொறுமையாக்ப் பதிலளித்து,
ஒரு சிறந்த ஆசான் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறீர்கள்!

மகிழ்ச்சியாக இருக்கிறது.

புரிபவர்க்குப் புரியும்.

SP.VR. SUBBIAH said...

சிறப்பாகச் சொல்லியிருகிறீர்கள்
நன்றி VSK சார்!

Manivannan said...

//மிஸ்டர் மணிகண்டன்,
உங்களுடைய ஜாதகப் பலன் என்பது, நீங்கள் மட்டுமே அறிய வேண்டிய தனிப்பட்ட விஷ்யம்
பதிவில் அதைச் சொல்வது உசிதமல்ல!

உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிக்கவும்
பதில் மின்ஞ்சலில் மட்டுமே!//

My email id is:
manivannan.e@gmail.com

Thank you so much in advance.