மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.9.07

பதிவில் எழுதுவதைக் கேள்விக் குறியாக்கும் பின்னூட்டங்கள்

பதிவில் எழுதுவதைக் கேள்விக்குறியாக்கும் பின்னூட்டங்கள்

கட்டற்ற எழுத்து சுதந்திரம் கட்டற்ற
கொடுமையாகிக் கொண்டிருக்கிறது

கண்ணியம் இல்லாதவர்களின் பின்னூட்டம்
காற்றை அசுத்தப் படுத்திக் கொண்டிருக்கிறது

போகப்போகத் தனிமனிதன் எழுத்து
சுதந்திரத்தைச் சுவாசிக்க முடியாத நிலை
ஏற்படும்போல் இருக்கிறது

பதிவின் நோக்கத்தை திசை திருப்பும்
கேள்விகளும், இறை நம்பிக்கையை
நக்கலடித்து எழுதப்பட்ட பின்னூட்டங்களும்
தொடர்ந்து வருகின்றன

இதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்.
இதெற்கெல்லாம் கவலைப் படுகின்ற
ஆள் நானில்லை!

பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய
அவசியம் எனக்கிலலை

செத்துப்போன தன் பாட்டியை உயிர்ப்பித்துத்
தரச்சொல் - நான் உன் கடவுளை நம்புகிறேன்
என்று ஒரு அன்பர் எழுதியிருக்கிறார்.

இன்னொருவர் காதலிக்காமல், காதலியைக் கண்
முன்னே பாராமல், தொட்டுப் பேசாமல், காதல்
உணர்வு எனக்கு எப்படி ஏற்படும்? என்று கேட்டுள்ளார்

இப்படிப் பின்னூட்டங்கள் வருவதும் அதைப்
பதிவில் வெளியிடாமல் விட்டு விட்டால்
ஏன் வெளியிடவில்லை என்று கேள்வி கேட்பதும்
அதிகரித்து வருகின்றன

அதேபோல் பதிவிற்கு சம்பந்தமில்லாத
செய்திகளுடன் என்னைக் கேள்வி கேட்டு வரும்
பின்னூட்டங்களும் அதிகரித்து வருகின்றன

சில பின்னூட்டங்கள், சற்று முன்வந்த சக
பதிவரின் பின்னூட்டத்தைத் பதிவில் பார்த்து
விட்டு, அவரை மறைமுகமாக ஏசி அல்லது தாக்கி
எழுதப்பெற்றும் வருகிறது. அதை வெளியிடாமல்
மட்டுறுத்தினால் ஏன் வெளியிடவில்லை என்று
அடுத்தடுத்துப் பின்னூட்டங்கள் வருகின்றது

இதை - இந்த நிலையை - கட்டற்ற கொடுமை
என்று குறிப்பிட்டால அதற்கும் எதிர் பின்னூட்டம்
வருகிறது. இனிமைக்கும் கொடுமைக்கும்
விளக்கம் கேட்டுப் பின்னூட்டம் வருகிறது

பதிவில் எழுதுவதையே கேள்விக் குறியாக்குகிறார்கள்!

கண்ணியமாக இல்லாத பின்னூட்டங்கள் குப்பைத்
தொட்டிக்குத்தான் போகும்.
எழுதி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்
--------------------------------------------------------------------
பின்னூட்டத்தை மட்டுறுத்துவது எனது உரிமை!
என்னுடைய வகுப்பறைக்கு வந்து செல்லும்
நல்ல உள்ளங்களின் மரியாதையைக் காப்பது
காப்பது எனது கடமை!

எனது உரிமையிலும் கடமையிலும் குறுக்கிட
யாருக்கும் அனுமதி இல்லை. அதை நினைவில்
கொள்க!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

19 comments:

  1. ரொம்ப நாளைக்குப்பிறகு உங்கள் மாணவன் வகுப்பறையை எட்டிப்பார்க்கின்றேன் ஐயா...
    நீண்ட விடுப்பிற்கு மன்னிக்கவும்

    எந்த ஒரு விளைவிற்கும் எதிர் விளைவு இல்லாமல் போகாது...

    இதைப்பற்றிய ஜாதக சிந்தனைகள் மற்றவர்களுக்கு வேண்டுமானால் நக்கலாக இருக்கலாம்.

    இதனை அருகில் இருந்து அனுபவித்தவர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கு நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    பிடிக்காவிட்டால் எட்டிப்பார்க்காதே..
    அதை விட்டு விட்டு ஏன் அடுத்த வீட்டில் குப்பை கொட்டுகிறாய்..

    இது எல்லா அண்ணானிகளுக்கும் பொருந்தட்டும்..


    ஷார்ஜாவிலிருந்து
    சென்ஷி

    ReplyDelete
  2. ரொம்ப நாளைக்குப்பிறகு உங்கள் மாணவன் வகுப்பறையை எட்டிப்பார்க்கின்றேன் ஐயா...
    நீண்ட விடுப்பிற்கு மன்னிக்கவும்

    எந்த ஒரு விளைவிற்கும் எதிர் விளைவு இல்லாமல் போகாது...

    இதைப்பற்றிய ஜாதக சிந்தனைகள் மற்றவர்களுக்கு வேண்டுமானால் நக்கலாக இருக்கலாம்.

    இதனை அருகில் இருந்து அனுபவித்தவர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கு நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    பிடிக்காவிட்டால் எட்டிப்பார்க்காதே..
    அதை விட்டு விட்டு ஏன் அடுத்த வீட்டில் குப்பை கொட்டுகிறாய்..

    இது எல்லா அண்ணானிகளுக்கும் பொருந்தட்டும்..


    ஷார்ஜாவிலிருந்து
    சென்ஷி

    ReplyDelete
  3. //இதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்.
    இதெற்கெல்லாம் கவலைப் படுகின்ற
    ஆள் நானில்லை!

    பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய
    அவசியம் எனக்கிலலை//

    ஐயா,

    கருத்தை எதிர்கொள்ள திரணற்று...அவதூறு ஆபச பின்னூட்டங்கள் வருவது சகஜம்.

    அப்படி வரும் போது ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். 'உங்கள் கருத்தில் நீங்கள் தெளிவாக இருப்பதாக அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்'

    'இதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளக் கூடாது' என்ற உங்கள் நிலையை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  4. உங்கள் மனதிற்குச் சரியென்று படுவதைத் தொடர்ந்து செய்யுங்கள், ஆசானே!

    இதற்கெல்லாம் ஒரு பதிவு போட்டு வீணடிக்காமால்!
    :))

    ReplyDelete
  5. நன்றி சென்ஷி,அடிக்கடி வாருங்கள்!

    ReplyDelete
  6. நீங்க, தருமி, இராமகி போன்ற மூத்த பதிவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நினைத்தேன்....
    தவறான பின்னூட்டங்களை எந்த ஈவு-இரக்கமும் இல்லாது அ/கழித்துவிட்டு நீங்கள் தொடருங்கள் ஐயா.

    ReplyDelete
  7. இதுக்கெல்லாமா அசந்துர்றது....

    ReplyDelete
  8. subbiah sir,

    //செத்துப்போன தன் பாட்டியை உயிர்ப்பித்துத்
    தரச்சொல் - நான் உன் கடவுளை நம்புகிறேன்
    என்று ஒரு அன்பர் எழுதியிருக்கிறார்.

    இன்னொருவர் காதலிக்காமல், காதலியைக் கண்
    முன்னே பாராமல், தொட்டுப் பேசாமல், காதல்
    உணர்வு எனக்கு எப்படி ஏற்படும்? என்று கேட்டுள்ளார்

    இப்படிப் பின்னூட்டங்கள் வருவதும் அதைப்
    பதிவில் வெளியிடாமல் விட்டு விட்டால்
    ஏன் வெளியிடவில்லை என்று கேள்வி கேட்பதும்
    அதிகரித்து வருகின்றன//

    Nyaayamaana decentaana pinnoottangal dhaane ivai?

    'galeej'aa illaadhavarai, karuththukkalai yetru padhil solla muyarchikkalaam.

    'galeej' ellaam kanna moodi kuppaila pottudunga. :)

    ReplyDelete
  9. ///VSK said... உங்கள் மனதிற்குச் சரியென்று படுவதைத் தொடர்ந்து செய்யுங்கள், ஆசானே!
    இதற்கெல்லாம் ஒரு பதிவு போட்டு வீணடிக்காமால்! :))///

    எனக்கும் வகுப்பில் மேஜையைத் தட்டி ஒலிஎழுப்பி சைலன்ஸ் ஸ்டூடண்ஸ்
    என்று சொல்ல ஆசை:-))))

    ReplyDelete
  10. ////மதுரையம்பதி said...
    நீங்க, தருமி, இராமகி போன்ற மூத்த பதிவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நினைத்தேன்....
    தவறான பின்னூட்டங்களை எந்த ஈவு-இரக்கமும் இல்லாது அ/கழித்துவிட்டு நீங்கள் தொடருங்கள் ஐயா.///

    அதைத்தான் செய்யப்போகிறேன்.
    ந்ன்றி மதுரையம்பதி

    ReplyDelete
  11. ///நான் அவனில்லை...! said...
    இதுக்கெல்லாமா அசந்துர்றது....///

    அசந்து விட்டதாக யார் சொன்னது?
    கோவியாரின் பின்னூட்டத்தைப் படியுங்கள்

    ReplyDelete
  12. ///SurveySan said...
    Nyaayamaana decentaana pinnoottangal dhaane ivai?
    'galeej'aa illaadhavarai, karuththukkalai yetru padhil solla muyarchikkalaam.
    'galeej' ellaam kanna moodi kuppaila pottudunga. :)///

    வருவதில் 10% கலீஜ் தான்.
    அப்படித்தான் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  13. வாத்தியாரே! இதுக்கெல்லாம் அசந்தா எப்படி? நம்ப பின்னூட்ட பொட்டியை பாத்தீங்கன்னா பேஜார் ஆயிடுவீங்க. கற்பனைக்கெட்டாத பின்னூட்டங்களையெல்லாம் நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  14. சார்,

    நீங்க எடுத்த முடிவுதான் சரியான முடிவு. அனானிய அவாய்டு பண்ணாலும் இந்த மாதிரியான பின்னூட்டங்களை தவிர்ப்பது சிரமம்தான். 'ரிஜெக்ட்' செய்துவிட்டு நம் வேலையை பார்ப்பதுதான் நல்லது:-)

    ReplyDelete
  15. 1ஆம் திகதி வகுப்பில் எதாகினும் பாடம் நடக்கும் என எதிர்பார்த்தேன், பெரிய கலாட்டா நடந்திருக்கிறதென தெரிகிறது. கவலையை விடுங்கள் பாடம் கேட்க நாங்கள் இருக்கின்றோம். நிங்கள் நடத்துங்கள்.

    ReplyDelete
  16. ///லக்கிலுக் said...
    வாத்தியாரே! இதுக்கெல்லாம் அசந்தா எப்படி? நம்ப பின்னூட்ட பொட்டியை பாத்தீங்கன்னா பேஜார் ஆயிடுவீங்க. கற்பனைக்கெட்டாத பின்னூட்டங்களையெல்லாம் நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.///

    வாருங்கள் லக்கியாரே!
    நான் அசரவில்லை - என் வயதிற்கு இதெல்லாம் அநியாயமாகத்
    தோன்றியதால் - பதிவு ஒன்று போட்டு நம் மக்களுக்கு வெளிப்படுத்தினேன்
    அவ்வளவுதான். அனானிப் பெட்டி திறந்துதான் வைத்திருக்கிறேன்

    ReplyDelete
  17. ///tbr.joseph said...
    சார், நீங்க எடுத்த முடிவுதான் சரியான முடிவு. அனானிய அவாய்டு பண்ணாலும் இந்த மாதிரியான பின்னூட்டங்களை தவிர்ப்பது சிரமம்தான். 'ரிஜெக்ட்' செய்துவிட்டு நம் வேலையை பார்ப்பதுதான் நல்லது:-)///

    நன்றி ஜோசஃப் சார்!

    ReplyDelete
  18. ///P.A.விக்னேஷ்வரன் said...
    1ஆம் தேதி வகுப்பில் எதாகினும் பாடம் நடக்கும் என எதிர்பார்த்தேன், பெரிய கலாட்டா நடந்திருக்கிறதென தெரிகிறது. கவலையை விடுங்கள் பாடம் கேட்க நாங்கள் இருக்கின்றோம். நிங்கள் நடத்துங்கள்.///

    விக்னேஷ்வரன் பாடத்தை ஆரம்பித்து விட்டேன். படியுங்கள்
    நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com