மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.7.07

சனி என்ன செய்யும்? என்ன செய்யாது?


நன்றி - தினமலர்
-----------------------------------------------------------------------
சனி என்ன செய்யும்? என்ன செய்யாது?

சனிப் பெயர்ச்சியை வைத்து நாளிதழ்களும் சரி,
குறு இதழ்களும் சரி பரபரப்பாக எழுதிக் கொண்டிருக்கின்றன.
சாதாரணக் குடிமகனுக்கு - என்ன தெரியும்? ஒன்றும் சரிவரத் தெரியாது?

சனிப்பெயர்ச்சி என்றால், சனீஸ்வரன் மூட்டை முடிச்சுக்களை
யெல்லாம் கட்டிக்கொண்டு தன் குடும்பத்தாருடன் அடுத்த
ஊருக்குக் குடி பெயர்ந்து போகிறார் என்று நினைத்துக்கொண்டிருப்பான்.

வானவெளியின் வட்டத்திலுள்ள 360 டிகிரிகளையும் (பாகை
களையும்) 30 வருடங்களில் (அதாவது 360 மாதங்களில் மாதம்
ஒரு டிகிரி என்ற விகிதத்தில்) கடந்து ஒரு சுற்றை முடிக்கும்
சனீஸ்வரன், ஒரு ராசியின் 30 டிகிரிகளையும் கடந்து அடுத்த
ராசியின் எல்லைக்குள் பிரவேசம் செய்வதுதான் சனிப் பெயர்ச்சி.

கடக ராசியில் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு
பிரவேசித்தவர், அந்த ராசியின் முழு தூரத்தையும் தாண்டி
இப்போது 121வது டிகிரியில் துவங்கும் சிம்ம ராசிக்குள்
பிரவேசிக்கின்றார்

அதனால் என்ன நடக்கும்?

பத்திரிக்கைகளில் சனிக்கென்று எழுதியுள்ள ராசி பலன்களில் குறிப்பிட்டுள்ளதைப் போலதான் அவ்வளவு ராசிக்
காரர்களுக்கும் நடக்குமா?

அப்படி நடக்காது! அப்படியே நடக்காது!

ஏன் நடக்காது?

இந்தியாவின் ஜனத்தொகை சுமார் 108 கோடி மக்கள். 12 ஆல்
வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 9 கோடி என்ற அளவில்
மக்கள் இருக்கலாம். அந்த ஒன்பது கோடி மக்களுக்கும்
அவர்களுடைய ராசிப்படி குறிப்பிட்டுள்ள பலன்கள் எப்படி
ஒரே மாதிரியாக நடக்கும்?

அபத்தமாக இல்லையா?

பின் எப்படி நடக்கும்?

ஒவ்வொருவருடைய, பிறந்த ஜாதகம், அவர்களுடைய
இன்றைய வயது, ஜாதகத்திலுள்ள கிரகங்களின் வலிமை,
அஷ்டவர்க்கத்தில் அந்த ஜாதகருடைய குறிப்பிட்ட ராசியி
லுள்ள பரல்கள், முக்கியமாக ஜாகதருடைய நடப்பு
தசா புக்தி போன்றவைகளை வைத்துத்தான் கோச்சார
சனியுடைய தீய பலன்கள் அல்லது நல்ல பலன்கள்
இருக்கும்.

உதாரணத்திற்கு லாபாதிபதியுனுடைய தசை நடந்து
கொண்டிருக்கும் ஜாதகனை, அந்த லாபதிசைக்கு அதிபதி
யான கிரகம் அணைத்துக் கொள்ளூம். Bullet Proof ஜாக்கெட்
போட்ட மனிதனை எப்படித் துப்பாக்கிக் குண்டுகள்
அனுகாதோ அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இல்லை Black Cat Commandos with AK47 Riffle படையுடன்
இருக்கும் ஒரு நபரைத் தீய சக்திகள் எப்படி அனுக
முடியாதோ, அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் 30 பரல்களுக்கு மேல் உள்ள ராசிகளில்
சஞ்சாரம் செய்யும் சனி அந்த ஜாதகனை ஒன்றும் செய்யாது.

இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் பெயர்ச்சி
பலன்கள் பொதுவானவை. மழை பெய்வதைப் போல!
வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பவன் மழையைப்பற்றிக்
கவலைப்பட வேண்டாம். காருக்குள், கண்ணாடிகளை
ஏற்றிவிட்டு அமர்ந்து செல்பவனும் கவலைப்பட
வேண்டாம். குடை வைத்திருப்பவன், பாதி நனைய
வாய்ப்புண்டு அவன் சற்றுக் கவலைபடலாம். ரெயின் கோட்
போட்டிருப்பவனும் சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும்
சற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப் பட வேண்டியன்
இவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக்
கொண்டவன் மட்டுமே.

ஆகவே உங்கள் வயது to நடப்பு தாசாபுக்தி என்று மேற்
சொன்னவை மட்டுமே சனியின் பெயர்ச்சிப் பலனை
நிர்ணயம் செய்யும். அதன்படிதான் பலன்களும் இருக்கும்.
யாரும் பொதுப்பலன்களைப் படித்து விட்டுக் குழம்ப
வேண்டாம்!

திருநள்ளாறு கோவிலின் அதிகாரபூர்வ அறிக்கை சனிப்
பெயர்ச்சி (வாக்கிய பஞ்சாங்கப்படி) வரும் ஆகஸ்ட் மாதம்
5ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்று கூறுகிறது. ஆனால் சனி
இடம் மாறி இரண்டு நாள் ஆகிவிட்டது. ஆதாரம் கீழே
கொடுத்துள்ளேன் (இது திருக்கணிதப் படி - Based on Indian
Ephemeries)

தேதியையும், சனி சிம்மராசியில் இருப்பதையும் (Sa = Saturn)
கவனியுங்கள்

வாழ்க வளமுடன்: வாழ்க நலமுடன்!
------------------------------------------------------------


22 comments:

  1. உள்ளேன் அய்யா

    ஆதாரத்துடன் விளக்கியுள்ளீர்கள்..

    ReplyDelete
  2. உள்ளேன் ஐயா!

    சனி! ஆரம்பத்தில் ஒரு மாதிரி உற்சாகத்தைத் தந்தாலும் வேலைகளில் சுணக்கத்தைத் தந்துவிடும்!

    ஆகவேதான் பெரிய மென்பொருள் நிறுவனங்கள் எல்லாம் எப்படி இருந்தாலும் பெரிதாக வேலை ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சனிக்கும் விடுமுறை விட்டுவிடுகின்றனர்.

    ReplyDelete
  3. ///ஆதாரத்துடன் விளக்கியுள்ளீர்கள்..///

    இல்லையென்றால் சும்மா விடுவீர்களா?
    சொல்லுங்கள் சிவபாலன்!:-))))

    ReplyDelete
  4. //இல்லையென்றால் சும்மா விடுவீர்களா?//

    இல்லை! காசு கொடுத்து விடுவோம்!

    ReplyDelete
  5. நாமக்கல்லாரே!
    சனி கர்மகாரகன் (authority for work)அவரைப்போய் சுணக்கத்தை ஏற்படுத்துவார் என்கிறீர்களே?

    இந்தப் பின்னூட்டத்தை சனீஸ்வரன் படிக்காமல் இருக்க வேண்டும்!:-)))

    மென்பொருள் கம்பெனிக்காரர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் (சனி & ஞாயிறு!) விடுமுறையாக்குவதற்கு ஒரு தனிக் கதை இருக்கிறது.

    அதைப் பதிவில் எழுத முடியாது!:-)))

    ReplyDelete
  6. //இந்தப் பின்னூட்டத்தை சனீஸ்வரன் படிக்காமல் இருக்க வேண்டும்!:-)))//

    (எனது இராசிக்கு)எட்டாவது இடத்தில் இருந்து என்னை இப்படியெல்லாம் பின்னூட்டங்கள் இட வைக்கிறார்!

    ReplyDelete
  7. //அதைப் பதிவில் எழுத முடியாது!:-))) //

    எழுதினால் ஏழரை ஆகிவிடும் என்பது வேறு கதை!

    ReplyDelete
  8. //நாமக்கல்லாரே!
    சனி கர்மகாரகன் (authority for work)அவரைப்போய் சுணக்கத்தை ஏற்படுத்துவார் என்கிறீர்களே?//

    பின் எதற்காக,

    எடுத்த காரியங்கள் மெதுவாய் நகரும், புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது, பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதைத் தவிர்க்கவும் என்றெல்லாம் சொல்கிறார்களே!

    (சனிப்பெயர்ச்சி பலன் புத்தகத்தில்தான்)

    ReplyDelete
  9. //இந்தப் பின்னூட்டத்தை சனீஸ்வரன் படிக்காமல் இருக்க வேண்டும்!:-)))//

    ஐயஹோ! தெரியாமல் வாத்தியாரின் இந்த பின்னூட்டத்தைப் படித்து விட்டேனே!

    என் செய்ய!

    ReplyDelete
  10. இந்த பதிவின் பின்னூட்டங்கள் என் பார்வைக்குப் புலனாக மறுப்பது ஏனோ?

    ReplyDelete
  11. அண்ட சராசரிகளையும் ஆட்சி செய்து காத்து ரட்சிக்கும் அன்னை பார்வதி தேவியை வணங்குவோருக்கும், நவக்ரக நாயகியாம் ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கும் எந்த கிரகங்களாலும் எவ்வித தொல்லையும் இராது!

    அன்னையின் பாதத்தை சரணமென்றடைந்தோர்க்கு சங்கடங்கள் ஏது!


    நவக்ரக நாயகியே கருமாரி!
    நலன்கள் யாவும் தருபவளே அருள் மாரி!

    ReplyDelete
  12. குருவே,

    பொதுப் பலன்களைப் பார்த்து குழம்புவர்களுக்கு நம்பிகையூட்டும் பதிவு.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  13. //இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் பெயர்ச்சி
    பலன்கள் பொதுவானவை. மழை பெய்வதைப் போல!
    வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பவன் மழையைப்பற்றிக்
    கவலைப்பட வேண்டாம். காருக்குள், கண்ணாடிகளை
    ஏற்றிவிட்டு அமர்ந்து செல்பவனும் கவலைப்பட
    வேண்டாம். குடை வைத்திருப்பவன், பாதி நனைய
    வாய்ப்புண்டு அவன் சற்றுக் கவலைபடலாம். ரெயின் கோட்
    போட்டிருப்பவனும் சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும்
    சற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப் பட வேண்டியன்
    இவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக்
    கொண்டவன் மட்டுமே.
    //

    உதாரண விளக்கம் அருமை...எளிமை...பாராட்டுக்கள்

    ReplyDelete
  14. நன்றி சுப்பையா சார்.
    ஊரிலிருந்தால் வீட்டுக்கு இத்தனை பத்திரிகைகளும் வந்து குழப்பி இருக்கும்.
    இங்கே கிழமை முதற்கொண்டு நினைவில் வைத்து இயங்காமல் நாட்கள் வேகமாகப் போகின்றன. குட்டிப் பாப்பா இருப்பதால்.:)))
    இத்தனை விவரம் கொடுத்து இருக்கிறீர்கள். அனாவசியக் கவலைகளைத் தவிர்க்கலாம். மிகவும் நன்றி.

    ReplyDelete
  15. பிறக்கும்போதே சனி தசைன்னு சொல்லி அது ஒரு பதினாலு வருஷமான பிறகும், மறுபடி சனிப்பெயர்ச்சி
    காரணம் அந்த ஜாதகருக்கு நன்மை வருமா இல்லை அவரையும் பிடிச்சு இன்னொருமுறை ஆட்டுமா?

    ஒண்ணும் புரியலையே வாத்தியார் ஐயா(-:

    ReplyDelete
  16. ஐயா வணக்கம், நான் வகுப்பில் பின் தங்கிய மாணவன். கொஞ்சம் விளக்கம் தேவை. செல் இருப்பு என்று சொன்கிறிர்களே அதை கணக்கிடுவது எப்படி?

    ReplyDelete
  17. ஆசிரியரே....

    இனி வரும் நாட்கள் கடக லக்கினக்காரர்களுக்கு நன்மை அளிக்கும் நாட்களாக இருக்குமா?

    இப்படிக்கு,
    இரா.ரகுபதி

    ReplyDelete
  18. நல்ல எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ளீர்கள். ஒவ்வொரு ராசிக்கும் பெயர்ச்சி பலன் புத்தகங்கள் வர ஆரம்பித்தாயிற்று. நானும் நினைத்துக் கொள்வேன், விரைவில் மாதமொருமுறை சூரிய பெயர்ச்சி பலன் வெளியிடாததுதான் பாக்கி என்று. எனக்கு தெரிந்தவரை ரொம்ப குறுகிய காலம் ஒரு ராசியில் சஞ்சரிப்பது சூரியன் மட்டுமே என்று எண்ணுகிறேன், என் புரிதல் சரிதானா?

    ReplyDelete
  19. //சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும்
    சற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப் பட வேண்டியன்
    இவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக்
    கொண்டவன் மட்டுமே.//

    சனியை மழையோடு அருமையாக ஒப்பிட்டு இருக்கிறீர்கள். எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக்
    கொண்டவன் கூட ரொம்ப கவலைப்பட வேண்டியதில்லை ஐயா. மழைதானே அமில மழை இல்லையே...

    ஏழரைச்சனியும் அர்த்தாஷ்டம,அஷ்டம சனியும் கஷ்டங்கள் பலவற்றை தந்தாலும் வாழ்க்கையை கற்றுத்தரும் பல அனுபவங்களை அளிக்கிறது.

    நாம் கஷ்டப்படும்போது தானே பிற மனிதர்களின் உண்மை குணங்கள் நமக்கு தெரிய வருகிறது... இது ஒரு வகையில் நல்லது தானே...

    ReplyDelete
  20. //ரொம்ப குறுகிய காலம் ஒரு ராசியில் சஞ்சரிப்பது சூரியன் மட்டுமே என்று எண்ணுகிறேன், என் புரிதல் சரிதானா?//

    இல்லை. சந்திரன். அதனால் தான் வாரப்பலன்களும் நாட்பலன்களும் சொல்ல சந்திரனைக் கருத்தில் கொள்வர்.

    ReplyDelete
  21. ஐயா அடிகடி பரல்கள் என்று எதோ கூறுகிறீர்களே....அதை கணிப்பது எப்படி ஐயா....

    nantri

    ReplyDelete
  22. ////Blogger Kumares said...
    ஐயா அடிகடி பரல்கள் என்று எதோ கூறுகிறீர்களே....அதை கணிப்பது எப்படி ஐயா....
    nantri////

    முதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் படியுங்கள். மொத்தம் 260 உள்ளது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com